சினிமா இயக்குனர் ப.ரஞ்சித் மாமன்னர் ராஜராஜ சோழன் பற்றி இழிவாக பேசியது ஒரு திட்டமிட்ட நீண்டகால சதியின் வெளிப்பாடே. இதன் துவக்கம் 1838 ல் கால்டுவெல் என்கிற அன்னிய கிறித்தவ பிஷப் மதமாற்றம் செய்யும் நோக்குடன் திருநெல்வேலியில் 1840ல் ஜி.யு. போப் என்கிற அன்னிய பாதிரியார் மயிலாப்பூரில் வந்திறங்கிய காலம் தொட்டு துவங்கியது.
ஒரு சமுதாயத்தை மதமாற்றம் செய்ய வேண்டுமானால் அச்சமுதாய மக்களிடம் அவர்களின் முன்னோர்கள் பற்றிய தவறான கருத்துக்களை பரப்ப வேண்டும். அச்சமுதாய அடையாளங்களை அழிக்க வேண்டும்.
அந்த நோக்குடன்தான் கால்டுவெல் முதலில் நாடார் சமுதாய மக்கள் இந்தியர்கள் அல்ல இவர்கள் இலங்கையிலிருந்து வந்த வந்தேறிகள் என்று தனது Sanas of Tinnaveli என்கிற புத்தகத்தின் மூலம் ஒர் தவறான கட்டுக்கைதயை அவிழ்த்து விட்டார். தேசபக்தி மிக்க நாடார் சமுதாய மக்கள் கிளர்ந்தெழுந்தனர். பின் அந்த புத்தகத்தை வாபஸ் பெற்றார். அதன்பின் ஆரியப் படையெடுப்பு பற்றிய புளுகு முட்டையை அவிழ்த்து விட்டார். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஆதாரமற்ற ஆரியப் படையெடுப்பு பொய்யுரைக்கு சரியான இடம் குப்பை தொட்டிதான் என தெளிவாக கூறியுள்ளார்.
அதேபோல் ஜி.யு.போப்பும் திருவள்ளுவர் கிறித்தவர் என்றும். திருக்குறள் கிறித்தவ நூல் என்றும் பொய்பரப்பினார். ஆங்கிலேய கிறித்தவ ஏகாதிபத்தியம் இவர்களது பணியினைத் தொடர சரியான உள்ளூர் ஏஜெண்ட் களை தேடிய போது அவர்களுக்கு கிடைத்த சரியான அமைப்புகள்தான் நீதிகட்சி மற்றும் திக ஆகும். இவர்கள் மூலம் ஆங்கிலேய கிறித்தவ ஏகாதிபத்தியம் தங்கள் ஆட்சி மற்றும் மதமாற்றம் ஆகிய இரண்டு குறிக்கோள்களையும் நிறைவேற்றி வந்தனர்.
ஈ.வெ.ரா அவர்களும் அவரைத் தொடர்ந்து வீரமணி உள்ளிட்டோரும் மதமாற்றும் சக்திகளுக்கு தளம் அமைத்துக் கொடுக்கும் பணியை இன்றளவும் தொடர்ந்து வருகின்றனர். ஈ.வெ.ரா தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார். சனியன் தமிழை படிக்காதே பொண்டாட்டியோடு ஆங்கிலத்தில் பேசு வேலைக் காரியோடு ஆங்கிலத்தில் பேசு என்றார். சிலப்பதிகாரம் விபச்சாரியின் கதை என்றார். தமிழ் மக்கள் கற்புக்கரசியாகப் போற்றும் கண்ணகியை கொச்சை வார்த்தைகளால் அர்ச்சித்தார். அக்காலகட்டத்தில் ஈ.வெ.ரா வின் இச்செயலை சிலம்புச் செல்வர் மா.பொ.சி அவர்கள் கடுமையாக கண்டித்தார். திருக்குறளை தங்கத் தட்டில் உள்ள மலம் என்றார். மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்கள் தஞ்சை பெரிய கோவிலை கட்டி நம் முன்னோர்களின் பொறியியல் மற்றும் கட்டிடக் கலையின் பெருமையை உலகறியச் செய்தவர். நிலம் மற்றும் நீர் மேலாண்மை மூலம் தன் நாட்டை வளம் கொழிக்கச் செய்தார். அவரும் அவருக்குப்பின் ராஜேந்திர சோழன் அவர்களும் தெற்காசிய நாடுகள் முழுவதும் தங்கள் ஆளுமையின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் ஈ.வெ.ரா மாமன்னர் ராஜராஜ சோழனை மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சித்தார். சமீபத்தில் கி.வீரமணி அவர்கள் மாமன்னர் முட்டாள் ராஜா என்றும் வெங்காயமென்றும் வசைபாடினார். அன்று வீரமணியை நான் மட்டுமே கண்டித்தேன். அன்றே இன்று ப.ரஞ்சித்தின் பேச்சுக்கு ஏற்பட்டுள்ள ஏதிர்ப்பு ஏற்பட்டிருந்தால் இன்று ரஞ்சித்திற்கு இந்த துணிவு . வந்திருக்காது. சமீப காலமாக இந்துக்களின் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் எல்லை மீறி சென்று கொண்டுள்ளன. ப. ரஞ்சித்தின் இந்த செயலை தனி சம்பவமாக பார்க்கக்கூடாது. கவிஞர் வைரமுத்து நம் ஆண்டாள் நாச்சியார் பற்றி கூறிய இழி சொற்கள். திக வினரின் இந்து விரோத செயல்கள். திருமாவளவன் அவர்கள் திருச்சியில் நடத்திய இந்து சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்ற மாநாடு. அதில் வைகோ ஸ்டாலின் மற்றும் முஸ்லிம் அடிப்படை வாதிகள் போன்றவர்கள் கலந்து கொண்டது. மோகன் சி லாசரஸ் என்கிற கிறித்தவ மதமாற்றும் ஏஜெண்ட் இந்துகோவில்கள் சாத்தான்கள் இருக்கும் இடம் என்று பேசியது. தற்போது எஸ்.ரா. சற்குணம் என்கிற பாதிரியார் இந்துக்கள் முகத்தில் இரண்டு குத்து குத்துங்கள் ரத்தம் வரட்டும். அவன் இந்து இல்லை என்று சொல்லி விடுவான் என்று பேசியுள்ள வன்முறை பேச்சு. இவை அனைத்தும் இந்து மதத்தை அழிக்கக் கிளம்பியுள்ள ஆக்டோபஸின் ஒவ்வொரு அங்கங்களாகும். இவர்கள் அனைவருக்கும் பின்னால் மதமாற்றம் சக்திகளும் நாட்டை துண்டாடத் துடிக்கும் பிரிவினை சக்திகளும் உள்ளன. எச்சரிக்கையாக இருப்பதோடு எதிர்வினையாற்றவும் தயாராவோம்.
நீ சொல்வது தவறு அன்று தொழிலதிபர்களையும், நிலச்சுவாந்தாரையும் பிராமணன் ஆட்டிவைத்தான் பெரியார் அதை உடைக்கத்தான் பிராமணனை விரட்டினார் உனக்கு புரியாது
அடேய் அன்றே வெள்ளையன் ஆட்சிதானே, வெள்ளையனிடம் பிராமணணை விரட்ட சொல்லி அவர் கேட்க வேண்டியதுதானே ஏன் அவன் அவனிடம் சொல்லவில்லை
அது..ம்ம்.. ஆங் பிராமணனை பகைத்தால் வெள்ளையனால் ஆள முடியாது
ஏண்டா இது ஓவராக இல்லை? பிராமணனா நாட்டை வாள்முனையில் வெள்ளையனுக்கு கொடுத்தான், நாட்டை ஆளத்தான் பிராமணணை வெள்ளையன் வேலைக்கு வைத்திருந்தான், அவனுக்கு ஏதடா அதிகாரம்?
இல்லை இல்லை, பிராமணரே நாட்டை ஆண்டனர்
ஏது இங்கிலாந்து மகாராணியும், சர்ச்சிலும் பிராமணரா?
உமக்கு ஒண்ணுமே தெரியவில்லை
பின் ஏன் வெள்ளையனிடம் விடுதலை கேட்டார்கள்?
அதெல்லாம் பார்மாலிட்டி
சரி சுதந்திரத்திற்கு பின் என்ன இருந்தது?
மக்களாட்சி
மக்களாட்சியில் பெரியார் தொழிலாளருக்கு எத்தனை போராட்டம் நடத்தினார்? தின கூலிகளுக்கு என்ன வாங்கி கொடுத்தார்?
ம்ம் அவர் சமூக போராளி
கிழிச்ச போராளி போடா, அதிகாரம் யாரிடம் இருந்ததோ அவரை பெரியார் பகைத்ததே இல்லை, அது வெள்ளையன்,காமராஜர், அண்ணா, கலைஞர் ஆடை என தொடர்ந்தது அப்படியே பணக்காரனையும் பண்ணையாரையும் பெரியார் எதிர்த்ததாக சரித்திரமே இல்லை
இது என்ன புதுசா இருக்கு?
இதுதாண்டா உண்மை, ஊரில் இருக்கும் பணக்க்காரன் தொழிலதிபர் ஆட்சியாளன் என யாரையும் பெரியார் பகைத்ததில்லை, கோவிலில் மணியடித்த அல்லது அரசாங்க கூலியாக இருந்த அப்பாவி பிராமணனே அவர் எதிரி
ஏண்ணே அப்படி?
அந்த பிராமணன் திருப்பி அடிக்கமாட்டான், வேறு யாரிடமாவது வம்பிழுத்தால் அவன் நொறுக்கிவிடுவான் அல்லவா?
தெரியும், எவனிடம் தொழிற்சாலையும் பெரு நிலமும் பெரும் பணமும் இருந்ததோ அவனை கொஞ்சமும் எதிர்க்காமல், எவனிடம் ஒன்றுமே இல்லையோ அந்த பிராமணணை இழுத்து வைத்து அரசியல் பேசியது பெரியாரின் சமூக நீதி எனப்படும்
கடைசி வரை நிலசுவாந்தார்கள் கூலி தொழிலாளிகளுக்கு 4 படி நெல்லை கூட்டிகொடுக்க வேண்டும் என சொல்ல பெரியாருக்கு மனம் வரவில்லை
நாயுடு , செட்டியின் தொழிற்சாலை கூலிகளுக்கு அரையணா சம்பளத்தை உயர்த்து என அவர் வாய் திறக்கவில்லை
மாறாக சும்மா கோவிலில் மணியடித்து தட்டில் விழுவதை பார்த்து கொண்டிருந்த பிராமணர்களை இழுத்து வைத்து வம்பிழுப்பது, அதன் பெயர் திராவிடம் கண்ட சமூக நீதி
அம்பேத்கர் காத்த சமூக நீதி தெரியுமா?
வெள்ளையன் இருந்தவரை அவனிடம் கம்மென்று இருந்துவிட்டு, அவன் சொன்ன உப்புமா ஒப்பந்தங்களுக்கு எல்லாம் தலையாட்டிவிட்டு சுதந்திர இந்தியாவில் அய்யகோ நான் புத்தமதத்துக்கு மாறுகின்றேன் அது இது என என்னவெல்லாமோ சொன்னது அவரின் சமூக நீதி.
குறைந்தபட்சம் ஜமீன் ஒழிப்புக்கு கூட வாய்திறக்காமல் வெள்ளையன் முன்னால் நின்றவர்தான் அம்பேத்கர்
ஜமீன்களையும் சமஸ்தானங்களையும் ஒழிக்காமல் என்ன சமத்துவம் வரும்? ஆனால் அவர் அதை எல்லாம் பேசவே இல்லை.
பிராமணன் மற்ற சாதிக்கு கல்வி கொடுக்கமாட்டான், நாமெல்லாம் படித்தது இந்த வெறும் 80 ஆண்டுகளுக்குள்ளேதான், அதனால் இதுதான் புரட்சிகாலம் புண்ணாக்கு காலம் , எல்லாம் திராவிட சாதனை என ஏக குரல்கள்
100 வருடத்துக்கு முன் என்ன விஞ்ஞான கல்வி இருந்தது என்பதுதான் தெரியவில்லை
ராக்கெட் சயின்ஸ் இருந்ததா? இல்லை கம்பியூட்டர் சயின்ஸ் இருந்ததா? இல்லை மருத்துவமோ இதர துறையோ இந்த அளவு இருந்ததா?
உலகில் கல்வி என அன்று எதுவுமில்லை
அன்றிருந்த கல்வியில் இருவகை இருந்தது, பொதுமுறை இருந்தது
இருவகையில் அரசனுக்கான கல்வி வேறு, அது ஆட்சி, போர் முறை, ராஜநீதி என அவனுக்கு போதிக்கபட்டது. கற்ற அரசன் எவனும் பிராமணன் அல்ல
சாதாரண மனிதனுக்கு ஓலை சுவடி எழுத்தும் கூட்டல் கழித்தல் போன்ற சாதாரண கணக்குகள் இருந்தன
செட்டி இனம் இதில் வட்டியினை கணக்கிட கற்றது
ஆக அரசனுக்கொரு கல்வி, பாமர மக்களுக்கு தனி கல்வி என நிலமை இருந்தது
இது போக தொழில் எனப்படும் வாழ்க்கைகான கல்வி தகப்பனிடம் இருந்து மகனுக்கு சொல்லிதரபட்டது
அது கொல்ல பட்டறை, விவசாயம், தச்சு வேலை, படகு செய்தல், சமையல், இரும்பு வேலை, சிற்பம் என குலதொழிலாக இருந்தது
பிராமண இனம் அதை வானசாஸ்திரம் ஜோதிடம் என தன் குலத்துக்கு கற்று தந்தது
அவனவன் தொழிலில் அவனவன் தேறினான், ஒவ்வொரு தந்தையும் தன் வித்தையினை அப்படியே மகனிடம் இறக்கிவைத்தான்
வைத்தியமும் குலம் குலமாக வந்தது , சலவை தொழில் உட்பட எல்லாமும் அப்படியே தொடர்ந்து வந்தது
அன்றொரு கொடுமை இருந்திருக்கின்றது, ஒருவன் தன் தொழிலை தன் குடும்பத்தாரை தவிர இன்னொருவனுக்கு கற்றுதர தயாராக இல்லை
அது சிற்ப தொழில் முதல் போர்கலை வரை இருந்திருக்கின்றது, துரோணர் சம்பவங்களில் இதை காணலாம்
ஒவ்வொருவனும் தன் வித்தை தன் குலம் ஒன்றுக்கே என உறுதியாய் இருந்திருக்கின்றான்
இந்த தொழிலாளர்கள் எல்லாம் ஒன்றாக கூடித்தான் அச்சமூகம் வளமாக வாழ்ந்தது
கொல்லனும் தச்சனும் ஒன்று கூடி மாட்டுவண்டி செய்தனர், கொல்லனும் கல் தச்சனும், தச்சனும் சேர்ந்து அழகிய ஆலயங்களை உருவாக்கினர்
சமூகம் கலைகளிலும் அறிவிலும் வளர தொடங்கியது, ஒரு குலம் இன்னொரு குலத்திற்கு உதவியாக சமூக வாழ்வில் இருந்தது
பிராமண இனம் ஆலயங்களிலும் அரசனிடமும் குனிந்தே நின்றது, என்னதான் அறிவான இனம் என்றாலும் அது அரசனுக்கு அடங்கி கிடந்தது
அரசனே தெய்வம்
அன்று இவ்வளவுதான் கல்வி அதாவது தமிழ் படிப்பது கொஞ்சம் கூட்டல் கழித்தல் , குலதொழில் கல்வி
வெள்ளையன் வந்தே இங்கு நிலமையினை மாற்றினான்
தன் அதிகாரத்தை நிறுத்த அவனுக்கு ஆங்கிலம் அதிகம் தெரிந்தோர் தேவைபட்டனர், பிராமண சமூகம் அதை பயன்படுத்தி ஆங்கிலம் கற்றது
அரசன் முன் குனிந்து அவனுக்காக பலமொழி கற்ற அச்சமூகத்திற்கு ஆங்கிலம் கற்பதும் எளிதாக வந்தது
இதெல்லாம் 1800களின் காலங்கள்
அதன் பின் வெள்ளையன் நவீன கல்வியினை திறந்தான், அதில் பிராமணர் ஆசிரியராயினர்
அவர்கள் கூலிக்கே பணியாற்றினர், எந்த சாதி படித்தாலும் அவர்கள் கற்பித்தனர்
அதில் எல்லா சாதியும் படித்தது, எல்லோருக்கும் பிராமணர் கற்பித்தனர்
வெள்ளையன் கல்வி கூடங்களில் கிறிஸ்தவ சாயல் தெரிய இந்துக்களின் கல்வி கூடங்கள் பெருகின, பச்சையப்ப வள்ளல், செட்டிகள், ஆதீனங்கள் கல்வி கூடங்களை திறந்தனர்
அதிலும் பிராமண இனம் கூலிக்கு பணியாயிற்று
பிராமணன் தனி கல்வி கூடங்களை நடத்தியதாகவும் அங்கு மற்ற சாதிக்கு கல்வி மறுக்கபட்டதாகவும் எங்காவது கேட்டிருக்க முடியுமா? காட்சிகள்தான் உண்டா?
முதல் இரு உலக போர்கள் உலகை மாற்றிபோட விஞ்ஞானம் வேகமாக வளர்ந்தது, அது சுதந்திர இந்தியாவில் நவீன கல்வியினை கொடுத்தது
இந்திய அரசும் சட்டம், மருத்துவம், விஞ்ஞானம் உட்பட ஏகபட்ட கல்விகளை உருவாக்கி தன் மக்களை படிக்க வைக்க தொடங்கியது
அந்த கல்விதான் இன்று நாம் காணும் கல்வி
இந்தியாவில் கல்வி இருந்த வரலாறு இதுதான்
இதில் எங்கே பிராமணன் யாருக்கு எதை மறுத்தான் என சொல்லுங்கள்
பிராமண ஆசிரியரிடமே அண்ணா படித்தார், அம்பேத்கர் படித்தார், கலைஞரும் தமிழ் படித்தார்
எல்லோரையும் கற்க வைத்த அந்த இனமே அவர்களிடம் அடியும் வாங்கியது
சும்மா 100 வருடத்துக்கு முன் நமக்கு கல்வி இல்லை பிராமணன் மறுத்தான்என்பவனிடம் , 100 வருடத்துக்கு முன் இங்கு என்ன நவீன கல்வி இருந்தது என கேளுங்கள்
கலாச்சாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள் மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்: கவிஞர் வைரமுத்து கண்டனம்
எழுத்துரு அளவு
சென்னை, ஜூன் 15 ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கும் ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் இடையேயான தொடர்பு மொழி இனி இந்தி அல்லது ஆங்கிலமாக மட்டுமே இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே சுற்ற றிக்கை அனுப்பியுள்ளதற்கு கவிஞர் வைரமுத்து கண் டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், "இருப்புப்பாதை அதிகாரிகள் தமிழ் பேசக் கூடாதாம்.
ஆடு திருடுகிறவன் முதலில் பிடிப்பது-
ஆட்டின் குரல் வளை யைத்தான்-
கலாச்சாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள்
மொழியின் குரல் வளையைப் பிடிக்கப் பார்க் கிறார்கள்.
வேண்டாம் இந்த வேண்டாத விளையாட்டு" எனப் பதிவிட்டுள்ளார்.
மதுரை ரயில்வே கோட்டத்தில் கடந்த மே 9-ஆம் தேதி திருமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை பயணிகள் ரயில் கள்ளிக்குடி நோக்கி யும், கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் இருந்து மதுரை பயணிகள் ரயில் திருமங்கலம் நோக்கியும் ஒரே நேரத்தில் புறப்பட அனுமதி அளிக்கப் பட்டது. இந்த இரண்டு ரயில் களும் ஒரே தண்ட வாளத்தில் எதிரெதிரே வந்தன. கடைசி நேரத்தில் இந்த ரயில்கள் நிறுத்தப்பட்ட தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஒருவர் இந்தியிலும், மற்றொருவர் ஆங்கிலத் திலும் தகவல்கள் பரிமாறிக் கொண்டதும், ஒருவர் பேசியது மற்றொரு வருக்கு புரியாமல் இருந்ததும் விபத்துக்கு காரணம் என்று கண்டறிப்பட்டது.
இந்நிலையில், நேற்றைய தேதி யில் தெற்கு ரயில்வே ஒரு சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது. அதில், ரயில்வே கட்டுப் பாட்டு அறைக்கும் ரயில் நிலைய அதிகாரிகளுக் கும் இடையேயான தொடர்பு மொழி இனி இந்தி அல்லது ஆங்கிலமாக மட்டுமே இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்த வரிசையில் கவிஞர் வைர முத்து தனது கண்டனத்தை சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
வெள்ளைய கிறிஸ்தவர்கள் சரித்திரத்தை உருவாக்குவதில் வித்தகர்கள். முதலில் இப்படி இப்படி உருவாக்கலாம் என உயர்மட்டத்தில் (வாடிகன், லயோலா,சாந்தோம் )ஒரு திட்டம் வடிவமைக்கப்படும்.
பின் அதற்கு பல கிளைக்கதைகள் உருவாக்கப்படும்.(ஆர்யம், திராவிடம், திருவள்ளுவர் கிறித்தவர்,பார்ப்பனர்,தலித்,தாமஸ் வந்தார் திருவள்ளுவருக்கு விரல் பிடித்து எழுத கற்று தந்தார்னு) பின் அவை மெல்ல மெல்ல மிகப்பெரும் வகையில் சபைகள் மற்றும் சர்ச்களால் ,கள்ள பிரசங்கிகளால், ஆதரவு ஊடகங்களால், பப்ளிகேஷன்களால், திக போன்ற அமைப்புகளால்) பரப்பப்படும்.
சரித்திர ஆராய்சியாளர்கள், அகழ்வாய்வு துறையினர், ஆய்வாளர்கள் என பல வகையில் மிஷநரி எஜண்டுகள் செயல்படுவார்கள். இதுதான் உலகம் முழுதும் நடந்து வருகிறது.
இந்தியாவிலும் கடந்த பல வருடங்களாக இதுதான் நடந்தேறி வருகிறது. தாமஸ் படகில் கேரளாவுக்கு வந்தார், மேரி மாதா பிராமண சிறுவனுக்கு காட்சி தந்தார், வெள்ளை கிறிஸ்தவர்கள் மேலாடை போட நாடார் பெண்களுக்கு உதவினார்கள் என பல புரட்டு கதைகள் இப்படி உண்டு.
மற்றொருபுறம் ஸ்லீப்பர் செல்களாய் இருக்கும் உள்ளூர் பிரபலங்கள் (நம்ம ஊர் வெத்து வெட்டு டைரக்ட்டர்கள் போல பணத்துக்காக வேசித்தனம் செய்யும் சீல்லறைகளை வைத்து ) இந்து மதத்தின் நம்பிக்கைகளை உடைக்க துணை புரிவார்கள்.
பாரத தேசத்தின் சரித்திர நாயகர்களை எல்லாம் வில்லனாக்குவார்கள் ( சோழனை போல) இந்த இரண்டு யுக்திகளும் ஒரு சேர நடத்தப்பட்டு மதமாற்றங்கள் துரிதப்படுத்தப் படும் ரயில், பஸ் ஸ்டான்ட், ஸ்கூல்வாசல், ஆஸ்பத்திரி.
எண்ணிக்கை பெருக பெருக அமெரிக்க/ஐரோப்பிய ஆளுமை நிலைநாட்டப்படும். இது உலகம் முழுதும் மேற்கு ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் நடத்தி வரும் வேட்டை !!
கடைசி களிமண்ணை திண்ண வைத்துவிட்டு அனைத்து வளங்களும் சுரண்டப்பட்டு மெற்குலகுக்கு சென்று விடும்.