http://kallarkulavaralaru.blogspot.com/2018/04/blog-post_85.html
ஆய்வுகள் சாத்தன், சாஸ்தா, அய்யனார், அய்யப்பன் – இவர்கள் அனைவரும் ஒன்றே எனக் குறிப்பிடுகின்றன. திருமால் மற்றும் சிவனின் அம்சமாக அறியப்படும் ஐயனார் பற்றிய கதைகளும், புராணங்களும், பாடல்களும் மற்றும் ஆய்வுகளும் அனேக தகவல்கள் தருகின்றன. ஐயனார் எந்த குடிகளின் குல தெய்வம் என பிரிக்கவும் முடியாது. அதில் சில ஆய்வாளர்கள் ஐயனாரை கள்ளர்களுடன் தொடர்பு படுத்தி எழுதியுள்ளனர்.
கள்ளர் உட்பிரிவுகளில் 'அய்யனார்' என்ற பெயரும் கள்ளர்களுக்கு உள்ளது என்று நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடுகிறார்.
எட்கர் தர்ஸ்டன் தனது தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் என்னும் நூலில் " அய்யனார் கள்ளர் சாதியின் ஓர் உட்பிரிவு. கிராம தேவதைகள் பலவற்றுள்ளும் ஒரே ஆண் தேவதையான அய்யனார் பெயரையொட்டி அமைந்தது" என குறிப்பிடுகிறார். கள்ளர் இனத்தினர் அய்யனார் என்னும் பெயரிலும் வாழ்ந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார். (க.இரத்தினம் (மொ.பெ.ஆ.)
அய்யனார், போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரர்களுக்கு எடுப்பித்த நடுகற்கள் என்றும், இறந்த வீரன் நடுகல் தெய்வமானதும் அவனை 'அய்யன்' என அழைத்து வேலும், வில்லும் சாத்தி வணங்கினர் என்பார் முனைவர் கணபதிராமன்.

நாட்டுப்புற ஆண் தெய்வங்களுள் அய்யனார் முதன்மை இடம் பெறுகிறார். அய்யனார் கோயில்கள் ஆரம்ப காலத்தில் அடர்ந்த வனத்திற்கு நடுவே, மலையிலும், எல்லைப் பகுதிகளிலும், காலப்போக்கில் சிற்றூர்களிலும் தோன்றின. கிராமத்தில் இதன்பின். மக்கள் தாங்கள் குடியேறிய பகுதிகளில் உள்ள எல்லைகளில் கோயில் அமைத்து வழிபட்டனர். அய்யனாரின் பிரதான காவல் தெய்வம் கருப்பசாமி.
அய்யனாருடன் கருப்பண்ணசாமியும் இணைந்தே காணப்படுகின்றனர். கருப்பண்ணசாமி காவல் தெய்வமாகி நிற்கின்றார். இவர் வெள்ளைக்குதிரையில் கையில் அரிவாளுடன், நாய் உடன்வர, ஊரைக் காவல் செய்வதாக நம்பப்படுகிறது.
அய்யனாருடன் கருப்பண்ணசாமியும் இணைந்தே காணப்படுகின்றனர். கருப்பண்ணசாமி காவல் தெய்வமாகி நிற்கின்றார். இவர் வெள்ளைக்குதிரையில் கையில் அரிவாளுடன், நாய் உடன்வர, ஊரைக் காவல் செய்வதாக நம்பப்படுகிறது.
அதில் அய்யனாருக்கும் கள்ளருக்குமான தொடர்பு ஆராயும் போது
தமிழர் வரலாறு என்ற நூலில் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் குலப்பிரிவுகள் தோன்றிய வகைகள் என்ற பகுதியில் " தெய்வம் - ஐயனார் (கள்ளர் பிரிவு) " என்று குறிப்பிடுகிறார்.
தமிழர் வரலாறு என்ற நூலில் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் குலப்பிரிவுகள் தோன்றிய வகைகள் என்ற பகுதியில் " தெய்வம் - ஐயனார் (கள்ளர் பிரிவு) " என்று குறிப்பிடுகிறார்.
கள்ளர் உட்பிரிவுகளில் 'அய்யனார்' என்ற பெயரும் கள்ளர்களுக்கு உள்ளது என்று நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடுகிறார்.
எட்கர் தர்ஸ்டன் தனது தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் என்னும் நூலில் " அய்யனார் கள்ளர் சாதியின் ஓர் உட்பிரிவு. கிராம தேவதைகள் பலவற்றுள்ளும் ஒரே ஆண் தேவதையான அய்யனார் பெயரையொட்டி அமைந்தது" என குறிப்பிடுகிறார். கள்ளர் இனத்தினர் அய்யனார் என்னும் பெயரிலும் வாழ்ந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார். (க.இரத்தினம் (மொ.பெ.ஆ.)
அய்யனார், போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரர்களுக்கு எடுப்பித்த நடுகற்கள் என்றும், இறந்த வீரன் நடுகல் தெய்வமானதும் அவனை 'அய்யன்' என அழைத்து வேலும், வில்லும் சாத்தி வணங்கினர் என்பார் முனைவர் கணபதிராமன்.
சிறுகுடி கள்ளர்கள் ஆண்டி, மண்டை, அய்யனார் என்பன போனற்வற்றைத் தங்கள் வகுப்பாரின் பெயராகக் கொண்டுள்ளனர்.
தொண்டை நாட்டின் ஒரு பகுதியான ஆம்பூர், வேலூர் ஆகிய கோட்டங்களில் எயினர் என்னும் இனத்தினர் கள்ளர்களாக வாழ்ந்திருந்தனர்' என்பார் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார். இதையே எஸ். இராமச்சந்திரன் தனது ஆய்வில் சபரிமலை சபரர் என அழைக்கப்பட்ட எயினர்களின் வாழ்விடமாகவே முற்காலத்தில் இருந்துள்ளது வேட்டையும் ஆனிரை கவர்தலுமே சபரர்களுடைய வாழ்க்கை முறை. சபரி என்ற பெயர் கொற்றவையின் பெயர்களுள் ஒன்றாகும். இவள், ‘சபரர்’ எனப்பட்ட பாலை நில எயினர்களின் தெய்வமாவாள். பிற்காலத் தமிழிலக்கியங்கள் கள்ளர் - மறவர் குலத்தவரைச் சபரர் என்றே குறிப்பிடுகின்றன. ஐயப்பன் கோயில் அமைந்துள்ள மலை சபரிமலை என வழங்கப்படுகிறது. சபரிமலைப் பெருவழிப் பாதையில் அமைந்துள்ள எருமைகொல்லி (எருமேலி), காளைகட்டி போன்ற ஊர்ப் பெயர்களையும், மஹிஷி என்ற எருமை வடிவப் பெண் தெய்வத்தை ஐயப்பன் கொல்வது, பெளத்த சமயத்தவரின் தர்மசாஸ்தாவாக உருவெடுக்கும் முன்னர், கூற்றுத் தெய்வத்தின் தன்மைகள் கொண்ட காரியாகவே இருந்திருக்க வேண்டும் குறிப்பிடுகிறார். காரி என்ற பெயர் இந்திரன், ஐயனாருக்கு உரியதென்றும் தமிழ் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. பைரவரைச் சிவபெருமானின் பிள்ளை எனப் பெரியபுராணம் குறிப்பிடுவது போன்றே சிவபிரான், “சாத்தனை மகனா வைத்தார்” என அப்பர் பெருமான் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.
பிறமலைக்கள்ளர்கள் புன்னூர் அய்யனார், பூங்கொடி அய்யனார், ஊர்க்காளை அய்யனார், கல்யாணக்கருப்பு, தென்கரைக்கருப்பு, சோனைக்கருப்பு, பதினெட்டாம்படிக் கருப்பு தெய்வங்களைய தங்கள் குல தெய்வங்களாகவும் வணங்குகின்றனர்.
தஞ்சையின் கிழக்கு பகுதிகளில் கள்ளரில் வன்னியர் பட்டம் உடையவர்கள் குல தெய்வமாக அதிகம் வணங்குகிறார்கள். அதை போல கச்சராயர் பட்டம் உடையவர்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.
அருள்மிகு அய்யனார் திருக்கோயில் திருப்பட்டூரில் உள்ளது. இங்கு அய்யனார் பிறந்த ஊர் என்று குறிப்பிடுகின்றனர். இங்கு கள்ளர்கள் பலகாலமாக வாழ்ந்துவருகின்றனர்.
அய்யனவர் என்று கன்னியகுமாரியிலும், திருவனந்தபுரத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களாக அறியப்படும் மக்கள் தங்களை எயினர்களாகிய கள்ளர்களின் உட்பிரிவாகிய 'அய்யனார்' என்னும் அய்யனவர்'களாக வாழ்ந்து வருவதாகவும் கூறிக்கொள்கின்றனர்.
வாணிகத்திற்குப் புறப்படும் வண்டிகள் கூட்டம் கூட்டமாகவே செல்லும். இக்கூட்டம் 'வாணிகச் சாத்து' எனப்பட்டது. அவ்வழிகளில் பெரும்பாடி காவல் அதிகாரி, சிறுபாடி காவல் அதிகாரி என்போர் சோழப்பேரரசின் காலத்தே பணியாற்றினர். அவர்களை பாதுகாக்கும்போர்குடி தலைவனையே சாத்தன் என அழைக்கப்பட்டுள்ளனர். வாணிக நாட்டு கோட்டை செட்டிகள் என்று அழைக்கபடும் நகரத்தார்களை காத்து நின்றவர்களான கள்ளர் மற்றும் மறவர்களாக அறியப்படும் வல்லம்ப நாட்டார்கள், சாத்தனாரை தங்கள் குல முதல்வனாக கொண்டுள்ளனர்