New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தாமஸ் கட்டுக்கதை - தமிழ்ச்செல்வன்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
தாமஸ் கட்டுக்கதை - தமிழ்ச்செல்வன்
Permalink  
 


தாமஸ் கட்டுக்கதை - தமிழ்ச்செல்வன்

 சென்னையைச் சேர்ந்த பிரபலமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’, கத்தோலிக்க அப்போஸ்தலர்களுள் ஒருவராகக் கொண்டாடப்படும் புனித தாமஸ்ஸின் கதையைத் திரைப்படமாகத் தயாரிக்கப்போவதாகச் செய்திகள் வந்துள்ளனஅமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள தார்லின் எண்டெர்டெய்ன்மெண்ட் (Dharlin Entertainment)என்கிற நிறுவனத்துடன் இணைந்துகேரளாசென்னை மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் படப்பிடிப்புகள் நடத்தப்படும் என்றும்இந்திய மற்றும் சர்வதேசக் கலைஞர்கள் பங்குபெறுவார்கள் என்றும், 2018 ஆரம்பத்தில் திரைப்படம் வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறதுதிரைப்படத்தின் பெயர்கமிஷண்ட்’ (Commissioned) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதுஇந்தத் திரைப்படம் அப்போஸ்தலர் தாமஸ்ஸின் இந்தியப் பயணத்தைப் பற்றியும்அவர் சென்னையில் ஒரு பிராம்மண புரோகிதரால் கொல்லப்பட்டு மடிந்தது பற்றியும் விரிவாகச் சொல்லும் என்றும் கூறப்படுகின்றது(Deccan Chronicle dated 1 May 2017)
 
அப்போஸ்தலர் தாமஸ் கதையைத் திரைப்படமாக எடுக்கவிருப்பதாக 2008ம் ஆண்டே செய்திகள் வந்தனசென்னை மயிலாப்பூர் தலைமை மறைமாவட்டம்,அப்போஸ்தலர் புனித தாமஸ் இந்தியா டிரஸ்ட் என்கிற அமைப்பின் பெயரில் ரூபாய் 50 கோடி செலவில்புனித தாமஸின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகத் தயாரிக்கப்போவதாக அறிவித்தது(Deccan Chronicle dated 24 June 2008)
 
அந்த அறிவிப்புக்கு முக்கிய காரணங்கள் இரண்டு.
 
முதலாவதாகபோப் இரண்டாம் ஜான்பால் இந்தியாவிற்கு 1986 மற்றும் 1999ஆகிய ஆண்டுகளில் வந்தார்அந்த இரண்டு பயணங்களின் போதும் இந்தியாவில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் புனித தாமஸ் பற்றி அலட்டிக்கொள்ளவேயில்லைசொல்லப்போனால் ‘புனித தாமஸ்’ பற்றி ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை என்று சொல்லலாம்.
 
கிறிஸ்தவர்கள் முக்கியமாகக் கருதும் அப்போஸ்தலர்களுள் ஒருவரான புனித தாமஸ் உண்மையிலேயே இந்தியப் பயணம் மேற்கொண்டுகேரளம் மற்றும் தமிழகக் கடற்கரை கிராமங்களில் வாழ்ந்து இறுதியாகச் சென்னையில் கொல்லப்பட்டு இறந்தவர் என்றால்கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் போப் அவரைப் பற்றிப் பேசாமல் இருந்திருப்பாரா?இத்தனைக்கும் அவர் 1986ம் ஆண்டு வந்தபோதுசென்னையில் சாந்தோம் சர்ச்சுக்கும்புனித தாமஸ் மலை (உண்மைப் பெயர் – பிருங்கி மஹரிஷி தொடர்பால் ‘பிருங்கி மலை’ – பின்னர் பரங்கிமலை என்று மருவியது)சர்ச்சுக்கும் வந்து பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார்ஆகவேஇரண்டு முறை வந்தபோதும் போப் இரண்டாம் ஜான்பால் புனித தாமஸ் பற்றிப் பேசவில்லை.
 
இரண்டாவதாகபோப் இரண்டாம் ஜான் பாலுக்குப் பிறகு பதவியேற்றுக்கொண்ட போப் பதினாறாம் பெனடிக்ட் 27 செப்டம்பர் 2006 அன்று வாத்திக்கனில்புனித பீட்டர் சதுக்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில்அப்போஸ்தலர் புனித தாமஸ் சிரியா மற்றும் பெர்ஷியா ஆகிய நாடுகளில் மதமாற்றத்தில் ஈடுபட்டுவிட்டுப் பின்னர் இந்தியாவின் மேற்குப் பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான்)மதமாற்றம் செய்தார்அங்கிருந்து கத்தோலிக்கக் கிறிஸ்தவம் இந்தியாவின் தென்பகுதிகளை அடைந்தது என்றுபுனித தாமஸ் தென் இந்தியாவுக்கு வரவில்லை என்று தெளிவாகப் புரியுமாறுபேசினார்(Hindustan Times dated 23 November 2006)
 
கேரளம் மற்றும் தமிழகக் கத்தோலிக்கச் சபைகளுக்கு போப் பெனடிக்டின் பேச்சு இடிபோல இறங்கியதுஇத்தனை வருடங்களாக அவர்கள் கட்டமைத்து வந்த புனித தாமஸ் கதைஉண்மையிலேயே கட்டுக்கதை என்று நிரூபிப்பது போல போப் பெனடிக்டின் பேச்சு இருக்கவேஅவர்கள் அவசரம் அவசரமாக வாத்திக்கனுடன் தொடர்புகொண்டு தங்கள் பிரச்சினையைத் தெரிவிக்கவே,வாத்திக்கன் தலைமை தங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் போப்பின் பேச்சை மாற்றி அமைத்ததுஇருந்தும் அவர் பேச்சு வெளியில் செய்திகள் மூலம் முன்னரே வந்துவிட்டதை எப்படி மாற்றி அமைக்க முடியும்(Rediff.com dated 29 November 2006)
 
ஆகவேசென்னை மயிலை தலைமை மறைமாவட்டம் புனித தாமஸ் பற்றிய திரைப்படம் ஒன்றை எடுத்துத் தன்னுடைய கட்டுக்கதைக்கு மேலும் வலுச் சேர்க்க முனைந்ததுபுனித தாமஸ்ஸின் கட்டுக்கதைக்கு மேலும் கூடுதலான நம்பகத்தன்மையைச் சேர்க்கஅவர் சென்னை மயிலாப்பூர் கடற்கரையில் திருவள்ளுவருடன் அளவளாவினார் என்றும்திருவள்ளுவர் தாமஸ்ஸின் சீடர் என்றும்அதனால்தான் திருக்குறளில் விவிலியத்தின் தாக்கம் காணப்படுகின்றது என்றும் புனைந்துரைகளைஏற்கெனவே பரப்பிக்கொண்டிருந்த தெய்வநாயகம் என்னும் ஒரு மதமாற்றப் பிரசாரகரை மீண்டும் பயன்படுத்திக்கொண்டனர்.திருக்குறளில் விவிலியத்தின் தாக்கம் உள்ளது என்கிற புனைந்துரையை முதன்முதலில் பரப்பியவர் 19ம் நூற்றாண்டில் மதமாற்றம் புரிய வந்த ஜி.யு.போப் என்கிற பாதிரி ஆவார்அவருடைய போலித்தனமான வழியைப் பின்பற்றித்தான் தெய்வநாயகமும் நடந்துள்ளார்.
 
தமிழர் சமயம் பற்றிய திரிப்பு வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும்தெய்வநாயகம் ‘விவிலியம்திருக்குறள்சைவ சித்தாந்தம் – ஒப்பு ஆய்வுஎன்கிற ஒரு நூலை 1985-86ல் எழுதி வெளியிட்டு இந்தப் புனித தாமஸ் கட்டுக்கதையை உண்மையென நிலைநாட்ட முயற்சி செய்தார்ஆனால் அருணை வடிவேல் முதலியார் என்கிற தமிழறிஞர் மூலம் தரமான மறுப்பு நூல் ஒன்றை வெளியிட்டு தருமை ஆதீனத்தைச் சேர்ந்த அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தினர்தெய்வநாயகத்தின் சதியை முறியடித்தனர்.அந்த நூல்: ‘விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல்’ – அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம்தருமபுரம் ஆதீனம்- 1991.
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இங்கே முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்னவென்றால்தாமஸ் என்று ஒருவர் தமிழகத்துக்கு வந்தார் என்பதற்கோஇங்கே ஒரு பிராம்மணர் அவரைக் கொன்றார் என்பதற்கோ எந்த வரலாற்றுச் சான்றும் கிடையாது. ஆனால்போர்ச்சுகீசியர் படையெடுத்து வந்து ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை அழித்தனர் என்பதற்கும்பிருங்கி மலையில் இருந்த கோவிலையும் அழித்தனர் என்பதற்கும் கல்வெட்டு ஆதாரங்கள் உட்படப் பல ஆதாரங்கள் இருக்கின்றனசொல்லப்போனால்சாந்தோம் சர்ச்சிலும்அதன் அருகில் உள்ள அருங்காட்சியகத்திலும் பழைய கபாலீஸ்வரர் கோவிலின் தூண்கள் மற்றும் சில இடிபாடுகள் இன்னும் இருக்கின்றனகோவில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு அந்த இடத்தில்தான் சர்ச்சு கட்டப்பட்டுள்ளது என்கிற உண்மையைப் பறைசாற்றும் விதமாக அவை இன்றும் சர்ச்சுக்குள்ளேயே காட்சியளிக்கின்றன.டாக்டர் நாகசாமி போன்ற தொல்லியல் நிபுணர்களும் இந்த உண்மையை உறுதிப்படுத்தியுள்ளனர்தமிழக இந்து அறநிலையத்துறையேதற்போதைய கபாலீஸ்வரர் கோவிலின் நுழைவாயிலில் இவ்வுண்மையைக் கல்வெட்டில் பதிய வைத்துள்ளது. எனவேஇந்தத் தாமஸ் என்கிற கதாபாத்திரத்தை உருவாக்கியதே பாரதத்தின் தென்பகுதியில் உள்ள இந்துக்களை மதமாற்றம் செய்யத்தான்.
 
 
myth_of_st_thomas.jpg
தாமஸ் இங்கு வந்து திருவள்ளுவருக்கு குருவாக இருந்தார் என்றும்திருவள்ளுவர் தாமஸிடம் பைபிள் கற்று,பின்னர் பைபிளில் உள்ள பல கருத்துக்களின் அடிப்படையில் திருக்குறளை இயற்றினார் என்றும் கதை கட்டிவிட்டதுதான் தமிழுக்குப் பங்குத் தந்தைகளின் பங்களிப்புபதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றாகும் திருக்குறள்நம்மிடமுள்ள வரலாற்றுச் சான்றுகளை வைத்துப் பார்த்தால் திருவள்ளுவர் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருப்பார் என்று தெரிய வருகிறதுமேலும் இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயற்றப்பட்ட கம்ப ராமாயணம்பெரிய புராணம் ஆகியவற்றில் திருக்குறள் கருத்துக்கள் காணப்படுவதும்,கிறிஸ்துவம் பற்றிய ஒரு தகவலும் இல்லாமல் இருப்பதுமேஇவர்களின் தாமஸ்கதை சரியான ஏமாற்று வேலை என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.மயிலையில் உள்ள புனித தாமஸ் தேவாலயத்தின் சுவர்களில் பதினோராம் நூற்றாண்டு ராஜேந்திரச் சோழனின் கல்வெட்டுக் குறிப்புகள் இருந்து பின்னர் அழிக்கப் பட்டுள்ளனகிறிஸ்தவர்களின் தாமஸ் கூத்தை ‘புனித தாமஸ் கட்டுக்கதையும் மயிலை சிவாலயமும்’ என்ற புத்தகத்தின் மூலம் ஈஸ்வர் சரண் என்கிற ஆராய்ச்சியாளர் தோலுரித்துக் காட்டியுள்ளார்வேதம் வேதபிரகாஷ் என்கிற வரலாற்று ஆய்வாளரும்தன்னுடைய ‘புனித தாமஸ் கட்டுக்கதை’ என்கிற புத்தகத்தில் கிறிஸ்துவர்களின் சூழ்ச்சியை நிரூபித்துள்ளார்.ஈஸ்வர் சரண் எழுதியுள்ள The Myth of St.Thomas and Mylapore Shiva Temple என்ற புத்தகத்தை அவசியம் படியுங்கள்அதற்கு பெல்ஜியம் நாட்டு வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான கோன்ராட் யெல்ஸ்ட் எழுதியுள்ள முன்னுரையும் படிக்க வேண்டிய ஒன்று.1
 
இருப்பினும்தாமஸ் கட்டுக்கதையைத் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட முடிவு செய்த மயிலை மறைமாவட்டம் தெய்வநாயகத்தின் மூலமாக தாமஸ் கட்டுக்கதை மீண்டும் புதிய வேகத்துடன் பரவத் தொடங்கியது
 
அந்தத் திரைப்படத்தின் துவக்க விழாவில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு துவக்கி வைத்துப் பேசினார்.ஜி.யு.போப்பை சிலாகிக்கும் கருணாநிதிதிருக்குறளை நன்கு கற்றறிந்து அதற்கு உரையும் எழுதிய கருணாநிதிதன்னுடைய துவக்க விழா உரையில்புனித தாமஸ்-திருவள்ளுவர் சந்திப்பைப் பற்றியோ அல்லது திருக்குறளில் விவிலியத்தின் தாக்கம் உள்ளதைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லைஅவை உண்மைகளாக இருந்திருந்தால் பேசாமல் இருக்கக்கூடியவரா அவர்ஆனால்கிறிஸ்தவர்களைத் திருப்திப படுத்தி அவர்கள் ஓட்டுகளைப் பெறவேண்டும் என்கிற காரணத்துக்காக புனித தாமஸை ஒரு பிராம்மணர் கொன்றார் என்கிற கட்டுக்கதையைப் பற்றி மட்டும் பேசினார்.பல்வேறு ஆதாரங்களும் சான்றுகளும் உடைய ராமபிரானின் வரலாற்றைக் கேள்விக்குள்ளாக்கி ராமாயண சரிதத்தின் உண்மைத் தன்மையைப் பற்றிக் கேள்விகள் எழுப்பிய கருணாநிதிஒரு துளி கூட ஆதாரமோ சான்றோ இல்லாத புனித தாமஸ்ஸின் வரலாற்றைப் பற்றி ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை.(Rediff.com dated 4 July 2008)
 
திரைப்படத் தயாரிப்பைப் பற்றிய அறிவிப்பைச் செய்துஅதற்கு முதலமைச்சர் தலைமையில் துவக்க விழா நடத்திய பிறகும்எந்த காரணத்தாலோ மயிலாப்பூர் மறைமாவட்டம் அதன் பிறகு அந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கவில்லைஅவர்களின் தயக்கத்திற்கு புனித தாமஸ்ஸின் இந்தியப் பயணம் பற்றி வாத்திக்கனே நம்பிக்கை தெரிவிக்கவில்லை என்பதே முக்கியக் காரணமாக இருக்க வேண்டும்மேலும்பின்வரும் உண்மைகளும் காரணங்களாக இருக்கலாம்:
 
·         1729ம் ஆண்டு மயிலாப்பூர் மறைமாவட்டத் தலைமைப் பாதிரியார் சாந்தோம் சர்ச்சில் உள்ள கல்லறை புனித தாமஸ்ஸுடையதுதானா என்கிற சந்தேகத்தை எழுப்பிரோமானிய சடங்குமுறைச் சபைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார்ஆனால் அவருடைய சந்தேகத்தை நிராகரித்தோ அல்லது சாந்தோமில் உள்ளது தாமஸ்ஸின் கல்லறைதான் என்பதை உறுதி செய்தோ ரோமானியச் சபை பதில் எதுவும் அளிக்கவில்லை.
 
·         1886ம் ஆண்டு போப் பதிமூன்றாம் லியோவும், 1923ம் ஆண்டு போப் பதினொன்றாம் பையஸும்புனித தாமஸ் இறுதியாக சிந்து நதிக்கு அப்பால் உள்ள இந்திய எல்லைக்கு (தற்போதைய பாகிஸ்தான்)வந்தார் என்றுதான் கூறியிருக்கிறார்கள்அதாவது 2006ல் போப் பெனடிக்ட் கூறியதும் அவர்கள் கூறியதும் ஒன்றேஆகவேதாமஸ் தென் இந்தியாவுக்கு வந்தார் என்பது வெறும் பொய் என்பதே உறுதியாகின்றது.   
 
·         பொது ஆண்டு 52ல் அப்போஸ்தலர் தாமஸ் கேரளக் கடலோரக் கிராமமான கொடுங்கல்லூரில் வந்து இறங்கினார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று வாத்திக்கன் தலைமையகம் 13 நவம்பர்1952 அன்று கேரள கத்தோலிக்க சபைக்குத் தகவல் அனுப்பியுள்ளது.2
 
இந்த மாதிரியான சூழ்நிலையில் தாமஸ் கட்டுக்கதையைஉண்மையான வரலாறாகக் கட்டமைக்கமயிலை கத்தோலிக்கச் சபை மேலும் முயற்சி செய்வது பரிதாபத்திற்குரியதுஆனால் இவ்வாறான முயற்சிகள் மூலம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் மதமாற்ற நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த நினைக்கலாம்அதற்குத் திரைப்படங்கள் பயனுள்ள வழிவகையாகவும் அமையக்கூடும்.
 
எனவேதற்போது எடுக்கப்படும் இந்தத் திரைப்பட முயற்சியை தேசப்பற்றும் மதநல்லிணக்க விருப்பமும் கொண்ட இந்தியக் குடிமக்கள் அனைவரும் கடுமையாக எதிர்த்து முறியடிக்க வேண்டும்ஹிந்து இயக்கங்களும் அமைப்புகளும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அதிபர்களான பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோரிடம் விஷயத்தை எடுத்துச் சென்றுஉண்மையான வரலாற்றை எடுத்துக்கூறிமதநல்லிணக்கத்திற்கு ஆபத்தாக முடியும்,போலியான வரலாற்றை நிலைநிறுத்த முயலும் இந்த முயற்சிக்குத் துணைபோக வேண்டாம் என எச்சரிக்க வேண்டும்.
 
இந்தத் திரைப்படத் தயாரிப்பைக் கைவிடுவது சிவாஜி புரொடக்ஷன்ஸ்ஸுக்கு மட்டுமல்லாமல்மயிலைக் கத்தோலிக்க மறைமாவட்டத்திற்கும்கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும் நல்லது.
 
அடிக்குறிப்புகள்:
 
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard