”ஆங்கிலம் தமிழன் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும்.”
”தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துக்களை எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டி கால (தமிழ்) எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன்.”
”தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?”
நூல்:- தமிழும் தமிழரும்இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டுவிடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன். இந்தி எதிர்ப்பு மொழிச்சிக்கல் அல்ல. அரசியல் சிக்கல்தான்.
(விடுதலை 03.03.1965)
(முதலில் பார்ப்பனருக்காக இந்தியை எதிர்த்தேன் என்றார். பின்பு ஆங்கில அறிவு தேவையென்பதால் இந்தியை எதிர்க்கிறேன் என்கிறார். எவ்வளவு முரண்பாடான பேச்சு என்பதைப் பாருங்கள்! இதுதான் ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு மிக்க, நாணயமான பேச்சு.)
”இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் அல்லது வணிகத்திற்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயன்றி வேறு மொழியைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனமே, சூழ்ச்சியேதான் ஆகும்.
(குடியரசு 20.01.1920)”காலையில் நான் இம்மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கினால், அதற்கு வாக்களிப்பேன் என்று கூறினேன்.”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் III-ம் தொகுதி)”இன்றைய நாளில் கூட மேற்கண்ட தமிழ்த்தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள் ஆங்கிலப் புட்டிப்பாலை அருந்தி இருப்பார் களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி இவர்கள் வாழ்க்கை நிலையை வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகியிருப்பார்கள் என்பதோடு மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உயரமுள்ள உழைப்பாளராகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுவேன்.”
”இன்றைக்கும் எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்பட வேண்டுமானால், அதற்காக நம் மக்களை மேல் நாடுகளுக்கு அனுப்பி (ஆங்கில) புட்டிப்பாலில்தான் எண்ணங்கள், செயல்முறைகள், பண்டங்களின் பெயர்கள், பாகங்களின் பெயர்கள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படைக் கருத்துக்கள் முதலியவற்றை அறிந்து வரும்படி செய்யத்தான் நம்மால் முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இவற்றில் எதற்காகவாவது பயன்படுகிறதா?”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)”ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்பட்டால் நான் மிகமிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன் என்று பேசியிருக்கிறேன்.”
”உங்கள் வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள்) தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள்.
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)
தமிழ் மொழி மீது வெறுப்பும், ஆங்கில மொழி மீது பற்றும் கொண்ட ‘ஈ. வே. ராமசாமி நாயக்கர்தான் தமிழுக்காக அரும்பாடுபட்டவர் என்று சொல்கின்றனர். ஆங்கில மோகம் கொண்ட ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் தொல்காப்பியரையும், கம்பனையும் தமிழ் துரோகிகள் என்று சொல்கின்றனர். இதைச் சொல்ல ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? என்பது தான் உண்மையானத் தமிழர்களின் கேள்வி.
அது மட்டுமல்ல, ஆங்கிலம் படித்தால் ஆற்றலும் திறமையும் உடையவர்களாகிவிடுவார்கள் என்று சொல்லுகின்றாரே ஈ. வே. ராமசாமி நாயக்கர்-
-அப்படியானால் ஆங்கிலேயர்கள் எல்லோரும் ஆற்றலும் திறமையும் உடையவர்களா? ஆங்கிலேயே நாட்டிலேதான் பிச்சைக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அப்படியானால் ஆங்கிலம் தெரிந்த பிச்சைக்காரர்களுக்கும் ஆற்றலும் திறமையும் இருந்திருக்குமே, எதற்காக ஆற்றலும் திறமையும் வைத்துக்கொண்டு பிச்சையெடுக்கிறார்கள்? ஆக ஆங்கிலம் படிப்பதால் மட்டும் ஒருவர் ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி விடமுடியாது.
அதுமட்டுமல்ல, எல்லோரிடமும் ஆங்கிலமே பேசுங்கள் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர், தன் மனைவியுடனும், வேலைக்காரர்களுடனும் ஆங்கிலத்திலேயே பேசினாரா? இல்லையே! சாக்ரடீஸ் முதலானவர்களோடு ஈ.வே. ராமசாமி நாயக்கரை ஓப்பிடுகிறார்களே- அப்படியானால் ஆங்கிலப் புட்டிப்பாலை உண்டுதான் ஈ. வே. ராமசாமி நாயக்கர் பகுத்தறிவாளரானாரா? ஆங்கிலம் படித்ததனால் ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு ஆற்றலும் திறமையும் வந்ததா? பதிலைப் பகுத்தறிவுவாதிகள்தான் சொல்ல வேண்டும்!