New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முன்னுரை


Guru

Status: Offline
Posts: 24778
Date:
முன்னுரை
Permalink  
 


ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் பைபிள் கதை கிறிஸ்துவமும்

                                                                   முன்னுரை 

அறிஞர்.ஜெகநாத் ஸ்ரீனிவாசன் தன் முகநூல் பக்கத்தில் ராமசாமி நாயக்கருக்கு மோசடியான யுனஸ்கோ விருது கதையை தமிழ்  விக்கிபீடியா- நீக்கியது எனப் பதிவு செய்தார்.

 திராவிடர் கழகம் என்ற காகித இயக்க நிறுவனர் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு ஐநா சபையின் யுனஸ்கோவினால் "புது உலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்" என விருது தரப்பட்டுள்ளது என ஒரு பெரும் பொய் 45 ஆண்டாய் பரப்பட்டுள்ளது. தமிழ் விக்கிபீடியாவில் இந்தக் கதையை கண்ட தமிழ் ஆர்வலர்  அறிஞர்.ஜெகநாத் ஸ்ரீனிவாசன், அந்த யுனஸ்கோ விருது கதை ஆங்கில விக்கியில் இல்லவே இல்லை; எனவே, யுனஸ்கோ  நிறுவனத் தரவுகளை ஆராய- அப்படி ஒரு விருது யுனஸ்கோவினால் தரப்படவே இல்லை எனக் கண்டவர் விக்கிபீடீயாவிற்கு தன் ஆய்வினை காட்டிய பின் விக்கி அந்த ராமசாமி நாயக்கருக்கு மோசடியான யுனஸ்கோ விருது கதையை நீக்கியது. திராவிடர் கழக கும்ம்பலை சேர்ந்தவர்களே ராமசாமி நாயக்கருக்கு கொடுத்துக்  கொண்டது என தெளிவாக அறிவு  சார் சிந்தனையாளர் புரிந்தானர். நாம் அந்த  மோசடியான யுனஸ்கோ விருது கதையை  முழுமையாய் காண்போம். 

கி.வீரமணி –திராவிடர் கழக பொதுச்செயலாளர் (பரம்பரை பேராயர்- இவருக்கு பின் மகன் அன்புராஜ் என ஞானஸ்நான்னம் ஆகிவிட்டது)   தன்  முகநூல்  பக்கத்திலும் விடுதலை நாளிதள் முதல் பக்கத்திலும்  கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.  வீரமணி அறிக்கை மிகவும் அருவருப்பாய் - காட்டுமிராண்டித்தனமாய் அமைய பலரும் இதுவே  ராமசாமி நாயக்கர் வழி எனத் தெளிவாய் உணர்த்தினார். 

https://www.viduthalai.in/headline/180585-2019-04-30-10-10-28.html



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

//இவர்கள் மின் கம்பியில் கை வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துவோம்.//

//விக்கிப்பீடியா ஆட்பட்டது என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஆதாரங்களின் அடிப்படையில், உண்மையின் வெளிச்சத்தில் விக்கிப்பீடியாவின் காதைத் திருகி உண்மையை நிலைநாட்டுவோம் என்பது உறுதி!//

பெரியாருக்கு விருதுப் பத்திரம் கொடுக்கப்பட்டிருந்தால் அதையாவது வெளியிட்டிருக்கலாம். அதையும் செய்யவில்லை. பெரியார் விட்டுச் சென்ற ஆவணங்களில் காவலர் திரு வீரமணிதானே? அவர் வெளியிட்டிருக்கும் படத்தில் இருக்கும் பட்டயம் International Education Year 1970 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த வருடத்தை ஐக்கியநாடுகள் நிறுவனம் உலக கல்வி வருடமாக அறிவித்தது என்பது உண்மை. ஆனால் அதற்காக எந்த விருதையும் ஐநாவோ அல்லது யுனெஸ்கோவோ அறிவித்ததாகத் தெரியவில்லை.

விருது பெரியாரை Socrates of South East Asia என்று அழைக்கிறது என்று திரு வீரமணி சொல்கிறார். இந்தியாவிற்கு தென்கிழக்கு ஆசியாவிற்கும் என்ன தொடர்பு? யுனெஸ்கோ இந்தத் தவறைச் செய்யுமா போன்ற கேள்விகள் எழுகின்றன. கேள்விகளுக்குப் பதில்கள் அளிப்பது திரு வீரமணியின் கடமை. ஆனால் அவர் பெரியாரியப் பாணியில் பதில் சொல்லியிருக்கிறார்.

  திராவிடர் கழகமும் அதன் மூலவர் பெரியாரும் அப்பட்டமான நாசி இனவெறியர்கள் என்பதை திரு வீரமணி தெளிவாகச் சொல்கிறார்.

தமிழகத்தில் இருக்கும் ஊடகச் சண்டியர்கள் எந்த அற உணர்வும் இல்லாத நாசி இனவெறியர்களா, அல்லது நாசி இனவெறியர்கள் தரும் கூலிக்கு வேலை செய்பவர்களா அல்லது தாங்கள் செய்யும் தொழிலுக்கு சிறிதளவாவது நன்றியோடு இருப்பவர்களா என்பது அவர்கள் திரு வீரமணியின் பதிவை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கிற

திரு வீரமணியின் பதிவில் சில வரிகள்:

"பார்ப்பனர்களைப் பிறவிக் குற்றவாளிகள் என்று தந்தை பெரியார் கூறியது எத்தகைய உண்மை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்."

"பார்ப்பனர்கள் என்றாலே ஒரு கிரிமினல் கும்பல் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மை என்பதைக் காலந்தாழ்ந்தாவது தமிழர்கள் உணரவேண்டும்."



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துகளுக்கு நெடுங்கணக்காக, அகர வரிசையாக எடுத்துக் கொள்ளலாம். தமிழ் உச்சரிப்புக்கேற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றிரண்டு குறையுமானால் அதற்கேற்ற தமிழ் எழுத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்பட்டால், நான் மிகமிக மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன்”.

(ஈ.வெ.ரா. சிந்தனைகள், வே. ஆனைமுத்து, தொகுதி).



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

https://www.vikatan.com/juniorvikatan/2019-may-15/society-/150933-controversy-unesco-award-to-periyar.html

vikadan kid cloves condmen

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அறிஞர்.ஜெகநாத் ஸ்ரீனிவாசன் முகநூல் நண்பர்கள் மட்டுமே அறுவிக்கப் பட்ட செய்தியை, விடுதலை முதல் பக்கத்தில் ராமசாமி நாயக்கர் வழி காலித்தனத்தோடே  முழுவதும் வெறுப்பு, இனவெறி-பொய்மை மட்டுமே எனவும் அத்தோடே அராஜகமான மிரட்டலோடு  கி.வீரமணி கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

தமிழக பத்திரிக்கை-மின் ஊடகங்கள் மறைத்தும் கி.வீரமணியின் அருவருபான  காட்டுமிராண்டித்தனமான அறிக்கையால் சமூக ஊடகத்தில் பரவிட விகடன் மட்டுமெ இந்த  விருது யுனஸ்கோவினால் தரப்படவில்லை என ஒரு கட்டுரை வெளியிட்டது. 

// உண்மையின் வெளிச்சத்தில் விக்கிப்பீடியாவின் காதைத் திருகி உண்மையை நிலைநாட்டுவோம்// எனக் கூவிய   கி.வீரமணி  அறிஞர்.ஜெகநாத் ஸ்ரீனிவாசன்  முகநூல் பக்கத்தை ஒரு வாரம் முடக்கி ஒரு அற்பத்ன வெற்றி மட்டுமே பெற்றார். ஆனால் பல ஆய்வுகள் வெளிவந்தவைகளை நாம் விரிவாய் காண்போம்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

1967ல் மிகத் தீவீரமாய் திமுகவை எதிர்த்து  ராமசாமி நாயக்கர் பிரச்சாரம்  செய்தும் ராஜாஜியுடைய முயற்சியில் எழுந்த திமுக கூட்டணி நடிகர் எம்.ஜீ.ஆர் கவர்ச்சி பலத்தால் வெற்றி பெற்றது, அது தான் ராமசாமி நாயக்கர் பிரபலம்.  திமுக ஆட்சி பிறகு தமிழர் பணம் பிடுங்க லாட்டரி கொணரந்தும், சாரயம் ஆறாக ஓட விட்டதும் வரலாறு.

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் மரணத்திற்குப் பின் அந்த காகிதப் பரப்பியலாளாரை மிகவும் உயர்த்தி  கிறிஸ்துவ பைபிள் தொன்மம் இயற்றப்பட்ட வழியில் பல கதைகள்  புனைந்தும்,  மற்றவர் உழைப்பை நாயக்கர் மீது திணித்தும் ஈ.வெ.ராவின் பல கருத்துக்களை மறைத்தும் ராமசாமி நாயக்கர்  மீது  ஒரு பிம்பம் திணிக்கப் பட்டுள்ளது. கிறிஸ்துவ சர்ச் பணமும், காசுக்காக எழுதும் மார்க்சீய எழுத்தாளர்களும் பெரிதாக உதவி செய்துள்ளனர்.

தமிழை இழிவு செய்தும், பட்டியல் சமூக மக்களிற்கு விரோதமாகவும் வாழ்நாள் முழுவது பணியாற்றியவர், இந்திய விடுதலையை எதிர்த்தும், கிறிஸ்துவ ஆங்கிலேய ஆட்சியின்  கொடுங்கோல் பௌட்கொலைகளை வரவேற்றும் பெரும் சொத்து சம்பாதித்தவர். அண்ணாதுரை பற்றி ஈ.வெ.ரா 18 வருடம் பேசியவை படித்தால் எப்படிப்பட்டவர், எவ்வளவு அருவருப்பானவர் எனப் புரியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இஸ்ரேலின்  தொல்லியல் மிகத் தெளிவாய்  பைபிள் கதைகள் முழுவதும் கட்டுக் கதை,  கர்த்தர் கதாபாத்திரம் செய்தமை என விவிலியக் கதைகளில் உள்ளவை எல்லாமே மனிதக் கற்பனை  வளத்தால் புனைந்த கற்பனைகள் எனத் தெளிவாக  நிருபித்தவற்றை மறைத்து வேசித்தனமாய் மதமாற்றம் செய்ய  ஆண்ட்டிற்கு பல ஆயிரம் கோடிகள்  வருவதும், அதை தமிழ்நாட்டில் பல்வேறு சமூக விரோதச் செயல் செய்ய திராவிடத்தோடே கை கோர்த்து தமிழையும், தமிழ்  பண்பாட்டையும் அழிக்கும் திராவிட - கிறிஸ்துவக் கூட்டணியை அறிவோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஈ.வே. ராமசாமி நாயக்கர் -  ”நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்” (குடியரசு 22.08.1926)

”தமிழும் தமிழரும்” என்ற நூலிலே, ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகிறேன்.”

”தமிழ்ப் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100 க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்வான்களாக… தமிழ்ப் புலவர்களாக வெகுகாலம் இருக்க நேர்ந்துவிட்டதனால் அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.”



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 இராமசாமியார் பொதுவாழ்வில் தலையிடுவதற்குமுன் பெரிய ”மைனராய்” விளங்கினார். அவர் மைனர் விளையாட்டின் விநோதங்களைப் பற்றி இன்றும் அவர் தோழர்கள் வேடிக்கையாகக் கூறுவார்கள். சில சமயங்களில் அவரும் கூறுவார். அந்நாளில் ஈ.வே.ரா. பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர். நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்ற மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுவதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற்காலத்தில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள். இக்கூட்டத்துக்கு ஈ.வே. ராவின் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டுபோக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய், தந்தையர்க்குத் தெரியக்கூடாது. ஈ.வே.ரா. இச்சமயம் நாகம்மையாரின் உதவியையே நாடுவார். அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவர் விரும்பும் உணவுகளை ஆக்கிவிடுவார். அவ்வுணவுகள் வீட்டுப் புறக்கடை வழியாக வண்டியேறிக் காவிரிக்குப் போய்விடும்.

நூல்:- தமிழர் தலைவர்)  சாமி சிதம்பரனரர்

 

ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு ஏறக்குறைய 25 வயதிருக்கலாம். அப்போது அவர் வீட்டைவிட்டு காசிக்குச் சென்றுவிட்டார். அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அப்பா வெங்கட்டநாயக்கர் ஊர் ஊராய் ஆள் அனுப்பித் தேடினார். ஈ.வே. கிருஷ்ணசாமியும், ஈ.வே. ராவின் நண்பரான ப.வெ. மாணிக்க நாயக்கருக்குக் கடிதம் எழுதி விசாரித்தார். டிராமா கம்பெனிகள், உயர்ந்த தாசிகளின் இல்லங்கள் முதலிய இடங்களிலெல்லாம் குறிப்பாகத் தேடிப்பார்த்தனர். வெளி ஊர்களிலுள்ள பல மைனர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினர்.

 

 ”பெர்லினுக்கு அடுத்த பட்டணமாகிய போஸ்டாமில் பெரியார் இருந்த ஏழு நாள்களில் நான்கு நாள்களை நிர்வாணச் சங்கங்களிலேயே கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.” (நன்றி :- காலச்சுவடு – செப்டம்பர் 2004)

 நாகம்மாள் விழாக்காலங்களில் எப்பொழுதாவது கோயிலுக்குச் செல்வதுண்டு. இவ்வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பது ஈ.வே.ராவின் எண்ணம். இதற்காக செய்த குறும்பு மிகவும் வேடிக்கையானது. ஒருநாள் ஏதோ திருவிழாவை முன்னிட்டு நாகம்மையார் சில பெண்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். இராமசாமியாரும் தன் கூட்டாளிகள் சிலருடன் கோயிலுக்குச் சென்றார். தான் மைனர்கோலம் பூண்டு, அம்மையார் தன்னை நன்றாகப் பார்க்க முடியாத ஒரு ஒதுக்கிடத்தில் நின்றுகொண்டார். நாகம்மையாரைத் தன் கூட்டாளிகளுக்குக் காட்டி, ”இவள் யாரோ புதிய தாசி. நமது ஊருக்கு வந்திருக்கிறாள். இவளை நம் வசமாக்க வேண்டும். நீங்கள் அவள் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டிய முயற்சியைச் செய்யுங்கள்,” என்றார். அவர்களும் அம்மையார் நின்ற இடத்திற்குச் சென்று அவரைப் பார்த்து ஏளனஞ் செய்யத் தொடங்கினார். நாகம்மையார் இக்கூட்டத்தின் செய்கையைப் பார்த்துவிட்டார். அவருக்குச் செய்வது இன்னது என்று தோன்றவில்லை. கால்கள் வெலவெலத்துவிட்டன. உடம்பு நடுநடுங்கியது. தாங்க முடியாத அச்சத்தால் நெஞ்சம் துடிதுடிக்கின்றது. வியர்வையால் அப்படியே நனைந்து போய்விட்டார். ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு அக்காலிகளிடமிருந்து தப்பி வீடுவந்து சேர்ந்துவிட்டார். கோயில்களின் நிலைமையையும் தெரிந்து கொண்டார். மறுநாளே கோயிலில் நடந்த நிகழ்ச்சி தன் கணவரின் திருவிளையாடல்தான் என்று உணர்ந்துகொண்டார்.

(நூல்: தமிழர் தலைவர்)

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இவரின் தந்தை வெங்கட்ட நாயக்கர் நாயுடு மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டவர். இவரின் தாயார் முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட சின்னத்தாயம்மாள் ஆவார். இவரின் உடன் பிறந்தோர் கிருஷ்ணசாமி, கண்ணம்மா மற்றும் பொன்னுத்தாயி ஆகியோர்கள் ஆவர்.

ஆங்கிலேயக் கிறிஸ்துவ ஆட்சி மிஷநரி பாதிரிகள் தலைமையில் இந்தியக் கல்வி முறையை அழித்தும், நாட்டின் வளங்களை கொள்ளை அடித்தமையை எதிர்த்து எழுந்த காங்கிரசில் 1919ல் சேர்ந்த ஈ.வெ. இராமசாமி நாயக்கர், 1922ல் மெட்ராச் ராஜாதானி ஓராண்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட, பின்னர் சாட்தாரண  ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்ச்யில் இருந்தாலும், பெரும் பேச்சாற்றாலோ, அறிவாஅற்றலோ, தேசப் பற்ற்ய், உழைப்பு ஏதும் இல்லதமையால் 

 

 ஈ.வெ. இராமசாமி நாயக்கர் கன்னடத்தை தாய் மொழியாய் கொண்டவர்,  தந்தை வெங்கட்ட நாயக்கர்  ஆரம்பத்தில் மிகவும் ஏழையாக  கூலி வேலை செய்தவர், உழைப்பால் முன்னேறியவர், இளமையில் ராமசாமி மிகவும் மோசமான 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 பெரியார் திடலில் நடப்பது தாலி அகற்றும் விழா என நடத்துவதாய் பெரும் பரப்புதல்; காவல்துறை தடை செய்ய, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அறிபரந்தாமன் அனுமதி (முறையற்ற) தர பின்னர் பென்ச் அது சட்ட விரோதம் என்றது,  ஆணை வரமுன்பே தமிழர் பண்பாட்டில் நம்பிக்கையற்ற பெரும்பாலும் வேசி மத(மாற்ற) அடிமைகள் 21 ஜோடி  அவிழ்த்தமையாயும் பரப்புதல், ஆனால் தாலி அவிழ்த்த ஜோடிகள் சமூகம் ஏளனம் செய்ய மீண்ட்டும் தாலி கட்டிக் கொண்டதை பத்திரிக்கைகள் பதிவிட்டன. 

வீரமணி கோர்ட்டில் -எங்கள் தொண்டர் தானாக அவிழ்பதே - போராட்டம்மோ, விழாவோ இல்லை என  கூறினார்.

இது தான் இவர்களின் வேடம், 50 ஆட்சி பல்லம் ஆனால் சற்றும் மக்கள் ஆதரவற்ற  சிறு கும்பல், ஆனால் பல ஆயிரம் கோடி சொத்து பல பத்திரிக்கை ஊடக பலம் என ம்மிருக பணபலம் இருந்தும் அன்னிய மதவாதிகளோடு இணைந்து  கொண்டு  தமிழர் பண்பாட்டு விரோதிகளாய் அர்த்தமற்ற பேச்சுகளோடன் இக்கும்பலை தமிழர் மதிப்பதில்ல்லை, இது தான் அது துவக்கம் முதலே, இந்த கும்பலின் தொடக்க நிறுவனரும் ஏழை  தமிழரிடம் நன்கொடைகளால் பெரும் சொத்து சேர்த்ட்தவர் தான் 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஈ.வே.ரா. தேர்ந்தெடுத்த நீதிக்கட்சியின் அரசியல் நிலப்பாடு பற்றி மார்க்சிய சிந்தனையாளர் அருணன் எழுதுகிறார்:

சொல்லளவில் மட்டுமல்ல செயலளவிலும் ஏகாதிபத்தியதாசனாகவே இயங்கி வந்தது நீதிக்கட்சி. அதுவும் எந்த அளவிற்கு என்றால் மிகக் கொடூரமான ரெளலட் சட்டத்தினை ஆதரிக்கும் அளவிற்கு. “சுட்டேன், சுட்டேன்; குண்டுகள் தீரும்வரை சுட்டேன்” எனக் கொக்கரித்தானே ஜெனரல் டயர் 1919 ஆம் ஆண்டு! அந்த ஜாலியன்வாலபாக் படுகொலையினை ஆதரித்து அறிக்கை விடும் அளவிற்கு! அதிலும் கட்சியின் சார்பில் அறிக்கை விட்டவர்கள் யார் தெரியுமா? இன்றைக்கும் “திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் தலைவர்கள்” என்று எவரை திராவிட இயக்கத்தவர்கள் புகழ்ந்துரைத்துக் கொண்டிருக்கிறார்களோ அந்த தியாகராசச் செட்டியாரும், டி.எம். நாயரும்தான்.

– பக்கம் 19 / திராவிட இயக்கம் – ஒரு மார்க்சீய ஆய்வு / அருணன்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

1934 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற நீதிக்கட்சியின் ஆண்டு மாநாட்டிற்கு பெரியார் தனது சமதர்ம கட்சியின் திட்டத்தை அனுப்பி வைத்து அதனை ஏற்றுக் கொள்ளும்படிக் கோரியிருந்தார். ஆனால் நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தது போல் ஆலை அரசர்களாலும், மிட்டா மிராசுகளாலும் நிறைந்திருந்த நீதிக் கட்சியின் தலைமையால் சமதர்மக் கட்சியின் புரட்சிகரமான திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் இங்கே நடந்த விந்தை என்னவென்றால், பிராமணரல்லாதார் நலன் காத்தல் எனும் கோஷத்தோடு பாட்டாளி வர்க்கக் கோட்பாடுகளை முன்வைத்த பெரியார் நீதிக்கட்சியின் தலைமை ஏற்றுக் கொள்ளும் வகையில் அதனை வெட்டிச் சுருக்கி மாற்றியமைத்து விட்டார். “இது சமதர்மக் கொள்கையின் அடிப்படை அம்சத்தையே கை கழுவுவதாகும்” என்று சிங்காரவேலர் பெரியாரைக் கண்டித்திருக்கிறார். “சுயமரியாதை இயக்கம், அவமரியாதை இயக்கமாகிவிட்டது” என்றுகூட அவர் கூறியிருக்கிறார்.

பெரியாரின் இந்தத் தவறான பாதையைக் கண்டு வெறுப்புற்று இது “கோழைத்தனமான பின்வாங்கல்” என்று அவரைக் கண்டித்து ஜீவாவும், ராகவனும், நீலாவதியும், வல்லத்தரசும் பெரியாரிடமிருந்து விலகி “சுயமரியாதை சமதர்மக் கழகம்” என்று தனிக் கழகத்தினை அமைத்திருக்கிறார்கள்.

இப்படி திராவிட இயக்கத்தினை ஒரு பாட்டாளி வர்க்க அடிப்படையில் நடத்திச் செல்ல நடந்த ஒரு முயற்சி அகால மரணம் எய்திவிட்டது.

– பக்கம் 39,40 / திராவிட இயக்கம் – ஒரு மார்க்சீய ஆய்வு / அருணன்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஈ.வே.ரா.வோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியைக் கொடுத்தது. மறைமலை அடிகள் “பெரிய புராணத்தை எரிப்பேன் என்று சொன்ன பெரியாரின் குடலைக் கிழித்து மாலையாகப் போடுவேன்” என்றார். (தமிழ் – தி.மு.க.- கம்யூனிஸ்ட் / ச.செந்தில்நாதன்).

மறைமலை அடிகளின் நாட்குறிப்பில் (16.06.1928):

திரு.வி.கல்யாண சுந்தர முதலியாரவர்கள், அவர்தம் அண்ணன், ‘தமிழ்நாடு’ ஆசிரியர் திரு. சொக்கலிங்கள் பிள்ளை, உடன் ஒருவர் என நால்வர் நேற்றுப் பிற்பகல் வந்தனர். திரு. இராமசாமி நாயக்கர் நடத்திவரும் நாத்திகச் சீரழிவு இயக்கத்தைத் திட்டமிட்டு முறியடிப்பது பற்றி என்னுடன் கலந்து பேசினர்.

என்று எழுதப்பட்டுள்ளது.

 

ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரில் திராவிட இயக்கம்’ என்ற நூலில் பி.ராமமூர்த்தி எழுதுகிறார்:

நீதிக்கட்சி – அது தோன்றிய காலத்திலிருந்து அதன் அந்திம காலம்வரை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியை ஆதரித்து நின்றது. அது ஜமீந்தார்கள் மற்றும் தரகு வியாபரிகளின் கட்சியாக இருந்தது.

(பக்கம் 20)

ஆங்கில அரசுக்கு ஆதரவாக உருவானதுதான் நீதிக்கட்சி என்ற கருத்து ஒருபுறம் இருக்கட்டும். நீதிக்கட்சியின் சார்புடையவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்:

சர்.பி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், சி.நடேசன் ஆகிய பார்ப்பனரல்லாத பெருந்தலைவர்கள் (1916) தோற்றுவித்த இயக்கத்திற்குத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயர்தான் வைக்கப்பட்டது என்றாலும் அந்த இயக்கம் நடத்தி வந்த ஜஸ்டிஸ் என்ற புகழ்பெற்ற ஏட்டின் பெயரையே கொண்டு அந்த இயக்கத்தை நீதிக்கட்சி என்று பரவலாக எல்லோரும் அழைக்கலாயினர்.

– பக்கம் 19 / திராவிட இயக்க வரலாறு / இரா.நெடுஞ்செழியன்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இந்தியாவிலேயே முதன்முறையாக (1927) ஒரு பெண் உறுப்பினர் சட்டமன்றத்தில் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாகாணச் சட்ட மன்றத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்தக் காலத்தில் இசைவேளாளர் மரபைச் சேர்ந்த பெண்கள் கடவுள் பெயரால் தாலி கட்டிக்கொள்ளும் பழக்கம் இருந்தது. இவர்கள் தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டனர். நடைமுறையில் இவர்கள் வசதி படைத்தாரோடு தொடர்பு வைத்திருந்தனர்.

satyamurtiடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்றத்தில் (1927) ‘தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்’ ஏற்படுத்துவதற்காகத் தீர்மானத்தை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சித் துணைத்தலைவராக இருந்த எஸ். சத்தியமூர்த்தி இந்தத் தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தார்த்தார். மனித விடுதலையையும் பெண்களின் உரிமையையும் ஆதரித்துப் பாடிய பாரதியின் காலத்துக்குப் பிறகும் காங்கிரஸில் இத்தகைய குரல்கள் ஒலித்தன என்பது குறைபாடுதான்.

முத்துலட்சுமி / சத்தியமூர்த்தி விவாதத்தைத் திராவிடர் கழகத்தினர் தவறாமல் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் தேசிய எழுச்சிக்காகப் பாடிய பாரதியார் கருத்து என்ன என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்; ‘ஈ.வே.ரா. தலைமையில் நடந்த வைக்கம் சத்தியாக்கிரகத்தில் தொண்டர்கள் பாரதியின் பாடல்களைப் பாடிக்கொண்டு சென்றனர்’ என்ற வரலாற்று உண்மையை மறைத்துவிடுகின்றனர்.

சத்தியமூர்த்தியைக் காரணம் காட்டி பிராமணர்கள் மட்டுமே சாதி உணர்வோடு செயல்படுகிறார்கள் என்று சாதிக்கிறார்கள் திராவிடக் கழகத்தினர்.

ஆனால் தேவதாசிப் பிரச்சினையை எடுத்துக்கொண்டால் கூட பகுத்தறிவாளர்களின் இந்த வாதம் படுத்துவிடுகிறது. தங்களுடைய பிழைப்புக்கு ஆபத்து என்று கருதிய 7000 தேவதாசிகள் அப்பொழுதே சென்னையில் ஊர்வலம் நடத்தி இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ராஜாஜி என்றழைக்கப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி சேலத்தில் பிரபலமான வழக்கறிஞர். இவர் 1916ல் மகாத்மா காந்தியைச் சந்தித்தார்; 1917ல் சேலம் நகரசபையின் சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜாஜியைப் பற்றி எஸ்.எஸ். மாரிசாமி எழுதுகிறார்:

ராஜாஜி, சுவாமி சகஜானந்தாவை சேலத்தில் வரவேற்று சேலம் கல்லூரி முதல்வர் யக்ஞ நாராயண அய்யரை விருந்து கொடுக்கச் செய்தார். இவரும் விருந்தில் கலந்துகொள்ளவே மேல்ஜாதியினர் பரவலாக எதிர்த்தார்கள், ஜாதிப்பிரஷ்டம் செய்தார்கள்.

ராஜாஜியின் கடும் உழைப்பாலும், பிரசாரத்தினாலும் தமிழ்நாடு கதர் உற்பத்தியில் முக்கியத்துவம் பெற்றது. இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்தக் கதரில் மூன்றில் ஒரு பாகம் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி சரித்திரம் படைத்தது.

– பீஷ்மர் ராஜாஜி / எஸ்.எஸ். மாரிசாமி

மேற்கோள் மேடை:

பிராமண துவேஷங் காட்டி தேசநலத்தை நாடுவது தேசத்துக்குத் தீங்கு செய்வதையொக்கும். நாம் பிராமணன் மீது எவ்வெக் குற்றங்களைச் சுமத்துகிறோமோ அவ்வக் குற்றங்களைப் பஞ்சமர் முதலியோர் நம்மீது சுமத்துகின்றனர்.

– ஈ.வே.ரா. / 11.10.1918.

 

நீதிக்கட்சி சென்னை மாநில அமைச்சரவைப் பொறுப்பில் இருந்தது (1928). பாரதி பாடல்கள் ஆங்கிலேயரின் தூண்டுதலால் தடைசெய்யப்பட்டதைக் கண்டித்துச் சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

உணர்வு இதழில் (டிச.26, 2008-ஜன.1, 2009) பெரியார் இயக்கத்தவரை ‘போலி பகுத்தறிவுவாதிகள்’ என்று தலைப்பிட்டு அறைகூவல் விடும் கட்டுரை வெளியாகியிருக்கிறது. அதிலிருந்து ஒரு பகுதி இதோ:

போலி பகுத்தறிவுவாதிகளின் மற்றொரு மூட நம்பிக்கையானது உருவப்படத் திறப்புகளும், அதற்கான விழாக்களும்… உருவப்படங்கள் திறப்பதை நியாயப்படுத்தி பெரியார் எடுத்து வைக்கும் வாதங்கள் எதுவும் பகுத்தறிவு பூர்வமானதாக இல்லை…

பெரியாரிடம் ஆழமான சிந்தனை எதுவும் இருந்ததில்லை என்பதும், அவரைப் பின்பற்றுவோர் கண்களை மூடிக் கொண்டுதான் பின்பற்றுகின்றனர் என்பதும் மேலும் தெளிவாகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அன்பு. பொன்னோவியம்.

அன்பு. பொன்னோவியம் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையில் பணி செய்தவர்; ‘அயோத்திதாசர் சிந்தனைகள்’ என்ற தொகுப்பை வெளியிட்டவர்; பெளத்த நெறியில் அறிஞர்; பழங்குடி மக்களுக்காகப் பாடுபட்டவர். இவருடைய கட்டுரைகள் நிறைந்த நூல்: ‘உணவில் கலந்திருக்கும் சாதி’.

அன்பு.பொன்னோவியத்தின் காலத்திற்குப் பிறகு டிசம்பர் 2007ல் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் அணிந்துரை கொடுத்திருக்கிறார்.

வீரமணிக்கு மறுமொழியாக அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளைக் கொடுத்திருக்கிறேன்:

வைக்கம் போராட்டம், தாழ்த்தப்பட்டோருக்கும் ஈ.வேராவுக்கும் ஏற்பட்ட உரசல்கள் பற்றி இங்கே சொல்லப்படுகிறது.

1962 தேர்தலில் ஈ.வேரா காங்கிரசுக்கு ஆதரவாகவும் தி.மு.க.வுக்கு எதிராகவும் செயல்பட்டார். அப்போது தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அவர் பண்புக் குறைவாகப் பேசியதாக செய்தி வெளிவந்தது. அந்த செய்தியை அடிப்படையாக வைத்து ‘முரசொலி’ பொங்கல் மலரில் கார்ட்டுன் வந்தது. அதற்கு எதிராக ‘நாத்திகம்’ வார இதழில் ஒரு தலையங்கம் எழுதப்பட்டது. அந்தத் தலையங்கத்திற்கு அன்பு.பொன்னோவியம் எழுதிய மறுமொழியும் இந்தப் புத்தகத்தில் உள்ளது.

• பெரியார் ஈ.வேரா அவர்களக் காங்கிரஸ்காரராகவும் நீதிக்கட்சியினராகவும் சிறப்பிப்பார்கள்… காங்கிரசில் இருந்த ஐந்தாண்டுகளில் அவர் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்தது என்று கூற ஒன்றுமில்லை. 1929 வரை தனித்தலைவர் இல்லாதிருந்த நீதிக்கட்சியை ஆதரித்த காலம் ஐந்தாண்டுகளிலும் அவரது தாழ்த்தப்பட்டோருக்கான பணிகளைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. 1938ல் நீதிக்கட்சியில் பொறுப்பேற்று 1944ல் திராவிடர் கழகமாக மாறிய ஆறாண்டு கால வரலாற்றிலும் தாழ்த்தப்பட்டோருக்காகப் பேசினாரா போராடினாரா என்று சிறப்பாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
• நாடார் குல மக்களின் அத்தகைய நிலைக்கும் அவர்களது கோயில் நுழைவு போராட்டத்திற்கும் பெரியார் அவர்கள் போராடினார்கள் என்று நிச்சயமாகக் கூற முடியாது. நாடார் மக்களின் போராட்டம் 1871ல் தொடங்கி 1920ல் முடிவு பெற்றது. 1920ல்தான் பெரியார் அரசியலில் நுழைய நேரிட்டது.
• 1924ல் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டதைத் தாழ்த்தப்பட்டோருக்காகப் போராடினார் என்று மிகைப்படுத்துவது அதிகப்படியான கருத்தாகும். தமிழ்நாட்டில் அத்தகைய போராட்டத்தை பெரியார் ஏன் நடத்தவில்லை என்ற கேள்வியைத்தான் அது தோற்றுவித்தது.
• 1938 ஆகஸ்டில் சுயமரியாதைக் கூட்டம் ஒன்றில் தாழ்த்தப்பட்டோர் தலைவி. திருமதி. மீனாம்பாள் சிவராஜ் உரையாற்ற சிறிது காலம் தாமதமாக வர நேர்ந்தது. இடையில் மேடையில் இருந்தவர்கள் பேசவர இருப்பவர் சாதியைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர். கொதிப்படைந்த மீனாம்பாள் சிவராஜ் சு.ம.காரர் என்றால் சுத்த மடையர் என்று சொல்லிவிட்டாராம்.
• பெரியார் பல சமயங்களில் ஆதி திராவிட மக்களை சாடி பழித்துப் பேசியிருக்கிறார். 19.06.1947 பெரியார் பேச்சும் 24.04.1958 விடுதலை தலையங்கம் போன்றவைகளைய்ம் சான்றாகக் கூறலாம். அவை சில சமயங்களில் நேரிடையாகவும், சூசகமாகவும் இருக்கும்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 இன்று தாழ்த்தப்பட்டவர்கள் அரசுப்பணியில் இருப்பதற்கு காரணம் புரட்சியாளர் அம்பேத்கர்தான் காரணம். ஈவேரா அல்ல.

அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் இருந்த்தைக்கூட ஈவேரா ஒருவித இறுக்கத்துடனே பார்த்தார். அதுமட்டுமல்ல அம்பேத்கர் போராடிப் பெற்றுக் கொடுத்த உரிமைகள் ஆதிதிராவிடர்களுக்கு கிடைத்துவிட்டதே ‍ பிற்டுத்தப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லையே என்று அம்பேத்கரையே நமைச்சலுடன் பேசிவந்தவர்.இதுபற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டுமானால் ஈவேரா சிந்தனைகளைப் படியுங்கள்.
ஈவேரா பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக , சூத்திரமக்களுக்காக உழைத்தவர். அதை அவரே பல தடவை உரக்க கூறியிருக்கிறார்.
தமிழர்கள் என்று யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று மறைமலை அடிகளார் கேட்டபோது ஈவேரா சூத்திரமக்களே தமிழர்கள் என்று கூறினார்.தமிழர்களில் ஆதிதிராவிடரை அவர் சேர்க்கவில்லை.
முதுகொளத்தூர் கலவரம், கீழ்வெண்மணி கலவரம் இதைப்பற்றியெல்லாம் ஈவேராவின் எதிர்வினை என்ன? இதற்காக அவர் ஏதாவது போராட்டம் நடத்தியிருக்கிறாரா?
தமிழ்நாட்டில் தலித் அரசியல் எழுச்சி அழுந்திப்போனதற்கு இரு இயக்கங்களை குறிப்பிடலாம். ஒன்று காங்கிரஸ் மற்றொன்று திராவிடர் கழகம்.
ஆதிதிராவிடர்களுக்கு கிடைத்துள்ள உரிமைகள் எல்லாம் ஆதிதிராவிடர்களாலேயே பெறப்பட்டது என்பதை வரலாற்றைப் படித்துப்பார்த்தால் தெரியும்.
சேரன்மாகுருகுலத்தில் தனியாக பிராமணரல்லாதவர்களுக்கு (சூத்திர ர்களுக்கு) உணவு கொடுத்த்தாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஈவேராவுக்கு எழுந்த பிராமணரல்லாத பற்று அதேகாலகட்டத்தில் பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் இல்லை என்ற நிலையில், பிராமணரல்லாத பற்று எழாத து ஏன்?
ஈவேரா தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிறைய செய்திருக்கிறார் என்று யாராவது சொன்னால் அவர்கள் ஆதாரத்தோடு அதை நிரூபிக்கலாமே!



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 ஈ.வே.ரா.வுடன் தமிழ்நாடு காங்கிரஸ் பிரமுகர் திரு. டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயரும் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுச் சிறை புகுந்தார். ஈ.வே.ரா., மதுரை பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் திருவனந்தபுரம் சிறையில் சாதாரணக் கைதிகளாக நடத்தப்படுகின்றனர் என்று புகார் கூறி, தலைவர் ராஜாஜி திருவிதாங்கூர் மன்னருக்குக் கடிதம் எழுதினார். அதன் பின்னர் அவர்கள் சிறையில் விசேஷ வகுப்பில் வைக்கப்பட்டனர்.

– பக். 579 / விடுதலைப் போரில் தமிழகம் / ம.பொ. சிவஞானம்

மூதறிஞர் ராஜாஜி, திரு. எஸ். சீனிவாச ஐயங்கார் ஆகிய பெருந்தலைவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வைக்கத்திற்குச் சென்று, சத்தியாகிரகிகளை ஊக்குவித்தனர். திருவிதாங்கூர் சமஸ்தானம் முழுவதும் சுற்றுலாச் செய்து, தொண்டர்களையும் பொருளுதவியையும் திரட்டித் தந்தனர்.

– பக்.577 / விடுதலைப் போரில் தமிழகம் / ம.பொ.சிவஞானம்

ஈ.வேராவோடு சிறை சென்ற டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயர் பெயரைப் பெரியாரிஸ்டுகள் எங்காவது எழுதியிருக்கிறார்களா? அதைத் திராவிடத் திரை போட்டு மூடிவிட்டார்கள்.

ம.பொ.சி.யைத் தொடர்ந்து கோவை அய்யாமுத்து. அவர் சொல்வதைக் கேட்கலாம்:

rajajiஇராஜாஜியோடு நான் நேரடியாகத் தொடர்பு கொண்டது 1924ஆம் ஆண்டிலாகும். திருவனந்தபுரம் மத்திய சிறைச்சாலையிலிருந்து நான் வெளிவந்த அன்றே இராஜாஜியும் திருவனந்தபுரம் வந்திருந்தார்…

அன்று மாலை திருவனந்தபுரத்தில் பொதுக்கூட்டமொன்று நடைபெற்றது. இராஜாஜியின் வருகையும் நான் விடுதலையாகும் செய்தியும் அறிந்த மக்கள் திருவனந்தபுரம் கண்டிராத அளவு கூடியிருந்தனர். குஞ்சு கிருஷ்ணபிள்ளை தலைமை வகிக்க இராஜாஜி பேசியதை நான் மெளனமாகக் கேட்டிருந்தேன்.

மறுநாள் அஞ்சுங்கோ சென்று அங்கொரு பிரம்மாணடமான கூட்டத்தில் பேசிப் பணம் வசூலித்து வைக்கத்திற்கு அனுப்பிவிட்டுக் கோவை திரும்பினேன்.

 

-பக். 13, 14 / ராஜாஜி என் தந்தை / கோவை அய்யாமுத்து

வைக்கம் சத்தியாக்கிரகம் தொடர்பான சில கட்டுரைகளை நெல்லை ஜெபமணி துக்ளக்கில் எழுதினார். அதற்கிடையே கி.வீரமணியின் மறுப்பும் வெளியிடப்பட்டது. சுவாரசியமான அந்த கருத்துப் போரிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகிறேன்:

1. வைக்கம் சத்தியாகிரஹம் – சில உண்மைகள் / நெல்லை ஜெபமணி / துக்ளக் / 15.11.1985
2. வைக்கம் போராட்டத்தை காந்தி ஆதரிக்கவில்லை – கி.வீரமணி / துக்ளக் / 1.12.1985
3. காந்திஜியின் ஆதரவு பெற்றே வைக்கம் சத்தியாகிரஹம் நடந்தது – நெல்லை ஜெபமணி / துக்ளக் / 1.1.1986
4. தொடர்ச்சி – நெல்லை ஜெபமணி / துக்ளக் / 15.1.1986
5. தொடர்ச்சி – நெல்லை ஜெபமணி / துக்ளக் / 1.2.1986

1. பெரியார் ஈ.வேரா வைக்கம் போராட்டம் முடிந்த அடுத்த ஆண்டே காங்கிரசை விட்டு வெளியேற, அப்போது சென்னை ராஜதானியில் மந்திரி சபை அமைத்திருந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தாருடன் சேர்ந்து கொண்டார். பெரியார் ஈ.வே.ரா.வுக்கு உண்மையிலேயே தீண்டாமை ஒழிப்பில் ஆழ்ந்த அக்கறை இருந்திருக்கும் என்றால் புதிதாக உறவு கொண்டாடிய தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தினரிடம் ‘தமிழ் நாட்டைச் சேர்ந்த, தீண்டத்தகாத தாழ்த்தப்பட்ட ஒருவருக்கோ அல்லது ஒதுக்கப்பட்ட வெறுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கோ மந்திரி சபையில் இடம் தர வேண்டும்’ என்று கூறியிருக்கலாம். அதைப் பெரியார் செய்யாதது ஏன்?… ஏன் செய்யவில்லை? தீண்டாமை ஒழிப்பைச் சட்டமாக்கியிருக்கலாமே. 1937-ல் சென்னை ராஜ்ஜியத்தின் பிரதம மந்திரியாக ராஜாஜி பதவி ஏற்றவுடன் காங்கிரசின் தீண்டாமை ஒழிப்புக் கொள்கையை சட்டபூர்வமாக்கினார். தனது மந்திரிசபையில் தாழ்த்தப்பட்ட ஒருவரை (திரு. முனுசாமிபிள்ளை) மந்திரியாக நியமித்தார்.

2. 15.11.1985, துக்ளக்: வைக்கம் சத்தியாகிரஹம் – சில உண்மைகள் என்ற கட்டுரையில் உண்மைகளை நிலைநிறுத்த வேண்டும் என்பதைவிட உண்மைகளைப் பொய்த்திரை போட்டு மூடிவிடும் அற்ப புத்தியும் விஷம நோக்கமுமே விரவிக் கிடக்கின்றன. ‘வைக்கம் போராட்ட வீரர்கள் என்னை நம்பிக் கொண்டிருப்பாராயின் ஒடிந்த நாணல் குச்சி மீது தாங்கள் சாய்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்’ என்று காந்தியார் குறிப்பிட்டுள்ளதிலிருந்தே வைக்கம் போராட்டத்தில் காந்தியாரின் பங்கு என்ன என்பது விளங்குமே.

வைக்கம் போராட்டத்துக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் நிராகரித்து விட்டார்.

காந்தியாரின் தீண்டாமைக் கொள்கை அடிப்படையில் காங்கிரஸ் நடத்திய வைக்கம் போராட்டம் என்று துக்ளக் கட்டுரையாளர் கூறுவது அவரது அறியாமையையே காட்டுவதாகும்.

3. வீரமணி சற்றும் தயங்காமல் ஒரு மிகப் பெரிய பொய்யை, அணடப் புளுகை அவிழ்த்து விட்டிருக்கிறார். தன்னுடைய பொய்யை நியாயப்படுத்த மகாத்மா காந்தியின் ஒரு கட்டுரையிலிருந்து ஒரு வாக்கியத்தை மட்டும் பிளந்து எடுத்து துக்ளக் வாசகர்களுக்கு முன்னால் வைத்திருக்கிறார். கட்டுரையின் மற்ற பகுதிகளை மறைத்திருக்கிறார். ஏனென்றால் அந்தப் பகுதியில் படித்தால் காந்திஜி வைக்கம் போராட்டத்தை எவ்வளவு ஆர்வத்துடன் ஆதரித்தார் என்பது தெளிவாகி விடும். மகாத்மாஜியின் சம்பந்தப்பட்ட கட்டுரை 19.2.1925-ல் யங் இந்தியா பத்திரிக்கையில் பிரசுரமாகியது…

“இயன்ற அளவில் விரைவில் வைக்கம் வர நான் ஆவலோடு இருக்கிறேன். அதற்கு அதிக நாள் ஆகாது என்று நம்புகிறேன். இதற்கிடையில் சத்தியாகிரகிகள் மனம் தளர்ந்துவிடக் கூடாது. அவர்கள் விரக்திக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. நான் படித்த தமிழ்ப் பாடங்களில் ஒரு பழமொழியாவது எனக்கு மிகப் பசுமையாக நினைவில் இருக்கிறது. ‘திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை’ என்பதே அது……

திருவிதாங்கூர் தர்பார், சத்தியாகிரகிகளைக் கைவிடலாம். நான் அவர்களைக் கைவிடலாம். ஆனால் கடவுள் அவர்களைக் கைவிட மாட்டார். என்னை அவர்கள் நம்பிக் கொண்டிருந்தால் ஒரு ஒடிந்த நாணல் குச்சி மீது சாய்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் உணரட்டும்….

வைக்கம் சத்தியாக்கிரகிகள் நடத்தும் போராட்டம் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத்துவத்திற்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல”

பொய்ப் பிரசாரத்திற்காக கழகத்துக்காரர்களால் எவ்வளவு தாழ்ந்த செயலில் ஈடுபட முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

4. வைக்கம் போராட்டத்துக்கு நிதி உதவி கேட்டு வைக்கப்பட்ட கோரிக்கையை காந்தியடிகள் நிராகரித்ததாகவும் வீரமணி கூறியிருக்கிறார். உண்மை என்ன?

“வைக்கம் சத்தியாகிரகத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கவும். நான் திருப்பித் தருகிறேன். மார்ச் மாதம் வைக்கம் போவதாக இருக்கிறேன் – காந்தி”

இப்படித் தந்தி மூலமாக ராஜாஜிக்கு 1925 பிப்ரவரியில் காந்திஜி செய்தி அனுப்பியிருக்கிறார்.

5. ‘ஹரிஜனப் பெண்கள் சொக்காய் போட ஆரம்பித்ததுதான் துணி விலை உயர்ந்ததற்குக் காரணம். ஹரிஜனங்கள் படிக்க ஆரம்பித்ததால்தான் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமாகி விட்டது…’ என்பதெல்லாம் பெரியாரின் அபிப்பிராயம் என்பது கருணாநிதியின் கருத்து. இதைக் கருணாநிதியிடமே கேட்டு வீரமணி தெரிந்து கொள்ளட்டுமே.

காந்திஜியின் கடிதங்களைச் சிதைத்து, அவற்றில் இருந்து ஒரு சில பகுதிகளை மட்டும் எடுத்துப் போட்டு தன்னுடைய பொய்யான வாதத்திற்கு ஆதாரம் தேட முனைந்தார் வீரமணி. இதில் எனக்கு வியப்பில்லை. பெரியார் செய்ததைத்தான் வீரமணியும் செய்திருக்கிறார்.

திராவிட நாடு கோரிக்கைக்கு ஜின்னாவின் பரிபூரண ஆதரவு உண்டு என்பதைக் காட்டுவதற்காகப் பெரியார் ஒருமுறை ஒரு காரியம் செய்தார். ஜின்னா எழுதிய கடிதத்திலிருந்து ஒரு சிறு பகுதியை மட்டும் வெளியிட்டு ஜின்னாவின் ஆதரவு பரிபூரணமாக இருப்பதாக ஆதாரம் காட்டினார் பெரியார். இதுபற்றி பத்திரிகைகளில் விமர்சனம் வரவும், ஜின்னா பார்த்தார். தன்னைப் பற்றி யாரும் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகத் தன்னுடைய முழுக் கடிதத்தையும் வெளியிட்டு விட்டார். இதனால் பெரியாரின் பாடு தர்மசங்கடமாகப் போய்விட்டது.

இதற்கு மேல் திராவிட இயக்கத்தவர் தாங்கமாட்டார்கள் என்பதால், வைக்கம் போராட்டம் குறித்த அலசலை முடித்துவிட்டு வரலாற்றின் அடுத்த கட்டத்திற்குப் போகலாம் என்று நினைக்கிறேன். பயன்படுத்தாத கருத்துக் கணைகள் பல உள்ளன. இருக்கட்டும்; எதிர்த்தரப்பு நண்பர்கள் இளைப்பாற வேண்டும்.

‘திமிரு’ என்ற திரைப்படத்தில் வார்டன் வடிவேலுவைக் குட்டுவதற்காக மாணவர்கள் வரிசையாக உட்கார்ந்திருப்பார்கள். அதைப் போலவே விஸ்வாமித்ரா போன்ற தமிழ் ஹிந்து வாசகர்களும் அணிவகுக்கிறார்கள். வடிவேலுவுக்காவது அவர் அழுவதைப் பார்க்க ஒரு சமுதாயமே தயாராக இருக்கிறது. திராவிடர் கழகத்திற்கு அப்படி எதுவுமே இல்லை.

திரு. வையாபுரி பின்னூட்டம் இட்டுள்ளார். அதில் கூறியிருப்பவை பற்றி நாம் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

மேற்கோள் மேடை:

திராவிடம் என்ற சொல் பழைய தமிழ் இலக்கியங்களில் இருக்கின்றதா என்று துருவித் துருவித் தோண்டினாலும் கிடைக்காது. அப்படி ஒரு சொல்லை பழங்காலத்திலும் சரி, இடைக்காலத்திலும் சரி எந்தக் கவிஞனும் கையாளவில்லை.

– பக். 23 / தமிழ்-தி.மு.க-கம்யூனிஸ்ட் / ச.செந்தில்நாதன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அவர் திருவாரூரில் பெரியார் பேசிய கூட்டங்களுக்கு தனுஷ்கோடியை அழைத்துப் போனார்; பெரியாரின் பிராமண எதிர்ப்புப் பிரசாரம் தனுஷ்கோடிக்கு மிகவும் பிடித்துப் போயிற்று…

ஒரு மாத காலத்திற்குப் பின் திருத்துறைப்பூண்டியில் பெரியார், ஈ.வி.கே. சம்பத், எம்.ஆர். ராதா, அண்ணாதுரை, நெடுஞ்செழியன் பேசிய கூட்டத்திற்கு தனுஷ்கோடி சென்றார். வேட்டி, பனியன், கிராப்பு சகிதம் போனார். கூட்டத்திற்குச் சென்று திரும்பும் போது அவருக்கு ஒரு பெரும் அனுபவம் கிடைத்தது. அதை அவரே கூறுகிறார்:

“அந்த ஊரில் சன்னாலுர் பக்கிரிசாமிபிள்ளை என்பவர் ‘டீக்கடை’ வைத்திருந்தார். அவர் பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர். அவருக்கு இரண்டு மனைவிகள். அவரது மனைவிகள், குழந்தைகள் அனைவருமே கறுப்பு உடைதான் அணிவார்கள். அந்த அளவு பெரியார் இயக்கத்தில் ஈடுபாடு உள்ளவர். நான், பெரியார், அம்பேத்கார் பேட்ஜை அணிந்து கொண்டு அவரது கடைக்குள் சென்று டீ குடிக்க அமர்ந்தேன். என்னுடைய தோற்றத்தில் இருந்தே நான் ஒரு அரிஜன் என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. அவ்வளவுதான் அங்கேயே என்னைப் புரட்டி எடுத்துவிட்டார். அவர் மட்டுமல்ல, கடையில் இருந்த அனைவருமே என்னை புரட்டி புரட்டி எடுத்தனர், நையப் புடைத்தனர்…

“நான் பெரியார் கட்சிக்காரன்” என்று கத்தினேன். “என்னடா பெரியார் கட்சி” என்று கேட்டு அடித்தார்.

-பக். 51,52 / ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம் / என். ராமகிருஷ்ணன் / சவுத் விஷன்

“நமது இயக்கம் சீர்திருத்த இயக்கம் அல்ல. அழிவு வேலை இயக்கம். இன்றைய நிலையில் சமத்துவத் தன்மைக்கு மத சம்பந்தமாக, கடவுள் சம்பந்தமாக, பொருளாதார அரசியல் சம்பந்தமாக அனுகூலமானவை இல்லை. ஆகவே எப்படிச் சீர்திருத்தம் செய்வீர்கள்… நாம் பொதுச் சேவைக்காரர்கள் அல்ல, புரட்சிக்காரர்கள். நமக்கு சீர்திருத்தக்காரர்களும் பொதுநலச் சேவைக்காரர்களும் பெரிய விரோதிகள்”.

– கோவை கூட்டத்தில் ஈ.வே.ரா. பேசியது / 30.01.1933

தமிழ் மண்ணின் வரலாறு தலித்துகளின் எழுச்சியைக் கொன்றழித்து ‘பிராமணரல்லாதார்–பிராமணர்’, ‘திராவிடம் –ஆர்யம்’ என்ற மாயையை ஏற்படுத்தி அதையே அரசியலாகவும் ஆட்சியாகவும் செய்து வருகின்றதென்பதே உண்மை.

– பக். 17 / புதிய கோடாங்கி / பிப்.2006 / மா. வேலுசாமி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார், காலச்சுவடு செப்-அக்.2000 இதழில் எழுதிய கட்டுரையில் ஈ.வே.ரா. குறித்த சந்தேகங்களை வெளிப்படுத்துகிறார்.

சாதி ஒழிப்புக் குறித்து பெரியார் பேசியவைகூட பிரக்ஞை பூர்வமாகப் பேசப்பட்டவையா என்ற ஐயம் உண்டாகிறது. தனது 85வது பிறந்த நாள் செய்தியாக அவர் சொன்னவற்றைப் பார்த்தால் நாம் வேறு விதமாக எண்ணத் தோன்றுகிறது. “நமக்கு சமுதாய எதிரிகளாக நான்கு கூட்டங்கள் இருக்கின்றன – பார்ப்பனர்கள், நம்மில் கீழ்த்தர மக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள்” எனப் பெரியார் அதில் குறிப்பட்டிருக்கிறார். “நமது லட்சியங்கள் நிறைவேறுவதற்கு இந்த நான்கு குழுவினரும் பெரும் கேடர்களாக இருக்கிறார்கள்” என்று கூறுகிறார்… ஒரு கூட்டத்தினர் நம்முடைய இழிநிலை பற்றியும் ஏன் தங்களுடைய இழிநிலை பற்றியும் கூடக் கவலை இல்லாமல் சோறு-சீலை-காசு ஆகிய மூன்றையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டவர்கள்” என்று தலித் மக்களைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார் பெரியார். இப்படிப் பேசுகிற ஒருத்தரின் மற்ற வார்த்தைகளை எப்படி நம்ப முடியும்?

நீதிக்கட்சியால் தாழ்த்தப்பட்டோருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ராவ் பகதூர் எம்.சி. ராஜா கூறுகிறார்.

நீதிக்கட்சி மூலம் சாதி இந்துக்கள் அதிகாரத்திற்கு வந்த பின்னர் தாழ்த்தப்பட்டோர் நலத்துறைகள் புறக்கணிக்கப்படுகின்றன. துறைகளே மூடப்படும் பீதியும் உள்ளது. நல்ல காலமாக நீதிக்கட்சியின் பதவிக்காலம் இரண்டாண்டுகளோடு முடிந்து விட்டது. கடவுள் நம்மைக் காப்பாற்றினார்.

தேவேந்திர குலவேளாளர் சார்பாக வெளியிடப்பட்ட தலித் சிந்தனை விவாதம் என்ற நூலில் சொல்லப்பட்டிருப்பது / பக்.33:

பெரியாருக்கு இந்தியக் கலாசாரத்தில் பிடிப்பு இல்லை. இங்கு பல விஷயங்களை அவர் கற்றுக் கொள்ளவில்லை. தனக்குச் சாதகமானவற்றைக் கூட. இங்கிருந்த மறைஞானிகள் முதலியோரை அவர் அறிந்திருக்கிவில்லை…

அவருடைய அணுகுமுறை குறுகலானது. இந்த தேசத்தின் பாரம்பரியத்தை (அறிவார்ந்த அணுகுமுறைகளைக்) கற்கவும் ஆராயவும் அவர் முற்படவில்லை…

இந்து மதத்தைப் பழிப்பது, சாதியை ஒழிப்பது, கடவுளை ஒழிப்பது என்ற கொள்கைகள் பல நூறு ஆண்டுகளாக திருவள்ளுவர் காலத்திலிருந்து முயன்று தோல்வி கண்ட கொள்கைகள். இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் வெற்றி பெற முடியாத இந்தியச் சூழலில் அவைகளை அழிக்கும் வீண் முயற்சியில் காலத்தை வீணாக்க நாங்கள் விரும்பவில்லை.

தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் என்ற நூலில் கோவை ஞானி எழுதுகிறார்:

திராவிடர் இயக்கம் பிராமணருக்கு எதிராக நிற்கும் போதும் ஆவேசம் கொள்ளும் போதும் சாதி இந்துக்களுக்குத் துணையாகச் செயல்படுகிறது. இந்தச் செயல்பாடு தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானதுதான்.

தலித்துகள் சார்பாகப் பேசப்பட்ட குரல்கள் இவை. இந்நேரம் நண்பர் வையாபுரியின் சந்தேகங்களுக்கு விடை கிடைத்திருக்கும் எனக் கருதுகிறேன். வாசகர் மன்றத்தில் இது தொடர்பான விஷயங்களைச் சொல்வதற்கு அவர் காரணமாக இருந்தார். ஆகவே மீண்டும் வையாபுரிக்கு வணக்கம்.

மேற்கோள் மேடை:

திராவிட சுயமரியாதை இயக்கத்தின் தலித்துகள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த நிலைப்பாடே ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டு கால அரசியல் சூழ்ச்சி எனவும் பிராமணரல்லாதாரின் முன்னெடுப்பை உறுதி செய்வதற்கான ராஜ தந்திரமே சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுக் கொள்கைகளும் கடவுள் எதிர்ப்பும் என்பதுமறியாமல் தலித்துகள் ஏமாந்து வந்துள்ளனர்.

– பக். 32, முதல் பகுதி, மண்டல் கமிஷன் அறிக்கை, 1980.நீதிக்கட்சியால் தாழ்த்தப்பட்டோருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ராவ் பகதூர் எம்.சி. ராஜா கூறுகிறார்.

நீதிக்கட்சி மூலம் சாதி இந்துக்கள் அதிகாரத்திற்கு வந்த பின்னர் தாழ்த்தப்பட்டோர் நலத்துறைகள் புறக்கணிக்கப்படுகின்றன. துறைகளே மூடப்படும் பீதியும் உள்ளது. நல்ல காலமாக நீதிக்கட்சியின் பதவிக்காலம் இரண்டாண்டுகளோடு முடிந்து விட்டது. கடவுள் நம்மைக் காப்பாற்றினார்.

தேவேந்திர குலவேளாளர் சார்பாக வெளியிடப்பட்ட தலித் சிந்தனை விவாதம் என்ற நூலில் சொல்லப்பட்டிருப்பது / பக்.33:

பெரியாருக்கு இந்தியக் கலாசாரத்தில் பிடிப்பு இல்லை. இங்கு பல விஷயங்களை அவர் கற்றுக் கொள்ளவில்லை. தனக்குச் சாதகமானவற்றைக் கூட. இங்கிருந்த மறைஞானிகள் முதலியோரை அவர் அறிந்திருக்கிவில்லை…

அவருடைய அணுகுமுறை குறுகலானது. இந்த தேசத்தின் பாரம்பரியத்தை (அறிவார்ந்த அணுகுமுறைகளைக்) கற்கவும் ஆராயவும் அவர் முற்படவில்லை…

இந்து மதத்தைப் பழிப்பது, சாதியை ஒழிப்பது, கடவுளை ஒழிப்பது என்ற கொள்கைகள் பல நூறு ஆண்டுகளாக திருவள்ளுவர் காலத்திலிருந்து முயன்று தோல்வி கண்ட கொள்கைகள். இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் வெற்றி பெற முடியாத இந்தியச் சூழலில் அவைகளை அழிக்கும் வீண் முயற்சியில் காலத்தை வீணாக்க நாங்கள் விரும்பவில்லை.

தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் என்ற நூலில் கோவை ஞானி எழுதுகிறார்:

திராவிடர் இயக்கம் பிராமணருக்கு எதிராக நிற்கும் போதும் ஆவேசம் கொள்ளும் போதும் சாதி இந்துக்களுக்குத் துணையாகச் செயல்படுகிறது. இந்தச் செயல்பாடு தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானதுதான்.

தலித்துகள் சார்பாகப் பேசப்பட்ட குரல்கள் இவை. இந்நேரம் நண்பர் வையாபுரியின் சந்தேகங்களுக்கு விடை கிடைத்திருக்கும் எனக் கருதுகிறேன். வாசகர் மன்றத்தில் இது தொடர்பான விஷயங்களைச் சொல்வதற்கு அவர் காரணமாக இருந்தார். ஆகவே மீண்டும் வையாபுரிக்கு வணக்கம்.

மேற்கோள் மேடை:

திராவிட சுயமரியாதை இயக்கத்தின் தலித்துகள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த நிலைப்பாடே ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டு கால அரசியல் சூழ்ச்சி எனவும் பிராமணரல்லாதாரின் முன்னெடுப்பை உறுதி செய்வதற்கான ராஜ தந்திரமே சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுக் கொள்கைகளும் கடவுள் எதிர்ப்பும் என்பதுமறியாமல் தலித்துகள் ஏமாந்து வந்துள்ளனர்.

– பக். 32, முதல் பகுதி, மண்டல் கமிஷன் அறிக்கை, 1980.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

நூற்றுக்கு அரை சதவீதம் கூட இல்லாத இசைவேளாளர்கள் முதலமைச்சராக இருக்கலாம். ஒரு சதவீதம்கூட இல்லாத சமுதயத்தினர் அமைச்சர்களாக இருக்கலாம். மூன்று சதவீத பிராமணர்களுக்கு மட்டும் அமைச்சர் பதவி இல்லை என்றால் அதுதான் சமூக நீதியா?

— முரசொலி அடியார் / நீரோட்டம் / 24. 05. 1980

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பி. ராமமூர்த்தி பதில் தருகிறார்.

“பஞ்சாபில் கதர் என்ற புரட்சி இயக்கத்தை நடத்திய பாய் பரமானந்த் பிராமணரல்ல. குஜராத்தைச் சேர்ந்த சர்தார் வல்லபாய் படேலும், அவரது சகோதரர் வித்தல்பாய் படேலும் பிராமணர்கள் அல்ல. காங்கிரஸ் பொருளாளரான சிவபிரசாத் குப்தா, பாபு பகவான் தாஸ், சம்பூர்ணானந்த், புருஷோத்தம் தாஸ் டாண்டன், பாபு ராஜேந்திர பிரசாத், சித்தரஞ்சன் தாஸ், சென் குப்தா ஆகிய பிராமணரல்லாதார் காங்கிரஸ் தலைவர்களாக இருந்தனர். லால் பகதூர் சாஸ்திரி பிராமணர் அல்ல. சாஸ்திரி என்பது அவர் காசி வித்யாபீடத்தில் படித்துப் பெற்ற பட்டம். சேத் கோவிந்த தாஸ், போலா பஸ்வான், மற்றும் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோரும் பிராமணர்கள் அல்ல. காங்கிரசை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மகாத்மா காந்தியும் பிராமணர் அல்ல. ”
– The freedom struggle and Dravidian Movement, Page 16 & 17.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

கிறித்தவம் குறித்து தமிழர் ஒருவர் எழுதிய பதில் இது:

“பசுக்களைக் கொன்று தின்னும் வழக்கத்தினால் தமிழ் மக்களாகிய நாங்கள் கிறிஸ்துவர்களை வெறுக்கிறோம். மலம் கழித்தபின் அவர்கள் நீர்கொண்டு சுத்தம் செய்வதில்லை. கடும் போதையுள்ள சாராயம் அருந்துகின்றனர். இறந்தவர்களின் ஆன்மா முக்தியடைவதற்கு ஏற்ப இறப்புச் சடங்குகளை செய்வதில்லை. திருமணங்களை அவர்கள் கொண்டாடுவதில்லை”.

புதுச்சேரியில் வாழ்ந்த (1709-1761) ஆனந்தரெங்கம் பிள்ளை எழுதிய நாட்குறிப்பில் ஆதிபுரீஸ்வரர் ஆலயத்தை கிறிஸ்தவர்கள் இடித்தது பற்றி விவரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் படித்துப் பார்க்கலாம். ஆனால் அந்தக் கொடுமையைப் படித்த பிறகு உங்கள் ரத்தத்தின் கொதிநிலை உயர்ந்தால் அதற்கு நான் காரணமல்ல.

பிரான்சு நாட்டைச் சேர்ந்த ழான் வெனான் பூஷே (Jean Venant Bouchet, 1655-1732) என்ற பாதிரியார் தென் இந்தியாவில் 40 வருடங்கள் சமயப் பிரசாரம் செய்தார். 1689ல் பாண்டிச்சேரிக்கு வந்த இவர் 1702 க்குள் 20,000 பேரை மதம் மாற்றியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தைப் பற்றி இவர் எழுதியுள்ளதைப் பார்ப்போம்:

காசியைவிட ரமணன்கோரைப் பற்றி என்னால் விவரமாகச் சொல்ல முடியும். இதை இந்தியர்கள் ராமேஸ்வரம் என்று அழைக்கின்றனர். ஆலயம் இருக்கும் தீவில் நான் பத்து நாட்கள் தங்கி இருந்தேன். இந்தத் தீவைப் பற்றி பல கதைகள் உள்ளன. அழகான மரங்கள் சூழ்ந்திருக்க, ஆலயம் தெற்குப் பகுதிக் கடற்கரையில் உள்ளது. பெருமையாகச் சொல்லப்படும் 300 கல்தூண்களை நான் பார்க்கவில்லை. இங்கே கடலில் குளிப்பதால் பாவங்கள் நீக்கப்படுகின்றன என்று இந்துக்கள் நம்புகிறார்கள், அதிலும் சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் ஏற்படும்போது நீராடுவது மிகவும் விசேஷமானது என்ற நம்பிக்கை இருக்கிறது.

பிசாசைக் கும்பிடுவதற்காக இத்தனை பேர் வருகிறார்களே என்று நான் வருத்தப்பட்டேன். ஆனால் இறைவன் ஒரு சிலரைத் தேர்ந்தெடுக்கிறான். அருகே உள்ள ஒரு கிராமத்தில் சர்ச் இருக்கிறது. அங்கே குழந்தைகளுக்கு நான் ஞானஸ்நானம் செய்வித்தேன்.

-பக். 19, 20 / Fr. Bouchet’s India / Francis X.doony / Satya Nilayam Publications.

ஒரு பக்கம் நேரடியான நடவடிக்கையில் கிறித்தவப் பாதிரியார்கள் இறங்கியபோது, இன்னொரு பக்கம் கிறித்தவத்தை முன்னிலைப்படுத்தாமல் இந்துக்களைப் பிளவுபடுத்தும் முயற்சி தொடங்கியது. இந்துக்களை மதமாற்றம் செய்தவர்கள் அனைவரும் கால்டுவெல்லின் தாயாதிகள். மற்றவர்கள் கூரையையும் சுவர்களையும் அசைக்க முயன்றபோது பிஷப் கால்டுவெல் அஸ்திவாரத்தில் கண் வைத்தார்.

 

இந்திய தேசிய ஒற்றுமைக்கு எதிராக ‘திராவிடம்’ என்ற சொல்லை பிஷப் கால்டுவெல் தூக்கிப் பிடித்தார். மொழிப்பற்று காரணமாக கால்டுவெல் தமிழகத்தில் சிறப்பிக்கப்படுகிறார். இருந்தாலும் அவருடைய நோக்கங்களை ஆராய வேண்டும்.

இது தொடர்பாக கணையாழி, ஏப்ரல் 1997 இதழில் முனைவர் க. முத்தையா எழுதிய ‘கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் அரசியல் பின்னணி’ என்ற கட்டுரையிலிருந்து சில பகுதிகளைக் கொடுக்கிறேன் (பக். 58/66):

பிரதேச வாதத்தை முக்கியப்படுத்தும் முயற்சியில் கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்) எட்கர் தஸ்டன் (தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்) கில்பர்ட் ஸ்லேட்டர் (இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு) ஆகியோர் இறங்கினர். இவர்களின் பிரதேச வாதத்திற்குத் தனியான அரசியற் காரணங்களும் உண்டு…
கால்டுவெல்லின் ஒப்பியல் அறிவு திராவிட மொழி ஆய்வுகளில் சில அரசியல் உள்நோக்கத்தோடே பயன்படுத்தப்பட்டுள்ளது…

அவர் வருகையின் நோக்கம் தென்னிந்திய மக்களை எப்படியாகிலும் சமய மாற்றம் செய்து அவர்களைக் கிறித்தவர்களாக்குவதேயாகும். அவருக்கு இடப்பட்ட சமயப் பணியில் வெற்றியும் கண்டார். தாம் இடையான்குடி கிராமம் வருவதற்கு முன்னர் ஆறாயிரமாக இருந்த திருநெல்வேலி கோட்டக் கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்ட காலத்தில் ஒரு இலட்சமாக்கிய பெருமை அவரையே சாரும்….

அவர் ஆய்வை ஊன்றிப் படிக்கும்போது தமிழின் தொன்மையை நிறுவுவதைவிட, தமிழர்களின் தனித்தன்மையை விளக்குவதைவிட சமஸ்கிருத வெறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு இந்துமத இகழ்ச்சி ஆகியனவற்றை விளக்குவதே தம் ஆய்வின் நோக்கமாகக் கொண்டுள்ளார். இதை வெளிப்படையாகச் சொல்லாமல் தம் ஆய்வில் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்…

இந்து சமயம், சமஸ்கிருதம் ஆகியவற்றின் மீது மாற்று எணணங்கள் மக்கள் மனதில் உருவாக்காதவரை தமிழர்களிடம் கிறித்தவத்தைப் பரப்ப இயலாது என்பதை நன்குணர்ந்த கால்டுவெல் வடவர் மீதான மாற்று எண்ணங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

இம் முயற்சியின் முதற்கட்டப் பணியாகத் ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கோட்பாட்டை உருவாக்குகிறார். அவருக்கு முன்பாகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கூட்டாகக் குறிக்கும் பொதுச் சொல்லாகத் திராவிடம் என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.

கால்டுவெல்லுக்கு முன் டி. நொபிலி இம்மொழிகளைத் தென்னிந்திய மொழிகள் என்று குறிப்பிட்டுள்ளார். ‘திராவிடம்’ என்ற சொல்லாட்சி இல்லை. கால்டுவெல் செய்த மிகப்பெரும் தவறு மொழியையும் இனத்தையும் சமமாக்கிவிட்டதுதான். இணக்கமான மொழிகளின் அடிப்படையில் இனங்களை வரையறுப்பது வரலாற்று விதிகளுக்கு முரணானது.

கால்டுவெல் வகையறாவைப் பற்றி விளங்கிக் கொள்ள அராபியப் பழங்கதை ஒன்றை சொல்கிறேன்.

பாலைவனக் குளிரில் சிக்காமல் பாதுகாப்பாகக் கூடாரத்தில் இருந்துதான் அந்த அராபியன். தனக்குக் கிடைத்த வசதிக்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டான் அவன். பிறகு தூங்கிப் போனான். நடு இரவில் தூக்கம் கலைந்து பார்த்தபோது, கூடாரத்திற்கு வெளியே கட்டப்பட்டிருந்த ஒட்டகம் உள்ளே மூக்கை நுழைத்திருப்பதை அவன் கண்டான். ‘அடடா, ஒட்டகத்திற்குக் குளிர் தாங்கவில்லை’ என்று பரிதாபப்பட்டு, தன் கால்களை மடக்கிக் கொண்டு ஒட்டகத்தின் முகம் உள்ளே வருவதற்கு இடம் கொடுத்தான். மீண்டும் தூக்கம்.

தூக்கத்தில் அவன் ஆழ்ந்திருந்தபோது, முகத்தில் தொடங்கி, கழுத்து, உடல், கால்கள் என்று எல்லாவற்றையும் உள்ளே கொண்டு வந்துவிட்டது ஒட்டகம், அடிக்கடி புரண்டு படுத்த அராபியன் மெதுவாக வெளியேற்றப்பட்டான்.

குளிர்காற்று தாக்கியபோது கண்விழித்த அராபியன் ஒட்டகம் உள்ளே இருப்பதைக் கண்டான்; ‘இறைவா, இது நியாயமா’ என்று கேட்டான். இவனுடைய இயலாமைக்கு இறைவன் என்ன செய்ய முடியும் என்பதாகக் கதை முடியும்.

கால்டுவெல் தொடங்கிவைத்த கருத்தாக்கம்தான் ஒட்டகம், தமிழ்ச் சமூகம்தான் அராபியன். இரவு முடிவதற்குள் ஒட்டகத்தை அதன் இருப்பிடத்திற்கு அனுப்ப வேண்டும்.

செய்வீர்களா?

இடஒதுக்கீடு பற்றி மறுமொழி எழுதியுள்ள நண்பர் அன்பழகனுக்காக ஒரு விளக்கம். இந்தத் தொடரின் காலத்தை 1977 ஆம் ஆண்டு என்ற எல்லையோடு நிறைவு செய்வதாக இருக்கிறேன். அன்பழகன் குறிப்பிடும் ‘மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு’, ‘உள் ஒதுக்கீடு’ ஆகியவை இந்தக் காலவரம்பிற்குள் வராது. இன்னொரு சமயத்தில் இன்னொரு இடத்தில் இதுபற்றிப் பார்க்கலாம்.

மேற்கோள் மேடை:

இந்தியாவில் தமது ஆட்சியை வலுப்படுத்தி வந்த ஆங்கில ஆட்சியாளர்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் கடைப்பிடித்த பிரித்தாளும் சூழ்ச்சி ஆரிய–திராவிட முரண்பாடு உருவாகவும் மிகப் பெரிய சமுதாய அரசியல் வடிவம் பெறவும் ஏதுவாய் அமைந்தது.

– க. கைலாசபதி



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

ramkumaran on March 17, 2009 at 8:56 am

புதுவை மட்டுமல்ல புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் உற்சவ சிலையை டச்சுகாரர்கள் களவாடி சென்று விட்டனர். ஆண்டவனிடம் அவர்கள் விளையாட்டு எடுபடவில்லை, எங்கிருந்தோ ஒரு புயல் வந்து அவர்களை தாக்கியது, அவர்கள் தப்பினால் போதும் என்று சுவாமி சிலையைக் கடலில் போட்டு விட்டு சென்று விட்டனர். இதனிடையில் திருச்செந்தூர் கோவிலில் வேறொரு சிலை வடித்து வழிபடத் துவங்கினர். சில ஆண்டுகள் கழித்து பக்தர் ஒருவர் கனவில் முருகன் தோன்றி தான் கடலில் இருப்பதாகவும், கடலில் எந்த இடத்தில் எலுமிசசை பழம் மிதந்து அதன் மேல் ஒரு பருந்து வட்டமிடுகிறதோ அங்கு தன்னை கண்டுப்பிடிக்கலாம் என்று சொல்லி மறைந்தார். கனவில் கூறியபடியே முருகன் சிலையை கண்டெடுத்தனர். இன்றளவும் அந்த சிலை ஜயந்திநாதர் என்ற பெயரில் திருச்செந்தூர் கோவிலில் வணங்கப் படுகிறது. சிலையில் கடலினால் ஏற்பட்ட அரிப்பை இன்றும் நாம் காணலாம். மாசி மாதம் மற்றும் ஆனி மாதம் எட்டாம் திருநாளில் ஜவந்திநாதர் உலா வருவார். இதை தவிர திரு. வேணுகோபாலன் எழுதிய திருவரங்கன் உலா மற்றும் மதுராவிஜயம் என்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதைகள், திருவரங்கத்து மக்கள் மாலிக்காபூரின் படைகளிடமிருந்து ரெங்கநாதர் சிலையை காக்கச் செய்த முயற்சிகளை விவரிக்கின்றது.

 

அரச. மணிமாறன் எழுதிய புதுவைமுரசு தமிழ்க்கனல் க. இராமகிருட்டிணர் என்ற புத்தகத்தைப் பார்ப்போம் (பக். 39, 40):

கடந்த 1908ம் ஆண்டில் இருதய ஆண்டவர் கோவில் கட்டப்பட்டபோது உயர் ஜாதிக் கிறித்தவருக்கும் தாழ்த்தப்பட்டவருக்கும் இடையே கலகம் மூண்டது. அரசாங்கம் தலையிட்டு இருதய ஆண்டவர் ஆலயம் மூடப்பட்டது. பழைய கோவிலிலும் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமை மறுக்கப்பட்டது. மோதலில் பல தாழ்த்தப்பட்டவர்கள் சிறை சென்றனர்; சிலர் புராட்டஸ்டன்டுகளாக மாறினர். கிளர்ச்சி வலுத்து அதிமேற்றிராசனம் என்ற பழைய கோவிலும் மூடப்பட்டது. ஆறு மாதங்கள் இரண்டு கோவில்களும் பூட்டப்பட்டிருந்தன. பிறகு பாதிரி ஒருவர் விசாரணை செய்து தாழ்த்தப்பட்டவர் சில இடங்களில் மட்டும் வரலாம் என்று தீர்ப்பளித்தார். பிறகு உயர் சாதியினருக்குத் தேவைப்படாத நேரத்தில் தாழ்த்தப்பட்டவர் கோவிலின் நடுக்கூடத்திற்கு வரலாம் என்று நிச்சயிக்கப்பட்டது.

– புதுவைமுரசு, முழக்கம் 1, ஓச்சு 5, 08.12.1930



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அன்று பிராமணர்களுக்கு சலுகைகள் காட்டப்பட்டனவா? ஆம். ஆனால் ஏன்? இப்படி ஒரு வரியை ஆவேசமாக பதிவுசெய்பவர்கள் ஏன் என்ற வினாவை நோக்கியல்லவா சென்றிருக்கவேண்டும்? அப்படிச் சென்றிருந்தால் அவர்கள் மார்க்ஸிய நோக்கு சார்ந்த வரலாற்றாய்வின் பிதாமகரான டி.டி.கோஸாம்பியைச் சென்று சேர்ந்திருப்பார்கள். இந்தியா முழுக்க மன்னர்கள் கோயில்கள் கட்டி அங்கே பிராமணர்களுக்கு நிலமும் ஊர்களும் அளித்து குடியேற்றுவது ஒரு வழக்கமாகவே இருந்துள்ளது. அது ஒரு முக்கியமான அரசியல்-பொருளியல் நடவடிக்கை என்கிறார் கோஸாம்பி.

படையெடுப்புகள் மற்றும் அடக்குமுறைகள்மூலம் உருவாக்கமுடியாத அதிகாரத்தை கோயில்கள் மற்றும் பிராமணர்கள் மூலம் எளிதில் உருவாக்கலாம் என அன்றைய மன்னர்கள் அறிந்திருந்தார்கள். தனக்கு வரிவசூலுக்கு உதவாத, தங்கள் ஆதிக்கத்துக்கு முழுக்க ஒத்துவராத, தங்களுக்கு கீழே அமையாத மக்கள் வாழும் நிலத்தை பிராமணர்களுக்கு வழங்கி அவர்கள் அங்கே வேரூன்றிய பின் மெல்ல அங்கே கோயில்கள் கட்டுவது இந்திய மன்னர்களின் வழக்கம் என்கிறார் கோஸாம்பி. நிலம் வழங்குவது என்பது நிலத்திலிருந்துவரும் வரிவசூலை வழங்குவதுதான். அன்று எவருக்கும் நிலத்தின்மேல் முற்றுரிமை என்பது இல்லை.

கோஸாம்பியின் பார்வையில், அன்று மக்களுக்கு தேவையாக இருந்த மூன்று ஞானங்கள் பிராமணர்களிடம் இருந்தன. ஒன்று மதஞானம். இதைக்கொண்டு பிராமணர்கள் வெவ்வேறு வழிபாட்டு வழக்கம் கொண்ட மக்களை ஒன்றாக திரட்டினார்கள். இரண்டு, சோதிட ஞானம். இது விவசாயத்துக்குரிய வானிலைஞானமாகவும் அன்றாடவாழ்க்கைக்கான நாளறிவாகவும் அவர்களுக்கு உதவியது. மூன்று தர்மசாஸ்திரங்கள் குறித்த ஞானம். இது பல இனக்குழுக்களுக்கு நடுவே பொதுவான அறங்களை உருவாக்க உதவியது.

பழங்காலம் முதலே பிராமணர் மீது மக்களுக்கிருந்த மரியாதையை நாம் சங்க இலக்கியங்களில் காணலாம். அவர்கள் சொன்னால் போர்கள் கூட சமாதானம் ஆயின. அவர்களை ஆறலைக்கள்வர்கள்கூட கொல்வதில்லை. அந்த மதிப்பை பயன்படுத்தி மன்னராட்சிக்குள் வராத இனக்குழுக்களை உள்ளே இழுப்பதே பெருமன்னர்கள் பிராமணர்களுக்கு ஆதரவு கொடுத்தமைக்குக் காரணம். பிராமணர்கள் பதிலுக்கு தாங்கள் செல்லுமிடங்களில் இனக்குழுக்கள் நடுவே பூசல்களை இல்லாமலாக்கி அவர்களை ஒன்றாக தொகுத்து மன்னர்களுக்கு விசுவாசமானவர்களாக ஆக்கி வரிவசூலை சாத்தியமாக்கினார்கள்.

சோழர் காலகட்டத்தில் தொடர்ச்சியாக புதிய வேளாண்நிலங்கள் உருவாக்கப்பட்டன. இன்றைய தமிழகத்தின் நஞ்சைநிலங்களில் பெரும்பகுதி அப்போது உருவானதே. அவ்வாறு நிலங்கள் ஊர்களாக ஆனபோது அங்கே கோயில்களை நிறுவி, அக்கோயில்கள் அனைத்திலும் ஒரேவகையான ஆகமமுறை பூசைகளை அமைத்து ,அவற்றை ஆற்ற பிராமணர்களை குடியமர்த்தி ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள இறுக்கமான ஒரு அமைப்பை ராஜராஜன் உருவாக்கினார். அவரது ஆட்சிக்கீழ் இருந்த ஆலயங்கள் அனைத்திலும் மாறுபட்ட பூசைமுறைகள் தடைசெய்யப்பட்டு ஆகமமுறை கட்டாயமாக்கப்பட்டது. இந்த ஆதிக்கக் கட்டமைப்புக்கு பிராமணர் தேவைப்பட்டார்கள். ஆகவே அவர்கள் பேணப்பட்டு சலுகையளிக்கப்பட்டார்கள்.

இந்தியா பல்வேறு இனங்களும் இனக்குழுக்களும் அரசுகளும் கொண்ட நிலவெளியாக இருந்தது. பரஸ்பர ஐயங்களும் போர்களும் நிகழ்ந்த மண். அவர்கள் நடுவே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் உருவாக்கக்கூடிய இன்னொரு தரப்புக்கான தேவை இருந்தது. பேரரசுகளை உருவாக்கக்கூடிய மன்னர்களுக்கு அத்தேவை இருந்தது போலவே குட்டிக்குட்டி ஆட்சியாளர்களுக்கும் இனக்குழு தலைவர்களுக்கும்கூட அந்த தேவை இருந்தது. அதைச்செய்யக்கூடியவர்களாக வரலாற்றின் ஆரம்பத்திலேயே பிராமணர்கள் உருவாகி வந்தார்கள். தங்களை அவர்கள் வன்முறை அற்றவர்களாகவும் முழுக்கமுழுக்க கல்விசார்ந்தவர்களாகவும் உருவாக்கிக்கொண்டிருந்தது அதற்குக் காரணமாக அமைந்தது.

ஒன்றை நினைவில் வையுங்கள் ஒரு சமூகமே தங்களை கொண்டாடும்படிச் செய்து அச்சமூகத்தை பற்பல நூற்றாண்டுகளாக தங்களுக்கு அடிமையாக இருக்கச்செய்து சுரண்டிக்கொண்டே இருக்கும் அளவுக்கு பிராமணர்கள் இந்திரஜாலம் தெரிந்த மாயாவிகள் அல்ல. அப்படி அவர்கள் தலைமுறை தலைமுறையாகச் சுரண்டவும் அதை உணராமல் கும்பிட்டு காணிக்கை கொடுத்துக்கொண்டே இருக்கும் அளவுக்கு நம் முன்னோர்கள் மண்ணாந்தைகளும் அல்ல.

கிட்டத்தட்ட பிராமணர்கள் ஆற்றிய அதே பணியை,[சமரசம் தூது] அவர்களுக்கு நிகராகவே பௌத்த சமண மதத்துறவிகளும் ஆற்றியிருக்கிறார்கள். அவர்களையும் மன்னர்கள் பேணியிருக்கிறார்கள். அம்மதங்களுக்கு பெரும் நிதிகளும் சலுகைகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த அகிம்சைமதங்கள் பேரரசுகளை உருவாக்க போதுமான அளவுக்கு உதவாதவை என கண்டடையப்பட்டன. அம்மதங்களால் பல்வேறுநாட்டார் வழிபாட்டுமுறைகளை உள்ளிழுக்க முடியவில்லை என்பதும் கண்டடையப்பட்டது. ஆகவே அவற்றுக்கான ஆதரவு குறைந்து பிராமணர்கள் மீண்டும் ஆதரவு பெற்றார்கள். அவர்கள் அத்தனை இனக்குழுக்களையும் உள்ளிழுத்து சமூகத்தை தொகுத்து பேரரசுகளுக்கு அளித்தனர். அதற்கு புராணமரபும் வழிபாட்டுமரபும் உதவியது.

அதாவது பிராமணர்கள் பேணப்பட்டது நம் முன்னோர்களின் ஏமாளித்தனத்தால் அல்ல, அவர்களுக்கு பிராமணர்களின் சேவை தேவையாக இருந்தமையால்தான். அந்த மனநிலையும் பிராமணர்களின் சேவையும் இன்றும்கூட அப்படியே நீடிக்கிறது. இத்தனை பிராமண எதிர்ப்பரசியல் வந்தும்கூட இன்றும் பெரும் வணிகர்களும் அரசியல்வாதிகளும் பிராமணர்களையே முழுமையாக நம்பி தூதர்களாகவும் சமசரக்காரர்களாகவும் பயன்படுத்துகிறார்கள். இதில் பிராமண எதிர்ப்பரசியல் நடத்தும் அரசியல்கட்சிகளும் தலைவர்களுமே முதலிடம் வகிக்கிறார்கள், விசாரித்துப்பாருங்கள். இந்த சமூகத்தேவை அன்று இன்னும் பெரிதாக இருந்திருக்கும். அன்று சைவ, வைணவ மதநம்பிக்கை இன்னும் வலுவானதாகவும் மக்களை கட்டுப்படுத்தி இணைக்கக் கூடியதாகவும் இருந்தது. ஆகவே ராஜராஜன் போன்றவர்கள் பிராமணர்களை போற்றினார்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard