New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே


Guru

Status: Offline
Posts: 24603
Date:
சங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே
Permalink  
 


சங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே

01.jpg03.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

18.jpg 19.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

19a.jpg 20.jpg

20a.jpg21.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

21a.jpg 22.jpg

22a.jpg23.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

23a.jpg 24.jpg

24a.jpg25.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

25a.jpg 26.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

நான்மறை என்பது ரிக், யஜுர், சாம - அதர்வண வேதங்களே

 
 கம்யூனிச அறிஞர்கள் நூல் கூறுவது.
 
தமிழகத்தின் அண்மைக் கால வரலாற்றில் பிராமணர்- பிராமணர் அல்லாதார் இயக்கத்திற்குப் பெரும் பங்கு உண்டு. இதன் தொடக்கத்தைச் சோழர் காலம் தொட்டு காணுதல் கூடும். அக்காலத்தில் பிராமணர்களைப் போன்றே வேளாளர்களும் சமுதாயத்தின் மேல்தட்டில், சாதி ஏணிப்படியில் மேல் இடத்தைப் பெற்று இருந்தனர்.
 
பிரமதேயம் எனப்படும் நிலங்கள் எவ்வாறு பிராமணர்களுக்கு நிவந்தங்கள் அளிக்கப் பட்டனவோ அவ்வாறே வேளாளர்களுக்கு வெள்ளான் வகை நிலங்கள் மன்னர்களால் அளிக்கப் பட்டன. இது இவ்விரு வகுப்பினரின் மேலாண்மையைக் காட்டுகிறது. இத்தகைய சமூக, பொருளாதார நிலை இவ்விரு சமூகத்தின் இடையே கலாச்சாரப் போட்டியையும் கருத்துப் போராட்டத்தையும் உருவாக்கியது. தத்துவத்துறையிலும் இப்போராட்டம் வெளியாயிற்று. நிலவ்ய்டமை முறைவலுப் பெற்றுவிட்ட பிற்காலத்தில் சைவ நூல்களும் அதனடியாக சைவசித்தாந்தம் தோன்ற்லாயின.
 
பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் தத்துவ விசாரணை என்பது பிராமணரின் ஏகபோகமாகத் திகழ்ந்தபோது தமிழகத்தில் வேளாளர்களும் தத்துவ விசாரணையில் ஈடுபட்டனர். அதன் விளைவாகவே தமிழில் சைவசித்தாந்தம் உருவாக்கப் பட்டது.
 
ஆங்கிலேயர் வருகைக்குப் பின் இவ்விரு வகுப்பினரிடையே முரண்பாடு மேலும் முற்றியது. அறிவு ஜீவிகளான இம்மேல்தட்டு வகுப்பினரிடையே ஆங்கிலேய அரசுப் பதவிகளில் அமர்வதில் கடும் போட்டி ஏற்பட்டது. இம் முரண்பாடு பிராமணர் எதிர்ப்பௌ இயக்கமாக உருவெடுத்தது, நீதிக்கட்சியில் சங்கமம் அயிற்று. பின்னர் ஆரிய-திராவிட இனப் பாகுபாடாகப் பரிணாமம் பெற்றது.
 
இவ்வியக்கத்தின் கொள்கைகளை கலாச்சார, சமய மட்டத்தில் பிரச்சார்ம் செய்யும் பணியில் பல பிராமணர் அல்லாத அறிஞர்கள்- குறிப்பாக வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். அவர்களில் கா.சு.பிள்ளை, மறைமலை அடிகள், சிவராச பிள்ளை போன்றோர் தத்துவத் துறைகளில் பிராமண ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கோடு தமது ஆய்வுகளை இவர்கள் நடத்தினர்.
 
ஆனால் சைவ சமய குரவர்களாகிய அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் வாசகர் ஆகியோரின் தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களில் வேதங்களையும் அந்தணர்களையும் போற்றியிருந்தும், நெடுங்காலாமாகவே அவ்வேதங்களே, தத்துவங்களின் மூல நூல்கள் எனக் கருதப் பட்டு வரும் மரபும் இவ்வறிஞர்களது பணிக்கு இடைஞ்சல் ஆயிற்று.
” வேறு விதமாக சொல்வதானால் ரிக், யஜுர், ஸாமம், அதர்வணம் அகிய நான்கு வேதங்களும் ஆரியர்களின் படைப்புகளே என்ற உண்மையும், பிராமண்ர்களே காப்பாளர்கள் என்ற யதார்த நிலையும் அவர்களது நோக்கிற்கு இடையுறாக வந்தது.
 
இந்த இடையூறை கடக்க முன்பு எப்போதும் இல்லாத புது கொள்கைகளை நீதிக்கட்சியின் கருத்துக்காவலர்களாகிய இந்த அறிஞர்கள் (கா.சு.பிள்ளை, மறைமலைஅடிகள், சிவராசபிள்ளை) உருவாக்கினர். அதாவது வேதங்கள் என்றும் மறை நூல்கள் என்றும், சைவ குரவர்களால் குறிப்பிடப்படுபவை வடமொழி வேதங்கள் அல்லவென்றும், வடமொழி வேதங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழில் வேதங்கள் தோன்றி விட்டன என்றும் அவற்றை கண்ட வடமொழியார், தெளிவாக சொல்வதானால் பிராமணர்கள் அவற்றை வடமொழியில் பெயர்த்துக் கொண்டார்கள் என்றும் கூறத் தலைப் பட்டனர். அவ்வாறாயின் அத்தமிழ் வேதங்கள் இன்று உள்ளனவா என்ற வினாவிற்கு அவை கடல்கோளால் அழிந்துபோயின என்றும் அவர்கள் கூறினர். எக்கூற்றுக்கள் முற்றிலும் வரலாற்று விரோதமானவை; விஞ்ஞானபூர்வ மற்றவை என அறிஞர்களால் தள்ளப் பட்டன, என்றாலும், அவற்றின் தாக்கம் இன்று வரை தமிழக மக்களிடையே நீடித்திருக்கிறது எனின் மிகையாகாது. – பக் 52-53; ஆய்வு வட்டக் கட்டுரைகள்.;வெ.கிருஷ்ணமூர்த்?ி
 
தமிழில் எழுதப்பட்ட வேதங்கள் அல்லது நான்மறை நூல் (ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் தமிழ் மூல நூல்கள்) கடல் கோளில் அழிந்து போயின என்றாலும் அவற்றின் பெயர்கள் முறையே தைத்திரீயம்; பௌடிகம்,தலவகரம்; அதர்வணம் ஆகும் என கா.சு.பிள்ளை, தனது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த நான்மறைகள் எவை என விளக்கத் “திரு நான்மறை விளக்கம்” என்ற நூலையே கா.சு.பிள்ளை எழுதியிருக்கிறார். தமது கூற்றை நிருபிக்க தொல்காப்பியத்தில் பாயிர உரையில் நச்சினார்க்கினியர் கூறியுள்ள விளக்கத்தை ஆதாரமாகக் காட்டுகிறார்.
 
இது குறித்து “கா.சு. பிள்ளையின் ஆய்வுமுறை” என்ற எனது கட்டுரையில் ஏற்கனவே நான் ஆராய்ந்துள்ளேன். இக்கட்டுரையில் தமிழ் வேதங்கள் எனக்
கா.சு. பிள்ளையால் குறிப்பிடப்பட்டுள்ள பவுடிகம் தைத்திரீயம்; தலவகரம் ஆகியவை யாவை என்றும் இவைகள் உண்மையில் தமிழ்வேதங்கள் தானா என்றும் ஆராய்வோம்.( இப்பெயர்களே தமிழ்ச் சொற்கள்தானா என்பது வேறு விஷயம்).
 
IMG_20180715_060804.jpg IMG_20180715_060757.jpg

IMG_20180715_060813.jpg

IMG_20180715_060852.jpg

IMG_20180715_060859.jpg
 
IMG_20180715_060904.jpg

IMG_20180715_060909.jpg
மார்க்சிய ஆராய்ச்சியாளரும் சட்டவல்லுநருமான வெ.கிருஷ்ணமூர்த்தி வேத இலக்கியத்தின் வளர்ச்சியையும் கிளை பிரிதலையும் விளக்கியுள்ளார். பழமையான வேத இலக்கியங்கள் சம்ஹிதைகள் ஆகும். இவற்றுக்குப் பின்னால் பிராமணங்கள் , ஆரணியகங்கள் ஆகியவை உருவாகின. பின்னர் மேலும் விரிவடைந்து உபநிடதங்கள் தோன்றின. உபநிடதங்கள், பிரம சூத்திரம், தரிசன்ங்கள் எனப்படும் ஒரு பிரிவும், கல்ப சூத்திரங்கள் எனப்படும் மற்றொரு பிரிவும் உண்டாகியது. இந்த கல்ப சூத்திரங்கள் எனும் பிரிவிலேயே ஸ்ரௌத சூத்திரங்கள், க்ருஹ்ய சூத்திரங்கள், தர்ம சூத்திரங்கள் ஆகிய மூன்று வகைகள் உருவாகின. இவற்றின் பிரிவாக பின்னர் ஸ்மிருதிகள் இணைக்கப்பட்டன. இவை ஒவ்வொன்றும் ஒன்றோடொன்றாக பின்னலமைப்புகளாக தொடர்புகள் உருவாக்கப்பட்டு அமைக்கப்ப்ட்டன.
 
உதாரணமாக ரிக்வேத சம்ஹிதையுடன் ஐத்ரேய மற்றும் கௌக்ஷிதகி பிராமணம் அதே பெயர்களில் ஆரணியக நூல்கள் அதே பெயர்களில் உபநிடதங்கள் பின்னர் வசிஷ்ட தரும சூத்திரம் இந்த சம்ஹிதையுடன் தொடர்புடையது. யஜுர்வேதம் சுக்ல யஜுர்வேதம், கிருஷ்ண யஜுர் வேதம் என இரண்டாக பிரிக்கப்படும். அதில் கிருஷ்ண யஜுர் வேத சம்ஹிதைக்கு தைத்திரிய பிராமணம், தைத்திரிய ஆரணியகம் மற்றும் தைத்திரிய உபநிடதம். தரும சூத்திரங்களாகுபவை ஆபஸ்தம்பம், வைகானச ஸ்மார்த்த சூத்திரம், வாஜசனீயம் ஆகியவை. இப்படி ஒரு பெரும் இலக்கிய பின்னல் தொகுப்பையே வேத இலக்கியம் என சொல்லும் வழக்கமும் உண்டு.
 
இங்கு ஒரு முக்கிய அணி சேர்தலை காணலாம். அவை ஞான காண்டம் கர்ம காண்டம் என்ற விதத்தில் அமைகின்றன. உபநிடதங்கள் ஞான காண்டம் என்றால் கர்ம காண்ட நூல்கள் பிராமணங்களை மட்டுமன்றி அவற்றுடன் இணைத்து உருவாக்கப்பட்ட கல்ப சூத்திரங்கள் அவைகளில் வகைப்படுத்தப்பட்ட ஸ்ரௌத சூத்திரங்கள், க்ருஹ்ய சூத்திரங்கள் தரும சூத்திரங்கள் ஆகிய அனைத்தும் இணைந்தவை ஆகும். இவற்றுள் ஸ்ரௌத சூத்திரங்கள் அரச உரிமையுடன் இணைந்த யாகங்கள் குறித்தவை. கருஹ்ய சூத்திரங்கள் தனிமனித குடும்ப சடங்குகள் குறித்தவை. தரும சூத்திரங்கள் தனிமனித –சமுதாய உறவுகள் குறித்தவை. இந்த தரும சூத்திரங்களே இன்று நாம் கடுமையாக தாக்கும் ‘சாதிக்கொரு நீதி’ என்கிற கருத்தாக்கத்தை அடிப்படையாக கொண்டவை. பேரரசுகள் உருவான போது சமூக ஒழுங்கை வேண்டிய அரசர்கள் இந்த தருமசூத்திரங்கள் கற்பிக்கப்படுவதை ஆதரித்தனர். இந்த முழு தொகுப்பையும் வேதம் என அழைப்பது பொதுவில் இருந்தது என்பதை நாம் ஏற்கனவே கண்டோம்.
 
பவிழியம் என பார்த்திவ சேகரபுரம் செப்பேடும் பௌடிகம் என நச்சினார்க்கினியாரும் பௌழிய என பெரிய திருமொழியும் சொல்வது எதை? விதி விலக்காக பிராமணங்களுக்கு பிறபட்ட பவிஷ்ய புராணத்தை தன் முதல் நூலாக கொண்டிருக்கும் ஆபஸ்தம்ப சூத்திரத்தை என்கிறார் வெ.கிருஷ்ணமூர்த்தி. இந்த சூத்திர நூல் தனி ஒருவரால் எழுதப்பட்டதில்லை. யஜுர்வேத பிரிவைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதற்கு இந்த சூத்திரத்திலேயே உள் ஆதாரமாக ‘வாஜசனீய பிராமணம்’ மேற்கோள் காட்டப்படுகிறது.. இது யஜுர்வேத்த்தின் பிராமணம் ஆகும். மேலும் ஆபஸ்தம்பிய வகுப்பு அந்தணர்கள் தென்னிந்தியாவைத் தவிர வேறெங்கும் காணப்படவில்லை. ஆக பவிழியம் அல்லது பௌடிகம் அல்லது பௌழியம் எனப்படுவது ஆபஸ்தம்ப சூத்திரத்தையே குறிக்கும். வேத பண்பாட்டில் தமிழ்நாட்டுக்கென்றே தனித்தன்மையுடன் உருவான ஒன்றாக இது உருவாகியிருக்க வேண்டும்.
 
இதே போல தைத்திரியம் கிருஷ்ண யஜுர் வேதத்தைச் சார்ந்த்தாகும். தலவகாரர் என்பது க்ருஹ்ய சூத்திரத்தின் உபகர்ம பகுதியில் சொல்லப்படும் 13 மகரிஷிகளில் ஒருவரின் பெயராகும். தலவாகாரம் என்பது சாம வேத பிரிவினில் எழுந்த கௌதம தரும சூத்திரங்களை அடிப்படையாக கொண்டதாகும் என்கிறார் வெ.கிருஷ்ணமூர்த்தி.
 
ஆக பவுடியம், தைத்திரீயம், தலவாகரம் என்பவை தெளிவாக தரும சூத்திரங்களை குறிப்பவை ஆகும். அவை ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களை குறிப்பவை அல்ல. மாறாக அவற்றை அடியொற்றியதாகக் கூறி எழுந்த வாழ்வியல் சட்ட நூல்களான தரும சாத்திரங்களை குறிப்பவை ஆகும். இந்த நூல்கள் மனுவுக்கு முந்தையவையும் ஆகும். தொல்காப்பியம் வாழ்வியலை வரையறுக்கும் இலக்கண நூல் என்பதை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இது தெளிவாக விளங்கும்.
 
இனி சாமவேதத்துக்கு வருவோம். இந்த வேதத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு தனி சிறப்பான உறவு உள்ளது. நம்மாழ்வார் சாமவேத சாரமாக செய்த திருவாய் மொழியில் ‘எங்கும் எழுந்த நல் வேதத் தொலி நின்றோங்கு தென் திருப்பேரையில் வீற்றிருந்த’ என்கிறார். இங்கு ’நல் வேத்த்தொலி’ என நம்மாழ்வார் குறிப்பிடுவது சாம வேத சாகையில் வரும் கான்ங்களையே. இன்றைக்கும் தென் திருப்பேரை (வ.உ.சிதம்பரனார் மாவட்டம்) கிராமத்தின் அந்தணர்கள் அனைவரும் சாம சாகையை சேர்ந்தவரே. திராவிடத்தின் தனித்தன்மையாகிய ‘ழ’காரம் இந்த சாமசாகை ஓதுதலில் (பாடுதலில்) காணப்படுகிறது.
 
ஆக தனித்தமிழ் வேதம் என்கிற போலிப் பெருமைக்கு அப்பால் வேதம் வளர்த்த தமிழகம் என்கிற உண்மை பெருமையே நமக்கு இன்னும் சிறப்பளிக்கிறது.
 
மேலதிக விவரங்களுக்கு:
 
· வெ.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்வேதம் – ஓர் ஆய்வு, ஆய்வு வட்டக் கட்டுரைகள், சென்னை-7, 1995 பக்.51-68
 
· T.N. மகர பூஷணம் அய்யங்கார், ஸ்ரீ ஜைமினி ஸாமவேத தலவகார ஸாகையின் ஸாராம்ஸங்கள், in Vedas : Traditional and Modern Perspectives, (Gen. Editor Dr.V.Kameswari), குப்புசாமி சாஸ்திரிகள் ஆராய்ச்சி மையம், மைலாப்பூர், சென்னை, 2007
 

IMG_20180715_060913.jpg

IMG_20180715_060919.jpg

IMG_20180715_060923.jpg

IMG_20180715_060930.jpg

IMG_20180715_060934.jpg

IMG_20180715_060942.jpg

IMG_20180715_060946.jpg

IMG_20180715_060952.jpg

IMG_20180715_060956.jpg

IMG_20180715_061003.jpg

IMG_20180715_061007.jpg

IMG_20180715_061016.jpg
 Finally Concludes- எல்லாவற்றிற்கும் மேலாக தமிழில் நான்கு வேதங்கள் வடமொழி வேதங்களுக்கு முன்னரே இருந்தன எண்றும் அவை முறையே பவுடிகம், தலவாகரம், தைத்ரேயம் மற்றும் அதர்வணம் எண்றும் கா.சு.பிள்ளை போன்ற தமிழ் வேத ஆர்வாளர்கள் கூற்று அர்த்தமற்றது எனவும் துணியலாம். THIS ARTICLE COMES IN Page 51-65.
 
Comments on this book
வெ.கிருஷ்ணமூர்த்தி அவர்களை தொகுப்பாசிரியராகக் கொண்டு “ஆய்வு வட்டக் கட்டுரைகள் “என்ற வரலாற்று நூல் தமிழ் சமுதாயத்தின் நமது சமகாலப் பிரச்சினைகள் சிலவற்றின் மீதான வரலாற்று தேடலை நடத்தியிருக்கிறது.
பேராசிரியர் நா.வா.வின் நேரடி வாரிசாக மார்க்ஸீய முகாமின் இன்றைய போராளியாக வெ.கி. வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகள் அவரை அடையாளம் காட்டுகின்றன.
நூலின் முதல் பகுதியில் அடங்கியுள்ள ஏழு கட்டுரைகளும் ஏதாவது ஒரு வகயில் நமது காலத்து சமூக பிரச்சினைகள் மீதான ஆய்வை நடத்துகின்றன.
மார்க்சிய முகாமில் இருந்து வளமான வரலாற்று ஆய்வு தமிழகத்துக்கு அளிக்கப் பட்டு இருக்கிறது. – ஜனசக்தி 23-7-1995Marxist magazine
 
வெ.கிருஷ்ணமூர்த்தி அவர்களை தொகுப்பாசிரியராகக் கொண்டு ஆய்வு வட்டக் கட்டுரைகள் என்னும் நூல் வெளி வந்து ஆய்வாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தகிக்கும் சமகாலப் பிரச்சினைகளை மிகுந்த தரியத்துடன் இந்தப் பகுதிகளில் உள்ள கட்டுரைகள் விவாதிக்கின்றன.
தோழர் வெ.கியுடன் ஒருங்கிணைந்து செயல்படும் ஆய்வு வட்டம் மேலும் பல முயற்சிகளை செய்து, தமிழின ஆய்வுத்துறை வளர்ச்சிக்கு உதவது காலத்தின் நிர்பந்தமாகும். – தாமரை ஜூன் 95. cpi magazine
ஆய்வு வட்டக் கட்டுரைகள் நூலின் தொகுப்பாசிரியர் வெ.கிருஷ்ணமூர்த்தி பேராசிரியர் நா.வானமாமலையின் மாணவர்களில் ஒருவர்…. . இன்னூல் உள்ளடக்க ஆராய்ச்சி நூலாக திகழ்கிறது..
மொத்தத்தில் இத்தொகுப்பு பாரட்டப் பட வேண்டிய ஒன்றாகும். – தினமணி கதிர்.
The Book under Review is a collection of different types of articles most of which are presented by the active members of the Madras Study circle and hence the Title….
On the whole, the book is a good anthology of research papers providing fresh thoughts and new perspective. The Hindu, Aug-1, 1995.
The book also has தோழர்.செ.யோகநாதன், who is from Srilanka who had several awards in Lanka and having won 3 prizes in Tamilnadu for his Tamil Literary works in his அணிந்துரை:
தமிழ் மொழி பண்பாடு, வரலாறு மற்றும் பிற துறைகள் பற்றி ஆய்வு நெறியற்ற கத்தைகத்தையான புத்தகங்களும், கட்டுரைகளும் நிறைய வெளியாகியுள்ளன என்பதைக் குறிப்பிடுவதில் தவறு ஒன்றுமில்லை…. .
இவற்றை மீறி எழுந்த நியாயமும் உண்மையும் ஆய்வு மனோபாவமும் கொண்ட குரல்களை ஒடுக்குவதில் மிக இழிந்த போக்குகள் கையாளப்பட்டு வந்திருக்கின்றன. ஆனாலும் இந்த மீறற்குரல்களே தமிழையும் தழிழியலையும் எல்லாத் துறைகளையும் ஆரோக்கியமாக வளர்ப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன. இன்றும் அவ்வழியைஅத் தொடர்கின்றன.
தமிழ் ஆய்வை ஒரு திருவிழாவாகவும் ஆதாரம் ஏதுமற்ற ஆய்வுகளின் புகழ் பாடலாகவும் மாற்றிய காரணத்தால் நமது முன்னேற்றம் எப்போதோ முடமாக்கப்பட்டு விட்டது. இதே வேளையில் வேற்று மொழி பேசும் அறிஞர்கள் தமிழ் கற்று, அதன் பல்வேறு துறைகளையும் ஆய்வு செய்யும் போக்கும் உருவாயிற்று. சர்வதேச அள்விலான ஆய்வுநெறிகள் இவ்விதம் தமிழ் ஆய்வாளர்களில் வெகுசிலரையும் கவர்ந்து கொண்டது.
ஆய்வுநெறியின் ஆதாரமே விஞ்ஞான பூர்வமானது. எவ்விதம் விஞ்ஞானம் உண்மையை ஆதாரபூர்வமாக ஆய்ந்து நிருபிக்கிறதோ, அப்படியே செம்மையான ஆய்வு நெறியும் உண்மையைத் தேடி அதை உறிதிப் படுத்துகிறது; நிறுவிகிறது.
உணர்ச்சி வசப்பட்டு வழிபாட்டு மனோபாவத்துடன் ஆய்வுத்துறையில் நின்றவர்கள், விஞ்னான அடிப்படையில் செம்மையுற ஆய்வு செய்தவர்களை, எவ்விதம் புறந்தள்ளி தடைகளை உண்டாக்கி, இருட்டடிப்புகள் செய்தனர் என்பது இன்னமும் பூரணமாக வெளிவராத வரலாறு.
 
செம்மையான, கற்றுத்தேறிய இத்தகைய ஆய்வாளர்களுக்கு எதிராக இன்றளவும்-மேலே காட்டிய வெற்றுத்தனங்கள் உடையோர் கடுமையான இடையூறுகளை விளைவித்து வருகிறார்கள். இதனாலேயே தமிழும் தமிழியலும் பிற துறைகளும் முன்னேற முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன. பக்கம்-ii,iii
 
பாவணர் கருத்தை இங்கு தருகிறேன்.
 
நால்வேதம் அல்லது நால்மறை, ஆரங்கம் ஆகமம் என்பன எல்லாம் ஆரிய நூல்களே என்பதும், திருக்குறள் தவிர இப்போதுள்ள பண்டை நூல்களெல்லாம் அந்தணர் என்பதும் பிரமணரையே குறிக்கும் என்பது சரியே.
பக்க- 102 தமிழர் மதம்.தேவநேயன்.
 
இதில் பாவணர் திருக்குறள் தவிர என்பதும் உளரலே


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard