New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உடையும் இந்தியா


Guru

Status: Offline
Posts: 24774
Date:
உடையும் இந்தியா
Permalink  
 


தமிழகத்தில் கிறிஸ்தவ மோசடி குறித்த சிறு தொகுப்பு.... பொறுமையாக படிக்கவும்
=============================
கிறிஸ்துவ மதமாற்றத்தின் இருண்ட பக்கம்
-------------------------------------------------
மதமாற்றம் உலகளாவிய பல நூற்றாண்டு காலப் பிரச்சனை. கிறிஸ்துவ மதத்தை என்ன செய்தாவது உலகெங்கிலும் பரப்புவதில் சர்ச்சுகள் தீவிரமாக இருந்து வருகின்றன.

உலகின் பிற பகுதிகளில் அவற்றின் தந்திரம் பலித்து, முழு நாடுகளையே மதம் மாற்றி, அங்கிருந்த ஆதி கலை கலாசாரங்களை அழித்துவிட்ட நிலையில், இந்து மற்றும் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் தீவிர மதமாற்ற முயற்சிகளை நிகழ்த்தி வருகின்றன.

பாரத தேசத்தைப் பொறுத்தவரை போர்ச்சுகீசிய, பிரெஞ்சு, ஆங்கிலேயப் படையெடுப்புகளின் மூலம் கிறிஸ்துவம் உள்ளே நுழைந்தது.

ஆகவே வந்தேறி மதம் என்று அழைக்கப்பட முழுத்தகுதி கொண்டது கிறிஸ்தவம். இஸ்லாமும் இதற்குச் சற்றும் சளைத்ததல்ல என்றாலும் இப்போது நம் கிறிஸ்தவத்தின் வேடங்களை மட்டுமே களையப் போகிறோம்.

போர்ச்சுகீசியப் படையெடுப்பின் போதுதான் கோவாவில் நூற்றுக் கணக்கான கோவில்கள் தரைமட்டமாக்கப் பட்டன; பல்லாயிரக் கணக்கான இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர். மதம் மாற மறுத்த இந்துக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டு, குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

போர்ச்சுகீசியர் கோவாவில் மட்டுமல்லாமல், கேரளம் மற்றும் தமிழகத்திலும் நுழைந்து தங்கள் கிறிஸ்துவ மதத்தை ஓரளவு ஸ்தாபித்தனர். இதை நாம் சொல்லவில்லை. வரலாறு பேசுகிறது. அவர்கள் அவிழ்த்து விட்டதுதான் ‘புனித தாமஸ்’ என்கிற கற்பனைக் கதா பாத்திரமும் அவரைப் பற்றிய கட்டுக்கதைகளும்.

தாமஸ் கட்டுக்கதை
----------------------------------

கோவாவில் செய்தது போலவே, வட தமிழகத்தின் (சென்னை) கடலோரத்தில் அற்புதமாக அமைந்திருந்த ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலையும் அழித்து அந்த இடத்தில் புனித தாமஸ் (Santhome Church) தேவாலயத்தை அமைத்தனர்.

மேலும் தற்போது ‘புனித தோமையர் மலை’ (St. Thomas Mount) என்று அழைக்கப்படும் பிருங்கி மலையில் (பிருங்கி முனிவர் தவம் செய்த மலை பிருங்கி மலை – இதுவே பின்னர் பறங்கி மலையாக மருவியது) உள்ள கோவில்களையும் அழித்து, அங்கும் ஒரு தேவாலயத்தை அமைத்தனர்.

புனித தாமசை ஒரு மயிலை பிராம்மணர் ஈட்டியால் குத்திக் கொன்றதாகவும் அவரது உடல் அங்கே புதைக்கப் பட்டிருப்பதாகவும் கதை கட்டிவிட்டனர்.

இங்கே முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்னவென்றால் தாமஸ் என்று ஒருவர் தமிழகத்துக்கு வந்தார் என்பதற்கோ, இங்கே ஒரு பிராம்மணர் அவரைக் கொன்றார் என்பதற்கோ எந்த வரலாற்றுச் சான்றும் கிடையாது.

ஆனால், போர்ச்சுகீசியர் படையெடுத்து வந்து ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை அழித்தனர் என்பதற்கும், பிருங்கி மலையில் இருந்த கோவிலையும் அழித்தனர் என்பதற்கும் கல்வெட்டு ஆதாரங்கள் உட்படப் பல ஆதாரங்கள் இருக்கின்றன.

எனவே, இந்தத் தாமஸ் என்கிற கதாபாத்திரத்தை உருவாக்கியதே பாரதத்தின் தென்பகுதியில் உள்ள இந்துக்களை மதமாற்றம் செய்யத்தான்.

தாமஸ் இங்கு வந்து திருவள்ளுவருக்கு குருவாக இருந்தார் என்றும் திருவள்ளுவர் தாமஸிடம் பைபிள் கற்று, பின்னர் பைபிளில் உள்ள பல கருத்துக்களின் அடிப்படையில் திருக்குறளை இயற்றினார் என்றும் கதை கட்டிவிட்டது தான் தமிழுக்குப் பங்குத் தந்தைகளின் பங்களிப்பு.

பதினெண்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றாகும் திருக்குறள். நம்மிடமுள்ள வரலாற்றுச் சான்றுகளை வைத்துப் பார்த்தால் திருவள்ளுவர் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருப்பார் என்று தெரிய வருகிறது.

மேலும் இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயற்றப்பட்ட கம்ப ராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றில் திருக்குறள் கருத்துக்கள் காணப்படுவதும், கிறிஸ்துவம் பற்றிய ஒரு தகவலும் இல்லாமல் இருப்பதுமே, இவர்களின் தாமஸ் கதை சரியான ஏமாற்று வேலை என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.

மயிலையில் உள்ள புனித தாமஸ் தேவாலயத்தின் சுவர்களில் பதினோராம் நூற்றாண்டு ராஜேந்திர சோழனின் கல்வெட்டுக் குறிப்புகள் இருந்து பின்னர் அழிக்கப் பட்டுள்ளன. கிறிஸ்தவர்களின் தாமஸ் கூத்தை “புனித தாமஸ் கட்டுக்கதையும் மயிலை சிவாலயமும்” என்ற புத்தகத்தின் மூலம் ஈஸ்வர் சரண் என்கிற ஆராய்ச்சியாளர் தோலுரித்துக் காட்டியுள்ளார். வேதம் வேதபிரகாஷ் என்கிற வரலாற்று ஆசிரியரும், தன்னுடைய “புனித தாமஸ் கட்டுக்கதை” என்கிற புத்தகத்தில் கிறிஸ்துவர்களின் சூழ்ச்சியை நிரூபித்துள்ளார்.

ஈஸ்வர் சரண் தாஸ் எழுதியுள்ள The Myth of St.Thomas and Mylapore Shiva Temple என்ற கட்டுரையை அவசியம் படியுங்கள். அதற்குக் கோன்ராட் யெல்ட்ஸ் எழுதியுள்ள முன்னுரையும் படிக்க வேண்டிய ஒன்று.

தெய்வநாயகத்தின் விஷவித்து
------------------------------------------------------

தமிழர் சமயம் பற்றிய திரிப்பு வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் தெய்வநாயகம் ‘விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் – ஒப்பு ஆய்வு’ என்கிற ஒரு நூலை 1985-86 ல் எழுதி வெளியிட்டு இந்தப் புனித தாமஸ் கட்டுக்கதையை உண்மையென ஸ்தாபிக்க முயற்சி செய்தார்.

ஆனால் அருணை வடிவேல் முதலியார் என்கிற தமிழறிஞர் மூலம் தரமான மறுப்பு நூல் ஒன்றை வெளியிட்டு தருமை ஆதீனத்தைச் சேர்ந்த அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தினர் தெய்வநாயகத்தின் சதியை முறியடித்தனர். அந்த நூல்: “விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல்” – அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம் ஆதீனம் – 1991].

சரி, இந்த தெய்வநாயகத்தின் குறிக்கோள் தான் என்ன?
--------------------------------------------------------------------------

தமிழர்களை இந்து மதத்திலிருந்து பிரிப்பது; தமிழ் சமயம் வேறு இந்து மதம் வேறு என்று நிறுவுவது; ஆதி கிறிஸ்துவமே தமிழர்களின் சமயம் என்றும் அதிலிருந்து வெளியானவே சைவமும் வைணவமும் என்றும் ஸ்தாபிப்பது; ஆதாமுக்கு கடவுள் கற்றுக் கொடுத்த முதல் மொழியே தமிழ் என்றும், ஆதாம் முதல் மெய்க்கண்டார் வரை வந்துள்ள ஆன்மீகச் சிந்தனையாளர்களின் கருத்துக்களின் தொகுப்பே ‘தமிழர் சமயம்’ என்று நிறுவுவது; என்பன போன்ற துளியும் ஆதாரமற்ற, தமிழருக்கு, தமிழ் நிலத்துக்கு எதிரான கோட்பாடுகளை உண்மையெனச் சாதிப்பதே அவரது குறிக்கோள்.

பித்தலாட்டத்தின் முன்னோடிகள்
-------------------------------------------------------

இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் இவர் திடீரென்று கிளம்பவில்லை.

இவருக்கு முன்னோடியாக நம் தமிழகத்தில் சில வந்தேறிகள் முயற்சி செய்துள்ளனர்.

அதில் முதலாமவர் 17-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டிலிருந்து வந்த ராபர்ட் தே நொபிலி (1577-1656) என்கிற கிறிஸ்துவப் பாதிரியார்.

இவர் நம் மக்களைச் சுலபமாக மதமாற்றம் செய்யவேண்டும் என்பதற்காக சமஸ்க்ருதம் கற்றுக்கொண்டு தன்னை “ரோமாபுரி பிராம்மணர்” என்றும் சொல்லிக்கொண்டார்.

காவி உடை அணிந்து உடம்பில் ஒரு பூணூலையும் அணிந்து கொண்டு, ஒரு ஆச்ரமத்தையும் அமைத்துக் கொண்டார்.

பைபிள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் மறைந்து போன வேதங்களில் ஒன்று என்று சாதித்தார். காவி, பூணூல் அணிந்து குடில் ஒன்றில் ஆச்ரமம் அமைத்து போதனை செய்ததால் ஓரளவிற்கு மதமாற்றம் செய்வதில் வெற்றியும் கண்டார்.

ஆனால் இவருடைய “கலாசாரக் களவுக்கலவை” (inculturation) முறை ஐரோப்பிய ஆசான்களுக்கு சற்றும் ஒப்புடைமை இல்லையாதலால் இவருடைய முயற்சிகள் பாதியில் நின்று போயின. [Refer: The Portuguese in India, Orient Longman, Hyderabad, 1990)]

ஜி யு போப் என்கிற போப்பையர் (1820-1907), கன்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்கிற வீரமாமுனிவர் (1680-1746) போன்றவர்களும் தமிழ் கற்றுக்கொண்டு தமிழ் நூல்களை மொழி பெயர்த்ததும், வேறு சில தமிழ் நூல்களை எழுதியதும் தமிழ் மொழி மேல் இருந்த பற்றினால் அல்ல.

சீகன் பால்கு ஐயர் (ஜெர்மானியர்), இரேனியஸ் (ஜெர்மானியர்) மற்றும் எல்லிஸ் துரை (Francis Whyte Ellis) ஆகியோரும் தமிழ்த் தொண்டு புரியும் நோக்கில் மொழித் தொண்டிர்ன் போர்வையில் சமயப் பணி ஆற்றியவர்களே.

இவர்களைப் போலவே கால்டுவெல் என்கிற பாதிரியாரும் முழுப் பொய்யும், புளுகும், புனைசுருட்டுமான ‘ஆரிய-திராவிட’ இனக் கோட்பாடுகளை உண்மையான சரித்திரம் எனப் புகுத்தி தமிழ் மக்களைப் பிளவுபடுத்தி மதமாற்றம் செய்ய அதிக நாட்டம் காட்டினார்.

இன்றைய திராவிட இனவெறியாளர்கள் இந்தப் புளுகுகளை விவிலியமாக ஏற்றுக் கொண்டுவிட்டனர். தமிழகத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கும் “திராவிட இனவெறி” என்கிற நச்சு மரத்துக்கு வித்திட்டவர் இந்த பிஷப் கால்டுவெல்தான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

கலாசாரக் களவு (Inculturation)
--------------------------------------------------

மேற்கண்ட மாதிரி அடிப்படை நாணயமற்ற நபர்களைக் கொண்ட சர்ச்சுகளும் மிஷனரிகளும் ‘மொழிக் களவு’ (Hijacking the native language), ‘கலாசாரக் களவு’, ‘இனவெறி’ (Racism) ஆகிய அபாயகரமான யுக்திகளின் மூலம் மதமாற்றம் செய்யத் தொடங்கினர்.

இவற்றில், இடையே சற்று மங்கியிருந்த ‘கலாசாரக் களவு’ (inculturation) முன்னரே உண்டு என்ற போதும் தற்போது பெரிதாகத் தலை தூக்கியிருக்கிறது.

அதாவது, ‘கத்தோலிக்க ஆஸ்ரமங்கள்’ அமைத்தல்; ஆஸ்ரமத்தின் நுழைவாயிலின் முகப்பில் ‘ஓம்’ சின்னத்தை வைத்தல்; ‘ஓம்’ என்பது “வேதச்சொல்” என்றும் “இந்துச்சொல் அல்ல” என்றும் சாதித்தல்; ஆஸ்ரமத்தின் உள்ளே யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் தியானம் செய்வதுபோல் இயேசு வீற்றிருக்கும் சிலை அமைத்தல்;

தாமரை மலரின் மேல் இயேசு ஒரு கால் மடக்கி, ஒரு கால் கீழே தொங்க விட்டு வீற்றிருப்பது போல் சிலையமைத்தல்; ஆஸ்ரமத்தில் உள்ள பாதிரியார்கள், கன்யாஸ்திரீகள் காவியுடை அணிதல்; போன்ற இந்துமதப் புனித வழிகளைப் போலியாக பாவனையில் ஏற்று, மக்களை ஏமாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

மேலும், யேசுவுக்கு ‘அஷ்டோத்திர நாமாவளி’, ‘ஸஹஸ்ர நாமாவளி’ அர்ச்சனைகள் செய்தல்; வேளாங்கண்ணி போன்ற சில கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ள ஊர்களுக்குப் “பாத யாத்திரை” போதல்; “இருமுடி” தூக்குதல்; மேரி மாதாவை “மாரியம்மன்” என்று சொல்லுதல்; சில மலைகள் மேல் அரசாங்கத்தின் அனுமதி இன்றிச் சர்ச்சுகள் கட்டி அந்த மலைகளைச் சுற்றி பௌர்ணமி “கிரிவலம்” ஏற்பாடு செய்தல்; என இந்து மத ஆன்மீக வழிபாட்டு முறைகளையும் கலாசாரக் களவாடுதலிலும் சர்ச்சுகளும் மிஷனரிகளும் இறங்கியுள்ளன.

இந்துக்களைச் சீண்டுதல்
---------------------------------------------------

முச்சந்திகளில் நாம் பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபடுதல் போல, மேரி சிலைகளை வைக்க ஆரம்பித்துள்ளனர். எல்லா நகரங்கள் மற்றும் ஊர்களின் எல்லைகளில் வரிசையாக சர்ச்சுகளும் பிரார்த்தனைக் குடில்களும் அமைக்கின்றனர்.

ஒவ்வொரு பகுதியிலும் தங்கள் ஜனத்தொகைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல், அளவுக்கதிகமான சர்ச்சுகள், மற்றும் பிரார்த்தனைக் குடில்கள் அமைக்கின்றனர். (இப்படிச் செய்வது மிக லாபகரமான, வெளிநாட்டு வருவாய் ஈட்டும் தொழில் என்பதும் மக்கள் அறிந்ததே). மலைகள், குன்றுகளின் மீது வெள்ளை வர்ணத்தில் சிலுவை வரைதல், ‘மரியே வாழ்க’ என்று எழுதுதல் கணக்கின்றி அதிகரித்து வருகிறது.

வேண்டுமென்றே இந்துக் கோவில்களுக்கு எதிரிலோ, அல்லது அருகிலோ சர்ச்சுகளை கட்டுகின்றனர். அவைகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஒலிபெருக்கி மூலம் மதப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

பின்னர் இந்துக் கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் மதமாற்றப் பிரச்சாரம் செய்கின்றனர்.

இந்துக் கடவுள்களைக் கேலி, கிண்டல், அவமானம் செய்யும் துண்டுப் பிரசுரங்களையும், இந்து மதப் பழக்க வழக்கங்களை ஏளனம் செய்யும் துண்டுப் பிரசுரங்களையும், ஏசுவைப் புகழ்ந்து எழுதப் பட்டிருக்கும் கையேடுகளையும், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வழங்கி அவர்களை மதமாற்றம் செய்ய முயல்கின்றனர்.

உதாரணமாக, சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில், திருவேற்காடு ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் போன்ற மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களின் வாசலில் கூட இந்த மாதிரிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். (ஆதாரம்: குமுதம் ஜோதிடம் – 14 நவம்பர் 2008 தேதியிட்ட இதழ்)

இந்துக்களைக் குழப்பும் சதி வேலை
தெய்வநாயகம் போன்ற போலி ஆராய்ச்சியாளர்கள் நம் மக்களின் மனதைக் குழப்புகின்ற நோக்கில், பல புத்தகங்களை அச்சடித்து வெளியிடுகின்றனர்.

அவர் சமீபத்தில் ‘திருநீறா சிலுவையா’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

அந்தப் புத்தகத்தில், “திருநீறு என்பது சாம்பல் புதன்கிழமை என்கிற ஆதி கிறிஸ்துவ விரதத்திலிருந்து வந்தது. இடம்-வலமாக நெற்றியில் இட்டுக்கொள்ளும் பழக்கம், ஆதி கிறிஸ்துவ சைவத்திலிருந்து, வைணவம் பிரிந்தபோது, மேல்-கீழாகத் திருமண் இட்டுக் கொள்ளும் பழக்கமாக மாறியது. சிவன் தன் இடது பாகத்தை சக்தியிடம் கொடுத்த பிறகு, அந்த சக்தியைப் “பெண்ணாக” வழிபட்டால் அவள் “பார்வதி” என்றும், “ஆணாக” வழிபட்டால் அவர் “விஷ்ணு” என்றும் போற்றப் படுகிறார்கள். திருஞான சம்பந்தரின் “திருநீற்றுப் பதிகம்” கிறிஸ்துவ மதக் கோட்பாடுகளையே இயம்புகிறது. தேவாரம், திருவாசகம், திருப்பதிகம் என அனைத்து சைவ இலக்கியங்களும் ரிக்கு, யஜூர், சாமம் என்ற வேதங்களைப் பற்றிச் சொல்லாமல் கிறிஸ்துவ வேதமாகிய பைபிளின் தத்துவங்களையே சொல்கின்றன” என்றெல்லாம் அபத்தக் களஞ்சியங்களை அள்ளி வீசியிருக்கிறார்.

மிகவும் நல்லது ஐயா!

அப்படியென்றால் பேசாமல் நீங்கள் எல்லோரும் திருநீறோ, திருமண்ணோ இட்டுக் கொண்டு எமது கோவில்களில் வந்து வழிபட வேண்டியதுதானே!

எங்களுக்குப் புரியாதா உங்கள் திருகுதாளங்கள். பொய் சொல்வது தவறு என்று விவிலியத்தில் சொல்லப்படவே இல்லையா அன்பரே? இல்லை உங்களுக்குத்தான் நாவு கூசவில்லையா?

மேலும், “புனித தோமையர்” (St.Thomas) தமிழகத்தில் நிறுவிய ஆதி கிறிஸ்துவமே தமிழர்களின் மதமாம்.

‘இந்தியாவின் மீது படையெடுத்து வந்த ஆரியர்களே ஆதி கிறிஸ்துவத்தைத் திரித்து சைவம், வைணவம் என்கிற கோட்பாடுகளை உண்டாக்கினராம். எனவே சைவம் வைணவம் ஆகியவை ஆதி கிறிஸ்துவத்தின் உப பிரிவுகளாகவே கொள்ளப்படவேண்டும்.

“பிதா-மகன்-பரிசுத்த ஆவி” என்கிற புனித மூவர் “சிவன்-முருகன்-சக்தி” என்றும் “பிரம்மா-விஷ்ணு-ருத்ரன்” என்றும் அழைக்கப் படுகின்றனர்” என்றெல்லாம் இந்துக்களின் மனமும் உணர்வும் புண்படும்படியாக பல அருவருக்கத்தக்க பிதற்றல்கள் ஏராளமாக எழுதப் பட்டுள்ளன.

இவற்றையெல்லாம் ஒரு முட்டாளின், மன நோயாளியின் பிதற்றல்கள் என்று அசட்டை செய்துவிடக் கூடாது.

விஷமே உருவான ஒரு மனிதனின் நச்சுக் கருத்துகள் என்பதை உணர்ந்து அவற்றைப் பரவவிடாமல் அழிக்கவேண்டும்.

பணம், தாய்மதத்தைப் பற்றித் திரித்துக் கூறுதல், அரசியல் அதிகாரத்தைக் கையகப்படுத்திக் கொள்ளுதல், இல்லாத நேயத்தை இருப்பதாகக் காட்டிக் கொள்ளுதல் என்று இவ்வாறு பலவகை புனைவுகளாலும் வேடங்களாலும் சற்றும் மனசாட்சியின்றி அப்பாவி இந்துக்களை மதமாற்றம் செய்யத் துடிக்கிறார்கள் கிறிஸ்தவ மத வியாபாரிகள்.

இதைப் பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொரு இந்துவுக்கும் தேவை.

#உடையும் #கிறிஸ்தவ #மோசடி



__________________


Guru

Status: Offline
Posts: 24774
Date:
Permalink  
 

கல்வி நிறுவனங்கள் - மேற்குலக ஆராய்ச்சிகள்- மதமாற்றம் -
கிறிஸ்தவ பிரிவினைவாதம் 
==================================
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஹார்வர்ட் போன்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சிக்கள் வரவேற்க வேண்டியதே. ஆனால் இந்திய மொழிகள் குறித்து மேற்குலக ஆராய்ச்சிகள் என்ற பெயரில் இதுவரை செய்தது என்ன ? கிறிஸ்தவ மிஷனரிகள் உள்ளே நுழைந்தால் என்ன நடக்கும்? காலங்காலமாக மொழி, பண்பாடு, கலாச்சாரம், இனம் குறித்த அறிவுலக ஆராய்ச்சிகள் என்று இந்தியாவை சர்வதேச அரங்குகளில் கீழ்மைப்படுத்துவதும் அதன் மூலம் மதமாற்றம் மற்றும் பிரிவினையை அல்லவா தூண்டி விடுகிறது.. இத்தகைய நிறுவனங்களின் பணி, அறிவியக்கத்தை ஒரு தரப்புக்கு உகந்தது போல மாற்றி அமைப்பதுதானே..

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், 
போடன் இருக்கை( Boden Chair) என்று ஒன்றை உருவாக்கி சம்ஸ்க்ருதத்தை பாடத்திட்டத்தில் இணைத்து அரங்கேற்றிய மோசடிதான் என்ன ? கவனமாக படியுங்கள்..

1827 ஆம் ஆண்டு இங்கிலாந்து, 
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், போடன் இருக்கை ( Boden Chair)
ஒன்றை உருவாக்கி அதில் கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய அதிகாரிகளை நிர்வகிக்க, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இங்குள்ள மொழிகளிலும், கலாச்சாரத்திலும் பயிற்சி அழிக்க சமஸ்கிருத்தை ஒரு பாடத்திட்டமாக ஆரம்பித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டது. 
(பின்னாளில் University college of London ( 1852) , எடின் பரோ( 1867), கேம்பிரிட்ஜ் (1867) ஆகிய இடங்களில் சமஸ்கிருத இருக்கைகள் உருவாக்கப்பட்டன..)

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சம்ஸ்க்ருத படிப்புக்கான போடன் இருக்கையை பேராசிரியர் கர்னல் ஜோசப் போடன் ஏன் உருவாக்கினார்.? 
இது குறித்து போடன் இருக்கையின் சமஸ்கிருத பேராசிரியர், சர் மோனியர் வில்லியம்ஸ் ( sir Monier williams ) தனதுபுகழ் பெற்ற ஆங்கில-சம்ஸகிருத அகராதியின் முன்னுரையில் கூறுவதாவது,

"கர்னல் போடன் (ஆகஸ்ட் 15, 1811 ) தனது உயிலில், இந்த சமஸ்கிருத இருக்கைக்கு தாராளமாக நன்கொடையை தந்ததின் நோக்கம் , சமஸ்கிருத இலக்கியங்களை மொழி பெயர்ப்பது, அது, தன் நாட்டவர் இந்திய மக்களை அவர்களின்( இந்தியர்களின் ) தேவ பாஷை யின் (புனித மொழியின்) மூலமாகவே 
கிறிஸ்தவத்திற்கு மாற்ற உதவும் என்றும் வெளிப்படையாக குறிப்பிட்டார்" என்கிறார் 
(Monier williams sanskrit - English dictionary, 1891)

மேலும்,

மோனியர் வில்லியம்ஸ் சமஸ்கிருத ஆராய்ச்சி குறித்து கூறுகிறார்.,

" பிராமணியத்தின் மகத்தான சுவர்களை வளைத்து அந்த அரணை துளைத்து இறுதியாக சிலுவை வீரர்கள் அந்த அரங்குக்குள் நுழைய வேண்டும். அப்போது தான் கிறிஸ்தவத்தின் வெற்றி, இறுதியாக இந்தியாவில் முழுமையடையும்.."
( modern India And the Indians, London, 1891)

இதன் மூலம் சமஸ்கிருத ஆராய்ச்சி என்று ஐரோப்பிய கிறிஸ்தவ மிஷனரிகள் மொழியியல் ஆராய்ச்சிகளுடன் இணைந்து, இந்திய மொழிகளில் ஊடுருவி இந்திய சமூகத்தை பிரித்து மதமாற்றம் ஒன்றையே இலக்காக கொண்டு செயல்படுவது புலப்படுகிறது..
ஏற்கனவே கோவை தமிழ் செம்மொழி மாநாடு என்று திமுக ஆட்சியில் நடந்த மாநாட்டில் பேராயர் எஸ். ரா. சர்குணம், மற்றும் சில பேராயர்கள் கலந்து கொண்டு இனவாதம் பேசியும், 
தமிழர்களை கிறிஸ்தவத்திற்கோ அல்லது இஸ்லாமுக்கோ இல்லையென்றால் திமுக வில் இணைவதின் மூலம் ' திராவிட சமயத்துக்கோ' மதம் மாறும்படி அன்று வேண்டுகோள் விடுத்ததும் அனைவரும் அறிந்ததே. தமிழர்களின் தாய் சமயமான இந்து சமயத்தை அழித்து தெய்வத்தமிழையும், தமிழகத்தையும் முழுமையான கிறிஸ்தவமயமாக்க தமிழ் மொழி என்னும் ஆயுதத்தை மிஷனரி கை கூலிகள் கையில் எடுத்து இருப்பது பாதிரியார் கால்டுவெலின் காலந்தொட்டே திராவிட இயக்கங்கள் மூலம் செயல்படுத்தபடுவதும், இந்து சமய அழிவுக்கு பிராமண துவேஷத்தை விதைப்பதும் தொடர் கதையாகிவிட்டது.. இதற்க்கு இங்கே சில போலி தமிழ் தேசிய போர்வையில் இயங்கும் கிறிஸ்தவ- வெறியர்கள் ஆதரவாகவும் செயல்படுகிறார்கள்...
எனவே, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கையில் சமர்ப்பிக்கப்படும் இந்து சமயத்தோடு மட்டுமே பின்னிப்பிணைந்த புனிதத்துவம் வாய்ந்த தமிழ் ஆராய்ச்சி கட்டுரைகளில் போலி, புனைவு, இனவாத, மதமாற்ற, பிரிவினைவாத சிந்தனைகள் தலை தூக்கதவாறு மத்திய, மாநில அரசுகள் தகுதியான தமிழறிஞர்களை வைத்து ஆராய வேண்டியது அவசியமாகிறது. இல்லையென்றால் கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையோடு கல்விநிறுவனங்களில் தமிழக மாணவர்களின் மனதில் தூவப்படும் விஷ வித்துக்கள் பிற்காலத்தில் இந்திய ஒருமைப்பாட்டுக்கே பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைய பெரும் முயற்சிகள் மேற்கொண்ட அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் DR. திருஞானசம்பந்தம், DR. ஜானகிராமன் அவர்களுக்கும், 10 கோடி நன்கொடை வழங்கிய மாநில முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் நன்றி..

வாழ்க தமிழ்..!! வெல்க தமிழ்..!! 
______________________________
தகவல் உதவி: உடையும் இந்தியா? மற்றும் Wikipedia...

https://en.m.wikipedia.org/wiki/Monier_Monier-Williams

https://archive.org/details/modernindiaindia00moni

அதிகம் பகிரவும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24774
Date:
Permalink  
 

மதமாற்றம்-பிரிவினைவாதம்-கிறிஸ்தவ மிஷனரி மோசடி.. 
================================
உலக மதமாற்றத்துக்கான லாஸான்
(lausanne) கமிட்டியின் இடைநிலை பயிலரங்கு 2000-ல் கூடியது. இங்கு 60 முக்கியமான செயல் திட்ட குழுவினர் கூடினர். ஆன்மிக போர் முறை என்பதே இந்த கூட்டத்தின் நோக்கமாக அமைந்தது. இந்த கூட்டத்தில் எல்லா மக்களையும் மத மாற்றுவதில் எப்படி அதிக விளைச்சலை காண்பது எ‌ன்று‌ம் விவாதிக்கப்பட்டது.. 
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த V. Ezekia Francis எ‌ன்ற மிசனரி தலைவரும் கலந்து கொண்டார். இவரது அறிக்கையின் தலைப்பு ' இந்திய சூழலில் ஆன்மிக மோதல் ' ( spiritual Conflict in the indian context ). இ‌ந்த தலைப்பின் கீழ் இவர் இந்திய ஒருமைப்பாட்டையே, கிறிஸ்தவம் இந்தியாவில் பரவுவதற்கு தடையாக காண்கிறார்...

All the above factors indicate that India is a country highly heterogeneous. But the spirit of being Indian is the binding factor which has totally integrated the country into one. Today displaying the ‘unity in diversity’, India portrays one entity.

What is considered above as merits of India, are unfortunately the deterrents for evangelization. The idol worship, territorial spirits, godmen and religious spirits, Herods and Jezebel spirits besides occult practices superstition etc. are the major factors that prevent effective evangelization..

அதாவது... 
'இந்தியன் என்கிற ஒருமைப்பாட்டு உணர்வு இந்தியா வை ஒரு தேசமாக பிணைத்து உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை காட்டி இந்தியா ஒரே நாடாக உள்ளது. எவை எல்லாம் இந்தியாவின் சிறப்பாக கருதப்படுகினதோ அவை எல்லாம் துரதிர்ஷ்டவசமாக மதமாற்றுவதற்கு தடைக்கற்களாக உள்ளது.

மேலும்.. 
வறுமை, இயற்கை பேரிடர் ஆகிய அனைத்தும் விக்ரக ஆராதனையின் விளைவாக இந்தியா மீது ஆண்டவனின் சாபங்கள் என்றும் அந்த அறிக்கை விளக்குகிறது. உதாரணமாக இந்தியாவில் நிகழ்ந்த பெரிய நிலநடுக்கம் வினாயகர் சதுர்த்தி விழாவுக்கு எதிரான கிறிஸ்தவ தேவனின் கோபம் என்றும் குறிப்பிடுகிறது...

ஆக கிறிஸ்தவ மிஷனரிகளின் மதமாற்ற, பிரிவினைவாத மோசடியில் இது, கடலளவில் ஒரு துளி அளவே..தமிழர்களே விழிப்புடன் இருங்கள்..

https://www.lausanne.org/content/indian-case-study



__________________


Guru

Status: Offline
Posts: 24774
Date:
Permalink  
 

திருட்டு திராவிடமும்- தமிழ் செம்மொழி மாநாடு- தமிழ் தேசியமும்- கிறிஸ்தவ மோசடி
===============================

2010 புதிய திருப்பங்கள் :
---------------------------------------

2009 ம் ஆண்டு, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஒரு பிரச்சார புத்தெழுச்சி கிடைத்தது. தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான், 'நாம் தமிழர்' என்னும் தீவிர தமிழ் தேசிய இயக்கத்தை உருவாக்கினார். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தொடர் கூட்டங்கள் நடத்தினார். அவருடைய இணையதளத்தில் மாவோயிஸ்ட்களுக்கும், காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களுக்கும் ஆதரவு அளிக்கப்பட்டது. இதனுடன் இணைந்து திராவிட - கிறிஸ்தவ புனைவுகளை பரப்பும் தெய்வ நாயகமும் சீமானுடன் இணைந்து செயல் பட்டார். இதன் மூலம் தீவிரப்படுத்தப்படும் தமிழ் அடையாளம் தீவிர கிறிஸ்தவமயமாக்கவும் படுகிறது..... 

தெய்வ நாயகம் வழக்கம் போல புதிய பெயருடன் மற்றோர் அமைப்பை உருவாக்கினார். " அனைத்து சுய மரியாதை தமிழர்களின் கூட்டமைப்பு ". இந்த அமைப்பு சீமானின் நாம் தமிழர் அமைப்புடன் இணைந்து செயல் பட்டது. அனைவரும் கோவிலுக்குள் சென்று வழிபடும் உரிமைக்காக போராடுவதாக பொய்யாக பிரச்சாரம் செய்த படி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மீது படையெடுத்தனர். ஆனால் இவர்கள் உண்மை நோக்கம் கோவில் கருவறைக்குள் நுழைவது மட்டுமே.. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை வைத்து தெய்வநாயகம் நடத்திய நிகழ்ச்சிகள் ஒரு கலவரத்தை தூண்டுவதை போல் அமைந்திருந்தன..

இந்நிலையில்.. 
2010, மே 29 ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் தெய்வ நாயகத்தின் அமைப்பால் கிறிஸ்தவ போதகர்களுக்கு என ஒரு பயிலரங்கம் நடத்தப்பட்டது. அதில் "இந்தியா தோமா வழி வந்த திராவிட நாடே" என்பதை எப்படி ஹிந்துக்களுக்கு கொண்டு செல்வது என்பதற்க்கான ஒரு நாள் பயிற்சி முகாமாக நடந்தது. அதில் இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடு என்ற புத்தகத்தை எழுதிய யேசுவடியான், கிறிஸ்தவர்கள் அரசு அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். தோமா புனைவைப் பயன்படுத்தி ஹிந்துக்களை மதம் மாற்றுவது குறித்து பல உத்திகள் இங்கு விவாதிக்கப்பட்டது. அதில்

*ஹிந்துக்களுக்கு அவர்கள் மதம் குறித்து இருக்கும் பல அறியாமைகளை பயன்படுத்தி, குழப்பி, அதற்கு பதிலாக புதிய பைபிள் விளக்கங்கள் குடுப்பது ஒரு உத்தி..

*ஹிந்துக்களிடம் ஏசு மட்டுமே ஒரிஜினல் ருபாய் நோட்டு என்றும் ஹிந்து கடவுள்கள் எல்லாம் அந்த ஒரிஜினலின் நோட்டின் ஜெராக்ஸ் பிரதிகள் மட்டுமே என்றும்...

*ஹிந்து கடவுளுக்கு எவ்வித உள்ளார்ந்த மதிப்பும் கிடையாது என்று கூறுவதும் ஆகும்.. 

இதற்கிடையில் தெய்வ நாயகம் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.. கருணாநிதி தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டாராம். எனென்றால் ஜூலை 2010 ல் நடத்தப்பட இருந்த தமிழ் செம்மொழி மாநாட்டில் பல முக்கிய பொறுப்புகளில் அவர் பிராமிணர்களை நியமித்து விட்டாராம்... 
இது ஒருபுறம் இருக்கட்டும்.. 

தமிழ் செம்மொழி மாநாடும்-கிறிஸ்தவ திராவிட தில்லுமுல்லுகளும்
===============================

கோவை செம்மொழி மாநாட்டிலும் வழக்கம் போல ஹிந்து விரோத, திராவிட பிரிவினைவாத, கிறிஸ்தவ குரல்கள் ஒலிக்கதான் செய்தது. அங்கே இந்தியத் தன்மையில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஒரு தமிழ் அடையாளத்தை வலியுறுத்தும் குரல்கள் எழுப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி பெரும் பணச்செலவில் மத்திய அரசின் பங்களிப்புடன் நடத்தப்பட்டது. 
ஒரு அமர்வில் தமிழ் மெய்யியல் என்று பேசப்பட்ட விஷயம்:

ஆன்மா, கர்மா போன்ற கோட்பாடுகள் திராவிடர்களை அடிமைப்படுத்த ஆரியர்களால் நுழைக்கப்பட்டன. திராவிடர்களின் தர்ம கோட்பாடுகள் ஆரியர்களால் திரிக்கப்பட்டு வர்ணாசிரம தர்மத்தை நியாயப்படுத்த பயன்பட்டது. அவர்கள் இவ்வாறாக ஆளும் இனமாக ஆகி, திராவிடர்களை அடக்கி ஆண்டனர்.இந்த தீய கோட்பாடுகளை பெரியார் எதிர்தார். தமிழ் சமுதாய விடுதலையை முப்பெரும் பெரியவர்கள் ( பெரியார், அண்ணா, கலைஞர் ) செய்து வருகிறார்கள். 
(Session on tamil philosophy 24.07.2010: world classical Tamil conference) paper by proffesor V. Siva prakasamk(WCTC10 2010) 

மற்றொரு அறிஞர், தோமா-கிறிஸ்தவ புனைவுகளில் ஒன்றான ' சமஸ்கிருதமும் வேதங்களும் கி. பி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை ' என்ற வாதத்தை முன் வைக்கிறார்
Paper by A. Karunandham

'தமிழும் சமயமும்' என்ற அமர்வுக்கு தலைமையேற்றவர் பிஷப். எஸ்றா சர்க்குணம். இவர் எவாஞ்சலிக்கல் சர்ச் ஆப் இந்தியா (Evanjalical church of india ) என்ற அமைப்பின் நிறுவன தலைவர். இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா சென்று வாக்குமூலங்கள், சாட்சியங்கள் அளித்தவர். இந்த அமர்வில் சமஸ்கிருதம் கீழமை படுத்தப்பட்டது. சற்குணம், தெய்வநாயகத்தின் புனவுரையான தமிழ் ஆன்மீக இலக்கியங்கள் கிறிஸ்தவ தாக்கமுடையது எனக் கூறினார். திராவிட இயக்கமே கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டது என்றார். 

தனது உரையை முடிக்கும் போது அவர் தமிழர்களை கிறிஸ்தவத்திற்கோ அல்லது இஸ்லாமுக்கோ இல்லையென்றால் திமுக வில் இணைவதின் மூலம் ' திராவிட சமயத்துக்கு' மதம் மாறும்படி கூறினார்.. 

( Session on tamil philosophy 24.07.2010: world classical Tamil conference) paper by Bishop. Ezra Sargunam (WCTC10 2010)) 

இப்படி எவ்வித ஆதாரமும் இல்லாத போலி-அறிவியல் கிறிஸ்தவ இனவாத தமிழர் அடையாளம் ஒன்று திராவிட இயக்கங்களால் உருவாக்கப்பட்டு அதனை பரப்புவதற்கு அப்போது மத்திய அரசு உதவியும் கிடைத்தது.. 



உடையும் இந்தியா? நூலில் இருந்து சுருக்கமான பதிவு....
 
Close
 
 
Up Next
 
2:20
হা হা হা পুলিশও হার মানলো 😂
 
BISSOY.com
 
51M Views
 
 
4:37
mermaid
 
Movie Scene
 
14M Views
 
 
3:13
Best Horror Scene Ever
 
You Like Clip
 
26M Views
 
 
4:21
Phần 154 New ● Tuyển chọn những pha troll ngu đường phố siêu bựa nhất 2018
 
Trần Lâm Dũng
 
100M Views
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24774
Date:
Permalink  
 

அவதூறு பிரசாரம் மற்றும் மதமாற்றங்கள் மூலம் கலவரத்தை தூண்டும் கிறிஸ்தவ மிஷனரிகள் குறித்து உடையும் இந்தியா? புத்தகத்தில் இருந்து.. 
===============================
1982- ம் ஆண்டு தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹிந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் கலவரங்கள் வெடித்தன. அன்றைய தமிழக முதலமைச்சர் எம். ஜி.ஆர். இந்த கலவரங்களை ஆராய ஒய்வு பெற்ற நீதியரசரும், திராவிட கோட்ப்பாட்டில் சாய்வு உள்ளவருமான வேணு கோபால் என்பவர் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் நியமித்தார். இரு தரப்பிலும் 161 சாட்சிகள் விசாரித்த விசாரணை கமிஷன், 323 சாட்சி பொருட்களையும் ஆராய்ந்தது. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகள் சார்ந்த 16 வழக்கறிஞர்கள் இதில் பங்கு பெற்றனர். இந்த விசாரணை கமிஷன் தனது அறிக்கையில் மிக தெளிவாக, இக் கலவரங்களின் வேர் காரணமாக ஆதிக்க வெறி கொண்ட மத மாற்றத்தையும், அதற்காக மேற் கொள்ளப்பட்ட பிரச்சாரத்தையுமே காரணமாகக் காட்டியது.. இவ்விசாரணையை நடத்திய நீதியரசர்கள் கிறிஸ்தவர்கள் இந்த மாவட்டத்தின் பெயரையே கன்னியாகுமரி என்பதிலிருந்து 'கன்னி மேரி" என மா‌ற்ற முயன்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்..

எடுத்துக்காட்டாக, மண்டைக்காடு கலவரங்களுக்கு பின்னர் கொல்லங்கோடு என்ற கடலோர கிராமத்தில் ஓர் உள்ளூர் கிறிஸ்தவ அமைப்பால் உள்ளூர் ஹிந்துக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தலை வெட்டி கிருஷ்ணர் உருவப்படம். ஜீஸஸ் ஆர்ட்ஸ் உருவாக்கிய வாழ்த்து அட்டை. இதில் புருஷோத்தமரின் தலை ஏசு என்று வாசகம் எழுதப்பட்டு இருந்தது.. 
1981 மண்டைக்காடு கலவரங்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு உள்ளுர் கிறிஸ்தவ அமைப்பு ஹிந்து ஆன்மீக அவதாரமான அய்யா வைகுண்டர் (17 ம் நூற்றாண்டு ) குறித்து அவதூறான ஓரு புத்தகம் வெளியிட்டது. இந்த நூலில், பைபிள் இல் மத்தேயு 13.25 ம் வசனத்தில் கூறப்பட்டிருக்கும் மனித குல விரோதியுடன் அய்யா வைகுண்டர் ஓப்பிடப்பட்டார்.. அவர் மீது அவதூறுகள் வாரி இறக்கப்பட்டது.. இந்த நூல் மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் எ‌ன்று‌ மாவட்ட நிர்வாகம் கூறியது. ஆனால் இந்த கிறிஸ்தவ தூண்டல் எல்லாம் மறைக்கப்பட்டன. அமெரிக்காவின் evanjalical சக்திகள் கன்னியாகுமரி கலவரங்களை கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை என்று சொல்ல ஆரம்பித்தது. அமெரிக்கா அரசு தலையிட வேண்டும் என்று பிராச்சாரங்கள் செய்தது.. வாஷிங்டன் மூலமாக தில்லியை நிர்பந்தித்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியது..

இன்னும் பக்கம் பக்கமாக கலவரத் தூண்டல்களை கூறலாம்....

இதன் மூலம் மத விவகாரங்களில் இந்தியா ஒரு சகிப்புத்தன்மையற்ற நாடு என்று சர்வதேசத்தை நம்ப வைக்க அமெரிக்காவை உள்ளே இழுத்து விடும் கிறிஸ்தவ மிஷனரிகளின் நரித்தந்திரம் புலப்படுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24774
Date:
Permalink  
 

 பன்னாட்டு கிறிஸ்தவ அமைப்புகள் இந்தியாவில் ஹிந்துக்களை மதம் மாற்ற செய்யும் பித்தலாட்டங்களை ஆதாரங்களுடன் விவரிக்கிறது உடையும் இந்தியா? புத்தகம்....

============================
ஹிந்துக்களை மதம் மாற்ற பன்னாட்டு நிறுவனங்கள் 
==============================
பில்லி கிரஹாமின் எவாஞ்சலிக்கல் அசோசியேஷன்(billygraham evangelical) என்ற அமைப்பும், அமெரிக்காவின் கிறிஸ்டியானிட்டி டுடே(Christianity today ) என்ற அமைப்பும் இணைந்து 1966 இல் பெர்லினில் கிறிஸ்தவ மத பிரச்சாரத்துக்கான உலக மாநாட்டை நடத்தின. 100 நாடுகளில் இருந்து 1200 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அடுத்த மாநாடு 1974 சுவிட்சர்லாந்து நாட்டில் லாசன் நகரில் நடைபெற்றது. 150 நாடுகளிருந்து 2700 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பத்து நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் உலக நாடுகளில் செய்யப்பட வேண்டிய மத மாற்ற பிரச்சார வியூகங்கள் வகுக்கப்பட்டது. இம்மாநாடு லாசான் மாநாடு என்று அழைக்கப்படுகிறது..

இந்த மாநாட்டில் உருவாக்கப்பட்ட செயல் திட்டங்கள் ' லாசன் மாநாட்டு தாள்கள்' என்று‌ அழைக்கப்படுகிறது. இவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் எ‌ன்று கருத‌ப்படு‌கிறது. இதனை தொடர்ந்தே உலகின் பல பாகங்களில் பல்வேறு இயக்க செயல்பாடுகள் ஒரு கிறிஸ்தவ உலகை உருவாக்க தீவிரமாக செயல்படுகிறது.. 
இதில் ஒரு தனி செயல் படை ஹிந்துக்கள் பற்றி ஆராய்வதற்காக என்றே உருவாக்கப்பட்டது.. அடுத்த சில பத்தாண்டுகளில் ஹிந்துக்களை குறி வைத்து மதம் மாற்ற செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த தனிப்படை தாய்லாந்தில் கூடியது. அந்த அறிக்கை இன்று ' ஹிந்துக்கள் பற்றிய தாய்லாந்து அறிக்கை' (The Thailand Report on Hindus) என அறியப்படுகிறது. 
இந்த அறிக்கை ஹிந்துகளை பல துண்டுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவையும் எப்படி அணுகலாம்? பிரிவுகளின் பலவீனம் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது? எ‌ன்று‌ விரிவாக விவரிக்கிறது. ஒரு பன்னாட்டு வர்த்தக கம்பனி எப்படி சந்தையை அணுகுமோ அதே பாணியில் ஹிந்து சமுதாயத்தை மதம் மாற்றுவதை திட்டமிடுகிறது. 
எப்படி மதம் மாற்றுவது என்ற வழிமுறைகளையும் கொடுக்கப்பட்டுள்ளது.. 
ஹிந்து மாணவர்களுடன் பழகி நெருக்கமான நட்பை வளர்க்கும் படி கிறிஸ்தவ மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது., 
ஹிந்து மாணவர்களுக்கு சிறப்பு பைபிள் வகுப்பு நடத்துவது.,
அவர்களுக்கு நிதி தேவைப்படும் போது நிதி வழங்குவது., 
சமூகப்பணிகளை மதமாற்ற பிரச்சாரத்துடன் இணைநத்து செய்வது..
உள்ளூர் சர்ச் செய்யும் சமுதாய பணிகள், கிறிஸ்தவர் அல்லாத சமுதாயத்திற்கு செய்யும் மத மாற்ற பிரச்சாரமே முதன்மையானதாக இருக்க வேண்டும்..
இதற்க்கு அறிக்கை தயார் செய்தவர்கள் எவான்ஞலிக்கல் பெல்லோஷிப், வேல்டு விஷன் அமைப்பு, மற்றும் பன்னாட்டு கிறிஸ்தவ குழுக்கள்...

அதிகம் பகிருங்கள்.. விழிப்புணர்வு கொள்ளுங்கள்..

https://billygraham.org/

https://en.m.wikipedia.org/…/Lausanne_Committee_for_World_E…



__________________


Guru

Status: Offline
Posts: 24774
Date:
Permalink  
 

 உடையும் இந்தியா? புத்தகத்தில் இருந்து.. 

==============================
சைமன்!! கச்சிதமாக திட்டம் தீட்டுவதில் திறமைசாலி.
சமீப காலமாக இவன் முப்பாட்டன் முருகன், ஆயர்குலத்தோன் கண்ணன் என்று மார்க்கெட்டிங் வித்தையில் கலக்கிவருகிறான். இவன் ஹிந்து கடவுள்களை பற்றி பெருமையாக பேசி மார்கெடிங் செய்கிறான் என்றுதான் முதலில் நினைத்தேன், உண்மையில் இவன் என்ன பேசுகிறான் என்றால் எல்லாம் கிறிஸ்தவ மிஷாநரிகள் விதைத்த நஞ்சை வேறு விதமாக தமிழர்கள்மேல் பாய்ச்சுகிறான் அவ்வளவுதான், என்னயிருந்தாலும் கிறிஸ்தவனில்லையா!!
இது எங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டது என்று முதலில் கூறுகிறேன்.
வெள்ளைக்காரன் நம்மை ஆண்டபோது நம்மை மதம் மாற்ற பெரும் தடையாக இருந்தது ஆழமாக வேரூன்றிய ஹிந்துமதம் மற்றும் அதன் கிளை நூல்கள், துணை நூல்கள். இதை அனைத்தையும் கண்டு வியந்த வெள்ளைக்காரன் தாழ்வு மனப்பான்மையால் இந்தியாவை பற்றி கற்றுக்கொள்வதெற்கென்று ஒரு கல்வி நிலையம் துவங்கப்பட்டது ஐரோப்பாவில் 18ம் நூற்றாண்டில். இதில் இந்தியாவை பற்றி படிப்பதற்கு பல மாணவர்கள், பாதிரிகள், அறிவுஜீவிகள் என்ற முட்டாள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியா முழுக்க அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு இட்ட கட்டளை ஒன்றுதான் 'இந்திய கலாச்சாரமும், மதமும், வேதமும், உபநிஷத்துக்கள், இதிகாசங்கள், முக்கியமாக சமஸ்கரித்ததை அனைத்தையும் விவிலியத்துக்குள் அடக்குகிற மாதிரி உங்கள் ஆய்வறிக்கைகளை வெளியிடவேண்டும்'. இதிலிருந்து துவங்கியதுதான் ஆரிய கொள்கை, திராவிட பிரிவு, தலித், இயற்கை வழிபாடு என்று அவர்கள் மதத்தை பரப்ப வசதியாக இருக்கிற மாதிரி கிட்டத்தட்த்த 250 வருடங்கள் இதை பற்றி பல ஆய்வறிக்கைகள், புத்தகங்கள் வெளியிட்டுக்கொண்டேயிருந்தார்கள். இதில் ஒவ்வொரு அறிக்கையிலும் முரண்பாடுகள் இருந்துகொண்டேயிருக்கும், காரணம் ஹிந்துமதம் அவ்வளவு ஆழமானது. பிஷப் கால்டுவெல், ஜி.யு போப், வீரமாமுனிவர் Constanzo Beschi போன்றவர்களும் இதிலடக்கம்.
இந்த புத்தகங்கள் மற்றும் அறிக்கைகள் எல்லாம் பிரிவினையை தூண்டுவதாகவே இருக்கும், 'இந்தியா ஒன்றாக இருக்கக்கூடாது, அது பல துண்டாக வேண்டிய ஒரு நிலம்' என்றுதான் முடிவுரை எழுதியிருப்பார்கள்.
இவர்கள் பணி இதெல்லாம் விவிலியத்திலிருந்து வந்தவைதான் என்று அறிக்கை வெளியிடவேண்டும், ஆனால் அதை அவர்களால் செய்யமுடியவில்லை, யானையை கொசுவின் செவிக்குள் திணிக்க பார்த்தார்கள். கடைசியில் இவை அனைத்தும் மூட நம்பிக்கைகள் என்று முடிவுக்கு வந்து, பிறகு இன பிரிவினையை கதச்சிதமாக ஆரம்பிக்கிறார்கள். அதுதான் இன்றுவரை நடக்கிறது, தமிழர்கள் ஹிந்துக்கள் இல்லை என்பெதெல்லாம் இதிலிருந்து வந்தவைதான்.
இவர்கள் எழுதிய பல புத்தகங்களை சில ப்ராமண எதிர்ப்பாளர்கள் பெரியாருக்கு முன்பே ஏற்றுக்கொண்டிருந்தார்கள். 1940கு பிறகு பெரியார், அண்ணா, கருணாநிதி, தெய்வநாயகயம் மற்றும் அவரது மகள் தேவகலா,தெருமா, செபாஸ்டியன் சைமன், திருமுருகன் காந்தி, போன்ற பிரிவினை பேசும் அனைவரும் இந்த நூல்களை விரும்பினர். இன்றுவரை இதை மெருகேற்றித்தான் தெய்வநாயகம் போன்றோர்கள் தோமா கதை புனைந்து சென்னை பல்கலைக்கழகத்தில் Christian Studies Department ல் சமர்ப்பித்து Ph.D பட்டம் வாங்கினார். அவரது மகள் இந்த வெள்ளைக்காரர்கள் அறிக்கைகளை வைத்துதான் கிறிஸ்தவ மதம் மாற்ற பிரச்சார கையேடுகள் பாதிரிகளுக்காக வெளியிடுகிறார்கள்.

இந்த நூல்களில் எப்படியெல்லாம் நம் இலக்கியங்களை திரித்தார்கள் என்று 'உடையும் இந்தியா' என்ற புத்தகத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்காக இரண்டு பக்கங்களை இங்கு ஸ்கேன் செய்து பதிவேற்றியுள்ளேன்.
பல திராவிடவாதிகளும் இதை சொல்லி பிழைப்பு நடத்திப்பார்த்தார்கள், ஆனால் முழு வெற்றியை எட்ட முடியவில்லை. இந்நிலையில்தான் சைமன் இந்த கொள்கையை வேறு விதமாக எடுக்கிறான்.

முருகனை Charles Darwin,(உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி) Theory of Evolution னுடன் ஒப்பிட்டு, மனித பரிணாம வளர்ச்சியின் ஒரு பாகம்தான் முருகன் என்று கூறுகிறான். இதிலிருக்கும் சூட்சுமம் என்னவென்றால் முருகன் கடவுளே இல்லையென்பதுதான் இதில் ஒளிந்திருக்கும் அர்த்தம். வரும்காலங்களில் ஏசுவே கடவுள் என்று கூற வசதியாக இருக்கும்.

அடுத்து கிருஷ்ணனை இயற்கையுடன் ஒப்பிடுகிறான், மனிதன் மழையை வணங்கினான், மேகங்கள் என்றால் மாயோன்,, மேகங்கள் கருப்பு, கருப்பு என்றால் மால், மால் திருமாலாகி, பிறகு பெருமாளாகியது என்று பிதற்றுகிறான் இந்த கிறிஸ்தவ அடிமை. (பெருமாளுக்கு பிறகு 9வது அவதாரம்தான் கிருஷ்ணன், இந்த அரைவேக்காடு என்னன்னாவோ புலம்புகிறது) இங்கேயும் கடவுள் என்று கிருஷ்ணனை இவன் கூறவில்லை, அது ஒரு இயற்கை வழிபாடு அவ்வளவே.
(குறிப்பு:யாதவர்கள் இவனிடம் கவனமாக இருக்கவும்)

மஹாபாரத போரில் வீரர்களுக்கு சோறு போட்டவன் பாண்டிய மன்னன் பெருஞ்சோற்று உதயன் இளஞ்சேரலாதன் என்று தமிழனின் பெருமையை கூறுகிறான். சரி கிருஷ்ணன் இல்லாமல் மஹாபாரதம் இல்லையே, இப்படி முரண்பாட்டின் மொத்த உருவமாக சைமன் திகழ்கிறான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24774
Date:
Permalink  
 

 உடையும் இந்தியா-அரவிந்த் நீலகண்டன்

********************************************
தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் அமெரிக்க உளவுத்துறை இந்திய மிஷநரிகளுடன் சேர்ந்து செய்த சதி!!! ஆச்சர்யமா,, கீழே படியுங்கள் கொஞ்சம் பெரிய பதிவுதான்.
'ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்' இது பழமொழி. இந்தியாவில் இப்போது கலாச்சார மையம் என்ற பெயரில் இயங்கிவரும் மதம் மாற்ற இயக்கங்களை காரி துப்புகிறது இப்புத்தகம். தோமா என்கிற இல்லாத மனிதரை உருவாக்கி பிறகு அதற்க்கு வலு சேர்க்க பொய்க்குமேல் பொய்யை கூறுவது. இவர் திருவள்ளுவரை சீடராக்கினார் என்று கூறுவது இப்படி பல அபத்தங்கள். தோமா குறித்த பழைய கிறிஸ்தவநூல்கள் சிரியா மற்றும் ஜோர்டானில் உள்ளவை என்ன கூறுகிறதென்றால் 'தோமா காலாமினா என்ற இடத்தில் மரணமடைந்தார், பிறகு அவரது எலுப்புகள் 300 ஆண்டுகளுக்கு பிறகு மெசொப்பொத்தாமியாவில் உள்ள எடிசா என்னுமிடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுவிட்டன', இதையெல்லாம் அறியாத கூமுட்டைகள் தோமா சென்னை பரங்கிமலையில் ப்ராஹ்மணரால் கொலையுண்டார் என்று ப்ராஹ்மண வெறுப்பை உமிழ்வதற்க்காக மட்டுமே பயன்படுத்திடுகிறார்கள்.

Journal of the Institute of Asian Studies
World Tamil Spiritual Awareness Movement
Dravidian Soulology Movement (தெய்வநாயகம், மகள் தேவகலா)
National Institute of Leadership Training
Mylapore Institue of Indigenous Studies
என்ற பெயர்களை கேட்டால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது, இது எதோ தலைசிறந்த இயக்கம்போல் தோன்றும், இவர்கள் செய்வது அனைத்தும் ஹிந்து மதத்தை இகழ்வது, இவர்கள் தவறாமல் தங்கள் கருத்துக்களை வெளியிட பத்திரிக்கைகளும் நடத்துகிறார்கள், இது வெளிநாட்டு பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் இயக்கங்கள். இவர்கள் பல வெளிநாட்டு பல்கலைக்கழங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு நியூயோர்க்கில் மாநாடு நடத்துவார்கள் அதில் 'வைணவம், சைவம், திராவிட வழிபாடுகள் அனைத்தும் பைபிள் பழைய ஏற்பாட்டில் இருந்து வந்தவை என்று ஆணித்தரமாக கத்துவார்கள், திருக்குறள் பைபிளை படித்து திருவள்ளுவர் எழுதியது, முருகப்பெருமான்கூட பைபிள் கதையிலிருந்து வந்தவர், சமணம், பௌத்தம் எல்லாம் பழைய ஏற்பாட்டின் தாக்கமே, சமஸ்க்ரிதம் தோமா கொண்டுவந்த மொழி, கிருஷ்ணர் கதைகூட கிறிஸ்துவிற்கு பிறகு உருவானது. இவர்கள் இதற்காக எடுத்துரைக்கும் ஆதாரங்களை பார்த்தால், சிறு குழந்தைகூட காரி துப்பிவிடும்.

அமெரிக்காவில் மரிலாண்ட் என்ற இடத்தில் மிகப்பெரிய அளவில் தமிழ் கிறிஸ்தச்சியால் (Rani David) நடத்தப்படும் பரதநாட்டிய பள்ளி, பரதநாட்டியத்தை ஹிந்து மதத்திலிருந்து வேரோடு பிடிங்கி எறியுவேன் என்ற சபதத்தோடு, கிறிஸ்தவ முத்திரைகளை பரதநாட்டியத்தில் சேர்த்து அதை கிறிஸ்தவ நடனமாக மாற்றிவிட்டார், அதை இப்போது உலகெங்கிலும் பரப்பிக்கொண்டிருக்கிறார், இதன் தொடர்ச்சியாக சென்னை கலாக்ஷேத்திராவில் இயக்குனராக இருக்கும் கிறிஸ்தவ பெண்மணி அங்குள்ள ஒவ்வொரு இடத்திலிருந்து ஹிந்து தெய்வ சிலைகளை அகற்றிவிட்டு, நாட்டியம் கற்ற மாணவிகளுக்கு வழங்கும் சான்றிதழில் காலம்காலமாக இருந்த நடராஜர் படத்தை நீக்கிவிட்டார், இப்போது நாட்டியம் கிறிஸ்தவ முத்திரையுடன் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

திருச்சியில் இருக்கும் கலைக்காவேரி கல்லூரியில் பரதநாட்டியத்தை கிறிஸ்தவத்துடன் இணைத்துவிட்டார்கள், மற்றும் பல கிராமிய கலைகள் கிறிஸ்தவத்திலிருந்து வந்தது என்று கற்பிக்கப்படுகிறது.
பாளையம்கோட்டை சேவியர்ஸ் கல்லூரியில் Dept of Folklore என்ற துறையில் எப்படி நாட்டுப்புற பாடல்கள் கிறிஸ்தவத்துடன் ஒத்துப்போகிறது என்ற ஆராய்ச்சி மிகப்பெரிய அளவில் நடந்து அதை புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது.இங்கே செய்யப்படும் ஒவ்வொரு கிராமீய கலைகள் ஆராய்ச்சியிலும் கிறிஸ்தவம் இருக்கவேண்டும், அப்போதுதான் சான்றிதழ் வழங்கப்படும்.

2001இல் தென் ஆப்பிரிக்காவில் ஐக்கிய நாடு சபை நடத்திய ஒரு மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த தெய்வநாயகம் (இவர்தான் தோமா இந்தியா வந்தார், திருவள்ளுவரை சீடனாக்கினார் மற்றும் மஹாபாரதம் பைபிள் பழைய ஏற்பாட்டின் தாக்கமே என்று சென்னை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து Ph.D பட்டம் வாங்கியவர்) மற்றும் அவரது மகள் தேவகலா கலந்துகொண்டு 'அனைத்து சமுதாய பிரச்சினைகளுக்கும் காரணம் ப்ராஹ்மணர்களும் ஹிந்துமதமும்தான் என்று பேசினார். 'சர்வதேச இனவாதம்- இந்திய சாதியத்தின் குழந்தை' என்ற நூலையும் அந்த மாநாட்டில் வெளியிட்டனர். 2004இல் தேவகலா தமிழகத்தில் மதம்மாற்ற பாதிரிகளுக்கு கையேடாக ஒரு புத்தகத்தை வெளியிட்டனர் 'இந்தியா தோமா வழி ஒரு திராவிட கிறிஸ்தவ நாடே...', இதை படித்துதான் இன்று பல முகநூல் கிறிஸ்தவ போராளிகள் கம்புசுத்துகிறார்கள்.

இந்த தெய்வநாயகம் பிள்ளை அமெரிக்காவில் பல இடங்களில் மாநாடு நடத்துவார் இதற்க்கு ஹிலாரி கிளின்டன் வந்து வாழ்த்துரை கூறினார், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் ஆலோசகர் ஒரு கிறிஸ்தவ வெறியர், கிறிஸ்தவத்தை பரப்ப என்ன பொய் செய்தியை வேண்டுமானாலும் வெளியிடுவார், இவருடன் தெய்வநாயகம் கூட்டணி வைத்துக்கொண்டு, இவரை காஞ்சிபுரத்திலுள்ள ஒரு கோவிலுக்கு அழைத்து சென்று அங்கே இருக்கும் சிற்பங்கள், தூண்கள் அனைத்தையும் காட்டி அதில் கிறிஸ்தவத்தின் தாக்கம் இருப்பதாக கட்டுரை வெளியிட்டனர்.
ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடி சொன்னதும் ஏன் எல்லோரும் குதித்தார்கள் என்று இப்போது புரியும்

இவர்கள் வெளியிடும் ஒவ்வொரு புத்தகங்களும் இப்போது நாம் பெரிதுபடுத்துவதில்லை, அதன் பூதாகார விளைவு இன்னும் சில வருடங்களில் வெளிப்படும், எப்படியென்றால்; மனோன்மணியம் சுந்தரனார் தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றினார் அவர் 'திராவிடம்' என்ற சொல்லை அதில் வைத்தார் அதற்க்கு காரணம் அவருக்கு சுமார் 75 வருடங்களுக்கு முன்பு மிஷநரி கால்டுவெல் மற்றும் ஜி.யு.போப் கொண்டுவந்த திராவிட கொள்கை. சுந்தரனாருக்கு சில காலம் முன்பே சொல்லப்பட்டுவிட்டதால் அது அவருக்கு வரலாறாக தெரிந்திருக்கிறது, அதனால் அதை எடுத்துக்கொண்டார். இதேபோல் 1905 இற்கு பிறகு தமிழகத்தில் பலரும் அவர்களுக்கு கடந்தகால பொய்கதைகளை வரலாறாக எடுத்துக்கொண்டார்கள், முட்டாள் கன்னட ராமசாமி உட்பட. அதனால் இப்போது வெளியிடப்படும் பல பொய் கதைகள் இன்னும் 70 ஆண்டுகளில் வரலாறாக மாற்றப்பட்டு அடுத்த தலைமுறை அறிவு ஜீவிகள் இதை தமது வழிகாட்டி நூலாக எடுத்துக்கொள்வார்கள்.

நாம் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பெருமையாக பேசப்படும் ஒரு விஷயம் தமிழ், சமஸ்க்ரிதம் போன்ற மொழிகள் பல வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் பாடமாக உள்ளது என்று. நம் மீது பாசத்தில் இது நடத்தப்படுகிறது என்று நினைத்து விடாதீர்கள், தமிழும் சமஸ்க்ரிதமும் எப்படி பைபிள் பழைய ஏற்பாட்டுடன் தொடர்புள்ளது என்று நிறுவவேண்டும், அதற்குண்டான போலி சான்றுகளை திரட்டி வழங்குபவர்கள் எலும்புத்துண்டுக்கு அலையும் தமிழக பாதிரிகள், அமெரிக்காவில் Yale, Harvard, California போன்ற பல்கலைக்கழகங்களில் தமிழ், சமஸ்க்ரித துறையில் பணியாற்றுபவர்கள் கிறிஸ்தவ வெறியர்கள் மற்றும் இவர்கள் தமிழகத்திலுள்ள மேலே முதலில் நான் சொன்ன இயக்கங்களுடன் தொடர்புள்ளவர்கள். அவர்கள் கிறிஸ்தவ தேவைக்கேற்ப ஒரு திராவிட அகராதியை உருவாக்கியுள்ளனர், அப்போது அண்ணாவால் (1949) உருவான திராவிட முன்னேற்ற கழகம் கட்சியினை அவர்கள் பெருமளவில் ஆதரித்தனர். 
அந்த அகராதிதான் (Dictionary) பெருமளவில் கன்னட பெரியார் மற்றும் அண்ணா போன்றவர்கள் பிரிவினை பேச எடுத்துக்கொண்ட நூல். அமெரிக்கா அப்போது நமக்கு நட்பு நாடு கிடையாது, ஜவாஹர்லால் நேரு சோவியத் ரஷியாவுடன் நட்பில் இருந்தது அமெரிக்காவை உறுத்தியது, தென்னகத்தில் திமுக உதயமானதும் பிரிவினைவாத அரசியலை அது கக்க துவங்கியது, இதனால் மனம் குளிர்ந்த அமெரிக்கா இலங்கை வழியாக திராவிடவாதிகளுக்கு தமிழ்நாட்டு மிஷநரிகள் மூலம் பணம் சப்ளை பண்ண ஆரம்பித்தது. இதையெல்லாம் தாண்டி 1962 சீன போருக்கு பின் ஒரு மிகப்பெரிய தேச ஒற்றுமை உருவானது, இது அமெரிக்காவின் உளவுத்துறை சி.ஐ.எ வை உறுத்தியது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக 1965இல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்த எல்லா உதவிகளையும் செய்தது. அண்ணாத்துரைக்கு இதற்க்கு கைமாறாக அமெரிக்கா உள்துறை அமைச்சகம் 1968இல் ஒரு அழைப்பிதழ் அனுப்பியது, அவரை அமெரிக்கா வரவழைத்து Yale University-Chubb Fellow Membership கொடுத்தது. இதை பெற்ற முதல் அமெரிக்கரல்லாதவர் அண்ணாதுரை.
இப்போது புரிகிறதா,தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு பணம் வருவதை தடுக்கவேண்டியதின் முக்கியத்துவம்.

புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களும் சரவெடி.
நான் இங்கே கூறியது புத்தகத்தின் 0.5% விஷயங்கள்தான்.

பக்கம் 174_198



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard