"குடிப்பது தவறில்லை. கள் குடிச்சுச் செத்தவங்க எவ்வளவு பேர், சொல்லுங்களேன்? நான் குடிக்கிறதில்லை. எப்படியோ அந்தப் பழக்கம் எனக்கு ஏற்படாமே இருந்திருக்கு. ஆனால், நண்பர்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறேன்." எனும் ஈவெராமசாமி தொடர்ந்து சாராயம் குடிப்பதை மகா ஒழுக்கமுள்ள விஷயமாக நினைத்து முட்டாள்தனமாக கூறியது. "சனங்கள் சோம்பேறியாய்ஆனதற்குக் காரணமே மதுஒழிப்புத்தான். கூலி உயரக் காரணம் இதுதான். சினிமாவுக்குப் போறதைவிட இது நல்லது தான்”. (பெரியார் ஈ.வெ.ரா.வின் சிந்தனைகள், தொகுதி-2, பக்கம் 1227. பதிப்பாசிரியர். வே. ஆனைமுத்து. நேர்காணல் தேதி 27.12.1972)
“ஒரு மனிதனைப்பார்த்து நீ உன் மனைவியிடம் கலவி செய்யக் கூடாது என்று சொல்வதற்கும் நீ மது அருந்தக்கூடாது என்று சொல்வதற்கும் என்ன பேதம் என்று கேட்கின்றேன்.” - ஈ.வெ.ராமசாமி (விடுதலை 18.3.71)
"மதுவிலக்குக்காக தென்னை மரத்தோப்பில் 500-க்கும் மேற்பட்ட மரங்களை பெரியார் வெட்டினார்; இப்போது டாஸ்மாக் சரக்கு விற்பனை 29 ஆயிரம் கோடி ரூபாய் என்றால், அது தமிழ்நாட்டிற்குப் பெருமையா? சிறுமையா? இது பெரியாருக்கு எதிரானது என்பதில் மகிழ்ச்சி கொள்ள முடியுமா?"
“இன்றைய மதுவிலக்கு ஒரு விஷ நோய் பரவல் போன்ற பலன் தருகின்றது. அது தொற்று நோய் போலவும் கேடு செய்கின்றது. கடுகளவு உலகறிவு உள்ளவர் எவரும் மதுவிலக்கை ஆதரிக்க மாட்டார்கள் என்பது எனது கருத்து, முடிந்த முடிவு. இதை யார் சொல்கிறார் என்றால் மதுவிலக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு இணையற்ற ஈடற்ற பிரச்சாரகர் என்று காந்தியாலும், இராஜாஜியாலும் பட்டம் பெற்று தனது நிலத்தில் இருந்த 500தென்னைமரங்களை வெட்டிச் சாய்த்தவன் ஆகிய இராமசாமி (நான்) சொல்கிறேன். - ஈவெராமசாமி -விடுதலை 18.3.71)
உலக அறிவு இல்லாதவர்கள் தான் மதுவிலக்கை ஆதரிப்பார்களாம். என்னே பகுத்தறிவு. அடுத்து ஈவெராமசாமி, வழிபாட்டுத்தலங்களோடு கள்ளுக்கடைகளை ஒப்பிடுகிறார். "பத்து கள்ளுக்கடைகள் மூடப்படுவது ஒரு கோயிலைத் திறப்பதற்குச்சமம். கோயிலை மட்டும் வைத்துக் கொண்டு கள்ளுக்கடைகளை மூடவேண்டுமா?"- ஈவெராமசாமி - விடுதலை 20.6.1973)