New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முசிறி பட்டினம் மோசடி கதைகள்


Guru

Status: Offline
Posts: 24625
Date:
முசிறி பட்டினம் மோசடி கதைகள்
Permalink  
 


k39uRGn-Ank3wW30Hda3tXYqdm--l9GF_A5t0cjH

 
முசிறி பட்டினம்: 2,000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்களின் பானைக் கழிவறைகள் கண்டுபிடிப்பு
 
https://www.bbc.com/tamil/india-46053711இதை பகிர ஃபேஸ்புக்கில்
  •  
  • இதை பகிர Messenger 
  • இதை பகிர டுவிட்டரில்
2000 ஆண்டுகளுக்கு முன்பு கழிவறைகள், வணிகம் என செழித்து இருந்த தமிழக நாகரிகம்படத்தின் காப்புரிமைKERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH

கேரளாவின் கடலோர நகரமான முசிறி பட்டினம் பகுதியில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் மத்தியில் தனிநபர் கழிவறைகள் பயன்பாட்டில் இருந்தன என்று தெரியவந்துள்ளது.

மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்றுவந்த ஒவ்வொரு காலத்திலும் குறிப்பிட்ட அளவு தொழில்நுட்ப அறிவு உயர்ந்துகொண்டே வந்துள்ளது. கற்காலம் தொடங்கி இன்று வரை மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களை ஆய்வு செய்தால் அவர்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றி கணிக்கமுடியும். இந்த அடிப்படையில், கேரளாவில் உள்ள முசிறி அல்லது முசிறிப்பட்டினம் என்ற பகுதியில் ஆய்வு செய்த தொல்லியல்துறை நிபுணர்கள், 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் கழிவறைகள் கட்டி, பயன்படுத்தியுள்ளனர் என்று கண்டறிவந்துள்ளனர்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கழிவறைகள், வணிகம் என செழித்து இருந்த தமிழக நாகரிகம்படத்தின் காப்புரிமைKERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH

சென்னையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பட்டினம் பகுதியின் வரலாறு, அங்கு தொல்லியல் ஆய்வில் கிடைத்த பல்வேறு பொருட்களின் விவரங்களை 'பாமா'(PAMA) என்ற தனியார் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் செரியன் விளக்கமாக எடுத்துரைத்தார்.

கழிவுபானைகள்

''வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், தமிழகம் என்பது பரந்துவிரிந்து, இன்றுள்ள தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா, கர்நாடகா என தென்னிந்தியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாக இருந்திருக்கும் என்றே கருதுகிறோம். அதில் பட்டினம் நகரம் முக்கியமான துறைமுகமாக இருந்தது. இங்கு கழிவறைகள் இருந்ததற்கான சான்றாக கழிவுப் பானைகள் கிடைத்துள்ளன,''என்கிறார் பட்டினம் பகுதியில் ஆய்வு நடத்தும் தொல்லியல் ஆய்வாளர் செரியன்.

''ஆறு பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, கடைசியாக வைக்கப்பட்ட பானை கூம்பு வடிவில் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்தது. இந்த கழிவறை வெஸ்டர்ன் டாய்லெட் என்று அறியப்படும் கழிவறையை ஒத்திருந்தது. இதே அமைப்பில் ஆறு கழிவறைகளை இதே இடத்தில் கண்டறிந்தோம்,''என்று விளக்கினார் செரியன்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கழிவறைகள், வணிகம் என செழித்து இருந்த தமிழக நாகரிகம்படத்தின் காப்புரிமைKERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH

2006 முதல் 2016 வரை பட்டினம் பகுதியில் பாமா நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. பட்டினம் துறைமுகத்திற்கு வந்துசென்ற வணிகர்கள் அரேபியா, சீனா, ஓமான், ஸ்பெயின், எகிப்து போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதால், அந்த நாடுகளைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்களையும் இந்த ஆய்வில் பாமா ஈடுபடுத்தியுள்ளது. ''பட்டினம் பகுதியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன. அதில் குறிப்பிடத்தக்க அளவு பானை ஓடுகள் கிடைத்தன. வீடுகளில் கூரை அமைக்க பயன்படுத்தப்பட்ட ஓடுகள் கிடைத்தன. சுமார் ஏழுரை கிலோ மிளகும் கிடைத்தது,''என்று கூறினார் செரியன்.

 

‘கடல் கடந்த வணிகம்’

பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வணிகர்களுக்கு பட்டினம் நகரம் எவ்வாறு ஒரு இணைப்பு நகரமாக இருந்தது என்பதை ஆதாரங்களுடன் பேசிய அவர், ''இரும்புக் காலம் முடிந்து, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், இந்தியாவின் மேற்கில் உள்ள அரேபிய நாடுகள் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து வரும் வணிகர்கள் பட்டினம் நகரத்தில் வாணிபம் செய்ததற்கு அடையாளமாக பல வெளிநாட்டு ரத்தின கற்கள் அகழ்வாய்வில் கிடைத்தன. 146 நாணயங்களை கண்டறிந்தோம். விதவிதமான குடுவைகள் கிடைத்தன. அந்த குடுவைகளை கூர்ந்துநோக்கியபோது, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கொண்டுவந்த குடுவைகள் அவை என்று தெரிந்தது. அதற்கு சாட்சியாக மேல்பகுதியில் ஒவ்வொரு நாட்டின் பிரத்தேயேக அலங்கார வேலைப்பாடுகள் தெரிந்தன. அதேபோல படகுகளை கட்டிவைப்பதற்கான இரும்பு கம்பிகள் இருந்தன,''என்று கூறுகிறார் செரியன்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கழிவறைகள், வணிகம் என செழித்து இருந்த தமிழக நாகரிகம்படத்தின் காப்புரிமைKERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH

''பட்டினம் நகரம் பல்வேறு நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு நுழைவாயிலாக இருந்தது என்று நம்புகிறோம். எங்களுக்கு கிடைத்த எலும்புத் துண்டுகளை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தியபோது, அவை மேற்கு மற்றும் தெற்கு ஆசியப்பகுதி, மற்றும் ஐரோப்பியப் பகுதியில் இருந்து வந்தவர்களின் எலும்புகள் அவை என்று கண்டறிந்தோம்,''என்கிறார் செரியன்.

அதேபோல தமிழகத்தில் அகழ்வாய்வு நடக்கும் கீழடி மற்றும் அழகன்குளம் போன்ற இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களுக்கும், பட்டினத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களுக்கும் ஒற்றுமை இருப்பதை உறுதி செய்யமுடிந்தது என்கிறார் அவர்.

https://groups.google.com/forum/?hl=nl_NL#!topic/mintamil/jjrTNcevdb4



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

2,000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்களின் பானைக் கழிவறைகள் முசிறி பட்டினம் அருகே கண்டுபிடிப்பு!

2,000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்களின் பானைக் கழிவறைகள் முசிறி பட்டினம் அருகே கண்டுபிடிப்பு!

2,000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்களின் பானைக் கழிவறைகள் முசிறி பட்டினம் அருகே கண்டுபிடிப்பு!

கேரளாவின் கடலோர நகரமான முசிறி பட்டினம் பகுதியில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் மத்தியில் தனிநபர் கழிவறைகள் பயன்பாட்டில் இருந்தன என்று தெரியவந்துள்ளது.

மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்று வந்த ஒவ்வொரு காலத்திலும் குறிப்பிட்ட அளவு தொழில்நுட்ப அறிவு உயர்ந்து கொண்டே வந்துள்ளது. கற்காலம் தொடங்கி இன்று வரை மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களை ஆய்வு செய்தால் அவர்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றி கணிக்க முடியும். இந்த அடிப்படையில், கேரளாவில் உள்ள முசிறி அல்லது முசிறிப்பட்டினம் என்ற பகுதியில் ஆய்வு செய்த தொல்லியல்துறை நிபுணர்கள், 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் கழிவறைகள் கட்டி, பயன்படுத்தியுள்ளனர் என்று கண்டறிவந்துள்ளனர்.

”வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், தமிழகம் என்பது பரந்து விரிந்து, இன்றுள்ள தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என தென்னிந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக இருந்திருக்கும் என்றே கருதுகிறோம். அதில் பட்டினம் நகரம் முக்கியமான துறைமுகமாக இருந்தது. இங்கு கழிவறைகள் இருந்ததற்கான சான்றாக கழிவுப் பானைகள் கிடைத்துள்ளன,
ஆறு பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, கடைசியாக வைக்கப்பட்ட பானை கூம்பு வடிவில் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்தது. இந்த கழிவறை வெஸ்டர்ன் டாய்லெட் என்று அறியப்படும் கழிவறையை ஒத்திருந்தது. இதே அமைப்பில் ஆறு கழிவறைகளை கண்டறிந்துள்ளனர்.

2006 முதல் 2016 வரை பட்டினம் பகுதியில் பாமா நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. பட்டினம் துறைமுகத்திற்கு வந்துசென்ற வணிகர்கள் அரேபியா, சீனா, ஓமான், ஸ்பெயின், எகிப்து போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதால், அந்த நாடுகளைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்களையும் இந்த ஆய்வில் பாமா ஈடுபடுத்தியுள்ளது. ”பட்டினம் பகுதியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன. அதில் குறிப்பிடத்தக்க அளவு பானை ஓடுகள் கிடைத்தன. வீடுகளில் கூரை அமைக்க பயன்படுத்தப்பட்ட ஓடுகள் கிடைத்தன. சுமார் ஏழுரை கிலோ மிளகும் கிடைத்துள்ளது.

பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வணிகர்களுக்கு பட்டினம் நகரம் எவ்வாறு ஒரு இணைப்பு நகரமாக இருந்தது என்பதை ஆதாரங்களுடன் பேசிய அவர், ”இரும்புக் காலம் முடிந்து, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், இந்தியாவின் மேற்கில் உள்ள அரேபிய நாடுகள் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து வரும் வணிகர்கள் பட்டினம் நகரத்தில் வாணிபம் செய்ததற்கு அடையாளமாக பல வெளிநாட்டு ரத்தின கற்கள் அகழ்வாய்வில் கிடைத்தன. 146 நாணயங்களை கண்டறிந்தோம். விதவிதமான குடுவைகள் கிடைத்தன. அந்த குடுவைகள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கொண்டு வந்த குடுவைகள் அவை என்று தெரிந்தது. அதற்கு சாட்சியாக மேல் பகுதியில் ஒவ்வொரு நாட்டின் பிரத்தேயேக அலங்கார வேலைப்பாடுகள் தெரிந்தன. அதேபோல படகுகளை கட்டி வைப்பதற்கான இரும்பு கம்பிகள் இருந்துள்ளன.

எங்களுக்கு கிடைத்த எலும்புத் துண்டுகளை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தியபோது, அவை மேற்கு மற்றும் தெற்கு ஆசியப்பகுதி, மற்றும் ஐரோப்பியப் பகுதியில் இருந்து வந்தவர்களின் எலும்புகள் அவை என்று கண்டறிந்தோம், அதேபோல தமிழகத்தில் அகழ்வாய்வு நடக்கும் கீழடி மற்றும் அழகன்குளம் போன்ற இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களுக்கும், பட்டினத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களுக்கும் ஒற்றுமை இருப்பதை உறுதி செய்ய முடிந்தது என சென்னையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பட்டினம் பகுதியின் வரலாறு, அங்கு தொல்லியல் ஆய்வில் கிடைத்த பல்வேறு பொருட்களின் விவரங்களை ‘பாமா’ (PAMA) என்ற தனியார் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் செரியன் விளக்கமாக எடுத்துரைத்தார்.

http://worldtamilforum.com/historical_facts/2000-years-old-tamils-pot-bathrooms/



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 அரபிக் கடலோரம் தமிழனின் தொன்மை நாகரிகம்!

https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=40113&cat=18&Print=1

பதிவு செய்த நாள்

15நவ
2017 
00:00
 

சிவகங்கை மாவட்டம் கீழடி என்ற இடத்தில் மூன்று கட்டடங்களாக நடந்த அகழாய்வில் கிடைத்த மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள புளோரிடா பீட்டா அனலடிக் நிறுவனத்தில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் கீழடி ஆகழ்வாராய்ச்சிப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2160 ஆண்டுகளுக்கும், மற்றொரு பொருள் 2220 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரிகம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து உற்சாகமாகத் தொடர வேண்டிய ஆய்வு ஏனோ உடனடியாக நிறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட மிகப்பெரிய அகழாய்வான கீழடி ஆய்வு தற்பொழுது தவழ்ந்து கொண்டிருக்கிறது. அதுவும் நிறுத்தும் நிலைக்குச் சென்றதை நிர்பந்தத்தால் உருட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் கேரளமாநிலம் கொடுங்கல்லூரை அடுத்த பட்டினத்தில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலான அகழ்வாய்வு தமிழனின் வரலாற்றுத் தொன்மைக்கு மற்றுமொரு சான்றாக நடந்து வருகின்றது.
அங்கே அகழாய்வில் சேகரிக்கப்பட்ட பொருட்களை வைத்து கண்காட்சி நடத்தி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் தொல்பொருள் ஆய்வு இடங்களை இணைத்து படகு சர்வீஸ்கள் நடத்தி சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்து வருகிறார்கள்.
இதுகுறித்து நேரில் அறிய பட்டினத்துக்குச் சென்றோம்.
கொச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் கொடுங்கல்லூருக்கு அடுத்து உள்ளது பட்டினம். பெயர்தான் பட்டினமே தவிர ஊர் சாதாரண கிராமமாகவே உள்ளது.
தற்போது கேரள மாநில தொல்பொருள் துறையின் கீழ் இயங்கும் பட்டினம் மியூசியத்துக்கு நாள்தோறும் ஏராளமான வரலாற்று அர்வலர்கள் வருகை தந்து நமது நாட்டின் பண்டைய நாகரிகத்தை குறிப்பாக தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை அறிந்து செல்கின்றனர். திங்கள்கிழமை மட்டும் விடுமுறை. மியூசியம் பொறுப்பாளர் வாசந்தி நம்மிடம் இந்த பட்டினம் அகழாய்வு குறித்த பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இங்கு நடந்த அகழாய்வில் முத்துமணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், தாயக்கட்டைகள், சதுரங்கக் காய்கள், சுடுமண் பொம்மைகள், சில்லுகள், நூல் நூற்கும் தக்ளி போன்றவை கிடைத்துள்ளன.
வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, மேற்கூரைகள் ஓடுகள் வேயப்பட்டிருந்திருக்கலாம். வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறை கேணிகள் இருந்துள்ளது. தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கறுப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1000 கிலோகிராம் எடை கொண்ட மண் ஓடுகள் அகழ்வாராய்ச்சியின் பொழுது கிடைத்திருக்கின்றன. தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் முசிறிப்பட்டினமாக பட்டினம் இருந்திருக்கலாம் என்ற எண்ணத்திலேயே அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. 1945ம் ஆண்டிலேயே இதற்கான வேலைகள் துவங்கிவிட்டன.
1990களில் சுற்றுச்சூழல் வல்லநர்களும், தொல்பொருள் ஆய்வாளர்களும் கேரளக் கடற்கரை முழுவதும் ஆய்வு செய்துள்ளனர். 1993 முதல் 1997 வரையிலான காலகட்டத்தில் டாக்டர் சாஜன்பால், செல்வகுமார், பி.ஜே. செரியன் ஆகியோர் தொடர்ந்து அகழாய்வு மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்களின் ஆய்வுகள் பட்டினம் - முசிறியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதை உறுதிப்படுத்தியிருக்கிறது என்றார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையின் விரிவுரையாளர் டாக்டர் செல்வகுமார் தன்னுடைய ஆராய்ச்சியில்,
நாங்கள் 2007ஆம் ஆண்டு அகழாய்வின்போது ஒற்றை அடிமரக் கட்டையைக் குடைந்து செய்த சிறுபடகு பல மரக்கம்பங்கள், கட்டுத் தறிகள் ஆகியவற்றைக் கண்டோம். அந்தச் சிறுபடகின் காலம் கரியம் வழிக் காலக் கணக்கீட்டுப்படி கி.மு. முதல் நூற்றாண்டு என்று நிறுவப்பட்டள்ளது. அதே காலத்தவையாகிய மிளகு, அரிசி, ஏலக்காய், சாம்பிராணி, திராட்சை விதைகள், போன்ற நிலைத்திணை எச்சங்கள் ஏராளமாகக் கிடைத்தன. பட்டினம் ஒரு காலப் பகுதியில் இந்தியப் பெருங்கடல் வணிகத்தில் செழிப்புமிக்க இடை இணைப்புத் துறைமுகமாக விளங்கியது. உரோமானியர் வளர்ச்சிக்கு முன்பே பட்டினத்தில் மக்கள் தொடர்ந்து வாழ்ந்தனர் என்பதற்கு சான்றுகள் உள்ளன. இன்னும் அகழ்ந்து எடுக்காத மிக முற்பட்ட காலமண் அடுக்குப் படிவம் கி.மு. 10ஆம் நூற்றாண்டுக்கும் 15ஆம் நூற்றாண்டுக்கும் (இரும்புக் காலம்) இடைப்பட்டதாக இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார்.
முசிறிப்பட்டினமாக இது இருந்திருக்கலாம் என அறுதியிட்டு இந்த ஆராய்ச்சி முடிவுகள் கூறாவிட்டாலும் அகழாய்வும் இது தொடர்பான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

திருவட்டாறு சிந்துகுமார்



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

முத்தமிழ் வேந்தன்

பின்தொடர்

1 நவம்பர், 2018 https://www.facebook.com/muthamizhchennai/posts/10217500057511594?__xts__%5B0%5D=68.ARCbjOCj_6nAx--HT59blOZIJmcKD3DXmI-4GurU-ScCIRg52yZKxuktj4FniC1gUxvH2gq4R10CwejaQhYBa-yb04HozXXegWS2QFB-q_N88qJHnMYNLt1GBTp4iq-0yQCE5hcS88aSvsQo56Xrt6HjXQqqSusGbp2GG0QhU5UZzNkXuK1wjXzePTcLRLgiE-4gzXRzKGdSPMCRDTN6e2ToLlKsaTnA1xQFe8YhdSSOzX3W8prPzB1DiEsuwKCD-H1ZY_JpIW-Upv78oRpi54-J5SLIQvmrIX9oXDXOidY3PmSjFIRlOH48ptKZM2tOcHzERguVGZgCGxbUO2LIrZA&__tn__=H-R

முசிறிபட்டணம் (இன்றைய கேரளா) - மத அடையாளங்கள் இல்லாத பண்டைய தமிழக துறைமுக நகரம்...!

முசிறிப்பட்டணத்தில் வாழ்ந்தவர்கள் சிறந்த மனிதர்களாக இருந்திருக்ககூடும். ஏனெனில் நாங்கள் அங்கு கண்டெடுத்த பொருட்களில் ஒன்றில் கூட மத அடையாளங்கள் இல்லை.

உலகின் எந்த இடத்திலும், தொல்லியல் சார்ந்த ஆய்வு நடந்தாலும், அங்கு, தமிழகம் சார்ந்த அடையாளங்களை காண முடியும்.

தமிழகத்தில் அகழ்வாய்வு நடக்கும் கீழடி மற்றும் அழகன்குளம் போன்ற இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களுக்கும், முசிறிபட்டணத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களுக்கும் ஒற்றுமை இருப்பதை உறுதி செய்யமுடிந்தது என்கிறார் 'பாமா' நிறுவன இயக்குனரும், தொல்லியல் ஆய்வாளருமான பி.ஜெ. செரியன்

சென்னை, தமிழ் இணைய கல்விக் கழகத்தில் (Tamil Virtual Academy), தொல்லியல் துறை சார்பிலான, மாதாந்திர கருத்தரங்கம் நேற்று (30-10-2018) நடந்தது. இதை, தமிழக தொல்லியல் துறை ஆணையர், உதயசந்திரன் துவங்கி வைத்தார்.

"தமிழகத்தின் பண்டைய துறைமுக நகரமான முசிறி பட்டணம் ஒரு மீள் பார்வை ["Re-Imagining Muciri-Pattinam/Muziris: The Ancient Port City of Tamilakam (300 BCE-500 CE)"]" என்ற தலைப்பில், கேரள தொல்லியல் துறை முனைவரும், "பாமா [http://www.pama.org.in/]" நிறுவன இயக்குனருமான, செரியன், "கேரள பட்டணம் என்ற இடத்தில் நடத்திய அகழாய்வில், செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியுடன் இருந்த, கடல் கடந்த தொடர்புக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அவை, முசிறி பட்டணமாக இருக்கலாம். இது, சீன, அரேபிய தொடர்புடைய மிகப்பெரிய வணிக மையமாக இருந்துள்ளது.முசிறி பட்டணத்தில், சுட்ட செங்கற்களாலான கட்டடங்கள், 'ரூலட்டட்' என்ற துண்டுகள், 'ஆம்போரா' ஜாடி துண்டுகள், ரோமானிய சிவப்பு வகை ஓடுகள், உயர்வகை கற்களாலான மணிகள் இருந்தன. இது, ஒரு நகரத்துக்கான சான்றுகள்.முசிறி துறைமுகம் வீடுகளும், ரோமானிய முறையில் கட்டப்பட்டு உள்ளன. இவற்றை, 2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டி உள்ளனர்.துறைமுக வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் திறன், முசிறி பட்டணத்திற்கு இருந்துள்ளது. உலகின் எந்த இடத்தில் தொல்லியல் சார்ந்த ஆய்வு நடந்தாலும், தமிழகம் சார்ந்த அடையாளங்களை காண முடியும்" என்றார்.

2,000 ஆண்டுகளுக்கு முந்திய பானைக் கழிவறைகள் கண்டுபிடிப்பு (கழிவுபானைகள்)

கேரளாவின் கடலோர நகரமான முசிறி பட்டணம் பகுதியில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் மத்தியில், தனிநபர் கழிவறைகள் பயன்பாட்டில் இருந்தன என்று தெரியவந்துள்ளது.

மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்றுவந்த ஒவ்வொரு காலத்திலும் குறிப்பிட்ட அளவு தொழில்நுட்ப அறிவு உயர்ந்துகொண்டே வந்துள்ளது. கற்காலம் தொடங்கி இன்று வரை மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களை ஆய்வு செய்தால், அவர்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றி கணிக்கமுடியும். இந்த அடிப்படையில், கேரளாவில் உள்ள முசிறி அல்லது முசிறிப்பட்டினம் என்ற பகுதியில் ஆய்வு செய்த தொல்லியல்துறை நிபுணர்கள், 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் கழிவறைகள் கட்டி, பயன்படுத்தியுள்ளனர்.

''ஆறு பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, கடைசியாக வைக்கப்பட்ட பானை கூம்பு வடிவில் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்தது. இந்த கழிவறை வெஸ்டர்ன் டாய்லெட் என்று அறியப்படும் கழிவறையை ஒத்திருந்தது. இதே அமைப்பில் ஆறு கழிவறைகளை இதே இடத்தில் கண்டறிந்தோம்,''என்று விளக்கினார் செரியன்.

2006 முதல் 2016 வரை முசிறிபட்டணம் பகுதியில் "பாமா" நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. பட்டணம் துறைமுகத்திற்கு வந்து சென்ற வணிகர்கள் அரேபியா, சீனா, ஓமான், ஸ்பெயின், எகிப்து போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதால், அந்த நாடுகளைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்களையும் இந்த ஆய்வில் பாமா ஈடுபடுத்தியுள்ளது.

2011-இல் முசிறி பாரம்பரியத் திட்டம் (Muziris Heritage Project) என்னும் திட்டத்தின் கீழ் கேரள வரலாற்று ஆய்வுக்கழகம் வரலாற்று (Kerala Council of Historical Research [KCHR]) ஆய்வினைத்தொடங்கியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ரோம் பல்கலைக்கழகம், பர்ஹாம் பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் அருங்காட்சியகம் போன்ற அயல் நாட்டு அமைப்புகளும் மற்றும் இந்தியத்தொல்லியல் ஆய்வுக்கழகமும் (Archaeological Society of India [ASI]) இவ்வாய்வில் பங்குபெற்றன.

"முசிறிபட்டணத்தில் பகுதியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன. அதில் குறிப்பிடத்தக்க அளவு பானை ஓடுகள் கிடைத்தன. வீடுகளில் கூரை அமைக்க பயன்படுத்தப்பட்ட ஓடுகள் கிடைத்தன. சுமார் ஏழுரை கிலோ மிளகும் கிடைத்தது", என்றார் திரு. செரியன்.

"கடல் கடந்த வணிகம்"

பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வணிகர்களுக்கு பட்டினம் நகரம் எவ்வாறு ஒரு இணைப்பு நகரமாக இருந்தது என்பதை ஆதாரங்களுடன் பேசிய அவர், ''இரும்புக் காலம் முடிந்து, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், இந்தியாவின் மேற்கில் உள்ள அரேபிய நாடுகள் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து வரும் வணிகர்கள் பட்டினம் நகரத்தில் வாணிபம் செய்ததற்கு அடையாளமாக பல வெளிநாட்டு ரத்தின கற்கள் அகழ்வாய்வில் கிடைத்தன. 146 நாணயங்களை கண்டறிந்தோம். விதவிதமான குடுவைகள் கிடைத்தன. அந்த குடுவைகளை கூர்ந்துநோக்கியபோது, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கொண்டுவந்த குடுவைகள் அவை என்று தெரிந்தது. அதற்கு சாட்சியாக மேல்பகுதியில் ஒவ்வொரு நாட்டின் பிரத்தேயேக அலங்கார வேலைப்பாடுகள் தெரிந்தன. அதேபோல படகுகளை கட்டிவைப்பதற்கான இரும்பு கம்பிகள் இருந்தன,''என்று கூறுகிறார் செரியன்.

''பட்டினம் நகரம் பல்வேறு நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு நுழைவாயிலாக இருந்தது என்று நம்புகிறோம். எங்களுக்கு கிடைத்த எலும்புத் துண்டுகளை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தியபோது, அவை மேற்கு மற்றும் தெற்கு ஆசியப்பகுதி, மற்றும் ஐரோப்பியப் பகுதியில் இருந்து வந்தவர்களின் எலும்புகள் அவை என்று கண்டறிந்தோம்,''என்கிறார் செரியன்.

அதேபோல தமிழகத்தில் அகழ்வாய்வு நடக்கும் கீழடி மற்றும் அழகன்குளம் போன்ற இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களுக்கும், முசிறிபட்டணத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களுக்கும் ஒற்றுமை இருப்பதை உறுதி செய்யமுடிந்தது என்கிறார் அவர்.

#MuziriPattanam
#AncientPort
#TamilNadu
#Kerala
#MuzirisHeritageProject
#KCHR
#PAMA
#TamilVirtualUniversity



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 சிந்து வெளியுடன் ஒன்று படும் கீழடி நாகரிகம்...!

சிந்து வெளியுடன் ஒன்று படும் கீழடி நாகரிகம்...!
கீ ழடி அகழ்வாராய்ச்சிகள், சிந்துவெளி அகழ்வாராய்ச்சிகள் ஆகியவை ஒரே இனம், ஒரே மொழி பேசிய திராவிட நாகரிகத்துக்கு உரியவை என அறிஞர்களால் நிறுவப்பட்டு வருகிறது.
பதிவு: மார்ச் 21,  2019 11:17 AM

1920-ல் சிந்துவெளி நாகரிகம் குறித்த ஜான் மார்ஷின் கண்டுபிடிப்புகளை போலவே 2014 முதல் நடைபெற்று வரும் வைகைச் சமவெளி கீழடி கண்டுபிடிப்புகளும் உலக அறிஞர்களின் பார்வையைக் கவர்ந்துள்ளன. ரோமிலா தாப்பர் என்னும் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் கீழடி கண்டுபிடிப்புகள் தமிழர் வரலாற்றில் புதிய திருப்பத்தை உருவாக்கும் எனக்கூறியுள்ளார்.

 

கீழடியில் இதுவரை நடந்த நான்கு அகழ்வாராய்ச்சிகளில் மொத்தம் 13ஆயிரத்து 658 பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிந்து வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துப் பொருள்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம். சிந்துவெளியில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை விட, ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகள் பெரியவை. அணிகலன் ஏற்றுமதியில் சிந்துவெளியை விட கீழடி போன்ற தமிழக நகரங்களின் ஏற்றுமதி அதிகமானது. குண்டூசியின் தலையைவிட சிறிய பாசிமணிகளில் தலைமயிரைவிட குறுகிய துளையிட்டு, உலக நாடுகளில் விற்ற நேர்த்தியை கீழடியில்தான் காண முடிகிறது. 138 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் தான் கீழடி அகழ்வாய்வு நடந்து வருகிறது. சிந்து வெளி நகர அமைப்பைப் போன்றே கீழடியிலும் திட்டமிட்ட நகர அமைப்பு, உறை கிணறு, குளியலறை, கழிப்பறை, புதை சாக்கடை ஆகியவை காணப்படுகின்றன. கொல்லன் உலைக்களம் செம்புருக்கவும் பயன்பட்டது, செம்பு வெட்டி எடுக்கப்பட்ட பொதிய மலை செம்பின் பொருப்பு எனப்பட்டது. எனவே தமிழ்நாட்டில் செம்புக்காலம் இல்லையென்று கூறுவது பொருந்தாது. அம்பில் செருகும் கூரிய எலும்பு முனைகள் வேட்டைக்கால நாகரிகத்திலிருந்தே தமிழர்களின் நாகரிகத் தொன்மை விளங்கியதைக் காட்டுகிறது.கீழடியிலிருந்தே சிந்து வெளி நாகரிகம் வடக்கு நோக்கிப் பரவியது என்பதை அது உறுதிப் படுத்துகிறது. கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் தென் பிராமி எனப்படும் தமிழி எழுத்தில் வேந்தன், பேரையன், இயனன், ஆதன் போன்ற பெயர்களைப் படித்துக் காட்டியுள்ளனர். ஆனால் சிந்துவெளி எழுத்துகளில் எழுதப்பட்ட மூன்று பானை ஓடுகளை அவர்கள் படிக்கவில்லை. அவற்றில் உள்ள காவன், உன்னு, வக்கன் உன்னப்பன் போன்ற சிந்துவெளிப் பெயர்களை நான் படித்துக்காட்டியுள்ளேன். ஆதிச்சநல்லூரில் நான் கண்டெடுத்த பானை ஓட்டில் மணக்கன் என்னும் பெயர் சிந்துவெளி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது, அதனை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இயக்குனரிடம் ஒப்படைத்தேன். நகரமைப்பு, செம்பின் பயன்பாடு உலகளாவிய வணிகம், எழுத்தறிவு பெற்ற கல்வி வளர்ச்சி, தாய் தெய்வ வழிபாடு. தாழியில் புதைத்தல் ஆகியவை கீழடிக்கும் சிந்துவெளிக்கும் உள்ள பொதுவான நாகரிக ஒப்புமைகள் எனலாம், இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் இரண்டுக்கு மட்டும் காலக்கணிப்பு செய்து, கீழடி நாகரிகம் கி.மு. 300 முதல் கி.மு. 200 வரை நிலவியது எனக் கணித்துள்ளனர். ஆயிரக்கணக்கான பொருள்கள் காலக்கணிப்பு செய்யப்படவில்லை. பழைய நாகரிகங்கள் மூன்று காரணங்களால் அழிகின்றன. அவை, வெயில்பாழ், வெள்ளப்பாழ், குடிப்பாழ் எனப்படும். மழை பெய்யாமல் வெயில் நீடித்த நீண்ட காலங்களிலும், பெருவெள்ளத்தில் நகரங்கள் மூழ்கிய போதும், போர், கொள்ளை நோய் போன்றவற்றால் குடிமக்கள் இடம் பெயரும் போதும் பழைய நாகரிகங்கள் அழிகின்றன. இருப்பினும் நூற்றாண்டுகள் கடந்தும், மக்கள் மீண்டும் அங்கே குடியேறுவதும் உண்டு. எனவே நகரத்தின் அழிவை அந்த மக்கள் இனத்தின் அழிவு எனக்கூறலாகாது. கேரளத்து தொல்பொருள் ஆராய்ச்சி அறிஞர் செரியன் என்பவர் முசிறித் துறைமுக அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்கள்அழகன்குளம் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்களொடு நூற்றுக்கு நூறு ஒப்புமையாக உள்ளன என்கிறார். தமிழ்நாட்டில் 44 இடங்கள் அகழாய்வு செய்யப்பட வேண்டும் தமிழக மூவேந்தர்கள் எகிப்து, மத்திய தரைக்கடல் நாடுகள் உள்ளிட்ட மேலைக்கடல் நாடுகளிலும் சீனா முதலிய கீழைக்கடல் நாடுகளிலும் மொத்தம் 40 துறைமுகங்களில் கடல் வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் எனவும் தமிழ்நாட்டுத் துறைமுகங்கள் உலகத் துறைமுகங்களுக்கு நடுநாயகமாக வணிகத் தலைநிலமாக விளங்கின என்றும் கூறுகிறார். வைகைச் சமவெளியில் உள்ள 293 இடங்களில் 90 இடங்கள் அகழ்வாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. கீழடி அகழ்வாய்வில் முதன்முதலில் ஈடுபட்ட அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையும், தமிழக தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிக்கையும் விரைவில் வெளியிடப்பட்டால், பல உண்மைகள் வெளிவரும்.

கீழடி போன்று ஆதிச்சநல்லூரை அடுத்த குடியிருப்புப் பகுதியாகக் கருதப்படும் கொங்கராயன்குறிச்சி மேட்டில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படவேண்டும். வரலாற்றை மறந்த இனம் பிற நாட்டாருக்கு அடிமையாகி விடும் என்பதால் தமிழ் வரலாற்று மீட்டெடுப்பு தமிழினம் தலை நிமிரும் காலத்துக்குப் பச்சைக்கொடி காட்டுவதாகும்.

பேராசிரியர் இரா.மதிவாணன், இயக்குனர் சிந்துவெளி எழுத்தாய்வு நடுவம்.


-- Edited by Admin on Monday 2nd of September 2019 11:56:02 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

கருதுகோள்களை வெளியிடுவது குற்றமல்ல அக்டோபர் 26, 2011

Postulating hypotheses is no crime   October 26, 2011

அக்டோபர் 22 ஆம் தேதி கேரள பிராந்தியத்தில் வெளியிடப்பட்ட ‘பட்டானத்தை ஆராய ஏ.எஸ்.ஐ வலியுறுத்தியது’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையின் பின்னணியில், கேரள வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் (கே.சி.எச்.ஆர்) இயக்குநர் டாக்டர் பி.ஜே.செரியன் எழுதுகிறார்:

கே.சி.எச்.ஆர் 2006 முதல் வடக்கு பரவூர்-கொடுங்கல்லூர் பகுதியை ஆராய்ந்து வந்தது, அதன் பின்னர் 2007 முதல் பட்டானத்தை அகழ்வாராய்ச்சி செய்து வருகிறது. திடீரென்று, அதன் பணியின் அம்சங்களுக்கு எதிராக 'விமர்சன' கருத்துக்கள் அதிகரித்துள்ளன, ஆராய்ச்சி முடிவுகள் இப்போது மட்டுமே வெளிவந்ததைப் போல . கே.சி.எச்.ஆர் அதன் கண்டுபிடிப்புகள் குறித்து பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டு, இந்த ஆண்டுகளில் ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டது. இது ஒவ்வொரு பருவத்திற்கும் பின்னர் கள அறிக்கைகள் மற்றும் இடைக்கால அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆய்வுக் கட்டுரைகள் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகளில் வழங்கப்பட்டுள்ளன. (இவற்றில் சில KCHR வலைத்தளமான www.keralahistory.ac.in இல் கிடைக்கின்றன). உள்ளடக்கிய மற்றும் பல ஒழுக்கக் கண்ணோட்டங்களைக் கொண்ட ஒரு சர்வதேச ஆராய்ச்சித் திட்டமாக, இது எல்லா நேரங்களிலும் விமர்சன ஆய்வுக்கு திறந்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக, தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் சர்ச்சையையும் குழப்பத்தையும் உருவாக்கும் முயற்சிகள் இப்போது நம்மிடம் உள்ளன; எப்படியிருந்தாலும் நோக்கம் கல்விசாரா.

இங்கே முயற்சி என்பது வாசகர்களுக்கு சில பொதுவான தகவல்களை வழங்குவதாகும், அவர்கள் தவறாக வழிநடத்தப்படலாம்.

இந்தியாவில் எந்தவொரு தொல்பொருள் ஆய்வுகளையும் மேற்கொள்ள, ஒரு நிறுவனம் அல்லது தனிநபர் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிலிருந்து (ஏ.எஸ்.ஐ) உரிமம் பெற வேண்டும். இத்தகைய உரிமங்கள் ஒரு சிறந்த அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட மத்திய தொல்பொருள் வாரியத்தின் (CABA) விண்ணப்பம் மற்றும் திறனை மதிப்பீடு செய்த பின்னர் வழங்கப்படுகின்றன, மேலும் ASI இன் இயக்குநர் ஜெனரல் தலைமையில். சம்பந்தப்பட்ட அனைத்து சம்பிரதாயங்களுக்குப் பிறகு, விண்ணப்பதாரராக 2006-07 ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுக்கான உரிமம் எனக்கு வழங்கப்பட்டது. அப்போதிருந்து, முந்தைய பருவத்தில் செய்யப்பட்ட பணிகளின் இடைக்கால அறிக்கை மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட புதிய விண்ணப்பத்தின் மதிப்பீட்டிற்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் புதிய உரிமங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த இரண்டு பருவங்களில், ஏ.எஸ்.ஐ ஒரு கூட்டு பங்காளியாகவும், ஏ.எஸ்.ஐ.யின் திரிசூர் வட்டத்தின் கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் எம்.நம்பிராஜன் இணை இயக்குநராகவும் உள்ளார்.

பட்டனம் முசிரிஸ் என்று கே.சி.எச்.ஆர் ஒருபோதும் திட்டவட்டமாகக் கூறவில்லை; பட்டனத்தை முசிரிகளாக நிறுவுவது அதன் ஆராய்ச்சி நிகழ்ச்சி நிரல் அல்ல. கே.சி.எச்.ஆர் அதன் எந்தவொரு நடவடிக்கைகளிலும் முன்கூட்டியே கருத்தரிக்கப்படவில்லை. பட்டனத்தில் வெட்டும் கண்டங்களுக்கு இடையிலான பரிமாற்றங்களுக்கான ஆதாரங்களை கண்டுபிடிப்பதன் அடிப்படையில் பட்டனம் முசிரிஸின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கக்கூடும் என்று வேறுவிதமாகக் கூறப்பட்டால், அது சாத்தியத்தை பரிந்துரைத்தது. ஆராய்ச்சியாளர்கள் அறிந்திருப்பதைப் போல, முசிரிஸைக் கண்டுபிடித்து அதன் அளவைப் புரிந்து கொள்ள, ஒரு பெரிய பகுதி அகழ்வாராய்ச்சி செய்யப்பட வேண்டும் மற்றும் பல தசாப்தங்களாக அகழ்வாராய்ச்சிக்கு பிந்தைய ஆராய்ச்சி மற்றும் நீருக்கடியில், புவி-உருவவியல் மற்றும் புவி-உடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்திய கடற்படையின் தெற்கு கடற்படை கட்டளையின் ஒத்துழைப்புடன், இரண்டு பருவங்களில் நீருக்கடியில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி அறிஞர்கள் தளத்தின் புவி-உருவவியல் மற்றும் புவி-இயற்பியல் அம்சங்களைப் படிப்பதில் ஈடுபட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சிக்கு பிந்தைய ஆராய்ச்சியில் பல முக்கிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

பட்டனம் முசிரிகளாக இருக்கலாம் என்ற கருதுகோளிலிருந்து ஆராய்ச்சி திட்டம் உருவானது என்பது ஒரு உண்மை; பிற கருதுகோள்கள் உள்ளன, மேலும் பல இருக்கலாம். போதுமான ஆதார ஆதாரங்கள் இல்லாவிட்டால் அவர்களில் பலர் அறிவியல் பரிசோதனையில் தோல்வியடையக்கூடும். இதை எல்லா பணிவிலும் ஏற்றுக்கொண்டு, வேறு சில கருதுகோள்களைப் பகிர்ந்து கொள்கிறேன், அவை பின்னர் உண்மையாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். நாம் இப்போது நம்புவதை விட மலபார் கடற்கரையில் நகரமயமாக்கல் இருந்ததா? இந்த பிராந்தியத்தின் கலாச்சார அடித்தளங்களை அமைப்பதில் சமண-பவுத்த மரபுகள் பங்கு வகித்ததா? பட்டானம் யூரோ மையவாதத்தின் கருத்துக்களை சவால் செய்ய முடியுமா? பிராமணியத்திற்கு முந்தைய “பழமையானது” என்ற கருத்தை அது பிரிக்க முடியுமா? கருதுகோள்களை வெளியிடுவது குற்றமல்ல; மாறாக ஒரு முக்கியமான யூகம் பெரும்பாலும் அறிவியல் சிந்தனையை வளர்க்கிறது. டாக்டர் வி.எஸ். முன்னோடி நரம்பியல் விஞ்ஞானி ராமச்சந்திரன் இவ்வாறு எழுதினார்: “... இது விஞ்ஞான செயல்முறையின் ஒரு அடிப்படை கூறு, தரவு பற்றாக்குறையாகவோ அல்லது திட்டவட்டமாகவோ இருக்கும் மற்றும் இருக்கும் கோட்பாடுகள் இரத்த சோகையாக இருக்கும்போது, ​​விஞ்ஞானிகள் மூளைச்சலவை செய்ய வேண்டும். எங்கள் சிறந்த கருதுகோள்கள், ஹன்ச்ச்கள் மற்றும் முயல் மூளை, அரை சுடப்பட்ட உள்ளுணர்வுகளை நாங்கள் உருட்ட வேண்டும், பின்னர் அவற்றை சோதிக்கும் வழிகளுக்காக எங்கள் மூளையை கசக்க வேண்டும். "

அதற்கும் மேலாக, ஒரு அறிவியல் மனதில், பட்டணம் முசிரிகளை விட மிகப் பெரியதாக இருக்க வேண்டும். பட்டனத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய வரலாற்று (முசிரிஸ் / முசிரியைப் படியுங்கள்) கட்டங்கள் இருந்தன என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன. உண்மையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சில நூற்றாண்டுகளாக பரவியிருக்கும் ஒரு தளத்தின் வாழ்க்கையை மயோபிக் முறையில் கட்டுப்படுத்துவது பொருத்தமானதல்ல.

பட்டனத்தின் முக்கியத்துவம் முசிரிகளா இல்லையா என்ற கேள்விக்கான பதிலில் இருந்து சுயாதீனமாக உள்ளது. இந்தியப் பெருங்கடல் பரிமாற்றங்களின் வரலாற்றிலும், கேரள சமுதாயத்தின் ஆய்விலும் ஒரு தனித்துவமான மற்றும் மரியாதைக்குரிய இடத்தைப் பெறுவதற்கு பட்டணம் அதன் சொந்த தகுதிகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் கடல் தொடர்புகளுக்கான ஸ்ட்ராடிகிராஃபிக் ஆதாரங்களுடன் இது முதல் தளமாகும். இத்தாலி, கிரீஸ் (ரோட்ஸ் & கோஸ்), ஸ்பெயின், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் கப்பல்கள் உட்பட ரோமானிய கால ஆம்போரா போன்ற ஆதாரங்களை இந்த தளம் தயாரித்துள்ளது; இத்தாலியண்டெர்ரா சிகில்லாட்டா; மெசொப்பொத்தேமியன் டர்க்கைஸ் மெருகூட்டப்பட்ட மட்பாண்டங்கள்; மெசொப்பொத்தேமியன் டார்பிடோ ஜாடிகள் மற்றும் அடையாளம் தெரியாத சிறப்பு மட்பாண்டங்கள். சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த தளம் மேற்கு ஆசிய, ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களுடன் தொடர்பில் இருந்தது, மேலும் பல இருக்கலாம். பட்டணம் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் முதன்முறையாக தயாரிக்கப்பட்டது, ரவுலட் கிடங்கு, உள்நாட்டு மற்றும் இந்தியப் பெருங்கடல் பரிமாற்றங்களுக்கான முக்கிய சான்றுகள். கேரள தொல்பொருள் வரலாற்றில், இரும்புக் காலத்திலிருந்து வாழ்விடத்திற்கான ஆதாரங்களை அளித்த முதல் தளமாக பட்டணம் திகழ்கிறது, அதாவது 14 சி தேதிகளின்படி கிமு 1000 க்கு முற்பட்டது. பட்டணம் போட்டிகளில் ஆராய்ச்சியின் தரம், சிறந்து விளங்கவில்லை என்றால், அனுபவமிக்க அணிகளால் நடத்தப்படும் போட்டிகளை உறுதி செய்ய கே.சி.எச்.ஆர் சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இந்தியா மற்றும் ஐரோப்பா முழுவதிலும் இருந்து தொல்பொருள் அனுபவமுள்ள இளம் அறிஞர்களைச் சேர்க்க அதன் நிரந்தர குழுவை அது விரிவுபடுத்தியுள்ளது. எந்தவொரு பக்கச்சார்பற்ற ஆராய்ச்சியாளருக்கும், கடந்த சில பருவங்களில் பட்டணம் தளத்தில் செய்யப்பட்ட அனைத்து வேலைகளும் பெருமையையும் மகிழ்ச்சியையும் தர வேண்டும்.

வேலை வேறொரு இடத்திலிருந்து கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கே.சி.எச்.ஆர் குழுவின் முறையான மற்றும் பல ஒழுங்கு ஆராய்ச்சிகளைப் பாராட்டும் விதத்தில் சில பாராட்டுக்களை மட்டுமே குறிப்பிடுகிறேன். தேசிய கடல்சார் அறக்கட்டளையின் 2011 ஆம் ஆண்டின் சிறந்த விருது KCHR க்கு வழங்கப்பட்டது, "... பட்டானம் தொல்பொருள் ஆராய்ச்சியில் தொடர்ச்சியான செயல்திறன் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தியது." பிரிட்டிஷ் அகாடமி தனது பணியை சர்வதேச கூட்டு விருது 2010 உடன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துடன் பாராட்டியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ரோம் பல்கலைக்கழகம் மற்றும் பல ஒத்த நிறுவனங்கள் தங்களது சொந்த சிறப்புப் பகுதிகளில் அகழ்வாராய்ச்சிக்கு பிந்தைய ஆய்வுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இருப்பினும், பாராட்டுகள் இரண்டாம் நிலை மட்டுமே. பட்டணம் போன்ற முன்னோடி முயற்சிகள் உண்மையிலேயே தேவைப்படுவது ஒரு அறிவார்ந்த அணுகுமுறை - மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard