சிறுபாணாற்றுப்படை – Sirupānātruppadai
Copyright © All Rights Reserved
Translated by Vaidehi Herbert
பாடியவர் – இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
பாடப்பட்டவன் – ஓய்மான் நாட்டு நல்லியக்கோடன்
திணை – பாடாண்
துறை – ஆற்றுப்படை
பாவகை – ஆசிரியப்பா
மொத்த அடிகள் – 269
தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.
This song has 269 lines in Āsiriyappā/Akaval meter, and was written by Nallūr Nathathanār. The King is Ōymān Nalliyakōdan, the ruler of Māvilangai. This is the shortest of the guidance poems. The valor and greatness of the king is mentioned. Also mentioned are the seven great benefactors of ancient Tamil Nadu. There is a beautiful description of viralis.
நிலமகளின் தோற்றம்
மணி மலைப் பணைத்தோள் மாநில மடந்தை
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போலச்,
செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று, (1–3)
The Land as a Woman
The wide land as a young woman
has sapphire-yielding mountains
for breasts and bamboo for arms.
Like a swaying pearl strand on her
breasts, a forest stream cascades down,
coming from afar, distressing the mountain.
Notes: நச்சினார்க்கினியர் உரை – இரண்டு மலையினின்றும் வீழ்ந்து, இரண்டு ஆற்றிடைக் குறையச் சூழ் வந்து கூடுதலின் முத்து வடமாயிற்று. இது மெய்யுவமம். பெருக்கால் கோடுகள் வருந்தலின் உழந்தவென்றார்.
Meanings: மணி மலை – mountains where gems (sapphires) can be found, sapphire-colored mountains, பணைத்தோள் – bamboo-like arms, மாநில – big land, மடந்தை – young woman, அணி முலை – beautiful breasts, துயல் வரூஉம் – move (வரூஉம் – இன்னிசை அளபெடை), ஆரம் போல – like a pearl strand, like sandal garland, செல் புனல் – flowing waters, உழந்த – distressing, சேய்வரல் கான் யாற்று – of a forest stream coming from a distance
கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த
புதுப்பூஞ் செம்மல் சூடி, புடை நெறித்துக் 5
கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல், (4-6)
On the eroding shore of the stream
is a fragrant grove where cuckoos
prick fresh wild jasmine blossoms
and drop them, blanketing the fine,
black sand that resembles a
a maiden’s curly, spread hair adorned
with flowers.
Notes: கூந்தலைப் போன்ற மணல் – ஐங்குறுநூறு 345 – கதுப்பு அறல், கலித்தொகை 32 – எஃகு இடை தொட்ட கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் மை அற விளங்கிய துவர் மணல், சிறுபாணாற்றுப்படை 6 – கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல்.
Meanings: கொல் கரை – shores attacked by the water, eroding shores, நறும் பொழில் – fragrant groves, குயில் குடைந்து – cuckoos prick, உதிர்த்த புதுப்பூ – dropped new flowers, செம்மல் – jasminum grandiflorum, வாடல் பூ, பவழமல்லி, சூடி – wore, புடை – sides, நெறித்து – wavy, curly, கதுப்பு விரித்து அன்ன – like spread hair, காழ் அக – with black color, நுணங்கு – fine, அறல் – black sand
இளைப்பாறும் பாணன்
அயில் உருப்பு அனைய ஆகி, ஐது நடந்து
வெயில் உருப்புற்ற வெம்பரல் கிழிப்ப,
வேனில் நின்ற வெம்பத வழிநாள்,
காலை ஞாயிற்றுக் கதிர் கடா உறுப்பப், 10
பாலை நின்ற பாலை நெடுவழிச்
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ, (7-12)
The Bard’s Family rests under a Kadampam Tree
The late summer’s morning sun
spreads its intense hot rays on
the long wasteland path.
The day has started to heat up.
They walked slowly on pebbles
as hot as iron, that tore into their
skin, and rested under the dappled
shade of a kadampam tree.
Notes: வேனில் நின்ற (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இளவேனிற் பருவம் நிலைபெற்ற. வழிநாள் (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பின்னாகிய முதுவேனில்.
Meanings: அயில் உருப்பு – heat like that of iron, அனைய – like, ஆகி – was, ஐது – slowly, நடந்து – walked, வெயில் – hot sun, உருப்புற்ற – became hot, வெம்பரல் – hot pebbles, harsh pebbles, கிழிப்ப – tearing, வேனில் – early summer time, நின்ற – happening, வெம்பத வழிநாள் – in the late summer season that comes after summer, very hot season, காலை ஞாயிற்று கதிர் – morning sun’s rays, கடா உறுப்ப – spreading the heat, பாலை நின்ற – with the attributes of the wasteland, பாலை நெடுவழி – long wasteland path, long pālai land path, சுரன் முதல் – in the wasteland (சுரன் – சுரம் என்பதன் போலி), மராஅத்த – of a kadampam tree, கடம்பு, வெண்கடம்பு – Kadampa Oak, Anthocephalus cadamba (அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது), வரி நிழல் – dappled shade, அசைஇ – rested, stayed (அசைஇ – சொல்லிசை அளபெடை)