New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கரிகாற் பெருவளத்தான் சாத்தனின் செண்டு பெற்று பொன்மலையைச் செண்டால் அடித்தான்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
கரிகாற் பெருவளத்தான் சாத்தனின் செண்டு பெற்று பொன்மலையைச் செண்டால் அடித்தான்
Permalink  
 


அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் குறிப்பிடும் ஒரு பாடல்

"கச்சி வளைக்கைச்சி காமகோட் டங்காவல்
மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் - கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்
செம்பொற் கிரிதிரித்த செண்டு"

கரிகாற் பெருவளத்தான் காஞ்சியில் வளைக்கைச்சியின் காமகோட்டத்திலிருந்து சாத்தனின் செண்டு பெற்று பொன்மலையைச் செண்டால் அடித்தான் என்பது பொருள். இந்தச் செய்யுள் அன்னை காமாக்ஷியின் கோயிலிலுள்ள சாத்தனிடமிருந்து செண்டு பெற்ற கர்ணபரம்பரைச் செய்தியை விளக்குகிறது. இதே செய்யுள் 14-15 ஆம் நூற்றாண்டு கால எழுத்தமைதியில் அதே கோயிலின் சாஸ்தா ஸந்நிதியின் கீழே வாஜனத்தில் செதுக்கப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: கரிகாற் பெருவளத்தான் சாத்தனின் செண்டு பெற்று பொன்மலையைச் செண்டால் அடித்தான்
Permalink  
 


 
 
5. இந்திரவிழவூரெடுத்த காதை

95



அசைவி லூக்கத்து நசைபிறக் கொழியப்
பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென
இமையவர் உறையுஞ் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி யொற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு

95
உரை
98

        அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய - (இமய மலை குறுக்கிட்டு விலக்கிற்று ஆதலால்) மடிதல் இல்லாத மன வெழுச்சியாலே மேலுஞ் செல்ல விரும்பும் என் விருப்பம் பின்னிட்டு ஒழியும்படி, பகை விலக்கியது இப் பயம் கெழு மலை என - இம் மலை பகையாகக் குறுக்கிட்டுத் தடுத்தது என முனிந்து. இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை - தேவர்
உறையும் அதன் சிமையத்தின் பிடரில், கொடுவரி ஒற்றி - தனது புலியைப் பொறித்து, கொள்கையிற் பெயர்வோற்கு - அப்பாற் செல்லும் கொள்கையைக் கைவிட்டு மீள்கின்றவனுக்கு ;

        பயங் கெழு மலை - பயன் பொருந்திய மலையென மலையின் இயற்கை கூறியபடி. இமையமலையிற் றேவர் உறைவ ரென்பது புராணக் கொள்கை.

        கரிகாலன் இமையத்தைச் செண்டு என்னும் படைக்கலத்தால் அடித்துத் திரித்து மீள அதனைப் பண்டுபோல் நிறுத்திப் புலியைப் பொறித்தனன் என்றும், அச் செண்டு கச்சியிலுள்ள சாத்தன் என்னும் தெய்வத்தால் கரிகாலற்கு அளிக்கப்பட்டதாகும் என்றும் கூறப்படுதலுமுண்டு. இவற்றை முறையே, 1 "செண்டு கொண்டு கரிகாலனொரு காலிலிமையச் சிமையமால்வரை திரித்தருளிமீள வதனைப், பண்டுநின்றபடி நிற்கவிதுவென்று முதுகிற் பாய்புலிப் பொறி
குறித்தது மறித்த பொழுதே" எனவும், "கச்சி வளைக்கைச்சி காமக்கோட் டங்காவல், மெச்சி யினிதிருக்கு மெய்ச்சாத்தன் - கைச்செண்டு, கம்பக்களிற்றுக் கரிகாற் பெருவளத்தான், செம்பொற்
கிரிதிரித்த செண்டு" எனவும் வருவனவற்றால் முறையே அறிக.

http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=700&subid=700030



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

 

1159.







சத்தி தற்பர சித்தியோ கிகளுஞ் 
     சாத கத்தனித் தலைவரு முதலா 
நித்த மெய்திய வாயுண்மெய்த் தவர்க 
     ணீடு வாழ்திருப் பாடியு மனேகஞ், 
சித்தர் விஞ்சைய ரியக்கர்கந் தருவர் 
     திகழ்ந்து மன்னுவார் செண்டுகை யேந்தி, 
வித்த கக்கரி மேற்கொளுங் காரி 
     மேவு செண்டணை வெளியுமொன் றுளதால். 82

     (இ-ள்.) வெளிப்படை. சிவசத்தியை உபாசித்துச் சித்தியடைந்த
சத்தியோகிகளும், சிவயோக சாதகமுடைய தனித்தலைவர்களாகிய 
சிவயோகிகளும், முதலாக அழிவில்லாமையுடைய ஆயுளைக்
கொண்ட மெய்த்தவர்கள் நிலைத்து வாழ்கின்ற பாடிகளும் அநேகம் 
அங்கு உள்ளன; சித்தர்கள், விஞ்சையர்கள், இயக்கர் கந்தருவர்கள் 
என்ற இவர்கள் விளக்கம் பெற்றுப் பொருந்துகின்ற, நீண்ட 
செண்டினைக் கையில் ஏந்திச் சிறந்த யானையின்மேல் ஏறிச் 
செல்கின்ற ஐயனார் உலாவருகின்ற செண்டனை வெளியும் 
ஒன்று அங்கு உண்டு. 
  

     பாடி- இடம். சிற்றூர் என்பாருமுண்டு.

     சித்தர் - விஞ்சையர் - இயக்கர் - கந்தருவர் - இவர்கள் 
தெய்வச் சாதியர். சித்தர் - சித்துக்களைச் செய்யும்
வன்மையுடையவர்.இவர்களைப் பதினெண் சித்திர்களெனவும் 
அவர்களது மரபில் வந்தோர் என்றும் கூறுவர். இவர்களது 
வலிமையினைச் "சித்தர்கணம்" என்ற பகுதியில் "வித்தகச் சித்தர் 
கணமே" என்று பாராட்டினர் தாயுமானார். மன்னும் - மன்னுகின்ற. 
மன்னும் - வெளி என்று கூட்டுக. இவ்வாறன்றி மன்னுவார் 
வாசிப்பார்கள் என்று உரைப்பாருமுண்டு. முன்னர் வாழ்பாடிஎன்றும், 
பின்னர் மேவு - வெளி என்றும் கூறுவதனால் இப்பொருள் 
பொருந்துமோ என்பது ஐயம்.

     வார் செண்டு - தலையில் இரு பிளவாகப் பிளந்து நீண்டு 
வளைந்த பிரம்பு. சவுக்கு என்பர். வார் - நீண்ட. வார் -பொருந்திய என்பாருமுண்டு.

     வித்தகக்கரி - வித்தகம் - சிறப்பு. கரி- ஐயனாருக்குயானை 
ஊர்தியாகும். காரி - ஐயனார். அரிகரபுத்திரர் என்ப. செண்டணை 
வெளி
- யானை குதிரைகளை நடத்தும் வையாளி வீதி. வெளி- வீதி. 
இதனை வெளிவீதி என்று மதுரையில் வழங்கும் வழக்கும் காண்க. 
இமயமலையிற் புலிக்கொடி பொறித்து அதன் எல்லைவரைத் தனது 
வலிமையை நாட்டச்செல்லும் கரிகாற்சோழர் இந்தக் காரிக் கடவுளை 
வழிபட்டு, அவரிடத்துச் செண்டுபெற்றுச் சென்று அங்ஙனமே வெற்றி 
பெற்று வந்தனர் என்பது சரிதம். "தனது ஆணை சேறற்கும், சாத்தன் அருளால் தான்பெற்ற செண்டினாலே அதனை (இமயத்தை) அடித்துத் 
திரித்துப் பொறித்து மறித்து நிறுத்தான்" என உணர்க. என்னை? 

     " 'செண்டு கொண்டுகரி கால னொருகாலி லிமயச் சிமய 
மால்வரை திரித்தருளி மீளவதனைப், பண்டு நின்றபடி நிற்க 
விதுவென்க முதுகிற் பாய்பு லிப் பொறி குறித்து மறித்தபொழுதே' 
(கலிங்கத்துப்பரணி - இராச - 1) எனவும், 'கச்சி வளைக்கைச்சி 
காமக்கோட் டங்காவன், மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் - 
கைச்செண்டு
 
கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான், 

செம்பொற் கிரிதிரித்த செண்டு' எனவும் கூறினாராதலின்" என்று 
அடியார்க்கு நல்லார் உரையினுட் கூறுதல் இங்கு நினைவு 
கூர்தற்பாலன.1 (சிலப் -இந் - காதை - 95 - 98 - உரை) 82 
  


     1. இது பற்றி எனது சேக்கிழார் - 107- 111 பக்கங்கள் பார்க்க.

http://www.tamilvu.org/slet/l41C2/l41C2per.jsp?sno=1159



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
கரிகாற் பெருவளத்தான் சாத்தனின் செண்டு பெற்று பொன்மலையைச் செண்டால் அடித்தான்
Permalink  
 


https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/18

2 செண்டு கொண்டுகரி காலைெரு நாளிலிமையச் ைெமய மால்வரை திரித்தருளி மீளவதனைப் பண்டு நின்றபடி நிற்கவித வென்றமுதுகிம் பாய் புலிக்கொடி பொறித்தது மறித்தபொழுகே" என வருந்தாழிசை யானும், சிலப்ப திகாரத்து இந்தி விழஆ ரெடுத்த காதை யுாையில் அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டிய கச்சி வளைக்கச்சிக் காமக்கோட் டங்காவன் மெச்சி யினி திருக்கு மெய்ச்சாத்தன் -கைச்செண்டு கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான் செம்பொற் கிரிதிரித்த செண்டு" என வரும் வெண்பா வானும் கரிகாலறிகுக் கேட்கப் பிகலா, திருமர்வ ளவன் அக்கரிகாலனே பாவன் என்று து: எனப் என்ா நன்கு தெரியலாம். ஈண்டும் பின்னர்க் காட்டிய வெண்பாவினும் கரிகாலனுக்குப் பெருவளத்தான் என்பதும் பெயரெனக் கெரியன் கிடப்பது. சிலப்பதிகாரப் புகார்க்காண்ட மங்கலவா ழ்க் துப் படவி னிறுதியில், "இப்பா லிமயத் திருத்திய வாள்வேங்கை 4 ப்பாலப் பொற்கோட் டுழையதா-வெப்பாலும் செருமிகு சினவேற் செம்பியன் ஒருதனி யாழி யுருட்டுவோ னெனவே" என வருவதன்கண் இமையத்து வேங்கை யிருத்தியவன் செம்பியன் என்னுஞ் சோழர் குடிப்பொதுப் பெயராற் கூறப் பட்டான். ஈண்டு அடியார்க்குநல்லார் செம்பியன் என்பதற்குக் கரிகாலன் எனவுரை கூறினர். மேலே காட்டிய 'கச்சிவளேக் கச்'ெ என்னும் வெண்பாவினுற் கரிகாலனுக்குக் கச்சிமாநகருடன் ஒரு தொடர்பு கூறப்பெற்றுள்ளது. இத் தொடர்பு 'கரிகாலனே நண்ணு வாரெழில் கொள் கச்சி' (கச்சியே கம்பம். ஆளுடைய எனவருங் தேவாரத் திருப்பாட்டடியானும் உணரப்படுவது. பட்டினப்பாலை ஆசி ரியர் தாம்பாடிய பெரும்பா ணுற்றுப்படையாற் ருெண்டை நாட்டையும் அதன் தலைநகராகிய கச்சி வெஃகாவையும்,

page18-1024px-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8



-- Edited by Admin on Wednesday 10th of October 2018 06:19:19 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: கரிகாற் பெருவளத்தான் சாத்தனின் செண்டு பெற்று பொன்மலையைச் செண்டால் அடித்தான்
Permalink  
 


page18-1024px-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard