யுனெஸ்கோ விருது பித்தலாட்டம்.
பார்ப்பன் எனக் கூறியே தமிழனை ஏமாற்றி ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதித்த திராவிட கழகம் .
1970 இல் பெரியாருக்கு ஐ.நா. வின் UNESCO சார்பில் ‘தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என்கிற பட்டத்துடன் விருது அளிக்கப்பட்டதாக ஒரு புரட்டை அவிழ்த்து விட்டு, அதனை TNPSC தேர்வு வரையில் கேள்வியாக்கி வைத்திருந்தனர் இந்த பெரியாரிய ஆதரவு கல்வியாளர்கள். இப்படியான குறிப்பு விக்கிப்பீடியாவிலும் இருந்தது, விக்கிப்பீடியாவிலுள்ள இந்த குறிப்பை யார் வேண்டுமானால் எடிட் செய்துவிட முடியாது, அங்கீகரிக்கப்பட்ட எழுத்தர்களால் மட்டுமே முடியும். குறிப்புகளுக்கான உண்மைத் தன்மையை பற்றிய கேள்விகள் மட்டும் எழுப்பலாம் என்கிற ரீதியில் நண்பர் Jagannath Srinivasan அவர்கள் UNESCO சார்பில் அப்படியான விருது பெரியாருக்கு எப்போதும் கொடுக்கப்படவில்லை என்பதை ஆதாரத்தோடு சமர்பித்தார், விக்கிப்பீடியாவும் அதனை ஏற்றுக் கொண்டு குறிப்பை நீக்கியது.
கேள்வியை எதிர்கொள்ள திராணியில்லாத கயவர் கூட்டத்திற்கு வெட்கம் என்பது துளியும் கிடையாது. கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் எது வெனில், கொடுக்காத விருதுக்கு ' UNESCO பார்வையில் பெரியார்' என்றொரு நூலையும் வீரமணி எழுதி சில வருடங்களுக்கு முன் விற்றது தான். பெரியாரியக் கூட்டமும் அதன் கூற்றும் பொய்யிலும் பித்தலாட்டத்திலும் நிரம்பியது என்பதற்கு இதுவே ஆகச்சிறந்த சான்று. வாங்காத ஒரு விருதிற்கு புத்தகம் எழுதி காசு பார்த்த ஒரே கோஷ்டி நம்ம ஊர் ஓசி சோறு கோஷ்டிதான். புத்தகத்தின் விலை - 171 ரூபாய் பக்கங்கள் - 250 புத்தக ஆசிரியர் - கி.வீரமணி சமூக ஊடகங்களின் தாக்கமிருப்பதால் இந்த மாதிரியான பித்தலாட்டங்கள் தெரிந்துவிடுகின்றன. ஆஸ்திரிய ஸ்டாம்ப்பு முதல் யுனஸ்கோ விருதுவரை வரலாற்றில் பதிந்திருக்க வேண்டிய சில்லுண்டித்தனத்தை வெளிச்சம்போட்டு காட்டியதுதான் சமூக ஊடகங்களின் தாக்கம். வெறும் கட்டுக்கதைகளை யுனஸ்கோவின் பெயரால் எழுதி காசு சம்பாதித்த வீரமணி தன்னுடைய பொய்களுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு சேர்த்து பொய் சொல்லி விற்ற புத்தகங்களை திரும்பப்பெற வேண்டும்.
இது நடந்து ஒரு மாத காலம் இருக்கும். சில தினங்களுக்கு முன் வீரமணி அவர்களுக்கு இது தெரியவர, அவரும் விடுதலைப் பத்திரிக்கையிலும் முகநூலிலும் தங்களுக்கே உரித்த வழமையில் பார்ப்பன கொழுப்பைப்ச பாரீர், Jagannath Srinivasan என்கிற பார்ப்பன பேர்வழியின் செயலைப் பாரீர் என்று சாதி ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் தாக்குதல் நடத்தி, பார்ப்பனர்களின் செயலுக்கு செவி மடுத்த விக்கிப்பீடியாவை ஆதாரத்தோடு காதை திருகுவேன் என்றார். சரி, ஆதாரம் வச்சுயிருப்பாருனு பார்த்தா, ஐ.நா வின் UNESCO விற்கு சற்றும் தொடர்பில்லாத UNESCO Mandram என்கிற பெயரில் சிலரால் தமிழ்நாட்டில் ஒரு சிறியஅளவிலான அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்திருக்கிறது, அவர்கள் கொடுத்த விருதை ஐ.நா வின் UNESCO கொடுத்ததாக விட்டார் ஒரு புருடா; விடுவாரா நமது நண்பர்? அந்த புருடாவை உடைக்கும் பொருட்டு அவரின் பக்கத்திற்கே சென்று கேள்விக்கணைகளைத் தொடுத்தார் நண்பர் Jagannath Srinivasan. பதிலளிக்க திராணியில்லாத வீரமணி அந்த நாச்சியப்பன் பாத்திரக் கடை விருதை மேற்கோள் காட்டி இட்டப் பதிவை முகநூலில் இருந்து நீக்கிவிட்டு தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். ஊருக்கெல்லாம் ஜனநாயகப் பாடம் எடுக்கும் இந்த பெரியாரிய பேர்வழிகள் தற்போது Jagannath Srinivasan அவர்களின் ஐடியை ரிப்போர்ட் அடித்ததில் அவரின் ஐடி முகநூலில் இருந்தே டி ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கிறது.