New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஈவெ.ராமசாமி நாயக்கர் செய்தது மிகவும் மட/முட்டாள் தனமானது -உச்சநீதி மன்றம்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
ஈவெ.ராமசாமி நாயக்கர் செய்தது மிகவும் மட/முட்டாள் தனமானது -உச்சநீதி மன்றம்
Permalink  
 


பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

செப்ரெம்பர் 11, 2010

பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

ராமசாமி நாயக்கர் பிள்ளையார் உடைப்பு 1956

ராமசாமி நாயக்கர் பிள்ளையார் உடைப்பு 1953

ஐந்தாண்டுகள் போராடிய வீரபத்ரன் செட்டியார்:  ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை மட்டுமல்லாது, மாஜிஸ்ட்ரேட், உயர்நீதிமன்றம் என்று அலைய வைத்து, உயர்நீதி மன்றத்திற்கு செல்லவைத்த, கீழ்கோர்ட்டார், மெத்தப் படித்த நீதிபதிகள் முதலியோரையும் எதிர்த்து, உச்சநீதி மன்றம் வரை சென்று நீதிபதிகளின் போலித்தனம் மற்றும் ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரின் முகத்திரையை அன்றே கிழித்துள்ளார். நீதிமன்றங்கள் என்றால் எங்களுக்கு பயமா, நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா என்றெல்லாம் வாய் சவடால் விடும் இந்த வீரர்கலின் தலைவர், கோர்ட்டிற்கு செல்லாமலே ஓடி ஒளிந்து கொண்டார். அவ்வறாக சொல்வதே கோர்ட்டுதான்!

Equivalent citations: 1958 AIR 1032, 1959 SCR 1211

Bench: Sinha, B P.

PETITIONER:

S. VEERABADRAN CHETTIAR

Vs.

RESPONDENT:

E. V. RAMASWAMI NAICKER & OTHERS

DATE OF JUDGMENT:

25/08/1958

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

IMAM, SYED JAFFER

WANCHOO, K.N.

CITATION:

1958 AIR 1032 1959 SCR 1211

ACT:

Insult to Religion-Ingredients of offence–Interpretation of statute-Duty of Court-Indian Penal Code (Act XLV of 1860), s. 295.

Idol breaker, iconoclast became an idol to be protected

Idol breaker, iconoclast became an idol to be protected

ராமசாமி நாயக்கர் (எ) பெரியார் ஓடி ஒளிந்ததைக் கண்டு உச்சநீதி மன்றமே வருத்தப்பட்டதாம்! இதுதான் அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. கோர்ட் சொல்வது “No one appeared for the respondents”! பிரதிவாதிகளின் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை! மற்றொரு இடத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “It is regrettable that the respondents have remained ex parts in this Court.”!! “குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வராமலேயே இருந்தது வருத்ததிற்கு உகந்தது”, என்று சொல்வது உச்சநீதி மன்றத்தின் நீதிபதி!

EVR statue at Vaikam 31-01-1994

EVR statue at Vaikam 31-01-1994

ராமசாமி நாயக்கர் (எ) பெரியார் பிள்ளையார் விக்கிரகத்தை உடைத்தது, வழக்குப் போடப்பட்டது: எஸ். வீரபத்ரன் செட்டியார் என்பவர் இந்துமதத்திற்கு எதிராக பேசியும் எழுதிதியும் வருவதாக ராமசாமி நாயக்கர் மற்ற மூன்று நபர்கள் மீது ஜூன் 5, 1953 அன்று புகார் கொடுத்தார். அதுமட்டுமல்லாது மே 27, 1953 அன்று திருச்சி டவுன்ஹாலில் பிள்ளையார் சிலையை உடைப்பதாக சொல்லியிருப்பதால், சைவப்பிரிவைச் சேர்ந்த இந்து சமூகத்தினரது மனங்களில் பீதி, வருத்தம் மற்றும் உணர்ச்சிகள் கிளம்பியுள்ளன. அதுமட்டுமல்லாது, அன்று மாலை 5.30 அளவில் டவுன்ஹால் மைதானத்தில் ஒரு விக்கிரத்தை உடைத்து, அவதூறாக பேசியும் உள்ளார் என்று புகாரில் சொல்லப்பட்டது. இவ்வாறு பேசியது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 295 மற்றும் 295ஆ கீழ், மத உணர்வுகளைப் புண்படும் வகையில் உள்ளது என்ரு சொல்லப்பட்டது. மாஜிஸ்ட்ரேட் சர்கிள் இன்ஸ்பெக்டரை குற்றவியல் நடத்தை விதி பிரிவு 202ன் கீழ் விசாரிக்க ஆணையிட்டார். ஜூன் 26, 1953 அன்று, அறிக்கைக் கொடுக்க மாஜிஸ்டிரேட், “மண்ணால் செய்யப்பட்ட கணேசனுடைய விக்கிரம் புனிதமானதாகாது. அது கணேசனுடையது போன்று இருப்பதனால் அது புனிதமான வஸ்து ஆகாது. மக்களால் விடப்படுகின்ற விக்கிரங்கள் வழிபாட்டிற்கு ஆகாது. ஏனெனில் அத்தகைய விக்கிரங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆகவே ஒரு மனிதன் அத்தகைய விடப்பட்ட விக்கிரத்துடன் மோதினால் குற்றாமாக்சது. ஆகையால் இது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 295 கீழ் குற்றாமாகாது”

செட்டியாரை அலையவிட்ட நயக்கருக்கு சாதகமான கீழ் கோர்ட்டார்: “குற்றஞ்ச்சாட்டப் பட்டவர் வேண்டுமென்றே, கெட்ட எண்ணத்துடன் மத உணர்வுகளைப் புண்படும் வகையில் பேசியிருந்தால், சந்தேகமில்லாமல், அது பிரிவு 295ஆ கீழ் குற்றம் தான்.  ஆனால், அத்தகைய புகார் கொடுக்க வேண்டுமானால், அரசாங்கத்தின் அனுமதி தேவைப் படுகிறது. அத்தகைய தகுந்த அனுமதி இல்லாததனால், இதற்கு மேல் இவ்வழக்கில் குற்றவியல் நடத்தை விதி பிரிவு 203ன் கீழ் தொடர ஆதாரம் இல்லை என்ற காரணத்தால் நிராகரிக்கிறேன்”

இதனால் வீரபத்ரன் செட்டியார், தனது புகாரை செஸன்ஸ் கோர்டிற்கு ஜூலை 9, 1953 அன்று எடுத்துச் செல்கிறார். ஆனால், ஜனவரி 12, 1954 அன்று நீதிபதி, வழக்கைத் தள்ளுபடி செய்கிறார், “மாஜிஸ்ட்ரேட் சொல்லியபடியே, அத்தகைய நடத்தைகள் குற்றாமாகாது என்று ஒப்புக்க் கொள்கிறேன். குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒரு பொதுகூட்டத்தை ஏற்பாடு செய்து, உருவ வழிபாட்டிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து, மண்ணல் செய்யப் பட்ட கடவுள் கணேசனுடைய உருவத்தை உடைத்துள்ளார். அந்த உருவம் குற்றஞ்சாட்டப்பட்டவருடைய சொந்தப் பொருளாகும், ஆகையால் அது மற்றவர்களால் புனிதமாகக் கருதப்படும் பொருளாகாது. அதே மாதிரி, நானும், ஒரு நம்பிக்கையில்லாதவன், இம்மாதிரி நம்பிக்கையுள்ளவனை புண்படுத்த முடியும்ன் என்று நினைக்கவில்லை. ஆகையால் அது பிரிவு 295ஆ கீழ் குற்றம் தான் என பெய்பிக்க வேண்டிய கூறுகளுக்கு ஏற்றபடி இல்லை”.

இதனால், செட்டியார் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் இங்கேயும் குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் மீது குற்றத்தை மெய்ப்பிக்க போதியா ஆதாரங்கள் காட்டப்படவில்லை, என்று சில வழக்கு உதாரணங்கள் மூலம் எடுத்துக் காட்டினார்.

(1) (1887) I.L.R. 10 All. 150.

(2) (1890) I.L.R. 117 Cal. 852.

உயர்நீதி மன்ற நீதிபதியும் அலைய விட்டார்; செட்டியார் இதற்கு எதிராக அப்பீல் / முறையீடு செய்ய தேவையான சான்றிதழ் கொடுக்குமாறு வேண்டிக் கொண்டார். ஆனால், இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு Art. 134(1)(c) கீழ், மேல்முறையீடு செல்வதற்கான வழக்கு இல்லை என்று மறுத்து விட்டார். ஆகையால், அவர் மறுபடியும் நீதிமன்றத்திற்கு சென்று, தேவையான அனுமதி பெற்றார். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வராமலேயே இருந்தது வருத்ததிற்கு உகந்தது [It is regrettable that the respondents have remained ex parts in this Court.].

தீர்ப்பில் பதிவாகியுள்ள உச்சநீதி மன்றத்தின் கருத்து: இந்த வழக்கில், புண்படுத்தக்கூடிய செயல் நடந்துள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்னவென்றால், கடவுள் கணேசனுடைய உருவத்தை உடைத்துள்ளார்கள் என்பதாகும். அத்தாட்சி என்பதைவிட, இந்துக்களுக்கு கணேசனுடைய உருவம் அல்லது அம்மாதிரி, வழிபடுவதற்கு என்று ஸ்தாபிக்கப்பட்டாலும் இல்லையென்றாலும் புனிதமானது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். கீழ்கோர்ட்டின் நீதிபதிகள் நிச்சயமாக சரத்தில் உள்ள வார்த்தைகளுக்கு மிகவும் குறுகிய அர்த்ததைக் கொண்டு அதற்கேற்றபடியான விளக்கத்தை அளித்துள்ளனர். அதாவது கோவிலில் உள்ள விக்கிரங்கள் அல்லது ஊர்வலத்தில், விழாக்களில் எடுத்துச் செல்லப்படகுடியவைதான், இந்த விளக்கத்தில் வரும் என்பது போல பொருள் கொண்டுள்ளர்கள். அத்தகைய குறுகிய விளக்கம் அளிக்க அச்சரத்தில், அத்தகைய வரையரைகள் கொடுக்கப்படவில்லை. ஆகையால், மெத்தப்படித்த நீதிபதி அத்தகைய தவறான வேலையில் பொருட்கொண்டுள்ளார்.

பைபிள், குரான், குரு கிரந்த சாஹப் முதலியவற்றை எரித்தால் என்னாகும்? புனிதமான புத்தகம், பைபிள், குரான், குரு கிரந்த சாஹப் முதலியவையெல்லாம் இந்த வார்த்தைகளில் வரும். ஆக கீழ் கோர்ட்டாரின் திரிபுவாத விளக்கத்தின்படி பார்த்தால் அல்லது அவர்கள் சொன்னது சரியென்றால், அத்தகைய புனித நூல்களை அவமதிப்பு செய்தால், சேதப்படுத்தினால் அல்லது எரித்தால் இந்த சட்டப் பிரிவிலிலேயே வராது என்றாகும். ஆனால், எங்களுடைய கருத்தின்படி, அத்தகைய குறுகிய விளக்கம் மற்றும் அந்த வார்த்தைகளுக்கு அத்தகைய விளக்கத்தை வலியப் பெறுவது ஏற்படுத்தப்பட்டுள்ள எல்லா சட்டமுறைகளும் விரோதமானது ஆகும்.

புனிதமான எந்த வஸ்துவும் அவமதிக்கப்படக்கூடாது, சேதப்படக்கூடாது: எந்த வஸ்து, எவ்வளவு அற்பமேயாகிலும் அல்லது விலையில் மிகவும் குறைவானதாக இருந்தாலும், மற்றவர் அது புனிதமானது என்று மதித்தால், இந்த சட்டப்பிரிவில் வரும். அவமதிப்பவர்களை சட்டம் கவனித்துக் கொள்ளும். ஆகையால் அந்த புனிதமானதாக மதிக்கப்படும் வஸ்து, வழிபாட்டிற்குட்பட்டிருக்க வேண்டும் என்ற நிலை தேவையில்லை. ஆகையால் கீழ் கோர்ட்டார்கள் பலத்ரப்பட்ட மக்களின் மத உணர்வுகள், நம்பிக்கைகளை மதிக்காமல், விஷயத்தை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கொடுத்த புகாரை அணுகியுள்ளர்கள். இந்த பிரிவானது பலதரப்பட்ட மத நம்பிக்கையாளர்களின்  மத உணர்வுகள், நம்பிக்கைகளை மதிக்க ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகும். ஆகவே, கோர்ட்டாரே அத்தகைய நம்பிக்கைகளை ஏற்கிறார்களோ இல்லையோ, இத்தகைய விஷயங்களில் மற்றவர்களின் உணர்ச்சிகளை நம்பிக்கைகளை நிச்சயமாக மதிக்க வேண்டும். அத்தகைய விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

பெரியார் செய்தது மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது: அகையால், நிச்சயமசக கீழ் கோர்ட்டார்கள் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 295ல் உள்ள முக்கியமான வார்த்தைகளை தவறாகத்தான் விளக்கஙம் கொடுத்துள்ளார்கள். இருப்பினும் ஐந்தாண்டுகள் ஆகிவிட்டபடியினால், கீழ் கோர்ர்ட்டாருடன் மாறுபட்டாலும், வழக்கின் புகாரை விசாரிக்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நடத்தை உண்மையானால், மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது, இருப்பினும், இவ்வழக்கு காலந்தாழ்ந்து விட்டபடியால், விசாரிக்க ஆணையிடவில்லை. இருப்பினும் மறுபடியும் அத்தகைய முட்டாள்தனமன நடத்தை சமூகத்தின் எந்த பிரிவினராவது செய்ய முற்பட்டால், நிச்சயமாக சட்டம் மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்படித்த அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதார்கு சட்டப்பிரிவுகள் பொறுந்தும் என்று நாங்கள் விளக்கம் கொடுத்துள்ளோம். அதன்படியே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை கடுமையாக விமர்சித்ததற்காக ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? உச்சநீதி மன்றம் இவ்வாறு கடுமையாக ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை விமர்சனம் செய்ததற்கு, திட்டியதற்கு மேல்முறையீடு செய்யவில்லையே? அப்படியென்றால், “மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது”, என்றதை ஒப்புக்க்கொள்கிறார்களா? இன்றைக்கு திகவினர், பகுத்தறிவு புல்லர்கள், நாத்திக நொண்டிகள், உண்மைகளை மறைத்து எப்படி பொய்களைப் பரப்புகின்றனர் என்பதனை, இந்த உச்சநீதி மன்ற தீர்ப்பிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

வேதபிரகாஷ்

11-09-2010



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: ஈவெ.ராமசாமி நாயக்கர் செய்தது மிகவும் மட/முட்டாள் தனமானது -உச்சநீதி மன்றம்
Permalink  
 


soothiran.JPG 

Parpan1

Parpan2

childmarriage.JPG



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

https://aasifblogs.wordpress.com/



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அதிகப் பிரசங்கித்தனம்; இவர்தான் இலங்கை ஜெயராஜ்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வே.தூயவன்

ஒரு நல்ல நூலுக்கு அடையாளம் அதை காலம் அங்கீகரிக்க வேண்டும். அப்படி காலம் அங்கீகரித்த நூல் திருக்குறள் என உயர்த்திச் சொல்லிவிட்டு அதையே குழி தோண்டிப் புதைத்தால் எப்படி இருக்கும்?

அவிநாசி சிறீ செந்தூர் மகாலில் 3 நாள்கள் நடத்தப்பட்ட திருக்குறள் திருவிழாவில் பேச்சாளர் இலங்கை ஜெயராஜ் சொன்ன விசயங்கள் அப்படித்தான் இருந்தன! ஆக.2இல் திருக்குறள் காட்டும் அறம், ஆக.3இல் திருக்குறள் காட்டும் பொருள், ஆக.4இல் திருக்குறள் காட்டும் இன்பம் என்ற தலைப்புகள் பல தரப்பினரையும் வசீகரித்து சொற்பொழிவை கேட்கத் தூண்டியது. சிறப்பு பேச்சாளர் பற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டா ளர்களும், முன்னிலை வகித்தவர்களும் வர் ணித்த வர்ணனைகள் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

முதல் நாள் பேச்சாளர் இலங்கை ஜெயராஜ் தனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்புக்குள் நுழையவே அன்றைய நேரம் முடிந்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக மொத்த நிகழ்வும் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழ் மொழி, அதன் இலக்கியச் செல்வ செழிப்பு பற்றியெல்லாம் பெருமைப்படத்தக்க விதத்தில் எடுத்துரைத்ததை நிச்சயம் பாராட்ட லாம், ஆனால் அந்த சிறப்பை, அறம் பற்றிய வள்ளுவத்தின் சாரத்தை திரித்துக் கூறியதன் மூலம் அவரே வீழ்த்தி விட்டார்.

தலைப்புவாரி பேசாததற்கான காரணத்தை  இரண்டாவது நாளில் ஜெயராஜ் சொன்னார். திருக்குறளின் அடிப்படையைப் புரிந்து கொள் ளாமல் தனித்தனியாக அறம், பொருள், இன்பம் பற்றி பேசுவது பயனில்லை என்றார்.

வள்ளுவர் திருக்குறளை இயற்றியதே அறத்தின் அடிப்படையில்தான் என்று கூறி, வள்ளுவத்தை உணர்ந்து கொள்வதற்கு விரிவான களம் அமைத்தார். இயற்கை, அதன் அடிப்படையில் ஓசை, ஓசையின் அடிப்படையில் உருவான மொழி, குறிப்பாக தமிழ் மொழி! எழுத்து, சொல், அதன் பொருள், ஒவ்வொன் றையும் கடந்து உணர்வாக மாறுவதுதான் முக்கியம் என சுவைபட விளக்கினார்.

ஆக, அறம் என்றால் என்ன என்ற எதிர் பார்ப்பை மென்மேலும் தூண்டிக் கொண்டே இருந்தது அந்தப் பேச்சு. களம் அமைத்துவிட்டு விதைக்கத் தொடங் கினார் பேச்சாளர். "அறம் என்றும், தர்மம் என்றும் சொல்லப்படுவதை ஒரு பொருளாக விளக்க முடியாது. நால் வகை வேதங்களில் இருந்து ஸ்மிருதி உருவாகியது. மனுஸ்மிருதி கூறிய வர்ணாஸ்ரமம் என்பதில் இருந்துதான் அறம் என்பதை வள்ளுவர் எடுத்துரைத்தார் (!?)", என்று ஒரே போடாகப் போட்டார் இலங்கை ஜெயராஜ்! அப்படிச் சொல்லிவிட்டு, ஏனோ முற்போக்காளர்கள் வர்ணாஸ்ரமத்தை எதிர்க் கின்றனர் என்றும் குறைபட்டுக் கொண்டார். இதனைக் குவளைப் பாலில் கலந்த ஒரு துளி விஷம் என்பதா அல்லது முழுக் குவளை விஷம் என்பதா? அறம் இரு வகைப்படும் எனச் சொல்லி தனி மனித அறம், சமுதாய அறம் என இரண்டையும் பற்றி விளக்கப் புகுந்தார். தனி மனித அறம் என்பது ஒரு மனிதனின் பருவ அடிப்படையில் நான்கு பிரிவாகப் பிரித்து விளக்கி அதற்குரிய இயல்புகளை அறமாக்கி இருப்பதாக கூறினார்.

"சமுதாய அறம் வர்ணாஸ்ரமம் ஆகிறது. எந்தவொரு சமுதாயமும் உற்பத்தி செய்து வாழ வேண்டும். உற்பத்தியில் ஈடுபடுவோர் சூத்திரர், உற்பத்தி செய்ததை பரிமாற்றம் செய்ய வேண்டும், அவர்கள் வைசியர்கள். உற்பத்தி, பரிமாற்றம் ஒழுங்காக நடைபெறுவதை காவல் காக்க வேண்டும், அவர்கள் தான் சத்ரியர்கள். இவை அனைத்தும் அறம்படி ஒழுங்காக நடப்பதை கவனிக்க வேண்டிய கல்வியாளர்கள் தான் பிராமணர்கள். இவர்கள் தங்களுக்கென எதுவும் வைத்துக் கொள்ளக்கூடாது." இந்த நால்வர்ண அமைப்பு பிறப்பின் அடிப்படையில் அமைந்தது அல்ல!" என சொல்லி விட்டு, (ஆனால் பிறப்பின் அடிப்படையில் தான் நால்வர்ணம் அமைந்துள்ள தாக மேலாதிக்க ஜாதிய சக்திகள் இன்றளவும் கோரத் தாண்டவம் ஆடி வருவதை கவனமாக சொல்லாமல் தவிர்த்துவிட்டு), இந்த அறத்தைத் தான் வள்ளுவம் அடிப்படையாக கொண்டுள்ளது என்றார். காலத்தைக் கடந்து நிற்கும் வள்ளுவத்தை, இப்படியாகக் காலாவதியாக்கி கிழடுதட்டி இறுகிக் கெட்டிதட்டிப் போன பழமைவாத வர் ணாஸ்ரம அடிப்படை கொண்டதாக தலைகுப் புறக் கவிழ்த்தார் ஜெயராஜ்! எந்தவொரு படைப்பும், அதன் கருத்தும் அது உருவான, அக்கால ஆளும் அதிகார தரப்பின் நோக்கில் சமுதாயத் தேவையை பூர்த்தி செய் வதாக இருக்கும்.

அப்படித்தான் வர்ணாஸ்ரமம் அது உருவாகி நிலை கொண்ட காலத்தின் ஆளும் அதிகார வர்க்க சமுதாயத் தேவையை பூர்த்தி செய்திருக்கும். ஆனால் அந்த வர்ணாஸ்ரம அமைப்பு முறைக்கு பிற்பாடு அளிக்கப்பட்ட பிறப்பின் அடிப்படையில் ஆன கருத்தியல் அடித்தளம் தான், இந்தியாவின் சாபக்கேடு!! வர்ணம் ஜாதியாகி, சில ஜாதி பல ஜாதியாகி இழிந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. உற்பத்தி முறையும், உறவும் மாறும்போது கூடவே அதன் கருத்தியலும், அதற்கேற்ப பழைய உற்பத்தி உறவு தன்மையில் இருந்து உதிர்ந்து புதிய உற்பத்தி உறவுக்கு ஏற்ற தன்மையைப் பெறும். இப்படித்தான் உலகெங்கும் பல சமுதாயங்களில் நடந்தேறி இருக்கிறது. ஆனால் இந்தியாவில் வர்ணாஸ்ரம அறம், காலந்தோறும் பிராமணி யமாக, உள்ளடக்கம் மாறாமல் உருவம் மட்டும் மாற்றம் அடைந்து வருகிறது. இன்றைக்கும் சிலர் மட்டும் சொகுசாய் வாழ  கோடிக்கணக்கான உழைப்பாளிகள் இதன் கொடும் விளைவுகளுக்கு ஆட்பட்டு வருகின்றனர்.

அப்படி இருக்க வள்ளுவத்தை வர்ணாஸ் ரமத்துடன் நேர் செய்வது, கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம் என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்வது? இப்படியெல்லாம் ஒன்றாக்கிக் கலந்து சொல்லிவிட்டு அறத்தின் இலக்கு பிறருக்காக வாழ்தல், தன் உறவைத் தாண்டி எல்லோருக்கும் இரங்குதல், அது தான் அருள் நிலை என்று  கூறி, அறத்தின் இறுதி இலக்கு அருள் நிலை கடந்து இறைவனிடம் சேர்தல், முக்தி பெறுதல் என நிறைவு செய்தார். ஆக மானிட சமுதாயத்தின் இறுதி இலக்கு சுதந்திர வாழ்வு அல்ல, சுகம்சேர்க்கும் மரணம்! சமுதாயத்தின் அடிப்படை இயக்கத்தை, அதன் மாற்றத்தை சார்ந்தே அறம் என்பதும் இயங்கும்; மாறும். ஆனால் வள்ளுவம் காலத்தை கடந்து நிற்கிறது எனில், அதற்குக் காரணம் அது உருவான காலத்தின் அம்சங்களை யும் கடந்து, புறவயமான உண்மைகளை தரிசித்து நின்றதே ஆகும். குறளின் மொழியில் கூறுவதானால்,

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு திருக்குறளே ஆனாலும் அதன் மெய்த் தன்மை அறிய வேண்டும் எனும்போது, இலங்கை ஜெயராஜின் மயக்கும் மொழியில் கேட்பதனாலேயே திருக்குறள், வர்ணாஸ்ரம அறம் போதிக்கும் மனு ஸ்மிருதி ஆகிவிடாது என்று புரிந்து கொள்வதும் புரியவைப்பதும் அவசியமாகிறது.

நன்றி: 'தீக்கதிர்', 12.8.2019



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஹிந்து மதப் போக்கு கடவுள்களுக்கு மனைவிகள் ஏன்? ஆலயங்கள் ஏன்? நகைகள் ஏன்?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாமக்கல் கூட்டத்தில் ஈ.வெ.ரா. பேச்சு

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

நமது கடவுள்கள்

இந்த விஞ்ஞானப் பெருக்கமுள்ள நாளில் நாம் இன்னமும் கடவுள்களைப் பற்றியும் அவைகளின் திருவிளையாடல் களைப் பற்றியும் பேசிக்கொண்டிருப்பது உண்மையிலேயே ஒரு காட்டு மிராண்டித்தனமேயாகும் என்றாலும் நமது எதிரிகள் நம்மீது வேறு எவ்வித குற்றமும் சுமத்த யோக்கியதையற்றுப் போனதால் நம்மை நாஸ்திகர்கள் என்று விஷமத்தனமாய் கெட்ட எண்ணத்துடன் பிரசாரம் செய்து வருவதால் அதைப் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது.

கடவுள் தன்மை

கடவுள்களைப் பற்றிய அபிப்பிராயத்தில் பழையகால அதாவது காட்டு மனிதன் காலத்தைவிட கிறிஸ்தவர்களில் ஒரு சாராரும் முகமதியர்களும் எவ்வளவோ சீர்திருத்தத்திற்கு வந்து விட்டார்கள். அவர்கள் ஒரே ஒரு கடவுள்தான் இருக்க முடியும் என்றும், அக்கடவுள் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதது என்றும் அது பெயரும் குணமும் உருவமும் இணையும் இல்லாதது என்றும் மனிதரில் நன்மையான காரியங்கள் செய்தவர்களுக்கு நன்மையும், தீமையான காரியம் செய்தவர்களுக்கு தீமையும் அளிக்கக்கூடியது என்றும் சொல்லி குணம் கற்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட கடவுளைப்பற்றி இப்பொழுது நாம் விவகாரம் பேசவேண்டிய அவசியம் இல்லை. இக்கருத்துடன் உணர்ந் திருக்கும் கடவுளால் மனிதன் தீமை செய்யப் பயப்படுவான் என்றும் நன்மை செய்ய ஆசைப்படுவான் என்றும் அது சமுதாய வாழ்விற்கு மிக்க பயனளிக்கும் என்றும் பல அறிஞர்களும் அதை ஒப்புக்கொண்டு காரணம் சொல்லுகிறார்கள். ஆகையால் இன்றைய தினம் இந்துக்கள் என்பார்களுடைய சிறப்பாக பார்ப்பனர்களால் கற்பிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கடவுள்களை எடுத்துக் கொள்ளுவோம். இந்துக்களுக்கு இத்தனை கடவுள்கள் ஏன்? அவை எப்படி வந்தன? பல்லாயிரக் கடவுள்கள் தவிர மற்றும் என்னவெல்லாம் கடவுள்களாகி இருக்கின்றன பாருங்கள். மாட்டு மலம் முதல் மாடு, குதிரை, எருமை, குரங்கு, பெருச்சாளி, கழுகு, காக்காய், பாம்பு, மரம், செடி, கல், மண், உலோகம், காகிதம் முதலிய வைகளும் மற்றும் பல ஆபாச உருவங்களும் கடவுளாக வணங்கப்படுகின்றன. காசியில் ஒரு கோவிலில் 2 உயிருள்ள நாய்கள் படுத்திருக்கின்றன. அவைகளுக்கும் பூசை போட்டு வணங்குவதை நேரில் பார்த்தேன். இப்படிச் செய்வதற்கு பண்டிதர்களால் தத்துவார்த்தம் சொல்லப்படுகிறது. இவ்வள வோடு இல்லாமல் இக்கடவுள்களுக்கு பெண்டு பிள்ளைகள் வைப்பாட்டி, தாசி விபசாரித்தனம், ஆகாரம், உறக்கம், புணர்ச்சி முதலியவைகளும் கற்பிக்கப்படுகின்றன. மற்றும் இக்கடவுள்களுக்கு கல்யாணம், சாவு முதலியனவும் கூட கற்பிக்கப்படுகின்றன.

திருவிழா ஆபாசம்

கற்பிக்கப்படுவதோடு தொலைந்து போனாலும் பரவாயில்லை. செய்கையில் செய்து காட்டி அதாவது கடவுள் விபசாரிதனம் செய்வதாகவும், தாசிவீட்டுக்குப் போவதாகவும் மற்றவர்கள் வீட்டுப் பெண்களை அடித்துக் கொண்டு போவ தாகவும் உற்சவங்கள் செய்துகாட்டி அவைகளுக்காக பல கோடிக்கணக்கான ரூபாய்களும் மனிதனின் விலை உயர்ந்த நேரமும் ஊக்கமும் உணர்ச்சியும் பாழாக்கப்படுகின்றன. இக்காரியங்கள் இந்த 20ஆவது நூற்றாண்டில் செய்யக் கூடியதா என்பதை யோசித்துப் பாருங்கள். இம்மாதிரி கடவுள்களை கற்பித்துக்கொண்டு அவைகள் மேல்கண்ட மாதிரியான காரியங்கள் செய்ததாக புராணங்களையும் இதிகாசங்களையும் கற்பித்துக் கொண்டு அக்காரியங்களை நாமும் கடவுள்கள் பேரால் செய்து கொண்டு திரிவது பற்றி மனிதனுக்கு வெட்கம் வரவேண்டாமா என்று கேட்கின்றேன். இதைச் சொன்னால் எங்களை நாஸ்திகர்கள் என்று சொல்லுவது யோக்கியமும் நாணயமுமான பேச்சாகுமா என்று கேட்கின்றேன். கடவுள் இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டுமா? இப்படி இருப்பதை கடவுள் என்று அறிவுடையவன் ஒப்புக் கொள்வானா? இன்று நாம் இம்மாதிரி கடவுள்களுக்காக செய்கிற பூஜையும், படையல்களும், கல்யாணம் முதலிய உற்சவங்களும் கடவுளுக்கு எதற்கு? எந்தக்கடவுளாவது ஏற்றுக்கொள்கிறதா? கடவுள்களை பொம்மைகள் மாதிரி வைத்து வருஷா வருஷமும் சில கடவுள்களுக்கு வருஷத்தில் இரண்டு தரம் 3 தரமும் கல்யாணங்கள் செய்கின்றோமே அவை எதற்கு? சாமிக்கு உண்மையிலேயே பெண்ஜாதி வேண்டியிருந்தால் போன வருஷம் செய்த கல்யாணம் என்ன ஆயிற்று? என்று கேட்க வேண்டாமா? விவாக விடுதலை ஆகிவிட்டதா? அல்லது தள்ளி வைக்கப்பட்டு விட்டதா? அல்லது ஓடிப்போய்விட்டதா? அல்லது முடிவெய்தி விட்டதா? என்று கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? எதற்காக வருஷா வருஷம் கல்யாணம்? அக் கல்யாணத்துக்கு கொட்டு முழக்கு ஆடம்பரம், பணச்செலவு ஏன்? சாமி கல்யாண சமாராதனை சாப்பாட்டை எந்த ஜாதியார் சாப்பிடுகிறார்கள் தெரியுமா? கண்டபடி பதார்த்தங்களை பாழாக்குவதேன்? இந்தப்படி வருஷம் எத்தனை உற்சவம் ? எங்கெங்கு உற்சவம்? இவைகளால் இதுவரை அடைந்த பலன் என்ன? நம் மக்கள் படிப்பு விஷயத்தில் 100க்கு 95 பேர்கள் தற்குறி, நமது உலகத் திலேயே மிக்க ஏழ்மை நாடு என்கின்றோம். ஒரு மனிதனுக்கு தினம் சராசரி 2 அணா படி கூட இல்லை என்று சொல்லு கிறோம். இப்படிப்பட்ட நாம் கடவுள்களுக்கு என்று எவ்வளவு செல்வங்களை பாழாக்குகிறோம் என்று யோசிக்கின்றோமா?

படையல் யார் வயிற்றில் போகிறது?

ஒரு கடவுளுக்கு தினம் எத்தனை தடவை பூஜை படையல்? ஒவ்வொரு பூஜை படையலுக்கு எத்தனை படி அரிசி பருப்பு சாமான்கள் ? இவைகள் எல்லாம் யார் வயிற்றில் அறுத்து வைக்கப்படுகின்றன? மக்களுக்கு கல்வி இல்லை, தொழில் இல்லை, சாப்பாடு இல்லை என்று புறம் சொல்லிக் கொண்டு, மற்றொரு புறம் இம்மாதிரி செல்வம் பாழாக்கப் படுவதென்றால் யோக்கியன் எப்படி சகித்திருக்க முடியும்? தயவு செய்து நீங்களே யோசித்துப் பாருங்கள். வைகுண்ட ஏகாதசிக்கும் ஆருத்திரா தரிசனத்துக்கும் தை பூசத்துக்கும் கார்த்திகை தீபத்துக்கும் திருப்பதிக் குடைக்கும் திருச்செந்தூர், ராமேஸ்வர ஸ்நானத்துக்கும் என்று வருஷாவருஷம் எத்தனை கோடி ரூபாய் பாழாகிறது? மக்கள் போக்குவரத்து செலவு, மெனக்கேடு செலவு, உடல் கேடு, ஒழுக்கக்கேடு ஆகிய காரியம் எல்லாம் சேர்த்துப் பார்த்தால் இக்கடவுள் களால் மக்களுக்கு நன்மையா? தீமையா? என்று கேட் கின்றேன். இச்செலவுகளைத் தடுத்து அச்செல்வங்களை வேறு வழிக்கு பயன்படுத்த முயற்சி செய்தால் வரியே இல்லாமல் அரசாங்கத்தை நடத்தக் கூடிய பணம் மீதியாகாதா? நம் நாட்டில் கடவுள்களுக்கு இருக்கும் செல்வங்களை கைப்பற்றி தொழில் சாலைகள் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தினால் வேலை இல்லாத் திண்டாட்டமும் தற்குறித் தன்மையும் அந்நிய நாட்டார் வியாபாரத்தின் பேரால் சுரண்டு தலும் இந்நாட்டில் அரை நிமிஷமாவது இருக்க முடியுமா? என்று கேட்கின்றேன். ஏதோ ஒரு கூட்டம் சோம்பேறியாய் இருந்து வயிறு வளர்க்க வேண்டி மற்ற மக்கள் தாங்கள் பாடுபட்டு தேடிய செல்வத்தை பாழாக்கி இவ்வளவு முட்டாள் தனமாய் நடந்து கொள்ளுவதா? என்று கேட்கின்றேன்.

மற்றும் கடவுள் பேரைச் சொல்லிக்கொண்டு பக்தியின் காரணம் காட்டிக்கொண்டு எவ்வளவு முட்டாள் தனமாய் நடந்து கொள்ளுகிறோம் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். காவடி எடுத்துக்கொண்டு கூத்தாடுவதும், மஞ்சள் துணி கட்டிக்கொண்டு வீதியில் கிடந்து புரளுவதும் மொட்டை அடித்துக்கொள்ளுவதும், பட்டை பட்டையாய் மண்ணையும் சாம்பலையும் அடித்துக் கொள்ளுவதும், உடம்பில் கம்பிகளையும் கத்திகளையும் குத்திக் கொள்ளு வதும் அழுக்குத் தண்ணீரில் குளிப்பதும் ஆனகாரியங்கள் எதற்கு என்று சிந்திக்கிறோமா?

கோவில்கள் எதற்கு?

மற்றும் மக்கள் சாப்பிடக்கூடிய பால், நெய், தயிர், தேன், பழச்சத்து முதலியவைகளை கல்லின் தலையில் குடம் குடமாய் கொட்டி சாக்கடைக்குப் போகும்படி செய்து வேடிக்கை பார்ப்பது எதற்கு? இந்தச் சாமிகளுக்கு கோடிக் கணக்கான ரூபாய் பெறும்படியான நகைகள் எதற்கு? பட்டு பீதாம்பர துணிகள் எதற்கு ? லக்ஷம் 10 லக்ஷம் கோடி பெறும்படியான ஆறு மதில் ஏழு மதில்கள் உள்ள பெரும் மதில்கள் கட்டிடங்கள் கோபுரங்கள் எதற்கு? தங்கம் வெள்ளி வாகனங்கள் எதற்கு? இவைகள் எல்லாம் நாட்டு பொது செல்வங்கள் அல்லவா? இவைகளை கல்லுகளுக்கு அழுது விட்டு சோம்பேறி சூழ்ச்சிக்கான பார்ப்பன வயிற்றை நிரப்பி அவன் மக்களை அய்.சி.எஸ்., ஹைகோர்ட் ஜட்ஜ் திவான் களாக ஆக்கி விட்டு இதுதான் கடவுள் தொண்டு என்றால் இந்தக் கடவுள்கள் இருக்க வேண்டுமா? என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட கடவுள்களையும் கடவுள் தொண்டு களையும் முஸ்லீம்கள் ஒப்புக் கொள்ளு கிறார்களா? கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? அல்லது இந்து பகுத்தறிவுவாதிகளாவது ஒப்புக் கொள்ளு கிறார்களா? என்று கேட்கிறேன்.

உண்மை பேசுகிறவன் நாஸ்திகனா?

இனி எப்பொழுது தான் நமக்கு புத்தி வருவது. இதைச் சொன்னால் பார்ப்பான் நம்மை நாஸ்திகன் என்கிறான். அவன் பேச்சையும் அவனது எச்சிலைத் தின்று வயிறு வளர்க்கும் கூலிகள் பேச்சையும் கேட்டுக்கொண்டு முட்டாள் ஜனங்கள் மதம் போச்சு, கடவுள் போச்சு என்று கூப்பாடு போடு கிறார்கள். அப்படியானால் இந்த கடவுள்களை ஒப்புக் கொண்டு இம்மாதிரி காட்டுமிராண்டித்தனமாய் கூத்தாடுவது தானா ஆஸ்திகம்? இல்லாவிட்டால் நாஸ்திகரா? அப்படி யானால் அப்படிப்பட்ட நாஸ்திகத்தைப் பற்றி எங்களுக்கு சிறிதும் கவலையில்லை. அந்தப் பூச்சாண்டிக்கு நாங்கள் பயப்படமாட்டோம். ஏதோ எங்களுக்கு தோன்றியதை - நாங்கள் சரி என்று நம்புவதை அதாவது நம் நாட்டுக்கு மேற்கூறிய மதமும் கடவுள்களும் கொடிய வியாதியாய் இருக்கின்றனவென்றும் இவை ஒழிந்தாலொழிய நாடும் மனித சமூகமும் அறிவும் ஆற்றலும் முற்போக்கடையாது என்றும் கருதுவதை உங்களிடம் விண்ணப் பித்துக்கொள்ளு கிறோம். பொறுமையாய் கேட்டு பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள் என்று தான் சொல்லுகிறோமே ஒழிய பார்ப்பனர்கள் போல் நாங்கள் சொல்வதை எல்லாம் நம்புங்கள் என்றோ நம்பினால்தான் மோக்ஷம். நம்பாவிட்டால் நரகம் என்றோ சொல்லுவதில்லை என்பதாக பேசிவிட்டு காங்கிரஸ் அரசியல் திருவிளையாடல்களைப்பற்றி பேசினார்.

- விடுதலை 18.12.1937



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 திராவிடர் கழகமா? தமிழர் கழகமா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

03.05.1947 - குடிஅரசிலிருந்து... -

திராவிடர் கழகத்தில் மற்ற இயக்கங்களில் இல்லாத கொள்கைகள் இருக்கின்றன. காங் கிரஸ் வர்ணாச்சிரம தர்மத்தை ஆதரிக்கிறது. ஜாதிப் பிரிவுகளையும் பல உருவக் கடவுள்கள் ஆராதனையும் அழிக்க முற்படவில்லை. திராவிடர்களுக்குப் பல ஜாதிகளும், பல கடவுள்கள் ஆராதனையும் பண்டைக் காலத்திலே இருந்ததில்லை. இந்த நாட்டுச் சொந்த மக்கள் நாலாஞ் ஜாதியைச் சேர்ந்த வர்களென்றும், சூத்திரர்கள் (அடிமைகள், தாசி மகன்) என்றும் இழிவுபடுத்தப்படுகிறார்கள். வடநாட்டு ஆதிக்கத்தால் நாடு பொருளாதாரத் துறையில் நலிவடைகிறது. வளம்மிகுந்த நாட்டில் வறுமை தாண்டவமாடுகிறது. நோய் நாடி, அதுமுதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி. ஆவனசெய்து திராவிட சமுகத்தைக் காக்கவே திராவிடர் கழகம் தோன்றிற்று.

திராவிடர் கழகம் பார்ப்பனரல்லாதார் அதாவது ஆரியரல்லாதாருடைய கழகம். இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவு மொழிகள் பேசும் மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவைகள்; அவர்கள் வாழ்வதற்குரியதாக ஆக்குவதற்கு திராவிடர் கழகம் தோன்றிற்று. வேறு எந்தப் பெயரால் அழைத்தாலும் இவ்வியக்கத்தின் கொள்கை களை விளக்கத் தவறும். இதை ஏன் தமிழர் கழகம் என்று அழைக்கக் கூடாது என்று சிலர் ஆராயாமல் கேட்டுவிடுகிறார்கள் தமிழர் கழகம் என்று அழைத்தால் மற்ற திராவிட மொழிகள் பேசும் மக்களை விலக்கி நிற்கும். பார்ப்பனர்களும் தமிழ் மொழி பேசுவதால் தமிழர் கழகத்தில் இடம் பெறுவார்கள். எனவே தமிழர் கழகம் ஆரியத்தையும் பார்ப்பனியத் தையும் அழிக்கத் தவறிவிடும். திராவிட மக் களைப் பார்ப்பனியப் பிடியிலிருந்து விடுவிக்க முடியாமல் போய்விடும். திராவிட மொழிகளுக் குள்ளே மிகவும் ஒற்றுமையிருக்கிறது. 5 மொழி பேசிவரும் திராவிட மக்களுக்குத் தனி நாகரிகம், தனி கலை, தனி வாழ்க்கை முறை இருக்கின்றன. திராவிட நாடு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்படும் வரையில் தனித்தே இருந்தது. எனவே, திராவிட நாடு திராவிடருக்குரியதாகத் திராவிட நாட் டைத் திராவிடர் அடையவேண்டும். திராவிட நாட்டிற்குத் தனி அரசியல் உண்டு. திராவிட நாட்டில் மொழி வாரியாக தனி ஆட்சியிருந்தாலும் 5 மொழிகள் பேசும் மக்களின், பிரதிநிதிகள் கொண்ட ஒரு கூட்டுச் சபை அமைக்கவேண்டும். வெளிநாட்டு விவகாரங் களை இந்த கூட்டுச்சபையே கவனித்துவரும். எனவே திராவிட நாட்டிற்கும், திராவிட மக்களுக்கும், திராவிடர் கழகம் இன்றியமை யாததாக இருக்கின்றது.

(01.05.1947 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் மாணவர் பிரசார குழு பயிற்சிப்  பாசறையில் நடத்திய வகுப்பின் உரை தொகுப்பு.)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard