New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் முச்சங்கக் கதைகள் நம்பிக்கைக்கு உரியவை அல்ல


Guru

Status: Offline
Posts: 24778
Date:
தமிழ் முச்சங்கக் கதைகள் நம்பிக்கைக்கு உரியவை அல்ல
Permalink  
 


தமிழ் முச்சங்கக் கதைகள் நம்பிக்கைக்கு உரியவை அல்ல

 
முச்சங்கங்கள் பற்றிய மேற்கண்ட செய்திகளை இறையனார் களவியல் உரை என்ற கி.பி. 8ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்தான் கூறுகின்றது. இந்நூல் கூறும் செய்திகள் முழுமையான நம்பிக்கைக்குரியனவா என்பது ஆராய்ச்சிக்குரியதாகும்.
3%2Bsangam%2Bno.jpg
இருப்பினும் சங்கம் என்ற ஓர் அமைப்பு, பாண்டியர்களால் நடத்தப் பெற்றமை குறித்துச் சங்க இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் நிறையச் சான்றுகள் கிடைக்கின்றன.
முச்சங்கங்களும் இருந்த கால அளவு, பாடிய புலவர்களின் எண்ணிக்கை, சங்கம் நடத்திய அரசர்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறும் செய்திகள் முழுமையும் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. கி.மு.500 முதல் கி.பி.200 முடிய உள்ள காலமே சங்கம் நடைபெற்ற காலமாக இருக்க முடியும்.
http://www.tamilvu.org/ta/courses-degree-p104-p1043-html-p1043112-26787
வி.பி.புருஷோத்தம் நூல் "சங்க கால மன்னர் வரலாறு" முதலில் தமிழ அரசு உதவித் தொகையோடு வெளியிடப்பட்டது, பின்னர் அது மறு பதிப்பாய் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , 2000 சற்றே சிறிதாக்கி வெளியிட்டது இணையத்தில் உள்ளது

 
சங்ககால மன்னர் காலநிலை  வரலாறு-   வி.பி.புருஷோத்தம்;   
அணிந்துரை- சிலம்பொலி செல்லப்பன். இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.   பாராட்டுரை- பேராசிரியர். சாலை- இளந்திரையன்.
நூலின் ஆய்வின் விஸ்தீரணம் கண்டு இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்- இந்நூலிற்கு தமிழக அரசு சார்பாக வேளியீடு மான்யம் பெற்று தந்தார்.
தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களை கி.ப். எட்டாம் நூற்றாண்டில் படித்த நீலகண்டன் என்பவரால் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதையாகும். பாண்டியர்கள் தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் வாழ்ந்ததாகவோ சங்கப் பாடல்கள் கூறவில்லை.
முச்சங்கக் கதையை நம்பி, சங்ககாலத்தைக் கணிக்க முயல்வது, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும். -பக்கம்30 
8ம் நூற்றாண்டில் வரையப்பட்ட இறையனார் அகப்பொருள் உரை- என்னும் நூலில் ஒரே ஒரு பாடல் மட்டும் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதை. இதில் முதல்- இடைச் சங்கப் புலவர்கள் என உரையில் கூறப்பட்ட புலவர்கள் பெயர்கள் பெரும்பாலும் பாட்டுத்தொகை ஆசிரியர்கள் பெயரே உள்ளது. 
 

இடைச் சங்கம், கடைச் சங்கம், முதல் சங்கம்- இவை எல்லாம் வெறும் ஆரவார புராணம். ஆதாரமில்லாதது.
 

சங்ககால மன்னர்களின் காலநிலை தொகுதி1

 
வி.பி.புருஷோத்தம் &  பத்மஜா ரமேஷ்
 பதிப்பாளர்:  சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , 2000
 
http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI8k0My


q%2BnO%2BsANGAM1.jpg
 
 
3%2Bsangam%2Bnos.jpg


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard