1972ல் கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவாணர் துணைக் கொண்டு கிறிஸ்துவ சர்ச் அரங்கில், திமுக அரசு முதல்வர் கருணானிநிதி, முரசொலி பின்பலம் நடக்க் திருக்குறள் கிறிஸ்துவம் அல்ல என முடிந்தது என அம்மாநாட்டின் வரவேறுபு குழு ஒருங்கிணைப்பாளர் புலவர் கலைமணி - தன் நூல் திருக்குறள் சொற்பொருள் சுரபி 2006ல் பதிட்டார்.
//சென்னையில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டுச் சம்பவத்தை ஏன் குறிப்பிட்டோம் என்றால், இந்த மாநாட்டில் திருவள்ளுவர் கிறித்துவரல்லர் என்ற இந்த மாநாட்டின் முடிவை, சென்னை மாநாட்டார் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுக்கு வெளியிட வழங்காமல், இரும்புத் திரையிட்டு மறைத்து விட்டார்கள்.//
மாநாட்டில் பல அறிஞர்களும் தலைப்புகள் விவிலியத்தை போற்றுவதை கேலியும் செய்தராம். சுவிசேஷக் கதைகளின் நாயகர் ஏசு என்ற அந்த மனிதன் ரோம் கிரிமினலாய் மரண தண்டனையில் இறந்த ஏசு - வரலாற்று ஆதாரமற்றவற்றோடு தெய்வீக திருக்குறளை ஒப்பு என்பதே தவறு. கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவாணர் வள்ளுவர் காலம் வேறு, எனவே இந்த விவாதங்களே வீண், இந்த மாநாட்டை யாரும் வெளியில் சொல்ல வேண்டாம் என ஆணை இட்டார் - என மாநாட்டில் கலந்த பல பெரியவர்கள் சர்ச் பிரிவு விசாரணை உறுதி செய்தது.
நூல்களை எழுதியவர் CSI கிறித்துவர். அந்த நூல்களைப் புத்தகங்களாக்க உதவியர் - அப்போது சென்னை நகர ரோமன் கத்தோலிக்கர் ஆர்ச் பிஷப்பாக இருந்த அருளப்பா என்பவர், திருவள்ளுவரைக் கிறித்துவராக்க பணம் செலவு செய்தது, சென்னை எல்டாம்சு சாலையில் இயங்கும் கிறித்துவக் கலைத் தொடர்பு நிலையம் இயக்குநர் அருட்திரு சா. சுவிசேஷ முத்து, பி.டி., எம்.டி.எச். அவர்கள். இவர் ப்ராட்டஸ்டண்டு கிறித்தவர்.
-- Edited by Admin on Saturday 8th of December 2018 10:30:36 AM
மாநாடு ஒருங்கிணைப்பாளர் நூலின் பதிவு பார்த்தோம், ஆனால் 2 ஆண்டு முன்பு மோசடி தெய்வநாயகம் வெளியிட்டுள்ள காணொளியில் மாநாடு திருவள்ளுவர் கிறிஸ்துவர் என உறுதி செய்தது என கதைக்கிறார்.
ஆனால் இதன் பின்பு சாந்தோம் சர்ச் - கிறிஸ்துவக் கல்லூரி சத்ய சாட்சி, பாவாணர் கூட்டணி, திருக்குறளை கிறிஸ்துவராக ஆக்க பழைய சுவடிகள் உண்டு எனத் தயாரிக்க திருச்சியை சேர்ந்த ஜான் கணேஷ் ஐயர் எனும் ஆசார்யா பவுல் என்பவரை மோசடி ஓலை சுவடி தயாரிக்க வைக்க 18 மாதத்தில் 15 லட்சம் ரூபாய் தந்து, அவருக்கு சர்ச்சே பாஸ்போர்டு கொடுத்து உலக சுற்றுலா, வாடிகன் போப்போடு தனி சந்திப்பு எல்லாம் செய்தது.
மோசடி தெய்வநாயகம் 1972 மாநாட்டைப் பற்றி தருமை ஆதினத்தில் விவாதம் என வந்து உளறி பெரும்பாலும் மௌனமாய் நின்று ஓடியதை மறைத்து அதிலும் பொய்களாய் சொல்லும் ஒரு காணொளியில் பதிப்பித்தமையால் நமக்கு படங்கள் கிடைத்தன. மோசடி தெய்வநாயகம் விவிலியப் பொய்களின் உச்ச கட்டம் என அறிகிறோம்
மோசடி முனைவர் மு.தெய்வநாயகம் சர்ச் காசில் 1969 முதல் தோமோ வருகையில் விவிலியத் தொன்மக் கதை கருத்தை கொண்டே திருக்குறள் உருவாகியது என பல நூல்களை புனைந்துள்ளார்.
27, 28, 29-08-2013 ஆம் நாட்களில் மகாபலிபுரத்தில் ஒரு Scripture Union centre-ல் ஆய்வரங்கம் ஏற்பாடாயிற்று.
கேள்வி தொடுக்கும் குழுவிற்குத் தலைவராக அமைக்கப்பட்ட பாதிரி எஸ்றா சற்குணம்
நீதிபதிகள்
திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார், S.R.M. பல்கலைக் கழகம்
திரு.ஆர்தர் ஜெயக்குமார் பேராசிரியர் கிறித்துவஇயல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம்
திரு.சம்சுதீன் பேராசிரியர் அரபி மொழித்துறை, சென்னைப் பல்கலைக் கழகம்
திரு. முனைவர்ஆ.ஜீவானந்தம்- திராவிடர் விடுதலைக் கழகம்
திரு. தங்கையா, சென்னை CSI பேராயம்தெய்வநாயகம் சீடர் இவரும் ஒரு மோசடி முனைவர்
பேராசிரியர் எஸ்றா சற்குணம்) கேள்வி: முதலில் தோமா தமிழ் நாட்டிற்கு வந்தாரா என்பதற்கு நேரடியாகப் பதில் கூறுங்கள்!
மு.தெ. பதில்: தமிழகத்திற்குத் தோமா வந்தாரா என்ற கேள்வியிலேயே தமிழகத்திற்கு தோமா வரவில்லையா என்ற கேள்வியும் தொக்கி இருக்கிரது அல்லவா?
[என் கருத்து: கேட்ட கேள்விக்கு இது எப்படி பதிலாகும் என்று தெரியவில்லை]
கேள்வி: இதற்கு ஆதாரம் என்ன?
மு.தெ. பதில்: போர்த்துக்கீசியர் இந்தியாவிற்கு வந்தபின் தான் தோமாவைப் பற்றி இன்று நாம் கேட்கும் வரலற்றினை அறிய வருகிறோம். அது வரலாறில்லை; போர்த்துகீசியர் கட்டிவிட்ட கட்டுக் கதை. அவர்கள் இதனால் பெற்ற லாபம் என்ன என்பதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. தோமா வந்தார்; மயிலையில் சமாதி ஆனார் என்ற கதை போர்த்துகீசியர் தமிழகத்திற்கு வந்த போது அதாவது ஏறத்தாழ கி.பி. 12ஆம் நூற்றாண்டு தான் வெளிவருகிரது.எனவே இது உண்மையா அல்லது பொய்யா என்பதை நிரூபிப்பது போர்த்துகீசியர்கள் தொடர்புடைய கத்தோலிக்கத் திருச்சபை அடியார்கள் திருச்சபையிடம் தான் கேட்டுத் தெளிய வேண்டுமே அல்லாது எனக்கு இதில் பதிலளிக்கும் பொறுப்பு இல்லை.
[என் கருத்து: தோமா தமிழகத்திற்கு வந்தார் என்பதை கி.பி.12-ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கதை கட்டி விட்டார்கள் என்கிறார். ஆனால் இவரோ பல்லாண்டுகளாக, அவரே கூட்டத்தில் ஒரு சமயத்தில்சொன்னபடி 45 ஆண்டுகளாக, தோமா தமிழ்நாட்டிற்கு கி.பி. 52ல் வந்து 20 ஆண்டுகளாக சமயக் கொள்கைகளைப் பரப்பினார் என்று போர்த்துகீசியர்கள் 12 ஆம் நூறாண்டில் கட்டிய கதையை நம்பியும் அதைப் பரப்பியும் அதையொட்டி ஒரு நூல் எழுதி முனைவர் பட்டமும் பெற்றவர். ஆனால் இப்போது அது கட்டுக்கதை என்கிறார்; அதற்குத் தான் பதிலளிக்க வேண்டியதில்லை என்று அடாவடியாகத் தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது எந்த வகை நியாயம் என்று நடுநிலையாளர்களைத் திகைக்கச் செய்கிறார்.]
கேள்வி: இப்படிச் சொல்வது எப்படி சரியாக இருக்கும்? நீங்கள் திருச்சபையைக் கேட்டீர்களா?
மு.தெ. பதில்: என்னைப் பொறுத்தவரை தோமா தமிழ் நாட்டிற்கு கி.பி. 52ல் வந்த பிறகு தாம் தமிழகத்தில் சமய நெறி உருவாகியது. அப்போது தமிழ் நாட்டில் இந்துமதம் என்பதே இல்லை. தோமாதான் ஒரு சமயக் கோட்பாட்டை உருவாக்கினார். அதனைத் தான் இந்துக் கிறித்துவம் என்கிறேன்; திராவிடக் கிறித்துவம் என்கிறேன். இங்கே இந்து மதம் என்பது பற்றி விளக்க வேண்டும். இன்று காணப்படும் அல்லது சொல்லப்படும் இந்து மதம் வேறு; இந்துத்வா வேறு.
[என் கருத்து: தோமா தமிழகத்திற்கு கி.பி. 52ல் வந்தார் என்பது கட்டிவிட்ட கதை என்று கூறிய பின் கட்டிவிட்டதாக இவரால் கூறப்படும் கத்தோலிக்கத் திருச்சபையிடம் இவரே விளக்க, கேட்டுப் பதில் பெற்றாரா என்ற கேள்விக்குப் பதில் சொல்லாமலே இவர் நழுவவிட்டார். உண்மையில்இதற்கு முன் இருந்த போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்கள் தோமா தமிழ் நாட்டிற்கு வந்ததே இல்லை என்று தெளிவு படுத்தி இருக்கிறார். அதை முற்றிலும் மறைத்துவிட்டு இந்து கிறித்துவம், திராவிடகிறித்துவம் என்றெல்லாம் ஆதாரமில்லாதவைகளை மற்றொன்று விரித்தலாகக் கூறிச்செல்கிறார். திராவிட கிறித்துவம் என்றால் அது தமிழ்நாட்டிற்குத் தொடர்புடையதாகக் கூறலாம்; இந்துக் கிறித்துவம் என்றால் அது இந்தியா முழுமைக்கும் தொடர்புடையதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் திராவிட கிறித்துவம் என ஒன்றிருக்கிறதா என்பதே தெரியாத போது தமிழ்நாட்டையும் தாண்டி இந்துக் கிறித்துவம் எப்படி வந்தது என்றும் தெரியவில்லை. அவர் எண்ணப்போக்கில் எதையெதையோ அள்ளித் தெளித்துக் கொண்டு போகிறார்.]
கேள்வி: அப்படியானால் நீங்கள் கூறும் இந்துக் கிறித்துவத்தில் வரும் இந்து மதம் எது?
மு.தெ. பதில்: சைவமும் வைணவமும் தான் இந்து மதம்; இவை தான் தமிழர்களுடையது.
[என் கருத்து: தமிழர் கண்ட சமயங்கள் சைவமும், வைணவமும் என்பது சரி. ஆனால் இவை இரண்டையும் இணைத்தால் இந்து மதம் வரும் என்று யார் சொன்னது? வட நாட்டில் உருவானவட வேத மதங்களான மீமாம்சை, சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம் ஆகியவற்றையும் இந்து மதங்கள் என்றல்லவா குறிப்பிடுகிறார்கள்? எனில் இந்து மதம் என்பது ஒரு மதம் என்று கூறமுடியவில்லையே. பல மதங்களின் தொகுப்பாக அல்லவா காணப்படுகிறது? இவற்றை இணைத்து இவைகளை ஒரே சொல்லாகிய இந்து என்று குறிப்பிட்டவன் யார்? இந்தியனா? இல்லை, வெள்ளைக்காரன் தான் 150 ஆண்டுகட்கு முன்கிறித்துவர், இஸ்லாமியர் அல்லாதார்க்கு ஒரு தொகுப்பு அடையாளச் சொல்லாக உருவாக்கினான் என்பதை காஞ்சி மகா பெரியவரே கூறி இருக்கிறாரே! எனில் இந்து மதம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதும் அதில் அடங்கியதாகக் கருதப்படும் சைவமும் வைணவமும் கூட ஒன்றிற்கொன்று ஒத்துப் போகாதே! எப்படி இரண்டையும் சேர்த்து இந்துமதம் என்று கூறுவது? பல மதங்களின் தொகுப்பு அடையாளமாக வெள்ளைக்காரன் இந்து மதம் என்ற ஒன்றைக் கற்பித்தான் என்றால் சைவம், வைணவம் என்ற இரு மதங்களின் தொகுப்பாக இவர் கூறும் இந்து மதம் இவரது கற்பனையே! உண்மையில் சைவத்தை சைவம் என்றே சொல்வதும், வைணவத்தை வைணவம் என்றே சொல்வதும் தான் சரியானதாக இருக்கும்.]
கேள்வி: தோமா தமிழ் நாட்டிற்கு வந்தார் என்றால் அது பற்றி ஏன் விவிலியத்தில் செய்தி இல்லை?
மு.தெ. பதில்: நல்ல கேள்வி. பழைய ஏற்பாடு இன்றுள்ள நிலையில் முதலில் இல்லை. எட்டுவிதமான திரித்தல், மறைத்தல், வெட்டல் போன்ற செயல்களால் பழைய ஏற்பாடு பெரிய சிதைவான மாற்றங்களை அடைந்தது. இம்மாற்றங்களைச் செய்தவர்கள் ஐரோப்பியர்கள். இருப்பதைத் திரிப்பதில் இவர்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் காணப்பெறும் பிராம்மணர்களுக்கு ஒப்பானவர்கள். ஐரோப்பியர்கள் இப்படிச்சிதைவு செய்ததற்குக் காரணம் அவர்கள் இயல்பில் கிறித்துவர்கள் அல்லர். ஐரோப்பியர்க்கும் கிறித்துவத்திற்கும் என்ன சம்பந்தம்? ஏசு கிறிஸ்து ஐரோப்பியாவை சேர்ந்தவர் அல்லர்; அவர் ஒரு ஆசிய ஆன்மிக சோதி.
இன்னும் சொல்லப் போனால், கத்தொலிக்கத் திருச்சபையில் யாரும் எவரும் எவரையும் கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்டால் தண்டனை தான். அதனால் தான் மக்கள் இன்று உலகெங்கணும் திருச்சபைகளில் இருந்து விலகிச் செல்கிறார்கள். அதனால் சர்ச்சுகள் எல்லாம் தியேட்டர்களாக்கிக் கொண்டிருக்கின்றன. காரணம், இந்த ஐரொப்பியர்களுக்கு கிறித்துவிடம் இயல்பாகவே எப்போதும் விசுவாசமில்லை.
[என் கருத்து: தோமா கிறித்து காலத்தவர்; அவர் பெயர் எப்படி பழைய ஏற்பட்டில் வரும்? இப்படியே அவரது உரை கத்தோலிக்கத் திருச்சபைகளைச் சாடுவதாகவே தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் சென்றது. அதற்குள் அவையிலிருந்து கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை என்றும் பதிலைச் சொல்லச் சொல்லுங்கள் என்று நீதிபதிகளாகிய எங்களுக்கு சீட்டு வந்தது. இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அவையில் இருந்த அனைவரும் கிறித்துவர்கள்; அவர்களில்70 விழுக்காடு கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் தெய்வநாயகத்தின் கருத்துக்களுக்கு எதிரானவர்கள்; மீதி 30 விழுக்காட்டினர் தெய்வநாயகத்தின் ஆதரவாளர்கள்.]
கேள்வி: தாங்கள் தோமா தமிழகத்திற்கு வந்தார என்பதற்கு ஆதாரங்களுடன் நேரடியாக பதிலளியுங்கள்! இது அவையினர் அனுப்பியுள்ள சீட்டில் வந்துள்ள வேண்டுகோள் அல்லது முணுமுணுப்பு.
முனைவர் தெய்வநாயகம் இதற்கு கோபப்பட்டுப் பேசினார். மேலும் சுமார் 20 நிமிடங்கள் அவரது பேச்சு அதே பாணியில் மற்றொன்று விரித்தலாய்ச் சென்று கொண்டிருந்தது. அப்போது ககல் 1.00 மணி ஆனதால் உணவு இடைவேளி அறிவிக்கப்பட்டு மேடை கலைந்தது. தெய்வநாயகத்தின் ஆதரவாளர்களில் ஒருவர் என்னை நீங்கள் இப்படியெல்லாம் பேச்சின் இடையே இடைமறிக்கக் கூடாது. முழுமையான பேச்சு நிகழ்ந்தபின் தான் கேள்விகளைக் கேட்கவேண்டும் என்று சினத்துடன் கூறினார். உடன் திரு.தெய்வநாயகமும் இருந்தார். ஆய்வரங்கத்தில் பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களது கேள்விகளை முதலில் முன் வைக்க வேண்டும் என்பதுதான் திரு.தெய்வநாயகம் அவர்களின் வேண்டுகோள். காரணம் பேராயர் சற்குணம் அவர்கள் ஆய்வரங்கத்தில் காலைப் பகுதிக்குப் பின் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை என்று கூறிவிட்டார். எனவே அவரது கேள்விகள் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆக, உரைக்குப்பின் கேள்வி என்பதற்குப் பதிலாக கேள்விக்குப் பதில் என்றுநிகழ்ச்சி மாறிவிட்டதை அவையறிந்து தானே செய்தோம்? அப்படியானால் கேள்விக்குபதில் வரவேண்டாமா? வரவில்லை என்று அவை சுட்டிக்காட்டினால்அதை நீதிபதிகள் உரையாளருக்குச் சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? என்று ஆதரவாளரைக் கேட்டபோது உடன் திரு.தெய்வநாயகம் விளக்கம் தந்தார். அதாவது தான் பேசியது அவைக்காகவோ அல்லது நீதிபதிகளுக்காகவோ அல்ல என்றும் தன்னுடன் மாறுபட்ட தனது நன்பரானபேராய சற்குணத்திற்கு சில விளக்கங்கள் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கவே அப்படி பேசியதாகக் கூறினார்.
இது மேலும் விசித்திரமாக இருந்தது. அவையைக் கூட்டிவிட்டு இவரும் பேராயரும் தங்களிடையே உள்ள பிணக்குக்களை அவையறியாமல் பேச அவையைப் பயன்படுத்திக் கொள்வது அநாகரிகமான செயலாகாதா? அதிலும் அவையில் ரூ.2000/- பணம் செலுத்திவிட்டு வந்து அமர்ந்திருக்கிறார்கள். அவையும் வெறும் உரையரங்கம் அல்ல; ஆய்வரங்கம் என்று அறிவிக்கப்பட்டு அதற்கு நீதிபதிகளையும் அமர்த்திவிட்டு இருவர் தமக்குள் ஒருவர்பேசுவது மற்றவருக்கு மட்டும் பொருள் விளங்க என்று குறிப்பாகப் பேசுவது சரியல்ல அல்லவா? அப்படியும் சற்குணம் அவர்கள் கேட்ட கேள்விக்குத் தான் பதில் வரவில்லை என்பது அவையின் ஆதங்கம். அதைவிட்டு எதையோ மற்றொன்று விரித்தலாய் நீட்டிப் பேசுவது என்ன நியாயம்?
உணவு வேளைக்கு மேடை கலைந்த போது பேராயர் சற்குணம் நீதிபதிகளாகிய எங்கள் ஐவருக்கும் கை கொடுத்துவிட்டு, ‘அபாரப் பொறுமை உங்களுக்கு’ என்று கூறிவிட்டு சென்றார்.