New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முஸ்லிம் மதம் மாறும் போதே சரியான முஸ்லிம் ஜாதிக்கு மாறலைன்னா பிசி கிடையாதாம்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
முஸ்லிம் மதம் மாறும் போதே சரியான முஸ்லிம் ஜாதிக்கு மாறலைன்னா பிசி கிடையாதாம்
Permalink  
 


 முஸ்லிம் மதம் மாறும் போதே சரியான முஸ்லிம் ஜாதிக்கு மாறலைன்னா பிசி கிடையாதாம், குரான், அல்லாஹ், ஷரியாவை விட பிசி சர்டிபிகெட் முக்கியம் என வழக்கு சம்பந்தப்பட்ட ஜாதி முஸ்லிம் ஜமாத்து மூலமா மாறணுமாம்

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=522606

சென்னை

இந்துவாக இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறும்போது உட்பிரிவு குறிப்பிடப்பட வேண்டும் : பி.சி சான்றிதழ் கேட்ட வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

2019-09-01@ 00:06:23
Dkn_Tamil_News_2019_Aug27__1212274432182

சென்னை:  இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறும்போது இஸ்லாம் மதத்தின் உட்பிரிவு குறிப்பிடப்பட்டு அதன் அடிப்படையில் விண்ணப்பிக்கவில்லை என்றால் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு சான்றிதழ் கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் ரில்வான். இவருக்கு திருமணமாகி 11 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். இவர், 24 மனை தெலுங்கு செட்டி பிரிவை சேர்ந்தவர். இவரது மனைவி ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்தவர். இந்நிலையில், ரில்வான் கடந்த 2012ல் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். புதுப்பட்டினம் ஜமாத்தில் மதம் மாற்றத்திற்கான பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தனக்கும் மனைவி, குழந்தைகளுக்கும் இஸ்லாம் மதத்தில் லெப்பை பிரிவு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கேட்டு திருக்கழுக்குன்றம் தாசில்தாரிடம் மனு கொடுத்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. பிறகு செங்கல்பட்டு ஆர்டிஓவிடம் முறையிட்டார். அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, தனக்கும் தனது மனைவி, குழந்தைகளுக்கும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு சான்றிதழ் வழக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரில்வான் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, இஸ்லாம் மதத்தில் லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. மதம் மாறும்போது உட்பிரிவை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட ஜமாத்தில் மதமாற்ற பதிவு செய்யப்பட வேண்டும்.

ஆனால், மனுதாரர் அரசிதழில் தனது மதமாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்ததில் லெப்பை என்ற உட்பிரிவை குறிப்பிடவில்லை. அதனால் அவர் முற்படுத்தப்பட்டோர் பிரிவாகவே கருதப்படுவார். பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்க முடியாது என்று வாதிட்டார்.மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், இதேபோன்ற வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறும்போது சம்பந்தப்பட்ட நபர் இஸ்லாம் மதத்தில் தான் சேரும் உட்பிரிவை குறிப்பிட வேண்டும். மனுதாரர் தான் சேர்ந்த இஸ்லாம் மதத்தின் உடபிரிவை  குறிப்பிடவில்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்
.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
RE: முஸ்லிம் மதம் மாறும் போதே சரியான முஸ்லிம் ஜாதிக்கு மாறலைன்னா பிசி கிடையாதாம்
Permalink  
 


1.உயர் சாதி முகமதியர்கள்
2.வீடு வேலை செய்பவர்கள் மாறும் அடிமைகள்...
3.பொது ஜனம் , மற்றவர்கள்
உயர் சாதி கீழ்கண்டவாறு பிரிக்க பிரிக்க பட்டிருகின்றன :-
( 1 )அஹல்-இ-தொளலத் :- ஆளுகின்ற வர்கத்தினர் ,
இதில் அரச குடும்பதினர் , பிரபுக்கள் , ராணுவ அதிகாரிகள் அடங்குவர்...
(2 )அஹல்-இ-ச-அதாத் :- அறிவு ஜீவி வர்கத்தினர் , இதில் இறையில் , நீதி துறை , மத குருமார்கள் , சையது முதலியோர் , கவிஞர்கள் , எழுத்தளர்கள் அடங்குவர்.
3.அஹல்-இ-மூரத்:-
மகிழ்ச்சியூட்டும் வர்கத்தினர்;இசை வல்லுனர்கள்; நாட்டிய வல்லுனர்கள் ஆகியோர் அடங்குவர்.
இவர்களுக்குள்ளே உள்ள சதி சண்டைகளை இன்னும் இஸ்லாமிய நாடுகளில் காணலாம். மேலும் பல பிரிவுகள் உள்ளன.அவர்களை Caste and Social Statification Among muslim in india என்ற நூலில் இம்தியாஸ் அகமத் என்பவர் கூறுகிறார்.
1.சுன்னிகள்:-
ஹனபி, ஷாபியீ, மாலீதி , ஹம்பல் பிரிவுகள், இமாம் ஜாபர் துஷி (சுன்னியில் 65 பிரிவுகள் இருக்கின்றன)
2.ஷியாக்கள்:-
ஜைதிய்யா, இஸ்மாயிலி, சபியும், அஸ்னா, ஆஷ்ரிய்யா, இமாமியா, கைஷானியா, ஹசிமியா, இவர்களுக்குள்ளும் நூற்றுகணக்கான பிரிவுகள் இருக்கின்றன.
3. காரிஜிக்கள்:-
(வெளிஎற்றபட்டோர் மற்றும் வெளியேறியோர்)
4.முக்தஷில்லா:-
( நடுநிலையாளர்கள் அணைத்து மத கருத்துகளிலும் நம்பிக்கையுடவர்)
5 .முர்ஜிகல் 6 . வஹாபிகள்,7 . பாஹாவீ 8 .ஷனுஷி 9 . கைதியாணி 10 .அஹமதியா 11 . ஷிபீகள்
இதை தவிர ராவண்டிகள் (பிறவி சுழற்சி கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர்) ஷபீத்தஜமக்கான் (கடவுள் உருவில் மனிதன் அவதாரம் எடுப்பான் என்ற கோட்பாடு கொண்டவர்கள்)
ரோவசெநியர்கள், அக்பாரிகள், இக்குவஜரிகள்(ஆஜரிகா, இபாதியா,நேஜ்தட் அஜாரியா, அஜ்ரிதா, ஷூப்ஹக்ருஜ் ஜியதியா)
ஆகியவை அடிமையின பட்டியலாக உள்ளன. இது அனைத்துமே அரபு
இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஜாதி பட்டியல். தேவையென்றால் இந்திய பட்டியலையும் அனுப்பி வைக்கிறேன்.
சிந்தியுங்கள் நண்பர்களே!!!
வள்ளுவன் வாக்கு:-
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு
இஸ்லாமில் ஜாதி இல்லை ஏற்ற தாழ்வு இல்லை தீண்டாமை , அடிமை வம்சம் இல்லை என்று கூறாதீர் .
 
தௌலத்,அதாத்,சையத், போன்றவை முஹலாய இந்தியாவில் உள்ளவர்கள் இன்னும் பல பிரிவுகள் உண்டு அடுத்து ஹனஃபி ,ஷாஃபி என்பது மதஹப் குருமார்களின் பெயர்களை இஸ்லாத்திற்கு விரிவுரை விளக்கம் என்பதை இவர்களின் புரிதலில் கொடுத்தார்கள் அதுவே பின்னாளில் இவர்களின் பெயரால் மதஹப் ஆனது ஷியாக்கள் கார்ஜியாக்கள் ,முஃக்தஸீலாக்கள் என்பது கருத்தியல்,தலைமை சார்ந்த பிரிவுகளாகும் தனி தனி செய்திகளை ஒன்றாக போட்டு குழப்பியுள்ளீர்கள் !
 
முன்பு இருந்தது அதுவும் தொழில் ரீதியாக குறிப்பாக சலூன் தொழில் செய்பவர்கள் கசாப்கடை வைத்திருப்பவர்களை மேல்மட்ட மரைக்காயர் மாலிமார் சமூகத்தில் திருமண உறவு வைத்துக்கொள்ளமாட்டார்கள் மற்ற நிகழ்வுகளில் பெரிய இடைவெளி தற்போது இல்லை !
 
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு 

 

 

மதுரை: ‘இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மாதத்துக்கு மாறியவரை பிசி முஸ்லிம் ஆக கருத வேண்டும்’ என்ற கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யு.அக்பர் அலி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு. நானும், என் குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து 2008-ல் இஸ்லாம் மதத்துக்கு மாறினோம். நான் லெப்பை சமூகத்தைச் சேர்ந்தவர் என ராமநாதபுரம் மண்டல துணை வட்டாட்சியர் 2015-ல் சாதி சான்றிதழ் வழங்கியுள்ளார்.

2018-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு பிசி முஸ்லிம் பிரிவில் விண்ணப்பித்தேன். எழுத்துத் தேர்வு மற்றும் மெயின் தேர்வு எழுதினேன். இறுதி தேர்வுப் பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை. தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது என் பெயரை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்காமல், பொதுப்பிரிவில் பரிசீலித்துள்ளனர். என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலித்து வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு. மனுதாரர் ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியார் அளித்த சான்றிதழை தாக்கல் செய்துள்ளார். அதில் சத்திய மூர்த்தி என்பவர் அவராகவே விரும்பி இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. அதை தவிர சான்றிதழில் வேறு ஏதும் இல்லை. மதம் மாறியவர் லெப்பை வகுப்பை சேர்ந்தவர் என அரசு காஜியார் அறிவிக்க முடியாது.

 

 

அப்படியிருக்கும்போது மதச்சார்பற்ற அரசின் வருவாய் அலுவலர் மதம் மாறிய தனி நபர் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் என எப்படி சான்றிதழ் வழங்கினார் என்பது தெரியவில்லை.

மதம் மாறிய தன்னை பிசி முஸ்லிமாக கருத வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதுதான். அதில் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard