சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் யார் என்பது பற்றி ஆய்வு முடிவுகள் வந்திருக்கின்றனர். சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் 4000 வருடங்கள் வரையில் எவ்வித சமூகங்களுடனும் கலப்பு ஏற்படதாக மக்கள் என்கின்றார்கள். மற்றைய சமூகத்துடனான கலப்பு என்பது சுமார் 4000 ஆண்டுகள் என்று அறிவிக்கின்றார்கள். சிந்துவெளி அல்லது தெற்கே வாழ்ந்த மக்களை திராவிடர் என்று அழைப்பதா தமிழர்கள் என்று அழைப்பதா என்ற விவாதம் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. இது தொடர்ச்சியான விவாதப் பொருளாகவே இருக்கின்றது. மொழி ஆய்வுகள் முன்னெடுக்கும் முன்னர் சமசுகிருதமே தொன்மையானது எல்லாவற்றிற்கும் தாய் தொழி எனக் கருத்தப்பட்டிருந்த நிலையில் தான். திராவிட மொழிக்குடும்பம் வேறானது என்று அது தனித்துவமானது என்று முடிவிற்கு வந்தார்கள். தென்னாசியாவில் பேசிய மொழிக்குடும்பத்தினை அழைக்கவே திராவிட மொழிக்குடும்பம் என்று பயன்படுத்தி வந்தார்கள். இது கலாசாலை ஆய்வு விஞ்ஞான அடிப்படையில் நடப்பவையாகும். வரலாறுகள் புதியதாக எழுதப்படும். ஏனெனில் விஞ்ஞானம் என்பதே தோல்வியில் இருந்து கற்று முன்னேறுவது தான். இவ்வாறே வரலாறுகளும் தொல்லியல் சான்றுகளுடன் வரலாறு மீள எழுதப்படுகின்றது. இன்று வெவ்வேறு தேசிய இனங்களாகவும், தேசங்களாகவும் வளர்ந்திருக்கின்ற நிலையைக் கொண்டு வரலாற்றுப் போக்கை அணுகிட முடியாது. மொழி மக்களால் பல ஆயிரம் ஆண்டுகள் புழக்கத்தில் இருந்த ஒலிகளை கீறுவதால் எழுத்தாக உருமாறி வளர்ந்து வருவதாகும். ஒரு மொழியின் வயரை கணிப்பது முடியாத காரியம் எனினும் இலக்கணம், இலக்கியம் வளர வேண்டுமென்றால் பலஆயிரம் காலம் மொழி பயன்பாட்டில் இருக்க வேண்டும். ஒரு மொழியின் இலக்கண, இலக்கிய வளம் என்பதை வைத்து தொன்மைக்மையைக் கணிக்க முடியும். ஒரு மொழிக்குடும்பத்தில் இருந்து வெவ்வேறு கிளை மொழிகள் பிரிந்து சென்று சுயாதீன மொழிகளாக உருவாக முடியும். லத்தீன் (இந்தோ ஐரோப்பிய), எபிரேயம், திராவிடம், சீனம் என பெரும் மொழிக்குடும்பங்களில் இருந்து உருவாகிய மொழிகள் இருக்கின்றன. முன்னோர் பேசிய Austronesian language மொழியை திராவிட மொழிக்குடும்பம் என்கின்றார்கள். இது கலாசாலை வரையறையாகும். அந்த குடும்பத்தில் தமிழ் தொன்மையானதும், தனித்துவமாக வளர்ந்த மொழியாக இருக்கின்றது. இதுவேதான் 8000 முன்னர் எவ்வித கலப்பில்லாத Austronesian - என்ற திராவிடம் - அவுஸ்ரலெயிட் இனத்தினர் வாழ்ததை மரபணு முடிவுகள் தெரிவிக்கின்றது.
அவுஸ்ரேசிய மொழிகளில் தொன்மையானது தமிழ் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தமிழர் சுமேரியாவில் வாழ்ந்தவர்கள் என்ற கருத்தும் உள்ளது. ஊர் என்பது தூய தமிழ் பெயர் அந்தப் பகுதியில் இருக்கின்றது. அவுஸ்ரேசிய மொழியே அந்தமான் தொடக்கம் அவுஸ்ரேலிய பழங்குடிகளும் பேசுகின்றார்கள்.
Raja Thamilan4000 வருட முன்பு தமிழ் மொழியை தவிர தெலுங்கு கன்னட மலையாள மொழிகள் என்பது பிறக்கவே இல்லை. ஆகவே திராவிட மொழி குடும்பங்கள் எனச் சொல்வதே பிராடு தனமாகும்.
Tholar Velanநீங்கள் உலக ஆய்வு முறையை பின்பற்றி தெளிந்த ஆய்வை முன்வையுங்கள். அதற்குப் பின்னர் நீங்கள் மொழிக்குடும்பத்தை தமிழ் என்று அழையுங்கள் என்று கலாசாலை ஆய்வு மட்டத்தில் ஏற்றுக் கொள்ள வையுங்கள்.
சமஸ்கிருதமே அனைத்துக்கும் தாய் என்பதை மறுத்து தமிழ் தனித்துவமாக இயங்கும் மொழி, அதற்கும் மற்றைய மொழிக்கும் தொடர்பு இல்லை என்று நிறுவியதும் அதே காலாசாலைதான். இந்தோ - ஐரோப்பிய மொழிக்குடும்பம் என்பது பெரும் கிளை அதில் பல உப கிளைகளாக வளர்ந்துள்ளது.
திராவிடம் மொழிக்குடும்பம் என்பது தென்னாசியாவிற்கானது. இதனை உள்வாங்க சாதியவெறி- இனவெறி தடுக்கின்றது.
Meenakshi Sundaramசிந்து சமவெளி எழுத்துக்கள் குறியீடுகள்தான். அதை கீழடியோடு தொடர்பு செய்யாதீர்கள்.
Tholar Velanஇரண்டிற்கும் மாறுபாடு உண்டு. எனினும் அந்த மக்கள் Austronesian இனத்தைச் சேர்ந்தவர்களின் தொடர்ச்சி அவ்வளவே. ஆய்வுகள் இன்னும் செய்யப்பட வேண்டும்.
Amala SinghSri Rangan Vijayaratnam இந்தக்கட்டுரை எல்லாவற்றையும் தொட்டுச்செல்கிறது. அவசுதிரேலிய பழங்குடிகளைக்குறிப்பிடுவது எல்லாம் தேவையற்றது. அவர்கள் எல்லாம் நாகரிக வாழ்க்கைக்குள் அடங்க மாட்டார்கள். அவர்கள் வேட்டை மனிதர்கள்.
சுமேரிய ஊர் என்பதே தமிழ் ஊர் என்பதை எளிதாக கணிக்க முடியும். சுமேரியர்கள் தென்னிந்தியாவில் குடி புகுந்த போது ஊர் என்ற பிறந்த இடத்தின் நினைவாக வைத்தார்கள் என்று கருதலாம். சுமேரியர்களின் ஊரும் ஒரு மறக்க இயலாத நகரம்.
கிட்டத்தட்ட ஊர் என்பது முடிவடைந்த நிலையில் தென்னிந்தியாவில் இந்த நாகரிகம் தொடர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் எந்த வருடம் என்பது புதிர்.
கிமு 2200 இலிருந்து கிமு 1000 வரை இருக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் அகழாய்வுகள் மூலமே இதை உறுதிப்படுத்த இயலும்
Tholar Velanபேரா. இராமச்சந்திர தீட்சர் சுமேரியர்களின் பண்பாட்டை தமிழர்கள் உருவாக்கியினர் என்றே கருதுகின்றார். அவர் 1953 எழுதிய புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். இவரின் கூற்றை உறுப்படுத்த இன்னும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்
Amala Singhசிந்துச்சமவெளி நாகரிகமும் சுமேரிய நாகரிகமும் கிட்டத்தட்ட கிமு 2200 ல் ஒரே கால கட்டத்தில் முடிவுக்கு வந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் கிமு 2200 - கிமு 800 வரை இந்திய வரலாற்றில் எந்த தடயமும் இல்லை. ஆனால் இதே கால கட்டத்தில் எகிப்து இஸ்ரேல் அரபு ஈராக் நாடுகளில் மனித நாகரிகத்தின் தொடர்ச்சிக்கான ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இப்படி எதுவுமே இல்லாமல் இந்தியா உள்ளது இதுவரை. இது மிகப்பெரிய புதிரையும் மலைப்பையுமே தருகிறது
Tholar VelanAmala Singh பல்வேறு ஆய்வுப்புலம் கொண்ட ஆய்வுப் பணி நடைபெறவில்லை என்பது உண்மையே. டொலவேராவில் எவ்வாறு நீர்முகாமைத்துவத்தை செய்தார்கள் என்று பிரெஞ்சு நாட்டவர்கள் செய்த வகையில் செய்யப்படவில்லை. சுமேரிய நாகரீகம் சிந்து வெளிக்கு முட்பட்டதே.
Amala SinghTholar Velan முற்பட்டது பிற்பட்டது என்று சொல்ல இயலாது. ஆனால் சுமேரிய நாகரிகத்தின் ஆதாரங்கள் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக தொடர்ச்சியானது. தொல்பொருட்களும் ஆதாரங்களும் ஏராளமானது. சிந்துச்சமவெளி ஆதாரங்கள் மிக சொற்பம்.
Sri Rangan VijayaratnamAmala Singh அமல சிங்,வணக்கம்!தமிழ் நாகரீகத்தைத் தொடர்ந்து சுமேரிய ஆக்காடியின் நாகரிகத்தோடு இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் காரணத்தைக் கண்டடைய முனைந்தால் நாம் நம்பும் எழுத்துமொழியுள்ள சிந்து நாகரீகத்துள் அடக்க முனையும் மொகஞ்சதாரோ-ஹரப்பா ( Mohenjo Daro / Harappa) நாகரீகத்தின் முடிச்சுகள் இதுவரை அவிழ்க்கப்படவில்லை!இவ்விரு பண்பாட்டு ஆதிக்கமும் இதுவரை எதன் வேரிலரிந்து கிளர்ததென எவராலும் முழுமையான முடிவாக உணர்த்த முடியவில்லை.சிந்து நாகரீகத்தின் மொழி இன்னும் ஒழுங்காக வாசிக்கப்படவில்லை.
சுமேரிய -ஆக்காடியன் பண்பாட்டுடன் நெருக்கமான தொடர்பை; ஒத்த தன்மைகளை மொகஞ்சதாரோ - கரப்பா நாகரீகங்கள் கொண்ட கி.மு.2500’க்கு முற்பட்ட தொடர்ச்சியும்,அதன் பின்னான சிதைவும் கி.மு 1500 களுள் மேலெழும் இந்தோ ஆரியர் ,வேத காலத்தின் மத்தியில் இனங்காணப் படுகிறது.இது,தற்போதைய இந்திய நில எல்லைக்கு அப்பாலான கதை.
அப்போ ,இன்றைய இந்திய எல்லைக்கு முதலில் இடம் பெயர்தவர்களாக ஒரு இனம் இருக்க வேண்டும்.இந்தோ ஆரியரிடமிருந்து தப்பிய சுமேரியர்கள் வடக்கில் தங்கியபோது நடந்த சண்டையில்(பாரதப்போர்) தெற்கு நோக்கித் தள்ளப்பட்ட இருக்க முடியும்.இவைகளுக்குள் காலங்கள் 500-600 வருடங்களாக நிலவ முடியும்!