New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஈவெராவுக்கு பெரியார் என்பது பொருந்துமா??


Guru

Status: Offline
Posts: 24778
Date:
ஈவெராவுக்கு பெரியார் என்பது பொருந்துமா??
Permalink  
 


 

பெரியார் என்பது ஈவெராவுக்கு பொருந்துமா??

 

16514_213579588787071_589367442_n.jpg
 
 
திராவிடம் என்னும் தீய சக்தியால் மைனர் ஈவேரா தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பல துரோகங்களை செய்துள்ளார். அவரை பற்றிய சில செய்திகள் கீழே. இவற்றை அறிந்த பின்பும் அவருக்கு பெரியார் என்னும் சொல் பொருந்துமா என்று பாருங்கள்..!
 

1. சிறு வயதிலேயே தவறான சகவாசங்கள் உடையவர். அடிக்கடி காவிரி கரையில் ஈவேரா தலைமையில், கூட்டமாக கும்மாளம் நடக்குமாம். நாகம்மை, ஈவேரா பெற்றோருக்கு தெரியாமல் வீட்டிலிருந்து உணவுகளை அனுப்பி வைப்பாராம். ஈவேரா வீட்டை விட்டு வெளியேறியபோது அவரது தந்தை முதலில் வெளியூர்களில் இருக்கும் பெரிய விபசார விடுதிகளில்தான் தன் மகனை தேட சொல்லி ஆள் விட்டாராம். ஈவேராவின் இந்த வாழ்க்கை அவரது கருத்து, எழுத்து, வாழ்க்கை அனைத்திலும் பிரதிபலித்தது. (பெரியார் வாழ்க்கை புத்தகம்)

 

2. ‘காதல்-கற்பு, எல்லாம் பொய். வாழ்க்கையில் இன்பமும் திருப்தியும்தான் முக்கியம். அதனால் ஆணோ/பெண்ணோ எத்தனை போரையும் மணக்கலாம், போதவில்லையேனில் அதற்க்கு மேலும் போகலாம்’ என்பன போன்ற கருத்துக்களை சொன்னவர். (குடியரசு இதழில் தலையங்கம்)
 
3. பாரத விடுதலையின் போது நீங்கள் இந்தியாவின் பிற பகுதிகளை விட்டு போங்கள். தமிழ்நாட்டை நீங்கள் தான் ஆள வேண்டும் என வெள்ளையனிடம் மனு கொடுத்தவர், இந்த தியாகி.
 
4. பாகிஸ்தான் விடுதலையின் போது ஜின்னாவுக்கு கடிதம் எழுதி நீங்கள் பாகிஸ்தான் வாங்கியது போல எங்களுக்கு தனிநாடு வேண்டும். நாட்டை உடைக்க உதவி செய்யுங்கள் என கேட்டவர். இவரின் உண்மை முகம் அறிந்த ஜின்னா மறுப்பு தெரிவித்து ஒதுக்கி விட்டார்.
 
5. மொழி வாரி மாநில பகிர்வின் போது தமிழகத்தின் உரிமை குரல் ஒலிக்க விடாது திராவிட குரலால் துரோகம் செய்தார். போராட்டங்களை வலுவிழக்க செய்தார். இதனால் நமக்கு வந்திருக்க வேண்டிய பெரும்பாலான பகுதிகள் கேரளா ஆந்திரா மற்றும் கர்நாடகம் பங்கு போட்டது. அப்போது முறையாக குரல் எழுப்பி இருந்தால் இன்று காவிரியும், முல்லை பெரியாரும், சிருவானியும், கிருஷ்ணாவும், பாலாரும் நமது முழு சொத்தாக இருந்திருக்கும். இன்று அனைவரிடமும் பிச்சைகாரர்களாக இருக்கிறோம்.
 
6. தமிழை காட்டு மிராண்டி மொழி என்றார். ஆங்கிலத்தை ஆட்சிமொழியாக்க போராட்டம் நடத்தினார்..! (மொழி வாரி மாநில பகிர்வின் போது)
 
7. வெள்ளைக்காரன் நாட்டை விட்டு வெளியேறும் முன், மறைமுகமாக நாட்டை நிரந்தரமாக அடிமைபடுத்த இந்தியாவின் நல்ல விஷயங்கள் சீர்குலைக்க எண்ணினான். அவை, குடும்ப கலாசாரம் கொண்ட இந்திய சமூக கட்டமைப்பை உடைப்பது(குடும்பங்களாக உள்ள சமூகத்தை தனிமனிதர்களாக மாற்றுவது), கல்வி முறை சிதைப்பு, நாட்டு மாடுகள் கொள்ள பசுவதை கூடம் போன்றவை. வன்கொடுமை மற்றும் பெண்ணடிமை மட்டும் முன் வைத்து வெள்ளையனின் அனைத்து கனவுகளையும் ஈவேராவின் கொள்கைகள் நிறைவேற்றும்படி இருந்தது.
 
8. இந்தியா/தமிழகம் என்றாலே தாழ்வான பார்வை/மனப்பான்மை வரும்படி செய்தார். இதை திராவிட விஞ்ஞானிகள் தீவிரமாக பரப்பினர். இதனால் உலகத்துக்கே முன்னோடிகளாக விஞ்ஞானம் பயிற்றுவித்த தமிழன் தன் பாரம்பரிய அறிவு வளத்தை இழந்தான். இதனால் வெள்ளையனின் நிரந்தர அடிமையானான். இன்று அதை அடிப்படையாக கொண்டு வெளிநாட்டுக்காரன் பல முன்னேற்றங்களை கொண்டுள்ளான். தற்போது மிகவும் சிரமப்பட்டு ஆய்வாளர்கள் நமது பாரம்பரிய அறிவியலை தொகுத்து கொண்டிருக்கின்றனர்.
 
9. கடவுளை எதிர்க்கிறேன் என்று ஒரு மதத்தை மட்டும் எதிர்த்தார். இவர் முன் வைத்த மக்கள் பிரிவினை/பெண்ணடிமை போன்றவை மற்ற மதத்திலும் இருந்த போதும் எல்லா மதங்களை எதிர்க்காமல் சில மதங்களை ஆதரித்தார். திராவிட தனிநாட்டுக்காக ஜின்னாவிடம் கையேந்தியபோது இவரின் மதச்சார்பு கொள்கையின் காரணம் பல் இளித்தது. இந்திய அறிவும்-கலாச்சாரமும்-பொருளாதாரமும் அழிய வேண்டுமென எண்ணியதால் மட்டுமே இந்த துரோகத்தை செய்தார்.
 
10. பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் முதலில் பார்ப்பானை கொல் என ஒரு சாதியின் மேல் வன்முறையை தூண்டிவிட்டார். ஒரு சாதியில் பிறந்ததால் ஒருவன் தீயவனாக முடியும் என்று நம்பும் இவருக்கு சாதி ஒழிப்பு பற்றி பேச என்ன யோக்கியதை உண்டு..??
 
11. தாலியை அகற்றுவது, கர்ப்பப்பையை அகற்றுவது என இவரது கொள்கைகள் இந்திய/மனித இனத்திற்கே கேலிகூத்தானவை. 70 வயதில் திருமணம் செய்தபோது இவரது அத்தனை பெண்ணிய கொள்கைகளும் மண்ணை கவ்வின.

10646648_957338880948810_123565156629038
கல்யாணக்கோலத்தில் மணமகனாக ஈவெரா 

12. திராவிட இயக்கங்களுக்கு ஆங்கில நிதியுதவி வந்துகொண்டு இருந்தது என்பது பல வரலாற்று-சமூக-அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.
 
13. இன்றும் ஈவெரா குடும்ப சொத்துக்கள் ஈரோட்டில் ஏராளம். அவரது குடும்ப உறுப்பினர்கள, மத்திய மாநில காட்சிகளில் பெரிய பொறுப்புகளில் உள்ளனர். (ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் அதில் ஒருவர்). நாட்டுக்காக சொத்தை கொடுத்தார்-தியாகி என்பதும் பொய்.
 
மைனர் ஈவேராவின் துரோங்களில் இவை கொஞ்சம் தான். இதன் பின்னரும் நீங்கள் ஈவேரா வை பெரியார் என்று சொல்ல நினைக்கிறீர்களா..??
 
மேலும் விரிவாக ஈவெரா பற்றி அறிய பின்வரும் சுட்டியை கிளிக் செய்யவும். இந்த கட்டுரை தொடர் புத்தகமாக வந்தது. எழுதியவர் ஒன்னும் பிராமணர் அல்ல. பட்டியல் சாதியை சேர்ந்த ஒரு தேர்ந்த அறிஞர்.

பெரியாரின் மறுபக்கம்:
 
ஜெர்மனி நிர்வாண சங்க உறுப்பினரான மைனர் ஈவெரா.. "ஜெர்மன சுற்றுப்பயணம்" சென்ற ஈவெரா அங்குள்ள கம்யுனிஸ்ட்கள் உட்பட பலரையும் சந்தித்து பின்னர் ஞானோதயம் பெற்று நிர்வாண சங்கத்தில் உறுப்பினரானார்!

"கற்பு வேண்டாம்; வாழ்க்கையில் இன்பம் திருப்தி தான் முக்கியம்; அதனால் ஒரு ஆணோ-பெண்ணோ எத்தனை பேரையும் மணக்கலாம். போதவில்லை என்றால் அதையும் மீறி எத்தனை பேரோடும் போகலாம்" ஈவெராவின் என்ற தத்துவ முத்துக்களின் பின்னணி புரிகிறதா..?? (ஆதாரம்: குடியரசு இதழ்-தலையங்கம்)
 
எத்தனை பேர், இனி ஈவெரா வை பெரியார் என்று சொல்வீர்கள்..? இனி கறுப்பு சட்டை போட்டவன், திராவிட என்ற வார்த்தையை வெளியில் சொல்பவனையும் அவன் வீட்டு பெண்கள் மேலேயும் உங்களுக்கு என்ன அபிப்பிராயம் ஏற்படும்..??


nudist+club.jpg

கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை கைவிட சொல்லி மத்தியில் இருந்து கோரிக்கை வந்த போது, "அதை நிறுத்துவது என் கையில் இல்லை; ஈரோட்டில் நாகம்மை (ஈவேரா மனைவி) பாலாம்பாள் (ஈவேரா சகோதரி) என்ற இரண்டு பெண்களின் கையில் தான் இருக்கிறது" என்றார். நாம் பாடப் புத்தகத்தில் படித்திருப்போம்.. கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் "பெரியார் ஐநூறு தென்னை மரங்களை வெட்டினார்" என்று. இதன்மூலம், பெரியார் என்ற ஹீரோவால் எதிர்க்கப்பட்டதால் கள் தீமையானது என்று பிஞ்சுகள் மனதில் பதிந்தது.
 
பிற்காலத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் ஈவேரா. "இந்த காங்கிரஸ்காரன் பேச்சைக் கேட்டு நான் தப்பு பண்ணிட்டேன். கள் போதை பொருள் இல்லை. அது நல்ல மருந்து. என் சகோதரி பாலாம்பாள் கணவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. ஒரு மரத்து கள்ளை குடித்து வா சொல்லியதால் குடித்து வந்தார். நலமாக இருந்தார். சமீபத்தில் கள் குடிப்பதை நிறுத்தியவுடன் வயிற்று வலி அதிகமாகி இறந்து போனார். கள்ளை கடையில் வைத்து விற்றால் தான் கலப்படம் நடக்குது. மரத்தடியிலேயே விற்றால் நாட்டுக்கும், மனிதர்களுக்கும் நல்லதே!" என்றார். 1962 ல் குடியரசு இதழிலும் இந்த செய்தி வந்துள்ளது.
 
இதுமட்டுமல்ல, பஞ்சகவ்யத்தையும் இதே ஈவேரா தான் பழித்தார். ஆனால், இன்று பஞ்சகவ்யம் மூலம் தீராத வியாதிகள் தீருகிறது; பல லட்சம் ஏக்கர் நிலம் இயற்கை விவசாயதிற்கு திரும்பியுள்ளது. பல கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர். இதன்மூலம் நாம் தெரிந்துகொள்வது,
 
1. தி.க. காரர்கள் எதையும் முழுமையாக ஆராயாமல் மூடநம்பிக்கை என்று எதிர்ப்பார்கள்.
 
2. வெளியுலகிற்கு ஒரு பாடம் சொல்லிவிட்டு தங்கள் வீட்டினருக்கு தேவை என்றால் அதை உடைக்கவும் தயங்கமாட்டார்கள் (பாலாம்பாள் கணவருக்கு பல வருஷம் கள் குடிக்க வைத்தது போல)
 
3. நம் கல்விமுறையும், மாநில சர்க்காரும் இந்த உண்மைகளை மறைத்து கள்ளைப் பற்றி இன்னும் தவறான பிம்பத்தையே ஏற்படுத்தி வருகிறது. பாட புஸ்தகங்களை/கல்விமுறையை நம்பாதீர்கள். சர்க்காரும் கல்விமுறையும் நம்மை முட்டாளாகவே வைத்திருக்கும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார்
நலங்கிள்ளி

பெரியாரின் மொழிக் கொள்கை ஊனமானது!

இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழ் படித்தேன். இந்த இதழில் "புதியன விரும்பு" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றைத் த. உதயச்சந்திரன் எழுதியுள்ளார். .

தமிழ்நாட்டுக்கு 1965ஆம் ஆண்டு கிண்டி பொறியியல் கலலூரியில் இந்தியாவிலேயே முதன் முதலாக கணினி அறிமுகம் ஆன கதையைக் கூறுகிறார் உதயச்சந்திரன். அந்தக் கணினியின் பெயர் ஐபிஎம் 1620. இது ஒரு பெரிய சாதனை என்பதில் ஐயமில்லை.

அந்தக் கணினி யைப் பெரியார் கண்டாராம். அறிவியல் வளர்ச்சி கண்டு பூரித்துப் பேசினார். இந்தக் கருவிக்குத் தமிழில் என்ன என்று கேட்கிறார். கூட இருந்தவர்கள் முழிக்கிறார்கள். உடனே பெரியார் "நீ கம்யூட்டரைக் கண்டுபிடித்திருந்தால்தானே அதற்குப் பெயர் இருக்கும்" எனக் கிண்டலடித்தார் எனக் கூறுகிறார் உதயசந்திரன்.

பிறகு அவரே கூறுகிறார், கணினிக்கு ஒரு தமிழ்க் கலைச்சொல் ஆக்க வேண்டிய தேவையைப் பெரியார் உணர்த்திச் சென்றதாகக் கூறுகிறார். இது அப்பட்டமான தன் முரண்பாடு இல்லையா?

நீ ஒரு பொருளைக் கண்டுபிடித்திருந்தால்தானே அதற்குப் பெயர் இருக்கும் என்று பெரியார் கூறியதாக அல்லவா உதயசந்திரன் பதிவு செய்கிறார். பிறகு அவரே பெரியார் தமிழ்க் கலைச்சொல்லாக்கத்தில் ஆர்வம் காட்டியதாகக் கூறுகிறார் உதயசந்திரன். நீ ஒன்றைக் கண்டுபிடித்திருந்தால்தானே பெயர் வைப்பதற்கு எனப் பெரியார் கிண்டலாக அல்லவா கேட்கிறார். இதில் பெரியாரின் கலைச்சொல் ஆர்வம் எங்கிருந்து வந்தது.

ஒரு பொருளை உருவாக்கியவர் அதற்குச் சூட்டும் பெயரையே உலகின் நாடுகளும் பயன்படுத்த வேண்டும் எனப் பெரியார் கூறுகிறார். இது அவர் கூறும் பகுத்தறிவுக்கே புறம்பானது இல்லையா? ஒரு பொருளை எந்த மொழிக்காரர் கண்டுபிடித்திருந்தாலும் பிற தேசங்கள் அவரவர் மொழிகளில் அந்தக் கலைச்சொல்லுக்குப் பெயர் சூட்டுவதே உலக வழக்கம்.

1. ஆங்கிலத்தில் அறிவியல் கலைச்சொற்கள் இருக்கும் போது அவற்றை ஏன் தமிழாக்க வேண்டும். அவற்றை அப்படியே பயன்படுத்திக் கொள்ள வேண்டிதுதானே என்றவர்தான் பெரியார்.

2. தமிழ் எழுத்துகளையே அழித்து விட்டு, அவற்றை ஆங்கில வரிவடிவத்தில் எழுதலாமே என்று யோசனை கொடுத்தவர்தான் பெரியார். தமிழ் நெடுங்கணக்கைக் கூட தமிழ் வரிவடிவில் எழுதுவது பிடிக்காத பெரியார் தமிழில் கலைச்சொல் உருவாக்க நினைத்தார் என்பது பெரும் பிழை அல்லவா?

3. 1967இல் திமுக ஆட்சிக் கட்டில் ஏறியதும், கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வி கொண்டு வர நினைத்தார் அண்ணா. பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்தவன் நான் என்றெல்லாம் பீற்றிக் கொள்பவர்கள் தமிழ்வழிக் கல்வியைக் கொண்டு வருகிறேன் என்றால், அது மக்களை முட்டாள்களாக்காதா எனக் கேட்டவர் பெரியார். கல்லூரியில் தமிழ்வழிக் கல்வியையே விரும்பாத பெரியார் உள்ளபடியே தமிழில் அறிவியல் கலைச்சொல் உருவாக்க நினைத்தார் என உதயச்சந்திரன்தன் கூறுவது எப்படி?

4. பெரியார் வாழ்நாள் முழுதும் தமிழ்வழிக் கல்வி மறுத்து ஆங்கிலவழிக் கல்வியை ஆதரித்து வந்தார் என்பதே உண்மை. இல்லை என்றால் வீட்டு வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்தில் பேசு எனக் கூறியிருப்பாரா?

5. பெரியாரின் இந்திய, பார்ப்பனிய எதிர்ப்பு பாராட்டத்தக்கது. ஆனால் அவரின் மொழிக் கொள்கை ஊனமானது என்பதே உண்மை.

- நலங்கிள்ளி.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard