New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முஹம்மது தன்னுடைய மனைவிகளை காப்பாற்ற பர்தா அணியும் சட்டம்


Guru

Status: Offline
Posts: 24768
Date:
முஹம்மது தன்னுடைய மனைவிகளை காப்பாற்ற பர்தா அணியும் சட்டம்
Permalink  
 


முஹம்மது தன்னுடைய மனைவிகளை காம வெறி கொண்ட தன்னுடைய
சகபாக்களிடம் இருந்து காப்பாற்ற அருளப்பட்ட சட்டமே பர்தா அணியும் சட்டம்....

உமர்(ரலி) அறிவித்தார்
நான், 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். எனவே, தாங்கள் (தங்களின் துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!' என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் பர்தா (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான்.
ஸஹீஹ் புகாரி Book : 65 : 4790.

ஆயிஷா அறிவித்தார்: நானும் நபியும் பரிச்சம்பலம் மற்றும் வெண்ணெய் கலவை சாபிடுகொண்டு இருந்தோம் அப்பொழுது உமர் அங்கே வந்தார் நபி அவர்கள் அவரை சாப்பிட அழைத்தார். சாப்பிடும் போது உமர் என் விரல்களை தொட்டுவிட்டார் உடனே ஆவர், 'ஓ நான் உங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும், எந்த கண்களும் உங்களை பார்ககூடது என்றார் ! இந்த சம்பவத்திற்கு பின் நபி அவர்கள் பர்தா தொடர்பான வசனத்தை வெளிபடுத்தினார்.
அல் -அடப் அல்-முப்ராத் 1053

'நபி(ஸல்) அவர்களின் மனைவியர் கழிப்பிடம் நாடி வெட்ட வெளிப் பொட்டல்களுக்கு இரவு நேரங்களில் (வீட்டைவிட்டு) வெளியே செல்லும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள். வெட்ட வெளி பொட்டல் என்பது விசாலமான திறந்த வெளியாகும். நபி(ஸல்) அவர்களிடம், 'உங்கள் மனைவியரை (வெளியே செல்லும் போது) முக்காடிட்டு மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்' என உமர்(ரலி) சொல்லிக் கொண்டிருந்தார். ஆயினும் நபி(ஸல்) அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை. நபி(ஸல்) அவர்களின் மனைவி ஸவ்தா(ரலி) இஷா நேரமான ஓர் இரவில் (கழிப்பிடம் நாடி) வீட்டைவிட்டு வெளியே சென்றார். நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் அவர்களே உயரமான பெண்மணியாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்த உமர்(ரலி), 'ஸவ்தாவே! உங்களை யார் என்று புரிந்து கொண்டோம்' என்றார். (அப்போதாவது பெண்கள்) முக்காடிடுவது பற்றிய குர்ஆன் வசனம் அருளப்படாதா என்ற பேராசையில் உரத்து அழைத்தார். அப்போதுதான் பெண்கள் முக்காடு போடுவது பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான்"
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி: Book : 4 : 146.

அனஸ்(ரலி) கூறினார்
பர்தாவின் சட்டத்தை (எடுத்துரைக்கும் வசனம் அருளப்பட்ட சூழ்நிலை குறித்து) மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நானே. உபை இப்னு கஅப்(ரலி) என்னிடம் அது பற்றிக் கேட்டுவந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் மணாளராக ஆனார்கள். ஸைனப்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் மதீனா நகரில் மணந்தார்கள். அப்போது அவர்கள் உச்சிப் பொழுதுக்குப் பின் மக்களை வலீமா மணவிருந்துக்காக அழைத்திருந்தார்கள். (விருந்து முடிந்து) மக்கள் எழுந்து சென்ற பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சற்று நேரம்) அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் வேறு சிலரும் அமர்ந்திருந்தார்கள். இறுதியில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அவர்கள் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களின் அறைவாசலை அடைந்தார்கள். பிறகு வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் வெளியேறிவிட்டதாகக் கருதித் திரும்பி வந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பி வந்தேன். அப்போதும் அந்தச் சிலர் அதே இடத்தில் அமர்ந்திருந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் திரும்பி விட, அவர்களுடன் நானும் இரண்டாவது முறையாகத் திரும்பினேன். இறுதியில் ஆயிஷா(ரலி) அவர்களின் அறை வாசலை அடைந்தார்கள். பிறகு (ஸைனப்(ரலி) அவர்களின் இல்லத்திற்கு) நபியவர்கள் திரும்ப, நானும் அவர்களுடன் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் எழுந்து சென்றுவிட்டிருந்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தமக்கும் எனக்குமிடையே திரையிட்டார்கள். அப்போதுதான் பர்தா(வின் சட்டத்தைக் கூறும் இறைவசனம்) அருளப்பெற்றது.79
ஸஹீஹ் புகாரி: Book : 70 5466.



__________________


Guru

Status: Offline
Posts: 24768
Date:
RE: முஹம்மது தன்னுடைய மனைவிகளை காப்பாற்ற பர்தா அணியும் சட்டம்
Permalink  
 


முஹம்மதிற்கு கோபமும் எரிச்சலும் தலைக்கேறியது. அவரது கோபத்தை ஏக்கத்தை மற்றவர்கள் உணரவில்லை. 
விருந்திற்கு வந்த தோழர்களில் சிலர், முஹம்மதின் மரணத்திற்குப் பிறகு அவரது மனைவியை திருமணம் செய்வேன் என்று கூறி அவரது பொறுமையை மேலும் சோதித்தனர்.

அவர்களை கலைந்து போகச் சொல்லும் விதமாக எழுந்து நிற்கிறார். சிலர் சென்று விடுகின்றனர்; சிலர் அமர்ந்து விடுகின்றனர். பொறுமை இழந்த முஹம்மது மூன்றாம் முறையாகவும் எழுந்து நிற்க, முஹம்மதின் தோழர்களில் மேலும் சிலர் கலைந்து சென்று விடுகின்றனர்.

அதிலும் சிலர் விடாப்பிடியாக முஹம்மதின் இல்லத்திற்குள் நுழைய முற்படுகின்றனர். அவர்களைத் திரையிட்டுத் தடுக்கும் முஹம்மது, தனது அங்கிப்பையினுள் இருக்கும் அல்லாஹ்வை முடுக்கிவிடுகிறார். அல்லாஹ், முஹம்மதிற்கு சேவகம் செய்வதற்கென்றே அவதாரம் கொண்டவன்; வெட்கம், மானம், சூடு, சுரணையற்றவன், கேவலமான உத்தரவுகளை வெளியிட்டான்.

புகாரி ஹதீஸ் : 4791 
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
…அவர்கள் எழுந்துவிடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்துவிட்டனர். ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஸைனப் (ரலி) அவர்களிடம்) செல்லப் போனார்கள். அப்போதும் அவர்கள் அமர்ந்து(கொண்டு பேசிக்) கொண்டேயிருந்தார்கள். பிறகு அவர்கள் (மூவரும்) எழுந்து சென்றுவிட்டார்கள். நான் உடனே உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள் என்று தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள். நானும் அவர்களுடன் உள்ளே செல்லப் போனேன். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் எனக்கும் தமக்குமிடையே திரையைப் போட்டுவிட்டார்கள். அப்போது தான் அல்லாஹ் இறை நம்பிக்கை கொண்டவர்களே நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள் என்று தொடங்கும் இந்த (33-53 ஆவது) வசனத்தை அருளினான்.

குர்ஆன் 33:53
நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்படமாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒரு போதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.

ஒவ்வொரு குர்ஆன் வசனம் கூறப்பட்டதற்குக் ஏதாவது ஒரு நிகழ்வு காரணமாக இருக்கிறது. முஹம்மதின் மனைவியர்கள் ஹிஜாப் கடைபிடிப்பவர்களல்ல. விருந்திற்கு வந்தவர்கள், அவரை வெறுப்பேற்றியிருக்கவில்லையெனில் ஹிஜாப்- பர்தா பற்றிய அறிவிப்புகள் வெளியாகியிருக்காது



__________________


Guru

Status: Offline
Posts: 24768
Date:
Permalink  
 

 முகமது தன் புறச்சூழ்நிலைகளுக்கு தேவையானபடிக்கு அறிவித்து கொண்டதே குரான் ..

முஹம்மது நபி அவர்களின் மனைவியர்கள் தங்களின் இயற்கை தேவைகளுக்காக இரவு வேளைகளில் திறந்தவெளியில் வருவதை உமர் அவர்கள் காண்கிறார். எந்தக் காரணத்திற்காகவும் பெண்கள் வெளியில் வருவதை அவர் விரும்பவில்லை. அப்படியே வந்தாலும் அப் பெண்கள் தங்களை இனம் காண முடியாதவாறு கடுமையாக மறைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பினார்

புகாரி ஹதீஸ்- 4795
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகின்ற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள். என்று சொன்னார்கள். சவ்தா (ரலி) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பி விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களது கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அப்போது ச்வதா (ரலி) அவர்கள் வீட்டினுள் வந்து, அல்லாஹ்வின் தூதரே நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர் (ரலி) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம சொன்னார்கள், என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (வேதவெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. எலும்புத் துண்டு அவர்களது கரத்தில் அப்படியே இருந்தது. அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னார்கள்.

وَقَرْنَ فِىْ بُيُوْتِكُنَّ وَلَا تَبَـرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْاُوْلٰى وَاَقِمْنَ الصَّلٰوةَ وَاٰتِيْنَ الزَّكٰوةَ وَاَطِعْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا ‏ 
மேலும், உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முந்தைய அஞ்ஞானக் காலத்தைப் போன்று ஒப்பனையையும் ஒய்யாரத்தையும் காட்டிக்கொண்டு திரியாதீர்கள். தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத்தைக் கொடுங்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நபியினுடைய குடும்பத்தினராகிய உங்களிலிருந்து தூய்மையின்மையை அகற்றி உங்களை முழுமையாகத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றுதான் அல்லாஹ் நாடுகின்றான்.
(அல்குர்ஆன் : 33:33)
يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَآءِ الْمُؤْمِنِيْنَ يُدْنِيْنَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيْبِهِنَّ ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ يُّعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏ 
நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் மற்றும் நம்பிக்கையாளர்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையைத் தங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்ளட்டும். அவர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமலிருப்பதற்கும் இதுவே மிகவும் ஏற்ற முறையாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 33:59)

முஹம்மதின் மனைவியர்கள், வீட்டினுள் அடைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய பொருள் என்பது உமரின் கருத்து. நியாயமாகப் பேசுவதென்றால், ”இயற்கைத் தேவைகளுக்காக பெண்கள், இரவு வேளைகளில் ஒதுங்குமிடங்களில் உனக்கென்ன வேலை?” என்று உமரிடம் கேட்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் முஹம்மதின் மனைவியர்களை குறிப்பிட்டு கூறப்பட்டவைகளே என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்! குறிப்பிட்டுச் சொல்வதென்றால் சற்றேறக்குறைய குர்ஆனின் 33-ம் அத்தியாயம் முழுவதுமே முஹம்மதின் குழப்பமான மனநிலையைத்தான் பிரதிபளிக்கிறது.

முஹம்மது, தனது வயதான காலத்தில் எண்ணற்ற மனைவிகளையும் வைப்பாட்டிகளாக அடிமைப்பெண்களையும் தனது அந்தப்புரத்தில் நிரம்பச் செய்திருந்தார். தானாக முன்வந்து முஹம்மதிற்கு தங்களை தாரைவார்த்துக் கொண்ட பெண்களும் உண்டு. இவர்களில் ஸவ்தாவைத் தவிர மற்றுள்ள அனைவருமே இளம்வயது அழகிகள். இவர்களை கட்டுப்பாட்டில் வைக்க முஹ்ம்மதிற்குத் தெரிந்த ஒரேவழி அல்லாஹ்தான். அவனது தலையில் ஒரு தட்டுதட்டினால் குர்ஆன் வசனங்களைக் அள்ளித் தெறித்துவிட்டுப் போகிறான்.

குர்ஆன் 33:30
நபியின் மனைவியரே! உங்களில் யாரேனும் தெளிவான வெட்கக் கேடானதைச் செய்தால் அவருக்கு இரு மடங்கு வேதனை அளிக்கப்படும். அது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே இருக்கிறது.

33:32. நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

33:33 உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!...

முஹம்மதின் மனைவியர்கள், தங்களது தேவைகளுக்காக சுதந்திரமாக வெளியில் சென்றுவருபவர்களாக இருந்துள்ளனர் என்பதற்கு குர்ஆன் 33:33 நமக்கு போதுமான ஆதாரமாக இருக்கிறது. முஹம்மதின் முதல் மனைவி கதீஜா மிகப் பெரும் வணிகத்தை நிர்வகித்து வந்தாக இஸ்லாமிய வரலாறு கூறுகிறது. நமது முஹம்மது, கதீஜாவிடம் பணியாளாக இருந்தவர்தான். முஹம்மதிற்கு முந்தைய அரேபியாவில் பெண் சுதந்திரம் இருந்துள்ளது. ஆனால் இஸ்லாம் தோன்றும் வரை இருந்த அரபியர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் என்றும், இஸ்லாமிற்கு முந்தைய எல்லாவற்றையும் ஜஹிலியா - அறியாமையின் காலம் என்பார்கள்.

பெண்களைப் பர்தாவுக்குள் மூடிவைக்கப்பட வேண்டிய பொருள் என்ற உமர் நச்சரித்துக் கூறிய கருத்துக்களையே அல்லாஹ்,முஹம்மது நபி அவர்களிடம் வஹீயாக அனுப்பினான் (குர்ஆன் 33:33,59). அதன் காரணமாகவே சவ்தா பர்தாவுடன் கழிப்பிடத்திற்கும் செல்கிறார். அங்கும் விடாது பின்தொடர்ந்து வந்து பர்தாவைப்பற்றி கூறுவதிலிருந்து உமர் அவர்களின் நச்சரிப்பின் வலிமையையும், அல்லாஹ்வின் அக்கறையையும், முகமதுவின் தூதுத்துவத்தையும், இஸ்லாத்தின் இறையியலையும் எளிதில் அனைவரும் புரிந்துகொள்ளலாம்



__________________


Guru

Status: Offline
Posts: 24768
Date:
Permalink  
 

குர்ஆன் 33:53-ம் வசனத்தின் இறுதிப்பகுதி முஹம்மதின் மனநிலையை மிகத் தெளிவாக உணர்த்துகிறது.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتَ النَّبِىِّ اِلَّاۤ اَنْ يُّؤْذَنَ لَـكُمْ اِلٰى طَعَامٍ غَيْرَ نٰظِرِيْنَ اِنٰٮهُ وَلٰـكِنْ اِذَا دُعِيْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِيْنَ لِحَـدِيْثٍ اِنَّ ذٰلِكُمْ كَانَ يُؤْذِى النَّبِىَّ فَيَسْتَحْىٖ مِنْكُمْ وَاللّٰهُ لَا يَسْتَحْىٖ مِنَ الْحَـقِّ وَاِذَا سَاَ لْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْــٴَــــلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ ذٰ لِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّ وَمَا كَانَ لَـكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَاۤ اَنْ تَـنْكِحُوْۤا اَزْوَاجَهٗ مِنْ بَعْدِهٖۤ اَبَدًا اِنَّ ذٰ لِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِيْمًا‏
நம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் அனுமதியின்றி நுழையாதீர்கள்; உணவு தயாராகும் நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டும் இருக்காதீர்கள். ஆனால், நீங்கள் உணவு உண்பதற்கு அழைக்கப்பட்டால் அவசியம் செல்லுங்கள்; சாப்பிட்டு முடிந்ததும் பிரிந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஈடுபட்டு விடாதீர்கள்; உங்களுடைய இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், வெட்கத்தின் காரணத்தால் உங்களிடம் அவர் எதுவும் சொல்வதில்லை. ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் மனைவியரிடம் நீங்கள் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள். உங்களுடையவும், அவர்களுடையவும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே ஏற்ற முறையாகும். அல்லாஹ்வுடைய தூதருக்குத் தொல்லை கொடுப்பது உங்களுக்கு ஆகுமானதல்ல. அவருக்குப் பின்னர் அவருடைய மனைவியரை நீங்கள் திருமணம் முடிப்பதும் ஒருபோதும் ஆகுமானதன்று. அவ்வாறு செய்வது அல்லாஹ்விடம் திண்ணமாக, பெரும் பாவமாகும்.
(அல்குர்ஆன் : 33:53)

அதாவது ஜைதை காணச் சென்ற பொழுது திரை விலகியதாலே மருகளான ஜைனப்பின் மீது காமம் பிறந்தது. அதே முறையில், வேறு ஒருவர் தன் மனைவியர்களையும் கவர்ந்து சென்று விடக்கூடாது என்ற முஹம்மதின் கவலையை அல்லாஹ், வஹியின் மூலம் இங்கு சரிசெய்கிறான்.

முஹம்மதின் மீது அபாண்டமாக பழிசுவத்துவதாக நீங்கள் நினைக்கலாம். அவர் பெண்கள் விஷயத்தில் மிக பலவீனமான மனநிலையைக் கொண்டவர்; அவரது மனநிலை எப்படியிருந்தது என்பதை விளக்க இன்னொரு ஹதீஸைக் காண்போம்.

முஸ்லீம் ஹதீஸ் 2718
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். அப்பெண்(ணின் அழகு) அவர்களைக் கவர்ந்தது. உடனே அவர்கள் தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து, "ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து அவள் (அழகு) அவரைக் கவர்ந்து விட்டால் உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்'' என்று கூறினார்கள்.

அந்தப் பெண்ணின் அழகு, முஹம்மதைக் கவர்ந்ததாம் உடனே அவரது உனர்வுகள் கிளர்ந்தெழுந்துவிட்டதாம்; அதைத் தனித்துக் கொள்ள தனது மனைவியை நாடி சென்றுவிட்டாராம். எத்தனை கேவலமான மனிதராக இருந்திருக்கிறார். அல்லாஹ், குர்ஆன் வசனங்களை கூறிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு புலனடக்கம் என்றால் என்னவென்பதை முஹம்மதிற்குக் கற்றுக் கொடுத்திருக்கலாம். அவரால் தனது செயலில் இருக்கும் தவறைக் கூட உணர்ந்து கொள்ள முடியாமல், தன் மனதிலிருக்கும் அழுக்கான சிந்தனைகளை அடுத்தவர்கள் மீதும், ஷைத்தானின் மீதும் சுமத்தி தன்னை சரிகாண்கிறார். ஒருவேளை இதுதான் மனிதகுலம் பின்பற்றத்தக்க தலைசிறந்த உதாரணமோ?

வேறொரு பெண்ணைக் கண்டதாலே காமுற்று அதைத் தணிக்க தன்னிடம் ஓடிவந்திருக்கிறான் என்பதை அறியும் மனைவியின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்! அழகியதொரு பெண்ணைக் கண்டு காமுற்று அடக்க முடியாமல் தனது மனைவியிடம் சென்று தனித்துக் கொண்ட முஹம்மது செய்த இதே செயலை, எதிர்மறையாக அவரது மனைவி ஜைனப் செய்திருந்தால் இவரது செயல்பாடு எப்படி இருந்திருக்கும்? இஸ்லாம் மட்டுமே பெண்ணுரிமை வழங்கியதாக, பெண்களைப் கண்ணியப்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூச்சலிடுபவர்கள் பதில் கூறலாம்!

இது போன்ற சூழ்நிலைகளில் துணைகளை இழந்தவர்களும், துணைகள் இல்லாதவர்களும் யாரிடம் செல்ல வேண்டுமென்பதையும் தெளிவுபடுத்திருக்கலாம்! பாவம், இஸ்லாமிய ஆண்களில் துணையில்லாதவர்களும், திருமணமாகதவர்களும் குழம்பிபோய் திரிகிறார்களாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24768
Date:
Permalink  
 

முகமது தன் புறச்சூழ்நிலைக்கு தேவையானபடிக்கு அறிவித்துக்கொண்டதே குரான்..

மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ என்னுமிடத்திலிருந்த கால்வாய் விஷயத்தில் முஹம்மது நபியின் (அன்சாரித்) தோழர் ஒருவருவருக்கும் முஹம்மது நபியின் உறவினரான ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் சச்சரவு ஏற்பட்டது. அந்த அன்சாரித் தோழர், ‘தண்ணீரைத் திறந்து ஓடவிடு” என்று கூறினார். ஸுபைர் (ரலி) ‘தண்ணீரைத்திறந்து விட) மறுத்துவிட்டார்கள். இந்தத் தகராறு முஹம்மது நபியிடம் பஞ்சாயத்திற்கு வந்தது. முஹம்மது நபி கூறிய தீர்ப்பு ஸுபைருக்கு சாதமாக இருந்தது. தீர்ப்பில் அதிருப்த்தியடைந்த அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, ‘உங்கள் அத்தை மகன் என்பதால் அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்களின் முகம் கோபத்தால் நிறம் மாறி சிவந்து விட்டது. அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி, ‘உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகைளச் சென்றைடயும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்” என்றுகூறினார்கள்.
அல்லாஹ்வால் அமைதியாய் இருக்க முடியவில்லை உடனே இறக்கிவிட்டான் வஹீயை!

புகாரி ஹதீஸ்- 2359
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது
‘இறைவன் மீதாணையாக! ‘(முஹம்மேத!) உங்களுடைய இறைவன் மீதுசத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்ற பின்னர், நீங்கள் அளிக்கிற தீர்ப்புக் குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களாக மாட்டார்கள்’ (குர்ஆன் 04:65)
திருக்குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில் தான் இறங்கியது என்று எண்ணுகிறேன்” என்று ஸுபைர் (ரலி) கூறினார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24768
Date:
Permalink  
 

முகமது ஆயிஷாவை சந்தேகப்பட்டு ஒரு மாதமா ஊர்முழுவதும் விசாரித்து திரிந்தது ஏன் ?
ஆயிஷாமேல முகமதுக்கு நம்பிக்கையில்லைதானே

புஹாரி: 2661. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் செய்த ஒரு புனிதப் போரின்போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் ஓர் ஒட்டகச் சிவிகையில் வைத்துச் சுமந்து செல்லப்படுவேன். நான் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்படுவேன். நபி(ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்டபோது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவித்தார்கள்.

நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (மலஜலத்) தேவையை நான் முடித்தபோது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தொட்டுப் பார்த்தபோது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. எனவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தாமதப்படுத்திவிட்டது. எனவே, என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் வழக்கமாக சவாரி செய்கிற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்கு சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். எனவே, சிவிகையைத் தூக்கியபோது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பிவிட்டு நடக்கலானார்கள். படையினர் சென்ற பிறகு நான் (தொலைந்து போன) என் மாலையைப் பெற்றுக் கொண்டேன். பிறகு, நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது, அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அங்கு அமர்ந்து கொண்டேன். படையினர், நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்) மிகைத்து நான் தூங்கி விட்டேன். ஸஃப்வான் இப்னு முஅத்தல் அல் ஸுலமீ என்பவர் படையினர் பின் அணியில் இருந்தார். அவர், நான் தங்கியிருந்த இடத்தில் காலை வரை தங்கி விட்டிருந்தார். அவர் (காலையில் விழித்தெழுந்தவுடன்) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார். (எனவே, என்னை அடையாளம் புரிந்து கொண்டு) அவர், 'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்" என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். பிறகு, அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் அதன் மீது ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஒட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி) அழிந்தவர்கள் அழிந்தார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப் பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி ஸலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான். நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம். அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். நான் நோயுற்று விடும்போது நபி(ஸல்) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டுகிற பரிவை (இந்த முறை) நான் நோயுற்றிருக்கும்போது அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, 'அவள் எப்படி இருக்கிறாள்?' என்று கேட்பார்கள்; (பிறகு போய் விடுவார்கள்.) அவ்வளவு தான். (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டு வந்த அவதூறில்) ஒரு சிறிதும் எனக்குத் தெரியாது. இறுதியில், நான் (நோயிலிருந்து குணமடைந்து விட, நானும் உம்மு மிஸ்தஹ்(ரலி) அவர்களும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த 'மனாஸிஉ' என்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்று கொண்டிருந்தோம். எங்களுடைய இந்த வழக்கம் வனாந்திரங்களில் வசித்து வந்த முற்கால அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. நானும் அபூ ருஹ்மின் மகளாகிய உம்மு மிஸ்தஹும் நடந்து முன்னால் சென்று கொண்டிருந்தோம். உம்மு மிஸ்தஹை அவர் அணிந்திருந்த கம்பளி அங்கி இடறியது. அப்போது அவர், 'மிஸ்தஹ் நாசமாகட்டும்" என்று கூறினார். நான், 'மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டாய். பத்ருப் போரில் பங்கெடுத்த ஒரு மனிதரையா நீ ஏசுகிறாய்" என்று கூறினேன். அதற்கு அவர், 'அம்மா! அவர்கள் என்ன சொன்னார்கள் என்று நீங்கள் கேள்விப்படவில்iயா?' என்று கூறிவிட்டு, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, 'அவள் எப்படி இருக்கிறாள்?' என்று கேட்டார்கள். நான் 'என் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள்" 'என்று கேட்டேன். அப்போது நான் அவ்விருவரிடமிருந்தும் (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகிறதூ என்று விசாரித்து என் மீதான அவதூறுச்) செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளிக்கவே நான் என் தாய் தந்தையரிடம் சென்றேன். என் தாயாரிடம், 'மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக் கொள்கிறார்கள்?' என்று கேட்டேன். என் தாயார், 'என் அன்பு மகளே! உன் மீது இந்த விஷயத்பை; பெரிதுபடுத்திக் கொள்ளாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, (தன்) கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகுமிக்க பெண்ணொருத்தியைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத் தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்" என்று கூறினார்கள். நான், 'சுப்ஹானல்லாஹ் (இறைவன் தூய்மையானவன்!) இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள்?' என்று கேட்டேன். அன்றிரவை இடைவிடாமல் அழுது கொண்டும் தூக்கம் சிறிது மின்றியும் காலை வரை கழித்தேன். காலை நேரம் வந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களையும், உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது 'வஹீ' (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா(ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! தங்கள் துணைவியரிடம் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன்" என்று அவர்கள் கூறினார்கள். அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களோ (நபி(ஸல்) அவர்களின் மனக் கவலையைக் குறைத்து ஆறுதல் கூறும் நோக்குடன்), 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்" என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, 'பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள். 
அதற்கு பரீரா(ரலி), 'தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டுவிட்டு உறங்கிப் போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை" என்று பதில் கூறினார். உடனே, அன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மிம்பரில் ஏறி) நின்று, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலை தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனை தண்டித்திட எனக்கு உதவிபுரிபவர் யார்? அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நல்லதையே அறிவேன். அவர் என் வீட்டாரிடம் என்னுடனேயல்லாமல் (நான் வீட்டிலிருக்கும் போதே தவிர) வந்ததில்லை" என்று கூறினார்கள். உடனே, ஸஅத் இப்னு முஆத்(ரலி) எழுந்து வின்று, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை தண்டிக்க நான் தங்களுக்கு உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனுடைய கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகிறோம்" என்று கூறினார்கள். உடனே, கஸ்ரஜ் குலத் தலைவராயிருந்த ஸஅத் இப்னு உபாதா(ரலி) எழுந்து நின்று, 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் பொய்யுரைத்தீர்; அவனை நீர் கொல்லமாட்டீர். அது உம்மால் முடியாது" என்று கூறினார். அதற்கு முன் அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார்; ஆயினும், குலமாச்சரியம் அவரை அவ்வாறு பேசத் தூண்டிவிட்டது. உடனே, உசைத் இப்னு ஹுளைர்(ரலி) எழுந்து நின்று, உபாதா(ரலி) அவர்களை நோக்கி, 'நீர் தாம் பொய்யுரைத்தீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால்தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகிறீர்" என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அவர்கள் மெளனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு அவர்களும் மெளனமானார்கள். அன்று நான் இடைவிடாமல் அழுது கொண்டிருந்தேன்; சிறிதும் உறங்கவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்து விடுமோ என்றெண்ணும் அளவிற்கு அழுதிருந்தேன். நான் அழுதவண்ணமிருக்கும்போது என் தாய்தந்தையார் என்னிடம் அமர்ந்திருக்க, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்தாள். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. மேலும், ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படவில்லை. பிறகு நபி(ஸல்) அவர்கள், 'லாஇலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)" என்று கூறிவிட்டு, 'ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்" என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் பேச்சை முடித்தபோது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை. நான் என் தந்தையிடம், 'அல்லாஹ்வின் தூதருக்கு என் சார்பாக பதில் கூறுங்கள்" என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, 'அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம், 'இறைத்தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்" என்று சொன்னேன். அதற்கு என் தாயார், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள். நானோ இளவயதுடைய சிறுமியாக இருந்தேன். குர்ஆனிலிருந்து அதிகமாக (ஓதத்) தெரியாதவளாகவும் இருந்தேன். எனவே, 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள், மக்கள் என்னைப் பற்றிப் பேசியவற்றைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனதில் பதிந்து போய், அதை உண்மையொன்று நம்பி விட்டீர்கள் என்பதையும் அறிவேன். நான் குற்றமற்றவள் என்று நானே தங்களிடம் சொன்னால்... நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்... நீங்கள் அதை நம்பப் போவதில்லை; நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் (நான் சொல்வதை அப்படியே உண்மையொன்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப்(அலை) அவர்களின் தந்தையை (யஃகூப்(அலை) அவர்களை)யே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது): (இதை) சகித்துக் கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புத் கோர வேண்டும். (குர்ஆன் 12:83) பிறகு, அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். ஆயினும், திருக்குர்ஆனில் என் விஷயத்தைப் பற்றிப் பேசுகிற அளவிற்கு நான் ஒன்றும் முக்கியத்துவமுடையவளல்ல மிகச் சாதாரணமானவள் தான் என்று என்னைக் குறித்து நான் கருதிக் கொண்டிருக்க, அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவன் என் விஷயத்தில் வஹீயையே -வேத வெளிப்பாட்டையே (திருக்குர்ஆனில்) அருளுவான் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. மாறாக, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் கனவு எதையாவது தூக்கத்தில் காண்பார்கள்" என்றே எதிர்பார்த்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டிலிருந்து எவரும் வெளியே செல்லவுமில்லை; அதற்குள் அல்லாஹ், நபி(ஸல்) அவர்களின் மீது (திருக்குர்ஆன் வசனங்களை) அருள ஆரம்பித்துவிட்டான். உடனே, (வேத வெளிப்பாடு வருகிற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக, 'ஆயிஷாவே! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்" என்று கூறினார்கள். என் தாயார், 'அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்" என்று கூறினார்கள். நான், 'மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன்" என்றேன். அப்போது அல்லாஹ், '(ஆயிஷாவின் மீது) அவதூறு பரப்பியவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தான்" என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11) வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக செலவிட மாட்டேன்" என்று கூறினார்கள். மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூ பக்ர்(ரலி) செலவிட்டு வந்தார்கள்... உடனே அல்லாஹ், 'உங்களிடையேயுள்ள (பொருள்) அருளப் பெற்றோரும் (பிறருக்கு உதவும்) இயல்புடையோரும், (தங்கள்) உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதனை மன்னித்துப் (பிழைகளைப்) பொருட்படுத்தாமல்விட்டு விடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிபளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய் இருக்கிறான்" என்னும் (திருக்குர்ஆன் 24:22) இறைவசனத்தை அருளினான். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி), 'ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறிவிட்டு, மிஸ்தஹ்(ரலி) அவர்களுக்கு ஏற்கனவே தாம் செய்து வந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள். திருக்குர்ஆனில் என்னைப் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) இறைத்தூதர் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள்; 'ஸைனபே! நீ (ஆயிஷாவைப் பற்றி) என்ன அறிந்திருக்கிறாய்? (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) பாதுகாத்துக் கொள்வேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்" என்று பதிலளித்தார்கள். ஸைனப்(ரலி) தாம் எனக்கு (அழகிலும் நபி(ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை இறையச்சமுடைய, பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். 
இந்த அறிவிப்பு இன்னும் பலர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
Volume :3 Book :52

இங்கே வரும் கேள்விகள்:

1. அல்லாவுக்கு தெரியாதா இந்த மாதிரியான ஒரு கள்ள (...) விஷயம் வரும் என்று.
(ஏன் முதலிலே இந்த வசனம் வரவில்லை)
2. ஜிப்ரீல் ஏன் முதலிலே வரவில்லை? வந்து முகமதுவிடம் சொல்லவில்லை.
3. இந்த விஷயம், நடந்தபின் ஒரு மாதம் இவர்கள் எங்கே போயிருந்தார்கள்.
(இந்த ஒரு மாதம் என்பது ஆயிஷா கர்ப்பம் அடைகிறாளா என்று பார்ப்பதற்கு -- அல்லாவுக்கு கூட மாதவிடாயை பார்த்தபின் தான் தெரியும் போல).
4. இந்த விஷயத்தினால் முகமதுவின் தொழிலுக்கே ஆபத்து வந்து இருக்கும்( இறைவனின் தூதன் வேலை) , நான் கேட்ட கேள்விகளை அரேபியர்களும் கேட்டிருப்பார்கள்.
5. இந்த தமிழன் .. இந்த மாதிரி ஒரு பதிவு போட்டிருக்க மாட்டான்.
6. இதானால் தெள்ள தெளிவாக தெரிவது என்னவென்றால் இந்த குரான் வசனம் அல்லாவிடம் இருந்து வந்தது அல்ல .

அந்த குற்றத்தை ஆயிஷா ஒத்து கொண்டு இருந்திருந்தால் - அவள் கல்லால் அடித்து கொல்லப்பட்டிருப்பாள். அப்படி ஒன்று நடந்திருந்தால் அபுபக்கர் எந்த நிலையை எடுத்திருப்பார் என்று சொல்ல முடியாது (முகமதுவுக்கு எதிராக திரும்பி இருக்கலாம்). 
ஏற்கனவே ஆயிஷாவைப்பற்றி கூறியவனை முகமதால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதாவது முகமதுக்கு, இந்த நிகழ்ச்சியை ஒத்துக்கொண்டு ஆயிஷாவை விவாகரத்து செய்தால் , விளைவு எப்படி இருக்கும் என்று தெரியாது அதே சமயம் ஆயிஷா செய்ததை ஒத்துக்கொள்ளவும் முடியவில்லை. இதில் இருந்து தப்பிக்க ஒரேவழி ஒரு குரான் வசனம் சொல்லுவது தான். (அதுவும் ஒரு மாதம் யோசித்த பின்) . (கள்ளத்தொடர்புக்கு சாட்சியம் வைத்துக்கொண்டா செய்வார்கள் ?? என்னா மூளைப்பா).



__________________


Guru

Status: Offline
Posts: 24768
Date:
Permalink  
 

 வணக்கம் 🙏 தோழர் சபரிமாலா அவர்களுக்கு ....

ஒவ்வொரு முறையும் யாராவது ஒரு பகுத்தறிவாதி. அல்லது முற்ப்போக்குவாதி நம்மிடம் மாட்டிக்கொள்வார்கள் அந்த வகையில் இன்று மாட்டியிருப்பவர். தோழர் சபரிமாலா பல செய்திகளை நல்லாத்தான் பேசுவார் ...ஆனால் இஸ்லாம் என்று வந்து வந்து விட்டால் எல்லாம் மாறிவிடும் பொய்யும் பித்தலாட்டமுமே நிறைந்திருக்கும் என்ன செய்வது தோழர் ஏறியிருக்கும் மேடை அப்படி ப்பட்டது தோழர் ஆரம்பமே அதிரடிதான் உடன்கட்டை ஏறுவதை பற்றி பேசுகிறார்கள் சரியான பேச்சு பேசவேண்டிய பேச்சு ஆனால் தடாலடியா இஸ்லாத்துக்கு தாவுறாங்க ஏன்னு பார்த்தால் ஏறிய மேடை அப்படி வேறே என்ன செய்வாங்க ? நான் 15 நாளா குரானை படிக்கிறேன் என்று ஆரம்பிக்கிறார் . ஆனால் அவர் கூறும் செய்தியை குரானை குப்புறப்போட்டு தேடினாலும் குரானில் கிடைக்காது காரணம் அது முஸ்லிம் என்ற ஹதீஸ் நூலில் உள்ள செய்தி அந்த ஹதீஸை கீழே கொடுத்திருக்கிறேன் .

யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்'' என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள். (நூல்: முஸ்லிம் 5127). இவ்வளவுதான் சகோதரி சபரி மாலா குரான் படிச்ச லட்சணம் .10 நிமிட மேடை பேச்சுக்காக சில கை தட்டல் சில ,பல ஊதியங்களுக்காக தங்களின் முற்ப்போக்கு அறிவை (?!)மத வாதிகளிடம் அடகு வைப்பது அயோக்கியனம் கண்டிக்கதக்கது. அதே கண்டிப்புடன் தான் பதிவை தொடங்குகிறேன் .
( சகோதரி சபரி மாலா விரும்பினால் இஸ்லாம் பற்றி இணையம் வாயிலாக எழுத்து ரீதியாக விவாதிக்கலாம் ) 15 நாள் குரானை படித்தேன் என்று கூறிவிட்டு ஏன் குரானில் இல்லாத செய்தியை கூறனும். செய்தி ஏற்ப்பாடு அட்மீன் சொதப்பி விட்டுட்டார் அடுத்தமுறை யாவது தில்லுமுல்லை சரியாக செய்ங்கய்யா நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவே ..
அடுத்து புர்கா கதையை ஆரம்பிக்கிறார் தம்மாதுண்டு குரானை 15 நாட்களாக படித்தவருக்கு குரானில்.வரும் புர்கா சம்பந்தமான செய்திகள் பெண்கள் சம்பந்தமான செய்திகள் எதுமே தெரியலே?.... படிச்சா தானே தெரியும் (சரி மேடம் நீங்க யாருடைய தமிழாக்கதை படிச்சீங்க?). முஸ்லிம் பெண்களிடம் கேட்டாராம் அவர்கள் நைட்டி மேலே புர்கா போட்டுட்டு போக வேலைகள் செய்ய வசதியாக இருக்கு என்றார்களாம் .....புர்கா வசதியானதா வசதி இல்லாததா என்பதா குறியீடு ? அது பெண்களை அடிமைப்படுத்துகிறதா இல்லையா என்பதுதான் கேள்வி மூனு வயசு குழந்தைக்கு தலை முக்காடு போட்டு மூடபடுகிறதே அது ஏன் ஒரு கருப்பு துணிக்குள் சிறை வைக்கப்படுகிறதே அது ஏன் இதை முஸ்லிம் பெண்கள் சுய விருப்பதின் அடிப்படையில் அணிகிறார்களா? என்றால் இல்லை மூனு வயசு குழந்தை தனக்கு தலை மூடும் துணி வேண்டும் என்று விரும்பி கேட்டதா? கீழே பல குரான் வசனங்களையும் ஹதீஸ்களஇயும் தந்துள்ளேன் ஒரு முறை மேடம் படித்து பார்க்கட்டும்.

/நீங்கள் உங்கள் இல்லங்களிலேயே (அடக்கத்துடன்) இருங்கள்.
அல்குர்ஆன் 33:33)

// முன் வாழ்ந்த அறியாமை கால மக்கள் (தங்களின் அலங்காரங்களை வெளியில்) காட்டி வந்ததைப் போல் உங்களின் அழகை வெளிக்காட்டிக் கொண்டு) திரியாதீர்கள்’
(அல்குர்ஆன் 33:33) இதுதான் மேடம் நீங்க 15 நாட்கள் படித்த குரானின் நிலை நீங்க அவசரத்திற்கு (?!)இஸ்லாத்திற்கு மதம் மாறி போனாலும் இந்த கட்டுப்பாட்டிற்குள் தான் வாழ வேண்டும்.

அவர்கள் தங்கள் பார்வையை கீழ்நோக்கியே வைத்து, கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும்.’ (அல்குர்ஆன் 24:31) இவ்வளவுதான் மேடம் இந்த நேர்கொண்ட பார்வை நெஞ்சு நிமிர்ந்த நடையெல்லாம் இஸ்லாத்தில் இல்லை மேடம் பார்வையை தாழ்த்தி தலை குனிந்து தான் நடக்கனும்.

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், ஈமான் கொண்ட (முஸ்லிம்) பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது” ...

(அல்குர்ஆன் 33:59
என்ன மேடம் படிச்சீங்களா முக்காடோ புர்காவோ வசதிக்கான ஆடையாக முஹம்மதின் இஸ்லாம் கட்டளையிடவில்லை ஒழுக்கத்திற்கும். தொல்லைப்படுத்தபடாமல் இருக்கவும் தான் கூறுகிறது. இப்போது கேளுங்கள் உங்கள் முஸ்லிம் தோழிகளிடம் யாரால் தொல்லை படுத்தபடுகிறார்கள் என்று உதாரணமாக இஸ்லாமிய மதரஸாக்களில் படிக்கும் பெண்களும் புர்கா அணிகிறார்கள் ஆனால் அங்கே ஆசிரியர்களாக இருப்பவர்கள் கண்ணிய(?!)மிக்க மௌலவிகள் தானே அவனுங்க இறையச்சம் உள்ளவனுங்க தானே பிறகு எதுக்கு உங்க தோழிகள் புர்கா போட்டுக்கொண்டு மூடிட்டு அலையுதுக ? பதில் தேடுவீர்களா மேடம் ?

ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34) புரிந்ததா ஆண்கள் தான் பெண்களை நிர்வாகம் செய்வார்களாம் செய்யனுமாம் மேடத்தின் முற்ப்போக்கு சிந்தனை இதனை ஏற்கிறதா? அல்லது சில ,பல லாபங்களுக்காக அட்ஜஸ்ட் செய்து கொள்கிறதா?

“(நபியே) விசுவாசமுள்ள பெண்களுக்கு நீர் கூறுவீராக. அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும்.(1)

தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். (2)

தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது. (3)

இன்னும், தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். (4)

மேலும், தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்,அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள், ஆகிய இவர்களைத் தவிர, தங்களுடைய உடல் அழகை வெளிப்பபடுத்தக் கூடாது. (5)

மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரம் வெளிப்படுமாறு தங்கள் கால்களை தட்டி நடக்க வேண்டாம். (6)

மேலும், விசுவாசிகளே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்), நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். [அல் குர்ஆன் 24:31]

( 6 )கால்களை தட்டி நடக்ககூடாது என்று முஸ்லிம் பெண்களுக்கு குரான் கட்டளை இடுகிறது .

நான் ஒருவருக்கு ஸஜ்தா செய்ய (சிரம் பணிய) கட்டளையிடுபவனாக இருந்திருந்தால் பெண்ணை அவள் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 1079
// ஒரு நாள் நபி நாயகம்(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரான உம்முஸல்மா(ரலி), மைமூனா(ரலி) ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே "கண் தெரியாத "அப்துல்லாஹ் இப்னு உம்முமக்தும் வந்தார்கள். உடனே அவ்விருவரையும் வீட்டினுள் செல்லுமாறு உத்தரவிட்டார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். அவருக்குத்தான் கண் தெரியாதே! எங்களைப் பார்க்கவும் தெரிந்து கொள்ளவும் முடியாதே! யாரஸுலல்லாஹ்!’ எனக் கேட்டார்கள் மனைவியர் இருவரும். ‘சரிதான், நீங்களிருவரும் குருடர்கள் இல்லையல்லவா? நீங்கள் அவரைப் பார்க்க மாட்டீர்களா? எனத் திருப்பிக் கேட்டதும் உள்ளே சென்று மறைந்து கொண்டார்கள். (திர்மிதீ, நஸயீ,அபூதாவூது)

என்ன சபரிமாலா மேடம் மேட்டர் புரியுதா ?வந்தவர் கண் தெரியாதவர் அவர் முஹம்மதின் மனைவியை பார்க்க வாய்ப்பு இல்லை அனால் முஹம்மது தன் மனைவிகளை பார்த்து சொல்கிறார் நீங்கள் அவரை பார்ப்பீர்கள் அதாவது சைட் அடிப்பீர்கள். அதனால் உள்ளே போங்கள் என்கிறார். இப்படி உங்க கணவர் உங்களை சொன்னால் என்ன மேடம் செய்வீங்க ? என்று நான் கேட்க மாட்டேன் இஸ்லாத்திற்கு சொம்பு தூக்கும் முன்பு சிந்தித்து பாருங்க மேடம் ..

தனது நறுமணத்தை மற்றவர்கள் நுகர வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு சென்றால் அவள் விபச்சாரி என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர். நஸாயீ 5036

பாடிஸ்ப்ரே அடித்தால் விபச்சாரியாம் ? ....இது ஓகேவா?

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

‘ஆண்கள் பெண்களைப் போலவும், பெண்கள் ஆண்களைப் போலவும் ஆடை அணிவதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.’ (நூல் புஹாரி ,முஸ்லிம்) இன்று ஆண்கள் அணியும் பேண்ட் டீ சர்ட் அணிகிறார்கள் தலை முடியை கட் செய்துகொள்கிறார்கள் .இதெல்லாம் முஹம்மதின் இஸ்லாத்தில் சபிக்க கூடியவை நீங்க கூட தலை முக்காடு இல்லாமல் இருக்கீங்க .
இன்னும் எழுத நிறைய இருக்கு. ...அடுத்து யாராவது ஒரு முற்ப்போக்குவாதி வருங்க ....அவர்களுக்கும் எடுத்து சொல்வோம் இஸ்லாத்தை .

மறுபடியும் உங்களை போன்ற முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு கூறிக்கொள்வது இதுதான் நீங்க இஸ்லாத்தை பரப்புங்க தவறில்லை இஸ்லாத்துக்கு மாறுங்க தவறில்லை அது உங்க விருப்பம் சார்ந்த விடயம் ஆனால் அதை முற்போக்கு பகுத்தறிவு முக மூடி போட்டுக்கொண்டு செய்யாதீர்கள் . பகுத்தறிதலையும் முற்ப்போக்கு சிந்தனைகளையும் அசிங்கப்படுத்தாதீர்கள் என்று கை கூப்பி கேட்டுகொள்கிறேன் ..இனியும் முற்போக்குவாதிகள் முற்போக்கு சிந்தனை என்ற பெயரால் இஸ்லாம் சிறந்த மார்க்கம் என்று பிடில் வாசிக்கவேண்டாம் எல்லாவற்றையும் கிழித்து தொங்கவிட்டாச்சு என்பதை அறிந்துகொள்ளுங்கள் மௌலவிகளின் வார்த்தை ஜால தக்கியாக்களில் சிக்கி உங்களை நீங்களே அசிங்கப்படுத்திகொள்ளாதீர்கள் பார்ப்பனிய முட்டாள்தனத்தை அயோக்கியதனத்தை தனியாக விமர்சியுங்கள் அதை இஸ்லாத்துடன் கோர்க்க வேண்டாம் இரண்டும் ஒன்றுக்கொன்று சலைத்தல்ல .

அன்புடன் சாதிக் சமத் .
(இணைப்பாளர் தமிழ்நாடு Ex முஸ்லிம்கள் 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard