New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள்


Guru

Status: Offline
Posts: 24762
Date:
பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள்
Permalink  
 


பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள்

http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/pulankuricci_inscriptions.htm


முனைவர் மா.பவானி  உதவிப்பேராசிரியர் -கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

இடம் :சிவகங்கை மாவட்டம், (முன்பு – தேவர் திருமகனார் மாவட்டம்) 

வட்டம் : திருப்பத்தூர்

அமைவிடம் :பூலாங்குறிச்சி, கண்மாய் மதகையொட்டியுள்ள குன்றின் சரிவுப் பகுதியில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட்டுள்ளன.

காலம் : பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டு

மொழி : தமிழ்

எழுத்து : வட்டெழுத்து

பொதுவாக தமிழகத்தில் பொ.ஆ 6 ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கும் கல்வெட்டுக்கள் ஒரு வரி முதற்கொண்டு 5, 6 வரிகளைக் கொண்ட சிறியக் கல்வெட்டுக்களாகவே உள்ளன. ஆனால் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள் மட்டும் பெரிய அளவில் அதிக வரிகளைக் கொண்டு விளங்குகின்றன. இவ்விடத்தில் மொத்தம் 3 கல்வெட்டுக்கள் இருந்துள்ளன. அவற்றில் ஒன்று முழுவதும் சிதைந்துள்ளது. மீதமுள்ள 2 கல்வெட்டுக்களில் ஒன்று 22 வரிகளைக் கொண்டுள்ளது அதில் முதல் 9 வரிகள் முற்றிலும் சிதைவுண்டுள்ளன. அதற்கு அடுத்த வரிகளும் இடையிடையே எழுத்துக்கள் படிக்க இயலாத வண்ணம் உள்ளன. இருப்பினும் ஆர்.நாகசாமி, நடனகாசிநாதன், எ.சுப்பராயலு, ராகவ வாரியார் போன்ற கல்வெட்டு பேரறிஞர்கள் இக்கல்வெட்டினைப் படித்துப் பொருள் தந்துள்ளனர். மூன்றாவதாக உள்ள கல்வெட்டில் ஒரு சில சொற்கள் இடையிடையே சிதைவுற்றுள்ளன. இருப்பினும் இக்கல்வெட்டு முழுவதும் படித்துணரப் பெற்றுள்ளது. அக்கல்வெட்டுகளின் பாடங்கள் இறுதியில் கொடுக்கப் பெற்றுள்ளன.

இக்கல்வெட்டின் முக்கியத்துவம்:

தமிழக வரலாற்றுப் புணரமைப்பிற்கு ஒரு மைல் கல்லாகும். பொ.ஆ. 3 ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு 6 ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழகத்தின் அரசியல் வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்ள சான்றுகள் அருகியே இருந்தன. இக்காலத் தமிழகம் களப்பிர அரசர்களால் ஆளப்பட்டுள்ளது. எனவே இக்காலம் தமிழகத்தின் இருண்டக்காலம் என்று அழைக்கப் பெற்றது. இக்கல்வெட்டில் சேந்தன் கூற்றன் என்ற அரசர்களது பெயர்கள் கிடைத்துள்ளன. களப்பிரர்கள் சமண, புத்த சமயத்தை மட்டுமே ஆதரித்துள்ளார். அவர்கள் இந்துக்களால் கலி அரசர் என்று அழைக்கப் பெற்றுள்ளனர் எனக் கருத்து மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. இக்கல்வெட்டில் மேலும் பிரம்மதாயம், மங்கலம் போன்ற குறிப்புகளுடன், தேவகுலம், கோட்டம் என்ற குறிப்புகளும் உள்ளதால் களப்பிரர்கள் பிராமணர்களையும் ஆதரித்துள்ளனர் என்பதும் இந்து கோயிலுக்கும் அறப்பணிகள் செய்துள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.

தேவகுலம், தாபதப்பள்ளி, வாசிதேவனார் கோட்டம், விரும்மச்சாரிகள், தருமிகள் முதலிய சொற்களும் சமய உலகில் வடக்கிலிருந்து வந்த தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன. பிரம்மதாயங்கள் (பிரமதேயங்கள்) பல்கத் தொடங்கிய காலம் இது என்பதை வெள்ளேற்றான் மங்கலம், சிற்றையூர் பிரம்மதாயம் முதலியன உணர்த்தும். இவற்றின் விளைவாக நில உரிமைகளில் வேறுபாடுகள் தோன்றத் தொடங்கிவிட்டன. நிலக்கிழார், உழுவோர் என்ற வேறுபாடுகளும் நிலக்கிழமை (மீயாட்சி) வேறு, உழும் உரிமை வேறு என்றும் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் தெளிவாகத் தொடங்கி விடுகின்றன. இங்கும் காவியகாலச் சமுதாயத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது சங்க மருவிய கால வரலாற்றுக்குப் புதிய விளக்கத்தைப் பெற உதவும்.

இக்கல்வெட்டுக்கள் பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்தில் இடம்பெற்றுள்ளன. மெய் எழுத்துக்கள் அனைத்திற்கும் புள்ளியிடப் பெற்றுள்ளது.

கல்வெட்டின் தற்போதைய நிலையும் எழுத்தமைதியும்:

கல்வெட்டுப் பொறிப்பின் இடத்தையும் அளவையும் பார்க்கும் பொழுது இக்கல்வெட்டுக்களை மௌரியப் பேரரசன் அசோகனின் பாறைக் கல்வெட்டுக்களுக்கு ஈடாகக் கூறலாம். இவை பெரிய எழுத்துக்களையும் நீண்ட வரிகளையும் கொண்டுள்ளன. இடது கல்வெட்டும் நடுக்கல்வெட்டும் ஒவ்வொன்றும் சுமார் 5 மீட்டர் உயரமும் 3.5 மீட்டர் அகலமும் கொண்டுள்ளன.

மேலிருந்து கீழ் நோக்கி வர வரிகளின் நீளம் அதிகமாகின்றது. வலது கல்வெட்டு இரண்டு மீட்டர் உயரமும் 5 மீட்டர் அகலமும் உடையது. முற்றிலும் எழுத்துக்கள் 5 முதல் 17 செ.மீ உயரமும் கொண்டுள்ளன. எழுத்துக்கள் ஆழமாக வெட்டப்பட்டுள்ளன. இருப்பினும் பாறையைச் செதுக்கிச் சமம் செய்யாமலே எழுத்துக்கள் வெட்டப்பட்டதனால் பல இடங்களில் பாடம் பெறுவது கடினமாக உள்ளது. மேலும், இப்பாறை இயற்கையிலேயே உரிந்து சிதையும் தன்மை கொண்டிருப்பதால் பல நூற்றாண்டுகள் மழையிலும் வெயிலிலும் இருந்து கல்வெட்டுகள் ஆங்காங்கு தேய்ந்தும், சிதைந்தும் உள்ளன. நடுக்கல்வெட்டு பெரும்பாலும் அழிந்துவிட்டது. இடதுபக்கக் கல்வெட்டின் முற்பகுதி பெரிதும் சிதைந்துவிட்டது. வலதுபக்கக் கல்வெட்டு மட்டும் பெரும்பகுதி நல்ல நிலையில் உள்ளது.
இக்கல்வெட்டுக்கள் பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்தில் இடம்பெற்றுள்ளன. எழுத்தமைதியைக் கொண்டு பார்க்கும் பொழுது மூன்று கல்வெட்டுக்களுக்குள் வேறுபாடு ஏதும் இல்லை. உயிரெழுத்துக்களில் – அ, இ, உ, எ, ஒ ஆகியவற்றின் வரிவடிவங்கள் இக்கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ஆகிய உயிர்நெடில் வரிவடிவங்கள் காணப்படவில்லை. இவ்வெழுத்துக்கள் இக்கல்வெட்டுக்களில் வரும் சொற்களில் பயிலப் பெறாமையால் அவற்றின் வடிவங்களை இங்குக் காணமுடியவில்லை.
தமிழில் அமைந்த பதினெட்டு மெய்யெழுத்துக்களின் வரிவடிவங்களையும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்களில் காணமுடிகிறது. இவற்றில் ழகர மெய் (புள்ளியோடு கூடிய மெய்) மட்டும் இக்கல்வெட்டுக்களில் வரவில்லை. மற்ற மெய்யெழுத்துக்கள் அனைத்தும் புள்ளியிட்டு எழுதப் பெற்றுள்ளன.
உயிர்மெய் வரிவடிவங்கள் நன்கு அறியும் வகையில் தெளிவாக எழுதப் பெற்றுள்ளன. ஒகரம் ஏறிய “கொ, தொ” ஆகிய இரண்டு குறில்களும் அவை குறில் எழுத்துக்கள் என்று அறியும் வண்ணம் தலைக்கு மேலே புள்ளியிட்டு எழுதப் பெற்றுள்ளன.

காலம்:

இவற்றின் எழுத்துக்கள் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு கால (பொ.ஆ 550-575) நடுக்கல் கல்வெட்டுக்களுக்கு முந்தியவை என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த நேரத்தில் எழுத்து வளர்ச்சி மெதுவாகவே ஏற்பட்டிருக்கக் கூடுமாதலால் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள் பொ.ஆ 500க்கு முந்தியது என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது என்றாலும் வேறு உறுதியான சான்றுகள் கிடைக்கும் வரையில் இவற்றின் காலம் பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டு என்று கொள்வதே நல்லது. சக ஆண்டு அடிப்படையில் பொ.ஆ மூன்றாம் நூற்றாண்டு என்று திரு.நாகசாமி வெளியிட்ட கருத்து அவ்வளவு வலுவுடையதாகத் தெரியவில்லை. இவற்றின் எழுத்துக்கள் பிராமி, வட்டெழுத்துக்களில் எ, ஒ ஆகிய இரண்டும் புள்ளியிட்டு எழுதப் பெற்றுள்ளன. அதாவது புள்ளியிடாதவை நெடில்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. இலக்கண வழுக்கள் இல்லையெனும் அளவுக்கு மொழிநடை உள்ளது. வேள்கூரு, அவரு, கேட்டாரு, செதாரு என்ற சில பேச்சு வழக்குகள் விரவி வந்துள்ளன.

செய்தித் தொகுப்பு:

இரண்டு கல்வெட்டுக்களுள் ஒரு கல்வெட்டு சேந்தன் கூற்றன் என்ற அரசன் ஆட்சியில் நூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் ஆண்டில் பதிக்கப்பட்டது. வேள் மருகண் மகனும் கடலகப் பெரும் படைத்தலைவன் என்ற பட்டத்தைப் பெற்றவமான எங்குமான் என்பவர் இரு தேவகுலங்களும், ஒரு கோட்டமும் எழுப்பிய செய்தியைக் கூறுகிறது. அந்தத் தேவகுலத்தைப் பாதுகாப்பதற்கும், அதில் வழிபாடுகள் செய்வதற்கும் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே உரிமை வழங்கப் பெற்றுள்ளது.

அரசனது ஆணையை ஒருவர் கேட்டு பின்னர் அவ்வாணையானது அது ஓலையில் எழுதப்பெற்று இறுதியில் அது கல்லில் பொறிக்கப் பெற்றுள்ளது. இந்த நடைமுறை கல்வெட்டுக்களில் அழகுற விளக்கப் பெற்றுள்ளது. ஒரு தேவகுலம் ஓல்லையூர்க் கூற்றத்தைச் சேர்ந்த வேள்கூரில் பச்செறிச்சல் என்ற மலை மீது இருந்தது. இது கல்வெட்டுள்ள பூலாங்குறிச்சி மலையையே குறிக்கும். வரி 8–9 இதைத் தெளிவுபடுத்தும். இரண்டாம் தேவகுலம் முத்தூற்றுக் கூற்றத்தைச் சேர்ந்த விளமர் என்ற ஊரில் இருந்தது. முத்தூற்றுக் கூற்றம் இன்றைய அறந்தாங்கி, திருவாடானை வட்டங்களை உள்ளடக்கிய நிலப்பிரிவு. பூலாங்குறிச்சியிலிருந்து விளமர் 50-60 கி.மீ தொலைவில் இருந்திருக்க வேண்டும். மூன்றாவதாக வரும் வாசிதேவனாருக்குரிய கோட்டம் மதிரையில் உலவியத்தான் என்ற குளத்துக்கு வடக்கில் இருந்த தாபதப்பள்ளியுள் எழுப்பப்பட்டது. மதிரையை இன்றைய மதுரையாகவே கொள்ளவேண்டும் அதுவும் பூலாங்குறிச்சியிலிருந்து 50-60 கி.மீ தொலைவில் உள்ளது.

தேவகுலங்கள், திரு.நடன காசிநாதன் கருத்து தெரிவித்தபடி, பெரும்பாலும் சிவன் அல்லது விஷ்ணு கோயில்கள் ஆகலாம். பூலாங்குறிச்சி மலைமேல் இப்பொழுது ஒரு சிவன் கோயில் உள்ளது. ஆனால் இப்போதுள்ள கட்டிடம் அவ்வளவு பழமையானதல்ல. விளமரின் சரியான இலக்கு இன்னும் தென்படவில்லை. வாசிதேவனார் கோட்டம் தாபதப்பள்ளியைச் சேர்ந்தது எனப்படுவதாலும் தாபதப்பள்ளி ஜைன சமய நிறுவனம் என்று பரலாகத் தெரிவதாலும் வாசிதேவனார் கோட்டம் ஒரு ஜைன கோயில் எனலாம்.

அத்திகோயத்தார், உள்மனையார், நான்கு வகைத் திணைகள் ஆகியோர் இம்மூன்று கோயில்களுக்கும் வேண்டியதைச் செய்வதாக ஏற்றுக்கொண்டனர். இக்கோயில்களில் வழிபாடு நடத்துபவரை நியமிக்கும் பொறுப்பு பாண்டங்கர், சேவுக்கர், விரும்மசாரிகள், தருமிகள், ஊர்க்காவல் கொண்டார் என்ற குழுக்களைச் சேர்ந்தது என்றும் அவர்களால் நியமிக்கப்படுவோர் தவிர பிறர் வழிபாடு நடத்தக்கூடாது என்றும் விதிக்கப்பட்டது. மேலும் குழலூருத்துஞ்சிய உடையார் என்பவரால் இக்கோயில்களில் ஒன்றான பச்செறிச்சில் மலைக் கோயிலுக்கென்று குடும்பியர் வேள்கூரில் (அதாவது உள்ளூரில்) குடி ஏற்றப்பட்டனர் என்றும், இக்குடும்பியர் தவிர வேறு குடம்பியர் (குடும்பு) தவிர்க்கப்படவேண்டும் என்றும் விதிக்கப்பட்டது. அடுத்து, பொதுப்படக் கோயிலுக்கு வேண்டியது செய்து, தீங்கிழைப்பவரைத் தண்டிப்பீராக என்று ஆணை கொடுக்கப்பட்டது.

ஆணையை முன்னின்று கேட்டவர் எயினங்குமான் (எ.இனங்குமரன்), கீரங்காரி, குமாரம்போந்தை என்று மூவர். ஒவ்வொருவரும் ஊர்க்கிழான் என்றும், உலவியப் பெருந்திணை என்றும் சிறப்புப் பெற்றவர். இந்த ஆணையை ஓலை எழுதுவான் தமன் காரிகண்ணன் தான் கேட்டவாறு கூற அதை வேணாட்டான் நரியங்காரி என்பவர் கல்லில் பொறித்ததையே எழுதிக் கொடுத்ததாகச் சுட்டப்படுகிறது என்று கொள்ளலாம்.

கல்வெட்டு : 2

செய்தி:

அதாவது (பூலாங்குறிச்சி) பச்செறிச்சில் மலைமேல் எழுப்பப்பட்ட தேவகுலம் அல்லது கோயில் கொடைப் பெற்றுள்ளத்தைக் குறிப்பிடுகிறது. அக்கோயிலுக்கு மேற்குறிப்பிட்ட நில உரிமைகளோடு பாண்டிநாட்டிலும் கொங்கு நாட்டிலும் காராண்கிழமை, களக்கிழமை, மேலாண்மை உரிமைகளும், காலாசமும், தோட்டங்களும் இருந்தன. அவை யாவற்றையும் அவருடைய குடிகளையும் பிரம்மதாயமுடையார், நாடுகாப்பார், புறங்காப்பார், முப்புருகாப்பார் முதலியோர் பேணிக்காக்க வேண்டும் என்பதும் தீங்கிழைத்தவர்களுக்கு ஆயிரத்தறுநூறு காணம் தண்டம் விதிக்கவேண்டும் என்பதும் அக்கல்வெட்டுச் செய்தியாகும்.

 



-- Edited by Admin on Saturday 29th of June 2019 09:21:34 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

பூலாங்குறிச்சி கல்வெட்டுப் பாடம்:

கல்வெட்டு : 1

1. கொச்சேந்தன் கூற்றற்கு யாண்டு நூற்றுத்தொண்ணூற்றி
2. ரண்டு நாண் முப்பத்தாறு பக்கந் தைப்பிறை நாள் (பன்னிரண்டு) வேள் மருகன் மகன் கடலகப் பெரும்படைத்
3. தலைவன் எங்குமான னொல்லையூருக் கூற்றத்து வேள்கூருப் பச்செறிச்சின் மலைமேற் செஇவித்த தேவகுலமும்
4. முத்தூற்றுக் கூற்றத்து விளமரு(ச்) செவித்த தேவகுலமும் மதிரை உலவியத்தான் குளத்தின் வடபக்கத்துச் செஇவி
5. த்த தாபதப்பள்ளியுள் (வா)சி தேவனாரு கோட்டமும் மவை ஆத்திக்கோயத்தாரு முள் மனையாருந் நாற்பாற்றிணைகளுந் தமக்கு காவலாக
6. ஆவற்றுக்குற்றது செ(யக்) கொண்டமையால் லவற்றை வ(ழிபடுவது)ம் மவற்றுக்குப் பெயப்பட்ட ஆறப்புறந் நடையாட்டுவதூஞ் செயும்
7. பாண்டங்கருஞ் சேவுக்கரும் (வி)ரும்மாச்சாரிகள்ளுந் தருமிகளுமூ(ர்) காவல் கொண்டா(ருஅ) ராஇந்து வைக்கப்பட்டாரு அல்லது வழிபடப் 8. பெறாமையும் மவற்றுட் பச்செறிச்சி)ல்) மலைமேற் செவி(த்த தேவகு)லத்துக்குக் குடும்பியராவாரு குழ
9. (லூ)ருத் துஞ்சிய உடையாரால் வேள்கூருப் பெயப்பட்ட குடும்பி(யர் வழியல்லது வேவொரு) குடும்பாடப் பெறாமையும்
10. மத் தேவகுலத்துக் குற்றது செய்து வல்லக்குற்றந் தொழில் செய..க(ளு)..(டஞ்) செயவும் மெழுதி வைக்கென்றருள்ளித்தாரு
11. கேட்டாருலவியப் பெருந்திணை நல்லங்கிழானெ இனங்குமானும் முலவியப் பெருந்திணை ப…… அறு கிழான் கீரங்காரி
12. யு முலவியப் பெருந்திணை ஆம்பருகிழான் குமாரம் போந்தையுங் கேட்டு வந்து கூறின (னோ)லை எழுதுவான் (றம)ன் காரி
13. கண்ணன் இது கடைப்(பி) ஓலை காற் கண்டெழுதிக் கொடுத்தேன் (வே)ண்ணாட்டான் (நரி) நாரியங்காரி

கல்வெட்டு : 2

1. ………. ந்தற்கு யாண்டு நூற்றுத் ………. ……………
2. நா(ற்) ….. ர.ப. ………
3. (னு) …. ….. ளள் (ளை) … …. …. ….
4. … … … … (ள்) மருகண் மகன் (க)டலகப் பெ
5. … … …. … ன் ஒல்லையூருக்கூற்(ற்)
6. … …. … ….. ….. ….
7. … செ … வகள … வய … …. … 
8. … …. …. …. …. … …
9. (பெ)ரு நிலனும் புன்செ வெள்ளேற்றான் மங்கலமென் 
10. … (ழவரும்). ரு…ங் கூடலூரு நாட்டுப் பிரம்மதாயஞ் சிற்றையூருப் பிரம்மதாயங்கி
11. ……….. ழமையும் மீயாட்சியுங் கொண்டாளும் மவூருப்படுங்கடைய வயலென்னும்
12. …. ….. … புலத்தவன் விற்றுக்கொண்டு கொடுத்த புன்செ நிலனு
13. … … … துப் பிரம்மதாயத்துட் பிரம்மதாயக் கிழவரா(ன)
14. …. றாராலும் பிரம் ….யுங் காரண்மையுமாகக் கொண்டாளுந் நீர் நிலனும் புன் 
15. … நிலனும் பிறவுஞ் …. பாண்டி நாட்டுங் கொங்கு நாட்டும் மவரு காராண்கிழமையுங் கல
16. க் கிழமையும் மேல் (லாண்மை) கொண்ட(ன)வும் மவருடைய காலாசமுந் தோட்டங்களும் மவரு தமரையும் ம
17. வரு குடிகளையும் … …. டையாரும் பிரம்ம தாயமுடையாருந் நாடுகாப்பாரும் புறங்காப்
18. பாரும் முப்பு (ரு காப்பாரு) … …. தாயந் நெறி ஆ … செதாரு தத்தமானும் வேறு வேறு ஆஇரத்தாறுநூ
19. று காணந் … று …. டுவே …. ன்ற ரு கேட்டாருல வியப் பெருந்திணை நல்லகிழா னெ இனங்கு
20. மானும் முலவி ……. ம…….. ங்கிழான் ளங் கூற்றனும் முலவியப் பெருந்திணை அலத்தூர் கி
21. … …. …. லை .. துவான் (றமன்வ)டுகங் குமான் …டைப்பில் (ஒ)
22. … (தளருக்கு) … …. …. பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள்

முனைவர் மா.பவானி
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

இடம் :சிவகங்கை மாவட்டம், (முன்பு – தேவர் திருமகனார் மாவட்டம்) 

வட்டம் : திருப்பத்தூர்

அமைவிடம் :பூலாங்குறிச்சி, கண்மாய் மதகையொட்டியுள்ள குன்றின் சரிவுப் பகுதியில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட்டுள்ளன.

காலம் : பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டு

மொழி : தமிழ்

எழுத்து : வட்டெழுத்து

பொதுவாக தமிழகத்தில் பொ.ஆ 6 ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கும் கல்வெட்டுக்கள் ஒரு வரி முதற்கொண்டு 5, 6 வரிகளைக் கொண்ட சிறியக் கல்வெட்டுக்களாகவே உள்ளன. ஆனால் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள் மட்டும் பெரிய அளவில் அதிக வரிகளைக் கொண்டு விளங்குகின்றன. இவ்விடத்தில் மொத்தம் 3 கல்வெட்டுக்கள் இருந்துள்ளன. அவற்றில் ஒன்று முழுவதும் சிதைந்துள்ளது. மீதமுள்ள 2 கல்வெட்டுக்களில் ஒன்று 22 வரிகளைக் கொண்டுள்ளது அதில் முதல் 9 வரிகள் முற்றிலும் சிதைவுண்டுள்ளன. அதற்கு அடுத்த வரிகளும் இடையிடையே எழுத்துக்கள் படிக்க இயலாத வண்ணம் உள்ளன. இருப்பினும் ஆர்.நாகசாமி, நடனகாசிநாதன், எ.சுப்பராயலு, ராகவ வாரியார் போன்ற கல்வெட்டு பேரறிஞர்கள் இக்கல்வெட்டினைப் படித்துப் பொருள் தந்துள்ளனர். மூன்றாவதாக உள்ள கல்வெட்டில் ஒரு சில சொற்கள் இடையிடையே சிதைவுற்றுள்ளன. இருப்பினும் இக்கல்வெட்டு முழுவதும் படித்துணரப் பெற்றுள்ளது. அக்கல்வெட்டுகளின் பாடங்கள் இறுதியில் கொடுக்கப் பெற்றுள்ளன.

இக்கல்வெட்டின் முக்கியத்துவம்:

தமிழக வரலாற்றுப் புணரமைப்பிற்கு ஒரு மைல் கல்லாகும். பொ.ஆ. 3 ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு 6 ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழகத்தின் அரசியல் வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்ள சான்றுகள் அருகியே இருந்தன. இக்காலத் தமிழகம் களப்பிர அரசர்களால் ஆளப்பட்டுள்ளது. எனவே இக்காலம் தமிழகத்தின் இருண்டக்காலம் என்று அழைக்கப் பெற்றது. இக்கல்வெட்டில் சேந்தன் கூற்றன் என்ற அரசர்களது பெயர்கள் கிடைத்துள்ளன. களப்பிரர்கள் சமண, புத்த சமயத்தை மட்டுமே ஆதரித்துள்ளார். அவர்கள் இந்துக்களால் கலி அரசர் என்று அழைக்கப் பெற்றுள்ளனர் எனக் கருத்து மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. இக்கல்வெட்டில் மேலும் பிரம்மதாயம், மங்கலம் போன்ற குறிப்புகளுடன், தேவகுலம், கோட்டம் என்ற குறிப்புகளும் உள்ளதால் களப்பிரர்கள் பிராமணர்களையும் ஆதரித்துள்ளனர் என்பதும் இந்து கோயிலுக்கும் அறப்பணிகள் செய்துள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.

தேவகுலம், தாபதப்பள்ளி, வாசிதேவனார் கோட்டம், விரும்மச்சாரிகள், தருமிகள் முதலிய சொற்களும் சமய உலகில் வடக்கிலிருந்து வந்த தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன. பிரம்மதாயங்கள் (பிரமதேயங்கள்) பல்கத் தொடங்கிய காலம் இது என்பதை வெள்ளேற்றான் மங்கலம், சிற்றையூர் பிரம்மதாயம் முதலியன உணர்த்தும். இவற்றின் விளைவாக நில உரிமைகளில் வேறுபாடுகள் தோன்றத் தொடங்கிவிட்டன. நிலக்கிழார், உழுவோர் என்ற வேறுபாடுகளும் நிலக்கிழமை (மீயாட்சி) வேறு, உழும் உரிமை வேறு என்றும் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் தெளிவாகத் தொடங்கி விடுகின்றன. இங்கும் காவியகாலச் சமுதாயத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது சங்க மருவிய கால வரலாற்றுக்குப் புதிய விளக்கத்தைப் பெற உதவும்.

இக்கல்வெட்டுக்கள் பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்தில் இடம்பெற்றுள்ளன. மெய் எழுத்துக்கள் அனைத்திற்கும் புள்ளியிடப் பெற்றுள்ளது.

கல்வெட்டின் தற்போதைய நிலையும் எழுத்தமைதியும்:

கல்வெட்டுப் பொறிப்பின் இடத்தையும் அளவையும் பார்க்கும் பொழுது இக்கல்வெட்டுக்களை மௌரியப் பேரரசன் அசோகனின் பாறைக் கல்வெட்டுக்களுக்கு ஈடாகக் கூறலாம். இவை பெரிய எழுத்துக்களையும் நீண்ட வரிகளையும் கொண்டுள்ளன. இடது கல்வெட்டும் நடுக்கல்வெட்டும் ஒவ்வொன்றும் சுமார் 5 மீட்டர் உயரமும் 3.5 மீட்டர் அகலமும் கொண்டுள்ளன.

மேலிருந்து கீழ் நோக்கி வர வரிகளின் நீளம் அதிகமாகின்றது. வலது கல்வெட்டு இரண்டு மீட்டர் உயரமும் 5 மீட்டர் அகலமும் உடையது. முற்றிலும் எழுத்துக்கள் 5 முதல் 17 செ.மீ உயரமும் கொண்டுள்ளன. எழுத்துக்கள் ஆழமாக வெட்டப்பட்டுள்ளன. இருப்பினும் பாறையைச் செதுக்கிச் சமம் செய்யாமலே எழுத்துக்கள் வெட்டப்பட்டதனால் பல இடங்களில் பாடம் பெறுவது கடினமாக உள்ளது. மேலும், இப்பாறை இயற்கையிலேயே உரிந்து சிதையும் தன்மை கொண்டிருப்பதால் பல நூற்றாண்டுகள் மழையிலும் வெயிலிலும் இருந்து கல்வெட்டுகள் ஆங்காங்கு தேய்ந்தும், சிதைந்தும் உள்ளன. நடுக்கல்வெட்டு பெரும்பாலும் அழிந்துவிட்டது. இடதுபக்கக் கல்வெட்டின் முற்பகுதி பெரிதும் சிதைந்துவிட்டது. வலதுபக்கக் கல்வெட்டு மட்டும் பெரும்பகுதி நல்ல நிலையில் உள்ளது.
இக்கல்வெட்டுக்கள் பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்தில் இடம்பெற்றுள்ளன. எழுத்தமைதியைக் கொண்டு பார்க்கும் பொழுது மூன்று கல்வெட்டுக்களுக்குள் வேறுபாடு ஏதும் இல்லை. உயிரெழுத்துக்களில் – அ, இ, உ, எ, ஒ ஆகியவற்றின் வரிவடிவங்கள் இக்கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ஆகிய உயிர்நெடில் வரிவடிவங்கள் காணப்படவில்லை. இவ்வெழுத்துக்கள் இக்கல்வெட்டுக்களில் வரும் சொற்களில் பயிலப் பெறாமையால் அவற்றின் வடிவங்களை இங்குக் காணமுடியவில்லை.
தமிழில் அமைந்த பதினெட்டு மெய்யெழுத்துக்களின் வரிவடிவங்களையும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்களில் காணமுடிகிறது. இவற்றில் ழகர மெய் (புள்ளியோடு கூடிய மெய்) மட்டும் இக்கல்வெட்டுக்களில் வரவில்லை. மற்ற மெய்யெழுத்துக்கள் அனைத்தும் புள்ளியிட்டு எழுதப் பெற்றுள்ளன.
உயிர்மெய் வரிவடிவங்கள் நன்கு அறியும் வகையில் தெளிவாக எழுதப் பெற்றுள்ளன. ஒகரம் ஏறிய “கொ, தொ” ஆகிய இரண்டு குறில்களும் அவை குறில் எழுத்துக்கள் என்று அறியும் வண்ணம் தலைக்கு மேலே புள்ளியிட்டு எழுதப் பெற்றுள்ளன.

காலம்:

இவற்றின் எழுத்துக்கள் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு கால (பொ.ஆ 550-575) நடுக்கல் கல்வெட்டுக்களுக்கு முந்தியவை என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த நேரத்தில் எழுத்து வளர்ச்சி மெதுவாகவே ஏற்பட்டிருக்கக் கூடுமாதலால் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள் பொ.ஆ 500க்கு முந்தியது என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது என்றாலும் வேறு உறுதியான சான்றுகள் கிடைக்கும் வரையில் இவற்றின் காலம் பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டு என்று கொள்வதே நல்லது. சக ஆண்டு அடிப்படையில் பொ.ஆ மூன்றாம் நூற்றாண்டு என்று திரு.நாகசாமி வெளியிட்ட கருத்து அவ்வளவு வலுவுடையதாகத் தெரியவில்லை. இவற்றின் எழுத்துக்கள் பிராமி, வட்டெழுத்துக்களில் எ, ஒ ஆகிய இரண்டும் புள்ளியிட்டு எழுதப் பெற்றுள்ளன. அதாவது புள்ளியிடாதவை நெடில்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. இலக்கண வழுக்கள் இல்லையெனும் அளவுக்கு மொழிநடை உள்ளது. வேள்கூரு, அவரு, கேட்டாரு, செதாரு என்ற சில பேச்சு வழக்குகள் விரவி வந்துள்ளன.

செய்தித் தொகுப்பு:

இரண்டு கல்வெட்டுக்களுள் ஒரு கல்வெட்டு சேந்தன் கூற்றன் என்ற அரசன் ஆட்சியில் நூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் ஆண்டில் பதிக்கப்பட்டது. வேள் மருகண் மகனும் கடலகப் பெரும் படைத்தலைவன் என்ற பட்டத்தைப் பெற்றவமான எங்குமான் என்பவர் இரு தேவகுலங்களும், ஒரு கோட்டமும் எழுப்பிய செய்தியைக் கூறுகிறது. அந்தத் தேவகுலத்தைப் பாதுகாப்பதற்கும், அதில் வழிபாடுகள் செய்வதற்கும் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே உரிமை வழங்கப் பெற்றுள்ளது.

அரசனது ஆணையை ஒருவர் கேட்டு பின்னர் அவ்வாணையானது அது ஓலையில் எழுதப்பெற்று இறுதியில் அது கல்லில் பொறிக்கப் பெற்றுள்ளது. இந்த நடைமுறை கல்வெட்டுக்களில் அழகுற விளக்கப் பெற்றுள்ளது. ஒரு தேவகுலம் ஓல்லையூர்க் கூற்றத்தைச் சேர்ந்த வேள்கூரில் பச்செறிச்சல் என்ற மலை மீது இருந்தது. இது கல்வெட்டுள்ள பூலாங்குறிச்சி மலையையே குறிக்கும். வரி 8–9 இதைத் தெளிவுபடுத்தும். இரண்டாம் தேவகுலம் முத்தூற்றுக் கூற்றத்தைச் சேர்ந்த விளமர் என்ற ஊரில் இருந்தது. முத்தூற்றுக் கூற்றம் இன்றைய அறந்தாங்கி, திருவாடானை வட்டங்களை உள்ளடக்கிய நிலப்பிரிவு. பூலாங்குறிச்சியிலிருந்து விளமர் 50-60 கி.மீ தொலைவில் இருந்திருக்க வேண்டும். மூன்றாவதாக வரும் வாசிதேவனாருக்குரிய கோட்டம் மதிரையில் உலவியத்தான் என்ற குளத்துக்கு வடக்கில் இருந்த தாபதப்பள்ளியுள் எழுப்பப்பட்டது. மதிரையை இன்றைய மதுரையாகவே கொள்ளவேண்டும் அதுவும் பூலாங்குறிச்சியிலிருந்து 50-60 கி.மீ தொலைவில் உள்ளது.

தேவகுலங்கள், திரு.நடன காசிநாதன் கருத்து தெரிவித்தபடி, பெரும்பாலும் சிவன் அல்லது விஷ்ணு கோயில்கள் ஆகலாம். பூலாங்குறிச்சி மலைமேல் இப்பொழுது ஒரு சிவன் கோயில் உள்ளது. ஆனால் இப்போதுள்ள கட்டிடம் அவ்வளவு பழமையானதல்ல. விளமரின் சரியான இலக்கு இன்னும் தென்படவில்லை. வாசிதேவனார் கோட்டம் தாபதப்பள்ளியைச் சேர்ந்தது எனப்படுவதாலும் தாபதப்பள்ளி ஜைன சமய நிறுவனம் என்று பரலாகத் தெரிவதாலும் வாசிதேவனார் கோட்டம் ஒரு ஜைன கோயில் எனலாம்.

அத்திகோயத்தார், உள்மனையார், நான்கு வகைத் திணைகள் ஆகியோர் இம்மூன்று கோயில்களுக்கும் வேண்டியதைச் செய்வதாக ஏற்றுக்கொண்டனர். இக்கோயில்களில் வழிபாடு நடத்துபவரை நியமிக்கும் பொறுப்பு பாண்டங்கர், சேவுக்கர், விரும்மசாரிகள், தருமிகள், ஊர்க்காவல் கொண்டார் என்ற குழுக்களைச் சேர்ந்தது என்றும் அவர்களால் நியமிக்கப்படுவோர் தவிர பிறர் வழிபாடு நடத்தக்கூடாது என்றும் விதிக்கப்பட்டது. மேலும் குழலூருத்துஞ்சிய உடையார் என்பவரால் இக்கோயில்களில் ஒன்றான பச்செறிச்சில் மலைக் கோயிலுக்கென்று குடும்பியர் வேள்கூரில் (அதாவது உள்ளூரில்) குடி ஏற்றப்பட்டனர் என்றும், இக்குடும்பியர் தவிர வேறு குடம்பியர் (குடும்பு) தவிர்க்கப்படவேண்டும் என்றும் விதிக்கப்பட்டது. அடுத்து, பொதுப்படக் கோயிலுக்கு வேண்டியது செய்து, தீங்கிழைப்பவரைத் தண்டிப்பீராக என்று ஆணை கொடுக்கப்பட்டது.

ஆணையை முன்னின்று கேட்டவர் எயினங்குமான் (எ.இனங்குமரன்), கீரங்காரி, குமாரம்போந்தை என்று மூவர். ஒவ்வொருவரும் ஊர்க்கிழான் என்றும், உலவியப் பெருந்திணை என்றும் சிறப்புப் பெற்றவர். இந்த ஆணையை ஓலை எழுதுவான் தமன் காரிகண்ணன் தான் கேட்டவாறு கூற அதை வேணாட்டான் நரியங்காரி என்பவர் கல்லில் பொறித்ததையே எழுதிக் கொடுத்ததாகச் சுட்டப்படுகிறது என்று கொள்ளலாம்.

கல்வெட்டு : 2

செய்தி:

அதாவது (பூலாங்குறிச்சி) பச்செறிச்சில் மலைமேல் எழுப்பப்பட்ட தேவகுலம் அல்லது கோயில் கொடைப் பெற்றுள்ளத்தைக் குறிப்பிடுகிறது. அக்கோயிலுக்கு மேற்குறிப்பிட்ட நில உரிமைகளோடு பாண்டிநாட்டிலும் கொங்கு நாட்டிலும் காராண்கிழமை, களக்கிழமை, மேலாண்மை உரிமைகளும், காலாசமும், தோட்டங்களும் இருந்தன. அவை யாவற்றையும் அவருடைய குடிகளையும் பிரம்மதாயமுடையார், நாடுகாப்பார், புறங்காப்பார், முப்புருகாப்பார் முதலியோர் பேணிக்காக்க வேண்டும் என்பதும் தீங்கிழைத்தவர்களுக்கு ஆயிரத்தறுநூறு காணம் தண்டம் விதிக்கவேண்டும் என்பதும் அக்கல்வெட்டுச் செய்தியாகும்.

பூலாங்குறிச்சி கல்வெட்டுப் பாடம்:

கல்வெட்டு : 1

1. கொச்சேந்தன் கூற்றற்கு யாண்டு நூற்றுத்தொண்ணூற்றி
2. ரண்டு நாண் முப்பத்தாறு பக்கந் தைப்பிறை நாள் (பன்னிரண்டு) வேள் மருகன் மகன் கடலகப் பெரும்படைத்
3. தலைவன் எங்குமான னொல்லையூருக் கூற்றத்து வேள்கூருப் பச்செறிச்சின் மலைமேற் செஇவித்த தேவகுலமும்
4. முத்தூற்றுக் கூற்றத்து விளமரு(ச்) செவித்த தேவகுலமும் மதிரை உலவியத்தான் குளத்தின் வடபக்கத்துச் செஇவி
5. த்த தாபதப்பள்ளியுள் (வா)சி தேவனாரு கோட்டமும் மவை ஆத்திக்கோயத்தாரு முள் மனையாருந் நாற்பாற்றிணைகளுந் தமக்கு காவலாக
6. ஆவற்றுக்குற்றது செ(யக்) கொண்டமையால் லவற்றை வ(ழிபடுவது)ம் மவற்றுக்குப் பெயப்பட்ட ஆறப்புறந் நடையாட்டுவதூஞ் செயும்
7. பாண்டங்கருஞ் சேவுக்கரும் (வி)ரும்மாச்சாரிகள்ளுந் தருமிகளுமூ(ர்) காவல் கொண்டா(ருஅ) ராஇந்து வைக்கப்பட்டாரு அல்லது வழிபடப் 8. பெறாமையும் மவற்றுட் பச்செறிச்சி)ல்) மலைமேற் செவி(த்த தேவகு)லத்துக்குக் குடும்பியராவாரு குழ
9. (லூ)ருத் துஞ்சிய உடையாரால் வேள்கூருப் பெயப்பட்ட குடும்பி(யர் வழியல்லது வேவொரு) குடும்பாடப் பெறாமையும்
10. மத் தேவகுலத்துக் குற்றது செய்து வல்லக்குற்றந் தொழில் செய..க(ளு)..(டஞ்) செயவும் மெழுதி வைக்கென்றருள்ளித்தாரு
11. கேட்டாருலவியப் பெருந்திணை நல்லங்கிழானெ இனங்குமானும் முலவியப் பெருந்திணை ப…… அறு கிழான் கீரங்காரி
12. யு முலவியப் பெருந்திணை ஆம்பருகிழான் குமாரம் போந்தையுங் கேட்டு வந்து கூறின (னோ)லை எழுதுவான் (றம)ன் காரி
13. கண்ணன் இது கடைப்(பி) ஓலை காற் கண்டெழுதிக் கொடுத்தேன் (வே)ண்ணாட்டான் (நரி) நாரியங்காரி

கல்வெட்டு : 2

1. ………. ந்தற்கு யாண்டு நூற்றுத் ………. ……………
2. நா(ற்) ….. ர.ப. ………
3. (னு) …. ….. ளள் (ளை) … …. …. ….
4. … … … … (ள்) மருகண் மகன் (க)டலகப் பெ
5. … … …. … ன் ஒல்லையூருக்கூற்(ற்)
6. … …. … ….. ….. ….
7. … செ … வகள … வய … …. … 
8. … …. …. …. …. … …
9. (பெ)ரு நிலனும் புன்செ வெள்ளேற்றான் மங்கலமென் 
10. … (ழவரும்). ரு…ங் கூடலூரு நாட்டுப் பிரம்மதாயஞ் சிற்றையூருப் பிரம்மதாயங்கி
11. ……….. ழமையும் மீயாட்சியுங் கொண்டாளும் மவூருப்படுங்கடைய வயலென்னும்
12. …. ….. … புலத்தவன் விற்றுக்கொண்டு கொடுத்த புன்செ நிலனு
13. … … … துப் பிரம்மதாயத்துட் பிரம்மதாயக் கிழவரா(ன)
14. …. றாராலும் பிரம் ….யுங் காரண்மையுமாகக் கொண்டாளுந் நீர் நிலனும் புன் 
15. … நிலனும் பிறவுஞ் …. பாண்டி நாட்டுங் கொங்கு நாட்டும் மவரு காராண்கிழமையுங் கல
16. க் கிழமையும் மேல் (லாண்மை) கொண்ட(ன)வும் மவருடைய காலாசமுந் தோட்டங்களும் மவரு தமரையும் ம
17. வரு குடிகளையும் … …. டையாரும் பிரம்ம தாயமுடையாருந் நாடுகாப்பாரும் புறங்காப்
18. பாரும் முப்பு (ரு காப்பாரு) … …. தாயந் நெறி ஆ … செதாரு தத்தமானும் வேறு வேறு ஆஇரத்தாறுநூ
19. று காணந் … று …. டுவே …. ன்ற ரு கேட்டாருல வியப் பெருந்திணை நல்லகிழா னெ இனங்கு
20. மானும் முலவி ……. ம…….. ங்கிழான் ளங் கூற்றனும் முலவியப் பெருந்திணை அலத்தூர் கி
21. … …. …. லை .. துவான் (றமன்வ)டுகங் குமான் …டைப்பில் (ஒ)
22. … (தளருக்கு) … …. …. 



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

Bhattiprolu script is also considered the Rosetta Stone of Tamil Brahmi decipherment.[12]



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

 தொன்மைத் தமிழ் எழுத்தான தமிழியிலிருந்து இரு கூறாக வட்டெழுத்தும், தமிழ் எழுத்தும் பிரிந்து வளர்ச்சியுற்றன என்னும் கருத்துப்படி வட்டெழுத்தின் உருத் தோற்றத்துக்குப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு சான்றாக நிற்பதுபோல் தமிழ் எழுத்துக்கு மிகப் பழமையான சான்று எதுவுமில்லை. 



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

 தொன்மைத் தமிழ் எழுத்தான தமிழியிலிருந்து இரு கூறாக வட்டெழுத்தும், தமிழ் எழுத்தும் பிரிந்து வளர்ச்சியுற்றன என்னும் கருத்துப்படி வட்டெழுத்தின் உருத் தோற்றத்துக்குப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு சான்றாக நிற்பதுபோல் தமிழ் எழுத்துக்கு மிகப் பழமையான சான்று எதுவுமில்லை.  பல்லவ மன்னன் சிம்மவர்மனின் காலத்தில் வெளியிடப்பெற்ற  பள்ளன் கோயில் செப்பேடுதான் தமிழ் எழுத்தின் பழமைக்கு முதற்சான்று. தமிழ் எழுத்தின் வடிவத்தைத் தெளிவாக முதன்முதலில் பல்லவ மன்னன் சிம்மவர்மனுடைய பள்ளன்கோயில் செப்பேட்டில்தான் காணமுடிகிறது” என்கிறார் நடன.காசிநாதன். சிம்மவர்மனின் 6-ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பெற்ற பள்ளன்கோயில் செப்பேட்டின் காலம் கி.பி. 550 என வரையறை செய்துள்ளனர். செப்பேடு சிம்மவர்மனுடையதெனினும், எழுதப்பட்ட காலம் கி.பி.750. (எழுத்தமைதி கி.பி. 750). மகேந்திரவர்மனின் (கி.பி. 590-630) காலத்துத் தமிழ்க்கல்வெட்டு வல்லம் கல்வெட்டாகும்..  வட தமிழகத்தில் (தொண்டை மண்டலத்தில்) கிடைத்த நடுகற் கல்வெட்டுகள் பெரும்பாலும் வடெழுத்துகளால் பொறிக்கப்பட்டவை; முற்காலப் பல்லவர் காலத்தவை. காலம் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு. பூலாங்குறிச்சிக் கல்வெட்டின் காலம் கி.பி. 500 எனக் கருதப்படுகிறது. வட்டெழுத்துக்கு ஆவணச் சான்று கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என்பதும், தமிழ் எழுத்துக்கு ஆவணச் சான்று கி.பி. 6-ஆம் நூற்றாண்டு என்பதும் பெறப்படுகிறது. எனவே, தமிழ் எழுத்துக்கு முன்பே, வட்டெழுத்துப் பயன்பாடு மிக்கிருந்தது எனலாம்.  தமிழ் எழுத்துகளை  உருவாக்கியவர் பல்லவர் என்னும் கருதுகோளுக்கு  இது  துணை நிற்கும் எனலாம். 



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

  பல்லவ கிரந்தம்

 
எனில், இடைப்பட்ட ஒரு  நூற்றாண்டுக்காலம் தமிழ் எழுத்துகளுக்குக் கல்வெட்டுச் சான்றுகளோ, செப்பேட்டுச் சன்றுகளோ கிட்டவில்லை எனலாம். இந்தக் காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதிலும் வட்டெழுத்தின் பயன்பாடே இருந்துள்ளதால் இந்நிலை எனலாம். எனவே, முற்காலக் காஞ்சிப் பல்லவர் ஆட்சியில் தொடங்கிப் பள்ளன் கோயில் செப்பேட்டுக் காலம் வரை வட்டெழுத்தின் பயன்பாடே இருந்துள்ளது. பள்ளன் கோயில் செப்பேட்டில் தமிழ் எழுத்தைப் பயன்படுத்தியதால், பல்லவர் காலத்தில் தமிழ் எழுத்தை வடிவமைத்திருக்கிறார்கள் எனலாம்.  இக்கருத்தை ஆய்வாளர் மைக்கேல் லாக்வுட் (MICHAEL LOCKWOOD) என்பவர் முன்வைக்கும்போது, கல்வெட்டுச் சான்றுகளின்படி, பல்லவர், தமிழ் எழுத்துக்குப் புது வடிவத்தை உருவாக்கினர் என்றும், அடுத்து ஆட்சிக்கு வந்த சோழர்களும் இவ்வடிவத்தைப் பின்பற்றினர் என்றும், இவ்வடிவமே தற்போதுள்ள தமிழ் வடிவத்துக்கு அடிப்படை என்றும் குறிப்பிடுகிறார். அவர், இவ்வடிவத்தைப் “பல்லவ கிரந்தத் தமிழ் எழுத்து”  (Pallava Grantha Tamil Script)  என்று பெயரிட்டுள்ளார். கிரந்தம் என்பது எழுதுவதையும் அதன் அடிப்படையில் எழுத்தையும் குறிப்பதாகக் கொண்டால் (எழுத்துக்கு லிபி என்று தனியே சொல்லிருப்பினும்), பல்லவர் தமிழுக்காக உருவாக்கிய எழுத்து என்னும் பொருளில் “பல்லவ கிரந்தத் தமிழ் எழுத்து” என்று பெயரிட்டது பொருந்தும். இதே அடிப்படையில், வடமொழிச் சொற்களை ஒலிப்பதற்காகப் “பல்லவ கிரந்தச் சமற்கிருத எழுத்து”  (Pallava Grantha Sanskrit Script) வடிவத்தையும் பல்லவர் உருவாக்கினர்.
(ஆ)  பல்லவ கிரந்த உருவாக்கம்
 
பல்லவர் ஆந்திரப்பகுதியின் ஆட்சியாளர்களான சாதவாகனருடன் வட இந்தியச் சூழலில் இருந்த காரணத்தால், பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய மொழிகளோடு மட்டுமே தொடர்பு கொண்டவராயிருந்துள்ளனர்.  தமிழ் நிலத்தில் ஆட்சி கிடைத்துத் தமிழ் மொழிக்கான தமிழ் எழுத்துக்குப் புது வடிவம் கொடுக்க முனைந்தபோது, தமக்கு நன்கு பழக்கமான வடவெழுத்துகளின் துணை கொண்டே அதைச் செயல்படுத்தினர் எனலாம். கி.மு. 3-ஆம் நூற்றாண்டு அசோகர் காலத்துப் பிராமி எழுத்து, கி.பி. 4-ஆம் நூற்றாண்டு அளவில் பல மாறுதல்களுக்கு உட்பட்டு, வட இந்தியப் புலத்தில் புதிய வடிவில் வழங்கியது. இந்த வடிவத்தைக் குப்தர்களும், கதம்பர்களும், சாலங்காயனரும் தம் ஆவணங்களில் பயன்படுத்தியது போலவே பல்லவரும் பயன்படுத்தினர். இந்த வடிவம் முற்காலப் பல்லவரின் பிராகிருத, சமற்கிருதச் செப்பேடுகளில் காணப்படுகிறது. இந்த வடிவத்தை அடிப்படையாக வைத்துப் பல்லவ கிரந்தத் தமிழ் எழுத்துகளும், பல்லவ கிரந்தச் சமற்கிருத எழுத்துகளும் உருவாகின. இருப்பினும் பொது வாழ்வில் மக்களிடையே வட்டெழுத்துப் பயன்பாடே இருந்துள்ளது. மகேந்திரவர்மன் காலத்தில் ஆகோள் பூசலுக்காக நிறுவப்பட்ட நடுகற்களின் கல்வெட்டு எழுத்து வட்டெழுத்தாகவே இருந்தமை இதற்குச் சான்று. (எடுத்துக் காட்டு : செங்கம் நடுகற்கள்). வட்டெழுத்து வளர்ந்த அளவு தமிழெழுத்து வளரவில்லை எனலாம். எனவே, பல்லவர் தமிழுக்கான எழுத்தை வடிவமைத்தனர் என்னும் கருத்து ஏற்புடையதாகவே தோன்றுகிறது.  கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் வழங்கிய பிராமி எழுத்தின் மூல வடிவம், கி.பி. 4-ஆம் நூற்றாண்டு அளவில் மாற்றம் பெற்ற வடிவம், பல்லவ கிரந்தச் சமற்கிருத  வடிவம், பல்லவ கிரந்தத் தமிழ் வடிவம் ஆகிய எழுத்து வடிவங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. அதில், பிராமி மூல எழுத்தை விடுத்து மற்ற எழுத்துகளின் இடையே உள்ள ஒற்றுமையைக் காணலாம். பல்லவ கிரந்தத்தில் பிராகிருத மொழியில் வெளியான செப்பேடுகளில் தமிழ் எழுத்துகளான “ழ”,  “ற”,  “ள”   ஆகியவற்றுக்குத் தனியே எழுத்துகள் பயன்பாட்டில்  இருந்துள்ளமை   குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.. 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

வட்டெழுத்து என்பது கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருத்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும். வட்டெழுத்தை மலையாள மொழியினை எழுதவும் பயன்படுத்தினர். [1]தற்கால தமிழ் எழுத்துக்கள் தமிழி எழுத்திலிருந்து தோன்றியவையே. வட்டெழுத்தை வட்டெழுத்தை வட்டம் என குறிப்பிட்டுள்ளனர். 

வட்டெழுத்து தோற்றம்[தொகு]

வட்டெழுத்துக்கள் பிராமி எழுத்து முறையில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவதற்கிணங்க அதை மாற்றியதால் வட்டெழுத்து தோன்றியது எனப் பொதுவாக கருதப்படுகின்றது.[2] பிராமி எழுத்துக்கள் கோடுகளாக இருப்பதால்(கோடுகளை ஓலைச்சுவடியில் எழுதினால் அவை கிழிந்து விடும்) ஓலைச்சுவடியில் எழுதும் பொருட்டு அவற்றை வட்ட வடிவில் மாற்றி எழுதப்பட்டதால் வட்டெழுத்து உருவானதாகக் கருதலாம்.

ஆனால் சிலர் வட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்து முறையென்றும் அதிலிருந்தே தமிழ் பிராமிஎழுத்துக்கள் தோன்றியன என்றும் வாதிடுகின்றனர்.[3] மு.வரதராசனார் தன்னுடைய தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் வெட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்துமுறை என்றும் வட பிராமி தென் பிராமியாக திரிபுற்றது வட்டெழுத்தை ஒட்டி வளர்ந்த வளர்ச்சியே காரணம் என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்த வாதம் பலரால் ஒப்புகொள்ளப்படவில்லை.[யார்?]

கி.பி 8ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து கிரந்த எழுத்துக்களுடன் மணிப்பிரவாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.

கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து தமிழ் நாட்டில் வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது.[4] ஆனால் கேரளத்தில் 15ஆம் நூற்றாண்டுவரை வட்டெழுத்து மலையாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

  • வட்டெழுத்து

    முனைவர் மா.பவானி
    உதவிப்பேராசிரியர் 
    கல்வெட்டியல் துறை

    தமிழகத்தில் ஏறத்தாழ பொ.ஆ. 4ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை வழங்கத்திலிருந்த ஒரு வகை எழுத்தாகும்.

    பெயர்க்காரணம்:

    வட்ட வடிவமாக எழுதப் பெற்றதால் இவை வட்டெழுத்துக்கள் எனப் பெயர் பெற்றன. ஏறத்தாழ பொ.ஆ.மு. 500 முதல் பொ.ஆ. 300 வரை வழக்கிலிருந்த சங்ககாலத் தமிழ் எழுத்துக்களின் (தமிழி) வளர்ச்சி மாற்ற நிலையே வட்டெழுத்துக்களாகும். இவ்வெழுத்து எக்காலம் முதற்கொண்டு இப்பெயர் பெற்றது என அறிய முடியவில்லை. இருப்பினும் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராக்கிரம பாண்டிய தேவரின் திருக்குற்றால நாதர் கல்வெட்டு இவ்வெழுத்தை ‘வட்டம்’ என்று குறிப்பிடுகிறது. “திருமலையில் கல்வெட்டு வட்டமானதால் தமிழாகப் படியெடுத்து” என்று வாசகம் உள்ளது.

    வட்டெழுத்துக்கு வழங்கப்பெற்ற வேறு பெயர்கள்:

    தெக்கன் மலையாளம், நாநாமோன, கோலெழுத்து என்பன இதன் பிற பெயர்களாகும்.

    தோற்றம்:

    டி.ஏ.கோபிநாதராவ் என்பவரே தமிழ்-பிராமி எழுத்திலிருந்து வட்டெழுத்து தோன்றியது என முதன் முதலில் கருத்து தெரிவித்தவர் ஆவார். எனினும் இவர் கருத்தை நிரூபிக்கத் தேவையான சான்றுகள் அக்காலத்தில் கிடைக்காததால் ஹரிப்பிரசாத் சாஸ்திரி இதை கரோஷ்டி எழுத்திலிருந்து தோன்றியது எனவும், பியூலர் தமிழ்-பிராமியின் மாறுபட்ட வடிவம் என்றும் வணிகர் மட்டும் பயன்படுத்தும் எழுத்து என்றும், பர்னல் பொனிசியன் வரிவடிவத்திலிருந்து தோன்றியது எனவும் இதன் தோற்றம் தொடர்பாகப் பல மாறுபட்ட கருத்துக்கள் நிலவின. ஆனால் அண்மைக் காலச் சான்றுகளான அறச்சலூர், பூலாங்குறிச்சி, இந்தளூர், அரசலாபுரம், பெருமுக்கல், அம்மன் கோயில்பட்டி ஆகிய ஊர்களில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் தமிழி எழுத்துக்களிலிருந்தே வட்டெழுத்து வளர்ச்சி அடைந்துள்ளமையினை நன்கு அறியலாம்.

    வட்டெழுத்து கல்வெட்டுகள் காணப்பெறும் இடங்கள்:

    தமிழகத்தில் பொ.ஆ. 2ஆம் நூற்றாண்டு முதல் எழுத்துக்களில் படிநிலை வளர்ச்சி இருப்பினும் முதலில் “தமிழி” எழுத்துக்களிலிருந்து வட்டெழுத்து மாறும் நிலை நன்கு காணப்பெறுவது அரச்சலூர் கல்வெட்டிலேயே ஆகும். இதைத் தொடர்ந்து பூலாங்குறிச்சி, அரசலாபுரம், எடக்கல் (கேரளா - பழையத் தமிழகம்), இரெட்டிமலை, எழுத்துக்கல்லு (கேரளா), இந்தளூர் (காஞ்சிபுரம்), பறையன் பட்டு, பெருமுக்கல், திருநாதர் குன்று (விழுப்புரம்), பிள்ளையார்பட்டி (சிவகங்கை), சித்தன்னவாசல் (புதுக்கோட்டை), தமதஹள்ளு (கர்நாடகா) திருச்சிராப்பள்ளி போன்ற பல இடங்களிலும் வட்டெழுத்தின் துவக்க நிலையைக் காண இயலுகிறது.
    அதனையடுத்து தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் இருளப்பட்டியில் கிடைத்த நடுகற்களிலும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி திருநாதர் குன்று, அரிட்டாப்பட்டி, சமணர் கல்வெட்டிலும் வட்டெழுத்துக்களைக் காணலாம். தமிழகத்தில் பெரும்பாலான முற்கால வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் தமிழகத்தில் வட பகுதியிலேயே அதிகமாகக் கிடைத்துள்ளன.

    பயன்பாடு:

    இவ்வெழுத்து முறை பல்லவர்கள் காலத்தில் தொண்டை மண்டல நடுகற்களில் (நடுகற்கள் என்பது ஊரைக் காக்கவோ நாட்டைக் காக்கவோ உயிரிழந்த வீரர்களுக்கு எடுக்கப்பெறும் நினைவுக் கற்களாகும். இது சங்ககாலம் தொட்டே வழக்கிலுள்ளது) பெருமளவில் காணப்படுகிறது. இதனால் பல்லவர் காலத்தில் இவ்வெழுத்துக்கள் மக்கள் வழக்காக இருந்தமையை அறிய முடிகிறது. பொ.ஆ. 7ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த முற்காலப் பாண்டியர்கள் தங்களது அரசு ஆணைகளையும் வட்டெழுத்திலேயே பொறித்துள்ளனர் என்பதற்கு வேள்விக்குடி செப்பேடுகள் போன்ற செப்பேடுகளே சான்றாகும். இதன் மூலம் பாண்டிய நாட்டில் இவை அரசு வரிவடிவமாக இருந்ததை அறியலாம்.
    கற்களில் மட்டுமின்றி பானை ஓடுகளிலும் இவை காணப்பெறுகின்றன. கோவைக்கு அருகே நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள போளுவாம்பட்டியிலும் திருவண்ணாமலை மாவட்டம் ஆண்டிப்பட்டியிலும் மேற்கொண்ட அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓடுகளில் வட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பொ.ஆ. 4-5ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே வட்டெழுத்து வழக்கத்திற்கு வந்துவிட்டதை உணரலாம்.

    வட்டெழுத்து வழக்கொழிந்தமை:

    இவ்வட்டெழுத்துக்கள் பொ.ஆ.10ஆம் நூற்றாண்டு வரை பாண்டிய நாட்டில் வழக்கில் இருந்துள்ளன. இதைப் பயன்படுத்துவதிலும் படித்துணர்ந்து கொள்வதிலும் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக இவ்வரிவடிவம் காலப்போக்கில் வழக்கிலிருந்து மறைந்தது. சமகாலத்தில் வாழ்ந்த மக்களாலேயே இவ்வெழுத்துக்களைப் படிக்க இயலாத நிலை இருந்துள்ளது. இதை 14ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றில் “புரியாத வட்டம்” என்ற குறிப்பினால் அறியலாம் இருப்பினும் வட்டெழுத்து மக்கள் வழக்காகக் குறிப்பாக நடுகற்களில் பொ.ஆ. 10ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்டது. தமிழகத்தில் பொ.ஆ. 13ஆம் நூற்றாண்டில் வட்டெழுத்து தனது செல்வாக்கை முற்றிலும் இழந்தது. இருப்பினும் கேரளத்தில் தொடர்ந்து இவ்வட்டெழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. கேரளாவில் வடமொழிச் சொற்களை அதிகமாகப் பயன்படுத்தியதன் காரணமாக வட்டெழுத்துடன் கிரந்தத்தின் பயன்பாடும் அதிகரித்தது. பின்னர் இவ்விரு எழுத்துக்களும் இணைந்து மலையாளம் என்ற புதிய வரிவடிவம் உருவானது.

    அறச்சலூர் கல்வெட்டு

    araccalur.png

    அரிட்டாப்பட்டி சமணர் குகைக் கல்வெட்டு(பொ.ஆ.8ஆம் நூற்றாண்டு)

    jains_cave.png

    jains_cave1.png

    vata.png
 
 
 
புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 


__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

சிம்மவிஷ்ணுவோடு முற்காலப் பல்லவர்  வரலாறு முற்றுப்பெறுகிறது.  மகேந்திர வர்மனின் காலத்திலிருந்து கல்வெட்டுச் சான்றுகள் உள்ளதால், மகேந்திரவர்மன் முதலாகத் தொடரும் பல்லவ மன்னர்களின் வரலாறு தெளிவாகக் கிடைக்கிறது.  மகேந்திர பல்லவன் முதலாகத் தொடரும் பல்லவ அரசர் பற்றி அடுத்து ஒரு கட்டுரையில் பதிவைத் தொடர்வோம். 

முற்காலப் பல்லவர் பற்றி இதுவரை பார்த்ததில், அவர்கள் வடபுலப் பின்னணி கொண்டவர் என்பது உறுதியாகிறது. தொடக்கத்தில் அவர்க்குத் தமிழோடு தொடர்பு இருந்திருக்கவில்லை; எனவே, அவர்கள் தமிழ் அறிந்திருக்கவில்லை எனலாம். ஆனால், காஞ்சியைக் கைப்பற்றி ஆளத்தொடங்கிய பின்னர் -  சோழமண்டலத்தையும் சேர்த்துத் தமிழகத்தின் வட பகுதியை  ஆள்கையில் -  அரசின் ஆட்சி நிருவாகத்துக்குச் சமற்கிருதத்தைப் பயன்படுத்தினாலும், ஆளும் மக்களிடை தம் ஆதிக்கத்தைச் செலுத்தவும், ஆளப்படுகின்ற மக்களின் ஏற்பு நோக்கியும் தமிழை அணைத்துக்கொண்டதோடு ”பல்லவத் தமிழ் கிரந்தம்”  என்னும் தமிழ் எழுத்து வடிவத்தை உருவாக்கித் தந்தனர் என்றால் மிகையாகாது. இந்த எழுத்துகளின் அடிப்படையிலேயே,  சோழர் தமிழ் எழுத்தைச் செம்மைப் படுத்தினர் எனலாம். அதுவரையிலும் தமிழ் மொழிக்கு வட்டெழுத்து வடிவமே செல்வாக்குப் பெற்ற நிலையில் இருந்துள்ளது எனவும் கருதலாம். விழவட்டி செப்பேட்டில் காணப்படும் சிறப்பு “ழ”கர  எழுத்து இந்த வட்டெழுத்தே எனவும் கருதலாம்.  முற்காலப் பல்லவர் காலத்தில் - அதாவது கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே தமிழின் தாக்கம் தமிழகத்துக்கு வடபால் அமைந்த ஆந்திர நிலத்தில் நிலைபெற்றது  எனவும் கருதுதற்கு இடமுண்டு.  தமிழரின் வணிகச் செயல்பாடும் இந்த மொழித்தாக்கத்துக்குக் காரணமாய் இருந்திருக்கக் கூடும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

Pallava script

From Wikipedia, the free encyclopedia
  (Redirected from Pallava alphabet)
 
Jump to navigationJump to search
Pallava
Pallava script name.gif
Type
LanguagesTamil
Time period
6th century AD to 9th century AD
Parent systems
Child systems
GranthaMonKhmerKawi
Sister systems
TamilVatteluttu alphabet

The Pallava script, a Brahmic script, was developed under the Pallava dynasty of Southern India around the 6th century of AD. Southeast Asian scripts such as Grantha[1]Javanese[2]Kawi[3]Baybayin[4]Mon[5]Burmese[6]Khmer[7]Lanna[8]Thai[9]Lao[10]Sinhala,[11] and the New Tai Lue alphabet[12] are either direct or indirect derivations from the Kadamba-Pallava alphabet.[13]

A proposal to encode the script in Unicode was submitted in 2018.[14]

Form[edit]

 
Pallava script at the 8th century Kailasanatha temple in KanchipuramTamil Nadu.

The form shown here is based on examples from the 7th century AD. Letters labeled * have uncertain sound value, as they have little occurrence in Southeast Asia.

Consonants[edit]

Each consonant has an inherent /a/, which will be sounded if no vowel sign is attached. If two consonants follow one another without intervening vowel, the second consonant is made into a subscript form, and attached below the first.

kakhagaghangacachajajha*nyaṭaṭha*ḍaḍha*ṇatatha
Pallava Ka.svgPallava Kha.svgPallava Ga.svgPallava Gha.svgPallava Nga.svgPallava Ca.svgPallava Cha.svgPallava Ja.svgPallava Jha.svgPallava Nya.svgPallava Tta.svgPallava Ttha.svgPallava Dda.svgPallava Ddha.svgPallava Nna.svgPallava Ta.svgPallava Tha.svg
dadhanapaphababhamayaralavaśaṣasaha
Pallava Da.svgPallava Dha.svgPallava Na.svgPallava Pa.svgPallava Pha.svgPallava Ba.svgPallava Bha.svgPallava Ma.svgPallava Ya.svgPallava Ra.svgPallava La.svgPallava Va.svgPallava Sha.svgPallava Ssa.svgPallava Sa.svgPallava Ha.svg

Independent Vowels[edit]

aāiīueoai*au*
Pallava A.svgPallava Aa.svgPallava I.svgPallava Ii.svgPallava U.svgPallava E.svgPallava O.svgPallava Ai.svgPallava Au.svg

Kadamba-Pallava script[edit]

 
Kadamba-Pallava script

During the rule of Pallavas, the script accompanied priests, monks, scholars and traders into South East Asia. Pallavas developed the Pallava script based on the Bhattiprolu script. The main characteristics of the newer script are aesthetically matched and fuller consonant glyphs. Similar to Pallava script, also visible in the writing systems of Chalukya,[15] Kadamba, Vengi at the time of Ikshvakus. Brahmi design was slightly different of the scripts of Cholas, Pandyas and Cheras. Pallava script very first significant developments of Brahmi in India, take care in combining rounded and rectangular strokes and adding typographical effects, was suitable for civic and religious inscriptions. Kadamba-Pallava script[16] evolved into early forms of Kannada and Telugu scripts. Glyphs become more rounded and incorporate loops because of writing upon leaves and paper.[17][18]

References[edit]

  1. ^ "Grantha alphabet". Retrieved 13 September 2018.
  2. ^ "Javanese alphabet". Retrieved 13 September 2018.
  3. ^ "Kawi alphabet". Retrieved 13 September 2018.
  4. ^ "Tagalog". Retrieved 13 September 2018.
  5. ^ "Mon". Retrieved 13 September 2018.
  6. ^ "Burmese". Retrieved 13 September 2018.
  7. ^ "Khmer". Retrieved 13 September 2018.
  8. ^ "Lanna alphabet". Retrieved 13 September 2018.
  9. ^ "Thai". Retrieved 13 September 2018.
  10. ^ "Lao". Retrieved 13 September 2018.
  11. ^ Jayarajan, Paul M. (1976-01-01). History of the Evolution of the Sinhala Alphabet. Colombo Apothecaries' Company, Limited.
  12. ^ "New Tai Lue script". Retrieved 13 September 2018.
  13. ^ "Pallava script". SkyKnowledge.com. 2010-12-30.
  14. ^ Pandey, Anshuman. (2018). Preliminary proposal to encode Pallava in Unicode.
  15. ^ http://www.skyknowledge.com/burnell-plate4.gif
  16. ^ "Pallava script". Skyknowledge.com. 2014-02-02. Retrieved 2014-03-13.
  17. ^ "Pallava - an important ancient script from South India". Retrieved 2013-09-05.
  18. ^ Jayarajan, Paul M. (1976-01-01). History of the Evolution of the Sinhala Alphabet. Colombo Apothecaries' Company, Limited.

Bibliography[edit]

  • Sivaramamurti, CIndian Epigraphy and South Indian Scripts. Bulletin of the Madras Government Museum. Chennai 1999


__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

பூலாங்குறிச்சி: அழிந்துகொண்டிருக்கும் வரலாறு - ரவிக்குமார்

 
 
 
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் பூலாங்குறிச்சி என்ற சிற்றூர்அங்கிருக்கும் கல்வெட்டுகளால் பெருமைபெற்று விளங்குகிறதுஅண்மையில் அங்குநான் நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன்.  மிக முக்கியமான வரலாற்று ஆதாரம்என்று சொல்லப்படுகிற அந்தக் கல்வெட்டுகளைப்பற்றி அந்த ஊர் மக்களுக்குஅவ்வளவாகத் தெரியவில்லை.  ஏழெட்டு பேரிடம் விசாரித்தபிறகு தான்  அந்தக்குன்று இருக்கும் திசையை எங்களால் தெரிந்துகொள்ளமுடிந்தது.  குன்றுப் பகுதியைஅடைந்து கல்வெட்டுகள் எங்கே உள்ளன என்று தேடிக்கொண்டிருந்தோம்.  அப்போதுஅந்தப் பக்கமாக ஒரு மூதாட்டி நடந்து வந்துகொண்டிருந்தார்.  அனாயசமாக அந்தக்குன்றின் சரிவுப்பகுதியில் ஏறி  அவர் எங்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்அவரிடம் கல்வெட்டுகளைப் பற்றி நான் கேட்டேன்.  இதோ இங்கேதான் இருக்கிறதுஎன்று தனது காலின் கீழ் பக்கமாகக் காட்டிவிட்டுச் சரிவின் அந்தப் புறமாக இறங்கிஅவர் மறைந்து போய்விட்டார்
pulankurichi+1.jpg
 
அது நடுப்பகல் நேரம் என்பதால் காய்ச்சிய இரும்புத் துண்டைப்போல கற்பாறைகொதித்துக்கொண்டிருந்தது.  அதில் பட்டு எதிரொளித்த சூரியக் கிரணங்கள்கண்களைக் கூசச் செய்தன.  சற்று நிதானித்துப் பார்த்தபோது கல்வெட்டுகள்புலப்பட்டன.  தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் தொன்மையானகல்வெட்டுகளிலேயே மிகவும் பெரியது பூலாங்குறிச்சி கல்வெட்டுதான் என்றுகல்வெட்டியல் அறிஞர் ஒய்சுப்புராயலு கூறியிருப்பது முற்றிலும் உண்மைதான்.  45 அடி நீளமும் 6 அடி உயரமும் கொண்டு மூன்று பகுதிகளாக அக் கல்வெட்டுகள்உள்ளன.  மிகவும் ஒழுங்கான முறையில் அவை வெட்டப்பட்டுள்ளன.  அருகில்இருந்து பார்க்கும்போது அவற்றின் முழுப் பரிமாணம் எனக்குத் தெரியவில்லைஎனவே சரிவின் கீழே இருக்கும் வயலில் இறங்கி அங்கிருந்து அதைப்பார்த்தேன்.  மிகவும் பிரமிப்பாக இருந்தது.  தமிழக வரலாற்றின் முக்கியமான ஆதாரங்களில்ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற பெருமிதத்தில் வெயிலில் நனைந்தபடிநின்றேன்
 
வரலாறு என்பது கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையே நடக்கும்முடிவற்ற உரையாடல்’ என்றார் பிரபல வரலாற்றறிஞர் .எச்.கார்இது இந்தியவரலாற்றுக்கு அப்படியே பொருந்தாதுகடந்தகால கற்பனைகளைநிகழ்காலத்தின்மேல் திணிப்பதைத்தான் வரலாறு என்று இங்கேசொல்லிவருகிறார்கள்.நம்பகமான ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டுஎழுதப்படும் வரலாற்றின் இடத்தை இந்தியாவில் புராணங்களால் நிரப்பிவைத்திருக்கிறார்கள்வரலாறு கதையாக சொல்லப்படுவதற்கு மாறாக இங்கேகதைகள்தான் வரலாறுகளாக முன்வைக்கப்படுகின்றனகாலகாலமாகத்தொடர்ந்துகொண்டிருக்கும் இந்தப் போக்கின் காரணமாகக் கட்டுக் கதைகளுக்கும்வரலாற்றுக்கும் இடையிலான வேறுபாடு நமக்குத் தெரியாமல் போய்விட்டதுஅதனால்தான் நாம் வரலாற்று உணர்வு அற்றவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்பழம் பெருமை பேசி அதிலேயே சுகம் காண்பது மட்டும்தான் நமக்குத் தெரியும்கல்தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன்பே தோன்றியதாக சுயதம்பட்டம்அடித்துக்கொள்கிற நாம்நமது தொன்மையை உலகுக்கு உணர்த்துவதற்கானஅறிவார்ந்த செயல்களில் ஈடுபடுவதில்லை.அதன் ஒரு சாட்சியாக இருக்கிறதுபூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள்
 
வரலாற்றை எழுதுவதற்குப் பல்வேறு தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன.அவற்றுள்மிகவும் நம்பகமான ஆதாரம் கல்வெட்டு ஆகும்இலக்கியப் பிரதிகளைவிடவும்,புராணக்கதைகளைவிடவும் கல்வெட்டுகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் உண்டு.இதுவரை சுமார் எண்பதாயிரம் கல்வெட்டுகளை இந்தியாவெங்கிலும்கண்டுபிடித்திருக்கிறார்கள்.  அதில் 28,000 கல்வெட்டுகள் தமிழ்நாட்டில்இருக்கின்றன.அதாவது இந்தியாவில் கண்டறியப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் சுமார்பாதியளவு கல்வெட்டுகள் தமிழ்நாட்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
 
நமக்குக் கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் தொன்மையானவை தமிழ் பிராமிகல்வெட்டுகளாகும்அவற்றை பிராமி கல்வெட்டுகள் என்று சொல்லக்கூடாது தமிழிஎன்றுதான் அழைக்கவேண்டும் என்பது சில தொல்லியல் அறிஞர்களின் வாதம்கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியைச்சேர்ந்த 93 தமிழ் பிராமி கல்வெட்டுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனதமிழ்நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் பிராமி கல்வெட்டுகள் நீங்கலாக பிறகல்வெட்டுகளை ஒய்சுப்பராயலு காலவாரியாக அட்டவணைப்படுத்தியிருக்கிறார்.  கி.பி .3 ஆம் நூற்றாண்டிலிருந்து 5ஆம் நூற்றாண்டுவரையிலானவை  நூறுகல்வெட்டுகள்கி.பி.5- கி.பி 9 காலத்தைச் சேர்ந்தவை 900 கல்வெட்டுகள்;  கி.பி.9 ஆம்நூற்றாண்டு முதல் முதல் கி.பி  13 ஆம் நூற்றாண்டு  வரையிலானவைபத்தொன்பதாயிரம் கல்வெட்டுகள்;  கி.பி.13 - கி.பி 16 வரையிலான காலத்தைச்சேர்ந்தவை 6000 கல்வெட்டுகள்கி.பி.16-19 நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை 2000 கல்வெட்டுகள்.
 
கல்வெட்டுகள் மட்டுமின்றி வரலாற்றைத் தெரிந்துகொள்ள இலக்கியப் பிரதிகள் , நாணயங்கள்பானை ஓடுகள்செப்புப் பட்டயங்கள் எனப் பல்வேறு ஆதாரங்கள்கிடைத்தபோதிலும் தொல்தமிழக வரலாற்றைத் தெரிந்துகொள்ள கல்வெட்டுகள்தான்நம்பகமான ஆதாரங்களாக உள்ளன.  அதிலும் குறிப்பாக கி.மு.3 ஆம் நூற்றாண்டுமுதல் கி.பி 9ஆம் நூற்றாண்டுவரையிலான காலப்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகள்மிகவும் முக்கியமானவையாகும்.  ஏனென்றால் தமிழின் தொன்மையை உலகிற்குஉணர்த்த முக்கியமான ஆதாரங்களாக அவையே விளங்குகின்றன
 
தமிழ்நாட்டில் கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் கி.பி.4ஆம்நூற்றாண்டுவரையிலான கல்வெட்டுகள் தமிழ் பிராமி எழுத்துக்களால்வடிக்கப்பட்டிருக்கின்றன.  அதன் பிறகு இருவிதமான எழுத்துமுறைகள் தமிழகத்தில்பயண்படுத்தப்பட்டுள்ளன.  வட்டெழுத்து மற்றும் தமிழ் எழுத்து என அவற்றைக்கல்வெட்டியல் அறிஞர்கள் வகைப்படுத்துகிறார்கள்.  கி.பி.10 ஆம் நூற்றாண்டுவரைவட்டெழுத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் நமக்குக் கிடைக்கின்றன.  அதன்பிறகுஅது கேரளப்பகுதியின் எழுத்தாக உள்வாங்கப்பட்டிருக்கிறதுதமிழ்நாட்டின் ஏனையபகுதிகளில் தமிழ் எழுத்துகள் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன
 
இந்திய வரலாற்று ஆதாரங்களுள் முக்கியமாகக் கருதப்படும் இந்தக்கல்வெட்டுகளைக் கண்டறிந்து அவற்றைப் படித்துச் சொன்னது ஆங்கிலேயர்கள்தான். 1784 ஆம் ஆண்டு கல்கத்தாவில் துவக்கப்பட்ட ‘ஆசியாடிக் சொசைட்டிதான்  முதலில்கல்வெட்டுகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டது.  சென்னை மாகாணத்துக்குப் பணிநிமித்தமாக வந்த ஆங்கிலேய அதிகாரி மெக்கன்சி என்பவர் 8000 கல்வெட்டுகளை படிஎடுத்துத் தொகுத்ததார்.  அவற்றில் 1300 கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் ஆகும்
 
1872ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்ஜஸ் என்பவர் ‘இண்டியன் ஆன்டிகூரி’ என்றபத்திரிக்கையை ஆரம்பித்து கல்வெட்டுகளை அதில் வெளியிட்டார்.  அதன்பிறகுஎப்பிகிராபிகா இண்டிகா’ என்ற பத்திரிக்கையும் கல்வெட்டுக்காகத் துவக்கப்பட்டது.  தென்னிந்தியக் கல்வெட்டுகளைப் படிஎடுத்துத் தொகுப்புகளாக வெளியிடும்முயற்சியும் அதன் பின்னர் துவங்கியது.  சுமார் 15000 கல்வெட்டுகள் அவ்வாறுதொகுதிகளாக வெளியிடப்பட்டன
 
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கல்வெட்டுகளை இப்போதும்ஆய்வாளர்கள் கண்டுபிடித்து வருகிறார்கள்.  சிதிலமாகிக் கைவிடப்பட்ட கோயில்கள்மலைக் குகைகள்குன்றுகளின் சரிவுகள்நடு கல்கள் எனக் கண்டறியப்படாதகல்வெட்டுகள் இன்னும் காத்துக்கிடக்கின்றன.   புதிதாகக் கண்டறியப்படும்கல்வெட்டுகளைப் பற்றிய செய்திகளையும்கல்வெட்டுகள் பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக ‘ஆவணம்’ என்ற இதழ் தமிழில் கடந்தபத்தாண்டுகளுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கிறது
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

தமிழகத்தில் கிடைத்திருக்கும் தொன்மையான கல்வெட்டுகள் அதாவது கி.பி. 3 - 9ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகள் மொத்தம்1000 தான் நமக்கு இதுவரை கிடைத்துள்ளன.  அவை பல்வெறு செய்திகளை எடுத்துச்சொல்பவையாக உள்ளன.  பெரும்பாலான கல்வெட்டுகள் ஒரு சில வரிகளைமட்டுமே கொண்டவையாக இருக்கின்றன.  அந்த 1000 கல்வெட்டுகளில் மிகவிரிவானதும் முக்கித்துவம் வாய்ந்ததுமான கல்வெட்டு பூலாங்குறிச்சிக்கல்வெட்டாகும்
pulankurichi+4.jpg
 
திருச்சி மாவட்ட தொல்லியல் துறையைச் சேர்ந்த அலுவலர் துளசிராமன் என்பவரால்கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு குறித்த செய்தி முதலில் 1979ஆம் ஆண்டுஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியானது.  இந்தக் கல்வெட்டின்முக்கியத்துவம் குறித்து அப்போது தமிழ்நாடு தொல்லியல் துறையின் இயக்குனராகஇருந்த முனைவர் ஆர்நாகசாமி 1981 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகத் தமிழ்மாநாட்டில் விரிவான கட்டுரை ஒன்றை வாசித்தார்.  இந்தக் கல்வெட்டு இதுவரைகண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான கல்வெட்டுகளிலேயே மிகவும் பெரியது என்றுஅவர் குறிப்பிட்டார்
 
தமிழ்நாட்டில் கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் நிலம் தொடர்பானசெய்திகளைக்கொண்ட தொன்மையான கல்வெட்டும் பூலாங்குறிச்சிக்கல்வெட்டுதான்.  நிலத்தைப் பராமரிப்பது தொடர்பாகவும் அதன் உரிமைதொடர்பாகவும் இதில் பல்வேறு செய்திகள் இருக்கின்றன.  இதைப்பற்றிஆராய்ந்திருக்கும் ஆர்நாகசாமி கல்வெட்டுகளின் காலம் குறித்து குறிப்பிட்டிருக்கும்செய்தி முக்கியமானதாகும்.  பிற்காலக் கல்வெட்டுகளில் காணப்படுவது போலமன்னரின் ஆட்சி ஆண்டைப் பற்றிய குறிப்பு எதுவும் இதில் இல்லை. ‘‘ கோச்சேந்தங்கூற்றற்கு யாண்டு நூற்றுத் தொண்ணூற்றிரண்டு நாண் முப்பத்தாறு பக்கந் தைப்பிறை’’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறதுஇதை ஆராய்ந்த ஆர்நாகசாமிஇக்கல்வெட்டு சக யுகத்தைத்தான் குறிப்பிடுகிறது என்று கூறுகிறார்.  சக யுகம் என்பதுகி.பி.78 ஆம் ஆண்டில் துவங்குகிறது.  அதை வைத்துப் பார்த்தால் இக்கல்வெட்டுகி.பி.270 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும் என அவர் தெரிவிக்கிறார்.  ஆனால் ஒய்சுப்பராயலுவோ இக்கல்வெட்டு கி.பி. 5ஆம் நூற்றாண்டடைச்சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று கூறியிருக்கிறார்.  இக்கல்வெட்டின் எழுத்தமைதிபல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் காலத்தைச் சேர்ந்த நடுகல்லில் காணப்படும்எழுத்துக்கு முற்பட்டதாகத் தெரிகிறது.  எனவே இந்த எழுத்து முறையைப்பார்க்கும்போது கி.பி.5 ஆம் நூற்றாண்டு என்று கொள்வதே பொருத்தமானதாகஇருக்கும் என்பது சுப்பராயலுவின் கருத்து.  அதாவது நாகசாமி சொல்வதற்கும்சுப்பராயலு சொல்வதற்கும் இடையில் 200 ஆண்டுகால இடைவெளி இருக்கிறதுஇந்த இரண்டு கருத்துக்களுமே கூடத் தற்போது கிடைத்திருக்கும் பிறகல்வெட்டுகளை ஒப்பிட்டு செய்யப்பட்ட யூகங்களே தவிர இறுதி உண்மைகள்அல்ல.இவர்கள் சொல்வதைக் காட்டிலும் இன்னும் கூட காலத்தால் இக்கல்வெட்டுமுற்பட்டதாகவும் இருக்கக்கூடும்.தமிழ் பிராமி எழுத்தின் காலம் இப்போதுமேற்கொள்ளப்பட்டிருக்கும் பொருந்தல் அகழ்வாய்விற்குப் பிறகு கி.மு.5 ஆம்நூற்றாண்டு என்று தெரியவந்திருப்பதைப்போல பூலாங்குறிச்சிக் கல்வெட்டின்காலமும் கூட இன்னும் தொன்மையானதாக இருக்கக்கூடும்
 
சுப்பராயலு சொல்வதையே எடுத்துக்கொண்டாலும்கூட சுமார் 16 நூற்றாண்டுகளுக்குமுற்பட்டத் தொன்மை வாய்ந்ததாக பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் விளங்குகின்றன.  அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் மன்னர்களின் பெயர்களான சேந்தன்கூற்றன்ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் களப்பிரர் அரசர்களாக இருக்கக்கூடும் எனநாகசாமியும்சுப்பராயலுவும் கருத்து தெரிவித்துள்ளனர்அவ்வாறெனில் இருண்டகாலம் எனக் குறிக்கப்படும் களப்பிரர் காலத்தைப்பற்றித் தெளிவுபடுத்தக்கூடிய மிகமுக்கியமான கல்வெட்டுகளாகவும் இவை இருக்கின்றனபௌத்த சமணத்தைஆதரித்த களப்பிரர் மன்னர்களின் ஆட்சியில் பிராமணர்கள் அதிகாரம் அற்றவர்களாகவைக்கப்பட்டிருந்தனர் என்றுதான் வரலாற்று ஆசிரியர்கள் இதுவரை கூறிவந்தனர்இந்தக் கல்வெட்டில் ‘ கூடலூரு நாட்டுப் பிரமதாயஞ் சிற்றையூருக்குப் பிரம்மதாயக்கி’ எனவும் ‘ பிரம்மதாயத்துட் பிரம்மதாயக் கிழவரான’ என்றும் பிரம்மதாய நிலம்குறித்துப் பேசப்பட்டிருக்கிறதுபிரம்மதாயம் என்பது பிராமணர்களுக்குஉரிமையாக்கப்பட்ட நிலம் ஆகும்களப்பிரர் ஆட்சிக்காலத்தில் பிராமணர்கள்செல்வாக்கிழந்து இருந்திருந்தால் எவ்வாறு அவர்களுக்கு பிரம்மதாய நிலம்இருந்திருக்கும் ? 
 
இந்தக் கல்வெட்டில் இரண்டு தேவகுலங்கள் மற்றும் வசிதேவனார் கோட்டம்ஆகியவை குறித்த செய்திகளும் உள்ளன.  தேவகுலம் என்றால் பொதுவாக இந்துக்கோயில்கள் என்றே இதுவரை வரலாற்று ஆசிரியர்கள் கூறிவந்தனர்.  ஆனால் அதைக்கல்வெட்டியல் அறிஞர் கோவிஜயவேணுகோபால் இப்போது மறுத்திருக்கிறார்.  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவையில் உள்ள பாடல்ஒன்றை எடுத்துகாட்டித் தேவகுலம் என்பது நோன்பு நோற்று உயிர் துறந்த சமணமுனிவர்களுக்காகக் கட்டப்பட்ட இடமாக இருந்திருக்கலாம் என அவர்கூறுகிறார்.ஆசாரக்கோவையின் பாடல் நோயின்றி வாழ விரும்புகிறவர்கள் தனியேபோகக்கூடாத இடங்கள் என்று நான்கு இடங்களைப் பட்டியலிடுகிறது:‘‘பாழ்மனையுந்  தேவகுலனுஞ் சுடுகாடும்,ஊரில் வழியெழுந்த வொற்றைமுதுமரனும்அவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளனதேவகுலம் என்பது கோயிலாகஇருந்தால் அதை சுடுகாட்டோடு சேர்த்துப் பட்டியலிட்டிருக்கமாட்டார்கள்.  தேவகுலம்என்பது வடஇந்தியாவில் நீத்தோர் படிமைகளை வைத்து வணங்கும் கூடமாக  இருந்தது எனவும் இந்த வழக்கம் கி.பிமுதலாம் நூற்றாண்டில் இருந்தேகாணப்படுகிறது எனவும் பி.ஆர்பந்தர்கர் கூறியிருப்பதை விஜயவேணுகோபால்சுட்டிக்காட்டுகிறார்.  அதனடிப்படையில் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் குறிப்பிடும் ‘‘ இரு தேவகுலங்கள்வசிதேவனார் கோட்டம் ஆகிய மூன்றுமே சமண சமயஞ்சார்ந்தன எனக்கொள்வதோடு இவற்றைக் கட்டிய அதிகாரிக்கு ஆதரவளித்ததன்மூலம் அரசனும் சமண சமயஞ் சார்ந்தவன் எனக் கொள்ளலாம்’’ என்று அவர்குறிப்பிடுகிறார்முதலில் இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்ட தேவகுலம் என்றசொல் பின்னர் கோயில்களைக் குறிப்பதாக மாறிவிட்டது என்றும் அவர்விளக்குகிறார்.
 
பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு மேல்ஆகியும்கூடத்  தமிழ் ஆய்வுலகம் இன்னும் அதை ஆழமான விவாதத்திற்குஉட்படுத்தவில்லைஅதில் சொல்லப்பட்டிருக்கும் காலக் கணக்கு இன்னும்முழுமையாக விளக்கப்படவில்லைஅதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எழுத்து முறைஎன்பது தமிழ் பிராமி எழுத்திலிருந்து வட்டெழுத்துக்கு மாறி வந்த நிலையைக்காட்டுகிறது என்று கல்வெட்டியல் அறிஞர்கள் கூறுகின்றனர்அத்தகையஎழுத்துமுறையைக் கொண்ட மிகப்பெரிய கல்வெட்டுகளும் இவைதான்.
 
களப்பிரர் காலம்தமிழகத்தில் நிலவிவந்த நில நிர்வாக அமைப்பு பற்றிய வரலாறுதமிழ் எழுத்துமுறையின் வரலாறு எனப் பலவகையிலும் அரியசெய்திகளைக்கொண்டதாகப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் விளங்குகின்றனஇவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் எந்தவிதப் பாதுகாப்போபராமரிப்போ இன்றிக் கிடக்கின்றனதமிழகத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில்இருப்பதாகக் கூறப்பட்டாலும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளைஅடையாளம்காட்டக்கூட அங்கே ஆளில்லைஅந்தக் குன்றின் கீழே விவசாயம் செய்யப்படுவதால் கொஞ்சம் பாதுகாப்பு இருக்கிறது. வெயிலில் காய்வதால் பாறையின் மேல்பகுதி உரிந்து வருகிறது. ஏற்கனவே இந்தக் கல்வெட்டுகளின் ஒரு பகுதி படிக்க முடியாத அளவுக்கு அழிந்துவிட்டது. இப்படியே கிடந்தால் இன்னும் சிலகாலத்தில் இந்தக் கல்லெழுத்துகளும் நீரெழுத்துகள் ஆகிவிடும்.
குடுமியான்மலை இசைக் கல்வெட்டுகளைப் பாதுகாக்க இந்தியத் தொல்லியல் துறைஅங்கே மண்டபம் போன்ற அமைப்பைக் கட்டியிருக்கிறதுஅதுபோலப்பூலாங்குறிச்சியிலும் செய்யவேண்டும்.அங்கே ஒரு பாதுகாவலரையும் வழிகாட்டியையும் நியமிக்கவேண்டும். இல்லாவிட்டால் ஏற்கனவே இயற்கையின்தாக்கத்தால் அழிந்துகொண்டிருக்கும் அந்தக் கல்வெட்டுகள் இன்னும் சிலஆண்டுகளில் முழுமையாக அழிந்துபோய்விடும்இதை மத்திய மாநில அரசுகள்தான் செய்யவேண்டும் என்பதில்லை. செம்மொழி நிறுவனமேகூட செய்யலாம். மத்திய அரசு ஒதுக்கும் நிதியை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு இதைச் செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல.
 
நன்றி : தீராநதி , மே 2012


__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

பூலாங்குறிச்சி: அழிந்துகொண்டிருக்கும் வரலாறு

- ரவிக்குமார்

 

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் பூலாங்குறிச்சி என்ற சிற்றூர் அங்கிருக்கும் கல்வெட்டுகளால் பெருமைபெற்று விளங்குகிறது. அண்மையில் அங்கு நான் நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன். மிக முக்கியமான வரலாற்று ஆதாரம் என்று சொல்லப்படுகிற அந்தக் கல்வெட்டுகளைப்பற்றி அந்த ஊர் மக்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. ஏழெட்டு பேரிடம் விசாரித்தபிறகு தான் அந்தக் குன்று இருக்கும் திசையை எங்களால் தெரிந்துகொள்ளமுடிந்தது. குன்றுப் பகுதியை அடைந்து கல்வெட்டுகள் எங்கே உள்ளன என்று தேடிக்கொண்டிருந்தோம். அப்போது அந்தப் பக்கமாக ஒரு மூதாட்டி நடந்து வந்துகொண்டிருந்தார். அனாயசமாக அந்தக் குன்றின் சரிவுப்பகுதியில் ஏறி அவர் எங்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தார். அவரிடம் கல்வெட்டுகளைப் பற்றி நான் கேட்டேன். இதோ இங்கேதான் இருக்கிறது என்று தனது காலின் கீழ் பக்கமாகக் காட்டிவிட்டுச் சரிவின் அந்தப் புறமாக இறங்கி அவர் மறைந்து போய்விட்டார்.  

அது நடுப்பகல் நேரம் என்பதால் காய்ச்சிய இரும்புத் துண்டைப்போல கற்பாறை கொதித்துக்கொண்டிருந்தது. அதில் பட்டு எதிரொளித்த சூரியக் கிரணங்கள் கண்களைக் கூசச் செய்தன. சற்று நிதானித்துப் பார்த்தபோது கல்வெட்டுகள் புலப்பட்டன. தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் தொன்மையான கல்வெட்டுகளிலேயே மிகவும் பெரியது பூலாங்குறிச்சி கல்வெட்டுதான் என்று கல்வெட்டியல் அறிஞர் ஒய். சுப்புராயலு கூறியிருப்பது முற்றிலும் உண்மைதான். 45 அடி நீளமும் 6 அடி உயரமும் கொண்டு மூன்று பகுதிகளாக அக் கல்வெட்டுகள் உள்ளன. மிகவும் ஒழுங்கான முறையில் அவை வெட்டப்பட்டுள்ளன. அருகில் இருந்து பார்க்கும்போது அவற்றின் முழுப் பரிமாணம் எனக்குத் தெரியவில்லை. எனவே சரிவின் கீழே இருக்கும் வயலில் இறங்கி அங்கிருந்து அதைப்பார்த்தேன். மிகவும் பிரமிப்பாக இருந்தது. தமிழக வரலாற்றின் முக்கியமான ஆதாரங்களில் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற பெருமிதத்தில் வெயிலில் நனைந்தபடி நின்றேன்.  

' வரலாறு என்பது கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையே நடக்கும் முடிவற்ற உரையாடல்’ என்றார் பிரபல வரலாற்றறிஞர் ஈ.எச்.கார். இது இந்திய வரலாற்றுக்கு அப்படியே பொருந்தாது. கடந்தகால கற்பனைகளை நிகழ்காலத்தின்மேல் திணிப்பதைத்தான் வரலாறு என்று இங்கே சொல்லிவருகிறார்கள்.நம்பகமான ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படும் வரலாற்றின் இடத்தை இந்தியாவில் புராணங்களால் நிரப்பி வைத்திருக்கிறார்கள். வரலாறு கதையாக சொல்லப்படுவதற்கு மாறாக இங்கே கதைகள்தான் வரலாறுகளாக முன்வைக்கப்படுகின்றன. காலகாலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்தப் போக்கின் காரணமாகக் கட்டுக் கதைகளுக்கும் வரலாற்றுக்கும் இடையிலான வேறுபாடு நமக்குத் தெரியாமல் போய்விட்டது. அதனால்தான் நாம் வரலாற்று உணர்வு அற்றவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பழம் பெருமை பேசி அதிலேயே சுகம் காண்பது மட்டும்தான் நமக்குத் தெரியும். கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன்பே தோன்றியதாக சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிற நாம், நமது தொன்மையை உலகுக்கு உணர்த்துவதற்கான அறிவார்ந்த செயல்களில் ஈடுபடுவதில்லை.அதன் ஒரு சாட்சியாக இருக்கிறது பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள்.  

வரலாற்றை எழுதுவதற்குப் பல்வேறு தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன.அவற்றுள் மிகவும் நம்பகமான ஆதாரம் கல்வெட்டு ஆகும். இலக்கியப் பிரதிகளைவிடவும், புராணக்கதைகளைவிடவும் கல்வெட்டுகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. இதுவரை சுமார் எண்பதாயிரம் கல்வெட்டுகளை இந்தியாவெங்கிலும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதில் 28,000 கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.அதாவது இந்தியாவில் கண்டறியப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் சுமார் பாதியளவு கல்வெட்டுகள் தமிழ்நாட்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  

நமக்குக் கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் தொன்மையானவை தமிழ் பிராமி கல்வெட்டுகளாகும். அவற்றை பிராமி கல்வெட்டுகள் என்று சொல்லக்கூடாது தமிழி என்றுதான் அழைக்கவேண்டும் என்பது சில தொல்லியல் அறிஞர்களின் வாதம். கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியைச் சேர்ந்த 93 தமிழ் பிராமி கல்வெட்டுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் பிராமி கல்வெட்டுகள் நீங்கலாக பிற கல்வெட்டுகளை ஒய். சுப்பராயலு காலவாரியாக அட்டவணைப்படுத்தியிருக்கிறார். கி.பி .3 ஆம் நூற்றாண்டிலிருந்து 5ஆம் நூற்றாண்டுவரையிலானவை நூறு கல்வெட்டுகள்; கி.பி.5- கி.பி 9 காலத்தைச் சேர்ந்தவை 900 கல்வெட்டுகள்; கி.பி.9 ஆம் நூற்றாண்டு முதல் முதல் கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரையிலானவை பத்தொன்பதாயிரம் கல்வெட்டுகள்; கி.பி.13 - கி.பி 16 வரையிலான காலத்தைச் சேர்ந்தவை 6000 கல்வெட்டுகள்; கி.பி.16-19 நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை 2000 கல்வெட்டுகள். 

கல்வெட்டுகள் மட்டுமின்றி வரலாற்றைத் தெரிந்துகொள்ள இலக்கியப் பிரதிகள் , நாணயங்கள், பானை ஓடுகள், செப்புப் பட்டயங்கள் எனப் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்தபோதிலும் தொல்தமிழக வரலாற்றைத் தெரிந்துகொள்ள கல்வெட்டுகள்தான் நம்பகமான ஆதாரங்களாக உள்ளன. அதிலும் குறிப்பாக கி.மு.3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 9ஆம் நூற்றாண்டுவரையிலான காலப்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகள் மிகவும் முக்கியமானவையாகும். ஏனென்றால் தமிழின் தொன்மையை உலகிற்கு உணர்த்த முக்கியமான ஆதாரங்களாக அவையே விளங்குகின்றன.  

தமிழ்நாட்டில் கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் கி.பி.4ஆம் நூற்றாண்டுவரையிலான கல்வெட்டுகள் தமிழ் பிராமி எழுத்துக்களால் வடிக்கப்பட்டிருக்கின்றன. அதன் பிறகு இருவிதமான எழுத்துமுறைகள் தமிழகத்தில் பயண்படுத்தப்பட்டுள்ளன. வட்டெழுத்து மற்றும் தமிழ் எழுத்து என அவற்றைக் கல்வெட்டியல் அறிஞர்கள் வகைப்படுத்துகிறார்கள். கி.பி.10 ஆம் நூற்றாண்டுவரை வட்டெழுத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் நமக்குக் கிடைக்கின்றன. அதன்பிறகு அது கேரளப்பகுதியின் எழுத்தாக உள்வாங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளில் தமிழ் எழுத்துகள் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.  

இந்திய வரலாற்று ஆதாரங்களுள் முக்கியமாகக் கருதப்படும் இந்தக் கல்வெட்டுகளைக் கண்டறிந்து அவற்றைப் படித்துச் சொன்னது ஆங்கிலேயர்கள்தான். 1784 ஆம் ஆண்டு கல்கத்தாவில் துவக்கப்பட்ட ‘ஆசியாடிக் சொசைட்டி‘தான் முதலில் கல்வெட்டுகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டது. சென்னை மாகாணத்துக்குப் பணி நிமித்தமாக வந்த ஆங்கிலேய அதிகாரி மெக்கன்சி என்பவர் 8000 கல்வெட்டுகளை படி எடுத்துத் தொகுத்ததார். அவற்றில் 1300 கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் ஆகும்.  

1872ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்ஜஸ் என்பவர் ‘இண்டியன் ஆன்டிகூரி’ என்ற பத்திரிக்கையை ஆரம்பித்து கல்வெட்டுகளை அதில் வெளியிட்டார். அதன்பிறகு ‘எப்பிகிராபிகா இண்டிகா’ என்ற பத்திரிக்கையும் கல்வெட்டுக்காகத் துவக்கப்பட்டது. தென்னிந்தியக் கல்வெட்டுகளைப் படிஎடுத்துத் தொகுப்புகளாக வெளியிடும் முயற்சியும் அதன் பின்னர் துவங்கியது. சுமார் 15000 கல்வெட்டுகள் அவ்வாறு தொகுதிகளாக வெளியிடப்பட்டன.  

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கல்வெட்டுகளை இப்போதும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து வருகிறார்கள். சிதிலமாகிக் கைவிடப்பட்ட கோயில்கள், மலைக் குகைகள், குன்றுகளின் சரிவுகள், நடு கல்கள் எனக் கண்டறியப்படாத கல்வெட்டுகள் இன்னும் காத்துக்கிடக்கின்றன. புதிதாகக் கண்டறியப்படும் கல்வெட்டுகளைப் பற்றிய செய்திகளையும், கல்வெட்டுகள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக ‘ஆவணம்’ என்ற இதழ் தமிழில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கிறது.  

தமிழகத்தில் கிடைத்திருக்கும் தொன்மையான கல்வெட்டுகள் அதாவது கி.பி. 3 - 9ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகள் மொத்தம் 1000 தான் நமக்கு இதுவரை கிடைத்துள்ளன. அவை பல்வெறு செய்திகளை எடுத்துச் சொல்பவையாக உள்ளன. பெரும்பாலான கல்வெட்டுகள் ஒரு சில வரிகளை மட்டுமே கொண்டவையாக இருக்கின்றன. அந்த 1000 கல்வெட்டுகளில் மிக விரிவானதும் முக்கித்துவம் வாய்ந்ததுமான கல்வெட்டு பூலாங்குறிச்சிக் கல்வெட்டாகும்.  

திருச்சி மாவட்ட தொல்லியல் துறையைச் சேர்ந்த அலுவலர் துளசிராமன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு குறித்த செய்தி முதலில் 1979ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியானது. இந்தக் கல்வெட்டின் முக்கியத்துவம் குறித்து அப்போது தமிழ்நாடு தொல்லியல் துறையின் இயக்குனராக இருந்த முனைவர் ஆர். நாகசாமி 1981 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் விரிவான கட்டுரை ஒன்றை வாசித்தார். இந்தக் கல்வெட்டு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான கல்வெட்டுகளிலேயே மிகவும் பெரியது என்று அவர் குறிப்பிட்டார்.  

தமிழ்நாட்டில் கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் நிலம் தொடர்பான செய்திகளைக்கொண்ட தொன்மையான கல்வெட்டும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுதான். நிலத்தைப் பராமரிப்பது தொடர்பாகவும் அதன் உரிமை தொடர்பாகவும் இதில் பல்வேறு செய்திகள் இருக்கின்றன. இதைப்பற்றி ஆராய்ந்திருக்கும் ஆர். நாகசாமி கல்வெட்டுகளின் காலம் குறித்து குறிப்பிட்டிருக்கும் செய்தி முக்கியமானதாகும். பிற்காலக் கல்வெட்டுகளில் காணப்படுவது போல மன்னரின் ஆட்சி ஆண்டைப் பற்றிய குறிப்பு எதுவும் இதில் இல்லை. ‘‘ கோச்சேந்தங் கூற்றற்கு யாண்டு நூற்றுத் தொண்ணூற்றிரண்டு நாண் முப்பத்தாறு பக்கந் தைப்பிறை ’’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை ஆராய்ந்த ஆர். நாகசாமி இக்கல்வெட்டு சக யுகத்தைத்தான் குறிப்பிடுகிறது என்று கூறுகிறார். சக யுகம் என்பது கி.பி.78 ஆம் ஆண்டில் துவங்குகிறது. அதை வைத்துப் பார்த்தால் இக்கல்வெட்டு கி.பி.270 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும் என அவர் தெரிவிக்கிறார். ஆனால் ஒய். சுப்பராயலுவோ இக்கல்வெட்டு கி.பி. 5ஆம் நூற்றாண்டடைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று கூறியிருக்கிறார். இக்கல்வெட்டின் எழுத்தமைதி பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் காலத்தைச் சேர்ந்த நடுகல்லில் காணப்படும் எழுத்துக்கு முற்பட்டதாகத் தெரிகிறது. எனவே இந்த எழுத்து முறையைப் பார்க்கும்போது கி.பி.5 ஆம் நூற்றாண்டு என்று கொள்வதே பொருத்தமானதாக இருக்கும் என்பது சுப்பராயலுவின் கருத்து. அதாவது நாகசாமி சொல்வதற்கும் சுப்பராயலு சொல்வதற்கும் இடையில் 200 ஆண்டுகால இடைவெளி இருக்கிறது. இந்த இரண்டு கருத்துக்களுமே கூடத் தற்போது கிடைத்திருக்கும் பிற கல்வெட்டுகளை ஒப்பிட்டு செய்யப்பட்ட யூகங்களே தவிர இறுதி உண்மைகள் அல்ல.இவர்கள் சொல்வதைக் காட்டிலும் இன்னும் கூட காலத்தால் இக்கல்வெட்டு முற்பட்டதாகவும் இருக்கக்கூடும்.தமிழ் பிராமி எழுத்தின் காலம் இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் பொருந்தல் அகழ்வாய்விற்குப் பிறகு கி.மு.5 ஆம் நூற்றாண்டு என்று தெரியவந்திருப்பதைப்போல பூலாங்குறிச்சிக் கல்வெட்டின் காலமும் கூட இன்னும் தொன்மையானதாக இருக்கக்கூடும்.  

பேராசிரியர் எ.சுப்பராயலு சொல்வதையே எடுத்துக்கொண்டாலும்கூட சுமார் 16 நூற்றாண்டுகளுக்கு முற்பட்டத் தொன்மை வாய்ந்ததாக பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் விளங்குகின்றன. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் மன்னர்களின் பெயர்களான சேந்தன், கூற்றன் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் களப்பிரர் அரசர்களாக இருக்கக்கூடும் என நாகசாமியும், சுப்பராயலுவும் கருத்து தெரிவித்துள்ளனர். அவ்வாறெனில் இருண்ட காலம் எனக் குறிக்கப்படும் களப்பிரர் காலத்தைப்பற்றித் தெளிவுபடுத்தக்கூடிய மிக முக்கியமான கல்வெட்டுகளாகவும் இவை இருக்கின்றன. பௌத்த சமணத்தை ஆதரித்த களப்பிரர் மன்னர்களின் ஆட்சியில் பிராமணர்கள் அதிகாரம் அற்றவர்களாக வைக்கப்பட்டிருந்தனர் என்றுதான் வரலாற்று ஆசிரியர்கள் இதுவரை கூறிவந்தனர். இந்தக் கல்வெட்டில் ‘ கூடலூரு நாட்டுப் பிரமதாயஞ் சிற்றையூருக்குப் பிரம்மதாயக்கி ’ எனவும் ‘ பிரம்மதாயத்துட் பிரம்மதாயக் கிழவரான’ என்றும் பிரம்மதாய நிலம் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. பிரம்மதாயம் என்பது பிராமணர்களுக்கு உரிமையாக்கப்பட்ட நிலம் ஆகும். களப்பிரர் ஆட்சிக்காலத்தில் பிராமணர்கள் செல்வாக்கிழந்து இருந்திருந்தால் எவ்வாறு அவர்களுக்கு பிரம்மதாய நிலம் இருந்திருக்கும் ?  

இந்தக் கல்வெட்டில் இரண்டு தேவகுலங்கள் மற்றும் வசிதேவனார் கோட்டம் ஆகியவை குறித்த செய்திகளும் உள்ளன. தேவகுலம் என்றால் பொதுவாக இந்துக் கோயில்கள் என்றே இதுவரை வரலாற்று ஆசிரியர்கள் கூறிவந்தனர். ஆனால் அதைக் கல்வெட்டியல் அறிஞர் கோ. விஜயவேணுகோபால் இப்போது மறுத்திருக்கிறார். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவையில் உள்ள பாடல் ஒன்றை எடுத்துகாட்டித் தேவகுலம் என்பது நோன்பு நோற்று உயிர் துறந்த சமண முனிவர்களுக்காகக் கட்டப்பட்ட இடமாக இருந்திருக்கலாம் என அவர் கூறுகிறார்.ஆசாரக்கோவையின் பாடல் நோயின்றி வாழ விரும்புகிறவர்கள் தனியே போகக்கூடாத இடங்கள் என்று நான்கு இடங்களைப் பட்டியலிடுகிறது:‘‘ பாழ்மனையுந் தேவகுலனுஞ் சுடுகாடும்,ஊரில் வழியெழுந்த வொற்றை முதுமரனும்’அவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளன. தேவகுலம் என்பது கோயிலாக இருந்தால் அதை சுடுகாட்டோடு சேர்த்துப் பட்டியலிட்டிருக்கமாட்டார்கள். தேவகுலம் என்பது வடஇந்தியாவில் நீத்தோர் படிமைகளை வைத்து வணங்கும் கூடமாக இருந்தது எனவும் இந்த வழக்கம் கி.பி. முதலாம் நூற்றாண்டில் இருந்தே காணப்படுகிறது எனவும் பி.ஆர். பந்தர்கர் கூறியிருப்பதை விஜயவேணுகோபால் சுட்டிக்காட்டுகிறார். அதனடிப்படையில் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் குறிப்பிடும் ‘‘ இரு தேவகுலங்கள், வசிதேவனார் கோட்டம் ஆகிய மூன்றுமே சமண சமயஞ் சார்ந்தன எனக்கொள்வதோடு இவற்றைக் கட்டிய அதிகாரிக்கு ஆதரவளித்ததன் மூலம் அரசனும் சமண சமயஞ் சார்ந்தவன் எனக் கொள்ளலாம்’’ என்று அவர் குறிப்பிடுகிறார். முதலில் இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்ட தேவகுலம் என்ற சொல் பின்னர் கோயில்களைக் குறிப்பதாக மாறிவிட்டது என்றும் அவர் விளக்குகிறார். 

பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும்கூடத் தமிழ் ஆய்வுலகம் இன்னும் அதை ஆழமான விவாதத்திற்கு உட்படுத்தவில்லை. அதில் சொல்லப்பட்டிருக்கும் காலக் கணக்கு இன்னும் முழுமையாக விளக்கப்படவில்லை. அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எழுத்து முறை என்பது தமிழ் பிராமி எழுத்திலிருந்து வட்டெழுத்துக்கு மாறி வந்த நிலையைக் காட்டுகிறது என்று கல்வெட்டியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அத்தகைய எழுத்துமுறையைக் கொண்ட மிகப்பெரிய கல்வெட்டுகளும் இவைதான். 

களப்பிரர் காலம், தமிழகத்தில் நிலவிவந்த நில நிர்வாக அமைப்பு பற்றிய வரலாறு, தமிழ் எழுத்துமுறையின் வரலாறு எனப் பலவகையிலும் அரிய செய்திகளைக்கொண்டதாகப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் விளங்குகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் எந்தவிதப் பாதுகாப்போ பராமரிப்போ இன்றிக் கிடக்கின்றன. தமிழகத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருப்பதாகக் கூறப்பட்டாலும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளை அடையாளம்காட்டக்கூட அங்கே ஆளில்லை. அந்தக் குன்றின் கீழே விவசாயம் செய்யப்படுவதால் கொஞ்சம் பாதுகாப்பு இருக்கிறது. வெயிலில் காய்வதால் பாறையின் மேல்பகுதி உரிந்து வருகிறது. ஏற்கனவே இந்தக் கல்வெட்டுகளின் ஒரு பகுதி படிக்க முடியாத அளவுக்கு அழிந்துவிட்டது. இப்படியே கிடந்தால் இன்னும் சிலகாலத்தில் இந்தக் கல்லெழுத்துகளும் நீரெழுத்துகள் ஆகிவிடும். 

குடுமியான்மலை இசைக் கல்வெட்டுகளைப் பாதுகாக்க இந்தியத் தொல்லியல் துறை அங்கே மண்டபம் போன்ற அமைப்பைக் கட்டியிருக்கிறது. அதுபோலப் பூலாங்குறிச்சியிலும் செய்யவேண்டும்.அங்கே ஒரு பாதுகாவலரையும் வழிகாட்டியையும் நியமிக்கவேண்டும். இல்லாவிட்டால் ஏற்கனவே இயற்கையின் தாக்கத்தால் அழிந்துகொண்டிருக்கும் அந்தக் கல்வெட்டுகள் இன்னும் சில ஆண்டுகளில் முழுமையாக அழிந்துபோய்விடும். இதை மத்திய மாநில அரசுகள்தான் செய்யவேண்டும் என்பதில்லை. செம்மொழி நிறுவனமேகூட செய்யலாம். மத்திய அரசு ஒதுக்கும் நிதியை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு இதைச் செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல.

 

(நன்றி : தீராநதி , மே 2012)



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

 

பூலாங்குறிச்சி கல்வெட்டு விளக்கம்

சேசாத்திரி ஸ்ரீதரன்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் இருப்பது தான் பூலாங்குறிச்சி மலை. இம்மலையில் மூன்று கல்வெட்டுகள் முதன்முதலாக 1979 இல் அறியப்பட்டன. அவற்றில் வலப்புற கல்வெட்டு பெரும்பாலும் சிதையாமல் முழுமையான செய்திகளை அறியும்படி 13 வரி கொண்டதாக உள்ளது. 22 வரி உள்ள இடப்புற கல்வெட்டு தொடக்கத்திலும் இறுதியிலும் சிதைந்துள்ளதால் அதன் செய்தியை தெளிவாக முழுமையாக அறியமுடிவில்லை. இதன் நடுப் பகுதியில் மட்டும் சில செய்தி சிதையாமல் உள்ளன. நடுவில் உள்ள இன்னொரு கல்வெட்டு முழுவதும் தேய்ந்துவிட்டபடியால் அதன் செய்தியை அறிய முடியவில்லை. வலப்புறக் கல்வெட்டில் குறிக்கப்படும் பச்செறிச்சில் மலை தான் இன்று பூலாங்குறிச்சி எனப்படுகின்றது. இக்கல்வெட்டுகள் தமிழியில் இருந்து வட்டெழுத்து தோன்றுகிற தொடக்க நிலை எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. மெய்யெழுத்திற்கும், எ, ஒ என்னும் உயிரெழுத்திற்கும் புள்ளி வைக்கப்பட்டுள்ளன. மிகப் பழங்காலக் தமிழ்க் கல்வெட்டில் இவையே நெடியதென அறியப்படுகின்றன. எழுத்தமைதியை கொண்டு இவற்றின் காலம் தொல்லியல் அறிஞரால் கி.பி. 5-ம் நூற்றாண்டு என முடிவு கொள்ளப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் அக்கால சமய, சமூக, அரசியல் நிலையை ஓரளவு அறிந்து கொள்ள முடிகின்றது. இனி கல்வெட்டு விளக்கம் கீழே.

வலப்புற கல்வெட்டு:

  1. கோச் சேந்தன் கூற்றற்கு யாண்டு நூற்றுத்தொண்ணூற்றி
  2. ரண்டு நாண் முப்பத்தாறு பக்கந் தைப்பிறை நாள் ப(ன்னிரண்டு) வேள் மருகண் மகன் கடலகப் பெரும்படைத்
  3. தலைவன் எங்குமான் னொல்லையூருக் கூற்றத்து வேள்கூருப் பச்செறிச்சின் மலை மேற் செஇவித்த தேவகுலமும்
  4. முத்தூற்றுக் கூற்றத்து விளமரு(ச்) செஇவித்த தேவகுலமும் மதிரை உலவியத்தான் குளத்தின் வடபக்கத்துச் செஇவி
  5. த்த தாபதப்பள்ளியுள் (வா)சி தேவனாரு கோட்டமும் மவை அத்திக்கோயத்தாரு முள்மனையாருந் நாற்பாற்றிணைகளுந் தமக்கு காவலாக
  6. அவற்றுக்குற்றது செ(யக்) கொண்டமையால் லவற்றை வ(ழிபடுவது)ம் மவற்றுக்குப் பெயப்பட்ட அறப்புறந் நடையாட்டுவதூஞ் செயும்
  7. பாண்டங்கருஞ் சேவுக்கரும் (வி)ரும்மாச்சாரிகள்ளுந் தருமிகளுமூ(ர்) காவல் கொண்டா(ரு ஆ) ராஇந்து வைஇக்கப்பட்டாரு அல்லது வழிபடப்
  8. பெறாமையும் மவற்றுட் பச்செறிச்சி(ல்) மலைமேற் செஇவி(த்த தேவகு)லத்துக்குக் குடும்பியராவாரு குழ
  9. (லூ)ருத் துஞ்சிய உடையாரால் வேள்கூருப் பெயப்பட்ட குடும்பி(யர் வழியல்லது வேறொரு) குடும்பாடப் பெறாமையும்
  10. மத் தேவகுலத்துக் குற்றது செய்து வல்லக்குற்றந் தொழில் செய_ _க(ளு)_ _(டஞ்) செயவும் மெழுதி வைக்கென் றருள்ளித்தாரு
  11. கேட்டாருலவியப் பெருந்திணை நல்லங்கிழானெ இனங்குமானும் முலவியப் பெருந்திணை ப_ _ஆறு கிழான் கீரங்காரி
  12. யு முலவியப் பெருந்திணை அம்பருகிழான் குமாரம் போந்தையுங் கேட்டு வந்து கூறின (னோ)லை எழுதுவான் (றம)ன் காரி
  13. கண்ணன். இது கடைப்(பி) ஓலை காற் கண்டெழுதிக் கொடுத்தேன் (வே)ண்ணாட்டான் (ந_ _ரி) நாரியங்காரி

பக்கம் – (சுக்ல, கிருஷ்ண) பக்ஷம் எனும் நிலவின் பிரிவு; மகன் – நேரடியாக கீழ்பணிந்த வீரன், low rank subordinate warrior, சேவகன் என்பது வேந்தன் அல்லது மன்னனின் மேலாண்மையை ஏற்ற இன்னொரு ஆட்சியாளனை மட்டும் குறிக்கும்; கடலகம் – கடற்புறம்; தேவகுலம் – தேவன் இருப்பிடம், குருகுலம் குருவின் இருப்பிடத்தை குறிப்பது போல; கோட்டம் – சன்னதி, shrine; அத்திக்கோயத்தார் – காவல் புரியும் யானை அல்லது குதிரைப்படை வீரர் குழு; உள்மனையார் – ஊருள் வீடுடையோர். புறமனை என்றால் ஊருக்கு வெளியே வீடு; நாற்பாற்றிணை – நால்வகைக் குலம்; பெயப்பட்ட – வேறு இடத்தின்று அமர்த்திய; அறப்புற – நியதிப்படி, as per procedure;  நடையாட்டு – வழக்கில் பயிலுதல், usage; பாண்டங்கர் – பண்டாரக் காப்பாளர்; சேவுகர் – பிற்கால தேவரடியாரை ஒத்த அர்ப்பணிப்பு பணியாளர், dedicated worker; விரும்மாச்சாரி – ஒரு வகை கோவில் ஊழியர்; தருமி – துறவி, அறவோர்; ஆராய்ந்து – தகுதியை ஆய்ந்து; குடும்பி – பூசகர், சிலம்பில் சேடகுடும்பி என்ற சொல் பூசகரைக் குறிக்கின்றது; அருளி – ஆணையிட்டு; உலவியப் பெருந்திணை – ஆவணப்படியே செயலாக ஒப்பி ஆணைப்படுத்தும் அதிகாரி; கிழான் – வேந்தன் கீழ் மன்னன் அவன் கீழ் அரையன் அரையன் கீழ் கிழான் என்ற நாலாம் நிலை அதிகாரப் பொறுப்பு ஆட்சியாளன். ஒரு ஆவணத்தை ஆணைப்படுத்தும் அதிகாரியாக பெரும்பாலும் கிழார்களே செயல்பட்டனர்; கடைப்பி – பிடிபாடு, வழிகாட்டு நெறி, guidelines; ஓலைக்கால் – ஓலைச்சுவடி.

விளக்கம்:  வேந்தன் சேந்தன் கூற்றனுக்கு மகுடம் ஏறிய பின் 192 ம் ஆண்டு, நாள் 36, பக்கம் தேற்பிறை 12 நாளிலில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது. சேந்தன் கூற்றனுக்கு அடங்கிய வேள்ஆன மருகண் என்பானுக்கு கீழ்படிந்த போர்வீரனான கடல்புறத்து மீனவப் பெரும் படைக்குத் தலைவனாகிய எங்குமான் என்பவன் ஒல்லையூர்க் கூற்றத்தில் வேள்கூரின் பச்செறிச்சின் மலை மேல் எடுப்பித்த தேவகுலமான கோவிலும் முத்தூற்றுக் கூற்றத்தின் விளமரில் செய்வித்த கோவிலும் மதிரையில் உலவியத்தான் குளத்தின் வடபக்கத்தில் உள்ள தாபதப்பள்ளியில் எடுப்பித்த வாசி தேவனார் கோட்டமும் ஆகிய இம்மூன்றுக்கும் அத்திகோயத்தார், ஊருள் வாழ்வோர், நாற்பிரிவு குலம் ஆகியோரை தமக்கு காவலாக, துணையாகக் கொண்டு அவற்றுக்கு தேவையானவற்றை செய்தமையால் அவற்றில் வழிபடவும் அவற்றுக்குப் ஏற்படுத்தப்பட்ட நியதிப்படியான பூசனையை வழக்கமாக செய்யும் பண்டாரம் காப்பாளரும், அர்ப்பணிப்பு பணியாளரும், விரும்மாச்சாரிகளும், துறவியரும், ஊர் காவல் கொண்டாரும் தகுதி ஆராய்ந்து வைக்கப்பட்டவரை தவிர பிறர் வழிபாடு ஆற்றாதவாறு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக பச்செறிச்சில் மலைமேல் எடுப்பித்த கோவிலுக்கு பூசகராகின்றவர் குழலூரில் இறந்த வேந்தரால் வேள்கூருக்கு அழைத்து வந்து அமர்த்தப்பட்ட பூசகர் குடும்ப வழியினரைச் சாராத வேறொரு குடும்பத்து பூசகர் பூசனை ஆற்றக்கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அக்கோவிலுக்கு தேவையானதை செய்தும் தீங்கான செயல்களுக்கு தண்டம் விதித்தும் செயற்பட வேண்டும் என்று எழுதிவைக்கச் சொல்லி ஆணையிட்டார். இதை படைத் தலைவன் எங்குமான் சொல்லிடக் கேட்டவரான உலவியப் பெருந்திணை நல்லன்கிழான் எயினங்குமான், உலவியப் பெருந்திணை ப_ _ஆறு கிழான் கீரங்காரி, உலவியப் பெருந்திணை அம்பருகிழான் குமாரம் போந்தை ஆகிய மூவரும் இதற்கு ஒப்பி  கையெழுதிட்டு ஆணைப்படுத்தினர். இதை கேட்டு வந்து கேட்டபடி கூறினவன் ஓலை எழுதுவான் தமன் காரி கண்ணன் ஆவான். இதையே வழிகாட்டு நெறியாக ஓலைச்சுவடி கண்டு (கல்லில்) எழுதிக் கொடுத்தேன் வேண்ணாட்டான் ந_ _ரி நாரியங்காரி.

192–ம் ஆண்டு எந்த தொடக்க ஆண்டை குறிக்கின்றது என்று தெரியவில்லை. நாற்பாற்றிணை என்பது அந்தணர், அரசர், வணிகர், உழவர் என்ற நால்வருண முறை ஆகும். நால் வருண முறையை குறிக்கும் மிகப் பழைய தமிழ்க் கல்வெட்டு இதுவே எனலாம். தாபதப்பள்ளி என்பது சமண பள்ளி ஆகும். தேவகுலம் என்பது சமணம் சாராத கோவில் ஆகும்.

இடப்புற கல்வெட்டு:

  1. _ _ _ ந்தற்கு யாண்டு நூற்றுத் _ _ _ _ _
  2. நா(ற்) _ _ _ ர.ப_ ] _ _
  3. (னு)_ _ _ ளள் (ளை) _ _ _ _
  4. _ _ _ _ (ள்) மருகண் மகன் (க)டலகப் பெ
  5. _ _ _ _ ன் ஒல்லையூருக்கூற்(ற)
  6. _ _ _ _ _ _ _ _
  7. _ _ செ _ _ _ வகள _ _ வய _ _ _ _
  8. _ _ _ _ _ _ _ _ _
  9. (பெ)_ _ரு நிலனும் புன்செ வெள்ளேற்றான் மங்கலமென்
  10. ._ _ (ழவரும்)_ ரு…ங் கூடலூரு நாட்டுப் பிரம்மதாயஞ் சிற்றையூருப் பிரம்மதாயங்கி
  11. _ _ _ ழமையும் (மீயா)ட்சியுங் கொண்டாளும் மவூருப்படுங்கடைய வயலென்னும்
  12. _ _ _ புலத்தவன் விற்றுக்கொண்டு கொடுத்த புன்செ நிலனு
  13. _ _ _ துப் பிரம்மதாயத்துட் பிரம்மதாயக் கிழவரா(ன)
  14. _ _ _ றாராலும் பிரம்_ _யுங் காரண்மையுமாகக் கொண்டாளுந் நீர் நிலனும் புன்
  15. _ _ லனும் பிறவுஞ்_ _ _ பாண்டி நாட்டுங் கொங்கு நாட்டும் மவரு காராண்கிழமையுங் கல
  16. க் கிழமையும் மேல்(லாண்மை) கொண்ட(ன)வும் மவருடைய காலாசமுந் தோட்டங்களும் மவரு தமரையும் ம
  17. வரு குடிகளையும் _ _ _ டையாரும் பிரம்ம தாயமுடையாருந் நாடுகாப்பாரும் புறங்காப்
  18. பாரும் முப்பு (ரு காப்பாரு) _ _ _ தாயந் நெறி அ_ _ செஇதாரு தத்தமானும் வேறு வேறு ஆஇரத்தாறுநூ
  19. று காணந் _ _ று __ டு வே_ _ ன்ற_ _ ரு கேட்டாருல வியப் பெருந்திணை நல்லகிழா னெ இனங்கு
  20. மானும் முலவி _ _ _ ம _ _ _  ங்கிழான் ளங் கூற்றனும் முலவியப் பெருந்திணை ஆலத்தூர் கி
  21. _ _ _ _ லை _ _ துவான் (றமன்வ)டுகங் குமான்_ _டைப்பி (ஒ)
  22. _ _ _(தளருக்கு)_ _ _

விளக்கம்:   வேள்ஆன மருகண் என்பானுக்கு கீழ்படிந்த போர்வீரனான கடல்புறத்து மீனவப் பெரும் படைக்குத் தலைவனாகிய எங்குமான் ஒல்லையூர் கூற்றத்தில் செய்த செயலைக் குறிக்கின்றது. 12-ம் வரி வயலுக்கு உரிமையாளன் விற்றுக்கொடுத்த புன்செய் நிலம் பிரம்மதாயமாக ஆக்கப்பட்டதை தெரிவிக்கின்றது. அந்த பிரம்மதாயத்துள் ஒரு உரிமையாளரின் பயிர் செய்யும் உரிமை நீர், நிலம் என்பது பற்றியும் பாண்டி நாட்டிலும் கொங்கு நாட்டிலும் அவருக்கு உள்ள பயிர் செய்யும் உரிமை பற்றியும், அவருடைய கால்நடை, தோட்டம், குடிகள் பற்றியும் சொல்கின்றது.

பிரம்ம தாயமுடையவரும், நாடுகாப்பாரும், புறங்காப்பாரும் முப்புரு காப்பாரும் தாயநெறியை காக்க வேண்டும் என்றும் இதற்கு அல்லவை செய்தாரிடம் ஆயிரத்தறுநூறு காணம் தண்டம் திரட்டவேண்டும் என்கின்றது. இதை ஆணைப்படுத்திய கிழார்கள் பெயரை குறிப்பதோடு கல்வெட்டு சிதைந்துள்ளது.

இதன் மூலம் அக்காலத்தே பிராமணர் தமிழகத்தில் வாழ்ந்தது உறுதி செய்யப்படுவதோடு அவர் பெற்ற நிலக்கொடை அதன் பயிர் செய்யும் உரிமை பற்றி அறிய முடிகின்றது.

பார்வை நூல்: ஆவணம் இதழ்1991 , பக். 67- 69.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard