ஜகத் கஸ்பர் என்ற இழிபிறவியைப் பற்றி இலங்கை குண்டு வெடிப்பின் போதே எழுதி இருந்தேன். அப்போது அவர் பேசிய வீடியோக்களில் சிங்கள பௌத்த பேரினவாத ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தார் இஸ்லாமிய கைக்கூலிகளைக் கொண்டு தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று ஒவ்வொரு வீடியோவிலும் பேசித் திரிந்தார்.
கடந்த 20 தினங்களுக்கு முன்பாக கொழும்பு சென்றிருந்தேன். அப்போது 150 க்கும் மேற்பட்டோர் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் இறந்த செயின்ட் செபாஸ்டியன் சர்ச்சிற்கு சென்று இருந்தேன்..
இறந்த மக்களை மனிதர்கள் என்ற பார்வையில் பார்க்காமல் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் என்று ஜகத் கஸ்பர் போன்ற இழி பிறவிகள் அரசியலாக்கினர். இவர்களைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று எவரேனும் சொன்னால், மதத்தை பயங்கரவாதத்தோடு தொடர்புப் படுத்தாதீர்கள் என்று வியாக்கியானம் செய்து கொண்டே சிங்கள பௌத்த பேரினவாத பயங்கரவாதம் என்று நாகூசாமல் பேசித் திரிகிறார்கள்.
நான் அந்த சர்ச்சிற்கு சென்று பார்த்தபோது , முற்றிலுமாக அரசு, இராணுவம், பொதுமக்கள் உதவியோடு சர்ச்சானது முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டு இருந்தது. இங்கு குண்டு வெடிப்பு நடந்ததா என்று கேட்பது போலத் தான் இருந்தது. அங்குள்ள சர்ச் பாதரிடம் போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்துக்கொள்ளலாமா என்று அனுமதி பெற்றோம். அவர் சிங்கள பாதர் என்பதைக் குறிப்பிட வேண்டி இருக்கிறது.
சர்ச்சில் ஒரேயொரு இடத்தில் அதாவது தற்கொலைப்படைத் தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதி , எந்த இடத்திலிருந்து பட்டனை அழுத்தித் தாக்குதல் நடத்தினானோ , அந்த இடத்தை மட்டும் அடையாளமாக விட்டு வைத்துள்ளார்கள்.
அடுத்ததாக அங்குள்ள வாலண்டியரைச் சந்தித்தேன். அவரும் ஒரு சிங்கள கிருத்துவர். அவர் அங்கு நடந்தவைகளை விளக்கினார். தான் வெளியிலிருந்து மக்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டதாகவும் அப்போதுதான் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது என்றும் கூறினார். அவரிடம் இது தமிழ் மக்கள் அதிகம் பேர் வரும் சர்ச்சா என்று கேட்டேன். அதற்கு அவர், அப்படியெல்லாம் கிடையாது. நானே சிங்களவன் தானே! மேலும் இங்கு பெரும்பாலும் சிங்கள தமிழ் இரு சமூகத்தினரும் வருவார்கள் என்றும் தெரிவித்தார்.
அதற்கு அடுத்தபடியாக இறந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பலகை இருந்த இடத்திற்குச் சென்று அங்குள்ள பெயர்களை போட்டோ எடுத்தேன். அந்த பெயர்களை இங்கு இணைக்கிறேன். அதன் பின்னர் நீங்களே தமிழர் பெயர்கள் அதிகமா, சிங்கள கிருத்துவர்கள் பெயர்கள் அதிகமா என்ற முடிவுக்கு வாருங்கள்.
ஜகத் கஸ்பர் போன்ற ஒரு தரப்பு தமிழகத்தில் உள்ளது. இங்கிருக்கும் தமிழக மக்களிடம் சிங்களவர்கள் மோசமானவர்கள், சிங்கள அரசு படு மோசமானது, பௌத்தர்கள் மோசமானவர்கள் என்ற விஷ விதையை விதைப்பது. அங்குள்ள மக்களைப் பார்க்காமலேயே இங்குள்ள தமிழர்களுக்கு சிங்களவர்கள் மீது வெறுப்பை உருவாக்குவது என்பதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறார்கள்.
பயங்கரவாதி பிரபாகரனுக்கு மற்ற நிலப்பகுதிகளில் உள்ள தமிழர்களிடம் எந்த அளவுக்கு ஆதரவு இருந்தது என்று போய்க் கேட்டுப் பாருங்கள். அப்போது தெரியும். இங்குள்ள திருமா, சீமான், திருமுருகன் காந்தி, ஜகத் கஸ்பர் போன்ற கயவர்கள் பிரபாகரன் என்கிட்ட கேட்டுத் தான் எல்லாம் செய்வார்னு சொல்லித் திரிகிறார்கள்.
இலங்கையில் நடக்கும் எந்த அசம்பாவித சம்பவங்களையும் சிங்கள பௌத்த பேரினவாத பயங்கரவாதம் என்று கட்டமைப்பதே இங்குள்ள சில பத்திரிகையாளர்கள் மற்றும் இயக்கங்கள் கட்சிகளின் தலையாய கடமையாக உள்ளது.
அந்தப் பெயர் பலகையில் அஞ்சலி செலுத்தப்பட்ட ஆத்மாக்களின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.
-- Edited by Admin on Thursday 29th of August 2019 10:11:05 PM