இயேசுவின் கதைகளை சுவிசேஷக் கதைகளில் காண்கிறோம். பைபிளிற்கு வெளியே உண்மையில் வாழ்ந்தார் என்பதற்கு நடுநிலையாளர் ஏற்கும் வரலாற்று ஆதாரம் ஏது கிடையாது.
இயேசு சொல்லியதானதாக மத்தேயு சுவியிலுள்ள மலைப் பிரசங்கம், முதலில் வரையப்பட்ட மாற்கு சுவிசேஷத்தில் இது கிடையாது.லுக்கா சுவிக் கதாசிரியர்இதையே இரண்டு மூன்றாகப் பிரித்து தரையில் (மலையில் இல்லை) செய்ததாக புனைந்துள்ளார்.இந்த மலைப் பிரசஙத்தில் ஏசு நிறைய நல்ல போதனைகள் கூறுவதாக அமைந்துள்ளது. அவற்றில் சில நாம் காண்போம்.ஏசு தன் சீடர்களொடு இயங்கியபோது நடந்து கொண்டதையும் ஒன்றிணைத்துப் பார்ப்போம்.முடிவு.
சொல்லுதல் யார்க்கும் எளிதாம்அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் –என்பார் தெய்வப்புலவர்.
பகைவரிடம் அன்பாயிருத்தல்(லூக் 6:27 – 28, 32 – 36)
மத்தேயு5:43‘ ″உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக ″ , ″பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக ″எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.44ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்;உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.45‘ இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின்சூரியனைஉதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.46உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிவசூலிப்போரும் இவ்வாறு செய்வதில்லையா?
அனைவரையும் சமமாக மதித்து சூரியன் ஒளியையும் மழையையும் கூறிவிட்டு சீடர் அனுப்பும்போது ஏசு சொன்னது என்ன பாருங்களேன். பகைவருக்காக ஜெபம்செய்ய வேண்டுமாம்!
மத்தேயு10:5இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது:‘ ‘யூதரல்லாதபிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6மாறாக,வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமேசெல்லுங்கள்..
11நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.12அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.13வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.14உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.15தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
யோவான்4:22(சமாரியபெண்ணிடம்)யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது..
ஏசு வாழ்வில் நட்ந்தது சமாரியர்கள் என்பவர்களும் யூதர்களே, BCE 200 வாக்கில் பிரிந்தவர்கள், அப்போது பழைய ஏற்பாடு- முதல் ஐந்து புத்தகங்கள் மட்டுமே புனையபட்டு உள்ள நிலையில் சமாரிய பைபிள் நியாயப் பிரமாணங்கள் 5 புத்தகம் மட்டுமே. இவர்கள் அரசியல் ரீதியில் எதிரிக்கு உத்வி செய்ததால் பிரிந்தவர்கள், ஜெருசலேம் கர்த்தர் ஆலயத்தினுள் அனுமதி கிடையாது. யூதர்களே ஆயினும் கீழாகப் பார்க்கப்பட்டவர்களிடம் போக வேண்டம் என்கிறார் ஏசு. யூத்ப் பிரிவினர்தான் அவர்களும், ஆனால் அவர்கள் கடவுளை அறியாதவர்கள் என்கின்றார் இயேசு. இவர் போற்றும்படி நடக்கவில்லை.
ஏசு சீடர்களை ஏற்காவிட்டால் தண்டனை எனச் சாபம் வேறாம். ஆனால் ஏசுவின் பொன்மொழியை பாருங்கள்.
மத்தேயு5:39ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்;தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக,உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.
யோவான்18:22அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், ‘ தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்? ‘ என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார்.23இயேசு அவரிடம்,‘நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?‘என்று கேட்டார்.24அதன்பின் அன்னா அவரைக் கட்டப்பட்ட நிலையில் தலைமைக் குரு கயபாவிடம் அனுப்பினார்.
அனைவரையும் சமமாக மதித்து சூரியன் ஒளியையும் மழையையும் கூறிவிட்டுமீண்டும் சொல்வது என்ன பாருங்களேன்.
யோவான்17:17உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.18நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்.19அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன். ‘
20‘அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன்.
ஏற்காதவர்களுக்கு அருள் கிடையாது. சூரியனும் மழையும் அப்படியா உள்ளது?இயேசு சீடர்களைத் தானே தேர்ந்தெடுத்தார் எதற்கு
மத்தேயு19:28அதற்கு இயேசு,‘ புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஒரு இயக்கத் தலைவன் தன் தொண்டர்களை சரியாக மதிப்பிட்டு பணிகளைப் பிரித்துத் தர வேண்டும்.
யூதாஸ் ஸ்காரியோத்துவைத் பணப்பை வைத்துக் கோள்ள ஏசு பணித்தாராம். இவர் தலைமை பண்பு இங்கு குறைபாடுள்ளது என்பது தெரியும்.
யோவான்13:29பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டனர்.
யோவான்12:4இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமானயூதாசு இஸ்காரியோத்து,5‘ இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா? ‘ என்று கேட்டான்.6ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக் கொள்வதுண்டு.
இயேசு தன்னை கடவுள் என்றும் தன்னிடமிருந்து உணவு பெற்றால், வானிலிருந்து வந்த மன்னாவை உண்டவர்கள் பூமியில் இறந்தது போல அல்லாமல், ஏசுவை ஏற்றவர்கள் பூமியில் மரணமடையமாட்டார்கள் என்றார்.
யோவான்6:31எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ‘ அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ‘ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ‘ என்றனர்.32இயேசு அவர்களிடம்,‘ உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்;வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ‘என்றார்.
35இயேசு அவர்களிடம்,‘வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
9உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.
ஏசு வாழ்வில் நட்ந்தது ஏசு தன் வாழ்நாளில் உலக முடிவை எதிர்பார்த்தார்
மத்தேயு:10:23.ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மாற்கு13:14‘நடுங்க வைக்கும் தீட்டு’ நிற்கக்கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். படிப்பவர் இதைப் புரிந்து கொள்ளட்டும். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்.15வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்க வேண்டாம்; தம் வீட்டினின்று எதையும் எடுக்க அதில் நுழையவும் வேண்டாம்.16வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வர வேண்டாம்.17அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோர் நிலைமை அந்தோ பரிதாபம்!18இவை குளிர்காலத்தில் நிகழாதபடி இறைவனிடம் வேண்டுங்கள்.19ஏனெனில் இவை துன்பம்தரும் நாள்களாய் இருக்கும். கடவுள் படைக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இந்நாள்வரை இத்தகைய வேதனை உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப் போவதில்லை.
4‘ அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.25விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்;வான்வெளிக் கோள்கள் அதிரும்.26அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.27பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
30இவையனைத்தும் நிகழும்வரைஇப்பொழுது வாழும் மக்கள் இறக்க மாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச்சொல்கிறேன்.31விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.
மத்தேயு:27:27.மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். 28.பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.29.அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.30.அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.31.வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பது நியதி. ஆனால் பைபிள் கோட்பாடு
மத்தேயு 26: 29ஏனெனில்உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப் படும்.30பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ‘ என்று அவர் கூறினார்.
அனைவரையும் சமமாக மதித்து சூரியன் ஒளியையும் மழையையும் கூறிவிட்டுமீண்டும் சொல்வது என்ன பாருங்களேன்.
மாற்கு7: 24இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை.25உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.26அவர்ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர்.அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.27இயேசு அவரைப் பார்த்து, ‘முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல‘ என்றார்.28அதற்கு அப்பெண், ‘ ஆம்ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ‘என்று பதிலளித்தார்.29அப்பொழுது இயேசு அவரிடம், ‘நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ‘என்றார்.30அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.
ஏசு தன் சீடர்களொடு இயங்கியபோது நடந்து கொண்டதையும் ஒன்றிணைத்துப் பார்ப்போம்.முடிவு.
மத்தேயு: 5:44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
மத்தேயு-15:21இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். 22அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ‘ ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ‘ எனக் கதறினார்.23ஆனால்இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை.சீடர்கள் அவரை அணுகி, ‘ நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்‘ என வேண்டினர்.24அவரோ மறுமொழியாக, ‘இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடடம் மட்டுமேநான் அனுப்பப்பட்டேன் ‘என்றார்.25ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ‘ ஐயா, எனக்கு உதவியருளும் ‘ என்றார்.26அவர் மறுமொழியாக, ‘பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல‘என்றார்.27உடனே அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின்மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ‘ என்றார்.28இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.
லுக்கா சுவி எனப்படும் புனையலை எழுதியவர் இந்த சம்பவத்தை முழுமையாக விட்டு விட்டார்-ஏன்? ஒரு கத்தோலிக்க பேராசிரியரே சரியான காரணம் தந்துள்ளார்.
As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out. Companion to Bible, Vol-2 NewTestament P-30, Author K.Luke, Theological Publication of India, Bangalore.
(இந்த நூல் இரண்டு கத்தோலிக ஆர்ச்பிஷப்பிடம் ரோமன் கத்தோலிகக் கோட்பாடுகளுக்கு ஒத்துள்ளது- அச்சிடலாம், தடையில்லை என முத்திரை பெற்ற நூல்.Nihil obstate and Imprimatur)
லுக்கா கதாசிரியர்ஒரு யூதரல்லாதவர், கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்ணிடமன சம்பவத்தில்ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்பதையும் வீட்டினர் சிந்தும் எச்சிலை உண்பதும் என்பவைமிகுந்த வேதனை தருபவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கி விட்டார்.
தன்னை சாலமனைவிட மோசேயைவிடவும் பெரியவர் என பழைய ஏற்பாட்டு வார்த்தைகட்கு மீறி தற்பெருமையோடு பேசுவார்/
மத்தேயு12:41தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர்யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!42தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக் கோடியிலிருந்து வந்தவர். ஆனால்இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!
நல்ல் போதனைகள் யாரும் சொல்லமுடியும், ஆனால் தன் வாழ்வே ஒரு அடையாளம் என நடத்தல் வேண்டும்.இயேசு அதிகம் உண்பவராயும், மது சாராயம் குடிப்பவராகவும் இருந்தார்.
மத்தேயு 11:18எப்படியெனில்,யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ ‘ அவன் பேய்பிடித்தவன் ‘ என்கிறார்கள்.19மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ‘ இம் மனிதன் (இயேசு) பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் ‘ என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று.
பெற்றோரை மதிக்க வேண்டும் – ஆனால் சீடர் கடமை செய்ய விடவில்லை
மத்தேயு15:4கடவுள், ‘உன் தந்தையையும் தாயையும் மதித்து நட‘ என்றும், ‘ தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும் ‘ என்றும் உரைத்திருக்கிறார்.
மத்தேயு 8:21இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, ‘ ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும் ‘ என்றார்.22இயேசு அவரைப் பார்த்து,‘நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்‘என்றார்.
மாற்கு3:20அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.21அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.
31அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.32அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. ‘ அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள் ‘ என்று அவரிடம் சொன்னார்கள்.33அவர் அவர்களைப் பார்த்து,‘ என்தாயும் என் சகோதரர்களும் யார்?என்று கேட்டு,34தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து,‘ இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.35கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் ‘என்றார்
பெற்ற தாய் மேரியை யாரோ புகழ, அதையும் மறுக்கிறார் இயேசு
லூக்கா11:27அவர் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், ‘உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்‘ என்று குரலெழுப்பிக் கூறினார்.28அவரோ,‘இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்‘என்றார்.
பல பரிசேயர்கள் அவரை விருந்துக்கு அழைக்க அங்கே மிகவும் கீழ்த்தரமாக எதிர்த்து கேவலப்பட்டனர். –லுக்கா 11:38, 14:1, 7:36
இயேசு படித்தவர்களை சீடராக சேர்க்கவில்லை
மத்தேயு 8:18இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.19அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, ‘ போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் ‘ என்றார்.20இயேசு அவரிடம்,‘ நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை ‘என்றார்.
முதன்மையான கட்டளை(மத் 22:34 – 40; லூக் 10:25 – 28)
28அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, ‘ அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? ‘ என்று கேட்டார்.29அதற்கு இயேசு,‘ இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.30உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக ‘ என்பது முதன்மையான கட்டளை.31‘ உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக ‘ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை ‘என்றார்.32அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், ‘ நன்று போதகரே, ‘ கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை ‘ என்று நீர் கூறியது உண்மையே.33அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது ‘ என்று கூறினார்.34அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம்,‘ நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை,நெருங்கி விட்டாய்‘என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
மேலுள்ள கதையில் பரலோகம் நெருங்க இயேசுவே தேவையில்லை
சுவி கதைப்படி ஏசுவின் செயல்பாடு அவரைப் போற்றதக்கவராக ஆக்கவில்லை.