New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழின் பெயரில் தொல்லியல் மோசடிகள்


Guru

Status: Offline
Posts: 24762
Date:
தமிழின் பெயரில் தொல்லியல் மோசடிகள்
Permalink  
 


தமிழின் பெயரில் தொல்லியல் மோசடிகள்

 
இணையத்தில் சுற்று வரும் இந்த மணியில் உள்ளது  16 -9 ஆம் நூற்றாண்டின் எழுத்துக்கள்
 
64542140_858728961160492_873942265101916
 
தமிழ் பற்றாளர் பெயரில் மத்திய அரசை பைத்தியக்காரத்தனமாய் இது போல மோசடி வைத்து விமர்சிக்கவும் செய்கின்றனர்
 
Sankara Narayanan G 19 ஆம் நூற்றாண்டின் எழுத்துக்கள்
 
இதை மறை அல்லது புகாரளி
 
மணி மணிவண்ணன் இந்த மணியில் உள்ள எழுத்துகள் பிற்காலச் சோழருக்குப் பின்பு தமிழகமெங்கும் பரவிய தமிழ் எழுத்துகளில் உள்ளன. இது உறுதியாக இடைச்சங்கப் பாண்டியர் காலத்து மணி அல்ல. மேலும் இதில் குறிப்பிட்டுள்ள முகைய்யத்து என்ற இஸ்லாமிய வணிகர் இடைச்சங்கப் பாண்டியர் காலத்தில் வாழ்ந்திருக்க முடியாது.
 
இதை மறை அல்லது புகாரளி
தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கப்பல் மணி
இடைசங்க பாண்டியர் கால கப்பல் மணி தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டது. உள்ள இடம் நியூசிலாந்து அருங்காட்சியகம். 1846 ஆம் ஆண்டு பாதிரியார் வில்லியம் கொலென்ஸோவால் மவுரி இன பழங்குடி பெண் உருளைக்குழங்கு அவித்துக் கொண்டு இருந்த வேலையில் அவரிடம் ஒரு சட்டியை குடுத்துவிட்டு இந்த கப்பல் மணியை பெற்றார். அந்த பெண்மணி இந்த கப்பல் மணியை தனது மூதாதையர் மரத்தின் வேர் தோண்டும் வேலையில் கன்டுபிடித்ததாகவும் பல தலைமுறை கள் கடந்து பாவனையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
இந்தக் கப்பல் மணியின் உண்மையான வயதும் மறைக்கப் பட்டிருக்கிறது அதே போல் இதை மொழி பெயர்த்தவரும் தமிழ் வட்டெழுத்துக்களை தவறாகவோ இல்லை வேண்டுமென்றோ மாற்றி மொழிபெயர்த்துள்ளார்.
தமிழ் ஆர்வலர் கவனத்திற்கு. தமிழன் கால் படாத கண்டமே இல்லை சங்ககாலம் தொட்டு.
-----------------------------------------------------------------------
- தமிழர் சேவை சங்கம் TSS
கப்பல் மணி 

Tamil bell

From Wikipedia, the free encyclopedia
 
 
Jump to navigationJump to search

 
Bell with its inscription and translation
The Tamil Bell is a broken bronze bell discovered in approximately 1836 by missionary William Colenso. It was being used as a pot to boil potatoes by Māori women near Whangarei in the Northland Region of New Zealand.
The bell is 13 cm long and 9 cm deep, and has an inscription. The inscription running around the rim of the bell has been identified as old Tamil. Translated, it says "Muhayideen Baksh’s ship’s bell". Some of the characters in the inscription are of an archaic form no longer seen in modern Tamil script, thus suggesting that the bell could be about 500 years old, possibly from the Later Pandya period.[1] It is thus what is sometimes called an out-of-place artefact.

 
Bell from a different source
Indologist V. R. Ramachandra Dik****ar states in his The Origin and Spread of the Tamils that ancient Tamil sea-farers might have had a knowledge of Australia and Polynesia.[2] The discovery of the bell has led to speculation about a possible Tamil presence in New Zealand, but the bell is not in itself proof of early Tamil contact with New Zealand'.[3] Seafarers from Trincomalee may have reached New Zealand during the period of increased trade between the Vanni country and South East Asia. The bell might have been dropped off the shore by a Portuguese ship, whose sailors had been in touch with the Indians.[4] Also, a number of Indian vessels had been captured by the Europeans during the period; thus, another possibility is that the bell might have belonged to such a wrecked vessel, cast away on the New Zealand shores.[5]

 



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

kal.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

ஆகஸ்ட் 12,2009,00:00 IST

 

http://thiru2050.blogspot.com/2009/08/1220090000-ist-3000.html

 

 
 

பழநி: பழநி அருகே அமரபூண்டியில் 3,000 ஆண்டுகள் பழமையான கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டது. அமரபூண்டியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, கோயில் கட்டடக்கலை நிபுணர் மணிவண்ணன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நாராணமூர்த்தி அறிக்கை: அமரபூண்டி ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள காட்டில் 2 கல்திட்டைகள் உள்ளன. இவை 3,000 ஆண்டுகள் பழமையானவை. பழங்காலத்தில் இறந்தவர்களை முதுமக்கள் தாழியில் வைத்து புதைத்து, அந்த இடத்தை அடையாளம் காணும் வகையில் புறாக்கூண்டு போன்ற அமைப்புடன் பலகைக்கல் அமைப்பை ஏற்படுத்துவர்.

இதை கல்திட்டை என்பர். அமரபூண்டியில் கிடைக்கப்பெற்றவை ராட்சத வடிவில் உள்ளது. ஒரு கல்திட்டு 1.17 மீ., உயரமும், 6.61 மீ., சுற்றளவும் கொண்டுள்ளது. மற்றொன்று 1.6 மீ., உயரமும், 6 மீ., சுற்றளவும் கொண்டுள்ளது, இக்கல்திட்டைகளை வெவ்வேறு சமூகத்தினர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

பழனி அருகே, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘கல்திட்டை’
கண்டுபிடிப்பு - கற்காலத்தை சேர்ந்தது என ஆய்வாளர் தகவல்
பழனி அருகே, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘கல்திட்டை’ கண்டுபிடிப்பு - கற்காலத்தை சேர்ந்தது என ஆய்வாளர் தகவல்
பழனி அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘கல்திட்டை’ என்ற நினைவு சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பதிவு: ஜூலை 29,  2019 04:00 AM மாற்றம்: ஜூலை 29,  2019 05:18 AM
பழனி,
 
பழனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான கல்வெட்டுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இதையடுத்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, ராஜா ரவிவர்மா மற்றும் பழனியாண்டவர் கலைக்கல்லூரி பண்பாட்டுத்துறை பேராசிரியர் அசோகன், மாணவர்கள் திருவேங்கடம், செல்வராஜ் ஆகியோர் பழனி பகுதியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஆயக்குடி தென்பகுதியிலுள்ள பொன்னிமலையில் மேற்கொண்ட ஆய்வில், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘கல்திட்டை’ என்ற நினைவு சின்னத்தை கண்டுபிடித்தனர்.
 
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:-
 
பழனி அருகே ஆயக்குடி பகுதியில் ‘ஆய்வேளிர்’ என்ற பழங்குடி தமிழ் மக்கள் வாழ்ந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து பொன்னிமலை பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டதில், இந்த நினைவு சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் உயிரெழுத்தான ‘ஃ’ வடிவத்தில், 2 பாறையின் மீது ஒரு பெரிய பாறை வைக்கப்பட்டு, அதன் அடிப்புற இணைப்புக்காக சிறிய கற்கள் வைக்கப்பட்டுள்ள வகையில் காட்சியளிக்கிறது. அவை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பெருங்கற்காலத்தை சேர்ந்தவை என்று கருதப்படுகிறது. பொதுவாக இந்த நினைவு சின்னம் அக்காலத்தில் வாழ்ந்து இறந்துபோனவரின் நினைவாக எழுப்ப கூடியதாகும். எனவே இதுவும் ஒரு போர் வீரனின் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கலாம்.
 
இதேபோன்று ஒரு நினைவுச்சின்னம் ஆஸ்திரேலியாவின் ‘ஊரு’ என்ற இடத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் காலத்தை அங்குள்ள ஆய்வாளர்கள் 30 ஆயிரம் ஆண்டுகள் என்று கணித்துள்ளனர். அந்த நினைவு சின்னம் காணப்பட்ட பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் நிறம், உருவமைப்பு, பழக்கவழக்கம் அனைத்தும் தமிழர்களை ஒத்து காணப்படுகின்றன. அதேபோல் ஊரு என்ற தமிழ் சொல்லால் ஆன பகுதியில் நினைவுச்சின்னம் கிடைத்துள்ளதாலும், தமிழ் ஆய்வாளர்கள் கூறும் குமரிக்கண்டத்தின் கிழக்கு பகுதியே ஆஸ்திரேலியா என்பதாலும், அங்குள்ளவர்கள், தமிழர்களின் வழித்தோன்றலா என்ற ஆய்வு தொடர்ந்து வருகிறது.
 
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் ‘ஊரு’ பகுதியில் கண்டறியப்பட்ட நினைவு சின்னத்தை போன்றே இதுவும் உள்ளதால், இதன் காலமும் அதனை ஒத்திருக்கலாம். எனினும் அறிவியல் முறைப்படி அதன் காலத்தை துல்லியமாக அறிய வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு மேற்கொண்டால் தான் தமிழர்களின் தொன்மை உலகிற்கு தெரியவரும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

பழனி அருகே ஆயக்குடியில் ஆய்வேளிர் மன்னர்களின் அழிந்து போன சங்க கால கோட்டை கண்டறியப்பட்டுள்ளது.
 பழனியை அடுத்த ஆயக்குடியின் தென்மேற்குப் பகுதியில் வயல்வெளி அருகே மேடான பகுதி உள்ளது.  இந்த மண்மேட்டில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, பேராசிரியர் அசோகன், முனைவர் கன்னிமுத்து, ஆய்வு மாணவர்கள் திருவேங்கடம், வாஞ்சிநாதன், சேரல்பொழிலன் உள்ளிட்டோர் மேற்கொண்ட ஆய்வில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆய்வேளிர் மன்னர்களின் சங்க கால கோட்டை  இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. 
  அழிந்து போன இக்கோட்டை மண், பாறாங்கற்கள், செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. தற்போது சுமார் பத்து ஏக்கர் பரப்பளவிலான இந்த பகுதி மண்மேவி மூடியுள்ளது. கோட்டைக்குள் சங்க காலத்தில் ஏராளமான மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. மண்ணால் செய்யப்பட்ட உணவுப்பாத்திரங்கள், பானை ஓடுகள், நகக்குறி ஓடுகள், சங்கிலி ஓடுகள், கருப்புசிவப்பு மண்பானை ஓடுகள் ஆகியவை உடைந்து காணப்படுகின்றன. 
செங்கற்களில் காணப்படும் குறியீடுகள் அழுத்தமாக உள்ளது. சிறுவர், சிறுமியர் விளையாடும் காடான் விளையாட்டுக்கான(தற்போதைய பாண்டி ஆட்டம்) வட்ட வடிவ ஓடுகள் பல கிடைத்துள்ளன. 
கூரை வேய பயன்படுத்தப்படும் ஓடுகள், களிமண்ணாலான ஓடுகள், உடைந்த அகல் விளக்குகளும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:  
இங்கு மூலிகை, உணவு,  அரைக்கப் பயன்படுத்தப்படும் தேய்ப்புக்கல் கிடைத்துள்ளது.  ஒரு கல்லில் கூ என்ற பழங்கால தமிழ் எழுத்து உள்ளது.  தமிழ்மொழி பிராமி எழுத்தில் இருந்து வட்டெழுத்தாக மாறிய காலத்தில் இது எழுதப்பட்டிருக்கிறது. 
 அதாவது மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ளது.  இதே பகுதியில் பழங்கால கொற்றவை சிலையும் கிடைத்துள்ளது.  ஆயக்குடியில் ஆய்வேளிர் மன்னர்கள் ஆட்சி செய்தது முன்னரே உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதன்காரணமாகவே இந்த ஊர் ஆய்குடி என்று இருந்து ஆயக்குடி என திரிந்துள்ளது. பழனி சங்க காலத்தில் ஆவி வேளிர் மன்னர்களின் ஆட்சியில் இருந்ததால் ஆவினன்குடி என அழைக்கப்பட்டுள்ளது.
 இந்த இரு மன்னர்களுக்கு இடையே நடைபெற்ற போரில் இந்த கோட்டை அழிந்திருக்கலாம் அல்லது கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர்கள் படையெடுப்பால் அழிந்திருக்கலாம். 
இதுகுறித்து மேலும் ஆய்வு செய்தால் ஏராளமான தகவல்கள் கிடைக்கும் என்றார்.

https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/jan/02/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2837007.html



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

ஒன்இந்தியா தமிழ் இலக்கியம் கட்டுரை

பழனி அருகே 3,000 ஆண்டு பழமையான கல்திட்டை கண்டுபிடிப்பு

By Staff | Published: Wednesday, August 12, 2009, 12:01 [IST]

பழனி: பழனி அருகே அமரபூண்டியில் 3,000 ஆண்டுகள் பழமையான கல்திட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அமரபூண்டியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, கோயில் கட்டடக்கலை நிபுணர் மணிவண்ணன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து நாராணமூர்த்தி கூறியதாவது:

அமரபூண்டி ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள காட்டில் 2 கல்திட்டைகள் உள்ளன. இவை 3,000 ஆண்டுகள் பழமையானவை. பழங்காலத்தில் இறந்தவர்களை முதுமக்கள் தாழியில் வைத்து புதைத்து, அந்த இடத்தை அடையாளம் காணும் வகையில் புறாக்கூண்டு போன்ற அமைப்புடன் பலகைக்கல் அமைப்பை ஏற்படுத்துவர்.

இதை கல்திட்டை என்பர். அமரபூண்டியில் கிடைக்கப்பெற்றவை ராட்சத வடிவில் உள்ளது. ஒரு கல்திட்டு 1.17 மீ., உயரமும், 6.61 மீ., சுற்றளவும் கொண்டுள்ளது. மற்றொன்று 1.6 மீ., உயரமும், 6 மீ., சுற்றளவும் கொண்டுள்ளது.

இக் கல்திட்டைகளை வெவ்வேறு சமூகத்தினர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர் என்றார்.


Read more at: https://tamil.oneindia.com/art-culture/essays/2009/0812-years-old-stone-bench-found-near-palani.html

4,000 ஆண்டு பெருங்கற்கால... கல்திட்டை ஓவியம்

காக்க வலியுறுத்தல் Added : ஜூன் 06, 2018 

ஆத்தூர்: பெருங்கற்கால கல்திட்டை பாறை ஓவியங்களை பாதுகாக்க, வரலாற்று தேடல் குழுவினர் வலியுறுத்தினர். சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகே, மல்லூர் சாலையில், செவந்தாம்பட்டி உள்ளது. அங்கு, பாண்டியன் பாறை பகுதியில், பெருங்கற்கால ஈமச்சின்னமான கல் திட்டை கண்டறியப்பட்டுள்ளது. அதில், ஓவியங்கள் உள்ளன. சேலத்தில், பாறை ஓவியங்கள் கண்டறிந்துள்ளது, இதுவே முதல்முறை.
இதுகுறித்து, சேலம் மாவட்ட வரலாற்று தேடல் குழுவை சேர்ந்த கலைச்செல்வன், மோகன், சிவா ஆகியோர் கூறியதாவது: கி.மு., 1,000 ஆண்டுகளுக்கு முன் பெருங்கற்காலம். இறந்தவர்களின் நினைவாக பெரிய கற்களை கொண்டு கல்திட்டை, கல்வட்டம், கல்பதுக்கை, கற்குவை போன்றவை அமைத்து வழிபாடு செய்தனர். மாண்டவர் வீடு என்பது, பின்னாளில் பாண்டியன் வீடு, பாண்டியன் பாறை என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் பாண்டிய மன்னன் படை வீரர்களுடன், இந்த வழியாக சென்றதாக தகவல் உள்ளது. சேர்வராயன், அருநூற்றுமலை, மேட்டூர், கல்வராயன் மலை பகுதிகளில், அதிகளவில் கல்திட்டை உள்ளது. ஆனால், இங்கு தான் பாறை ஓவியத்துடன் கல்திட்டை உள்ளது. ஏழு பெரிய கற்களின் மீது, 3 முதல், 4 அடி உயரம் கொண்டதாக கல்திட்டை உள்ளது. தாங்கும் கற்களில் வெள்ளை நிறத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இரு கைகளில் ஆயுதம் ஏந்தி, ஏராளமான மனிதர்கள் உள்ளனர். கல்திட்டைகளில் சடங்கு, சண்டை காட்சி, குறியீடு, மனித உருவம் இடம் பெறும். சில இடங்களில், மனிதர்கள் ஆயுதத்துடன் விலங்குகளை வேட்டையாடுவது போன்று, படம் இருக்கும். இங்குள்ள கல் திட்டையில் பல்வேறு குறியீடு மற்றும் மனித உருவம் உள்ளது. விலங்குகள் இல்லை. 4,000 ஆண்டுகள் பழமையான இந்த கல்திட்டை, பாறை ஓவியங்களை, தொல்லியல் துறையினர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

3,000 ஆண்டு பழமையான கல்திட்டைகள் கண்டுபிடிப்பு

 Added : ஜூன் 08, 2015 
 
 
 
 
 

விழுப்புரம் : சோளிங்கர் அருகே, 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே சோளிங்கர் அடுத்த புத்தேரி, பத்மாபுரம் ஊராட்சிகளில், கல்வெட்டு ஆய்வாளர்கள் வீரராகவன், சண்முகம் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். புத்தேரி ஏரிக்கரை அருகே ஒரு கல்திட்டை, பத்மாபுரம் மலை உச்சியில் இரண்டு கல் திட்டைகளைக் கண்டுபிடித்து உள்ளனர்.
இதுகுறித்து, ஆய்வாளர்கள் கூறியதாவது: பழங்காலத்தில் கல்திட்டைகள் அமைத்து, இறந்தவர் உடலை அதன் மீது கிடத்துவது வழக்கம். இதை, 'மாண்டவர் வீடு' என்றனர். தற்போது 'பாண்டவர் வீடு' என, அழைக்கின்றனர்.மாண்டவர்களுக்கு அமைக்கப்பட்ட அமைப்புகளை, கல்திட்டை, கற்பதுக்கை, கல்வட்டம், பரல் கற்குவியல் என, வரலாற்று அறிஞர்கள் அழைக்கின்றனர்.இங்கு கண்டறியப்பட்ட கல்திட்டையில், இடுதுளையோ, பாறை ஓவியங்களோ, கீறல் வரைவுகளோ இல்லை. இக்கல்திட்டையின் மூடுகல், 15 அடி நீளம், 10 அடி அகலம், இரண்டரை அடி கனம், 15 டன் எடை கொண்டது.
நல்ல நிலையில் இரண்டு கல்திட்டைகள், சிதைந்த நிலையில் ஒரு கல்திட்டை ஆகியவை உள்ளன. இவற்றில் ஒன்றில் இடுதுளை உள்ளது. இந்த இடுதுளையின் வழியே, மாண்டவர்களுக்கு படையல் செய்யும் பழக்கம் இருந்தது.இக்கல்திட்டை, 20 அடி நீளம், பதினேழரை அடி உயரம், இரண்டரை அடி கனத்தில் உள்ளது. 20 டன் எடையுள்ள கல்லால் மூடப்பட்டுள்ளது.மற்றொரு கல்திட்டை இடுதுளை இல்லாமல் உள்ளது. இது, 15 அடி நீளம், 12.5 அடி அகலம் கொண்டது. இவை, 3,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம்.கல்திட்டைகள் பற்றி விழிப்புணர்வு இல்லாததால், இவை சிதைக்கப்படும் நிலை உள்ளது. இவற்றை பாதுகாக்க, தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

 போடியில் பழமையான கல்திட்டைகள் கண்டுபிடிப்பு

 Added : ஆக 25, 2018 
 
addthis-share.jpg
 
 
 
 

போடி:போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல் திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.போடி சி.பி.ஏ., கல்லுாரி முதல்வர் ராஜகுமாரன் வழிகாட்டுதலில் வரலாற்றுத்துறை கீழ் தொல்பொருள் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் அத்துறை பேராசிரியர் மாணிக்கராஜ், கனகராஜ், மாணவர்கள் உள்ளிட்டோர் போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழகத்தில் அரிதாக கிடைக்க கூடிய 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல் திட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.பேராசிரியர் மாணிக்கராஜ் கூறுகையில்: கல்திட்டைகள் என்பவை பண்டைய காலத்தைச் சேர்ந்த ஈமப்புகை குழி அல்லது கல்லறையாகும். மலைப்பகுதியில் வாழ்ந்த மக்கள், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய சிறிய, பெரிய பாறை கற்களை வட்டமாகவோ, சதுரமாகவோ அடுக்கி, மையப்பகுதியில் உடலோடு ஈமப்பொருள்கள், அவர் பயன்படுத்திய பொருட்களை வைத்து, நான்கு புறமும் கற்பலகைகளை செங்குத்தாக நிறுத்தி மேல்பகுதியில் பலகை கற்களை கொண்டு மூடி விடுவர்.ஒரு புறம் மட்டும் நுழைவு வாயில் போன்று உள்ள அமைப்பு கல்திட்டையாகும். இது போன்று நான்கு கல்திட்டைகள் ஒரே இடத்தில் காணப்படுகின்றன. மூன்று சேதம் அடைந்துள்ளது. இவை 4 ஆடி நீளமும், 3 அடி அகலமும் கொண்டுள்ளது. இவை எதிரிகளுடன் நடந்த போரில் வீரமரணம் அடைந்த நான்கு வீரர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கலாம் அல்லது சமூகத்தின் தலைவர் இறந்த பின் அவர் நினைவாக அமைக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது. கட்டட கலை, கட்டுமான நாகரிகத்தை மாணவர்களுக்கு வெளிக்காட்டும் வரலாற்று சான்றாக உள்ளது, என்றார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

பழமையான கல்திட்டைகள் பழநி அருகே கண்டுபிடிப்பு

 Updated : ஏப் 15, 2013  Added : ஏப் 15, 2013 
 
addthis-share.jpg

 

 

 

பழமà¯à®¯à®¾à®© à®à®²à¯à®¤à®¿à®à¯à®à¯à®à®³à¯  பழநி à®à®°à¯à®à¯ à®à®£à¯à®à¯à®ªà®¿à®à®¿à®ªà¯à®ªà¯

பழநி:பழநி அருகே பொட்டம்பட்டியில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, பழங்கால கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழநியைச் சேர்ந்த, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையிலான குழுவினர், கணக்கன்பட்டி பகுதியில், வரலாற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பொட்டம்பட்டியைச் சேர்ந்த குப்புசாமி தோட்டத்தில், இரண்டு கல்திட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.நாராயணமூர்த்தி கூறியதாவது: சங்ககாலத்தில் இறந்தவர்களை, புதைத்து, பெரிய பாறாங்கற்களை கொண்டு, கல்திட்டு அமைப்பது வழக்கம். பெருங்கற் காலத்தைச் சேர்ந்த இந்த முறை, தென்னிந்தியா முழுவதும், காணப்படுகிறது. கிராம மக்கள், இந்த அமைப்பை, குள்ள மனிதர்கள் வாழ்ந்த வீடுகள் எனக்கூறுவர். பொட்டம்பட்டிலுள்ள, பட்டிக்குளத்தின் அருகே கிடைத்துள்ள இந்த கல்திட்டைகளைச் சுற்றி பழங்கால ஓடுகள் சிதறிக்கிடந்தன. அவற்றின் மேல் நகக்குறி, நெற்கதிர்வடிவங்கள் உள்ளது. உடைந்த பானையில் "த' என்னும் தமிழ் பிரமி எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இரும்பை உருக்க பயன்படுத்திய, இரும்பு தாதுக்கள், சுண்ணாம்பு கற்கள், குவளைகள் கிடைத்துள்ளது, என்றார்.

கல் திட்டைகள் கண்டுபிடிப்பு

 Added : ஜூன் 03, 2013 
 
addthis-share.jpg
 
 
 
 

பழநி:பழநி அருகே ஆயக்குடி மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். இதில், ஆமைக்கரடு என்ற இடத்தில் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான நான்கு கல்திட்டைகள், சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கூறியதாவது: சங்க காலத்தில் குறிஞ்சி நிலத் தமிழ் மக்கள் இறந்தவர்களை புதைப்பதற்கு கல்திட்டைகளை உருவாக்கியுள்ளனர். பாறையை குடைந்து, அதில் படுக்க வைத்து அடையாளத்திற்கு ஒரு புறாக் கூண்டு போன்ற அமைப்பை ஏற்படுத்திவிடுவர். ஆமைக்கரடில் உள்ள கல்திட்டைகள் ஒரு வீடு போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. மண் ஓடுகள் சிதறி கிடக்கிறது. இந்த கல்திட்டைகள், எந்த மன்னன் மற்றும் அவர் குடும்பத்திற்காக, ஏற்படுத்தபட்டது என உறுதியாக கூற ஆதாரங்கள் கிடைக்கவில்லை, என்றார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard