சந்திராவும் அபயாவும்
மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழை எழுதியவர் குமரகுருபரர். இவர் குருநாதரைத் தேடிப் பல இடங்களில் அலைந்தார். இறுதியில் தருமபுர ஆதீனத்துக்கு வந்தார். மயிலாடு துறையைக் கடந்து குருநாதர் மாசிலாமணி தேசிகர் வாழும் தருமபுரி மண்ணை மிதித்த உடனேயே அவருடைய மனதிலிருந்த கேள்விகள் அகன்றன.
இந்தத் தகவலை
ஊரிற் குறுகினேன்; ஓர் மாத்திரையளவு
பேரிற் குறுகினேன் பின்
பண்டார மும்மணிக் கோவையில் அவரே எழுதினார். முதல் வரியில் வரும் குறுகினேன் என்பது அவ்வூரைச் சேர்ந்தேன் என்பதைக் குறிக்க. இரண்டாவது வரியில் வரும் ‘குறுகினேன்’ சொல்வது குறைந்தது என்பதை. சீவனாக இருந்த தான் ஒரு மாத்திரை குறைந்து சிவனாக ஆனேன் என்கிறார் குமரகுருபரர்.
சில சன்னிதிகளை அடைந்த உடனேயே கேள்விகள் புசுக்கென்று காணாமல் போய்விடும். ஆன்மிக ஆற்றலின் விளைவு அது.
நமக்கு அதெல்லாம் சாத்தியமில்லை. விஷயத்தை விலாவாரியாகச் சொன்னால்தான் ஓரளவாவது போய்ச் சேரும். ஆகவே மின்வெளிச் சிந்தனைகளாக வெளிப்படும் எனது கருத்தாக்கங்கள் போகப் போகத் தெரியும்…
இனி தினமலரிலிருந்து ஒரு செய்தி…
ராஜபாளையம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.யான சந்திரா வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் சந்திரா வெற்றி பெற்றார். இவரது தேர்தலை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆதி திராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட ராஜபாளையம் தொகுதியில் சந்திரா போட்டியிட முடியாது. ஆதி திராவிடர் எனப் பொய்கூறி அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவருடைய பெயர் குளோரி சந்திரா. அவருடைய பள்ளிச் சான்றிதழில் அவர் கிறிஸ்தவர் என்று கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ முறைப்படிதான் சந்திராவுக்கும் அவரது கணவர் சூசை மாணிக்கத்துக்கும் திருமணம் நடந்தது. எனவே இந்தத் தொகுதியில் போட்டியிட அவருக்குத் தகுதியில்லை என்பது மனுவின் சாரம்.
வழக்கை விசாரித்த நீதிபதி நாகப்பன் சந்திரா வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவித்தார். (பார்க்க: தினமலர், 03 டிசம்பர் 2008).
கிறிஸ்தவர்கள் செய்யும் அண்ட மோசடி ஆகாச மோசடிகளில் இதுவும் ஒன்று. அப்பத்தைப் பங்கிடவும் அவ்வப்போது ஜெபிக்கவும் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள். சட்டத்தை வளைக்கவும் சாமானியர்களை ஏமாற்றவும் ஹிந்துவாகப் பதிவு செய்துகொள்வார்கள். பாரத தேசத்தின் மீது சில ஒட்டடைகள் படிந்துள்ளன. சிலந்திகள் சிலவும் சேர்ந்து இழுத்துப் பார்க்கின்றன. சுதந்திர தேவியின் இருப்பிடத்தை நாம் சுத்தம் செய்ய வேண்டும்.
சில கிறிஸ்தவ மேய்ப்பர்கள் பகலில் மட்டும் பத்தினி விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். என்னடா, மதத் தலைவர்களை மரியாதைக் குறைவாகப் பேசலாமா என்று நீங்கள் கேட்கலாம். உங்களுக்காக சேரநாட்டிலிருந்து இதோ ஒரு செய்தி.
கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த அபயா என்ற கன்னிகாஸ்திரீ 1992ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொலை செய்யப்பட்டார். ஒரு பாதிரியாருடன் வேறொரு கன்னிகாஸ்திரீ உறவுகொள்வதை அபயா பார்த்துவிட்டதால், அவர் தீர்த்துக் கட்டப்பட்டார் என்று சொல்லப் பட்டது. போலீஸ் விசாரணைக்குக் கத்தோலிக்கத் திருச்சபை ஒத்துழைப்புத் தராததால் பொதுமக்களிடையே எதிர்ப்பு உருவானது. பலவிதப் போராட்டங்களுக்குப் பிறகு, 16 ஆண்டுகள் கடந்த பிறகு இந்த வழக்கில் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ரகயில் என்ற பாதிரியார்களும் செஃபி என்ற கன்னிகாஸ்திரீயும் CBI போலீசாரால் கோட்டயத்தில் கைது செய்யப்பட்டனர்.
கேரளத்தைப் பரபரப்பாக்கிக் கொண்டிருக்கும் செய்தி இது. ‘பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்து’ என்ற சொலவடையை ‘பாவத்தையும் மன்னிப்பையும் பக்கத்தில் வைத்து’ என்று மாற்றிக் கொள்ளலாம்.
நம்முடைய அழகையும் ஐஸ்வர்த்தையும் திருச்சபை கடத்திக் கொண்டு போகிறதே, உயிரோடிருந்தும் நாம் ஊமையாகிவிட்டோமே என்று வருத்தப்படும் நண்பர்களுக்கு வருகிறது ஒரு சேதி, அடுத்த தவணையில்…
மேற்கோள் மேடை:
“ஈழத் தமிழர்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் வெஞ்சிறையை ஏற்பதாகச் சொல்லும் வைகோ ஒருமுறையாவது சேரித் தமிழர்களுக்காகச் சிறை சென்றதுண்டா?”
– தலித் முரசு, திங்களிதழ், தலையங்கம்