பகுத்தறிவாளர்கள் சாதியை வைத்து இழிவு செய்யாதவர்கள் என்ற ஒரு பிம்பம் நம் எல்லோரிடமும் உண்டு. ஆனால் பகுத்தறிவாளர்களும் சாதியை வைத்து இழிவு செய்பவர்கள் என்ற உதாரணத்திற்கு ஒரு பகுத்தறிவாளரை சொல்லவேண்டுமென்றால் புகழ்பெற்ற கவிஞர் – திராவிடர் இயக்கக்காரர்களால் பொற்கிழி பெற்ற ஒரே தலைவரை சொல்லலாம்.
யார் அவர்?
புரட்சிக்கவி என்று அழைக்கப்பட்ட பாரதிதாசன் தான்.
திராவிட இயக்கத்தில் அழுத்தமாகத் தடம்பதித்த முதன்மைக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்தான்.
பாரதிதாசன் என்று சொன்னாலே அவர் ஒரு புரட்சிக்கவி; சாதி, மதம், இவற்றை எதிர்த்தவர்; பெண் விடுதலை, தமிழ்ப் பற்று இவற்றை ஆதரித்தவர் என்ற பிம்பம்தான் தோன்றுகிறது.
ஆனால் அவர் கடைபிடித்த கொள்கை அதற்கு எதிராகவே இருந்தது.
அவர் என்னென்ன தத்துவங்களை எழுதினாரோ பாடினாரோ அதைத் தம் வாழ்வில் கடைபிடிக்கவில்லை.
’….. கலப்பு மணம் ஒன்றே
நல்வழிக்குக் கைகாட்டி’
என்று பாடிய கவிஞர் தம் மக்களுக்குக் கலப்பு மணம் செய்விக்க முன்வரவில்லை.அதைக்கூட விட்டுவிடலாம்.
பாரதிதாசன் பகுத்தறிவுவாதி; சாதிக்குத் தீ என்றெல்லாம் சொல்கிறார்களே அது உண்மையா என்றால் இல்லை. திராவிட இயக்க பகுத்தறிவுவாதிகளும் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசுபவர்கள்தான்.
28-7-1946ல் புதுச்சேரி மாகாணத்தின் திராவிடர் கழகத்தலைவர் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அண்ணாத்துரையால் பொற்கிழி வழங்கப்பட்டது. பொற்கிழியாக ரூ. 25,000 தரப்பட்டது. அந்தக்காலத்தில் இத்தொகை மிகப்பெரிய தொகை. எந்தக் கவிஞனுக்கும் அந்தக் காலகட்டத்தில் இந்த அளவு தொகை வழங்கப்படவில்லை.
பின்னாளில் அண்ணாத்துரைக்கும் பாரதிதாசனுக்கும் முரண்பாடு எழுந்தது. அந்த முரண்பாட்டின் காரணமாக பகுத்தறிவுவாதி பாரதிதாசன் அண்ணாத்துரையை எவ்வளவு கேவலமாக எழுதமுடியுமோ அவ்வளவு கேவலமாக எழுதினார், தான் நடத்திய ’குயில்’ வார இதழில். முரண்பாடு என்று வந்துவிட்டால் சாதி ஒழிப்பாவாது; கண்ணியமாவது – இவற்றை எல்லாம் பகுத்தறிவுவாதிகளிடம் எதிர்பார்க்கமுடியாது.
சரி அப்படி என்னதான் எழுதினார் பாரதிதாசன்?
1958ம் ஆண்டு தான் நடத்திய குயில் வார இதழில்தான் பாரதிதாசன் அண்ணாத்துரையை கேவலமாக விமர்சித்து எழுதினார்.
கட்டுரையின் தலைப்பு : அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?
இந்தத் தலைப்பில் 4 தொடர்கட்டுரைகளை எழுதினார் பாரதிதாசன். அந்தக் கட்டுரைகளை இப்போது பார்ப்போம்.
1. குயில் இதழ், குரல்– – 1, (30-9-1958), இசை -18
அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?
…..
அறிவிப்பு உ. :-
இதற்குமுன் அதே முரசொலியில் அண்ணாத்துரை உங்கட்குக் கொடுத்த பொற்கிழிமேல் நீங்கள் நின்றுகொண்டு ஒலிபெருக்கியில் பேசுகின்றது போல் படம் வந்திருந்தது. அண்ணாத்துரை தான் உங்களைப் பொதுமேடையில் ஏற்றினாராம்.
இதற்கும் அடுத்துவரும் அறிவிப்புக்கும் சேர்த்துப் பதில் எழுதுவேன்.
அடுத்த அறிவிப்பு வருமாறு :-
முன் ஒருமுறை, உங்கட்குப் பொற்கிழி தந்து பொன்னாடை போர்த்தினார் அண்ணாத்துரை என்பதாகக் காட்டியிருந்தார் தம் திராவிடனில் என்.வி.நடராசன் அவர்கள். அதுவுமின்றி அண்ணாத்துரையே புதுவையில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது கவிஞர்க்குப் பொற்கிழி கொடுத்தேன், பொன்னாடை போர்த்தினேன்; அப்படியிருந்தும் என்னை கவிஞர் எதிர்க்கிறார் என்று கூறினார். இதற்கு நீங்கள் பதில் கூற வேண்டாமா?
எனது பதில் :-
எனக்குப் பொன்னாடை போர்த்துப் பொற்கிழி கொடுப்பதற்கென்று அமைந்த குழுவினர் தம் செயலைத் தொடங்கிப் பணியாற்றி வருகையில் அண்ணாத்துரை நிலைமை எப்படி என்பது தெரிந்தால், அண்ணாத்துரை எனக்குப் பொற்கிழி பொன்னாடை தந்திருக்க முடியாது என்பது விளங்கும்.
அதைக் கேளுங்கள்.
அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் (இன்னும் இருக்கின்றார்) பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை. துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் தொத்தா – அண்ணாத்துரையின் அப்போதைய புலம்பல் இது!
அன்னையோ சென்னையில் ஐயரோடு! காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.
பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் பொன்னப்பா தரும் சிறுதானம்.
இந்த நிலையில் எனக்குப் பொற்கிழியும் பொன்னாடையும் அண்ணாத்துரையா அளித்திருப்பார்? அதற்கு மாறாக அண்ணாத்துரை என்ன முயற்சியில் ஈடுபட்டிருந்தார் தெரியுமா அப்போது?
பெரியாரின் செல்வநிலை கண்டு மலைத்தார். அவரின் தொண்டராகி நிலைத்தார். குடும்பம் குலைத்தார். பெரியாரை அவர் அண்ணாரிடமிருந்தும், மக்களைப் பெற்றவரிடமிருந்தும் கலைத்தார்.
இன்னும் இதைச் சொல்வதென்றால் விரியும், திரு.குருசாமியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்.
இந்த முயற்சியில் அண்ணாத்துரைக்குச் சாப்பாட்டுக் குறைவு நிறைவேறிற்று.ஆனால் அவர் கோட்பாட்டுக் குறைபாடு அப்படியே இருந்தது.
தமக்கொரு நல்ல நிலையை ஏற்படுத்துக் கொள்ள எவன் ஏமாறுவான் என்று அண்ணாத்துரைக் கழுகு முகத்தைத் தீட்டிக் கொண்டிருந்தது.
எனக்கு பொன்னாடைப் போர்த்தும் விழாக்குழுவானது மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தது. அக்குழுவில் நாமக்கல் கருப்பண்ணர், செல்லப்பர் முதலியவர்கள் நாட்டில் செல்வாக்குள்ள புள்ளிகள்.
காலஞ்சென்ற குமாரசாமி இராசாவைத் தலைவராக கொண்ட இராசபாளையத்து மக்கள் என் விழாக்குழுவினர் வாயிலாக என்னைப் பாராட்ட எண்ணாமல் தனியாக என்னை இராசப்பாளையத்திற்கு அழைத்துப் பண முடிப்புக் கொடுக்க எண்ணி என்னை அழைத்தார்கள்.
நான் இராசபாளையம் போக இருப்பது அண்ணாத்துரைக்குத் தெரிந்து நானும் வருகின்றேன் என்று என்னிடம் கெஞ்சினார். அழைத்துப்போனேன். விழா நடந்தது அங்கும் பொற்கிழி அளித்தார்கள். அண்ணாத்துரை ஏதும் கேட்கவில்லை. அவர் எதிர்பார்த்தது சிறிதன்று.
இராசபாளையம் விட்டு வந்த அண்ணாத்துரை, என் விழாக்குழுவினரிடையெல்லாம் சென்று நான் கவிஞருடன் இராசபாளையம் சென்றேன் – சென்றேன்- என்று பறையடித்தார்.விழாக்குழுவில் புகுந்துகொள்ள வேண்டும் என்பது அண்ணாத்துரையின் ஆசை!
விழாக்குழுவினரில் ஒருவர் டி.என்.இராமன்! அவரை அண்ணாத்துரை நெருங்கினார்.தம் ஆசையை மலர்த்தினார். இராமன் ஒப்பினார். மேளம் மேளத்தை ஆதரிக்க என்ன தடை?
அண்ணாத்துரை விழாக்குழுவினரில் ஒருவராகிவிட்டார்.
(தொடரும்)
டி.என்.ராமன் இசை வேளாளர் சாதியைச் சார்ந்தவர். ஆகவே அண்ணாத்துரையும் டி.என்.ராமனையும் இணைத்து எழுதினார்.`மேளம் மேளத்தை ஆதரிக்க என்ன தடை?’என்று அண்ணாத்துரையின் சாதிப் பெயரை வைத்து இழிவு நோக்கில் எழுதியிருக்கும் பாரதிதாசன் சாதியை எதிர்த்தார் என்று சொல்வது நல்ல முரண்நகை.
To my knowledge, annadurai belonged to the mudaliar community & not as mentioned.
சஞ்சய்
தேவதாசிகள் தமிழகத்தில் பெரும்பாலும் இசை வேளாளர் மற்றும் செங்குந்தர் சமூகங்களில் இருந்து தான் வந்தார்கள்.
செங்குந்தர் சமூக தேவதாசிகளை கொடுத்த குடும்பங்கள்,அவர்களின் வாரிசுகள் பெரிய மோளம் என்றும் இசை வெள்ளாளர் வாரிசுகள் சின்ன மோளம் என்றும் வழங்கப்பட்டனர்.அண்ணாதுரையின் குடும்பம் பெரிய மேளம் வகையில் வந்ததால் அவரையும் அவர் குடும்பத்தையும் இழிவாக பேசுவது அன்று முதல் இன்று வரை உண்டு
அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர்கள் , பாரதிதாசன்,முத்துராமலிங்க தேவர் முதல் சில நாள் முன் த்விட்டேரில் அண்ணாதுரை தமிழரா என்று ஒரு வட இந்தியர் கேட்டதற்கு சுப்ரமணிய சாமி பாதி ஐயர் என்று கூறியது வரை அவர் குடும்பத்தின் தேவரடியார் தொடர்புகளை வைத்து இழிவு படுத்தல் தொடர்கிறது.