New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும்! – சாலமன் பாப்பையா


Guru

Status: Offline
Posts: 24636
Date:
எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும்! – சாலமன் பாப்பையா
Permalink  
 


எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும்! – சாலமன் பாப்பையா

டிவி. சேனல்களில் பயனுள்ள பட்டிமன்றங்கள் வாயிலாக தமிழகம் அறிந்த இந்த பேராசிரியர் மதுரை கம்பன் கழகத் தலைவர். இன்று உலகமே நாடும் சம்ஸ்க்ருதம் பற்றிப் பேசுகிறார்.

எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. சம்ஸ்க்ருத அறிஞர்கள் சபை மேடையில் நான் இடம்பெறுவது “இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை” என்ற கேள்வியைத்தான் எழுப்பும். படிக்கும் காலத்தில் சம்ஸ்க்ருதம் கற்க எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. மதுரையில் 10 ஆண்டுகள் ஒரு வைணவப் பெரியாரிடம் சம்ஸ்க்ருதம் கற்றேன். அது 1953ல். அதோடு சரி. இளமையில் வறுமை காரணமாக மேலும் சம்ஸ்க்ருதம் படிக்க முடியாமல் போனது. ஹிந்தி மொழியையே படிக்காதே என்ற சூழலில் சம்ஸ்க்ருதம் படிப்பது எப்படி? மொழி வெறுப்பு நிறைந்த கெட்ட காலம் அது. ஆனால் எனக்கு சம்ஸ்க்ருதத்திடம் வெறுப்பு இருந்ததே கிடையாது. “இந்த பிறவியில் எனக்கு சம்ஸ்க்ருதம் கிடையாது” என்பது மீனாட்சி அம்மையின் திருவுள்ளம் போலும்.

தமிழ் ஒரு கண் என்றால் சம்ஸ்க்ருதம் மற்றொரு கண். இரண்டு கண்களும் முக்கியம். “பார்வை” சரியாக இருக்க வேண்டுமானால் இரண்டு கண்களும் தேவை. இந்திய மண்ணில் விஷயம் தெரிந்தவராய் உருவாக ஒருவருக்கு இந்த இரண்டும் வேண்டும்.

எம்.ஏ. (தமிழ்) படிக்கும் போது, “வட எழுத்து நீக்கி வருவது சொல்” என்ற பொருள்பட இலக்கண சூத்திரம் படித்தேன். அதாவது தொல்காப்பியருக்கு முன்பே தமிழில் வடமொழி இருந்திருக்கிறது. எனவே தான் “அதை நீக்கி” என்று கூறியிருக்கிறார். ஆக, தமிழில் சம்ஸ்க்ருதம் இருந்தது. பிற்காலத்தில் தேவநேய பாவாணர், பரிதிமாற் கலைஞர் உள்ளிட்டோர் “ஸ்” என்கிற வடமொழி எழுத்தைத் தவிர்க்க “சமக்கிரதம்”, “சமற்கிரதம்” என்றெல்லாம் சொல்லிக் காட்ட வேண்டி இருந்தது. காரணம் “ஸ்” என்கிற வடமொழி எழுத்தாம்.



அது சரி “வடமொழி” என்றால்? சிலர் வடக்கிலிருந்து வந்ததால் என்று விளக்கம் சொல்வதுண்டு. ஆனால் வட (vata) என்ற சொல்லுக்கு ஆலமரம் என்று பொருள். ஆலின் கீழ் அமர்ந்து தான் உயரிய ஞான உபதேசங்கள் அருளப் பட்டன. அவற்றைக் கொண்ட மொழி; எனவே வடமொழி என்பேன். இது “பிரிட்டானிக்கா” கலைக்களஞ்சியம் தந்துள்ள விளக்கம். இது நமக்குத் தெரியாமல் போயிற்றே! அவன் சொல்லி நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது பாருங்கள்!!

ஏகப்பட்ட இலக்கியங்கள் உடையது சம்ஸ்க்ருதம். எனவே அது ஞானமொழி. ராமாயணமும் மகாபாரதமும் சான்று. உலகில் மலையும் நதியும் உள்ள காலமெல்லாம் ராமாயணம் நின்று நிலைக்கும். “நல்லான் ஒருவன் வேண்டுமென்றால் ராமன் அங்கே இருக்கிறான்” என்பதல்லவா பழமொழி? சங்க நூல்களிலும் ராமாயண மகாபாரதம் காட்சி தருகிறது. புறநானூற்றுப் புலவர்களின் பெயர்களையே பாருங்களேன்! வான்மீகியார், நெய்தற்காகி, பாரதம் பாடிய பெருந்தேவனார், கலைக்கோட்டு ஆசான்… சம்ஸ்க்ருத இலக்கியம் பெரிய விஷயங்களைப் பேசுவது, அந்த ஞான அலை தமிழுக்குள் பாய்ந்திருக்கிறது. வள்ளுவர் சமஸ்க்ருத இலக்கியம் படித்திருப்பார். “நிரம்பிய நூல்”, “பல கற்றும்” போன்ற அவர் வார்த்தைகளைப் பாருங்கள். அவற்றைப் படித்திராமல் பொத்தம் பொதுக்கென பேசுபவர் அல்ல அவர். பிறரையும் “படி” என அறிவுறுத்துகிறார்.

தமிழ் போலவே சமஸ்க்ருதமும் செம்மொழி. ஆக, சம்ஸ்க்ருதம் படிப்பது தமிழுக்குத் தொண்டு. இப்படிப் பலரும் அறிந்த மொழி, அனைவரும் பாராட்டும் மொழி, பதவிப் போட்டி காரணமாக அனைவரும் படிக்க முடியாமல் செய்யப் பட்டிருக்கிறது. ஆனால் எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும். குறைந்த பட்சம் – ஆம் – குறைந்த பட்சம் பகவத் கீதையாவது படிக்கணும். சம்ஸ்க்ருதம் படிக்க வாய்ப்புக் கிடைத்த ஒவ்வொருவரும் புண்ணியவான். அன்னவர்கள் அனைவரையும் போற்றுகிறேன்.

(2012ம் ஆண்டு ஆகஸ்டு 19 அன்று சென்னை சம்ஸ்க்ருத பாரதி கருத்தரங்கில் அவர் நிகழ்த்திய உரையில் இருந்து).

நன்றி: விஜயபாரதம் 7.9. 2012



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
RE: எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும்! – சாலமன் பாப்பையா
Permalink  
 


கந்தசாமி திராவிட உரிமை கட்சியின் தலைவர். சிறு வயதுமுதல் பெரியாரின் "பேச்சை" க்கேட்டு வளர்ந்தவர், தீவிர பிராமண எதிர்ப்பாளர். தீண்டாமை ( அது பிராமணர்களிடையே ஒழிந்து 70 வருடங்களாயிற்று) என்பதை வைத்து இன்னும் பிராமணர்களை வசை பாடுபவர்.

ஒருநாள்.

என்னங்க உங்களைப்பார்க்க கட்சிக்காரங்க வந்திரிக்காங்க.

இதோ வரேன்னு சொல்லு தேன்மொழி.

தேன் மொழி அவருடைய மனைவி ஏதோ தலைவிதியாக இவரை மணந்துகொண்டாள். சிறந்த சிவ பக்தை. அவருடைய தந்தை ஒரு பெரிய பிராமண ஜமீந்தாரிடம் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்தவர்.

"எல்லோரும் இருங்க. ஐயா இதோ வந்துடுவாரு."

சரிங்கம்மா.

கந்தசாமி வெளியில் வந்தார். கட்சி நிர்வாகிகளிடமும், முக்கிய தொண்டர்களுடனும் அடுத்த கட்டமாக CAA போராட்டத்தை எப்படி எடூத்ச்செல்வது என்று விவாதித்தார்.

ஐயா குடிக்க கொஞ்சம் தண்ணி தரீங்களா?

தேன்மொழி ஒரு சொம்பில் தண்ணி கொண்டுவா.

தேன் மொழி தண்ணீர் கொண்டு வந்தாள்.

அடுத்த 10 நிமிடங்களில் சந்திப்பு முடிந்தது. வந்தவர்கள் அனைவரும் கந்தசாமியிடம் கை குலுக்கிவிட்டு சென்றனர்.

உள்ளே வந்த கந்தசாமி கைகளை நன்றாக சோப்புபோட்டு கழுவிவிட்டு " தேன்மொழி குடிக்க தண்ணீர் கொண்டு வா" என்றார்.

தேன்மொழி தண்ணீர் கொண்டு வந்தாள். அதே சொம்பு.

கந்தசாமி " அதே சொம்பிலுள்ள மிச்சத்தணிய கொண்டு வந்து தரியே. உனக்கு விபரமே இல்லையா? ஊரெல்லாம் கொரோனா வைரஸ் பீதியிருக்கு. அதான் நான் கையை சோப்புபோட்டு கைய கழுவினேன். நீ என்னடான்னா அதே சொம்ம்புல தண்ணி தரியே. எனக்கு ஏதாவது கிருமி தொத்திக்கிருச்சுன்னா என்னவாகும்"

தேன்மொழி : நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே!

கந்தசாமி : என்ன சொல்லு

இதைத்தான் அந்தக்கால பிராமணர்கள் செஞ்சாங்க. ஆரோக்கியமாக இருந்தாங்க. அவர்கள் ப்ளேக் போன்ற தொற்று வியாதிகளால் இறந்ததே இல்லை. நன்றாக யோசித்துப்பாருங்க. வீட்டில் வேலை செய்யும் ஒருவர் வெளியில போயிட்டு வந்தா கை கால்களை சுத்தம் செய்துவிட்டு ஏன் வந்தார்கள்? பிராமணர் வீட்டில் யார் வெளியிலிருந்து வந்து நீரோ , மோரோ குடித்தால் அதை கழுவிவிட்டு அதற்காகவே தனியாக வைத்திருந்தார்கள். ஏன்? அது தீண்டாமை அல்ல. வெளியிலிருந்து வரும் தொற்று நோய்க்கிருமிகள் பரவாமலிருக்கத்தான். ஆனல் அதை நீங்கள் " தீண்டாமை" என்று அரசியலாக்கிவிட்டீர்கள்.

ஆனால் அதே தீண்டாமையை நீங்கள் மருத்துவர் சொன்னாரென்று Prevention என்று கடைப்பிடிக்கிறீர்கள்.

என் தந்தை பிராமணர் வீட்டில் வேலை செய்தார். நானும் அவர்கள் வீட்டுப்பெண்களும் விளையாடுவோம். அவர்கள் வீட்டுக்கு விலக்காக இருக்கும்போது வீட்டில் தனியறை, தனி தட்டு, டம்ளர் என்று வைத்துவிடுவார்கள். அது தீண்டாமையா? உண்மையில் அந்த 3 நாட்கள் கழிவு இரத்தத்தினால் கிருமிகளிருக்கும், அது வீடினுள் பரவாமல் தடுக்க இவ்வாறு செய்தார்கள். உட்னே அதை நீங்கள் பெண் அடிமைத்தனம் என்றீர்கள். சானிட்டரி நாப்கின்ஸ் என்று ஏன் பெயர் வைத்தார்கள்? கிருமிகள் பரவாமல் தடுக்கும் நாப்கின் என்பதால் தானே! அந்தக்காலத்தில் சானிட்டரி நாப்கின்கள் கிடையாது. எனவே அவர்களை தனித்து வைத்தார்கள். இதைத்தான் இந்தக்காலத்தில் கிருமி தொற்றுள்ளவர்களை Quarantine என்று தனியாக வைக்கிறார்கள். நீங்கள் அது தீண்டாமை என்று போராடுங்கள் பார்க்கலாம்.

இன்னுமொரு விபரம் சொல்கிறேன். அவர்கள் வீட்டில் முதியவர்கள் தங்களது துணிகளை தாங்களே துவைத்துக்கொள்வார்கள், தனியாக சமைத்துக்கொள்வார்கள். ஹோட்டலில் சாப்பிட மாட்டார்கள் அதை "மடி" என்பார்கள். அவர்களை யாரும் தொட்டு பேசக்கூடாது. ஏன் அவர்களின் பேரன் பேத்திகளே தொட முடியாது. ஏன் தெரியுமா? முதியவர்களுக்கு immunity குறைவாக இருக்கும். வெளிக்கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். அதற்காகத்தான் இதைக்கடைப்பிடித்தார்கள். அதையேதான் இப்போது மருத்துவர்களும் முதியவர்கள் எங்கும் வெளியில் போகும்போது கவனாமக இருக்கவும் என்கிறார்கள்.

ஒரு காரியத்தை மருத்துவ ரீதியாக சொன்னால் கடைப்பிடிக்கும் நீங்கள் அதையே பிராமணர்கள் அந்தக்காலத்தில் அவர்களின் வழக்கமாக கொண்டிருந்ததை ஏன் கொச்சைப்படுத்தணும்.? இனியாவது பிராமணர்களை திட்டாமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் தார்மீகம்.

கந்தசாமி கந்தலாகி நின்றார்.

எண்ணமும் எழுத்தும்

வெங்கட். Whatsapp forward



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard