New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பொத்தக்காலன்விளை புனித மரியன்னை பள்ளி நிர்வாக அவலம்v


Guru

Status: Offline
Posts: 24774
Date:
பொத்தக்காலன்விளை புனித மரியன்னை பள்ளி நிர்வாக அவலம்v
Permalink  
 


பொத்தக்காலன்விளை பள்ளி நிர்வாக அவலம்

 

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பொத்தக்காலன்விளையில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி நிர்வாகத்தின் விதிகளின்படி பள்ளித் தாளாளரை நியமிக்கவோ நீக்கவோ மாற்றவோ அதிகாரம் உள்ளவர் மேலாளர் மட்டுமே. இது 01.05.1961லும் 01.05.1989லும் உறுதி செய்யப்பட்டுள்ளது. WP.No.570/75ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள WMP.No.138/2011ல் பிஷப் இவான் அம்புரோஸ் இதை உறுதி செய்துள்ளார். இவ்வழக்கில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் முதல் பிரதிவாதி ஆவார்.

இந்நிலையில் மேலாளரின் நியமன ஆணையின் பேரில் 02.06.2014 முதல் தாளாளராக பணியாற்றிய சங்.ஜோசப் ரவிபாலன் என்பாரை சங்.டொமினிக் (உண்மையான பெயர் இசக்கி, த/பெ. முத்து) என்பார் CC/2017-18/35 நாள் 04.10.2017 என்ற கடிதத்தில் தான்தான் 04.10.2017 முதல் மேற்படி பள்ளியின் தாளாளர் எனவும் சங்.ஜோசப் ரவிபாலன் தாளாளர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார் எனவும் தெரிவித்து ஒரு Self Appointment order-ஐ போலியாக தானே தயாரித்து 4 இடத்தில் கையெழுத்திட்டு அந்த போலி ஆவணத்தை தனக்கு அளிக்கப்பட்ட நியமன ஆணை என தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலருக்கும் தலைமை ஆசிரியைக்கும் அனுப்பி 2 மாதங்களுக்கு மேல் அப்பள்ளியின் தாளாளராக செயல்பட்டுள்ளார். க்ளிக் செய்க.  Pothakalanvilai

02.06.2014 தேதியிட்டு பாதிரியார் ஜோசப் ரவி பாலன் அவர்களுக்கு நியமன ஆணை கொடுத்திருக்கும் அலுவலகம் Office of the Superintendent of R.C.Schools, Diocese of Tuticorin. ஆனால் 04.10.2017ல் அவரது பதவியை பறித்தது The Tuticorin Diocesean Association (Reg.No.S1/37-38). மேலாளரின் அனுமதியுடன் பிறப்பித்த ஆணை இல்லை. மேலும் பாதிரியார் டொமினிக் வேறு ஒரு நிறுவனத்தில் இருந்து மேலாளருக்கு தெரியாமல் இந்த ஆணையை பிறப்பித்துள்ளார். அவரே அவரை தாளாளராக நியமித்து அவரே அவரது கையெழுத்தை அட்டெஸ்ட் செய்துள்ளார். ஒரு நிறுவனத்தில் இருந்து கொடுத்த நியமனத்தை வேறு ஒரு நிறுவனதிலிருந்து இசக்கி என்பார் வேறு பெயரில் ரத்து செய்து அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. என்னடா உலகம். இதுக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதல் அளித்துள்ளார்.  பாதிரியார் டொமினிக் அருள் வளன் என்பாரை பாதிரியார் டொமினிக் (இசக்கி) நியமனம் செய்து பாதிரியார் டொமினிக் அருள் வளனின் ஸ்பெசிமன் சிக்னேச்சரை பாதிரியார் டொமினிக் அட்டெஸ்ட் செய்துள்ளார். இதை பார்த்துக்கொண்டு இருக்கும் பிஷப் இவானை என்ன சொல்வது. இதற்கு ஒப்புதல் அளித்திருக்கும் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி கிறிஸ்டி அவர்களை என்ன சொல்வது. கருவூல அலுவலர்களை என்ன சொல்வது? இதோ பாருங்கள் அந்த மானங்கெட்ட ஆர்டரை. Appointment order and approval

மேற்படி பள்ளி நிர்வாக விதிகளின்படி பள்ளித் தாளாளரை நியமிப்பதற்கோ, நீக்குவதற்கோ, மாற்றுவதற்கோ அதிகாரம் உள்ளவர் மேலாளர் மட்டுமே என்பதை நன்கு அறிந்திருந்தும் பள்ளியின் தலைமை ஆசிரியர் போலி ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள சங்.டொமினிக் என்பாரிடமே அக்டோபர் 2017 மற்றும் நவம்பர் 2017 ஆகிய மாதங்களுக்கான மான்ய பட்டியலில் (ஊதிய கோரிக்கை) கையெழுத்து வாங்கி மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ளார். மாவட்ட கல்வி அலுவலரும் அப்படியே அதை ஏற்றுக் கொண்டு சம்பள பில்லில் கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார்.

சங்.டொமினிக் என்பார் தனக்கு தானே பிறப்பித்துக் கொண்ட தாளாளருக்கான நியமன ஆணை போலியானதாகும். இப்போலி ஆவணத்தின் அடிப்படையில் அன்னார் மேற்படி பள்ளிக்காக கையெழுத்திட்டு அனுப்பிய அத்தனை கருத்துருக்களும் சம்பள பில்களும் செல்லத்தக்கதல்ல.

அரசு நடவடிக்கை எடுக்குமா?

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard