முனைவர் வை.சோமசுந்தரம், தமிழ்த்துறைத்தலைவர், ம.இரா.அரசினர்கலைக்கல்லூரி,மன்னார்குடி – 614 001.
பழங்காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வந்த தமிழ்ப் புலவர்கள் மூவேந்தர்களையும்,குறுநில மன்னர்களையும், வள்ளல்களையும் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்தனர். அப்புலவர்கள் பரிசுகள் பெறுவதோடமையாமல் அரசர்களிடமும் பிறரிடமும் காணப்படுகின்ற குறைகளை எடுத்துக்கூறி, அவர்களைத் திருத்தினர் ; உற்ற இடத்தில் உதவிபுரிந்தனர் ; பகை அரசர்களை அறவுரை கூறி நண்பர்களாக்கினர். முற்றுகைகளிலும் படையெடுப்பிலும் ஆண்மையோடு சென்று அறிவுரை கூறினர். அரசியல் நெறி கடந்து செல்பவர்களுக்கு இடித்துரை வழங்கினர்.
அக்கால அரசர்கள் முதலியோர், புலவர்களை நண்பர்களாகவும், உயிர்த் துணைவர்களாகவும், மதிகூறும் நல்ல அமைச்சர்களாகவும் கொண்டு, அவர்கள் கூறும் பொன்மொழிகளைப் போற்றி வாழ்ந்தார்கள். புலவர்கள்,அரசர்கள் தங்களிடத்து வைத்திருந்த நன்மதிப்பிமைப் பயன்படுத்திக் கொண்டு, போர்களங்களுக்குச் சென்று போர்கள் நிகழாவண்ணம் அறிவுரை கூறி, அவர்களைத் தடுத்தி வந்தனர். அப்புலவர் பெருமக்களின் நற்செயல்களால் மக்கள் பெரிதும் நன்மை அடைந்தனர். போர்களம் சென்று, போர் நடைபெறா வண்ணம் காத்து மக்கள் நன்மை அடைய வழிவகுத்த புலவர் பெருமக்களின் அறச்செயல்களை இக்கட்டுரையில் அறியலாம்.
அக்கால அரசர்கள் முதலியோர், புலவர்களை நண்பர்களாகவும், உயிர்த் துணைவர்களாகவும், மதிகூறும் நல்ல அமைச்சர்களாகவும் கொண்டு, அவர்கள் கூறும் பொன்மொழிகளைப் போற்றி வாழ்ந்தார்கள். புலவர்கள்,அரசர்கள் தங்களிடத்து வைத்திருந்த நன்மதிப்பிமைப் பயன்படுத்திக் கொண்டு, போர்களங்களுக்குச் சென்று போர்கள் நிகழாவண்ணம் அறிவுரை கூறி, அவர்களைத் தடுத்தி வந்தனர். அப்புலவர் பெருமக்களின் நற்செயல்களால் மக்கள் பெரிதும் நன்மை அடைந்தனர். போர்களம் சென்று, போர் நடைபெறா வண்ணம் காத்து மக்கள் நன்மை அடைய வழிவகுத்த புலவர் பெருமக்களின் அறச்செயல்களை இக்கட்டுரையில் அறியலாம்.
ஆலத்தூர் கிழார்
சோழநாட்டு ஆலந்தூரில் வேளாண் மரபில் பிறந்தவர் ஆலந்தூர் கிழார். நூலறிவு, பரந்த உள்ளம்,பரிந்துருகும் அன்பு வாய்த்தவர் கிழார். அரசராயினும் தவறு செய்தவழி இடித்துரைக்கும் ஆற்றல் உடையவர். கரிகால் பெருவளத்தானின் மகன் கிள்ளிவளவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்து வந்தான். இவனுக்கு நெடுமுடிக்கிள்ளி, மாவெண்கிள்ளி,வடிவேற்கிள்ளி எனும் பெயர்களும் உண்டு ; இவன் மனைவி கீர்த்தி. இவர்களுக்குப் பிறந்தவன் உதயகுமரன். கிள்ளிவளவன் கல்வியறிவுடையவன்;கவிபாடும் திறனுடையவன்; வீரன்; பெருங்கொடையாளன்;நெறிபிறழாமல் ஆட்சிபுரிந்த நேர்மையன. செவி அறிவுறுத்தல்களைச் செவிமடுத்து செந்நெறி ஒழுகுபவன். புலவரொடு பழகி தமிழ் இன்பம் நுகர்பவன். புலவர்களைக் காக்கும் பாவலன். இறுதிக்காலத்தில் கிள்ளிவளவன்,சேரநாட்டு குளமுற்றம் என்னும் ஊயில் சேரன் ஒருவனோடு போர் புரிந்து இறந்தமையால், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனப்பட்டான்.
கருவூர் முற்றுகை
கருவூரிலிந்து ஆட்சிபுரிந்து வந்த சேரமன்னன் ஒருவன் மீது பகைமை கொண்டு, நால்வகைப் படைகளோடு சேரனை எதிர்த்து, கருவூரை முற்றுகை இட்டான் கிள்ளிவளவன் சேரன் புரிய ஆற்றல் இல்லாதவனாய்,மதிலை அடைத்துக்கொண்டு உள்ளிருந்தான். இச்செய்தி அருள் உள்ளம் கொண்ட ஆலத்தூர் கிழாருக்குத் தெரிந்தது. விரைந்து சென்று, அடைமதிலுக்குள் அகப்பட்டிருக்கும் குடிமக்கள் படும் துன்பம் கண்டு உள்ளம் வருந்தினார்.
இணையில்லா ஒருவனோடு எதிர்த்தும்ப் போரிடுதல் முறையற்றது; வருந்ததத்தக்கது என்று உணர்ந்தார் புலவர். கிள்ளி வளவனைக் கண்டு பின்வருமாறு எடுத்துக்கூறினார். """"அரசே! நீ கருவூரை முற்றுகையிட்டுருக்கிறாய். பொருனை ஆற்றங்கரையில்,காவல் மரங்கள் நின் வீரர்களால் வெட்டப்படுகின்றனர். நகர் மகளிர் ஆற்றங்கரைச் சோலைகளில் கழற்காய் ஆடுவர். அரசன் சேரன், மரங்கள் வெட்டப்படும் ஒசையைக் கேட்டறிந்தும், வெளியே வந்து போர்புரிய அஞ்சி இருக்கும் நிலையில், அவரோடு போர்புரிதல் இழுக்காகும். பிறர் அறியின் உன் செயலைப் பழிப்பர்; சிறிதும் புகழ்ந்துரையார். இதனை ஏற்று சேரனைக் கொள்ளாது விடினும் விடுக! அன்றிப் போர்புரிந்து கொன்றாலும் கொல்லுக! இச்செயலால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை நீயே எண்ணிப்பார். யபம் கூறவேண்டியதில்லை"" என்று மனம் கொள்ளும் வண்ணம் இனிமையாக எடுத்துரைத்தார். புலவர் பொன்னுரையைக் கேட்ட கிள்ளிவளவன் அப்பொழுதே முற்றுகையை கைவிட்டு உறையூர் சென்றனர். எனினும் பின்னாளில் அவன் அவனொடு போரிட்டு கருவூரைக் கைப்பற்றிய செயல் நப்பசலையார் பாடல்களால் அறியமுடிகிறது.
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர் தொன்றுதொட்டு சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. உறையூரில் பிறந்த புலவர் மோசியார் முடவராய் இருந்தார் போலும்! முடமோசியார் எனவும் ஊர் பெயரையும் சேர்த்து, உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என அழைக்கப்பட்டார். இவர் அறிவால் முடவரில்லை. சிறந்த புலவர். சான்றோடு கூடி வாழ்ந்தவர். எதனையும் அஞ்சாது கூறும் ஆண்மையர் . உறையூர் முடித்தலைக் கோப்பெருநற்கள்ளி மோசியைக் காணப் பெரிதும் விரும்பினன். இதை அறிந்த புலவர் சென்றனர்.
நுண்ணறிவுடைய மோசி, அரசனுக்கு நாள்தோறும் தமிழ்ச் சுவை அளித்தார். ஏணிச்சேரியில் அமைந்த மாளிகை அரசன், புலவருக்கு வழங்கினான். பின்னர் சோழனின் ஒப்புதலோடு, மோசியார் கருவூரைத் தலைநகராகக் கொண்டு, சேரநாட்டினை ஆண்ட சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்று, அவனுடன் இருந்து வந்தார்.சோழன் யானை மதம்படல்
உறையூர் சோழன் முடித்தலை கோப்பெருநற்கிள்ளி யானை மீதேறி உலா வந்தான். அவன் யானை மதம் கொண்டது. சோழனுக்குத் துணையாகத் தொடர்ந்து வந்த படையினரும், வாள் மறவரும் எவ்வளவோ அடக்கியும் யானை அடங்கவில்லை. கருவூர் எல்லைக்குள் யானை நுழையவே, வாள் மறவரும் தொடர்ந்தனர்.
சேரன் சீற்றம்
மோசியாருடன், மதிற்புறத்து வெண்மாடத்தில் தமிழாய்வு செய்து கொண்டிருந்த சேரன் தனது நகரை நோக்கி வரும் யானையையும், அதன்மீதிருந்த சோழனையும், பின்னால் வாளேந்தி வரும் வீரரையும்,பாகரையும் ஒருசேரக் கண்டான். பகையரசன் தன்மீது போர்புரிய வருகிறான் என்றெண்ணி சினம் கொண்டான்;கண்கள் சிவந்தன.
மோசியாரிடம் யாவன் என விபரம் கேட்டான். """" யானை மீதேறி வருபவன் சோழன் என்பதையும், யானை ஒழுங்கற்ற நிலையில் ஓடி வருவதையும் தன் நுண்ணறிவால் உணர்ந்து, தன் பழைய நண்பன் தனியே வருவதையும், அதைக் கண்டு சேரன் பெருஞ்சினம் கொண்டிருப்பதையும் உணர்ந்தார். தனித்து வரும் சோழனுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்துவிடக்கூடாது என எண்ணினார். சோழன் பெருமைக்குக் குறைவு ஏற்படாத வகையிலும், சோழனிடத்துச் சேரன் சிறிதும் தீங்கு நினையாதிருக்கும் வகையிலும் புலவர் கூறிய உரைகள் கருதத்தக்கன. அரசே! யானைமேல் வருகின்றன இவன் உறையூர் அரசன்கோப்பெருநற்கிள்ளி. புலித்தோல் கவசம் பூண்ட மார்பினன். பகைவர் எய்த அம்பு பிளந்தமையால் விழுப்புண்பட்ட மார்பினை மார்பினை உடையவன். இவன் இங்கு உன்னோடு போர்புரிய வரவில்லை. இவனது யானை கூற்றுவனைப் போன்றது. அது மதங்கொண்டிருக்கின்றது. அது கடலின் நடுவே செல்லும் திங்கள் போலவும் போலவும் வாள்மறவர் பின் தொடர்ந்த வர இங்கு ஓடி வருகின்றது. இது கருதி இவன் மீது சினம் கொள்ளவேண்டா. மதம் கொண்ட யானை மீதேறி வரும் சோழனும் எத்தகைய துன்பமும் இல்லாமல் இனிச் செல்வனாக! என்று தம் புலமைத் தன்மைக்கு ஏற்றவாறு கூறினார். புலவர் பொன்னுரையை ஏற்று, சேரவேந்தன் அந்துவஞ்சேரல் சினம் தணிந்தான். ஆதலின் நடக்கவிருந்தபோர் நடவாதொழிந்தது. அருள் உள்ளம் கொண்ட புலவர் மோசியின் உள்ளங்கவரும் நயம்மிகு பேச்சாற்றல், போர் நடைபெறாதிருக்கக் காரணமாயிற்று. நாட்டில் அமைதி நிலவி மக்கள் மகிழ வழி ஏற்பட்டது.