New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 1944 சேலம் திராவிடர் கழக பெயர் மாற்ற நீதிக்கட்சி மாநாடு

Guru

Status: Offline
Posts: 24778
Date:
1944 சேலம் திராவிடர் கழக பெயர் மாற்ற நீதிக்கட்சி மாநாடு
Permalink  
 
1944 சேலம் திராவிடர் கழக பெயர் மாற்ற நீதிக்கட்சி மாநாடு - சில நினைவுகள்; நிகழ்வுகள்!

கி. வீரமணி

v3.jpg

சேலத்தில் திராவிடர் கழகத்தின் 75ஆம் ஆண்டு பவள விழா மாநாடு 27.8.2019 அன்று, முன்பு சேலத்தில் அம்மாநாடு நடைபெற்ற அதே நாளில் ஏற்பாடு ஆகி, தோழர்களும், ஆதரவாளர்களும், அன்பர்களும், பகுத்தறி வாளரும், உழைப்புத் தேனீக்களாகி மாநாட் டின் வெற்றிக்கு அயராது உழைத்து வரு கின்றார்கள்.

75 ஆண்டுகளுக்கு முன் நான் 11 வயதுச் சிறுவன். 1943 ஜூலையில்  முதல் முதல் அறிஞர் அண்ணாவின் திராவிட நாடு ஏட்டிற்கு நிதி ரூ.112 கொடுக்க ஏற்பாடுசெய்திருந்தார் எனது ஆசான் ஆ. திராவிடமணி. அக்கூட்டத்தில் என்னை மேசைமீது ஏற்றி நிற்க வைத்துப் பேசும் படிப் பணித்தார். அவர் எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து பேசினேன்; கொள்கைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டேன் என்று கூறுவதைவிட - நம் கழக ஏடுகள் 'குடிஅரசு',  'விடுதலை', 'திராவிட நாடு' ஆகியவையை பாடம் போல் படித்து ஏற்கெனவே ஓரளவு புரிந்துகொண்ட மாணவர் குழாமில் நான் தேர்வு செய்யப்பட்டவன்.

அதற்கிடையில் பல பொதுக் கூட்டங்கள் - நாங்களே தொண்டர்கள், ஏற்பாட்டாளர்கள், பேச்சாளர்கள் எல்லாம்;  பேராசிரியர் க.அன்பழகன், நாவலர் இரா. நெடுஞ்செழியன் - அண்ணாமலைப் பல்கலைக் கழக மாண வர்கள், அழைத்தவுடன் வந்து சனி, ஞாயிறு களில் பேசி விட்டுத் திரும்புவர். அவர்களை வரவேற்று, தங்க வைத்து, பாராமரிக்கும்  - உபசரிக்கும் பணி எங்கள் மாணவப் பட்டாளங் களுக்கே; காரணம் ஆசிரியர் ஆ. திராவிடமணி அலுவலகம் சென்று மாலை 4, 5 மணி அளவில் தான்  வருவார். அதன் பின்னர்தான் சில கழகத் தோழர்களுடன் நீதிக்கட்சிக்கான சிவப்பு - வெள்ளை - தராசுக் கொடி, புலி - வில் - கயல் - தமிழ்க் கொடி - இரண்டும் ஏந்தி 10 பேர் களானாலும் முழக்கம் போட்டு ஊரைக் கூட்டி கூட்டம் நடத்துவோம்.

29 ஜூலை 1944 திருப்பாதிரிப்புலியூரில் தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு காலை முத்தய்யா டாக்கீசில், மாலை நிகழ்வு மஞ்சை நகர் மைதானத்தில்! இரயிலில் வந்த அய்யா பெரியாரும், அன்னை மணியம்மை யாரும் தோழர்களால் வரவேற்கப்பட்டு திருப் பாதிரிப்புலியூரில் (கடலூர் NT) ஒரு சத்திரத்தில் தங்க வைக்கப்பட்டார்கள்.

என்னை அய்யாவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார் டார்ப்பிடோ ஏ.பி. ஜனார்த்தனம்! அய்யா, அம்மாவை முதல் முறை பார்த்தேன்; அவர்கள் கேட்ட கேள்வி களுக்குப்  பதில் கூறி விடை பெற்றேன்.

காலை  மாநாடு - அதில் அய்யா - அண்ணா பேசுமுன் என்னை மேசைமீது தூக்கி நிறுத்தி னார்கள். பயமறியாது பேசினேன்; அடுத்துப் பேசினார் அண்ணா.  அதில் தான்  என்னைக் குறித்து "திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தர்" என்று  உவமை கூறினார். "இவர் அருந்தியது பார்வதியின் பால் அல்ல; பெரியாரின் பகுத்தறிவுப் பால்" என்றும் குறிப் பிட்டார். அடுத்து அய்யா பேசும் போது எதிர்ப்பு  - அய்யா அதனை எதிர் கொண்டவிதம் - என் உள்ளத்தில் ஏற்படுத்திய உணர்வு இன்றும்கூட உறுதியாக நிற்க உதவுகிறது. சிங்கத்தின் கர்ஜனை என்றாலும் விளக்கமாகப் பேசி வாயடைக்க வைத்தார். எதிர்த்துக்  கேட்ட விவரம் தெரியாதவர்கள் பின்னாளில் அவரே மாறினர்; போற்றினர்.

மாலைதான் மழையும்கூட - ரிக்ஷாவில் திரும்பும்போது செருப்பு வீச்சு நிகழ்ச்சி. அவ்விடத்தில்தான் சிலை எழுப்பினர் 1972இல்! வரலாறாகி விட்டது அச்சிலை.

அம்மாநாட்டிற்கு சரியாக ஒரு மாதத்திற்குள் தான் சேலத்தில் நீதிக்கட்சி - திராவிடர் கழக மாநாடு!

v4.jpg

ஆசிரியர், திராவிட மணியுடன் கழகத் தோழர்கள்  10 பேர் விருத்தாசலம் வழியே சேலத்திற்கு இரயிலில் சென்றோம். விருத்தா சலம் தாஸ் சைக்கிள் மார்ட்  உரிமையாளரும், கழக முக்கியஸ்தருமான திரு. சி. முனுசாமி - ஜங்ஷனில் எல்லோரும் சேர்ந்து சேலம் பாசஞ்சரில் பயணம். சின்ன சேலத்தில் தோழர் கலைமணி தலைமையில் பல தோழர்கள் - கலைமணி 'குல்' வைத்திருப்பார். 'பாகவதர் கிராப்' என்று அழைப்பர். அவர் நாடக நடிகர், பாடகர், பாட்டும் கூத்தும் பயணத்தை எளிதாக்கின!

சேலம் சென்று காலை உணவு விடுதியில் முடித்தோம்  -  பந்தலில் ஒரே முழக்கம் - சலசலப்பு, "பெரியாரே எங்கள் தலைவர்" என்று 1/32 அளவு நோட்டீசுகள் பறந்தன. தஞ்சை தோழர்கள் ஏராளம் வந்தனர். பந்தலில் கூர்க்காக்கள் - எதிர்த்து கலகம் செய்து அவர்களை விரட்டினர்.  பிறகு பி.ரெத்தினசாமி வந்து அமைதியை நிலைநாட்டினார். நம் கழகத் தோழர்களே டிக்கட் பரிசோதித்து உள்ளே அனுப்பினர்.திருவாரூரில் இருந்த திருவிடம் ஸ்டோர் ஆடை அணிகலன் உரிமையாளர் - கடலூரிலும் கடை உண்டு -  ரெங்கராஜ். அவரை "தண்டவாளம்" என்றே அழைப்பர். சிங்கராயர், முத்துகிருஷ்ணன், வி.எஸ்.பி. யாகூப், ஆறுமுக நாடார் இப்படிப் பலரும் அவருடன்;  ஒருவித பரபரப்பு! ஊர் வலத்தில் அய்யா, கி.பெ.ஆ. விசுவநாதம் - 'சண்டே அப்சர்வர்' பாலசுப்ரமணியம் கொடி யேற்ற உரை - ஆங்கிலத்தில் அவர் பேச, பேராசிரியர் அன்பழகன் மொழி பெயர்ப்பு. பி.பா. என்று அழைக்கப்படும் பால சுப்பிர மணியம் பேசத் துவங்கினார். "My Leader Periyar EV Ramasami" என்று ஆரம்பித்தார்;  ஒரே கைதட்டல்! "எனது தலைவர் பெரியார் இராமசாமி  அவர்களே" என்று மொழி பெயர்த்த அன்பழகனார், "இப்படி நான் கூறவில்லை. இதோ இந்த பி.பா. கூறுகிறார்" என்றார்; கைதட்டல் அடங்க வெகு நேரமாயிற்று!!

காரணம் அவர் தந்தை பெரியாருக்கு எதிரான குழுவிற்கு கன்வீனர் போன்றவர் என்றொரு சந்தேகம்.

எதிர்த்தவர்கள் அத்துணைப் பேரும் ஒரே சரணாகதி படலம்தான். புரிந்தது தொண்டர் களுக்கு.

அண்ணாதுரை தீர்மானம் ஆரவாரத்துடன் நிறைவேறியது. எதிர்ப்பே இல்லை.

இடைவேளைக்கு -  உணவுக்குக் கலைந்தது. மீண்டும் கூடி நிகழ்ச்சிகள் தொடங்க சில மணித் துளிகள் முன்பு என்னை மேசைமீது ஏற்றிப் பேச வைத்தனர். ஒரே கை  தட்டல்,  உற்சாகம் எனக்கு,தொண்டை விக்கல், பக்கத்தில் அறிஞர் அண்ணா, சோடாவை உடைத்துக் கொடுத்துப் 'பேசு' என்றார்!

இது என் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று. அன்று தொடங்கியது - இன்றும் தொடருகிறது!

அய்யா இல்லை

அண்ணா இல்லை

அன்னையார் இல்லை

கலைஞர் போன்றவர்கள் இல்லை

என்றாலும் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் வேகத்துடனும், விவேகத்துடனும், சலிக்காமல்  இன்றும் பல எதிர்ப்புகளையும் சந்தித்துத் தன் பணியைச் செய்கிறது.

தோழர்கள் விசையாக இருந்து முடுக்கி  விடுகின்றனர், எதிலும்  துணிவோடு!

எஞ்சியவை பவள விழா மாநாட்டில்! சந்திப்போமா?

__________________

Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: 1944 சேலம் திராவிடர் கழக பெயர் மாற்ற நீதிக்கட்சி மாநாடு
Permalink  
 
இன்றைய தலைமுறையினரே அறிந்து கொள்வீர்!

S.I.L.F. (ஜஸ்டிஸ்) மாகாண மாநாடு

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

16ஆவது தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாடு சேலத்தில் நடத்த 1940ஆம் வருஷத்திலேயே திருவாருரில் அழைக்கப்பட்டது. அதன்பிறகு 43ஆம் வருஷம் சேலத்தில் நிர்வாக சபை கூட்டம் போட்ட காலத்தில் சேலம் சேர்மன் தோழர் ரத்தினம் பிள்ளையவர்களாலும் குகை பிரபல வியாபாரி கே. ஜெகதீசன் அவர்களாலும், வக்கீல் தோழர் நெட்டோ அவர்களாலும் அழைக்கப் பட்டபடி ஒரு வருஷ காலமாக சேலத்தில் நடத்த முயற்சி எடுத்து வந்த மாநாடு 27.08.1944ஆம் தேதி சேலம் விக்டோரியா மார்க்கட்டில் போடப்பட்டிருந்த மாபெரும் கொட்டகையில் ஆடம்பரத் தோடும் ஆரவாரத்தோடும் உற்சாகத்தோடும் உருப்படியான வேலைத்திட்டங் களோடும் வெற்றிகரமாக நடந்த விபரம்:

பெரியார் வருகை

மாநாட்டுக்கு முதல் நாளாகிய 26ஆம் தேதியே தோழர்கள் சவுந்தரபாண்டியன், அண்ணாதுரை, வி.வி.ராமசாமி, கெ.ஏ.பி. விசுவநாதம் ஆகியவர்களும் பல இடங்களிலிருந்து சுமார் ஆயிரம் பிரதிநிதிகளும் வந்துவிட்டனர். அடுத்த நாள் காலையில் மாநாட்டுத் தலைவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களும் மற்றும் சுமார் 3000 பிரதிநிதிகளும் தமிழ் நாட்டிலுள்ள எல்லா ஜில்லாக்களிலிருந்தும் வந்து கூடிவிட் டார்கள். பெரியார் ஏறிவந்த ரயில் வந்த உடனே ரயில் மேடையில் கொடியுடன் சுமார் 200 தொண்டர்களும் 400, 500 உள்ளூர் மக்களுமாக பெருத்த ஆரவாரத்தோடு பெரியாரை வரவேற்று அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தோழர் ரோசு அருணாசலம் அவர்கள் மாளிகைக்கு வாழ்த்தொலியோடு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு சென்று சிற்றுண்டி அருந்தியதும் தோழர் பாண்டியன் அவர்களும், தோழர் அண்ணாதுரையவர்களும் தலைவர் இருந்த ஜாகைக்கு வந்து தீர்மானங்களைப்பற்றி பேசி "குடிஅரசு" "திராவிட நாடு2 பத்திரிகைகளில் வெளிவந்த தீர்மானங்களில் பட்டம் பதவி விடுதல் என்ற தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்கள் எல்லாராலும் ஒப்புக்கொள்ளப் படுகிறதென்றும் தெரிவித்த தோடு பட்டம் பதவி விடுகிற தீர்மானத்திலும் ஒரு சிறு திருத் தத்தோடு அதை அப்படியே ஒப்புக்கொள்வதில் யாருக்கும் எவ்வித ஆட்சேபனையில்லையென்றும் தெரிவதாகவும் தெரிவித்ததோடு இத்திருத்தத்தோடு எல்லாத் தீர்மானங்களும் மாநாட்டில் நிறைவேற்றும் விஷயத்தில் யாவரும் கட்டுப் பாடாக ஒருவருக் கொருவர் ஒத்துழைக்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது.

ஊர்வலப் புறப்பாடு

ஊர்வலத்தில் இரட்டைக் குதிரை பூட்டிய பெரியதொரு கோச்சு வண்டியில் பெரியார், பாண்டியன், வரவேற்புக் கழகத் தலைவர் மூவரும் மாலையிட்டு அமர்த்தப்பட்டனர்.  பிறகு மாநாட்டுத் திறப்பாளரும், கொடியேற்றுபவருமாகிய தோழர்கள் கே.ஏ.பி.விசுவநாதம், பி. பாலசுப்பிரமணியம் ஆகியவர்களும் வண்டியில் உட்கார வைக்கப்பட்டார்கள். அந்த சமயத்தில் பொது ஜனங்கள் பலர் ஆட்சேபனைக் குறிகள் காட்டினார்கள் என்றாலும் பெரியார் கேட்டுக் கொண்டதின் பேரில், ஆட்சேபனை குரல்கள் அடங்கி விட்டன. ஊர்வலத்திற்கு தொடங்கிய இடத்திலேயே சுமார் 20000 மக்கள் போல் கூடிவிட்டார்கள். கோச்சு வண்டிக்கு முன்னால் ஜனங்கள் ஒரு பர்லாங்கு தூரம் வரையிலும் நெருக்கமாக நிறைந்திருக்க, 5 ஜதை பாண்டு செட்டுகளும், 10 ஜதை மேளம், 100 ஜதை தப்பட்டை, 40 கொம்புகளும், தொண்டர்கள் ஏறிய 40 குதிரைகளும், 2 யானைகளும் முன்செல்ல, 10.30 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது.

ஊர்வலம் புறப்பட்டு கடைவீதிக்குள் வருவதற்குள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஜனங்களின் எண்ணிக்கை ஒன்றுக்கு இரண்டு பங்காய்விட்டது. இதில் முக்கியமாய் குறிப்பிடத்தக்கது பெண்கள் ஆயிரக்கணக்கில் ஊர்வலத்தில் கலந்துகொண்டதும், திருச்சி, பொன்மலை முதலிய ஊர்களி லிருந்து வந்த தொண்டர் படைகள் தங்கள் தங்கள் கொடி சின்னங்களுடன் தனித்தனியாக அணிவகுத்துச சென்றது மாகும். ஊர்வலத்தில் வழி நெடுக மாலையிட்டார்கள். தஞ்சாவூர் திராவிட சுயமரியாதைத் தோழர்களால் பெரியாரே எங்கள் தலைவர் என்றும் சூழ்ச்சி யாவும் வீழ்ச்சியடைக என்றும் பொறிக்கப் பட்ட துண்டுப் பிரசுரங்கள் பதினாயிரக்கணக்கில் வழங்கப்பட்டன. வழி நெடுக பெரியார் வாழ்க, திராவிடர் கழகம் ஓங்குக, பாண்டியன் வாழ்க, துரோகிகளும் சதிகாரர்களும் அயோக்கியர்களும் அழிக என்ற உற்சாகக் குரல்கள் காது செவிடுபடத் செய்தன. ஊர்வலம் சுமார் 11.30 மணிக்கு மாநாட்டுக் கொட்டகையை வந்தடைந்தது. ஊர்வலம் வருவதற்கு முன்னமேயே கொட்டகையில் ஆயிரக்கணக்கான பேர்கள் நிறைந் திருந்தார்கள். தோழர் அண்ணாதுரை அவர்கள் மாநாட்டுக் கொட்டகையில் நுழைந்தபோது பெருத்த ஆரவாரம் செய்தார்கள். பெரியார் அவர்கள் பெரும் கஷ்டத்துடன் பெரும் கரகோஷத்தினிடையே மேடைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

கூர்க்க சிப்பாய்கள் நீக்கம்

பிரதிநிதிகள் தியாகராயப் பந்தலுக்குள்  நுழைவதில், கொட்டகை வாயிலில் நேப்பாளத்திய கூர்க்க சிப்பாய்களை வைக்கப்பட்டிருந்ததில், அவர்களோடு சச்சரவு ஏற்பட்டதும் அதன் பயனாய் பெருத்த கலவரம் ஏற்பட்டதுடன் உயிர்க் கொலையும் ஏற்படும்படியான அளவுக்கு ஆத்திரம் ஏற்பட்டு விட்டது! தோழர் அண்ணாதுரை அவர்களின் அதி தீவிர முயற்சியினால் குழப்பம் ஒரு வழியில் அடக்கப்பட்டது. கூர்க்கக் காவலாளிகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டார்கள். இது கொட்டகைக்குள் பிரதிநிதிகளை தாராளமாகச் செல்ல விடாமல் தடுப்பதற்காக செய்யப்பட்ட தந்திரம் என்று பலருக்கும் தோன்றியதாலேயே பிரதிநிதிகள் வெறி கொண்டுவிட நேர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். அதன் பயனாக மாநாட்டைக் கூட்டியவர்களுக்கும் பழி யேற்பட நேர்ந்தது.

கொடியேற்றல் பிரதிநிதிகள் ஆட்சேபனை

மாநாடு கூடினதும் மாநாட்டுக் காரியதரிசி தோழர்  நெட்டோ அவர்கள் தோழர் பாலசுப்ரமணியம் அவர்களை கொடியேற்றி வைக்கும்படி பிரேரேபித்தார். சொன்ன உடனே பிரதிநிதிகள் கூட்டத்தில் இதில் எழுத முடியாத பலவிதமாக கெட்ட வார்த்தைகளும் மறுப்பு ஆட்சேபனைகளும் கிளம்பின. உடனே வரவேற்புக் கழகத் தலைவர் சேர்மன் தோழர் ரத்தினம் பிள்ளை வந்து சமாதானமாக, இந்த மாநாட் டின் பலனாய் நம் கட்சியில் ஒரு சின்ன மனிதனுக்காவது எவ்வித அபிப்பிராயபேதத்திற்கும் சிறிதும் இடமில்லாமல் எல்லோ ரையும் அழைத்திருக்கிறோமேயல்லாது மற்றப்படி வேறு எந்த விதமான எண்ணங்கொண்டும் நாங்கள் தோழர் பாலசுப்பிரமணியம் முதலியார்களை தருவிக்கவில்லை என்றும் அவர்கள் மிக்க ஒழுங்காகப் பேசி நேர்மையாக நடந்து கொள்வார்களென்றும் சொல்லி கொடியேற்றுவதை ஆதரித்தார். பெரியார் அவர்களும் ஆத்திரப்பட்டவர்களுக் கெல்லாம் கையமர்த்தி கேட்டுக்கொள்வதின் மூலம் சமாதா னம் சொல்லி யாதொரு கலவரமும் இல்லாமல் இருக்கும்படி வேண்டிக் கொண்டார்.

பிறகு தோழர் பாலசுப்பிமணிய முதலியார் சிறிது நேரம் ஆங்கிலத்தில் பேசினார். (அது பின்னால் வரும்) பேச்சு முழுவதும் சரணாகதி பேச்சாகவும் தன்னுடைய நடவடிக் கைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும், தானும் தன் பின் சந்ததியும் என்றென்றும் பெரியார் தலைமையில் தொண்டாற்றுவோம் என்றும், நான் பெரியாருக்கு ஓய்வு கொடுப்பதற்கு ஆகவே வேறு எந்ததெந்த ஆள் களுடைய பெயர்களை தலைமை ஸ்தானத்திற்கு குறிப்பிட்டேனோ அவர்கள் எல்லாம் குறிப்பாக சர். ஆர்.கே. சண்முகம் செட்டி யார் முதலியவர்கள் எல்லாம் கட்சிக்கு துரோகிகளாய் விட்டார்கள் என்றும், பெரியார் தமிழ்நாட்டின் காரல்மார்கஸ் என்றும் ஏராளமாகப் புகழ்ந்து பேசியதோடு அவரிடத்தில் நான் குறை கண்டதாக சொல்வதெல்லாம் இன்னும் அதிகமாக வேலை செய்யவேண்டும் என்று ஊக்கப்படுத்த வேண்டு மென்ற எண்ணத்தைக் கொண்டேயென்றும் வேறு எந்தவித மான குறை அவரிடத்தில் கண்டதில்லையென்றும் சொன்ன தோடு பெரியாரே என்றென்றும் தலைவராயிருந்து திராவிடஸ் தான் வாங்கிக் கொடுத்து அதில் அவரே முதல் பிரசிடெண்டாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்றும் அதற்காக தாம் எல்லாவிதமான தியாகங்கள் செய்யத் தயாராயிருப்பதாகவும் தெரிவித்தார். மற்றும் தோழர் பாலசுப்பிரமணியம் அவர்கள் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க சங்கதி என்னவென்றால், ஊர்வலத்தில் பெரியாருடன் வண்டியில் உட்காந்திருக்கும்போது தோழர் பாலசுப்பிரமணியத்துக்கு போடுவதற்காகக் கொண்டுவந்த மாலைகள் எல்லாவற்றையும் இரண்டு கையில் வாங்கி எழுந்திருந்து பெரியாருக்கு அணிவித்து பொதுமக்களுக்கு, தான் பெரியாரின் அடிமை என்பதுபோல் காட்டிக் கொண்டதாகும். தோழர் பாலசுப்பிர மணியம் அவர்கள் பேச்சு ஆங்கிலத்தில் முடிந்த உடனே, தோழர் க. அன்பழகனால் அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

திறப்பு விழா

பின் மாநாட்டைத் திறந்துவைக்கும்படி தோழர் கே.ஏ.பி. விசுவநாதத்தைக் கேட்டுக் கொண்டார்கள். தோழர் விசுவ நாதம் அவர்கள் பேச எழுந்த போதும் சிறிது எதிர்ப்புக் குறி காணப்பட்டதென்றாலும் அது உடனே பெரியார் செய்கையால் அடக்கப்பட்டது. தோழர் விசுவநாதம் அவர்கள் பேசியதும், சற்றேறக்குறைய தோழர் பாலசுப்பிரமண்யம் பேசியது போலவேயிருந்தாலும் பெரியார் சர்வாதிகாரியாய் இருப்பதைக் கூட தான் ஆதரிப்பதாகவும் பேசி, சாமர்த்தியமான முறையில் சாடைமாடையாக சில கிண்டல் சொல்லையும் சொல்ல ஆசைப்பட்டார். கூட்டத்திலுள்ளவர்களில் சில பிரதிநிதிகள் ஒருமையில் பேசி எச்சரிக்க ஆரம்பித்தவுடன் மறுபடியும் பெரியாருக்குப் புகழ்மாலை சூட்டுவதில் முனைந்து விட்டார்!

அது முடிந்ததும் வரவேற்புக் கழகத் தலைவர் சேர்மன் தோழர் ரத்தினம் பிள்ளையவர்கள் வரவேற்புச் சொற் பொழிவை நிகழ்த்தினார். அது பெரும்பாலும் பெரியாரைப் புகழ்ந்தும் அவரைத் தவிர வேறு தலைவர் திராவிடர்களுக்கு கிடையாதென்றும் ஒற்றுமையை வலியுறுத்தியும் திராவிட நாட்டுப்பிரிவினையை ஆதரித்தும் கட்சிக் கட்டுப்பாடுகளை வலியுறுத்தியும் பேசப்பட்டதாகும். பின்னர் பெரியார் அவர்களைத் தலைமை வகிக்கும்படி பிரரேபித்தார்.

தோழர்கள் நெட்டோ, பாண்டியன், ராமாமிர்தத்தம்மாள், ராவ்சாகிப் துரைசாமி பிள்ளை, கணேசசங்கரன், திருவொற் றியூர் டி. சண்முகம் ஆகியவர்கள் ஆதரித்தார்கள். தோழர் சண்முகம் அவர்கள் பேசும்போது, தோழர்கள் பாலசுப்பிர மணியம், விசுவநாதம் ஆகியவர்கள் பேசியபடி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் பேசிய பேச்சை ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறார்களா அல்லது தங்கள் வழக்கம் போல் நடக்கிறார்களா பார்ப்போம் என்றும் வெளி யில் போனதும் பழையபடி கர்ணம் போடக் கூடாதென்றும் எச்சரிக்கை செய்து, யார்தானாகட்டும் இன்றைய நிலையில் பெரியாரைத் தவிர வேறு யார் பெயரை பிரேரேபிக்கத் தயாராயிருக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு ஆதரித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

பின், பெரிய ஆரவாரத்துடனும், வாழ்த்தொலியுடனும், நீண்ட கைத்தட்டலுடனும் பெரியார் நீண்ட சொற்பொழி வாற்றினார்.

- விடுதலை 02.09.1944இன்றைய தலைமுறையினரே அறிந்து கொள்வீர்!

- விடுதலை 02.09.1944

__________________

Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 
திராவிடர்களே சேலம் மாநாட்டிற்கு செல்லுங்கள்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

12.08.1944  - குடிஅரசிலிருந்து.... -

ஜஸ்டிஸ் மாகாண மாநாடு 20.8.1944இல் நடைபெற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வரும் விபரம் சென்ற வாரமே எழுதி இருந்தோம். அம்மாநாடு நம் கொள்கைகளில் ஒரு முக்கிய மான மாநாடாயிருக்கும் என்பது தவிர, மாநாடு நடவடிக்கையிலும் வெகுகாலம் ஞாபகத்திலி ருக்கத் தகுந்த ஒரு முக்கிய சம்பவ மாநாடாகவும் இருக்கலாம் என்றே கருதுகிறோம்.

ஏனெனில், மாநாட்டில் 2, 3 வித அபிப் பிராயங்கள் ஒன்றோடொன்று முட்டிக் கொண்டு வெற் றியை எதிர்பார்க்கும். இதன் பயனாய் கலவரம், கூப்பாடு, தடைவேலை ஆகியவைகளின் மூலம் தொல்லைகள் ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஜஸ்டிஸ் கட்சிக்கு அது தோன்றிய காலம் முதல் இந்தப் பெருமைகள் பல மாநாடுகளுக்குச் சொந்தமாக இருந்து வருகின்றன. இந்த இருபது வருஷ காலமாய் சென்னை, திருச்சி, நெல்லூர், தஞ்சை முதலிய பல இடங்களில் நடந்த மாகாண மாநாட்டு நிகழ்ச்சிகளை நினைவுக்கு கொண்டுவந்து பார்த்தால் இந்த உண்மைகள் தெளிவாக விளங்கும்.

பொதுவாகவே ஜஸ்டிஸ் கட்சி மாகாண மாநாடு என்றால் பதவிச் சண்டைதான் என்பதாக நம் எதிரிகளின் விஷமப் பிரசாரம் ஒருபுறமிருந்தாலும், நம் மக்கள் பலர் அதற்கு ஆதாரம் ஏற்படும்படியான மாதிரியில் நடந்து கொள்வதும் அடியோடு இல்லை என்று சொல்ல முடியாது. காங்கிரசிலும் பதவிக்காக வெளிப்படையாய் சண்டை இல்லாவிட்டாலும், பதவியையும், தேர்தலையும் சிறிது நாட்களுக்கு தள்ளி வைத்து நிர்மாண வேலை செய்ய வேண்டும் என்று சொன்ன காலத்தில் அன்றைய மாநாடுகளில் கலவரம் சிறிதாவது நடக்காமல் இருக்கவில்லை.

அன்றியும் பதவிக்காரர்களும் அல்லாதவர் களும் சேர்ந்து இருக்கும் எந்தக் கூட்டங்களிலும் இது இயற்கையும் சகஜமுமாகும். எப்படி இருந் தாலும் பொது மக்கள் உறுதியோடும் கட்டுப் பாட்டுடனும் இருந்து முனைந்து நின்றால் எது அவசியமும் நியாயமும் ஆகுமோ அது நிலைநிற்கும் என்பதோடு, காரியத்திலும் அமலுக்கு கொண்டு வரப்படக்கூடியதாகும் என்பதில் நமக்கு அய்யமில்லை. எது எப்படி ஆனாலும் சரி, இம்மாநாடு ஜஸ்டிஸ் கட்சி சரித்திரத்தில் ஒரு முக்கிய இடம் பெற்றுத் திகழுமென்பது நமது கருத்தாகும். ஆகவே, கீழ்கண்ட கொள்கைகளை ஆதரிக்கும் திரா விட மக்கள் ஆண் பெண் இளைஞர் ஒவ் வொருவரும் தவறாமல் அவசியம் சேலம் மாநாட்டிற்குச் சென்று, நாம் திராவிடர், நம் கழகம் திராவிடர் கழகம், நமக்கு வேண்டியது திராவிட நாடு என்பனவாகிய கொள்கைகளுக்கு ஒரு சிறு அணுவளவு கேடும் தொல்லையும் ஏற்படாமல் உறுதிப்படுத்தி அதற்கு ஆக அதி தீவிரக் கிளர்ச்சியோடு வேலை செய்து, வெற்றி பெறத்தக்க வண்ணம் மாநாட்டை சீரும் சிறப்பாக நடத்திக் கொடுத்து அதன்மூலம் பெரியதொரு நலமும் வெற்றியும் காண முயலவேண்டுமென ஆசைப்படுகின்றோம்.

முடிவாக ஒன்று சொல்லுகிறோம். அதாவது, ஜின்னா காந்தி சந்திப்பில், உங்களை - திராவிட நாட்டை மறந்துவிடும் படியாகவோ அலட்சியமாய் கருதும்படியாகவோ நாம் நடந்து கொள்ளக்கூடாது என்பதே.

ஓங்குக திராவிடர் கழகம்! தோன்றுக திராவிட நாடு!! வாழ்க திராவிடர்!!!

__________________

Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 
பெரியாரின் சங்கநாதமும் தொண்டர்களின் பேரெழுச்சியும் (2)

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

v22.jpg

10.07.1948 - குடிஅரசிலிருந்து... -

சென்ற வாரத் தொடர்ச்சி

வந்த கடிதங்களில் இங்கு நாம் இரண் டொன்றைத்தான் குறிப்பிட்டிருக்கின் றோம். சில தோழர்கள் வஞ்சினங்கூறி எழுதி, ரத்தத்திலேயே கையெழுத்திட்டு அனுப்பியிருக்கிறார்கள்.

சுருக்கமாகக்கூறவேண்டுமென்றால், இக்கடிதங்கள் இந்நாட்டு மக்களின் வீரத் திற்கு ஒரு எடுத்துக்காட்டாய், என்றும் அழிவுறாத இலக்கியமாக விளங்கத் தகுந்த பெரும் பொக்கிஷமென்று கூற வேண்டும்.

ஈவு இரக்கமற்ற, வன்கண்மையும் குரூரமே உருவான இப்போதைய அகிம்சா மூர்த்திகளின் சுயரூபத்தையும், அவர்களின் அட்டூழியமான அக்கிரமப் போக்கையும் கண்டபிறகே, பெரியார் அவர்களால் இக்கொடிய சூழ்நிலையை நன்றாக விளக்கிக் கூறப்பட்ட பிறகே இத்தனை ஆயிரம் தோழர்கள் கச்சையை வரிந்து கட்டி எங்கு? எப்பொழுது? எப்படி? என்ற கேள்விகளைப் போட்டு முழக்கஞ் செய்கின்றார்கள் என்பதைக் கேட்கும் போது எந்தத் திராவிடன் தான் மகிழ்ச்சியடையாதிருப்பான்?

வடநாட்டு ஆதிக்கத்தை முறியடிக்க, பார்ப்பனியச் சுரண்டலை படுகுழியில் புதைக்க, முன்னேற்றப் பாதையில் எடுத்து அடிவைத்து நடக்க முடியாத இன இழி வைத் துடைக்க, இந்தத் திராவிட இன உணர்ச்சியுடைய இளைஞர்கள் மட் டுமோ, எத்தனையோ காங்கிரசு திரா விடத் தோழர்களும் கலந்து அய்க்கிய மடையக் காத்திருக்கிறார்கள் என்பதை யும் நாமறிகிறோம்.

திராவிடக் காளைகளின் பேரெழுச் சியைக் கண்ட ஓமாந்தூரார் மந்திரிசபை, திராவிடர்களின் மானத்தைப் பறித்து, மொட்டையடித்து நாமம் போட்டு கோவிந்தா! கோவிந்தா என்று கூக்குரல் போடச் செய்யும் இக்காரியத்தைக் கைவிடுமா? அல்லது கைவிடாதிருக்குமா? நிதானப்புத்தி இல்லாமல், நேற்றுச் சொல்லியதை இன்று மாற்றிச் சொல்லி, ஒரு மந்திரி சொல்வதை மற்றொரு மந்திரி அது அவர் சொந்த அபிப்பிராயமே தவிர மந்திரிசபையின் கருத்தல்ல என்று மறுத்துப் பேசி வரும், மந்திரிகளடங்கிய மந்திரி சபையிலே நிதானப்போக்கை நாம் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்கத் தேவையுமில்லை.

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே என்று ஆண்டவனுக்கும் உலக மக்கள் நிகழ்ச்சிக்கும் தத்துவம் காட்டும் மெய்யன்பர்களின் போக்கை மறுத்து, ஆட்டுவிப்பவன் யார், அவன் எங்கிருந்து கொண்டு எப்படி எதனால் ஆட்டுகின் றான் என்று கேட்கும் எந்த பகுத்தறிவு வாதிதான், ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே என்று இப்போதைய மந்திரி சபையைக் குறித்துக் கூறும் போது எப்படி மறுத்துவிட முடியும்? பார்ப்பனர்களும் - பனியாக்களும் ஏவியபடியெல்லாம் ஏவல் கேட்கும் இந்த மந்திரி சபை, இந்த மந்திரி சபை அமைவதற்கு என்ன அடிப்படையோ அந்த அடிப்படை அழிந்தொழிய, இந்த நாட்டு ஆட்சியின் அமைப்பு வேறு எவரின் தலையீடுமற்ற நிலையில் அமைக்கப்பட வேண்டுமென்ற உரிமைப் போராட்டம், மந்திரி சபையின் வெற்றிகரமான பின் வாங்கும் நடத்தை யால் சிலநாள், கால தாமதமானால் ஆகுமே தவிர, எப்படியும் போராட்டம் நடந்துதானே தீரும்! நடந்துதானே ஆக வேண்டும்! இந்த உறுதியும் உரமும் பெற்ற உணர்ச்சி வெள்ளத்தைத்தான், திராவிடர் களின் வீர முழக்க பேரொலியைக் கேட்டுக் கண்களுள்ள எவரும் காணவேண்டும்.

நிற்க, தொண்டர்களுக்கு இந்த நேரத் தில் நாம் இவைகளைக் கூற வேண்டு மென்று ஆசைப்படுகிறோம். இன இழி வைத் துடைப்போம்! எவர் தடுப்பினும் எதிர்ப்போம்! எப்பொழுது போராட்டம்? இப்போதே நாங்கள் தயார்! என்று தினவெடுக்கும் தோள்களையுடைய செந்தமிழ் வீரர்களே! இப்போராட் டத்தில் எங்கள் பங்கு என்ன குறைச்சலா என்று மனம் புழுங்கும் தாய்மார்களே! இளைஞர்களே! போராட்ட முறையில் நீங்கள் கைக்கொள்ள வேண்டிய முதல் பாடம் கட்டுப்பாடு. கட்டுப்பாட்டுக் கடங்கிப் போர்த்தலைவன் குறித்த வேளையில், குறித்த இடத்தில், குறிப்பிட்ட காரியத் தைச் செய்ய நீங்கள் ஆயத்தமாயிருக்க வேண் டும்!  உங்களுடைய சக்தியைச் சிதற டிக்க பார்ப்பனியம் பல வலைகளை வீசும்! ஏமாந்து விடாதீர்கள்! எழுச்சி யையே ஆயுதமாகக் கொண்டு, வேறு எந்தக் கொலைக் கருவியையும் கைக் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் உங்களை, தவறான பாதையைக் காட்டி சரிந்து விழுவதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்யும் பார்ப்பனிய அதிகாரவர்க்கம்! அதற்கு ஒத்துழைத்து பின்பாட்டுப் பாடி ஒத்து ஊதி தாளம் போடும் பணக்கார வர்க்கம்! உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு உலுத்தர் களின் ஏமாற்றத்திற்கு உள்ளாகாதீர்கள்!

உங்களுடைய சக்தியனைத்தும் கட்டுப்பாடாய் ஒருமுகமாக ஒரு முனையிலே செலுத்தப்பட வேண்டும் என்பதைக் கவனத்தில் வையுங்கள்!

கட்டுப்பாட் டோடு கூடிய எழுச்சியே, நம் காரியத்தை வெற்றிபெறச் செய்யும் என்பதை நினைவில் வையுங்கள்.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard