அன்பர் ஆறகழூர் வெங்கடேசன்.பொன் அவர்கள்,ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, '' சிவனா ? பெருமாளா ?'' என்று கேட்டிருந்தார்.அச்சிற்பத்தில் இடக்கரம்,ஊரு ஹஸ்தத்துடன் காட்சியளிக்கிறது.பின்னூட்டங்களில்,கடியயஸ்த முறை என்றும் அர்த்தசந்திர ஹஸ்த முறை என்றும் அன்பர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். ஒரு அன்பர், '' பெரும்பாலும் பெருமாளாக இருக்கவே வாய்ப்புள்ளது... இடது கை தொடையில் வைத்திருக்கும் ஊறு ஹஸ்தம் முருகன் அல்லது பெருமாளுக்கே...'' என்று குறிப்பிட்டிருந்தார்.
அஃது ஊரு ஹஸ்த முத்திரை யாகும்.
சரி, சிவப்பரம்பொருள் ஊரு ஹஸ்த முத்திரை கொண்டு காட்சியளிக்கிறாரா?
ஆம்; சிவப்பரம்பொருள்,சில திருமேனிகளில் ஊரு ஹஸ்தம் கொண்டு காட்சியளிக்கின்றார்.சில எடுத்துக் காட்டுகள்=
௧. சிவப்பரம்பொருளின் மகேசுவர மூர்த்தங்களுள் ஒன்றான கேவல சந்திரசேகரர் தம் திருமேனியில்,ஊரு ஹஸ்தம் கொண்டு காட்சியளிக்கிறார்.
[ சந்திரசேகரர் வடிவம் மூன்று நிலைகளில் இருப்பதாக சுப்பிரபேத ஆகமம் கூறுகிறது.௧.கேவல சந்திரசேகர் - கேவல என்றால் தனித்து நின்றலாகும். இந்த கேவல சந்திரசேகரர் நிலையில் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி, தனித்து நிற்கிறார்.௨.உமா சந்திரசேகர் - இவ்வடிவில் உமையுடன் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி நிற்கிறார்.௩.ஆலிங்கண சந்திரசேகர்- இவ்வடிவில் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி உமையை தழுவியநிலையில் இருக்கிறார்.]
சான்றாக,ஹைதராபாத் சாலர்ஜங் அருங்காட்சியகத்தில் உள்ள கேவல சந்திரசேகரின் திருமேனி புகைப்படத்தினை இணைத்துள்ளேன்.
இத்திருவுருவம், அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படுகிறது.சிவபெருமான் காளையின் மீது சாய்ந்தபடி, இடக்காலை ஊன்றி, வலக்காலை ஒய்யாரமாக தாங்கியபடி இடபத்தில் தலை மேல் தனது வலத்திருக்கரத்தினை வைத்து, இடதித்திருக்கரத்தினை ஊரு ஹஸ்தமாகக் கொண்டு நிற்கும் வடிவம் இடபாந்திகராகும். இவ்வடிவத்தில் இடபுறம் உமையம்மை காட்சி தருவார்; அல்லது தனித்தும் காட்சி தருவார்;அல்லது அர்த்தநாரியாகக் காட்சி தருவார்;அப்பொழுது ஊரு ஹஸ்தம் இடவலமாக மாறுவதும் உண்டு.
எடுத்துக்காட்டாக,எட்டாம் நூற்றாண்டின் கோயிலான,கர்நாடகா,பட்டடக்கல், விருபாட்சர் கோயில் ரிஷபாந்திகர் சிற்பத்தின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
௩.பாசுபத மூர்த்தி = அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றான சிவபெருமான் அர்ச்சுனனுக்குப் பாசுபதக் கணையை அளித்த வடிவம் பாசுபத மூர்த்தி திருவடிவமாகும்;இத்திருவுருத்தில் சிவப்பரம்பொருள், ஊருஹஸ்தம் கொண்டு காட்சியளிக்கிறார்.
சான்றாக, எட்டாம் நூற்றாண்டின் கோயிலான,கர்நாடகா,பட்டடக்கல், விருபாட்சர் கோயில் பாசுபத மூர்த்தி சிற்பத்தின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
ஊரு ஹஸ்தம் பற்றிய சிறு விளக்கம்=
ஊரு ஹஸ்தம் என்பது இந்து சமய இறை சிற்பங்களிலும், இறை ஓவியங்களிலும் இடத் தொடையின் மீது கையை வைத்திருக்கும் அமைப்பாகும். நின்ற திருமேனி சிற்பங்களில் இடத்திருக்கரம் தொடையின் மீது அமைக்கப்பட்டிருக்கும்.. இதனை ஊரு முத்திரை என்றும் அழைப்பர். ஊரு என்றால் தொடை என்ற பொருளில் இந்த முத்திரை அழைக்கப்படுகிறது.
பொதுவாக சிற்பங்கள் மற்றும் ஓவியங்களில் இடக் கையே தொடையின் மீது வைக்கப்பட்ட நிலையில் உள்ளது. அவ்வாறு வைக்கப்பட்ட கையானது அழுந்தப் பற்றாமல் இருக்குமாறு உள்ளது..
ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலின் அம்பாள் சந்நிதி சிறப்பு வாய்ந்தது. அம்பிகையின் அருள் பீடங்களில் ஒன்றாகவும், மந்திர பீடமாகவும் திகழ்கிறது இது. இதனாலேயே, அம்பாளுக்கு மந்திர பீடேஸ்வரி என்றொரு திருநாமமும் உண்டு. சுவாமி சந்நிதிக்கு வடக்குப் புறத்தில் (சுவாமிக்கு இடப் புறத்தில்), கிழக்குப் பார்த்த தனிச் சந்நிதி. அம்பாள் அழகென்றால்... கொள்ளை அழகு! தாமரைப் பீடத்தில், நின்ற திருக்கோலத்தில் அருள் வழங்கும் சதுர்புஜ நாயகி. அம்பாளின் கரங்கள் சற்றே வித்தியாசமானவை. வலது மேல் கரத்தில் கெண்டி, இடது மேல் கரத்தில் ஜப மாலை, வலது கீழ்க் கரம் அபய ஹஸ்தம், இடது கீழ்க் கரம் ‘ஊரு ஹஸ்தம்’ (தொடை மீது ஊன்றியபடி). பல கோயில்களில் விஷ்ணு துர்க்கை இவ்வாறு ‘ஊரு ஹஸ்தம்’ தாங்கியிருப்பதைக் காணலாம் (திருப்பதி வேங்கடேசப் பெருமாள் ஊரு ஹஸ்தம் கொண்டிருப்பார்).
தெய்வத்தின் குரல் என்னும் நூலில் இருந்து='' ஸாதாரணமாக துர்கை — ஸுப்ரஹ்மண்ய மூர்த்தங்களில் சிலதுகூட– வலது பக்கம் அபய ஹஸ்தமும், அதற்கு நேரான இடது ஹஸ்தம் தொடையில் ‘ஊரு ஹஸ்தம்’ என்றும் இருக்கின்றனவென்றால் வேங்கடரமண ஸ்வாமியோ வலது ஹஸ்தத்தில் வரமுத்ரையும் அதற்கு நேர் இடது ஹஸ்தம் ஊருவிலுமாக இருக்கிறார்.''
சரி தலைப்பிற்கு வருவோம்!
அன்பரின் பதிவைப் பார்த்தவுடன்,தற்பொழுது மெக்ஸிகோ என்னும் வட அமெரிக்கக் கண்டத்து நாட்டில் உள்ள '' சங்கு,சக்கரமேந்திய சிவப்பரம்பொருள்,ஊரு ஹஸ்தத்துடன் வலப்பக்க இடுப்பில் பாலாம்பிகையுடன் காட்சியளிக்கும் கிரானைட் சிற்பம் நினைவுக்கு வந்தது.
[ எப்படியோ மெக்ஸிகோவிற்குப் போய்விட்டது!]
'' 1stdibs '' என்னும் ஏல நிறுவனம், இச்சிற்பத்திற்கு $23,125 விலை நிர்ணயித்துள்ளது![ பாரதநாட்டில் 15,92,850 ருபாய் ]
சங்கு சக்கரமேந்தி, ஊரு ஹஸ்தத்துடன் காட்சி தரும் இத்திருமேனி சிவப்பரம்பொருளுடையது என்பதற்குச் சான்று ,மகுடத்தில் உள்ள கங்கை மற்றும் வலப்பக்க இடையில் உள்ள பாலாம்பிகை முகமுமாகும்!
இப்படிப்பட்ட திருவுருவை அடியேன் கண்டதில்லை! இத்திருமேனி பற்றி, '' MUZEION'' என்னும் நிறுவனத்தின், ''SOUTH INDIAN GRANITE SCULPTURE '' என்னும் கையேட்டில் குறிப்புகள் உள்ளன.[ அவற்றையும் இப்பதிவில் இணைத்துள்ளேன்.]
இத்திருமேனி பற்றி '' 1stdibs '' இணையம் தரும் செய்திகள் கீழே=
1stdibs,IS THE WORLD’S LEADING ONLINE MARKETPLACE FOR THE MOST BEAUTIFUL THINGS ON EARTH.
Granite Shiva with Attributes in His Hands and Conical Tiara $23,125
Granite sculpture of Shiva standing, four armed, holding a conch in his left hand and a chakra in his right. His front arm in Katia Balambika over the hip. He wears a conical headdress or Tiara with long curls falling onto his shoulders forming the Mighty Ganga river and sending unto earth. He also wears elaborate jewelry all around his body with fine dotty. Granite.
Details= PLACE OF ORIGIN-INDIA
DATE OF MANUFACTURE 15th Century
PERIOD 15th Century and Earlier
MATERIALS AND TECHNIQUES Carved Granite
CONDITION Excellent
DIMENSIONS H 33 in. x W 19 in. x D 6 in. H 83.82 cm x W 48.26 cm x D 15.24 cm
SELLER LOCATION San Pedro Garza Garcia, MX
SELLER REFERENCE NUMBER IN-084
REFERENCE NUMBER LU3172311814963
புகைப்படங்கள்=
முதற்கண்,மெக்ஸிகோ என்னும் வட அமெரிக்கக் கண்டத்து நாட்டில் உள்ள '' சங்கு,சக்கரமேந்திய சிவப்பரம்பொருள்,ஊரு ஹஸ்தத்துடன் வலப்பக்க இடுப்பில் பாலாம்பிகையுடன் காட்சியளிக்கும் கிரானைட் சிற்பம் படங்கள்;ஹைதராபாத் சாலர்ஜங் அருங்காட்சியகத்தில் உள்ள சந்திரசேகரின் திருமேனி படம்;எட்டாம் நூற்றாண்டின் கோயிலான,கர்நாடகா,பட்டடக்கல், விருபாட்சர் கோயில் ரிஷபாந்திகர் சிற்பத்தின் புகைப்படம் ;எட்டாம் நூற்றாண்டின் கோயிலான,கர்நாடகா,பட்டடக்கல், விருபாட்சர் கோயில் பாசுபத மூர்த்தி சிற்பத்தின் புகைப்படம்; '' MUZEION'' என்னும் நிறுவனத்தின், ''SOUTH INDIAN GRANITE SCULPTURE '' என்னும் கையேடு முதற்பக்கம்;அதிலுள்ள சங்கு,சக்கரமேந்திய சிவப்பரம்பொருள்,ஊரு ஹஸ்தத்துடன் வலப்பக்க இடுப்பில் பாலாம்பிகையுடன் காட்சியளிக்கும் கிரானைட் சிற்பம் பற்றிய குறிப்பு.[ புகைப்படங்களுடன் அவற்றின் செய்திகளையும் இணைத்துள்ளேன்.]நிறைவாக,அன்பர் ஆறகழூர் வெங்கடேசன்.பொன் அவர்கள் பகிர்ந்த புகைப்படம்.
நன்றி=௧. '' 1stdibs '' இணையம்; ௨. கர்நாடகா தொல்லியல் துறை;௩.'' MUZEION'' என்னும் நிறுவனத்தின், ''SOUTH INDIAN GRANITE SCULPTURE '' என்னும் கையேடு;௪.நவ பழனிக்கோ அறநிறுவனம் இணையப்பக்கம்.