இன்னும் சிலருக்கு என்ன பஞ்சாயத்து என்றே தெரியாமல் இருப்பதால் ஒரு சிறு முன்னுரை.
பெரியாருக்கு யுனஸ்கோ விருது கொடுத்திருப்பதாக தி.க ஆதரவாளர்கள் சிலர் விக்கிபீடியாவில் எழுதி வைத்திருந்தார்கள்.
ஜெகன்நாத் என்பவர் அப்படி எந்த விருதும் யுனெஸ்கோ சார்பில் பெரியாருக்கு கொடுக்கப்படவில்லை. தகவலை சரிபார்க்கவும் என விக்கிபீடியாவிடம் கேட்டிருந்தார்.
குறிப்பிட்ட ஒரு தகவல் தொடர்பாக எந்த ஆதாரங்களும் இல்லையென்றால் அதை விக்கிபீடியா நீக்கிவிடும்.
அதன்படியே பெரியாருக்கு யுனெஸ்கோ விருது கொடுத்ததாக இருந்த தகவலை விக்கிபீடியா நீக்கிவிட்டது.
இதை ஜெகன்நாத் வெளியில் சொல்ல, அம்பலப்பட்டுப்போனார் இனாமான தலைவர் கி.வீரமணி.
பெரியாருக்கு யுனெஸ்கோ விருது கொடுத்ததாக பெரியார் திடல்வரை எழுதிப்போட்டது மட்டுமல்லாமல் 'யுனெஸ்கோ பார்வையில் பெரியார்' என்ற ஒரு புத்தகத்தையும் எழுதி அதன் ஒவ்வொரு பிரதிக்கும் 171 ரூபாய் இனாமாக வசூலும் செய்துவிட்டார்.
அந்த 'நாச்சியப்பன் பாத்திரக்கடை' விருது விஷயம் வெளிப்பட்டுவிட்டதால் அதை வெளிப்படுத்திய ஜெகன்நாத் சீனிவாசனை 'பார்ப்பான்' என வழக்கம்போல வசைபாட ஆரம்பித்துவிட்டார் யுனெஸ்கோ வீரமணி.
உண்மையிலேயே இந்த யுனெஸ்கோ விருது மேட்டரில் பெரியாருக்கே விபூதியடித்தது அவரின் சீடர்களான வீரமணியும், கருணாநிதியும்.
(பெரியாருக்கு யுனெஸ்கோ ஸ்டாம்ப்பு அடித்த கருணாநிதிக்கே ஒருத்தன் ஆஸ்திரிய ஸ்டாம்ப் அடித்ததெல்லாம் பின்னாளில் நடந்த a black comedy )
யார் வேண்டுமானாலும் உறுப்பினராக சேரக்கூடிய ஒரு டுபாக்கூர் அமைப்பு 'யுனெஸ்கோ மன்றம்' என்ற பெயரில் மலேசியாவில் செயல்பட்டு வந்தது.
அந்த 'யுனெஸ்கோ மன்றம்' சார்பில் 1970ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் பெரியாருக்கு விருது கொடுக்கப்பட்டது.
யுனெஸ்கோ நேரடியாக பலருக்கு விருது கொடுத்திருக்கிறது ஆனால் பெரியாருக்கு விருது கொடுத்தது UNESCO அல்ல 'யுனெஸ்கோ மன்றம்' என்றவொரு 'நாச்சியப்பன் பாத்திரக்கடை' மாதிரியான அமைப்பு.
ஆனால் பிரச்சினை இதுவல்ல. யுனெஸ்கோவே நேரடியாக விருது கொடுத்தது போல விளம்பரப்படுத்தி வரலாற்றில் பதிவு செய்யப்பட்டதுதான் பிரச்சினை. 'யுனெஸ்கோ பார்வையில் பெரியார்' என்ற புத்தகத்தையும் எழுதி காசு பார்த்தார் திராவிட ஆச்சாரியார் வீரமணி.
'எதையும் உடனே நம்பிவிடாதே. உன் புத்தியை பயன்படுத்தி பகுத்தறிவோடு யோசி' என பாடம் புகட்டிய பெரியாரே தனக்கு விருது கொடுத்தது யுனெஸ்கோவா அல்லது தன் அடிப்பொடிகள் செட்அப் செய்திருக்கும் டுபாக்கூர் அமைப்பா என தெரிந்து கொள்ளாமல் போனதுதான் சோகம்.
சிலருக்கு இப்போதும் சந்தேகம் வரலாம். 'யுனெஸ்கோ விருது கொடுத்தால் என்ன? யுனெஸ்கோ மன்றம் விருது கொடுத்தால் என்ன? ரெண்டும் ஒன்னுதானே?' என
ஆஸ்கர் விருது வாங்கும் ஒரு படத்திற்கும் , நம்ம ஊர் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் விருது வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம்தான் இது.
இன்னும் எளிமையா சொல்லனும்னா 'ஒரு படத்தில் வைகை புயல் வடிவேல் நடிப்பதற்கும், வடிவேல் பாலாஜி நடிப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான்'
வடிவேல் பாலாஜி நடித்த படத்தில் பெயர் போடும்போது வெறும் 'வடிவேல்' என போட்டால் எப்படி குழப்பம் வருமோ அதுபோலதான் இதுவும்.
மொத்தத்தில் இந்த யுனெஸ்கோ விருது அக்கால 'நாச்சியப்பன் பாத்திரக்கடை' விவகாரம்.