மூலம்: பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகம்
தமிழில்: பி.எஸ்.நரேந்திரன்
மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை :
இந்திய வரலாறு பொய்களாலும் புனைகதைகளாலும் ஆனது. இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் இந்திய வரலாற்றை எழுதும்படி நேருவினால் பணிக்கப்பட்ட இடதுசாரிகள் தங்கள் இஷ்டம்போல எழுதி வைத்தார்கள். இந்தியாவில் ஹிந்துக்களைக் கொன்று இரத்த ஆறு ஓடச்செய்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் சிறிதும் நியாயமின்றி ஏணியில் ஏற்றி உட்கார வைக்கப்பட்டார்கள். இந்தியாவின் உண்மையான வரலாறு முற்றிலுமாக இந்திய ஹிந்துக்களிடமிருந்து மறைக்கப்பட்டது. இந்திய மாணவர்கள் செக்யூலரிசம் என்னும் போலிப் போதையில் ஆழ்த்தப்பட்டார்கள்.
எந்தவொரு இந்துவும் எம்மதமும் சம்மதம் என்று உணர்ந்தவன். ஆக இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் செக்யூலரே என்கிற உண்மையை உணராத போலிகள் தாங்கள் மத ஒற்றுமைக்குப் பாடுபடுவதாகக் கூறிக் கொண்டு இந்தியர்களை மத ரீதியாகப் பிரித்தார்கள். அதன் பலனை இந்தியா கடந்த 70 வருடங்களாக அனுபவித்துவருகிறது. இன்றைக்கு ஒருவன் இந்து என்று கூறிக் கொள்ளவே அச்சப்படும் ஒரு அவலத்தை மேற்படி அறிவுஜீவிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆகவே, இந்தியர்களுக்குக் கற்பிக்கப்படும் பொய்யான கற்பிதங்களால் ஆன இந்திய வரலாறு மறுபரிசீலனை செய்யும் காலம் இன்றைக்கு வந்திருக்கிறது. அதன் ஒரு சிறு துவக்கமாக இந்தத் தொடர் இருக்கும். இது உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ளும் ஒரு முயற்சியேயன்றி எந்தவொரு பிற மதத்தவருக்கும் எதிரான ஒன்றல்ல என்பதினை வலியுறுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு இந்தியனுக்கும் தனது கடந்தகால வரலாற்றை அறியும் அத்தனை உரிமையும் இருக்கிறது.
******
முகலாயர்களின் மூன்றாம் தலைமுறை அரசரான அக்பர் (1542-1605) ஒரு மிகப் பெரும் மனிதராகவும், நீதி தவறாத அரசராகவும் இன்றைக்கு அறியப்படுகிறார். ஆனால் உண்மையோ அதற்கு நேரெதிராக இருக்கிறது. அதனைக் குறித்து ஆராய்வதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
அக்பர் நீதிக்கும், நேர்மைக்கும் உதாரண புருஷனாக, மண்ணில் மலர்ந்த மாணிக்கமாக இந்திய வரலாற்றுப் புத்தகங்கள் நெடுக புகழ்கின்றன. அதனையே பெரும்பாலான இந்தியர்கள் படித்து அதனையே நம்பி வளர்ந்தவர்கள். ஆனால் உண்மை அதற்கு நேரெதிரானது. அக்பரது ஒவ்வொரு செயலும் குரூரமும், மனம் நிறைய துரோக எண்ணங்களும், கொள்ளை, கொலை செய்யத் தயங்காத எண்ணமும் உள்ள, மத அடிப்படைவாதமும், ஹிந்துக்கள் மீது பெரு வெறுப்பும் உள்ள மனிதன் என்பதினை பெரும்பாலோர் அறிந்ததில்லை. அக்பரின் உண்மையான வரலாறு அவர்களிடம் இது நாள் வரைக்கும் மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. அத்தகைய குணமுடைய ஒரு மனிதனை மிக உயர்ந்தவன் என்று இந்தியர்கள் புகழ்வதினைப் போன்றதொரு கேவலம் வேறொன்றில்லை.
எனவே அக்பரின் உண்மையான வரலாற்றை நாமறிய வேண்டிய தருணம் வந்திருக்கிறது. எனவே நமது வருங்கால சந்ததிகளேனும் உண்மையான வரலாற்றை அறிந்து வளர்வார்கள் எம நம்புகிறேன்.
முகலாய ஆட்சிக் காலத்தைக் குறித்து ஆதியோடு அந்தமாக ஆராய்ந்து எட்டு வால்யூம்கள் எழுதிய புகழ் பெற்ற பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் H.M. Elliot இன்றைக்கு இந்தியாவில் ஏகத்திற்கும் புகழ்ந்து கூறப்படும் முகலாய ஆட்சியை “Imprudent and interested fraud” என்கிறார். முகலாய அரசவையில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த முகலாய வரலாற்றாசிரியர்கள் ஏகத்திற்கும் இல்லாத கதைகளை எழுதிவைத்தார்கள், ஆனால் என்கிறார் அதில் சிறிதளவும் உண்மையில்லை அவர். அக்பர் the so called “The Great” பற்றி நமகக்கு இன்றைக்குக் கற்பிக்கப்படும், சொல்லப்படும், எழுதப்படும் வரலாறு அதே வகையைச் சார்ந்தது என்பதில் சந்தேகமில்லை. அக்பரின் வரலாற்றை எழுதிய அபுல் ஃபைசல் முற்றிலும் பொய்களையும், புனைகதைகளையும் மட்டுமே எழுதி வைத்தார். அதே காலத்தில் வாழ்ந்த இன்னொரு வரலாற்றாசிரியரான பதாயுனி மற்றும் இளவரசர் சலீம் (ஜஹாங்கிர்) போன்றவர்கள் அபுல் ஃபைசலை “வெட்கம் கெட்ட புளுகன்” என்று அழைக்கிறார்கள். இளவரசர் சலீம் அக்பரின் சொந்த மகன் என்பதனை நாம் கவனிக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக இன்றைக்கும் அபுல் ஃபைசல்தான் நமக்கு மேற்கோள் காட்டப்படுகிறார்.
இந்தியாவின் பல்வேறு இனக்குழுக்களிடையே இணக்கம் பேணுவதற்காக அக்பர் பல்வேறு நாட்டு இளவரசிகளை மணந்தார் என்கிற பொய்யை மீண்டும், மீண்டும் நமக்குச் சொல்கிறார்கள். ஜோதாபாய் போன்ற ராஜபுத்திரப் பெண்மணி அக்பர் மீது கொண்ட காதலை(!) சினிமாவாகவெல்லாம் எடுத்து இன்றைக்கும் நம்மை புல்லரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அடிமூடர்கள். ஆனால் உண்மை அதற்கு மாறானது. மானமுள்ள எந்த ராஜபுத்திரப் பெண்ணும் அக்பர் போன்ற நிர்மூடனை, மதவெறி பிடித்த மூர்க்கனை மணக்க முன்வரவே மாட்டாள். அக்பர் திருமணம் செய்ததாகச் சொல்லப்பட்ட அத்தனை பெண்களுமே போர்களில் தோற்கடிக்கப்பட்ட ராஜபுத்திர மற்றும் பிற ஹிந்து அரசர்களிடம் மிரட்டிக் கைப்பற்றிக் கொண்டு சென்ற பெண்கள் மட்டுமே. அக்பர் படையெடுத்துச் செல்லும் நாட்டின் அரசன் அடிபணிந்து அவனது மகள்களையும், பிற அரண்மனைப் பெண்களையும் அக்பருக்குக் கொடுத்தால் அவர்களின் நாடு சின்னாபின்னமாவதிலிருந்து தப்பிக்கும் என்கிற மிரட்டலுக்குப் பணிந்தே பெரும்பாலான ஹிந்துப் பெண்கள் அக்பரால் அங்கிருந்து கடத்திச் செல்லப்பட்டார்கள்.
அக்பரால் தோற்கடிக்கப்படும் நிலையில் அவரிடம் பிடிபட்டு அக்பரின் காம அடிமையாக மாற விரும்பாத சித்தூர் ராணி பத்மினி போன்றவர்கள் நெருப்பில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்கள் என்கிற வரலாறு நமக்கு உறைப்பதே இல்லை. அக்பர் ஒரு அடிப்படைவாத, முகமது நபியின் உதாரணத்தை இறக்கும் வரை கடைப்பிடித்த ஒரு அடிப்படைவாத முஸ்லிம். அவரைப் பொறுத்தவரை போரில் வென்ற ஹிந்துக் காஃபிர் பெண்கள் அவரின் அடிமைகள். ஹிந்து அரசனின் அரண்மனையில் சீரும் சிறப்புமாக வளர்ந்த ஒரு பெண் அக்பரின் ஹராமில் இருந்த 5000 பெண்களில் ஒருத்தியாக மாறி, வெளியில் வரவே முடியாதபடி அங்கேயே மக்கி மடிந்தாள். அக்பரின் ஹராமிற்குள் அடைக்கப்பட்ட பெண் அவள் இறக்கும் வரை அவளது பெற்றோர்களை மீண்டும் பார்க்க அனுமதிக்கப்படவேயில்லை என்பதிலிருந்து அக்பர் என்னும் ஒரு மனித மிருகத்தின் மனோபாவத்தை அறியலாம்.
அரச குடும்பத்தைத் தவிர வேறு பல ஹிந்துப் பெண்களும் அக்பரினால் போர் வெற்றிப் பரிசாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள அனைவரும் டெல்லித் தெருக்களில் அக்பரால் விபச்சாரம் செய்ய வைக்கப்பட்டனர். அவர்களில் அழகானவர்கள் அக்பரின் அனுமதியுடன் பல்வேறு அரசாங்கத்து முஸ்லிம் அதிகாரிகளுக்குப் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அந்தப் பெண்களில் இருக்கும் கன்னிப் பெண்களை எந்த முஸ்லிம் அதிகாரியாவது விரும்பினால் அதற்கு அக்பரிடமிருந்து விஷேஷ அனுமதி பெறவேண்டும். விபச்சாரம் நடக்கும் இடத்தில் ஒரு மதுக்கடையும் அக்பரால் திறக்கப்பட்டது. சைக்கோபாத்தான அக்பர் விபச்சாரம் செய்யும் அந்தப் பெண்களில் அழகானவர்களை அவ்வப்போது அழைத்து யாரால் அவர்களுக்குக் கன்னி கழிய வைக்கப்பட்டது போன்ற “கிளு கிளு” சமாச்சாரங்களைக் கேட்டு மகிழ்ந்ததொரு அல்பன். இது அத்தனையும் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்பதினை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். பெண்களுடன் சிறுவர்களும் அக்பரால் தேவையானவர்களுக்கு சப்ளை செய்யப்பட்ட சம்பவங்களும் உண்டு.
டெல்லியின் ஹிந்து அரசன் ஹேமுவைத் தோற்கடித்த தனது பதினாலாவது வயதிலிருந்தே அக்பர் பெண் பித்தனாக, குடிகாரனாக, அபின் உபயோகிப்பாளனாகத்தான் இருந்திருக்கிறார் என்கிற விவரத்தை ஏன் நமது “வரலாற்றாசிரியர்கள்” சொல்லத் தயங்குகிறார்கள்? வரலாறு என்பது உள்ளது உள்ளபடியல்லவா சொல்லப்பட வேண்டும்? பின் எதற்காக இந்தப் பொய்களும், புனைகதைகளும்?
கொலைகாரர்கள் வழிவந்த அக்பர் மட்டும் எப்படி உத்தமனாக இருந்திருக்க முடியும் என்கிற அடிப்படைக் கேள்வியைக் கூடக் கேட்கத் தயங்குகிறார்கள் நமது வரலாற்றாசிரியர்கள். அப்படியே அக்பர் மஹா உத்தமனாக இருந்திருந்தால் அவருக்குப் பின்னர் வந்த ஜஹாங்கிர், ஷாஜஹான், அவ்ரங்க்ஸிப் போன்றவர் ஏன் கேடு கெட்டவர்களாக இருந்தார்கள்? அன்பும், கருணையும் கொண்ட அக்பரைப் பார்த்துக் கூடவா அவர்கள் கற்றுக் கொள்ளாமல் போனார்கள்?
அக்பரின் வாழ்வில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளை முதலில் அறிந்து கொள்ளலாம்.
*******
நவம்பர் 23, 1542, வியாழக்கிழமை :
ஷேர் ஷாவினால் தோற்கடிக்கப்பட்டுத் துரத்தியடிக்கப்பட்ட அக்பரின் தகப்பனான ஹுமாயூன், சிந்து மாகாணத்திலுள்ள அமர்கோட்டின் ஹிந்து அரசரான ராணா விர்சால் என்றழைக்கப்படும் ராணா பிரசாத்திடம் புகலிடம் கேட்டுத் தங்கியிருக்கிருக்கையில் அங்கு அக்பர் பிறக்கிறார். பிறந்த குழந்தைக்கு பத்ருதின் (The full moon of Religion) முகமது அக்பர் என்று பெயர் சூட்டப்படுகிறது. அக்பர் என்றால் “மூத்தவன்” அல்லது “மிகப் பெரியவன்” என்று பொருள்.
மார்ச் 1546 :
அக்பருக்கு சுன்னத் செய்யப்படுகிறது.
குறிப்பு : நெடுங்காலமாக செய்யப்பட்டு வருகிற சுன்னத் சடங்கு ஒரு புனித மற்றும் விலக்க முடியாத இஸ்லாமிய சடங்காக மாறியிருந்தாலும், அது ஆரம்பிக்கப்பட்ட நீரற்ற அரேபிய பாலைவனத்தில் உடல் சுத்தத்தைப் பேணும்படிக்காக துவங்கப்பட்டதொரு சடங்காகும். நீரில்லாத பாலைவனங்களில் வசிப்பவர்கள் குளிப்பது மிக, மிக அபூர்வமென்பதால் Phymosis போன்ற நோய்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்காக சுன்னத் செய்து கொண்டார்கள். ஆனால் இந்தியா போன்ற நீர் நிலைகள் அதிகமுள்ள நாடுகளில் தினமும் குளிப்பது ஒரு வழக்கமாக இருப்பதால் அங்கு சுன்னத் செய்வது ஒரு தேவையற்ற சடங்கென்றாலும் அது ஒரு மதக்கடமை என்கிற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஜனவரி 27, 1556, திங்கள் :
அக்பரின் தகப்பனான ஹுமாயூன் தில்லியில் மரணமடைகிறார். டெல்லியில் புரானா கிலா (பழைய கோட்டை)யின் மாடிப்படிகளிலிருந்து ஜனவரி 24-ஆம் தேதி தவிறி விழும் ஹுமாயூனை அங்கிருந்து அரைமைல் தொலைவிலிருந்த அரண்மனைக்குத் தூக்கிச் செல்கிறார்கள். அங்கு மரணமடையும் ஹுமாயூனைப் புதைத்த கட்டிடமானது அவரது மறைவிற்குப் பின்னர் கட்டப்பட்டதாக தவறாகக் கூறப்படுகிறது. உண்மையில் அந்தக் கட்டிடம் ஹுமாயூனின் மரணத்திற்கு முன்பிருந்தே இருக்கின்ற ஒன்று. ஹிந்து அரசன் ஒருவருக்குச் சொந்தமான அந்தக் கட்டிடத்தில் சக்தி சக்ர அடையாளமும், ஒன்றை ஒன்று தழுவி நிற்கும் முக்கோணங்களும், அதன் நடுவில் கல்லினால் செதுக்கப்பட்ட மலர்களும் இருப்பதனை இன்றைக்கும் காணலாம். எனவே ஹுமாயும் வாழ்ந்ததும், மறைந்ததும் ஹிந்து ஒருவருக்குச் சொந்தமானதொரு கட்டிடத்தில்தான்.
ஹுமாயூனின் மரணத்தின் போது 13 வயது இரண்டு மாதச் சிறுவனாக இருந்த அக்பர் அவரது மாமனான பைராம்கானின் துணையுடன் சிக்கந்த சுர்ரை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தார். ஹுமாயூனின் மரணச் செய்தி கிடைக்கையில் பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்திலிருக்கும் கலனூரில் தங்கியிருந்தார் அக்பர். பதினைந்து நாட்களுக்கும் மேலாக ஹுமாயுனின் மரணம் ரகசியமாக வைக்கப்படுகிறது. பின்னர் அக்பரை அரசராக அறிவிக்கிறார்கள்.
பிப்ரவரி 11, 1556 :
அக்பர் தில்லியின் அரசராக அறிவிக்கப்படுகிறார். மூன்று நாட்கள் கழித்து, பிப்ரவரி 14, 1556, அன்று பஞ்சாபின் கலனூரிலிருந்த ஒரு பழைய ஹிந்து ராஜாவின் அரண்மனையில் வைத்து அக்பர் முடிசூட்டப்படுகிறார். அக்பரின் வரலாற்றாசிரியர்கள் பொய்யாகக் குறிப்பிடுவது போல அக்பருக்கு அங்கு பெரிய மாளிகை எதுவும் இருந்திருக்கவில்லை. ஒரு பாழடைந்த ஹிந்து அரசனின் அரண்மனைதான் அக்பர் முடிசூட்டிக் கொண்ட இடம். எட்டாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து நிகழ்ந்த இஸ்லாமியப் படையெடுப்புகளால் தாக்குதலுக்கு உள்ளாகிச் சிதைந்து கிடந்த அரண்மனை அது.
பானிப்பட்டில் ஹிந்து அரசர் ஹேமுவுக்கு எதிராக நிகழ்ந்த போரில் வெற்றி பெரும் அக்பர், டெல்லி-ஆக்ரா-ஃபதேபூர் சிக்ரி பகுதிகளுக்கு அரசராகிறார். ஹேமு மிக எளிதாக வென்றிருக்கக் கூடிய அந்தப் போரில் துரதிருஷ்டவசமாக ஒரு அம்பு அவரது கண்ணைத் துளைத்து மூளையில் பதிந்ததால் ஹேமு சுய நினைவை இழந்தார். அதனைக் கண்ட அவரது படையினர் சிதறி ஓடிவிட்டார்கள். ஹேமு அமர்ந்திருந்த அவரது பட்டத்து யானை காட்டுக்குள் ஓடிவிட்டது.
அக்பரின் முதல் திருமணம் குறித்த சரியான தேதி தெரியவில்லை. மாமன் மகளை மணக்கும் வழக்கப்படி அக்பரின் மாமனான ஹிண்டாலின் மகள் ருக்கியா பேகத்தை நவம்பர் 1551 அன்று மணந்த தகவல் இருக்கிறது.
1557-இன் முதல்பகுதி :
அக்பர் அப்துல்லாகானின் மகளை மணக்கிறார். அது அக்பரின் இரண்டாவது திருமணம். அவரது பாதுகாவலனான மாமன் பைராம்கான் அந்தத் திருமணத்தை எதிர்க்கிறார். அனேகமாக அந்தச் சம்பவமே அக்பருக்கும், பைராம்கானுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகக் காரணமாக இருக்கலாம். சிறிதுகாலத்திற்குப் பிறகு அக்பர் தனக்கு எல்லா உதவியும் செய்து தன்னை அரசனாக்கிய மாமன் பைராம்கானை படுகொலை செய்துவிட்டார்.
மே 1557 :
மான்கோட்டில் மிக நீண்ட முற்றுகைக்குப் பிறகு சிக்கந்தர் சுர் சரணடைகிறார். இந்தப் போரின் போது அக்பரின் மாமன் பைராம்கான் அக்பரின் அத்தை மகளான (ஹுமாயுனின் சகோதரி மகள்) சல்மா பேகத்தை மணந்து கொள்ள நிச்சயதார்த்தம் செய்கிறார். அக்பருக்கும் அந்தப் பெண்ணின் மீது ஒரு கண் இருந்ததால் மீது கோபமடைந்து பைராம்கானின் கூடாரத்தின் மீது யானைகளை ஏவிவிடுகிறார்.
நிச்சயதார்த்தம் முடிந்த சில மாதங்கள் கழித்து ஜலந்தரில் பைராம்கான் சல்மா பேகத்தை நிக்காஹ் செய்து கொள்கிறார். மீண்டும் பைராம்கானின் கூடாரத்தின் மீது யானைகள் ஏவிவிடப்படுகின்றன. கொஞ்ச நாட்கள் கழித்து ஆக்ராவுக்குத் திரும்பிய பிறகு மீண்டுமொருமுறை பைராம்கானின் மீது யானகள் ஏவிவிடப்படுகின்றன. தான் ஆசைப்பட்ட பெண்ணை மாமன் தள்ளிக் கொண்டு போனதை அக்பர் மன்னிக்கவேயில்லை. சில வருடங்கள் கழித்து பைராம்கானை தந்திரமாக படுகொலை செய்துவிட்டு சல்மா பேகத்தை தனது அந்தப்புரத்திற்குக் கவர்ந்து கொண்டார்.
1560 :
அக்பர் தனது தலை நகரத்தை ஆக்ராவிலிருந்து ஃபதேபூர்சிக்ரிக்கு மாற்றிக் கொள்கிறார். இதன்படி ஃபதேபூர்சிக்ரி ஏற்கனவே இருந்ததொரு நகரம் என்பது தெளிவு. வரலாற்றாசிரியர்கள் சொல்வதுபோல சிக்ரி அக்பரால் கட்டப்பட்ட ஒரு நகரமல்ல. தலைநகரை திடீரென மாற்றியதற்குக்கான காரணத்தை ஃபெரிஸ்டா விளக்குகிறார். அதன்படி அக்பரி தலைமை தாதியான மஹம் அனாகாவானவள் அக்பரை அவரது மாமன் பைராம்கான் சிறையில் அடைத்துவிட்டு தானே அரசனாகப் போவதான வதந்தியைச் சொன்னதால் அச்சமடைந்த அக்பர் உடனடியாக அங்கிருந்து ஃபதேபூர்சிக்ரிக்கு தலைநகரை மாற்றுகிறார்.
மிகக் குறைந்த நேரத்தில் எல்லா மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டும், அத்தனை அமைச்சர்கள் நிர்வாகிகள், அந்தப்புரத்திலிருந்த 5000 பெண்களுடன் ஆயிரக்கணக்கான விலங்குகளுடனும் திடீரென அக்பர் ஃபதேபூர்சிக்ரிக்கு சென்றது அந்த நகரில் ஏற்கனவே எல்லாக் கட்டிடங்களும், அரண்மனையும் இருந்ததனையே காட்டுகிறது. எனவே அக்பர் ஃபதேபூர்சிக்ரியைக் கட்டியதாகச் சொல்வது மாபெரும் பொய்யேயன்றி வேறேன்ன?
ஜனவரி 1561 :
குஜராத்தின் சித்தாபூர் பட்டானில் வைத்து அக்பரின் மாமனான பைராம்கான் அக்பரால் ஏவிவிட்டவர்களால் படுகொலை செய்யப்படுகிறார். பைராம்கானின் பதவியைப் பிடுங்கியதுடன் அவரைத் தொடர்ந்து தொல்லைகள் செய்துவந்த அக்பர், தான் அரசனாவதற்காக கடுமையாக உழைத்த தனது மாமனை சிறிதும் இரக்கமின்றி தந்திரமாகக் கொலை செய்கிறார். பைராம்கான் கொலை செய்யப்பட்ட சிறிது நாட்களில் அவரது மனைவியான சல்மா பேகம் அவரது மூன்று வயது மகனான அப்துல் ரஹிம் கான் கனானுடன் அக்பரின் அந்தப்புரத்தில் சங்கமமானாள். அக்பரின் மனையரின் கணக்கில் ஒன்று கூடியது.
மார்ச் 29, 1561 :
அக்பரின் படைத்தலைவர்களான ஆதம்கானும் பீர் முகமதுவும் மாண்டவகத் அரசரான பாஸ் பகதூரை (Baz Bahadur) மத்திய இந்தியாவின் தேவாஸ் நகரத்திற்கு அருகிலிருக்கும் சங்க்ரூரில் தோற்கடிக்கிறார்கள். இந்தப் போரில் பெரும் படுகொலைகளை மேற்கூறிய அக்பரின் இரு படைத்தலைவர்களும் நடத்தி முடிக்கிறார்கள்.
ஏப்ரல் 27, 1561 :
ஆதம்கான், பாஸ் பகதூரின் அழகான அந்தப்புரத்துப் பெண்களை தனக்குக் கொடுக்காமல் அவரே வைத்துக் கொண்டதாக வந்த தகவல்களை அடுத்து அக்பர் ஆக்ராவிலிருந்து சங்க்ரூருக்கு விரைகிறார்.
ஜூன் 4, 1561 :
ஆதம்கானிடமிருந்து பிடுங்கிய பாஸ் பகதூரின் அழகிகளுடன் அக்பர் ஆக்ராவுக்குத் திரும்புகிறார். அக்பரின் அந்தப்புரத்து அழகிகளின் எண்ணிக்கை கூடுகிறது.
ஜூன் 1561 :
எட்டா (Etah, Sakit Pargana) மாவட்டத்தின் மீது நடந்த தாக்குதலை அக்பரே முன்னின்று நடத்துகிறார். பரோக் என்கிற கிராமத்தில் ஆயிரம் ஹிந்துக்கள் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு அந்த வீடு தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது. உள்ளிருந்த அத்தனைபேரும் எரிந்து சாம்பலானார்கள். கருணையும், அன்பும் கொண்ட அக்பரின் ஆணைப்படி செய்யப்பட்டது அது.
ஜுலை-ஆகஸ்ட் 1561 :
அக்பரின் காலித்தனங்களையும், அயோக்கியத்தனங்களையும், கொலைகார மனோபாவத்தையும் பொறுக்காத அக்பரின் அரசவையைச் சேர்ந்த, ஜான்பூர் கவர்னரான அலி குலிகானும் அவனது சகோதரன் பகதூர்கானும் அக்பருக்கு எதிராக புரட்சி செய்கிறார்கள். அக்பருக்கு எதிராக அவரது அரசவையைச் சார்ந்தவர்களே நிகழ்த்திய பல புரட்சிகளில் முதலாவது அது (அந்தப் புரட்சிக்குப் பின்னர் அக்பரின் அத்தனை ஆண் உறவினர்களும் அக்பருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்). அக்பரே நேரடியாக அதனை அடக்குவதற்குச் செல்கிறார். அலி குலிகானும், பகதூர்கானும் சரணடைகிறார்கள்.
அஜ்மீரின் மொய்னுதீன் சிஸ்டி தர்காவிற்குப் போகிறார் அக்பர். ஆனால் அங்கு செல்வதற்கு உண்மையான காரணம் இந்தியாவின் வீரப் பரம்பரையினரான ராஜபுத்திர அரசர்களை அடக்கி அவர்களை ஒன்றுமில்லாமல் செய்வதுதான். அந்த எண்ணம் ஈடேறிய பிறகு அக்பர் அஜ்மீருக்குச் செல்வதனை நிறுத்திக் கொண்டார்.
ராஜபுத்திர அரசர்களை அடக்குவதின் முதல்படியாக ஜெய்பூர் அரசர் ராஜா பர்மால் தோற்கடிக்கப்பட்டு, அவரது மகளை அக்பரின் அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்கும்படி ஆணையிடப்பட்டது. ராஜா பர்மால் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர் அக்பரின் தளபதிகளில் ஒருவனான ஷரஃபுதீன் ஜெய்பூரையும் அதன் சுற்றுப் பகுதிகளையும் தொடர்ந்து தாக்கிக் கொள்ளையிட்டான். ராஜா பர்மாலின் இரண்டு மகன்களும் (மான்சிங்கும், பகவான்தாசும்) சிறை பிடிக்கப்பட்டு ஆக்ராவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். ராஜா பர்மால் அவரது மகளை உடனடியாக அக்பரிடம் ஒப்படைக்காவிட்டால் அவரது இரண்டு மகன்களும் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்படுவார்கள் என மிரட்டப்பட்டார்கள். வேறு வழியின்றி அவரது மகளை ராஜா பர்மால் அக்பரிடம் ஒபப்டைக்கிறார். எனினும் அவரது இரண்டு மகன்களும் விடுவிக்கப்பட்டாமல் அக்பருக்கு சேவகம் செய்ய வைக்கப்படுகிறார்கள்.
அக்பரால் இவ்விதமாக மிரட்டப்பட்டு. இரக்கமில்லாமல் பிடித்துக் கொண்டு செல்லப்பட்டு மணமுடித்த ஹிந்துப் பெண்களை, மத ஒற்றுமை, இன ஒற்றுமைக்காக அக்பர் மணந்து கொண்டதாக இந்திய வரலாற்றாசியர்கள் மனசாட்சியின்றி புளுகுகிறார்கள்.
மார்ச் 1562 :
அக்பருக்கு எதிராகப் போர்புரிந்து கொண்டிருந்த மாண்டவகத்தின் அரசர் பாஸ்பகதூர் இறுதியில் அக்பரிடம் சரணடைகிறார். அரசவையில் அவருக்கு ஒரு சிறிய பதவி அளிக்கப்படுகிறது.
மே 16, 1562 :
அக்பரின் அரசவையில் பணிபுரிந்துவந்த மூத்த அதிகாரியும் அக்பரின் உறவினருமான சம்சுதீன் அல்காகான் என்பவர் அக்பரது படுக்கையறைக்கு வெளியே வைத்து ஆதம்கான் என்பவரால் படுகொலை செய்யப்படுகிறார். இந்த ஆதம்கான் சங்க்ரூரில் நடந்த போரை வழி நடத்திச் சென்ற அக்பரின் தளபதி. கோபமடைந்த அக்பர், ஆகாகானை ஆக்ரா கோட்டையின் உச்சியிலிருந்து தூக்கிவீசிக் கொல்ல உத்தரவிடுகிறார். கோட்டையின் மீதிருந்து வீசியெறியப்பட்ட ஆகாகான் இறக்காமல் அரை உயிருடன் இருக்கிறார். அக்பரின் உத்தரவின்பேரில் அவரை மீண்டும் கோட்டை உச்சிக்குத் தூக்கிச் சென்று இரண்டாவது முறையாகத் தூக்கியெறிந்து கொல்கிறார்கள்.
1562 :
அக்பரின் முதல் அமைச்சர்களில் ஒருவரான முனிம்கான் அக்பருக்கு எதிரான புரட்சியைத் துவங்கி ஆக்ராவிலிருந்து தப்பி ஓடுகிறார். அவரை ஷாஹரான்பூருக்கு அருகில் சரஸ்வத் என்னுமிடத்தில் பிடித்து அக்பரிடம் கொண்டு வருகிறார்கள். அக்பர் அவரை மன்னித்து மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்கிறார். அக்பருக்கு எதிராக நிகழ்ந்த இரண்டாவது புரட்சி இது.
நவம்பர் 5, 1562:
ஜெய்பூரைச் சூறையாடி ராஜா பர்மாலைச் சரணடையவைத்து, அவரது மகளை அக்பரின் அந்தப்புரத்திற்க்குக் கொண்டுவரக் காரணமாக இருந்த தளபதி சைஃபுதீன் என்பவர் அக்பருக்கு எதிராகப் புரட்சி செய்கிறார். அவரைத் துரத்திச் சென்ற அக்பரின் படை அவரைப் பல வகையிலும் துன்புறுத்த, சைஃபுதீன் குஜராத்துக்குத் தப்பி ஓடுகிறார். பின்னர் அங்கிருந்து மெக்காவுக்குப் போய்விட்டார்.
இது நிகழ்ந்த சில நாட்களுக்குப் பிறகு அக்பரின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான அப்துல் மாலி என்பவர் அக்பருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகிறார். பின்னர் அங்கிருந்து காபூலுக்குத் தப்பிச் செல்லும் அப்துல் மாலியை பாபரின் உறவுப் பெண் ஒருத்தி அடைக்கலம் கொடுத்து அவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கிறாள். சிறிது நாட்களில் அப்துல் மாலி அந்தப் பெண்ணின் சொத்துக்களை அடைவதற்காக அவளைக் கத்தியால் குத்திக் கொல்லுகிறான். So much for giving shelter.