New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீதிமன்றத்தில் பொய்கள் – இவான் அம்புரோஸ்


Guru

Status: Offline
Posts: 24625
Date:
நீதிமன்றத்தில் பொய்கள் – இவான் அம்புரோஸ்
Permalink  
 


நீதிமன்றத்தில் பொய்கள் – இவான் அம்புரோஸ்

 

 

Yvonபிஷப் இவான் அம்புரோஸ் பண விசயத்தில் பல ஊழல்கள் செய்துள்ளார். மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதை மறைப்பதற்காக பல நாடகங்கள் ஆடுகிறார். அவரது ரகசியங்கள் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகவே ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்டத்தில் இருக்கிறார். தனக்கு வேண்டியவர்களை கைக்குள் வைத்துக் கொண்டு ரகசியமாக நிர்வாகம் செய்கிறார். அடுத்த பிஷப் வந்தால் இவரது ஊழல்கள் வெளியில் தெரிந்துவிடும் என்று பயந்து பதவியில் தொடர்கிறார். அடுத்த பிஷப் வருவதற்குள் இந்த பிரச்னையை முடித்துவிட்டால் தனது வண்டவாளங்களை மூடி மறைத்துவிடலாம் என்று திட்டமிட்டு தனக்கு பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார்.

பாதிரியார் சகாய ஜோசப் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அப்பிடவிட் நகல் இணைக்கப்பட்டுள்ளது. பொய்களை எவ்வாறு சரமாரியாக சொல்லியிருக்கிறார் என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

WP.No.11437 of 2017 Affidavit

மற்றுமொரு அப்பிடவிட் பாதிரியார் ஜெபநாதன் அவர்கள் சமர்ப்பித்ததாகும். அதிலும் பொய்கள்தான் மிஞ்சி நிற்கின்றன. கீழ்கண்ட இணைப்பில் அதை வாசிக்கலாம்.

Affidavit filed in WP.No.7587 of 2012

மொத்தத்தில் பாதிரியார் ஜெபநாதனும் பாதிரியார் சகாய ஜோசப்பும் உண்மைக்கு புறம்பான விவரங்களை நீதிமன்றம் என்று கூட பாராமல் தங்களது அப்பிடவிட்டில் அள்ளி வீசியிருக்கிறார்கள். இவ்வாறு பொய்களை கூசாமல் எழுதச் சொல்லியிருப்பது பிரபல பிஷப் இவான் அம்புரோஸ் அவர்கள்தான். தல இல்லாமல் வால் ஆடுமா?

ஆசிரியர்கள் பணத்தில் உல்லாச வாழ்வு நடத்தும் இந்த  இவான் தவறு செய்யாத ஆசிரியர்களைக் கூட தண்டிக்கிற ஒரு கொடூரன். இந்த ஆளுக்கு தான் ஒரு பெரிய புனிதர் என்று நினைப்பு. இவரு சொல்லும் பொய்களுக்கும் செய்யும் சட்டவிரோதங்களுக்கும் இவருக்கு மேமோ கொடுத்து சஸ்பெண்ட் செய்வது யார்? இவர் நீதிநிலை தவறுபவர் என்று தெரிந்தும் சில கால்வருடிகளும் பதவி ஆசை பிடித்தவர்களும் இந்த கொடூரனை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள். வேடிக்கை என்னவென்றால் இந்த  கொடூரனுக்கு பொன்விழா எடுக்க ஐஸ் வியாபாரி மாதிரி ஊர் ஊராக ஒரு கூட்டம் வேல மெனக்கட்டு அலயுது. கேவலம். தூத்துக்குடி மறைமாவட்டத்தை கெடுத்த இந்த நயவஞ்கனுக்கு பொன்விழா ரொம்ப முக்கியமாம். விரட்டி அடிப்பதற்குப் பதிலாக விழா எடுக்கிறார்களாம் விழா.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard