New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு சிலுவையில் இறந்தாரா- இல்லையா!


Guru

Status: Offline
Posts: 24601
Date:
இயேசு சிலுவையில் இறந்தாரா- இல்லையா!
Permalink  
 


 இயேசு சிலுவையில் இறந்தாரா- இல்லையா!

 

கிறிஸ்துவ மதத்தினை யூதர் அல்லாத மக்களிடம் கொண்டு சென்று இன்றைய கிறிஸ்துவ மதத்தினை துவக்கியவர் பவுல். அவர் கடிதங்கள் சுவிசேஷங்களுக்கு முந்தையதாம், அதில் ஏசு உயிர்த்தார் என்பது பற்றி உள்ளதைப் பார்ப்போம்.

1கொரிந்தியர் 15: 3. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,4. அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,5. கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். 6. அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.7. பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.8. எல்லாருக்கும் பின்பு, அகாலப் பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்.

பவுல் இங்கே சொன்ன பட்டியலில் 500 பேர் என்கிறார், ஏசு மரணம் - உயிர்த்தல் நிகழ்ந்த ஜெருசலேமில் பவுல் கைதாகி விசாரணை, அவர் எளிதாக அந்த சாட்சிகளைக் அழைத்து வரலாற்றில் உண்மை எனில் நிருபித்து இருக்கலாம், ஆனால் பவுல் என்ன செய்தார்.

அப்போஸ்தலர் 23:6 அக்கூட்டத்தில் சிலர் சதுசேயராகவும், சிலர் பரிசேயராகவும் இருந்தார்கள். எனவே பவுலுக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. அவன் அவர்களிடம் உரக்க, “எனது சகோதரரே, நான் ஒரு பரிசேயன். எனது தந்தையும் ஒரு பரிசேயர். மரணத்திலிருந்து மக்கள் எழுவர் என்று நான் நம்புவதால் என்னை இங்கு நியாயந்தீர்க்கின்றனர்!என்றான். 7 பவுல் இதைக் கூறியதும், சதுசேயருக்கும் பரிசேயருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. குழுவில் ஒரு பிரிவினை ஏற்பட்டது.8 (மக்கள் இறந்தபிறகு, மீண்டும் வாழ இயலாது என்று சதுசேயர் நம்புகிறார்கள். தேவதூதர்களோ, ஆவிகளோ இருப்பதில்லை என்று சதுசேயர்கள் போதிக்கிறார்கள். ஆனால் பரிசேயர்கள் இவற்றையெல்லாம் நம்புகிறார்கள்.) 9 எல்லா யூதர்களும் உரக்கச் சத்தமிட ஆரம்பித்தனர். பரிசேயரான சில வேதபாரகர்கள் எழுந்து நின்று, இவ்வாறு விவாதித்தனர், “நாங்கள் இந்த மனிதனிடம் எந்தக் குற்றத்தையும் காணவில்லை. தமஸ்குவுக்கு வரும் வழியில் தேவதூதனோ ஆவியோ அவனோடு பேசியிருக்க வேண்டும்!என்றனர்.  10 விவாதம் சண்டையாக மாறிற்று...

பவுல் யூதர்களுள் இருந்த பிளவைத் தூண்டிவிட்டு வரலாற்று ஆதாரம் தராமல் இழுத்து ரோம் சென்றதாய் கதை. ஏன்?

 

பவுலில் போதனை அடிப்படை-இறந்த ஏசு மீண்டும் பழைய உடம்பில் எழுந்து வந்தார் அதனால் மனிதன் பூமியில் மரணம் அடையக் காரணமான முதல் பாவம் முடிந்தது, இறந்த ஏசு இரண்டாம் முறை மிக விரைவில் வரப் போகிறார், எனவே திருமணம் செய்யாதவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம், எனக்கு காசு தந்தால் கடவுளுக்கு என்பதே பவுலின் போதனை.

பவுல் இங்கே சொல்லியமுறையில் பின்னாளில் எழுதிய எந்த ஒரு சுவிசேஷமும் சொல்ல்வில்லை. பவுல் காலி கல்லறை பற்றி பவுல் வரையலில் இல்லை. பவுல் சாட்சியாக எந்த ஒரு 3ம் நபர் பெயரும் தரவில்லை.

மாற்கு 14: யூத மத சங்க நீதி விசாரணையில் தலைமைப் பாதிரியிடம் இயேசு -  எதிர்காலத்தில் மனித குமாரன் சர்வ வல்லவரின் வலது பக்கத்தில் இருப்பதைக் காண்பீர்கள். பரலோக இராஜ்யத்தில் மேகங்களின் நடுவே மனித குமாரன் வருவதைப் பார்ப்பீர்கள்என்றார். என்றார்.

மத்தேயு 5:16மக்கள் விளக்கை  ஏற்றி  குடத்தின் கீழ் வைத்து மறைப்பதில்லை. மாறாக, அதை மக்கள் விளக்குத் தண்டின் மீது வைக்கிறார்கள். அப்பொழுது தான் விளக்கு வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் தருகிறது.

 

ஏசு தெளிவாய் 3ம் நபர்களுக்கும் காட்சி தருவேன் எனச் சொன்னதாய் கதை. ஆனால் சீடர் தவிர யாருக்கும் அப்படி காட்சி தந்தார் என்பது இல்லவே இல்லை.  பவுல் ஏசுவை அறிந்தவர் அல்ல, ஆனால் இறந்த ஏசுவின் அழைப்பினால் மாறியதாய் கதை -அதை அப்போஸ்தலர் நடபடிகள் 3 முறை, ஒவ்வொரு முறையும் வேறு வேறு முரண்பாடுகளோடன கதைகள்.

 

அப்போஸ்தலர் நடபடிகள் 9:1 இதற்கிடையில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் திருத்தூதர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி,2 இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார்.3இவ்வாறு அவர் புறப்பட்டுச்சென்று தமஸ்குவை நெருங்கியபோது திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது.4 அவர் தரையில் விழ, சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார்.5 அதற்கு அவர், ஆண்டவரே நீர் யார்? எனக்கேட்டார். ஆண்டவர், நீ துன்புறுத்தும் இயேசு நானே.6 நீ எழுந்து நகருக்குள் செல்: நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.7 அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர். ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர்.8 சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள்.9 அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை.

 

அப்போஸ்தலர் நடபடிகள்22:6 நான் புறப்பட்டுத் தமஸ்கு நகரை நெருங்கியபோது நண்பகல் நேரத்தில் திடீரென வானிலிருந்து ஒரு பேரொளி என்னைச் சூழந்து வீசியது.7 நான் தரையில் விழுந்தேன். அப்போது, சவுலே, சவுலே நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? என்ற குரலைக் கேட்டேன்.8 அப்போது நான், ஆண்டவரே நீர் யார்? என்று கேட்டேன். அவர், நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே என்றார்.9 என்னோடிருந்தவர்கள் ஒளியைக் கண்டார்கள்: ஆனால் என்னோடு பேசியவரது குரலைக் கேட்கவில்லை.10 ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்? என நான் கேட்க, ஆண்டவர் என்னை நோக்கி, நீ எழுந்து தமஸ்குவுக்குச் செல். நீ செய்வதற்கென குறிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் அங்கே உனக்குக் கூறப்படும் என்றார்.11 அந்த ஒளியின் மிகுதியால் நான் பார்க்க முடியவில்லை. என்னோடியிருந்தவர்கள் எனது கையைப் பிடித்துத் தமஸ்குவினுள் அழைத்துச் சென்றார்கள்.

 

 

 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பவுல் கடிதங்களுக்கு பின்னால் எழுந்த சுவிசேஷக் கதைகளில் ஏசு உய்ரித்தல் கதைகள் நம்பிக்கைக்கு உரியதாய் இல்லை என அறிஞர்கள் கூறுவது ஏன் எனப் பார்ப்போம்.

 

தூக்குமரத்தில் தொங்கும்( சிலுவை) மரணம் எனில் என்ன?

புராணக் கதை நாயகர் ஏசு மரணம் – தூக்கு மரத்தில்(சிலுவை) தொங்கவிடப்பட்டு என்பது சுவிசேஷங்களும்பவுல் கடிதமும் சொல்லும் கதை. இது ரோமன் தண்டனை முறை. இதில் ரோம் ஆட்சிக்கு எதிரான ஆயுதப் போராளிகளுக்கு தரப் படும்குற்றவாளிகள் நிர்வாணமாக உயரமாக சாரம் கட்டி அதில் தொஙவிடப்படுவர். கழுத்து எலும்பு உடைந்து மண்டை ஓடு கீழே விழுந்து புரள வேண்டும் இதனால் தான்தூக்குமர தண்டனை தரும் இடம் கபாலஸ்தலம் அல்லது மண்டை ஓடு புரளுமிடம் எனப்படும். மரணம் வர 4- 5 நாள் ஆகும்.நிவாணத்தின் அசிங்கமும்கழுகு பருந்து போன்றவை துன்புமும் என நான்கு நாள் அலறல் கேட்டு- எவரும் ரோமை எதிர்க்க நினைக்கக் கூடாது என்பதே இத்தண்டனை முறை.

ஏசு ஒருசில மணிநேரங்களே தூக்குமரத்தில் தொங்கியதாய் சுவி கதைகள் சொல்கின்றன. கதை நாயகன் ஏசு மரணத்திற்கு 40 ஆண்டுகள் பின்பு முதல் சுவி மாற்கு கதை வரையப்படதுஅதிலிருந்து மற்ற சுவி கதைகள் நீட்டி உருவாகின என பைபிளியல் அறிஞர்கள்[ii] தெளிவாய் ஏற்கின்றனர்.

 

தூக்குமரத்தில் தொங்கியது எத்தனை நேரம்?
    

மாற்கு15:1 பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்துஇயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று பிலாத்திடம் ஒப்புவித்தனர்.

33 நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ‘ எலோயிஎலோயிலெமா சபக்தானி? ‘என்று உரக்கக் கத்தினார். ‘ என் இறைவாஎன் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ‘என்பது அதற்குப் பொருள்..  …37 இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.

மாற்கு  சுவியின்படி காலை ஆறு மணிக்கு விசாரணை தொடங்கி மணி வாக்கில் சிலுவையில் அடைக்கப்பட்டார். 3மணிக்கு இறந்தார் எனக் கதை.

யோவான்19:14.14 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளை. பிலாத்து யூதர்களிடம், ‘ இதோஉங்கள் அரசன்! என்றான்.15அவர்கள், ‘ ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும் ‘ என்று கத்தினார்கள்.

ஆனால் நான்காவது சுவி யோவானில்(95- 110) ஏசு சிலுவையில் அடைக்கப்பட்டதே நண்பகல் 12 மணிக்கு தான். அதாவது சிலுவையில் இருந்த நேரம் மணிநேரம் மட்டுமே

 

சிலுவையில் நாள் ஆகியும் இறக்கவில்லை -யோசிபஸ்

முதல் நூற்றாண்டு யூதர் யோசிபஸ் நூலில் அவர் மூன்று நண்பர்கள் தூக்குமரத்தில்டப்பட, 3 நாள் கழித்து ரோம் ஆட்சியிடம் கேட்டு மீட்டுவரமூவரில் இருவர் மரண காயங்களால் மரணம் அடைய ஒருவரை மட்டும் காப்பாற்ற முடிந்தது என்கிறார்.அதாவது நாள் சிலுவையில் தொங்கியபின்னர் மூவரும் உயிரோடு தான் இருந்தனர்;  ஆனால் நாள் தொங்கிய பின் இறக்கியபின் தந்த சிகிச்சைகள் பய்னின்றி இருவர் இறந்தனர்ஒருவர் மட்டுமே பிழைத்தார்என்கிறார்..

 

And when I was sent by Titus Caesar with Cerealins, and a thousand horsemen, to a certain village called Thecoa, in order to know whether it were a place fit for a camp, as I came back, I saw many captives crucified, and remembered three of them as my former acquaintance. I was very sorry at this in my mind, and went with tears in my eyes to Titus, and told him of them; so he immediately commanded them to be taken down, and to have the greatest care taken of them, in order to their recovery; yet two of them died under the physician’s hands, while the third recovered.//

இன்றைக்கும் நல்ல வெள்ளி அன்று சிலுவையில் ஏறித் தொங்கி ஈஸ்டர் அன்று கீழே இறன்குவது பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு கொண்டாட்டமே.
 
http://www.bagnewsnotes.com/2010/04/your-turn-philippine-woman-nailed-to-the-cross/  
நாம் அறிவது- நாள் சிலுவையில் தொங்கினாலும் மரணம் வருவதில்லை என. ஏசு கதையைப் பார்ப்போம்.

இந்த குறைந்த நேரத்தில் 30 வயதான இயேசு மரணம் அடைய வாய்ப்பு இல்லை. இதை மாற்கு சுவிசேஷமே உறுதிப் படுகிறது.

மாற்கு15:42 இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால்,43 அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.44ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்துநூற்றுவர் தலைவரை அழைத்து, ‘ அவன் இதற்குள் இறந்து விட்டானா? ‘ என்று கேட்டான்.45 நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான்.

இந்த வசனம் ரோமன் கவர்னர் பிலாத்து வியப்படைந்து” மற்ற சுவிகளிலே இல்லவே இல்லை.
யோவான் சுவியில் ஏசு மரணமடைந்திருக்க முடியாது என்பதை உறுதிப் படுத்திகிறார்.

யோவான்19:31 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள்.32 ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். 33 பின்பு அவர்கள்இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை.34 ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன

யோவான் சுவியில் மூவரில் இருவர் மரணமடையவில்லைஏசு மயங்கி இருந்தார் எனலாம். ஆனால் யோவான் சுவி ரோமன் மன்னர் டிராஜன்(97 – 118 ) காலத்தில் தான் புனையப்பட்டது. இது யோவான் சுவியின் நம்பகத்தன்மையில்லை எனத் தெளிவாக்கும். ஆனால் இவரும் இருவர் இறக்கவைல்லை எனலாம். 

நாம் உறுதியாய் உணருவது –   சிலுவையில் அல்லது 6மணி நேரம் சிலுவையில் ஏசு தொங்கினால் இறக்கவாய்ப்பில்லை என்பதை தெளிவாக  உணரலாம்

இயேசு உயிர்த்து எழுந்தாராஇல்லையே! ஈஸ்டர் கட்டுக்கதைகள்

சுவிசேஷேங்களில் முதலில் வரையப்பட்டது மாற்குஅதில் யூத ரோமன் போர் நிகழ்ச்சிகள் மறைமுகமாய் கூறப்பட்டுள்ளதாலும்சர்ச் செவிவழி மரபுக் கதைகள்படி பேதுரு -பவுல் மரணம் ஆன பின்பு தான்என்கையில் அதன் காலம் 685வாக்கில் தான். மாற்கு சுவியில் மூல கிரேக்க ஏடுகள் 5ம் நூற்றாண்டிற்கு முந்தைய எல்லா ஏடுகளும்மாற்கு 16ம் அத்தியாயம் 16:8 வசனத்தோடு[iii] முடிகிறது. .

இந்தப் பகுதியில் கல்லறைக்கு பெண்கள் செல்ல அது காலிவெள்ளை உடை வாலிபன் ஏசு உயிர்த்து கலிலேயா செல்வதாய் முன்பே சொன்னபடி சென்றார்சீடரிடம் செல்லுங்கள் எனிறிட பெண்கள் பயந்து யாரிடமும் ஏதும் சொல்லவில்லை என முடிகிறது.

மாற்கு 16:8 8 அப்பெண்கள் மிகவும் பயந்து குழப்பம் அடைந்தனர். அவர்கள் கல்லறையைவிட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் அச்சத்தால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. (மாற்கு 16:8  பழைய கிரேக்க பிரதிகளில் புத்தகம் இத்துடன் முடிந்துவிடுகிறது.)

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

ஏசுவை புதைத்தது கல்லறை பெரும் விடுதி அறையாலுக்கா கதைப்படி 3 + மேலும் பெண்கள் பிணக்கல்லறைக்குள் சென்றனராம்–    இது என்ன ஹோட்டல் அறையா? 

லூக்கா 24:   3 அவர்கள் உள்ளே சென்றார்கள். ஆனால் இயேசுவின் உடல் அங்கு இருக்கவில்லை. 4 அப்பெண்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒளிமிக்க ஆடை அணிந்தவர்களாக இரண்டு தேவ தூதர்கள் அவர்களருகே நின்றார்கள். 5 அப்பெண்கள் மிகவும் பயந்தார்கள். 10. அவர்கள் மகதலேனா மரியாள்யோவன்னாயாக்கோபின் தாயாகிய மரியாள்வேறு சில பெண்கள் ஆகியோர். 

 

ஞாயிறு காலை பெண்கள்ஏசுவின் பிணம் வைக்கப்பட்ட கல்லறை சென்றதாகக் கதை. ஏசுவை புதைத்தது கல்லறை பெரும் விடுதி அறையாஞாயிறு அதிகாலை பெண்கள் கல்லறை செல்வதிலிருந்து அன்றைய நிகழ்ச்சிகளை கதாசிரியர் கூறியதை ஒன்று இணைத்துப் பார்ப்போம்.

 

  யார் சென்றதுஎத்தனை பேர் சென்றதுஎல்லாமே ஒவ்வொரு சுவி கதாசிரியரும் மாற்றி புனைவதைக் காணலாம்.

கதாசிரியர்

சம்பவம்

மாற்கு

மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர்

மத்தேயு

மகதலா மரியாவும் வேறொரு மரியா

லூக்கா

பெண்கள் -கதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியாஎன்பவர்களும் அவர்களோடு 

இருந்த வேறு சில பெண்களும்

யோவான்

மகதலா மரியா மட்டுமே

  கல்லறை சென்றது எதற்காக?

மாற்கு

உடலில் நறுமணப் பொருள்கள் பூசுவதற்கென்று

மத்தேயு

கல்லறையைப் பார்க்க

லூக்கா

ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களோடு

யோவான்

 

இறந்தவர் பிணத்தின் மீது  நறுமணப் பொருள்கள் பூசுவது அடக்கம் செய்யுமுன் தான். மாற்கு சொன்னது தவறுஅது மட்டுமின்றி தெளிவாய் ஏசுவின் உடலை அடக்கம் செய்த முறை என 4ம் சுவியில் காண்போம்

யோவான் 19: 39 நிக்கோதேமு யோசேப்போடு சென்றான். இவன் ஏற்கெனவே ஒரு நாள் இரவு இயேசுவிடம் வந்து அவரோடு பேசியிருக்கிறான். அவன் 100 இராத்தல் வாசனைமிக்க கரியபோளமும் வெள்ளைப் போளமும் கலந்து கொண்டுவந்தான். 40 அவர்கள் இருவரும் இயேசுவின் சரீரத்தை எடுத்துப்போனார்கள். அவர்கள் அந்த சரீரத்தை வாசனைத் திரவியங்களோடு கூட துணிகளினால் சுற்றினார்கள். (இதுவே யூதர் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை.)

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கல்லறை மூடிய கல் திறத்தல்

 

மாற்கு

புரட்டப் பட்டிருந்தது

மத்தேயு

திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதுஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து   இறங்கி  வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டிஅதன் மேல் உட்கார்ந்தார்.

லூக்கா

கல்லறை வாயிலிலிருந்து கல்  புரட்டப்பட்டிருந்தது

யோவான்

கல்லறை வாயிலில்இருந்த கல்  அகற்றப் பட்டிருந்தது

மத்தேயு சொன்ன பூகம்பம் மற்ற கதாசிரியர்களுக்கு தெரியவில்லை.

பெண்கள் கல்லறை கணடது யாரை.

மாற்கு

வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர்

மத்தேயு

மின்னல் போன்ற அவருடைய ஆடை தூதர்

லூக்கா

மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் 

யோவான்

 முதலில் மக்தலினா மரியா வந்தபோதும், பின்னர் பேதுரு வந்த போதும் யாரும் இல்லை.

 பிறகு மீண்டும்  மக்தலினா வந்த போது வெள்ளை உடைகள் அணிந்த இரு தேவ தூதர்களைப் பார்த்தாள், பிறகு ஏசுவே எனவும் கதை.

 

கல்லறையில் கண்ட ஆள் சொன்னது

மாற்கு

இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார். நீங்கள் புறப்பட்டுச்  செல்லுங்கள் பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ‘உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்  கொண்டு இருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்  எனச் சொல்லுங்கள்  என்றார்

மத்தேயு

அவர் இங்கே  இல்லை; அவர் கூறியபடியே  உயிருடன் எழுப்பப்பட்டார். நீங்கள்விரைந்து சென்று, ‘ இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் எனச்  சீடருக்குக்  கூறுங்கள். உங்களுக்கு  முன்பாக  அவர்                       கலிலேயாவுக்குப்  போய்க் கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள்

லூக்கா

உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன்  எழுப்பப் பட்டார்.  கலிலேயாவில் இருக்கும்போது  அவர் உங்களுக்குச் சொன்னதை  நினைவுப்படுத்திக்  கொள்ளுங்கள்.

யோவான்

பெண்கள்  என்ன  செய்தனர்

மாற்கு

நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. 

ஏனெனில்  அவர்கள்அச்சம் கொண்டு ருந்தார்கள் 5ம்நூற்றாண்டிற்கு முந்திய ஏடுகள் இத்தோடு  முடிகிறது. மீதம் பின்னாள்  சொருகல்

மத்தேயு

சீடரிடம் திரும்பும் வழியில் இயேசு காட்சி தந்து என் சகோதரர்களிடம் சென்று கலிலேயாவிற்கு வரச்சொல்லுங்கள். என்னை அங்கே காண்பார்கள்”என்றார்.

லூக்கா

சீடரிடமும்  வந்து சொன்னார்கள்.  சீடர்கள் நம்பவில்லை.

யோவான்

அவர் சீமோன்பேதுருவிடமும்மற்றச் சீடரிடமும்  வந்து, ‘ஆண்டவரைக் கல்லறையில்  இருந்து யாரோ  எடுத்துக் கொண்டு போய்விட்டனர்;  அவரை எங்கே கொண்டு வைத்தனரோஎங்களுக்குத் தெரியவில்லை! என்றார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 பெண்களுக்கு ஏசு தனி காட்சி தந்தாரா?

மாற்கு

ஏதுமில்லை

மத்தேயு

சீடரிடம் சொல்ல திரும்பும் வழியில் இயேசு காட்சி 

லூக்கா

ஏதுமில்லை

யோவான்

சீடர்  திரும்ப மகதலேனா அழுது கொண்டு கல்லரை உள்ளே பார்க்க, வெள்ளைஉடை தேவதூரர் கண்டாள். தூதர் ஏன் அழுகை எனக் கேட்க, யாரோ ஏசு பிணத்தைஎடுத்துப் போனர் சொல்லிவிட்டு, திரும்பினாளாம். இயேசு நின்றிருக்க  தோட்டக்காவர்காரர் என நினைத்து, ஏசுவின் பிணம் எங்கே எடுத்துச் சென்றனர், என்க –இயேசு ‘மரியா‘ என அழைக்க ஏசு என அறிந்து போதகரே என் அழைக்கபிதாவிடமும் உங்களின் பிதாவிடமும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்”என்றார்.

 ஏசு சீடருக்கு காட்சிகள் எப்படி

மாற்கு

ஏதுமில்லை

மத்தேயு

கலிலேயாவில் இயேசு கூறிய மலை மீது இயேசு காட்சி, மதம் பரப்பச் சொன்னாராம்

லூக்கா

ஜெருசலேமில் இருந்து  எம்மா எனும் ஊர் இரண்டு சீடர் செல்லும் வழியில், ஏசும் இணைந்து நடக்க, அடையாளம் தெரியாது பேசிச் செல்ல, உணவு உண்ணும் போது ஏசு எனப் புரிய, ஏசு மறைந்தாராம். ஒரு சீடர் பெயர்    கிலேயோபாஸ்

யோவான்

சில சீடர்களுக்கு பூட்டிய அறையில் ஏசு காட்சி.

ஏசு சீடருக்கு அடுத்த காட்சிகள் உண்டா?

மாற்கு

ஏதுமில்லை

மத்தேயு

ஏதுமில்லை

லூக்கா

ஈஸ்டர் அன்றே இரண்டு சீடர் மற்றவரிடம் சொல்லஜெருசலேமில் ஒன்றாக எல்லாரும் இருக்கும் போதுகாட்சி தரஆவி என பயப்படஏசு ஆவிக்கு உடல் கிடையாதே எனச் சொல்லிகை- கால்களில் ஆணி அடித்த ஓட்டை காட்டியும் நம்பமுடியவில்லையாம். பின்னர் கேட்டு மீன் வாங்கி சாப்பிட்டுஉயிர்த்ததை விளக்கிஜெருசலேமில் தங்கி இருக்கச் சொல்லி சீடரோடுபெத்தானிய சென்று சீர்வதித்துழ்த்தும்போது அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துச்செல்லப் பட்டார்

யோவான்

ஜெருசலேமில் சில சீடர்களுக்கு பூட்டிய அறையில் ஏசு காட்சி.  அங்கில்லததிதிமு நம்பாவில்லை

ஏசு சீடருக்கு அடுத்தடுத்த காட்சிகள்

மாற்கு

ஏதுமில்லை

மத்தேயு

ஏதுமில்லை

லூக்கா

ஏதுமில்லை

யோவான்

ஜெருசலேமில் ஒருவாரம் கழித்து மீண்டும்  திதிமு உட்பட சீடருக்கு காட்சி

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஏசு சீடருக்கு மீண்டும் அடுத்த காட்சிகள்

மாற்கு

ஏதுமில்லை

மத்தேயு

ஏதுமில்லை

லூக்கா

ஏதுமில்லை

யோவான்

ஜெருசலேமில் காட்சி கண்ட சீடர்தங்கள் சொந்த ஊர் கலிலேயாவின் திபேரியா கடற்கரையில் மீன்பிடி தொழிலில் வந்திருக்கமீன் கிடைக்காது திரும்பகரையில் இருந்த ஏசு வலப்பக்கம் வலை போடச் சொல்லநிறைய மீன் கிடைக்க ஏசு என சீடருக்கு அடையாளம் தெரியஅவரோடு சாப்பிட்டனர். ஏசு பேதுருவிடம் என் மந்தையை பார்த்துக் கொள் என்றாராம்.

அன்புச் சீடன் பற்றிக் கேட்கஏசு தான் மீண்டும் வரும்வரை அன்புச் சீடர் உயிரோடு இருப்பார் என்றார்.

 

 

 

 

ஏசு தன் மரணத்தை முன்பே சொன்ன போது சொன்ன தீர்க்கம் காட்சி கலிலேயாவில் என்பார்

மாற்கு

14: 28 ஆனால் நான் இறந்த பிறகு மரணத்திலிருந்து எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கிருப்பேன்” என்றார்.

மத்தேயு

26 :32 ஆனால் நான் இறந்தபின்மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன். பிறகு கலிலேயாவிற்கு செல்வேன். நான் உங்களுக்கு முன்னே அங்கிருப்பேன்” என்றார்.

லூக்கா

22 -ஏதும் இல்லை

யோவான்

----------

 

சுவிசேஷங்கள் திட்டமிட்டபடி ஏசு வாயில் கதாசிரியர் தான் விரும்புவதைப் போடுகிறார் என்பது நாம் மேலுள்ளதில் காண்கிறோம்சீடர்கள் ஏசுவோடு இருந்து ஏசுவினை அறிந்து புரிந்த தன்மை விதம்

மாற்கு14:60  அவரது சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள். 61. ஓர் வாலிபன் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்தான். அவன் ஒரு மேலாடை மட்டும் அணிந்திருந்தான். அவர்கள் அவனையும் பிடித்து இழுத்தார்கள்.62 ஆனால் அவனோ மேலாடையைப் போட்டுவிட்டு நிர்வாணமாக ஓடினான்.

மாற்கு கலிலேயாவில் உயிர்த்தபின் சந்திப்பு என எழுதியாதே - சீடர்கள் ஜெருசலேமில் இருந்தால் கைதாகக் கூடுமோ எனப் பயந்து கலிலேயா செல்வதை செய்தார்கள் என்பதால் என்பர் அறிஞர்கள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஒரே கதாசிரியர் கதையில் (லூக்காமுரண்பாடுகள்

லூக்காவில் ஜெருசலேமில் மட்டும் காட்சிஈஸ்டர் அன்றே பரலோகம் சென்றும் விட்டார். எனவே லூக்கா ஏசு மேலுள்ளதை சொல்லவில்லை. 

லூக்கா 24:33 பின்பு அவர்கள் எழுந்து திரும்பி எருசலேமை நோக்கிச் சென்றார்கள். எருசலேமில் இயேசுவின் சீஷர்கள் ஒன்றாகக் கூடியிருக்கக் கண்டார்கள்.

38. அவர்கள் இருவரும் இவற்றைக் கூறிக்கொண்டிருந்தபோது சீஷர்களின் கூட்டத்தின் நடுவில் இயேசு நின்றிருந்தார். 

60.எருசலேமில் இருந்து பெத்தானியா வரைக்கும் இயேசு சீஷர்களை அழைத்துச் சென்றார். பின்பு கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். 61 இயேசு அவர்களை வாழ்த்தும்போது அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டார். 

உயிர்த்த பின்னர் கலிலேயா செல்வேன் எனச் சொன்ந்தை லூகா முழுமையாய் விட்டார்உயிர்த்த ஈஸ்டர் அன்று ஜெருசலேமில் காட்சிபரலோகம் சென்றார் எனக் கதை முடித்தார்.

லூக்கா கதாசிரியரே எழுதிய மற்றொரு நூலில் உயிர்த்தல்  பற்றிய கதைகள்

அப்போஸ்தலர் 1:3 இயேசு மரணத்தினின்று எழுந்த பின்பு 40 நாட்களில் அப்போஸ்தலர்கள் பலமுறை இயேசுவைப் பார்த்தனர்.

9 இயேசு அப்போஸ்தலர்களுக்கு இந்தக் காரியங்களைக் குறித்துக் கூறிய பிறகு வானிற்குள்ளாக அவர் மேலே எடுத்துச் செல்லப்பட்டார். அப்போஸ்தலர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதேஅவர் மேகத்திற்குள்ளாகச் சென்றார். பின்னர் அவர்களால் அவரைப் பார்க்க முடியவில்லை..

 

இத்தனை முரணான வேறுபாடுகளை விவாதித்து பின் ஈஸ்டர் அன்று என்ன நடந்தது என்று கூற வழியில்லைஉள்ளவை நம்பிக்கை தரவில்லை என்றும்ஆனால் கிறிஸ்துவம் என ஒரு பெரும் சர்ச்- மதம் வளர்ந்துள்ளதே- அதற்குப் பின் மாபெரும் அதிசயம் இருந்திருக்க வேண்டும் என சேம்பர்ஸ்[iv] கலைக்களஞ்சியம் கூறுகிறது.

 

ஏசு இறந்த 50 நாளுக்குப் பின் கூட்டத்தில் அப்போஸ்தலர் எபிரேய மொழியில் பேசினால் பரிசுத்த ஆவியினால் அங்கிருந்த மக்களுக்க் அவர்கள் மொழியில் காதில் விழுந்தது எனவும், 3000 மக்கள் அன்றே சர்ச்சில் சேர்ந்தனர் எனப் புனைகின்றதுஇன்று நடுநிலை பைபிள் வரலாற்று ஆசிரியர் எவரும் ஏற்கவில்லை.

அப்போஸ்தலர் 2:41 பேதுருகூறியவற்றை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். அந்த நாளில் விசுவாசிகளின் கூட்டத்தில் சுமார் 3,000 மக்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

 

கிறிஸ்துவ மத வளர்ச்சி மிக மிக மெதுவாக இருந்ததுஏசு இறந்து 10 ஆண்டு பின்பு 1000 அளவில்[v] தொடங்க்யது 100 ஆண்டு பின்பு தான் 10000 தொட்டது,  ரோம் சர்ச் ராணுவ பலமே அதன் வளர்ச்சியின் ஆணிவேர்.

 

வசதிக்கு ஏற்ப கதை ஏறும் – மாறும் வெறும் கதை தானே!!

 

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

யோவான் சுவியில் கதை வளர்கிறது

யோவான் சுவி கதாசிரியர் இதை சரி செய்ய முதலில் ஜெருசலேமில் காட்சிபின்னர் சீடர்கள் சொந்த ஊர் கலிலேயாவிற்கு சென்று பழைய தொழிலான மீன்பிடித்தலில் ஈடுபட்ட போது காட்சி எனக் கதை சொல்கிறார்

யோவான் 21:1 இதற்குப் பின்பு இயேசு மறுபடியும் தன்னை சீஷர்களுக்குக் காண்பித்தார். அது திபேரியா (கலிலேயா) கடற்கரையில் நிகழ்ந்தது. 

6 இயேசு அவர்களிடம், “நீங்கள் உங்கள் வலைகளைப் படகுக்கு வலது புறமாகப் போடுங்கள். அப்பொழுது நீங்கள் மீன்களைப் பிடிப்பீர்கள்” என்றார். அதன்படி சீஷர்களும் செய்தனர். அவர்கள் வலையைப் படகுக்குள் இழுக்க முடியாத அளவுக்கு ஏராளமான மீன்களைப் பிடித்தனர்.

லூக்கா 5:1-10 பேதுருவை சீடராகச் சேர்த்துக் கொள்ளும்போது நடந்தது எனும் அதே அதிசயக் கதை இங்கே உயிர்த்த பின்னர் என மாற்றப் பட்டுள்ளது.

பவுலின் நம்பிக்கை என்ன?

பவுல் அடிப்படை- உலக முடிவை  அவர் வார்த்தையில் ஏசு கிறிஸ்துவின் நாள் எனும் இரண்டாவது வருகை மிக அருகில் தன் வாழ்நாளில் தான் என கூறியதை புரிந்து கொள்ளாதவர்கள் பவுலிடம் வேறு ஏதும் புரிது கொள்ள முடியாது என்கின்றனர் பைபிளியல் பேராசிரியர்கள்[vi].

 

பவுலின் நம்பிக்கை ஏசுவின் மத நம்பிக்கையிலிருந்து மாறுபடுகிறதுபவுல் ஏசுவை ஒரு கிரேக்க புராணம் போலே இறந்த ஏசுவை தெய்வீகர் என மாற்றிவிட்டார்தன் உடம்பை சாப்பிடு என ஏசு சொன்னதாக உள்ளவை எல்லாம் பவுலின் கற்பனை என்பது சர்ச் அறிந்ததெ என தெளிவாய் பைபிளியல்[vii] பேராசிரியர்கள் ஏற்கின்றனர்.

 

பவுல் சொன்னது- ஜெருசலேம் சர்ச்சில் தினமும் பரப்பப்பட்ட தீர்மானம்(உ-ம் பேதுரு[viii] பேச்சு) என மழுப்பலாளர் சொல்கின்றனர். மேலும் 500 பேரில் பலர் உயிரோடு உள்ளனர் எனில்அவர்கள் மறுத்திருக்கலாமே எனவும் புலம்புகின்றனர். இக்கடிதம் ஜெருசலேமிருந்து 1000 கிலோமீட்டர் தள்ளி இருந்த கொரிந்தியருக்கு வரையப்பட்டதுஎனவே ஜெருசலேம் மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. மேலும் ஒருவர் பெயரும் இல்லை. மேலும் இதில் சொல்லப்பட்ட வரிசையில் தான் காட்சி என சுவிகளில் இல்லை. மேலும் இந்த விபரமே இடைச்செருகல் இன்பதும் பல பைபிளியல் அறிஞர்கள் கருத்து.

 

உலகமே முடியப் போகிறது இனி திருமணமே தேவையில்லை.

கொரிந்தியர் 7: 1இப்போதுநீங்கள் எழுதிக் கேட்டிருந்தவற்றைக் குறித்துப் பார்ப்போம்ஆம்பெண்ணைத் தொடாமல் இருப்பதே நல்லது.

 8இப்போது மணமாகாதவர்களுக்கும் கைம்பெண்களுக்கும் நான் சொல்வது இதுவேஅவர்களும் என்னைப்போலவே இருந்துவிட்டால் மிகவும் நல்லது. 

9அன்பர்களேநான் சொல்வது இதுவேஇனியுள்ள காலம் குறுகியதேஇனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும்.

31உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும்இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது. (And they that use this world, as not abusing it: for the fashion of this world passeth away.)

உலக முடிவுகணக்கெடுப்பு நாளில் நாமெல்லாம் பரலோக வாசிகளாக வினாடியில் மாற்றப் படுவோம்.

 1கொரிந்தியர்15:51 இதோஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்நாம் யாவரும் சாகமாட்டோம்: ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம்.52 ஒரு நொடிப்பொழுதில்கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம்.53 ஏனெனில்அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்.

கிறிஸ்து என்பவர் யுக முடிவில் வரவேண்டியவர் என்பதை தனியாக விரிவாய் காண இருப்பதால்சற்றே தீர்க்கம் மூலம் சொல்லப் படுவதைப் பார்த்து விடுவோம்.

 

மரணமடைந்த இயேசுவை- எனக் காட்ட மாற்கு பயன்படுத்தும் வசனம்

  மாற்கு1:2 ' இதோஎன் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.

மலாக்கி3: 1 இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்: 

 

எலியா வருகைக்குப் பின் கர்த்தரின் நாளில் கர்த்தர் வருவார் என்பது தான் கதையின் நம்பிக்கை

மலாக்கி4:1 இதோ! சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர்கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்: வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோகிளையையோ விட்டுவைக்காது: முற்றிலும் சுட்டெரித்து விடும்என்கிறார் படைகளின் ஆண்டவர். 5 இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.6நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும்பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்.

//ஆண்டவரின் நாள் - என்றால் என்ன என்ன அதில் நடக்கும்?

 யோவேல்1:15 துக்கமாயிருங்கள். ஏனென்றால் கர்த்தருடைய சிறப்புக்குரிய நாள் அருகில் இருக்கிறது. அப்போதுதண்டனையானது சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து ஒரு சங்காரம் போன்று வரும். 

28 இதற்குப் பிறகு நான் எனது ஆவியை அனைத்து ஜனங்கள் மேலும் ஊற்றுவேன்.

யோவேல்2:28உங்கள் மகன்களும்மகள்களும் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள்.    உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.     உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைக் காண்பார்கள். 29 அப்போதுநான் பணியாட்கள் மேலும் பணிப்பெண்கள் மேலும்     என் ஆவியை ஊற்றுவேன்.   30 நான் வானத்திலும் பூமியிலும் இரத்தம்நெருப்பு,     அடர்ந்த புகைபோன்ற அதிசயங்களைக் காட்டுவேன். 31 சூரியன் இருட்டாக மாற்றப்படும்.     சந்திரன் இரத்தமாக மாற்றப்படும்.     பிறகு கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள்வரும். 32 பிறகு  கர்த்தருடைய நாமத்தை கூப்பிடுகிற எவரும் இரட்சிக்கப் படுவார்கள்.”  சீயோன் மலையின் மேலும்எருசலேமிலும் காப்பாற்றப்பட்ட ஜனங்கள் இருப்பார்கள்.     இது கர்த்தர் சொன்னது போன்று நிகழும். ஆம் கர்த்தரால் அழைக்கப்பட்ட மீதியிருக்கும் ஜனங்கள் திரும்பி வருவார்கள்.

 இதே வார்த்தைகளை ஏசுவும் சொன்னதாகக் கதை

 மாற்கு 13:23 எனவே கவனமாய் இருங்கள். இவை நடைபெறும் முன்னரே நான் உங்களை எச்சரிக்கை செய்துவிட்டேன்.

24 அந்நாட்களில் அத்துன்பங்கள் நடந்த பிறகு, “‘சூரியன் இருளாகும்.    சந்திரன் ஒளி தராது.25 நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்.    வானிலுள்ள அத்தனையும் மாறிப்போகும்26 பிறகு மேகங்களுக்கு மேல் மனித குமாரன் மிகுந்த வல்லமையோடும்மகிமையோடும் வருவதைக் காண்பார்கள். 30 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன்.இப்பொழுது உள்ள மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே நான் சொன்னவை எல்லாம் நிகழும். 31 இந்த முழு உலகமும் பூமியும் வானமும் அழிந்துவிடும். ஆனால் நான் சொன்ன வார்த்தைகள் மாத்திரம் அழியாது.

கிறிஸ்து வந்தால் அவரோடு உலகம் அழியும்இதை இரண்டாவது வருகை என்றனர்எப்படி ஏசு தன் வாழ்நாளில் உலக அழிவும் வெற்றிக்கு கடவுள் உதவி எதிர்பார்த்து கடைசியில் "என் தேவனே! என்னை ஏன் கைவிட்டீர்கள்என முழு நம்பிக்கை இழந்து உயிர் விட்டாரோ - அக்டே போல தன் வாழநாளில் இரண்டாவது வருகை எனச் சொன்ன பவுலும் இறந்து போனார்.
 ஆதாம் செய்த முதல் பாவம் ஒழிக்க கிறிஸ்து?

மனிதன் பூமியில் மரணம் அடையக் காரணம் ஆதாமின் பாவம் என்பது கதை. அந்தப் பாவ நிவாரணம் ஏசுவில் மரணமும் - உயிர்த்து எழுந்தார் எனும் கதையும் என்கிறார் பவுல்.

பவுல் சொல்வது  -

ரோமன் 5: 12 ஆதாம் என்கிற மனிதனின் செயலால்தான் உலகத்துக்குப் பாவம் வந்தது. பாவத்தோடு மரணமும் வந்தது. அதனால்தான் அனைவரும் தம் பாவத்தால் இறந்து போகிறார்கள்.

18 எனவே ஆதாம் செய்த ஒரு பாவமானது மரணம் எனும் தண்டனையை அனைவருக்கும் தந்தது. அதுபோல் ஒரு மனிதரான இயேசுவின் நீதியானது அனைவரையும் நீதிமான்களாக்கும். அதோடு உண்மையான வாழ்வையும் அவர்களுக்குத் தந்தது. .

கொரிந்தியர் 15: 45இதே பொருளில் முதல் மனிதன் (ஆதாம்) உயிருள்ளவனானான். [c] இறுதி ஆதாமாகிய கிறிஸ்துவோ உயிரளிக்கும் ஆவியானவரானார் என்று விவிவிலிய வாக்கியம் கூறுகிறது.

 

கிறிஸ்துவினால் ஆதாம் பாவம் போகும் என சுவிகளிலோ அல்லது மற்ற எங்கும் காண இயலவில்லை. ஆயினும்  ஏசு சொல்வதாகவேயும் ஒரு சம்பவம் கீழே.

யோவான் 6:48 நானே ஜீவனளிக்கும் அப்பம். 49 உங்கள் மூதாதையர்கள்தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப் போன்றே மாண்டுபோனார்கள். 50 நான்பரலோகத்தில் இருந்து வந்த அப்பம். ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் என்றென்றைக்கும் பூமியில் உயிர்வாழ்வான். 51 என்னுடைய சரீரம் தான் அந்த அப்பம். 

 2000 வருடங்களாக மன்னாவை சாப்பிட்டவரைப் போலஏசு- பவுல்பேதுரு என அனைவருமே இறந்தனர்.

இதைக் கேட்டால் இது உலக வாழ்வை அல்லஆத்துமாவிற்கு பரலோக வாழ்வு என்றெல்லாம் கிறிஸ்துவ மழுப்பலாளர்கள் ஆரம்பிப்பார்கள்- மன்னா உண்டவர்கள் எங்கே இறந்தார்கள்- அந்த மரணத்தை தான் ஏசு சொன்னதாய் உள்ளது..

கர்த்தர் இதை ஏற்கவில்லை - உபாகமம் 24: 16 பிள்ளைகள் செய்தக் காரியத்திற்காகப் பெற்றோர்கள் கொலைசெய்யப்படக் கூடாது. அதுபோன்று பெற்றோர்கள் செய்த காரியங்களுக்காகப் பிள்ளைகள் கொலை செய்யப்படக் கூடாது. அவனவன் செய்த பாவச் செயல்களுக்கு ஏற்ப அவனவன் கொலைசெய்யப்பட வேண்டும்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஏசுவும் யூதர் அல்லாத புற ஜாதியினரும்

பவுல் தன்னை ஏசு யூதர் அல்லாதவர்களிடம் (இவரே பாவிகள்[ix] என்றும் கேவலமாய் ஓரிடத்தில்  பேசி இனவெறியையும் காட்டுவார்) அனுப்பப் பட்டேன் எனச் சொல்லி அவர்களிடம் பணமும் பொருளும் சம்பாத்த்து போதனை செய்தார்.

ரோமர்11: 13 நான் இப்போது யூதரல்லாத மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். நான் யூதரல்லாதவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கிறேன். 

ரோமர் 15:16 நான் யூதரல்லாதவர்களுக்கு உதவும்பொருட்டு என்னை தேவன் ஊழியனாக்கினார்.

கலாத்தியர் 2:7 தேவன் பேதுருவிடம்யூதர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி ஆணையிட்டிருந்தார். ஆனால் எனக்கோயூதர் அல்லாதவர்களுக்குப் போதிக்கும்படி தேவன் ஆணையிட்டிருந்தார். 8 ஒரு அப்போஸ்தலனைப்போலப் பணியாற்றும்படி பேதுருவுக்கு தேவன் அதிகாரத்தைத் தந்தார். யூதர்களுக்குப் பேதுருவும் ஒரு அப்போஸ்தலனாகவே இருந்தான். நானும் ஒரு அப்போஸ்தலனைப்போல பணியாற்ற தேவன் எனக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். ஆனால் நானோ யூதர் அல்லாதவர்களுக்காக அப்போஸ்தலனாக இருக்கிறேன்.

 

நாம் ஏசு சீடர்களிடம் பேசியதாக உள்ளதைக் கொண்டு சற்றே இயேசுவை ஆராய்வோம்.

மத்தேயு10:11 இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘ பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாகவழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.7அப்படிச் செல்லும்போது ‘ விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ‘ எனப் பறைசாற்றுங்கள்.
23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.

மத்தேயு15:24 அவரோ மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளான  யூதர்களுக்கு மட்டுமே நான் அனுப்பப்பட்டேன்  தவிர மற்றவருக்கு அல்ல என்றார்.

 

மாற்கு7:27 இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல  என்றார்.28 அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயாஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ‘ என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று  என்றார்

மத்தேயு7:6தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம்அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும்.

யூத நடைமுறையில் மேலே ஏசு பிதற்றி உள்ளபடியே நாய்கள் என்றால் யூதர்கள் அல்லாத அனைவரும்முத்து பைத்தியக்கார உளறல் பழைய ஏற்பாடுபன்றி யூதர்கள் அல்லாத அனைவரும். ஏசு யூத வெறி பிடித்த மிருகமாய் பேசியுள்ளார்.
 

மத்தேயு19:28 அதற்கு இயேசு, ‘ புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு5:20 மறைநூல் அறிஞர்பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில்நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.

 

மத்தேயு5:17 ‘ திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்அவற்றை அழிப்பதற்கல்லநிறைவேற்றுவதற்கே வந்தேன்.18  விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.19 எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.

மத்தேயு231 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது:2 ‘ மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள்ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்செயலில் காட்ட மாட்டார்கள்.:

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மேலும் ஏசு 12 சீடர் தேர்ந்தெடுத்தார், அவரின் புது உலகம யூதருக்கு மட்டுமே, 12 கோத்திரத்தாருக்கு 12 பேர் ஆனால் அதில் ஒருவன் ஏசு கையால் அப்பம் பெற சாத்தான் நுழைந்ததாம்.

மத்தேயு19:28 இயேசு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின் பன்னிரெண்டு இனங்களுக்கும் நீதி செய்வீர்கள்.

யோவான் 13:26 இயேசு அப்பத்துண்டை தோய்த்து எடுத்தார். சீமோனின் மகனான யூதாஸ்காரியோத்திடம் அதனைக் கொடுத்தார். 27 யூதாஸ் அந்த அப்பத்துண்டை வாங்கிக்கொண்டதும் சாத்தான் அவனுக்குள் புகுந்துகொண்டான். 

 

கணக்கெடுப்பு நாளில் பெண்ணை தொடாத 1144,000 யூதர்களுக்கு மட்டுமே பரலோகம்

வெளி 7:4  பிறகு முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கேட்டேன். இஸ்ரவேலின் பல்வேறு குடும்பக் குழுக்களிலிருந்து அவர்கள் 1,44,000 பேர் இருந்தார்கள். வெளி 14:4 அந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்களும் பெண்களால் தம்மை மாசுபடுத்திக்கொள்ளாதவர்கள். அவர்கள் தம்மைச் சுத்தமாய் வைத்திருந்தனர். ஆட்டுக்குட்டியானவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் அவர்கள் பின்தொடர்ந்து செல்கிறவர்கள். இந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் மட்டும் பூமியில் இருந்து மீட்கப்பட்டவர்கள்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

யூத மதம் என்பது வெறும் அரசியல் மதமே, அதில்  வரவேண்டிய கிறிஸ்து -இரண்டாவது வருகைஎல்லாமே வெறும் மூட நம்பிக்கைகளே

 

 . Many Scholars maintain that by the time Mark and Matthew wrote their accounts of trial, there was no living witness to what had taken place after Jesus arrest.  –Page 453 Pictorial Biblical Encyclopedia

Messiah : The Eschatological King who is to rule over Israel at the end of the Days.

None of the Older sources referred to a Messiah who should appear on earth in poverty and humility to be rejected by his own people and suffer and die, giving his life as ransom for mankind. Page- 456 Pictorial Biblical Encyclopedia

The character and structure of the indivudaul traditions are incorporated in to the Gospels, which definitely do not have a historical or Biographical interest in facts, circumstances and the course of events. They do not reproduce the story of Jesus as such, vut recount history interpreted from the view point of the Christian faith.  – page 337, Vol-22 Britanica

Mark has no teaching to create a friendly attitude to the Gentiles, to the poor and the outcast, as seen  in Luke. Page5, St.Mark’s Unique Gospel OM.Rao, ISPCK

If one has to accept the Virgin birth, and Adamic descent of Jesus are difficult to reconcile. If one ace[t the vifgin birth thre is no point in tracing descent through Joseph. On the other hand if one accept the descent, then can Jospeh be taken as actual father which is not Church’s faith. Page-6 Ibid

 

"The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Syoptics, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assignment of fictitious speeches to historical characters: the best ancient historians made a practice of and assigning such speeches in this way."   C.J. Cadoux: The Life of Jesus, p. 16

நாம் இதை சுட்டிக் காட்டினால் மழுப்பலாளர்கள் உயிர்த்தெழுந்த ஏசு  சொன்ன கட்டளையைப் பாருங்கள் என்பர்.

மத்தேயு 28: 19 ஆகவே உலகில் உள்ள மக்கள் அனைவரையும் சீஷர்களாக்குங்கள். பிதாவின் பெயராலும் குமாரனின் பெயராலும் பரிசுத்த ஆவியானவரின் பெயராலும் அவர்களுக்கு ஞானஸ்நானம் வழங்குங்கள்.

மாற்கு 16: 15 பின்பு அவர்களிடம், “உலகின் எல்லா பாகங்களுக்கும் செல்லுங்கள். எல்லாரிடமும் நற்செய்தியைக் கூறுங்கள். 16 எவனொருவன் இதனை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறானோ அவன் இரட்சிக்கப்படுவான். எவனோருவன் விசுவாசிக்கவில்லையோ அவன் கண்டிக்கப்படுவான்.

நாம் இவை எல்லாமே பிற்காலப் புனையல்[x] என்றாலும் - பைபிள் உள்ளேயே உள்ளவற்றை வைத்தே விளக்குவோம்

அப்போஸ்தலர் 21: 17 எருசலேமிலே விசுவாசிகள் எங்களைக் கண்டு, சந்தோஷம் அடைந்தனர். 18 மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர்.

22 “நாங்கள் என்ன செய்வோம்? நீர் வந்திருப்பதை இங்குள்ள யூத விசுவாசிகள் அறிந்துகொள்வர். 23 எனவே நீங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம். எங்களுடனிருப்போரில் நான்கு பேர் தேவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளனர். 24 இம்மனிதர்களை உங்களோடு அழைத்துச் சென்று அவர்களின் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கு பெறுங்கள். அவர்கள் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். எனவே அவர்கள் தங்கள் தலை முடியை மொட்டை போடவும். இதைச் செய்யுங்கள். உங்களைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய்யானவை என்று அது எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டும். உங்கள் சொந்த வாழ்க்கையில் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதை அவர்கள் காண்பார்கள். 

அப்போஸ்தலர் 16:3  3 தீமோத்தேயு தன்னுடன் பயணம் செய்ய பவுல் விரும்பினான். அப்பகுதியில் வசித்த எல்லா யூதர்களும் தீமோத்தேயுவின் தந்தை கிரேக்கன் என்பதை அறிந்திருந்தார்கள். ஆகவே பவுல் தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் செய்வித்தான்.

ஏசு மரணத்திற்கு 25ஆண்டு பின்னர் மோசே சட்டப்படி பரிகாரம் செய்ய வைத்தனராம்

1 கொரி 1:12 நான் கூற விரும்புவது இது தான்: உங்களில் ஒருவர் “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். மற்றொருவர் “அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். இன்னொருவர் “நான் கேபாவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். இன்னும் ஒருவர் “நான் கிறிஸ்துவைப் பின் பற்றுகிறேன்” என்கிறார். 13 கிறிஸ்துவைப் பலவகைக் குழுக்களாகப் பிரித்துப் பார்க்கமுடியாது! சிலுவையில் பவுல் உங்களுக்காக மரித்தானா? இல்லை.

என்ன வித்தியாசம் - ஏன் குழப்பம்?

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பிணக் கல்லறை சர்ச்

 

இன்று  ஜெருசலேமில் தூய பிணக் கல்லறை சர்ச் ஏசுவின் பிணம் புதைக்கப்பட்ட கல்லறை இருந்தஇடம் என்று      கூறி உள்ள Churchof Holy  Sepulchre  சர்ச் 4ம் நூற்றாண்டில்   ரோமன் மன்னன் கான்ஸ்டன்டைன்  தாயார் ஹெலனாவால் கனவு கண்டு அடையாளம் காட்டப் பட்டது. அதாவது கல்லறை எனப்து எங்கே என்பது ஏசுவின் மரணத்திற்கு 300 ஆண்டு பின்பு வரை தெரியாது.

பைபிளியல் அறிஞர்களும் தொல்லியல் அந்த இடம் அல்ல, அது தோட்டக் கல்வாரி எனும் வேறுஒரு இடம் என கூறுகின்றனர்.

இஸ்ரேலில் நடந்த புதைபொருள் ஆய்வுகள்[xi] மற்றும் பைபிள்  குறிப்புகள்[xii] உண்மையான ஏசுவின் பிணக் கல்லறை இப்போது சர்ச் உள்ள இடத்திலிருந்து சிறிது தூரத்தில் வரும் என்கின்றனர்

 

ஆய்வு முடிவு:

 

உயிர்த்தார் என்னும் புரளி. பின் காட்சிகள் எல்லாமே  வெற்று கதாசிரியர் விடும் புரட்டு புனையல்கள்என்பதை பல பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர். 

 

இறந்தவர் பிணத்தின் மீது  நறுமணப் பொருள்கள்பூசுவது அடக்கம் செய்யுமுன் தான். யார் சென்றது? எத்தனை பேர் சென்றது? எதற்காகசென்றது? எல்லாமே ஒவ்வொரு சுவி கதாசிரியரும் மாற்றி  புனைவதைக் காணலாம். எதுவுமே உண்மையில்லை

 

நீதிமொழிகள்: 29:26 . தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.



 http://abcnews.go.com/GMA/jesus-christ-died-cross-scholar/story?id=11066130 சுவிடனின் கோதன்பெர்க் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஏடு, "பழங்காலத்தில் சிலுவை மரனங்கள்" குன்னர் சேமுவெல்சன் -பாதிரியாரே, ஆனால் வரலாற்று ஆதாரம் கொண்டு ஆய்வு செய்த பின் கூறியது - ரோமன் ஆட்சி நிச்சமாய் வரலாறு பதிவுகள் செய்வர், சிலுவை மரணம் பற்றி குறிப்புகள் இல்லை, தூக்குமரம் மட்டுமே என்றார்.

[ii] மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில்  பைபிளியல் விமர்சனம் மற்றும் விவாதத்திற்கானரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்   அவர்கள் "The Real Jesus" என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்,The Conclusion usually (and I think rightly) drawn from their comparitive study, is that Gospel of Mark (or something very like it) served as a source for Gospel of Matthew 7 Luke, and that two also had access to a collections of saying of Jesus (Conveniently labelled "Q"}  .....   Page -25.

[iii]  The Manuscript tradition indicates that the Gospel of Mark ended at 16:8, but the longer ending that is incorporated in the vulgate was latter added becoming widely accepted in the course of the 5th century.

While many MSS dating from the 5th century and later support the longer ending of the Vulgate 116: 9-20, other important 4th century witness, principally Codices Sinaticus, Vaticanus, Bobiemis and the Sinatic Syriac that contain the old Syriac version end the Gospel at 16:8. Page-240, Vol-9; New Catholic Encyclopedia

[iv] It is possible, that there will always be differences of opinion as to what precisely took place[ in regard to the tomb being found empty]; yet it is clear enough from such records as we have that unless something epoch-making had happened there would have been no church to make any records at all. Page 86, Vol8, Chambers Encyclopedia 1963

[v] கிறிஸ்துவ மத வளர்ச்சி மிக மிக மெதுவாக இருந்தது, ஏசு இறந்து 10 ஆண்டு பின்பு 1000 அளவில் தொடங்க்யது 100 ஆண்டு பின்பு தான் 10000 தொட்டது,  ரோம் சர்ச் ராணுவ பலமே அதன் வளர்ச்சியின் ஆணிவேர்.

[vi] No belief is more characteristic of Paul or morefundamental to everything  he wrote a d did than his belief that the World was very soon coming to end. It is the absolute foundation of his thought. A reader who misses this point can understand very little else about Paul. Pate -244 The Bible as Literature.

It never occurred to Paul that Parousia or second coming (the day of Jesus Christ Phi 1:6) might be postponed beyond his won age in the distant hardly imaginable future as the Church eventually had to acknolege. Ibid Page- 245

[vii] The difference between the religion of Jesus and the religion of Paul are largely due to the fact Paul’s was a religion of Salvation, closely akin to Hellenistic Mysteries. Paul thought that of Jesus Christ as essentially Greek Idiom. It seems reasonable to suppose that the Church in the Apostolic and Sub-Apostolic times were aware of the kinship between the symbolism of the institution (John 6) of the Eucharist and the Sacraments of the mystery cults. This may also be partly the explanation for the formation of the Passover meal to an entirely symbolic rite.  Page- 295; Pictorial Biblical Encyclopedia

[viii] அப்போஸ்தலர் 2

[ix] கலாத்தியர் 2:15 பிறப்பால் நாம் யூதர்கள்; பாவிகள் எனப்படும் பிற இனத்தாரைச் சேர்ந்தவரல்ல.

[x] Mark generally, regarded as the earliest Gospel, originally contained no appearance stories, but merely pointed forward subsequent appearance in Galilee (16:7). Appearance stories has grown up as isolated units (periscopes) like the bulk of the Gospel material. Inevitably, what was originally indescribable came to be described in earthly terms. The risen Christ talked, walked and even ate with his Disciples as he had while on earth (Mt 28, Lk 24, Jn20 &21 and Mk 16:9 -20). Clearly the only way Post – Apostolic community could contruct appearance stores was to model them as the sotries from earthly ministry   page 648, Oxford companion to bible.

[xi] Archaeological investigation seem to show that the Christian tradition regards as Calvary was in a deep quarry probably used for the defence of second wall. Page-129 WWNT

[xii] Passion narrative, written from the point of view of those who believed in his resurrection , concluded, with Jesus burialin the Garden Tomb of Joseph of Arimathea, outside the northern wall of Jerusalem and debates have neversucceded in reahing a definte conclusion about the site of Calvary or thetomb of Christ.

The tradition site, where the Chruch of Holy Sepulture stand today was authenticated by a vision of St.Helana, mother of Emperor Constantine, in the early 4th Centrury. The Subterrain near vaulats and substructure of the church date from the time of Constantine.

Modern investigation have suggested a Site further to the North known as Gordon’s Calvary; but the repeated destruction  and rebuilding of walls of Jerusalem as it expanded during the following centuries, make certainity impossible.

Page- 452 Pictorial Biblical Encyclopedia



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard