இந்து மதத்தை கண்டிக்கும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை கண்டிப்பதில்லையே ஏன் என்று இந்துக்கள் கேட்டால், அதற்கு ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வாரிசுகள் சொல்வது என்ன தெரியுமா?
‘‘கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லை
கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி’’
என்றுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னாரே தவிர இந்துக் கடவுள்களை மட்டும் சொல்லவில்லை. இதில் வரும் ‘கடவுள்’ என்ற சொல் கிறிஸ்தவ, முஸ்லிம் கடவுள்களையும் குறிக்கும் என்று கூறுகின்றார்கள்.
ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த வாசகம் இந்து மதத்திற்கு மட்டும்தான் என்பதை இவர்கள் மூடி மறைக்கிறார்கள். ஈ.வே. ராமசாமி நாயக்கர் கடவுள் மறுப்பு வாதத்தை இந்து மதத்திற்கு மட்டும்தான் சொன்னாரே தவிர கிறிஸ்த, முஸ்லிம் மத கடவுள்களுக்காக அல்ல. கிறிஸ்துவ, முஸ்லிம் மதத்தை ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்போதும் பாராட்டியே வந்திருக்கிறார். அந்த மதங்களைப் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கரின் விமர்சனம் மிக மிக மிக சொற்பமே. அந்த சொற்ப விமர்சனமும்கூட அந்த மதத்தைக் கண்டிக்கும் விதமாக இல்லாமல் அறிவுரை கூறும் விதமாகவே இருக்கும். ஆனால் இந்து மதத்தை விமர்சனம் செய்யும்போது அறிவுரை கூறும் விதமாக இல்லாமல் கண்டிக்கும் விதமாக இருக்கும்.
கடவுள் மறுப்பு என்று வரும்போது கிறிஸ்துவ, முஸ்லிம் கடவுள்களுக்கு விதிவிலக்கு அளிப்பது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் போலி கடவுள் மறுப்பு கொள்கையைத்தானே காட்டுகிறது! ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கடவுள் மறுப்புக் கொள்கை போலியானது என்பதற்கு இதோ ஆதாரங்கள்:-
16-11-1930 ஆம் ஆண்டு ‘குடியரசு’ இதழில் கேள்வி-பதில் வடிவில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் எழுதுகிறார்:-
வினா: கிருஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?
விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால், மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.
வினா: மகமதியனாவதில் என்ன கெடுதி?
விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால் பெண்களுக்கு மூடி போடாதே.
வினா: கிருஸ்தவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?
விடை: கிருஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள் தனமுமான கொள்கைகளும் இருந்தபோதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகிவிட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மன உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. அதனால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள்தனமும் ஆகும்.
25-08-1929 -’குடியரசு’ இதழில் எழுதுகிறார்:-
‘‘இன்று நாம் கொண்டாடும் திரு. மகமது நபி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமானது நான் முன் சொன்ன முறையில் கொண்டாடத்தக்க ஒரு ஒப்பற்ற பெரியாரின் கொண்டாட்டம் என்றே சொல்லுவேன். இன்னமும் விளக்கமாகச் சொல்வதானால், இப்போது நம்மால் மதத்தலைவர்கள் என்று சொல்லப்படும் பெரியார்களில் எல்லாம் திரு. மகமது நபி அவர்கள் மேலானவர்கள் என்றும், எல்லா மக்களும் பொதுவாகப் பெரிதும் அவரைப் பின்பற்ற உரியார் என்றும் கூட தைரியமாகச் சொல்லுவேன்’’.
23-08-1931 ‘குடியரசு’ இதழில் கூறுகிறார்:-
புத்தர், கிறிஸ்த்து, மகமது நபி ஆகியோர்கள் சீர்திருத்தகாரர்களாயத் தோன்றினார்கள்… மதங்கள் ஒழிந்த பிறகு தான் உலக சமாதானமும், ஒற்றுமையும், சாந்தியும் ஏற்பட முடியும் என்பது அநேக அறிஞர்களது அபிப்பிராயமானாலும் அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும்போது உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது. சாந்தி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத் தான் இருக்கக்கூடும் என்று கருதுகின்றேன்.
21-02-1935 ‘குடியரசில்’ எழுதுகிறார்:-
‘‘தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது.
… பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றப் படிப்பார்ப்போமானால் தமிழ் மக்களின் அப்போதிருந்த வாழ்க்கையும், மதமும், கடவுள் வழிபாடும் ஆகியவை எல்லாம் பெரிதும் இஸ்லாம் மதத்தையும், ஒரு சில கொள்கை மட்டும் கிறிஸ்துவ மதத்தையும் ஒத்து இருக்கின்றன என்று சொல்லலாம்.’’
26-06-1943 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-
‘‘இந்து மதத்தைத்தான் மானமுள்ள ஆதிதிராவிடனும், தமிழனும் வெறுத்து அதிலிருந்து விலக வேண்டுமே ஒழிய, அதைவிட்டு இஸ்லாம் மதத்தைப் பற்றியோ, வேறுமதத்தைப் பற்றியோ வெறுத்துப் பேசுவது மதியற்றதும், மான உணர்ச்சியற்றதுமாகும்.’’
26-12-1948 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-
அறிவான தெய்வமே (ராமலிங்கம்) அன்பான தெய்வமே (கிறிஸ்து) அருளான தெய்வம் (மகமதுநபி) சத்யமான தெய்வமே (காந்தி).
31-12-1948 ‘குடியரசில்’ எழுதுகிறார்:-
‘‘… ஆனால் கிருஸ்துவையோ, மகமது நபியையோ இம்மாதிரி காண முடிவதில்லை ஏன்? அவர்களெல்லாம் லட்சிய புருஷர்களாக ஒழுக்கத்தின் முதல்வர்களாக சிருஷ்டிக்கப்பட்டவர்கள்’’
04-06-1959 ‘விடுதலையில்’ எழுதுகிறார்:-
‘‘கடவுளை கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்தவன், முஸ்லிம்கள் மாதிரி கும்பீடு’’
25-12-1958 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-
‘‘கிறிஸ்தவர், முகமதியர்களை, உங்கள் கடவுள் எப்படியிருக்கிறார் என்று கேட்டால், யோக்கியமான கடவுள் என்கிறார்கள். அதற்கு உருவம் கிடையாது என்று சொல்லுகிறான். ஒழுக்கமே உருவானவர், கருணையை உடையவர், அவருக்கு ஒன்றும் தேவையில்லை என்று வேறு சொல்லுகிறான். ஏன் அப்படிப்பட்ட கடவுள் உங்களுக்கு இருக்கக்கூடாது என்று கேட்கிறேன்?’’
இந்த ஆதாரங்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கடவுள் மறுப்புக் கொள்கை போலியானவை என்பதைத்தானே காட்டுகிறது! கடவுளே இல்லை என்று சொல்கின்ற ஈ.வே. ராமசாமி நாயக்கர் அன்பான தெய்வமே கிறிஸ்து என்று சொல்லுகிறார் என்றால் அது போலி கடவுள் மறுப்புக் கொள்கையைத் தானே காட்டுகிறது! ஆக, ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கடவுள் மறுப்புக் கொள்கை இந்து மதத்திற்கு மட்டும்தான். அதுவும் போலி கடவுள் மறுப்புக் கொள்கைத்தான்.
இதிலே மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். கடவுள் இல்லை என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக பல இடங்களில் பேசியிருக்கிறார்; எழுதியும் இருக்கிறார்.
‘‘நாங்கள் கடவுள் இல்லையென்று சொல்லுபவர்கள் அல்ல; கடவுளை நம்பவேண்டாம் என்று சொல்லவும் இல்லை… அன்பான கடவுள், கருணையுள்ள கடவுள், ஒழுக்கமுள்ள கடவுள் நான் வேண்டாமென்று சொல்லவில்லை’’
(விடுதலை 10-09-1956)‘‘கடவுளைக் கும்பிடவேண்டாம் என்று கூறவில்லை. கடவுள் இல்லை என்று சொல்லவரவில்லை. யோக்கியமான ஒரு கடவுளை கும்பிடுங்கள், வேண்டாம் என்று கூறவில்லை.’’
(விடுதலை 04-06-1959)கடவுளைக் கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்தவன், முஸ்லிம் மாதிரி கும்பீடு’’
(விடுதலை 04-05-1959)
இது போன்ற முரண்பட்ட கருத்துக்களை பல தடவை ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியிருக்கிறார். கடவுள் இல்லவே இல்லை; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்றெல்லாம் பேசிய ஈ.வே. ராமசாமி நாயக்கர், ஒரே கடவுளை கும்விடு; கடவுளை கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை என்று பல்டி அடித்து முரண்பட்டவாதமல்லவா?-இப்படி நாம் கூறும் போது இதற்கு பதிலாக பகுத்தறிவுவாதிகள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா?
ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரே ஒரு கடவுளை கும்பிடு என்று சொன்னது ‘‘கடவுள் வேண்டும் என்று சொல்லுகின்ற, கடவுளை விடமுடியாதவர்களுக்குத்தான்’’ என்று பகுத்தறிவுவாதிகள் கூறுகின்றனர்.
ஆனால் இந்த பதில்கூட பலமில்லாததுதான். ஏனென்றால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் நாத்திகர்களாக்குவதுதானே ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வேலை. அதைத்தானே அவர் செய்து வந்தது. அதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கருத்துப்படி சாதியை ஒழிக்க வேண்டுமானால் பிராமணர்களை ஒழிக்கவேண்டும். பிராமணர்களை ஒழிக்க வேண்டுமானால் மதத்தை ஒழிக்க வேண்டும். மதத்தை ஒழிக்கவேண்டுமானால் கடவுளை ஒழிக்க வேண்டும். இப்படி கடவுளை ஒழித்தால்தான் எல்லாவற்றையும் ஒழிக்க முடியும் என்று சொல்கின்றபோது சிலருக்கு மட்டும் கடவுளை கும்பிடு என்று சொன்னால் அது தான் பகுத்தறிவா? அதுதான் கடவுள் மறுப்புக் கொள்கையா? இது முரண்பட்டவாதம்தானே!
கடவுள் வேண்டும் என்று சொல்கின்ற-கடவுளை விடமுடியாதவர்களுக்குத்தான் என்பது சரி என்றால் சாதி வேண்டும் என்று சொல்லுகின்ற-சாதியை விடமுடியாதவர்களுக்கு சாதியை கடைபிடியுங்கள் என்று கூறுவீர்களா? சாதியைவிட்டுவிட வேண்டும் என்று சொல்கின்றபோது சாதியை விடமுடியாதவர்களுக்கு மட்டும் சாதியை கடைபிடியுங்கள் என்று சொன்னால் அது எவ்வளவு மூடத்தனமோ அதேபோலத்தான் கடவுள் இல்லை என்று சொல்கின்றபோது கடவுளை விடமுடியாதவர்களுக்கு மட்டும் கடவுளை கும்பிடுங்கள் என்று சொன்னால் அதுவும் பகுத்தறிவற்ற மூடத்தனம் ஆகும். ஆனால் இப்படி பகுத்தறிவற்ற முறையில் பேசிய ஈ.வே. ராமசாமி நாயக்கரைத் தானே பகுத்தறிவு பகலவன் என்று சொல்லுகின்றார்கள் பகுத்தறிவுவாதிகள்!
தோழர் சத்திய மூர்த்தி (முதலில் ‘திராவிடனுக்கு ஏன் ‘ஆரிய’ பெயர்?) நமது மொட்டை பகுத்தறிவாளர்களை போலவே ‘பகுத்தறிவு’ என்ற முகமூடியை போட்டுக்கொண்டு மூடத்தனத்தைதான் வெளிப்படுத்துகிறார். அவரின் ‘மேலான’ கருத்துக்களை ஒவ்வொன்றாக வீழ்த்திக்காட்டுகிறேன்.
முதலில், அவரும் மற்றவர்களும் சொல்வது போல இந்துக்கள் வெறும் கல்லை ஒன்றும் கடவுள் என்று சொல்லவில்லை. இந்துக்களின் மிகப்பெரிய நூற்களான வேதங்கள் இறைவனை இருவிதமாக வழிபடலாம் என்று கூறுகிறது. ஒன்று சகுண ப்ரஹ்மம், அதாவது உருவம் மற்றும் குணங்கள் நிறைந்த கடவுள். இதுதான் இன்று நீங்கள் ஆலயங்களில் காணும் விக்ரக வழிப்பாடு. மற்றொன்று நிர்குண ப்ரஹ்மம், அதாவது உருவம் மற்றும் குணங்கள் இல்லாத இறைவன். ஆக, பகுத்தறிவான மதங்கள் என்று பெரியாரும், நமது சந்தர்பவாதிகளும் கூச்சல் போடும் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஏன் அதினினும் பழமையான யூதமதத்திற்கு முன்பே இந்துக்கள் உருவம் அற்ற கடவுளை வழிபடத்துவங்கிவிட்டனர். நாள் போக்கில், நிர்குண ப்ரஹ்மதை மறந்து, சகுண ப்ரஹ்மதை வணங்கத்துவங்கிவிட்டார்கள்!
இன்றும், அத்வைத வாதத்தை கடைபிடிப்பவர்கள், உருவமற்ற கடவுளைத்தான் வணங்குகிறார்கள். அடுத்ததாக அவர் என்னமோ திரு.வெங்கடேசன் பெரியாரின் முழு ‘கருத்துக்களை’ சொல்லாமல் சிலவற்றை மட்டும் சித்தரித்துக்கட்டுவதாக பழி கூறினார். நான் கேட்கிறேன், உங்கள் பெரியாரும் அப்படித்தானே! வேதங்களும் புராணங்களும் உண்மையில் என்ன கூறுகின்றன என்பதைக்கேட்காமல் தங்களுக்கு சாதகமாக இருக்கும் ஒன்று இரண்டை மட்டும் எடுத்துக்கொண்டு, இந்து மதமே போலி என்று கூறுவதுதான் நீங்கள் சொல்லும் பகுத்தறிவா? அவர் சொன்னார் “பெரியார் இந்து மதக் குறைகளை சொன்னால் இவர்கள் பெரியாரை இகழ்வார்கள். அனால் பெரியார் மற்ற மதக் குறைகளை சொன்னால் , பெரியார் அந்த மதத்தை சார்ந்தவர் அல்லது அம மதத்திற்கு அறிவுரை கூறுகிறார் என்று கூறி ஆதாயம் தேடுவார்கள்” என்று. ஒரு மதத்தின் குறைகளை சொன்னால், எப்படி அவர் அந்த மதத்தை சார்ந்தவர் என்று சொல்ல இயலும்? பெரியார் தன் காலம் முழுவதும் இந்து மதத்தை இழிவு படுத்துவதில் தானே கழித்தார்? அபூது, அவர் இந்து மதத்தை சார்ந்தவர் என்ற சொல்லுகிறோம்? இதுதான் நீங்கள் சொன்ன பகுத்தறிவா? உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள், கிறிஸ்தவமோ இஸ்லாமிய மதங்களைப்பற்றி விமர்சித்தல், என்ன நடக்கும் என்பது பெரியாருக்கும் அவரது தொண்டர்களுக்கும் நன்றாகவே தெரியும், எனவே பேசவில்லை. இது வடிவேல் சொல்வது போல “அங்க என்னப்போட்டு பொரட்டி பொரட்டி எடுத்தாங்க, அங்க எல்லாம் சும்மா இருந்துட்டு, நாளைக்கு சாகப்போற கெழவிய போட்டுத்தல்றேங்கிரியே, வெக்கமா இல்லே?” என்பது போல உள்ளது. எங்களுக்கும் சினிமா தெரியும் அய்யா!
இந்து மதத்தை என்ன சொன்னாலும், ஒன்னும் பேசமாட்டார்கள் என்ற கோழைத்தனம் தானே தவிர, இதில் பகுத்தறிவு எங்கே? மரபணுக்களை பற்றிப்பேசி அவருக்கு மிகவும் பிடித்தமான போலியான ஆரிய/திராவிட இன பேதத்தை பற்றியும் பேசுகிறார்! பெரியார் கிறிஸ்தவ மதத்தை கேலி செய்தாரா? இதென்ன புதுக்கதை? நான் கேட்கட்டுமா? ஜான் 3:16 கூறுகிறது “ஆண்டவர் பூமியை மிகவும் நேசித்தால், அவரது ‘ஒரே’ மகனைத்தந்தார்”. இதையே கிறிஸ்தவர்கள் அவர்கள் மதம் மட்டும் தான் உண்மை என்பதுபோல பேசுகிறார்கள். இறைவனுக்கு ஒரு மகன்தானா? ஏன், குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டாரா? இன்னொரு மகன் இல்லையா? இதையெல்லாம் கேட்டிருந்தால், பெரியார் இன்மயிலயே பகுத்தறிவாளர் என்று நானே ஒப்புக்கொள்வேன்! நீங்கள் கூறியது போல இஸ்லாமியர்களின் புனித என்ன 756 அல்ல, அது 786. வெளியில் சொல்லிவிடாதீர்கள்! சிரிப்பார்கள்…
நீங்களும் இந்து மதத்தை ஆராயுங்கள் தவறில்லை, ஆனால் கொச்சை படுத்தாதீர்கள். ஒரு ‘தலைவர்’ இன் சொற்களே இவ்வளவு மதிப்பு என்று நீங்கள் சொல்லும்போது, ஒரு மதத்தின் வாக்கு எவ்வளவு மதிக்கவேண்டும். ஆனால், நீங்களும் உங்கள் தலைவரும் பேசியதை சற்றே யோசித்துப்பாருங்கள்!
பெரியார் பகுத்தறிவு பகலவன் என்றால், அப்பொழுது விவேகானந்தர், வோல்டைர், மற்றும் விஞ்ஞானிகளை எல்லாம், என்னவென்று கூறுவீர்கள்??
கவியரசர் கண்ணதாசன் தனது “அர்த்தமுள்ள இந்து மதத்தில்” சொல்கிறார் உலகில் உள்ள அனைத்து மக்களுமே பகுத்தறிவாளர்கள் தானே! மனிதனையும் மிருகத்தையும் வேறு படுத்தும் ஆறாவது அறிவு தான் பகுத்தறிவு, தோழரே. இதற்காக என்ன தனி ஒரு கூட்டம் கழகம் எல்லாம்? கவியரசர் மேலும் சொல்கிறார்:- திருநீறு பூசுபவனும், கோவிலுக்கு செல்பவனும் பகுத்தறிவாளன் இல்லை என்றல், தலைவனுக்காக காரணமே இல்லாமல் தொண்டை கிழிய கத்துபவனும் அதே வகை தான்!”
ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன்:- பகவான் புத்தர் சொல்கிறார்:- “எந்த நூலில் எழுதியிருந்தாலும் சரி, யார் சொன்னாலும் சரி, உன் பகுத்தறிவுக்கு ஒத்து வரவில்லையென்றால், ஏற்றுக்கொள்ளாதே!” ஆசார்யர் ஆதி சங்கரர் தங்கள் ப்ரஹ்மஸுத்ர பாஷ்யத்தில் கூறுகிறார்:- “ஒருவன் சொல்லும் கருத்தை அடுத்தவன் முறியடிப்பான், அவன் சொல்வதை இன்னொருவன் நிராகரிப்பான். ‘நெருப்பு சூடு’ என்பதைப்போல் இருக்கும் கருத்தைத்தான் ஒருவராலும் நிராகரிக்க முடியாது”. இது பகுத்தறிவா இல்லை ஒரு மதத்தினர் கொடுத்த காசுக்காக இன்னொரு மதத்தை அடி ஆட்கள் வைத்து அடித்தும், பயித்தியக்கரத்தனமான வகையில் பேசுவதும் பகுத்தறிவா????
உங்கள் காலம் முடியப்போகிறது தோழரே! இனி உள்ள பகுத்தறிவு தாசர்களை, புதிய இந்து சமூகம், புறமுதுகு காட்டி ஓட வைக்கும். இது சத்தியம்!
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்!!!
ஜெய் ஹிந்த்….
திரு.வள்ளுவன் கூரியுள்ளது நூற்றுக்கு நூறு சரியே. பெரியாரின் பகுத்தறிவு என்பது – (பணம்)படைத்தவர்களின் அருளுக்காக ஏங்கிய பக்தி நெறியாகும். அவர் துவக்கிய இயக்கம் மத புரட்சியோ அல்லது சமுதாய புரட்சியோ அல்ல. பித்தலாட்டம். கடவுள் மறுப்பு மற்றும் விக்ரக வழிபாடு முட்டாள்தனம் போன்றவைதான் அவர் கொள்கை என்றால் அவர் எப்படி ஒரு பிள்ளையார் கோவிலுக்கு தர்மகர்த்தாவாக இருக்கமுடிந்தது??? யாரும் அறியாவண்ணம் ராஜாஜியுடன் திருவண்ணாமலையில் அண்ணாமலை கோவிலுக்குள் புகுந்துக்கொண்டு நகம்மையை மணம் முடிக்க ஆலோசிக்கமுடிந்தது???? ஈ.வே.ரா. கிருத்தவர்களின் அடிமை. அவர்கள் போட்ட தாளத்திற்கு இவர் ஆடினார் என்பதுதான் உண்மை. கி.பி.1545ல் இந்தியா ஒரு ஆன்மீக நாடு. ஆன்மீகத்தையும் பக்தியையும் பிராமணர்கள் மக்கள் மத்தியில் மிக ஆழமாக் ஊன்றியிருக்கிறாகள். அவர்களுக்குள் ஜாதி வேறுபாடு(தொழில் ரீதியாக) இருந்தாலும் சமூகத்தில் ஒன்றாக ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆகவே நாம் இந்தியாவை(அன்றைய பாரதத்தை) நமது ஆட்சிக்குள் கொண்டு வரவேண்டுமானால் முதலில் இவர்கள் ஒற்றுமையை ஒழிக்கவேண்டும். அதற்கு முதலில் ஜாதி துவேஷத்தை கிளப்பவேண்டும். அதை அடைய பிராமணர்களை அடக்கி அவர்களை சமுதாயத்திலிருந்து பிரிக்கவேண்டும் என்றும் அதற்கு லண்டன் அரசிடமிருந்து அனுமதி வேண்டும் என்று கோவாவில் இருந்த அன்றைய வைசிராய் கேட்டான். அனுமதி கிடைத்து. கிருத்தவர்களின் வெறியாட்டம் தொடங்கியது. பிராமணர்கள் கொடுமைப் படுத்தபட்டார்கள். பிராமண பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். கோவில்கள் அழிக்கப்பட்டது. அவர்களுடைய குள்ளநரித்தனம் வெற்றி கண்டது. அவர்களுடைய மதமாற்று பேயாட்டம் தொடங்கியது. அவர்களின் அடிச்சுவற்றை பின் பற்றித்தான் ஈ.வே.ரா.வும் தன் இயக்கத்தை ஆரம்பித்தார். அவர்கள் பாணியிலேயே பிராமண விரோத கொள்கையை கடைப்பிடித்தார். ஈ.வே.ரா. உண்மையிலேயே சமூக சீர்த்திருத்தவாதியாக இருந்திருந்தால் ஜாதியே கிடையாது என்றல்லவா முழங்கியிருக்கவேண்டும்? அந்த கிராதக கிருத்துவர்களின் தூண்டுதலால்தான் இவர் திராவி கழகத்தையே ஆரம்பித்தார். கிருத்துவ அரசும் அவருக்கு கோடி கோடியாக பணத்தை வாரி வழங்கியது. அதைத்தான் வீரமணி அனுபவித்துக்கொண்டிருக்கிறார். ஈ.வே.ரா தமிழர்களை காட்டுமிராண்டி என்றார். தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்றார். ஆனால் தமிழின தலைவர்கள் அவரை தெய்வமாக கொண்டாடுகிறார்கள். ஏன்?? இன்றைய ஆட்சியாளர்கள் ஈ.வே.ரா. காட்டிய வழி படிப்பறிவற்ற பாமர மக்களை சுலபமாக ஏமாற்ற முடிகிறது. அதை வைத்து இவர்கள் கொள்ளையடிப்பதற்கு ஏற்ற வழியாக உள்ளது என்பதால்தான். சுதந்திர போராட்டம் உச்ச கட்டத்தில் நடந்துக்கொண்டிருக்கும்போது 1920 ல் இவர் சேலம் மகாநாட்டில் இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டாம். அப்படியே சுதந்திரம் கொடுக்கவேண்டி வந்தாலும் தமிழ்நாட்டுக்கு சுதந்திரம் வேண்டாம். தமிழகம் உங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும் என்று அடிமை சாசன தீர்மானம் இயற்றியவர்தானே இந்த இந்து விரோத சீர்த்திருத்தவாதி!!!!!! அவருடைய சிஷ்யகோடிகள் கொள்ளையடிப்பதற்கும், கொள்ளையடித்ததை காப்பாற்றிக்கொள்ளத்தான் “பகுத்தறிவு” கோஷத்தை இன்னகும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஈ.வே,ரா.வும் அவர் சிஷ்யகோடிகளும் சீர்த்திருத்தவாதிகள் அல்ல — சீர்த்திருத்த விரோதிகள். இவர்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் காலம் வந்துவிட்டது. அன்று ஈ.வே.ரா எனக்கு முட்டாள்கள்தான் தேவை. படித்தவர்கள் இந்த இயக்கத்திற்கு வேண்டாம் என்றார். அன்று படிக்காத முட்டாள்களின் சந்ததிகள் இன்று படித்து முன்னேறிவிட்டனர். சாயம் வெளுத்துவிட்டது. இந்துக்களின் ஒற்றுமை மீண்டும் துளிர்விட ஆரம்பித்துவிட்டது.