சிவபெருமான் நாம் உய்ய அருள் செய்த வேதங்களானவை இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கும். இவை காலங்காலமாகப் பேணப்பட்டு பேணுவரை நன்னெறிக்கு உய்த்து வருகின்றன. இவற்றை நம் திருமுறை அருளாசிரியர்கள் போற்றியுள்ள விதங்கள் தான் என்னே! திருமுறை முழுமையிலும் வேதங்களின் பெருமையையும் அவ்வேதங்களை ஓதி இவ்வுலகம் பெறும் நன்மையையும் தங்கள் கண்களால் கண்டு போற்றியுள்ளனர் நம் பெருமக்கள். அவற்றைத் தொகுக்கும் வண்ணமாக திருமுறை போற்றும் திருமறையாக இங்கு அமைந்துள்ளது. சுருங்கா மறை நான்கினையும் அருளிச் செய்த வேதியன் வேதகீதனாகிய சிவபெருமான் நம் வழிவழியாக திருமறைகள் திருமுறைகளின் மூலம் அப்பெருமானைப் போற்ற அருளட்டும்.
சில முக்கியக் குறிப்புகள்:
விண்ணவர் அறிகிலா வேத வேதாந்தனூர் (வேதங்களைக் குறித்த திருஞானசம்பந்த நாயனார் வேதாந்தங்களையும் குறிப்பிட்டுள்ளார்.)
சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார் (சாம வேதத்திற்கு ஆயிரம் சாகைகள்)
ஆலதன் கீழிருந்து நால்வர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு, ஆறங்கம், வேதம் தெரித்தானை (அறம், பொருள், இன்பம், வீடு என்பவை புருஷார்த்தங்கள். நான்கு வேதங்களின் சூக்குமப் பொருள் என்ன என்று கேட்ட சனகாதி முனிவர்களுக்கு அவற்றில் விரவி இருப்பன இப்புருஷார்த்தங்கள் என்று ஆல் நிழற் கடவுளாக அமர்ந்து அருள் செய்தார்.)
மீண்டனன் மீண்டனன் வேத வித்தல்லாதவர்கட்கே (வேதங்களின் அடிப்படை இல்லாதவர்களை விட்டு விலகுதலே பொருந்தும்)
வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின் ஓதத் தகும்அறம் எல்லாம் உள; தர்க்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே
சீவ துரியத்துத் "தொம்" பதம் சீவனார் தாவு பர துரியத்தின்ல் "தத்" பதம் மேவு சிவ துரியது "அசி" மெய்ப்பதமோவி விடும் "தத்துவமசி" உண்மையே (சந்தோக உபநிஷதத்தில் வரும் மஹாவாக்கியம் "தத் த்வம் அஸி". அதனுடைய தெளிவான பொருளை விளக்கும் திருமந்திரம் இது.)
இந்தியாவைப் பொறுத்தமட்டில் அரசியல் ரீதியில் ஒன்றுபடுவதற்கு மட்டுமே இந்து என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்ற ஓர்மை விரைவில் வர வேண்டும். அது பெரிய அளவில் பலனளிக்கும்.
ஆனால் சமய ரீதியில் இந்து என்ற சொல் குழப்பத்தையும் மயக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதே மரபுச் சைவர் மற்றும் நவீன சைவர் இருதரப்பாரின் நிலைப்பாடு. இந்து என்ற சொல்லை வடவரின் ஆதிக்க திணிப்பாகவே இருதரப்பினரும் பார்த்தனர்.
இந்த பதிவில் இவர் சுட்டியிருப்பது போல பல தரப்பினரும் தங்களை இந்து எனக் கூறிக் கொள்வதால் ஆதிக்க வல்லார்கள் கருத்தே நிலைபெறும்; சனாதன தர்மத்தில் உள்ள பன்மைத்துவம் பாதிக்கப்படும் என்பார் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை. அதுதான் நடந்தது.
தமிழ்ச் சைவரில் மறைமலையடிகள், கா.சு.பிள்ளை போன்றோர் பார்ப்பன மேலாதிக்கத்தின் குறியீடாக இந்து என்ற அடையாளத்தைப் பார்த்தனர். அதிலும் உண்மை உள்ளது.
உட்பிரிவுகளுக்குள் ஆரோக்கியமான வாக்குவாதம் நடந்தால் கூட நாமே ஏன் அடித்துக் கொள்ள வேண்டும் என்ற அரைவேக்காட்டுத்தனமான புரிதலே இல்லாத பஞ்சாயத்துகள்தான் இன்றுவரை நடக்கின்றன.
மொத்தத்தில் மதத்தைப் பற்றிய புரிதல் இல்லாத ஆங்கிலேய கல்வியின் தாக்கம் பெற்ற ஸ்மார்த்த பிராமணர்களின் கையில் இந்து என்ற சொல் சிக்கி இன்று கலவைசாதத்தை உருவாக்கியதுதான் மிச்சம்.
இதன் மறுபக்கமாக அரசியல் ரீதியில் இந்துக்களை ஒன்றிணைக்க வந்த ஆர்எஸ்எஸ்எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளை மதத்தை புனருத்தாரணம் செய்ய வந்த அமைப்புகளாக கருதி மத அமைப்புகளின் நிர்வாகத்திலும் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டிய சூழல் இந்தியாவிலும் இலங்கையிலும் உருவானது.
இந்தியாவில் ஏற்கனவே குழம்பிப் போய் கிடப்பதால் அவர்கள் நடவடிக்கைகளின் பாதிப்பு உணரப்படவில்லை. ஆனால் இலங்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை இந்தப் பதிவு உணர்த்துகிறது.
இந்துத்துவ அமைப்புகளுக்கும் சமய அறிவுக்கும் எள் முனையளவும் தொடர்பில்லை என்பதை உணர வேண்டும். தத்துவக் கல்வி பரப்பப்பட வேண்டும். அரசியல் அமைப்புகள் மத அமைப்புகளிலோ நிர்வாகத்திலோ தலையிடுவதை தடுக்க வேண்டும்; அவர்களும் தங்கள் எல்லையறிந்து குட்டையைக் குழப்புவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் இந்துமதம் ஒரே நூல் ஒரே கடவுள் கோட்பாட்டை நோக்கி வலுக்கட்டாயமாக தள்ளப்படும் சூழல் உருவாகும்.
இங்கு சமஸ்கிருதம் என்பது வேத ஆகம முறைப்படி சிவாலயங்களில் பூஜை நடைபெறவேண்டும் என்பதை சுட்டுவதாகும்.
பன்னெடுங்காலமாக அருளாளர்களால் போற்றப்பட்டு வந்து சைவசமயத்திற்க்கு வேதம் ஆகமம் முதல்நூல்.
சைவசமயத்தில் வடமொழி, தென்மொழி என்ற வேறுபாடு 1900 ம் ஆண்டுவரை இருந்ததில்லை.ஆம் கடந்த நூறு ஆண்டுகளாகவே இந்த வேறுபாடு.
சைவசமயத்தில் வேத ஆகமங்கள் கிரியா மொழியாகவும், தேவார திருமுறைகள் பக்தி பாராயண மொழியாகவும் நம் ஆன்றோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
அத்தகைய உன்னத மரபிற்க்கு குந்தகம் விளைவிப்பவர்களாக சுவாமி வேதாசலம் என்ற மறைமலை அடிகளும், திருநெல்வேலியை சார்ந்த கா.சு. பிள்ளை என்பவரும் விளங்கினார்கள்.இவர்கள் நல்ல தமிழறிஞர்கள்தான். ஆனால் இவர்கள் தமிழறிவு, சைவசமயத்தை பாதுகாப்பதாக இல்லாமல், சைவசமயத்தில் #பிரிவினையை ஏற்படுத்துவதாக அமைந்ததே துரதிர்ஷ்டம்.
இவர்கள் வேதங்களுக்கு ஒரு போலி வரலாற்றை உருவாக்கி தமிழ் வேதம் என்ற விதன்டாவாதத்தை,பிரிவினையை முதன்முதலில் ஏற்படுத்தினார்கள்.
திருமூலர்காலம் முதல் நாவலர், மகாவித்வான் காலம்வரை வாழையடி வாழையாக அருளார்கள், சைவப்பெரியோர்கள் கடைப்பிடித்த திருவாக்குகளுக்கு முதன் முதலில், போலி விளக்கம் எழுதி சைவசமயத்தில் முதல் பிரிவினையை தூண்டியவர்கள்.
இவ்வாறான ஒரு குழப்பம் சைவசமயத்தில் ஏற்படக்காரணம் மிஷனரி பின்புலமும் ,திராவிட வாசமும் ஆகும்.
மிஷனரிகளின் கருத்தையே மறைமலைகள் தமிழ் முலாம் பூசி#தனித்தமிழ்இயக்கம் என்ற பெயரில் செயல்படுத்தினார்.
இந்நிலையில் சிவஸ்ரீ ஈஸ்வரமூர்த்தி பிள்ளை அவர்கள் சைவமரபுகளை எடுத்தியம்பும் வகையில் பல நூல்களை எழுதி அருளினார்கள்.
அவ்வாறு எழுதிய நூல்களில் இந்நூலும் ஒன்று.
இந்நூலில் ஒரு பகுதி,
நாத்தீக தமிழர், சிரத்தையின்றி ஆத்திகம் பேசும் தமிழர், சமஸ்கிருதத்தை பழிக்கும் தமிழர், பார்ப்பனரை பழிக்கும் தமிழர், எந்த ஆத்தீக நூல்களிலும் சிறிதும் பயிற்ச்சி இல்லாத தமிழர், தாழ்பட்டவரென்ற வகுப்பாறுள் சைவமாதி சமயங்களை யாசரித்தால் உலகில் முன்னேற முடியாதென நம்பிக்கை இழக்கும் தமிழர், எம்மதமும் சம்மதமென்னும் தமிழர், தமக்கென எதுவுமிலாத தமிழர் எனக் சில தமிழருளர்.அவரெல்லாங் கூடினர்.அஃதொரு தமிழர் கூட்டம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.
அந்த கூட்டத்தில் சில சைவத்தமிழருங் அகப்பட்டனர்.அவர் நிலையென்ன?
சைவநூற்களை படிப்பர். அவற்றில் உள்ள தமிழை சுவைப்பார்.ஆனால் சைவத்தை அறவே உமிழ்ந்து விடுவார்.
இவர்கள் திருநீறு பூசிக்கொள்வர், உருத்திராக்கம் தரித்துக்கொள்வர், சமய பிரச்சாரமும் செய்துவருவர் .
ஆனால் அப்பிரச்சாரத்தில் , 1)தமிழ்சமயம் இருக்கும். சைவசமயம் இருக்காது. 2)தமிழ் நாயன்மார் என்பார். சைவ நாயன்மார் இருக்காது. 3)தமிழ் திருமுறை என்பார். சைவத்திருமுறை இருக்காது. 4)தமிழ்கோயில்கள் என்பர் .சைவக்கோயில்கள் இருக்காது.
தமிழ் ஒரு மொழி, சைவம் ஒரு சமயம்,
மொழி வேறு, சமயம் வேறு. அவ்வேறுபாட்டை அவர் விடுவார்.
சைவசமயம் என்று சொல்வதற்க்கான சந்தர்ப்பம் வரும்.அவ்விடத்திலெல்லாம் தமிழ் என்று உரைப்பார்.காரணம் சகவாச தோஷம்.
இப்படிப்பட்ட நவீன சைவர்கள் உருவாகியுள்ளார்கள்.
இவ்வாறு சைவவேடத்தில் உள்ள நவீனர்களின் சைவசமய விரோத செயல்களை, பேச்சுகளை ஆதாரத்தோடு இந்நூலில் விளக்கியுள்ளார்கள்.
வேத ஆகமங்களை போற்றுவோர் எவரும் தமிழையோ, திருமுறைகளையோ தூற்றுவதில்லை.
சைவசமயத்தை பொருத்தவரை வேதம் ஆகமம் முதல்நூல் என்பது இறைவாக்கு.
திருமுறைகள் #பக்திபாராயணமொழி, வேத ஆகமங்கள் #கிரியாமொழி. இதுவே சைவமரபு. அருளார்கள் வாக்கு.இதனை உள்ளபடி உணர்ந்தால் மொழிவேறுபாடு, மொழிசார்ந்த பிரிவினை சைவசமயத்தில் தோன்றாது.
மெய்யடியார்கள் படிக்க வேண்டிய நூல் இது. சிவார்ப்பணம். @தில்லை கார்த்திகேய சிவம்.
19ம் நுாற்றாண்டின் இறுதியில் பிறந்து 20ம் நுாற்றாண்டின் பிற்பாதியில் மறைந்தவர் சித்தாந்த பண்டித பூஷணம் ஈசுரமூர்த்திப் பிள்ளை. அவர் காலத்தில் தான் இந்த நாட்டில் விடுதலைப் போரும் மொழிப் போரும் சமயப் போரும் நடந்தன. மூன்று போர்களையும் உன்னிப்பாக கவனித்தவர் பிள்ளை.
இவற்றில் சைவத்தில் மொழிரீதியிலான கிளர்ச்சி எழுந்து பெரும் மாற்றங்கள் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மரபுச் சைவத்தின் பால் நின்று தனது கருத்துக்களை ஆணித்தரமாக தர்க்க ரீதியில் எடுத்துரைத்தார் இவர். அதற்காகவே தனது வாழ்நாளை ஒப்படைத்தார்.
மொழிப் போர் குறித்து பெரிய அளவில் தனது படைப்புகளில் இவர் பதிவு செய்யவில்லை. ஆனால் 1939ம் ஆண்டு பொதுமொழி என்ற தலைப்பில் இவர் வெளியிட்ட நுால், இன்றளவும் சைவர்களுக்கு ஓர் வழிகாட்டியாய் விளங்குகிறது. இந்தியாவின் பொதுமொழியாக சமஸ்கிருதமே இருக்க வேண்டும் என்பது இவரது வாதம். அதற்கான தன் தரப்பு நியாயங்களை ஒரு வழக்கறிஞரின் வாதத் திறமையுடன் தனது நுாலில் முன்வைத்துள்ளார்.
விடுதலைப் போர் குறித்து தனி நுாலாக இவர் எதுவும் எழுதவில்லை. ஆனால் நாட்டின் விடுதலை குறித்துப் பெரிதும் கவலைப்பட்டுள்ளார். அந்நியராட்சியில் இருந்து நாடு விடுதலையாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார் என்பதை இவரது பிற எழுத்துக்களில் இருந்து அறிய முடிகிறது.
உத்தரமேரூரில் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது, பலவான்குடியில் இருந்து ராமசாமிச் செட்டியாரை ஆசிரியாகக் கொண்டு வெளிவந்த சிவநேசன் மாத இதழின் 1938 ஏப்ரல் வெளியீட்டில் ‘பாரத தேசக்கொடி’ என்ற தலைப்பில் ஒரு சிறிய கட்டுரை எழுதினார்.
அதில், இந்தியாவின் மிக முக்கிய மதங்களாக சைவம், வைணவம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய நான்கும் இருக்கின்றன என்றும், அவற்றின் அடையாளங்களான காளை, கருடன், சிலுவை, பிறை மற்றும் நட்சத்திரம் இவை நான்கும் கொண்டதாக தேசியக் கொடி உருவாக வேண்டும் என்றும் தனது கருத்தை வெளியிட்டிருந்தார். மேலும் எக்காரணம் கொண்டும் எந்த ஒரு கட்சியின் கொடியும் தேசியக் கொடியாகிவிடக் கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்து என்ற பெயரை ஏற்காத ஈசுரமூர்த்திப் பிள்ளை, சனாதன தர்மத்தின் பிரிவுகளாக சைவத்தையும், வைணவத்தையும் கொண்டார். இந்து என்ற பெயர் ஆரிய, பிரம்ம சமாஜங்களையும், பிரமஞான சபை போன்ற அமைப்புகளையும் தொன்மையான மதப் பிரிவுகளான சைவ, வைணவத்தையும் ஒன்றாக்கி குழப்பும் ஒரு அர்த்தமற்ற பெயர் என்பது இவரது கருத்து. அந்த நிலைப்பாட்டில் அவர் இறுதிவரை உறுதியாக இருந்தார்.
மேற்கண்ட நான்கு மதங்களும் இந்த நாட்டில் இருக்கின்றன; அவற்றின் சின்னங்களும் கொடியில் இருக்க வேண்டும்; அப்படி இருந்தால் இந்த தேசத்திற்கு செய்யும் மரியாதை அந்த மதங்களுக்கு செய்யும் மரியாதையுமாகும் என்பது இவரது விளக்கம்.
1931ம் ஆண்டில் காங்கிரஸ் அறிவித்த மூவர்ணக் கொடிக்கு அக்கட்சி அளித்த விளக்கம் இவருக்குத் திருப்தி அளிக்கவில்லை என்பதை ‘பாரத தேசக்கொடி’ கட்டுரை காட்டுகிறது.
இந்து என்ற பெயரை ஏற்காத அதேநேரத்தில் இவர் தேசியவாதியாகவும் இருந்தார். இந்த நாட்டின் உயிர்மூச்சு சைவம் தான் என்பதில் உறுதியாக இருந்தார். இந்துஸ்தான் என்ற வார்த்தைக்குப் பதிலாக சைவஸ்தான் என்பதையே இவர் பயன்படுத்தினார்.
விடுதலைக்குப் பிறகு இவர் எழுதி வெளியிட்ட நுால்களின் இறுதியில் JAIHINDH என்ற சொல்லை அச்சிட்டார்.
காந்தியை இவர் தனது உள்ளத்தில் மதித்திருக்க கூடும்; ஆனால் மதசீர்திருத்தங்களில் காந்தி ஈடுபட்டது இவருக்கு பிடிக்கவில்லை என்பது தெரிகிறது. ஆலய பிரவேசம் உள்ளிட்ட சீர்திருத்தங்களில் இவர் மரபுச் சைவர்களின் கருத்தையே கொண்டிருந்தார் என்பது அப்போது இவர் எழுதி வெளியிட்ட கட்டுரைகள் மூலம் தெரிகிறது
ஆனால் தனது இறுதிமூச்சு வரை திக, திமுகவை கடுமையாக எதிர்த்து வந்தார். அண்ணாதுரையின் எழுத்துக்களை எதிர்த்து இருநுால்களை எழுதியிருக்கிறார். விரைவில் அவற்றை வெளியிட திட்டமிட்டுள்ளேன்.
வேதவேள்விகளான இருபத்தோரு வேள்விகளை மூவகையாகப் பகுப்பர். அவை அக்னிஹோத்ரம் முதலான ஏழு ஹவிர் யஜ்ஞங்கள், பார்வணம் முதலான ஏழு பாக யஜ்ஞங்கள், அக்னிஷ்டோமம் முதலான ஏழு ஸோமஸம்ஸ்தைகள் ஆகும். இவை இன்றியமையாத வேள்விகளாகும். சோழநாட்டிலுள்ள பூஞ்சாற்றூரைச் சேர்ந்த அந்தணன் கௌண்டின்ய கோத்திரத்தில் தோன்றிய கவுணியன் விண்ணந்தாயன். அவனை ஆவூர்க்கிழார் என்னும் புலவர் பாடும் போது இந்த மூவேழு இருபத்தோரு யாகங்களையும் குறிப்பிடுகிறார். அவருடைய பாடல்
நன்கு ஆய்ந்த நீளமான சடையுடைய ஈசனின் வாயிலிருந்து எப்போதும் நீங்காதது. அறம் ஒன்றையே உடையது. நான்கு பகுப்புக்களையுடையது. ஆறு அங்கங்களை உடையதுமான பழைய நூலான வேதத்தை, அதன் புறம்பான மதங்களால் - பௌத்தம் முதலான மதங்களால் பொய்யாக மதமாற்றம் பெறுவரோ என்று சரியான பொருள் கூற வேண்டி எல்லோருக்கும் உண்மைப் பொருளைக் கூறி மூவேழ் துறைகளான இருபத்தோரு வேள்விகளைக் குறைவறச் செய்துவரும் குலத்தைச் சார்ந்தவனே என்கிறார் புலவர்.