1930 ஆம் ஆண்டில் சிருங்கேரி பீடத்தில் சங்கராசாரியாராக இருந்தவர் ஸ்ரீ சந்திர சேகர பாரதி ஸ்வாமிகள்.
ஆனால் குடிஅரசு வெளியிட்டுள்ள கடிதத்தில் ஸ்ரீ பிரஸ்தா வித்தியானந்த நாத பாரத ஸ்வாமி என்ற பெயர் இருக்கிறது. இவர் யார்? இவர் சிருங்கேரி பீடாதிபதியா?
1930ஆம் ஆண்டில் ‘ஆற்காடென்னும் சடாரண்ய க்ஷேத்திரங்களில் ஒன்றாகிய புஷ்பவனம் என்னும் புதுப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பரத்வாஜ மகரிஷி ஆசிரமத்தில் இருந்து இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.
1930 ஆம் ஆண்டில் சிருங்கேரி சங்கராச்சாரியார் ஆற்காடு பகுதிக்கே வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தக் கடிதத்தை எழுதியவர் யார் என்ற சந்தேகம் எழுகிறது.
கடிதத்தின் தலைப்பில் ’நிஜ சிருங்கேரி’ என்ற வார்த்தை உள்ளது. இது நம்முடைய சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. சிருங்கேரி மடத்தின் ஸ்ரீ முகத்தில்; ’நிஜ சிருங்கேரி’ என்று எழுதும் வழக்கமில்லை.
ஆக சங்கராசாரியார் கடிதம் பற்றிய உண்மையை வெளியிட வேண்டிய பொறுப்பு ஈவெராவின் சீடர்களுக்கு உண்டு.
ஒன்று, யாரோ ஒருவர் எழுதிய கடிதத்தை வைத்துக்கொண்டு சிருங்கேரி சங்கராசாரியார் கடிதம் எழுதியதாகக் கதை வசனம் தயாரித்திருக்கலாம்.