New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நிலவரிக் குறைப்பு ஹம்பக் - வெள்ளையரிடம் சரணாகதி

Guru

Status: Offline
Posts: 24778
Date:
நிலவரிக் குறைப்பு ஹம்பக் - வெள்ளையரிடம் சரணாகதி
Permalink  
 
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தலைவர் ம.ரெ.திருமலைசாமி விளக்கம்

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

நிலவரி குறைப்பு ஹம்பக்

தேர்தல் காலத்தில் நிலவரியை மூன்றில் ஒரு பாகமாவது சரிபாதியாவது குறைக்கப் போவதாகச் சவடால் அடித்து, அசெம்பிளி சபையைக் கைப்பற்றி அதிகார ஸ்தானத்தையும் அடைந்தார்கள். அதன் பிறகு மத்தியகால மந்திரிகள் போட்ட திட்டத்தைக்கூட காங்கிரஸ் மந்திரிகள் சரிவர நிறைவேற்றாமல் கண் துடைத்து தருகிறார்கள். நிலவரியில் கால் பாகத்தை சாஸ்வதமாகக் குறைக்க வேண்டும் என்று இடைக்கால மந்திரிகள் வேலை செய்தார்கள். அந்த வேலை பூர்த்தி பெறுவதற்கு முன் காங்கிரஸ் மந்திரிசபை வந்து விட்டது. இவர்கள் வந்ததும், சாஸ்வதம் என்பதை அடித்து "தற்காலிகம்'' என்று விவசாயிகள், தலையில் எழுதி விட்டார் கள். தற்சமயம் விவசாயிகளுக்கு இதனால் நன்மை, இருப் பதாகத் தெரியுமே தவிர, எப்போதும் இந்த வரி குறைப்பு (நீடித்திருக்காது. சரி பாதியாகவோ, மூன்றில் ஒன்றாகவோ வாக்களித்தபடி நிலவரியைக்குறைக்கும் இரக்கமில்லாவிட் டாலும் இடைக்கால மந்திரிகள் எழுதி வைத்த உத்தரவை யாவது காங்கிரஸ் மந்திரிகள் சரிவர நிறைவேற்றக்கூடாதா? இதிலிருந்து காங்கிரஸ்காரர்கள் விவசாயிகளுக்குச் செய்யும் நன்மை ஆட்டுக்குட்டிக்கு ஓநாய் செய்த உபகாரத்தைப் போலிருக்கிறதல்லவா? விவசாயிகளுக்கு இப்போ தேற் பட்டிருக்கும் வரி குறைவுக்குக்கூட இடைக்கால மந்திரிகள் காரணஸ்தர்களேயன்றி காங்கிரஸ் மந்திரிகள் அல்ல என்பதை  குடியானவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

கடலில் பெருங்காயம்

வேறிடங்களில் விவசாயிகள், கடன் வாங்க முடியாதபடி கடன் நிவாரணச் சட்டம் என்னும் ஒரு தடை உத்தரவைப் போட்டார்கள் இந்த மந்திரிகள் இப்போது கடன் உதவிக்கு ரூ. 50 லட்சம் ஒதுக்கியிருப்பதாகப் பறைசாற்றுகிறார்கள். இந்த 50 லக்ஷம் உப்புக்குதவுமா? புளிக்குதவுமா? என்று பாருங்கள். மொத்தக்கடன் 200 கோடி என்று சர்க்கார் நிபு ணர்கள் விசாரணை நடத்தி நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இமயமலை போன்ற இவ்வளவு பெரிய தொகைக்கு, அடி சுண்டைக்காய் பருமனுள்ள, 50 லக்ஷ ரூபாய் எந்த மூலைக் குப் பயன்படும்? 200 கோடி ரூபாய்களை, கழுவிச் சுத்தப் படுத்துவதற்குக் கூட 50 லட்சம் ரூபாய் போதப்போவதில்லை.

மறுபைசலும் தற்காலிகம்

இவ்வளவும் செய்த மந்திரிகள் விவசாயிகளுக்கு, இன்னொரு ஹானியையும் செய்திருக்கிறார்கள். நிலங்களின் மறு பைசலை ரத்து செய்வதை விட்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள், நிலவரி வஜா தற்காலிகம், மறு பைசல் முறை தற்காலிகம் என்று இப்படியே தற்காலிக பல்லவி பாடுவதால், மந்திரிகள் இஷ்டப்பட்டாலும் இனி வரும் மந்திரிகள் விரும்பினாலும் அந்த வரியைப் பழையபடி சுலபமாக உயர்த்திக் கொள்ள இடம்வைத்துச் செய்கிற ஏற்பாடே இது என்பதையும் விவசாயிகள் உணர வேண்டும்.

புதிய வரி

தற்கால மந்திரிகள் செய்வதைவிட அதிகப்படியாக நில வரியைக் குறைத்து விவசாயிகளுக்கு உபகாரம் செய்யாமல் போனதோடு, மறைமுகமாகப் புதிய வரி ஒன்றை மெல்ல நுழைத்திருக்கிறார்கள். அது தான் கோர்ட் ஸ்டாம்புக் கட்ட ணத்தையும் ரிஜிஸ்ட்ரேஷன் கட்டணத்தையும் உயர்த்தி யிருக்கும் திட்டம். இதனால் நீதி இலாகாவில் வழக்குத் தொடருவதன் சம்பந்தமாகவும் நிலபுலங்களை ஈடு வைத்துப் பணம் வாங்கும் சமயத்திலும் விற்பனை செய்கிற காலத்திலும் அதிகவரி கொடுத்தாக வேண்டிய தேற்படுகிறது. இடைக்கால மந்திரிகள் குறைத்த நிலவரியில் ஒரு பகுதியை இப்படி மறைமுகமான முறையில் காங்கிரஸ் மந்திரிகள் கைப்பற்றத் தொடங்கி விட்டார்கள்.

மோட்டார்காரர் சோற்றில் மண்

குடியானவனைத்தான் இப்படி மறைமுகமான மார்க்கத் திலும் பகிரங்கமான வழியிலும், வயிற்றிலடித்து விட்டார்க ளென்றால் மோட்டார் வண்டி வைத்துப் பிழைப்போர் வயிற் றிலும் மண்போடத் தொடங்கி விட்டார்கள். லைசன்ஸ்கள், பெறுவதற்காக ஸ்தல ஸ்தாபனங்களிடமும் போலீஸ் இலாகாவுக்கும் அலைவதற்குப் பதில் ஒரே இடத்திற்குப் போனால் போதுமென்று கமிட்டி நியமிப்பதின் மூலம் டாக்ஸி, லாரி, பஸ். வண்டிக்காரர்களுக்கு அதிக வரி ஏற்பட்டுவிட்டது. காங்கிரஸ் மந்திரிகளின் வரி குறைப்புத் திட்டம் எவ்வளவு ஜரூராக உயருகிறதென்று பார்த்தீர்களா?

தொழிலாளியின் அழுகுரல்

எங்கும் தொழிலாளர் கூக்குரல் நம் நெஞ்சை உருக்கு கின்றது. அதிக நேர வேலை, சம்பளக் குறைவு, ஓய்வற்ற, உழைப்பு என்கிற அழுகையே - மேலோங்கி நிற்கிறது. தொழிற்சாலைகளின் கதவடைப்பு ஓசையும் வேலை நிறுத்த சந்தடியுந்தான்  காங்கிரஸ் மந்திரிசபை அறுவடை செய்த பலாபலன்கள். தொழில் மந்திரியும் வேலை நிறுத்தவிடங் களுக்கு ஓடோடிச் சென்று கலந்து பார்த்தார். கடைசியில் ஏற்பட்ட பலன் என்ன? வெறும் கண் துடைப்புத்தான். லேபர் யூனியன்களை தொழிலாளர் சங்கங்களை அங்கீ கரித்து விட்டால் எல்லாக் குறைகளும் நீங்கிப் போகுமென்று விட்ட பேசிவிட்ட டார் முதன் மந்திரி கனம் ஆச்சாரி. எப்பேர்ப்பட்ட அபார சமர்த்துப் பாருங்கள்!

வெள்ளையரைக் கண்டு நடுக்கம்

சரணாகதி மந்திரிசபை ஏற்பட்டதும் வெள்ளைக்காரனுக் கிருந்த அற்ப சொற்ப பயமும் அற்றுப்போய் விட்டது. ஜஸ்டிஸ் கட்சிக்காரனைவிட காங்கிரஸ்காரனை நம்பி வாழலாம் என்கிற தைரியமும் அவர்களுக்கு உண்டாகி விட்டது. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் காட்ட முடியும். விரிவஞ்சி குறிப்பாக ரெண்டொன்று கூற விரும்பு கிறேன்.

உதாரணம் நெ 1.

மெடிக்கல் காலேஜ் பிரின்ஸ்பால் நியமனக்கதை உங்க ளுக்குத் தெரியும். அந்த ஸ்தானம் வெள்ளைக்காரர்களுக் கென்று ஒதுக்கப்பட்டதல்ல. திறமை கொண்ட அனுபவ சாலிகள் யாராயிருந்தாலும் அதற்கு நியமிக்கலாம். அப்படி யிருந்தும் அதில் ஆக்டிங்காக விருந்த டாக்டர் லெக்ஷமண சாமி முதலியாரைக் காயமாகச் செய்வதை விட்டு, டாக்டர் பிளமட்ரி என்னும் ஒரு வெள்ளைக்காரரை நியமித்து விட்டார்கள். வாஸ்தவத்திலேயே வெள்ளைக்காரர்களை காக்கா பிடித்து வாழவேண்டியதில்லை என்று சரணாகதி மந்திரிசபை நினைத்திருந்தால் டாக்டர் லெக்ஷமணசாமி முதலியாரையே நியமித்திருக்கலாம்.

உதாரணம் நெ. 2.

டாக்டர் லெக்ஷமணசாமி முதலியாரை ஆக்டிங்காக நியமிக்கிற காலத்தில் கூட வெள்ளைக்காரர்களுக்குப் பயந்தே 'சீனியரான டாக்டர் குருசாமி முதலியாரை விட்டு, அவரை நியமித்தார்கள். அதாவது மந்திரிசபை டாக்டர் குருசாமி முதலியாரை நியமிக்க எத்தனித்தது, சர்ஜன் ஜெனரலான வெள்ளைக்காரரும் கவர்னரும் இந்த ஏற் பாட்டுக்கு விரோதமாயிருந்தார்களாம். இதை முன்னிட்டே டாக்டர் லெக்ஷமணசாமிக்கு சீட்டு விழுந்ததாம். ஆகவே அந்தச் சமயத்தில்கூட வெள்ளைக்காரர்களுக்குப் பயந்தே நடந்திருக்கிறார்களென்பதை உங்களுக்கு ஞாபக மூட்டுகிறேன்.

உதாரணம் நெ. 3.

காங்கிரஸ் கட்சியின் கொடியை தேசீயக் கொடி என்று முதலில் எழுதிவிட்டு, மறுபடி தேசிய காங்கிரஸ் கட்சியால் உபயோகப்படுத்தப்படும் மூவர்ணக்கொடி என்று அறிவித்ததின் மர்மம் என்னவென்று நினைக்கிறீர்கள்? அதுவும் வெள்ளைக்காரர்கள் குறுக்கீட்டால் ஏற்பட்ட நடுக்கமே.

உதாரணம் நெ, 4

சென்னை நகரைக் காட்டிலும் மது விற்பனை அதிகமா யுள்ள நகரம் நம் மாகாணத்தில் வேறில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். சென்னை ஜில்லாவில் மதுவிலக்கு வெற்றி பெற்றால் மற்ற விடங்களில் சுலபமடைந்து விடும் என்பதை நான் குறிப்பிட வேண்டியதில்லை. இதே அபிப்பிராயத்தை மதுவிலக்குப் பிரச்னை கருவிலிருந்த போதே, ஒரு மெம்பர். கட்சிக் கூட்டத்தில் வெளியிட்டாராம். அதற்குத் தோழர் ஆச்சாரி என்ன பதில் சொன்னார்? "சென்னையில் கைவைத்தால் நம் ஏற்பாடே குலைந்து விடும். வெள்ளைக்காரன் உபத்திரவங்களைத்தாங்க முடி யாது" என்று கூறினாராம்.

உதாரணம் நெ. 5

கோடைக்காலத்தில் சென்னை மந்திரிகள் நீலகிரிக்குப் போகப் போவதில்லை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விஷயம். ஆனால்  சர்க்கார் செக்ரட்டரிகள் மட்டும் நீல கிரிக்குப் போகப் போகிறார்கள். இப்படி மந்திரிகள் ஒரு பக்கமும், செக்ரட்டரி கள் ஒரு பக்கமுமிருப்பதால் சர்க்கார் நடவடிக்கைகள் தாமதப்படும். விருதாவான செலவும் ஏற்படும் என்பதைக் குறிப்பிட வேண்டியதில்லை. இதைப் பற்றி பிரதம மந்திரியை ஒருவர் கேட்டபோது என்ன சொன்னார் தெரியுமா? இந்தியர்கள் நாட்டுக்கட்டைகள்; அவர்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். வெள் ளைக்காரர்கள் அப்படி அல்ல. குரோட்டன்ஸ் செடிகளைப் போல வெயிலைக்காட்டி நிழலில் வளர்க்கப்பட வேண்டி யவர்கள். அவர்கள் நீலகிரிக்கு போவதைத் தடுக்கக்கூடாது'' என்று பதில் அளித்தார்,

உதாரணம்  நெ. 6.

சம்பளக் குறைப்பு விஷயமாய் புதிய உத்தியோகங் களுக்குத் தான் சம்பளக் குறைவு ஏற்படுமேயன்றி, பழைய உத்தியோகஸ்தர்கள் சம்பளத்தில் கை வைக்கமாட்டோம் என்று தோழர் ஆச்சாரியார் உறுதி கூறியதின் தாத்பர்ய மென்னவென்று நினைக்கிறீர்கள்? வெள்ளைக்காரர் களுக்குப் பயந்து, கொண்டுதான்.

உதாரணம் நெ. 7.

வைசிராயை சென்னைத் துறைமுகத்தில் வரவேற்க மாட்டோம் என்று வீம்பு பேசி வீட்டிலிருந்த வீரர்கள்  சென்னை மந்திரிகள் என்பதை நாங்கள் அறிவீர்கள். அப் படிச் செய்தவர்கள் கடைசிவரை வைசிராய் வரவேற்புகளில் கலந்து கொள்ளாதிருந்தால் நாணயஸ்தர்கள் தான்; வீரர்கள் தான். ஆனால், அடுத்த நாளே கவர்னர் மாளிகைக்குச் சென்று வைசிராய் பேட்டிக்காகக் காத்துக்கிடந்தார்களே! இது என்ன புருஷத்தனம்? இது அவர்கள் வெள்ளைக்காரர் களைக் கண்டு பயப்படுவதைக் காட்டுகிறதா அல்லவா?

கம்யூனல் ஜி. ஒ. கதி

உத்தியோகஸ்தர்களை நியமனம் செய்கிற காலத்தில் வகுப்பு வாரி உரிமைப்படி ஸ்தானம் அளிக்க வேண்டு மென்னும் கம்யூனல் ஜி.ஓ. ஏற்பட்டிருப்பது எல்லோருக்கும் தெரியும். அந்த ஜி. ஓ. வில் தான் கை வைக்கப் போவதில்லை என்று சொல்லிக் கொண்டே தோழர் ஆச்சாரி தைரியமாக - ஆணவமாக- அகங்காரமாக - இறுமாப்போடு அதை உதாசீனப்படுத்தித் தன் ரெத்த வாஞ்சையைக் காட்டத் தலைப்பட்டு விட்டார். மானங்கெட்ட தமிழர் - மரியாதை இழந்த தமிழர் - ரோஷங் கெட்ட தமிழர் சிலர் அவரோடு சேர்ந்து கொண்டு ஜாண் வயிற்றுக்கு ஈனங்கெட்டு நிற் கின்றனர்.

கார்ப்பரேஷனுள் அக்கிரகாரப்படை எடுப்பு

சென்னைக் கார்பரேஷன் கல்வி அதிகாரி நியமன விஷயம் சரித்திர பூர்வமாகி விட்டது. தோழர் சிவ சைலம் பிள்ளையை நியமிக்கலாமென்று முடிவு செய்ததும், பார்ப்பனக் கூட்டம் என்னென்ன அக்கிரமங்களெல்லாம் செய்தனவென்று உங்களுக்கு ஞாபகமிருக்கும். கார்ப்ப ரேஷன் லஞ்சப்புகாரும் அதன் விளைவுதான், ஒன்றுக்கு மூன்று முறை தோழர் சிவசைலம் பிள்ளையின் பெயர் வந்து வந்து, ஒத்தி வைக்கப்பட்டு, கடைசியில் தோழர் ரெகுநாத அய்யரை நியமித்து விட்டார்கள். கார்ப்பரேஷன் இஞ்ஜினியராக இருந்த ஒரு மலையாளி வெளி மாகாணத்துக்குப் போகப்போவதால், அந்த ஸ்தானத்துக்கும் ஒரு அய்யர் வரப்போகிறார். கார்ப்பரேஷன் எலக்ட்ரிகல் இன்ஜினியராக இருக்கும் தோழர் கிருஷ்ணசாமி செட்டியார் ரிட்டயராவ தற்கு 4 மாதங்களுக்கு முன்னதாகவே லீவு கொடுத்து ரிட்ட யராகும்படி செய்துவிட்டு, அந்த ஸ்தானத்தில் ஒரு அய்யங் காரை நியமிக்க ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். கார்ப்பரேஷன் ரெவன்யூ அதிகாரி பதவியிலும் ஒரு அக்கிராகார தேவதை வரப்போகிறதாம். ஒரு சின்ன கார்ப்பரேஷன், காங்கிரஸ் கட்சியால் கைப்பற்றப்பட்டபின் அது எவ்வளவு வேகமாக அக்கிரகாரமாகி வருகிறதென் பதைக் கவனித்தீர்களா?

ஆம், அதே டாக்டர் ராஜன் தான்

இடைக்கால மந்திரிகளின் ஏற்பாட்டின்படி, வைத்திய வசதியை அதிகரிப்பதற்கு 17 சர்ஜன்கள் பொறுக்கி எடுத்த னுப்பப்பட்டார்கள். அதன் பிறகு காங்கிரஸ் மந்திரிசபை வந்துவிட்டது. காங்கிரஸ் மந்திரி சபையின் அனுக்கிரகத்தால் இடைக்கால மந்திரிசபை காலத்தில் பொறுக்கி எடுக்கப்பட்ட 17 சர்ஜன்களுக்கு வேலை இல்லாது போயிற்று. காரணம் பாழாய்ப் போன வகுப்புணர்ச்சியே பொறுக்கி எடுக்கப்பட்ட அந்த 17 சர்ஜன்களில்., 13 பேர் பிராமணரல்லாதாராயிருந் தால் எந்த பிராமணன் தான் சகிப்பான்? இனி வைத்திய இலாகாக்களுக்குச் சம்பளமில்லாத, கவுரவ டாக்டர்களை நியமிக்கப்போவதாகச் சொல்லி, 17 பேர் சீட்டுகளும் சாகடிக் கப்பட்டன.

- தொடரும்

- விடுதலை, 16.3.1938

__________________

Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: நிலவரிக் குறைப்பு ஹம்பக் - வெள்ளையரிடம் சரணாகதி

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard