முனைவர் அ.சு. இளங்கோவன் ஒட்டன்சத்திரம்.
தமிழர் வாழ்வியலை அகம் புறம் என்னும் இருபெரும் பிரிவுகளாகக் கண்டனர். இது அறம் பொருள் இன்பம் வீடு என்னும் பகுப்புக்கும் முன்னதாகும். அகம்,அன்பின் சிறப்புக்களைப் பாடித் தனிமனிதர்களிடையே காதல் வாழ்வையும் குடும்ப வாழ்வையும் நெறிப்படுத்தியது. புறம், பொதுவாழ்வையும் மனிதன் உயர்நிலை எய்தும் சிறப்பையும் பாடியது. புறநானூறு தமிழர் பண்பாட்டின் களஞ்சியம். கி.பி. 1600 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பொற்காலம். ஆங்கில வாழ்வியலும் இலக்கியமும் உச்சி எய்தி உலகை வளைக்க வாய்ப்பளித்தன. ஆனால் கி.மு. 300 தொடங்கி கி.பி. 300வரை புறநானூற்றில் தமிழர் பண்பாட்டின் சிறப்புக்கூறுகள் தெற்றென எடுத்துக்காட்டாய்படுகின்றன.
`இந்தியாவின் தேசியப் பண்பாடு’ என்னும் நூலில் எஸ்.அபிட் ஹூசேன் சிந்து சமவெளிப் பண்பாடும் அதனோடியைந்த திராவிடப் பண்பாடும் இந்திய தேசியப் பண்பாட்டுக்கு முக்கியப் பங்களிப்புச் செய்துள்ளன என அறுதியிட்டுரைக்கிறார். அதன அடிப்படைப் பண்புகள் பல புறநானூறு காட்டும் வாழ்வியலில் உள்ளன. பண்பாடு என்னும் சொல்லுக்குத் `திருந்திய பழக்கவழக்கங்களும் மேலான சுவையும்’ என்ற பொருள் கொள்ளப்படுகிறது. கட்டடங்கள், ஓவியங்கள், கோவில்கள், பண்பாட்டின் நினைவுச் சின்னங்கள் எனலாம். தொகுப்பான அமைப்புக்கள், சட்ட நெறிகள், முறைமைகள் ஆகியன பண்பாட்டுக் கூறுகள் எனலாம். கிரேக்கர்களின் அரசியல்,கல்வி, இலக்கியம் மற்றும் ரோமானியர்களின் சட்ட நீதி முறைமைகளும் அவ்வ பண்பாட்டின் முக்கியக் கூறுகள் எனலாம். ஒரு சமூகத்தின் வாழ்வியலைக் கட்டமைத்து உயர்த்தும் மூலாதிரமான மாண்புகள், பண்பாட்டின் சிறப்புக்கூறுகளாகும்.
`இந்தியாவின் தேசியப் பண்பாடு’ என்னும் நூலில் எஸ்.அபிட் ஹூசேன் சிந்து சமவெளிப் பண்பாடும் அதனோடியைந்த திராவிடப் பண்பாடும் இந்திய தேசியப் பண்பாட்டுக்கு முக்கியப் பங்களிப்புச் செய்துள்ளன என அறுதியிட்டுரைக்கிறார். அதன அடிப்படைப் பண்புகள் பல புறநானூறு காட்டும் வாழ்வியலில் உள்ளன. பண்பாடு என்னும் சொல்லுக்குத் `திருந்திய பழக்கவழக்கங்களும் மேலான சுவையும்’ என்ற பொருள் கொள்ளப்படுகிறது. கட்டடங்கள், ஓவியங்கள், கோவில்கள், பண்பாட்டின் நினைவுச் சின்னங்கள் எனலாம். தொகுப்பான அமைப்புக்கள், சட்ட நெறிகள், முறைமைகள் ஆகியன பண்பாட்டுக் கூறுகள் எனலாம். கிரேக்கர்களின் அரசியல்,கல்வி, இலக்கியம் மற்றும் ரோமானியர்களின் சட்ட நீதி முறைமைகளும் அவ்வ பண்பாட்டின் முக்கியக் கூறுகள் எனலாம். ஒரு சமூகத்தின் வாழ்வியலைக் கட்டமைத்து உயர்த்தும் மூலாதிரமான மாண்புகள், பண்பாட்டின் சிறப்புக்கூறுகளாகும்.
""""தமிழர் பண்பாட்டை 2500 ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் வளர்த்துவந்த இலக்கியங்களும் கவின் கலைகளும் எடுத்துக்காட்டுகின்றன. ஆயினும் ஒருசில நூல்களை மட்டும் தமிழர் பண்பாட்டின் களஞ்சியங்களாகக் குறிப்பிட வேண்டுமாயின் ஐந்து நூல்களைக் குறிப்பிடுவேன். அவை தொல்காப்பியப் பொருளதிகாரம், குறுந்தொகை, புறநானூறு,திருக்குறள், சிலப்பதிகாரம் என்பன"" எனப் புறநானூற்றைச் சிறப்பித்துக் கூறுகிறார் வணக்கத்திற்குரிய பிதா தனிநாயகம் அடிகள்.
புறநானூறில் உயர்ந்த உள்ளப் பண்பு, அறம்,வள்ளன்மை, மனித நேயம், அஞ்சாமை, உட்பகை களைந்து உடன் வாழ் மக்கள் குழுவினருடன் கூட்டிணைவு பேணல் ஆகிய உளம்சார் பண்பாட்டுக் கூறுகளைப் பறக்கவும் சிறக்கவும் காணலாம். அத்துடன், நல்லரசு அமைத்திருத்தல்,நீதிநெறி பாராட்டல், அறிவு போற்றல், உழவும் உழைப்பும் போற்றல், `எல்லோரும் நம்மவரே – எல்லோரும் நல்லவரே’என்னும் இனிய அன்புணர்வை வளர்த்தல், குறுகிய செயல்கள் தீர்த்துக் குவலயம் ஓங்கச் செய்தல் போன்ற பழகுமுறை மற்றும் ஆளுமைச் சிறப்புக்களையும் காணலாம்.
பண்வெனப் படுவது பாடறிக் தொழுகல் (நற்றிணை)
பண்புடையார்ப் பட்டுண்டுலகம் (குறள்)
எனப் பாடப்பெறும் பண்பு, செயலாகச் சிறப்பது பண்பாடு. ஊரடவரசந, ஹபசiஉரடவரசந என்பது திருந்தச் செய்யப்படுவது என்றே வரும். பண்ணை பண்படுத்தல் ஆகியனவும் கருதத்தக்க ஒப்புமை கொண்டவை.
1. பரந்த உலக மனப்பான்மை
2. விருந்தோம்பல்
3. ஈகை
4. தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர் எனும் கோட்பாடு
5. என் கடன் பணி செய்து கிடப்பதே
6. அகத்திணை மரபு, புறத்திணை மரபு
7. மான மாண்பு
8. மனத்தூய்மை
9. விடாது முயலல்
10. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் நிகரற்ற மனநிலை
11. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்னும் உயர்ந்த இலட்சியம்
என்பன தமிழர் பண்பாட்டின் அரிய சில கோட்பாடுகள் எனத் தனிநாயகம் அடிகளார் கூறுவது சிறப்பானது.
இளம்பெருவழுதியின் புறப்பாடல் தமிழர் வாழ்வின் உயர்சிறப்புக் கூறுகளைப் பட்டியலிடுகிறது.
உண்டா லம்மஇவ் வுலகம்! இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதெனத்
தமியர் உண்டலு மிலரே: முனிவலர்:
துஞ்சலு மிலர்;பிறர் அஞ்சுவ தஞ்சி;
புகழெனின் உயிருங் கொடுக்குவர்; பழிஎனின்
உலகுடன் வெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே!
இந்தப் பாடல் கைப்பிடிக்க முடியாத ஒன்றைக் கூறுவதல்ல. இத்தகு தமிழர் பண்புகளைத்தம் வாழ்வில் கூரேற்றிப் பயன்கொண்டு தமிழர் இனத்துக்குப் பயன்தந்தோர் பலர். 19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டிலும் இத்தகு கவிஞர், அறிவாளர், தலைவர்கள்,ஓவியர், சிற்பிகள் பலர் நமக்கு வழிகாட்டியதையும் வழிகாட்டுவதையும் காணலாம். உலகம் என்றே இந்தப் பாடலும் முன்னர்ச் சுட்டுகிறது. அவ்வைக்கு, அரிய கருநெல்லிக்கனி தந்த அதியமான், அருளாளர் அப்பர்,மூவேந்தர், பாரி, நள்ளி, ஓரி, ஆய், களி, பேகன், ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதனார் போன்ற பலர் உருக்காட்சிகளாக நம் மனக்கண்முன் தோன்றுகின்றனர்.
இன்னொரு பெருஞ்சிறப்புப் பெற்ற பாடல் அவ்வையார் பாடியுள்ளார்.
நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ
அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ
எவ்வழி நல்லை ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம். 117)
வேளாண்மை சிறந்த நாடுகள் சிறப்புற்றதை ஆற்றங்கரை நாகரிகங்கள் காட்டுகின்றன. மக்கள் அறிவு நலனும் பண்பு நலனுமிருந்தால் தொழிற்புரட்சியால் உயர்ந்ததை பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, அமெரிக்கா, ரசியா காட்டுகின்றன. நுண்மையால், வாழ்க்கை நெறியாலுயர்ந்ததை ஜப்பான் காட்டுகிறது. பாலை நில நாடுகள் உழைப்பினாலும் உயர்நெறிகளாலும், உலகம் தழுவிய ஒட்பத்தாலும் உயர்ந்து நிற்கின்றன. அறிவே ஆற்றல் (முnடிறடநனபந ளை ஞடிறநச) என்பதும் பிறர் நலம்
கருதும் பணியே தலை என்றும் இன்றும் காணமுடிகிறது.
குறுகிய மனப்பாங்கு கொடியதென்று உலகம் தழுவிய சிந்தனை கொண்டனர் தமிழர். கடல் சார்ந்த நாவாய்களும் நிலம் கடந்த படைகளும் வானம் அளந்த வானியலும் கொண்டிருந்தனர். செல்வமும் இன்பமும் பெற்றாலும், அவற்றளவிலேயே நின்றுவிடாது வாழ்வின் உயர்நெறியை அவர்கள் உணர்ந்து உலகுக்கு வழங்கினர். தமிழர் பண்பாட்டின் தலைமைக்கூறு `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் உணர்வு. அதனை வழங்கியது புறம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே; மினொடு
வானந் தண்துளி தலைஇ ஆனாது
கல்பெரு திரங்கும் மலற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணையேல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தமை ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
என்னும் பாடல் தமிழர் பண்பாட்டின் பிழிவும் தெளிவும் ஆகும்.
வீரம்
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (புறம். 312)
என்னும் பொன்முடியார் பாடல் தமிழர்தம் வாழ்வியல் சிறப்புக் கூறாகும். சான்றோன் என்பது இங்கே போர்க்கலை அறிந்த வீரமறவனைக் குறிக்கும்.
களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே (புறம். 277)
செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்த உடீஇ
யாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே (புறம். 279)
படுமகன் கிடைக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்தனளே ( புறம்.273)
போன்ற வரிகள் வீரமே தமிழர் தலைமை மாண்பு என்பதைப் புலப்படுத்தும்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
என்னும் குறளின் நாம் வீரமகன் புகழ்கேட்ட அன்னை பற்றியதாகவே கருதல் வேண்டும் என்று உறுதிபடக் குறிப்பிடலாம்.
அறநெறியை நிலைநாட்ட வீரம் அடிப்படை. நால்வகைப் படையொடும் நன்னெறியொடும் ஞாயிற்றினை வெந்திறலாண்மையுடனும் விளங்கியவர் தமிழர்.
கடுஞ்சினத்த கொல்களிறும்
கதழ்பறிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும்
நெஞ்சுடைய புகல்மறவரும் என
நான்குடன் மாண்டதாயினும் மாண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
என்கிறார் இலவந்திப் பள்ளித் துஞ்சிய நன்மாற பாண்டியனைப் பாடுகிற மருதன்இளநாகனார்.
சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொரு
ஒருங்தகல் படேன் ஆயிற் பொருந்திய
என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாமு
கொடியன்எம் இறையெனக் கண்ணீர் பரப்பி
குடிபழி தூற்றுங் கோலோனாகுக
என்று வஞ்சினம் கூறுகிறான் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழிய பாண்டியன்.
1. குடிகளைக் காக்கவே படைநடத்தி வெல்லுதல்
2. புலவர் இத்தகு ஆற்றலையே புகழுதல்
3. `வெல்’ என்று தூண்டும் வேல் தமிழர் தலையாய போர்க்கருவி ஆகுதல்
4. ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணிய வேற்படை கொண்ட முருகன் தமிழரால் வழிபடப் பெறல்
போன்ற அருஞ்செய்திகள் தமிழர் போர் மரபு,அறஞ்சார்ந்தது. ஓடி ஒளியாதது. வஞ்சகமற்றது எனக் காட்டுகின்றன. எனேவ தமிழர் புறநானூற்றுக் காலகட்டத்தில் யாராலும் வெல்லப்படாத உரிமை அரசர்களாக விளங்கினர். உரோமரும் யவனரும் தமிழர் படையில் இருந்தனர். கடல் கடந்தும் வடக்கிலும் தமிழர் பேராற்றல் செங்கோல் செலுத்தியது. தமிழர் பண்பாடு தாய்லாந்து வரை இன்றும் உண்டு.