கிறிஸ்துவ ஆங்கிலேயர் “எலிஹூ யேல்” சென்னையின் இரண்டாவது ஆளுநராக (ப்ரெஸிடெண்ட்) 1687 முதல் 1692 இருந்த போது லஞ்சம் - ஊழல் மற்றும் கலை(கோவில் சொத்து) பொருள் கொள்ளைகளை செய்தவர். சென்னை கலைப் பொருட்களில் ஒன்றை அமெரிக்காவின் பைபிள் கல்லூரி ஒன்றிற்கு தானமாய் தர அதைவிற்ற பணத்தில் எழும்பியதே ஏல் பல்கலைக் கழகம்
கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் (East India Company) கட்டுப்பாட்டில் இருந்த சென்னையின் இரண்டாவது ஆளுநராக (ப்ரெஸிடெண்ட்) 1687 முதல் 1692 வரை இருந்த “எலிஹூ யேல்” என்ற வெள்ளைக்காரர் தான் பதவியை துஷ்ப்ரயோகம் செய்ததாக முதன்முதலில் குற்றஞ்சாட்டப்பட்டவர். ஜார்ஜ் கோட்டையில் அமர்ந்து ஆட்சி செய்த பொழுது கடலூர் அருகே உள்ள தேவப்பட்டினக் கோட்டையைத் தனது சொந்த உபயோகத்திற்காக விலை கொடுத்து வாங்கினார். இதனால் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த காரணத்தை முன்னிட்டு யேல் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பதவி பறிபோன பின்னர் அமெரிக்கா தப்பிச் செல்லும் நேரத்தில் யேல் தனது சுயக் குறிப்பேட்டை (Diary) சென்னை ஜார்ஜ் கோட்டையிலேயே விட்டுவிட்டுச் சென்று விட்டார். சம்பாதித்த பணத்தைக் கொண்டு நலிவடைந்த ஒரு கல்லூரிக்கு உதவினார். அது பின்னாளில் யேல் பல்கலைக்கழகமாகவும் மாற்றம் பெற்றது.
யேல் நிர்வாகம் எத்தனையோ முறைக் கேட்ட பிறகும் ஆங்கில அரசோ, காங்கிரஸ் அரசோ அந்தக் கையேட்டினைத் திருப்பித் தரவே இல்லை. மேற்படிப்பு மாணவர்களின் பயனுக்காக யேல் பல்கலைக்கழகம் கல்வி உதவித்தொகை (Fellowship) வழங்கி வந்தது. 1967-இல் தமிழகத்தில் ஆட்சி மாறி அண்ணாதுரை முதல்வராகினார். மாற்றத்திற்கு வித்திட்டதாகச் சொல்லி அண்ணாதுரைக்கும் கல்வி மாணியம் தர யேல் பல்கலைக்கழகம் முன்வந்தது. அவர்கள் கேட்ட யேல் கையேட்டைத் தருவதாக அண்ணா ஒப்புக் கொண்டார். இவ்வாறாக எலிஹூ யேல்-இன் ஊழலுக்கு ஒரே ஆதாரமாக விளங்கக் கூடிய யேல் கையேடு அண்ணாதுரை தயவால் அமெரிக்கா பயணித்தது.
கிறிஸ்துவ ஆங்கிலேய கவர்னர் “எலிஹூ யேல்” அடிமை வியாபராம் கொடுங்கோலனாய் இருந்தான் என பெயர் மாற்ற வேண்டும் எனவேறு அங்கு போராட்டங்கள்.
சப் பெல்லோஷிப் (Chub Fellowship) என்ற அந்தப் பட்டம் “டாக்டர்” (முனைவர்) பட்டம் கிடையாது. இன்றைய “தங்கத் தாரகை” அல்லது “கெண்ட்டக்கி கர்னல்” போன்றதொரு அலங்காரமே ஆகும்.
மாற்றத்திற்கு வித்திட்ட அதே அண்ணாதுரை தான் ஊழலுக்கு சாட்சியாக இருந்த ஆவணத்தையும் வித்துவிட்டார். அதன் மிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் அண்ணாதுரையின் வழிப்படியே ஊழலுக்குத் துணைபோவதும், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பதில் முனைப்பும் காட்டுவதில் வியப்பில்லை. நம் நாட்டின் சரித்திரக் குறிப்பேட்டை ஈடு கொடுத்து சன்மானம் பெற்ற முதல் அறிஞர் அண்ணாதுரையின் பிறந்த நாள் இன்று. அது அரசு விழாவாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.