New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தசாவதார மாறுபாடுகள் புத்தர்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
தசாவதார மாறுபாடுகள் புத்தர்
Permalink  
 


Image may contain: indoor 

https://www.facebook.com/photo.php?fbid=1123309554488909&set=a.165183606968180&type=3&theater
வேதங்களை உயிர்ப்பித்தாய்
உலகைச் சுமந்தாய்
பூமிப்பந்தைத் தூக்கித் தாங்கினாய்
அரக்கன் உடல் கிழித்தாய்
பலியை மோகத்திலாழ்த்தினாய்
க்ஷத்திரியரைக் குறைத்தல் செய்தாய்
புலஸ்தியன் மகனை (இராவணன்) வென்றாய்
கலப்பையைத் தரித்தாய்
கருணையை வழங்கினாய் 
மிலேச்சரை வீழ்த்தினாய் 
பத்து உருக்கள் கொண்டாய் 
கிருஷ்ணா உனக்கு நமஸ்காரம். 

- ஸ்ரீ ஜயதேவர், 12ம் நூற். (கீதகோவிந்தம்) ** 

ஸ்ரீகிருஷ்ணனை அவதாரங்களில் ஒன்றாகக் கொள்ளாமல் அவனே பத்து அவதாரங்களையும் எடுத்ததாக இப்பாடலில் கவி கூறுகிறார். ராமாவதாரத்திற்குப் பிறகு, முறையே பலராம, புத்த, கல்கி அவதாரங்களைக் குறிப்பிடுகிறார். இந்த சுலோகத்திற்கு முன்னால் வரும் அஷ்டபதிப் பாடலில் "மிருகவதையைக் கண்டு வருந்தி கருணை பொங்கும் இதயத்துடன், அடடா, சுருதியில் கூறப்பட்ட யாகங்களின் விதிகளையே நிந்தித்தாயே, கேசவா, புத்தர் உரு தரித்தவனே, ஜகதீசா, ஹரி, வெல்க" என்று புத்தாவதார வர்ணனை வருகிறது. எனவே இது சித்தார்த்த கௌதம புத்தரையே குறிக்கிறது என்பது தெளிவு. 

வாமன பார்க்கவனே பாரோ 
ராம க்ருஷ்ணனே பாரோ 
ப்ரேமத புத்தனே பாரோ 
ஸ்வாமி கல்கி நீ பாரோ 

- ஸ்ரீ புரந்தரதாசர், 15ம் நூற். (பாரய்யா வெங்கடரமண என்ற பாடல்) 

கிருஷ்ணனை அவதாரமாக இவர் கொள்கிறார். பலராம அவதாரம் இல்லை, புத்தாவதாரம் உள்ளது. இந்த புத்தர் புராணங்களில் அசுரர்களை மோகிக்க உபதேசம் செய்தவராகக் கூறப்படும் புத்தரே என்று ஒரு சம்பிரதாயமான விளக்கம் அளிக்கலாம் தான். ஆனால் அன்பை வழங்கிய (ப்ரேமத) என்று அடைமொழி இருப்பதால், இது தெளிவாக கௌதம புத்தரையே குறிக்கிறது என்பது எனது கருத்து. 

தேவுடைய மீனமாய் ஆமையாய் 
ஏனமாய் அரியாய்க் குறளாய்
மூவிருவில் இராமனாய்க் கண்ணனாய்க்
கற்கியாய் முடிப்பான் கோயில்.. 

- ஸ்ரீ பெரியாழ்வார், 8-10ம் நூற். 

இப்பாடலில் மூவிருவில் இராமனாய் என்று பரசுராம, ஸ்ரீராம, பலராம அவதாரங்களையும் கிருஷ்ணாவதாரத்தையும் குறிப்பிடுகிறார். புத்தாவதாரம் இல்லை. 

மத்ஸ்யம் கூர்மம் வராஹம் நரஹரி 
வாமனர் ஜமதக்னி சுதர் (பரசுராமர்) 
காகுஸ்தர் (ஸ்ரீராமர்) கம்சனை அழித்தவர்
மாரனை வென்றவர் (புத்தர்) 
வருங்காலத்தில் கல்கி - என 
விஷ்ணுவின் அம்சாவதாரங்கள்
உலகிற்கு நன்மை செய்பவை
தர்மத்தை நிலைநிறுத்துவதற்காக ஏற்பட்டவை 
அளப்பரும் பெரும் கருணையின் 
மிகுதியால் ததும்புபவை. 
அவை என்னைக் காத்திடுக. 

- ஸ்ரீ சங்கரர், 7ம் நூற். (விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்ரம்)**

இந்தப் பட்டியலில் கிருஷ்ணாவதாரமும் புத்தாவதாரமும் உள்ளது. பலராம அவதாரம் இல்லை, மாரனை வென்றவர் (மனஸிஜ-விஜயீ) என்ற அடைமொழியும் கௌதம புத்தருக்கே அதிகம் பொருந்துகிறதே அன்றி புராண புத்தருக்கு அல்ல. 

கிருஷ்ணர் தவிர்த்தது, பலராமர் தவிர்த்தது, புத்தர் தவிர்த்தது என தசாவதாரப் பட்டியலில் இப்படி மூன்றுவித வேறுபாடுகள் உள்ளன. இவற்றில் எது "ஆதாரபூர்வமானது" என்று பூசலிடுவது அர்த்தமற்றது. அந்தந்த மகான்களும் பக்தர்களும் கூறியுள்ளபடியே ஸ்ரீவிஷ்ணுவின் அவதாரங்களைப் போற்றுவோம். 

இதுபோக ஸ்ரீமத்பாகவதத்தில் 24 அவதாரங்கள் பற்றிய வர்ணனையும் "எண்ணற்ற் அவதாரங்கள்" பற்றிய குறிப்பும் உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். 

ஓம் நமோ நாராயணாய. 

** மூலம்: 

வேதா³னுத்³த⁴ரதே ஜக³ன்னிவஹதே 
பூ⁴கோ³லமுத்³பி³ப்⁴ரதே
தை³த்யம் தா³ரயதே ப³லிம் ச²லயதே 
க்ஷத்ரக்ஷயம் குர்‌வதே| 
பௌலஸ்த்யம் ஜயதே ஹலம் கலயதே 
காருண்யமாதன்வதே
ம்லேச்சா²ன்மூர்ச்ச²யதே த³ஶாக்ருʼதிக்ருʼதே
க்ருʼஷ்ணாய துப்⁴யம் நம​:|| 

மத்ஸ்ய​: கூர்மோ வராஹோ நரஹரிணபதிர்-
வாமனோ ஜாமத³க்³ன்ய​:
காகுத்ஸ்த²​: கம்ʼஸகா⁴தீ மனஸிஜவிஜயீ 
யஶ்ச கல்கிர்ப⁴விஷ்யன் | 
விஷ்ணோரம்ʼஶாவதாரா பு⁴வனஹிதகரா 
த⁴ர்மஸம்ʼஸ்தா²பனார்தா²​:
பாயாஸுர்மாம்ʼ த ஏதே கு³ருதரகருணா-
பா⁴ரகி²ன்னாஶயா யே || 49 ||



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: தசாவதார மாறுபாடுகள்
Permalink  
 


த்தர் விஷ்ணுவின் அவதாரமாக, முதன் முதலில் மிக தெளிவாக எழுதியவர், வித்யாரண்யர் தனது மாதவீய சங்கர விஜயத்தில் என்று படித்திருக்கிறேன்.

தவிர, கர்நாடகாவில் உள்ள விஷ்ணு கோவில் சிற்பத்தில் புத்தரை அவதாரமாக சித்தரித்திருப்பதாக ஜெயமோகன் எழுதிய கட்டுரையிலும் படித்திருக்கிறேன் (கோவில் சிருங்கேரி மட பராமரிப்பில், வைஷ்ணவர்களால் பூஜிக்க படுகிறது)...



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மைசூருக்கு அருகே பெலவாடி என்று ஒரு கோயில்  https://www.jeyamohan.in/86346#.W6JqyHszZdh

ஒருங்கிணைவின் வளையம்

Belavaadi[பிரசாத் பரத்வாஜ், காங்கோ மகேஷ், மது]

கர்நாடகத்தில் மைசூருக்கு அருகே பெலவாடி என்று ஒரு கோயில் இருக்கிறது. 2015 செப்டெம்பர் 15 ஆம் தேதி நாங்கள் அந்த ஆலயத்திற்குச் சென்றிருந்தோம். ஹொய்ச்சாளப்பேரரசால் எழுப்பப்பட்ட ஆலயங்களைப் பார்ப்பதற்கான ஒரு வாரப்பயணம். ஹொய்ச்சாள ஆலயங்களில் முதன்மையானவை பேலூர் , ஹளபீடு இரண்டும்தான். அவை கோயில்களே அல்ல, கல்லில் செதுக்கப்பட்ட நகைகள். சிற்பங்களையே வைத்து கட்டப்பட்டவை

அவற்றிலிருந்து பெலவாடி ஆலயம் முற்றிலும் வேறுபட்டது. அங்கே ஆலயத்துக்கு வெளியே சிற்பங்களே இல்லை. ஆனால் அங்குள்ள முகமண்டபம் ஒரு பெரும் கலைச்சாதனை. கல்யாணிச்சாளுக்கியர் காலம் முதல் உருவாகி வந்த ஓர் ஆலய அமைப்பு தட்டுகளையும் குடங்களையும் மேலே மேலே அடுக்கி வைத்ததுபோன்ற அமைப்புள்ள தூண்கள். அத்தகைய தூண்களுக்குமேல் தாமரை மலரைக் கவிழ்த்து வைத்ததுபோல உட்குடைவான கூரை இருக்கும். தூண்கள் நன்கு தீட்டப்பட்டு கண்ணாடிபோல அவை ஒளிவிடும். ஹொய்ச்சாள கோயில் மண்டபங்களை மட்டுமே ஒருவன் வாழ்நாள் முழுக்கப் பார்க்கலாம்.

ஹொய்ச்சாளபாணி மண்டபத் தூண்களின் மிகச்சிறந்த வடிவம் பெலவாடி ஆலயத்தின் முகப்பில்தான் உள்ளது. நான்குபக்கமும் திறந்த சாளரங்கள் தூண்களில் வளைந்து வளைந்து தெரிய நாம் ஒரு மண்டபத்தைப்பார்க்கிறோமா அல்லது குளிர்ந்த தடாகத்தைப் பார்க்கிறோமா என்ற வியப்பு ஏற்பட்டது. மெய்மறந்தவர்களாக அந்த மண்டபத்திலேயே சுற்றிவந்தோம். தூண்களில் பட்ட காற்றே குளிராக இருந்தது

கடையப்பட்டு உலோகத்தை விட மின்னும் அளவுக்கு ஆக்கப்பட்ட இத்தூண்கள்  கரிய சுடர்கள் போல நின்று கொண்டிருந்தன. எத்தனை. கருமையின் இருளின் ஒளி. ஒரு கணத்தில் அத்தனை கரிய வளைவுகளிலும் மண்டபத்தின் திறப்புகள் வெவ்வேறு சிறிய ஓவியங்களாக தெரிவதைக் கண்டேன். ஒரு மாபெரும் யாழ் என மனம் எழுச்சிகொண்டது. அம்மண்டபம் ஒரு தளிர் என்று மீண்டும் பொங்கியது.. ஒவ்வொரு தூணும் ஒரு பனித்துளியென ஒருகணம் தோன்றியது. ஒரு கருமுத்து என பிறிதொரு கணம் தோன்றியது.

மண்டபத்தின் அடிப்பக்கங்களில் ஒன்றுடன் ஒன்று உடல் ஒட்டி நிற்பது போல யானைகள் சரமாக கோர்க்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் விளிம்புகள் எல்லாம் சாய்ந்து அமரும் இருக்கைகள் மூன்று அடுக்குகளாகச் செல்லும் அமைப்பு கொண்டது இவ்வாலயம் முதல் பகுதியில் கண்ணைப் பறிக்கும் கருங்கல் தூண்களின் மண்டபம். இரண்டாவது பகுதியில் நுட்பமான சிற்பச் செதுக்கல்களுடன் பூச்செண்டுகள் போல அமைந்த தூண்களால் ஆன இரண்டாவது மண்டபம். அதன்பின்னர். கருவறை.

 

கருவறையில் வீர நாராயணர் சிலை நின்ற கோலத்தில் உள்ளது . ஹொய்ச்சாள கோயில்கள் திரிகுடாச்சலம் என்னும் அமைப்புள்ளவை. மூன்றுகருவறைகள் ஒரே மண்டபத்தை நோக்கி அமைந்திருக்கும். பெலவாடியின் மூன்று கருவறைகளிலும் உள்ள வீரநாராயணர், கோபால கிருஷ்ணர், லட்சுமி நரசிம்மர் மூன்று சிலைகளும்தான் பயணத்தில் நாங்கள் பார்த்தவற்றிலேயே பேரழகு மிக்கவை என்று சொல்லலாம்.

கன்னங்கரிய பளிங்குக்கல்லில் செதுக்கப்பட்ட சிலைகள். வணங்கும் நமது பிம்பம் பெருமாளின் கன்னங்களில் பிரதிபலிக்கும். மூக்குவளைவும் நெற்றியுமெல்லாம் சிறிய சுடர்களாகத் தெரியும். கல்லில் சருமத்தின் உயிர். நடன அசைவின் ஒரு தருணம். கிருஷ்ணனின் கைகளின் குழைவை கால்கெண்டைச்சதையின் பிதுங்கலை பார்த்துப்பார்த்து தாகம் அடங்காது

கி.பி.1200ல் ஹொய்ச்சாள மன்னர் இரண்டாம் வீரவல்லாளர் ஆட்சிக் காலத்தில் கட்ட ஆரம்பித்து அவரது மைந்தனின் காலத்தில் முடிக்கப்பட்டது. இந்த ஆலயம். நாங்கள் செல்லும்போது பக்தர்கள் என எவருமே இல்லை. ஒரு பழைமையான அக்ரஹாரத்தின் நடுவே சென்றகாலத்தில் நிற்பதுபோலத் தெரிந்தது

நாங்கள் வந்ததை அறிந்து அருகே வீட்டில் இருந்து பூசாரி ஓடிவந்தார். அழகான இளைஞர். மூன்று கருவறைகளுக்கும் அழைத்துச்சென்று தெய்வ உருவங்களைக் காட்டினார். நரசிம்மருக்கு மட்டும் அர்ச்சனைசெய்து தீபமும் மலரும் அளித்தார். “சொல்லணுமா?” என்றார். “ஆம், ஆனால் தமிழில் சொல்லவேண்டும்” என்றேன். “என்கு கொஞ்ஞ்சம் தமிழ் தெரியும்” என ஆரம்பித்து சொல்லத்தொடங்கினார்

வழக்கமாக அர்ச்சகர்கள் சொல்வதுபோல வெறும்புராணங்களாக இல்லை அவர் சொன்னது. ஆலயத்தின் வரலாறு. கோயிலின் சிற்ப அமைப்பு. மூலச்சிலைகளின் தனித்துவம். அவரை அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. பெயர் பிரசாந்த் பரத்வாஜ். சம்ஸ்கிருதம் கற்று விசிஷ்டாத்வைதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆலயம் கர்நாடக அரசின் பொறுப்பில் என்றாலும் நிர்வாகம் சிருங்கேரி மடத்தைச் சேர்ந்தது என்றார்

சிருங்கேரி மடம் அப்பகுதியிலுள்ள பல இடிந்த ஆலயங்களை பேணி வருகிறது என்றார் பிரசாந்த். பல ஆலயங்களுக்கு பக்தர்களும் இல்லை, சுற்றி வீடுகளும் இல்லை. சிருங்கேரிமடம் இல்லையேல் அந்த ஆலயங்கள் முழுமையாகவே கைவிடப்பட்டிருக்கும் என்றார். வைகானச ஆகப்படி பூசை நடக்கும் வைணவ ஆலயம் அது,

நான் அவருக்கு பணம் கொடுத்தபோது ஒரு நோட்டை எடுத்து “எனக்கு போதுமான அளவு சம்பளம் உண்டு. மேலும் இது முக்கியமான கோயிலாகையால் நிறையபேர் வருவதுண்டு. கொஞ்சநாளுக்கு முன்னால் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூட வந்திருந்தார். ஆனால் இப்பகுதியின் பெரும்பாலான ஆலயங்களில் பூசைசெய்பவர்களுக்கு சாப்பாட்டுக்கு தேவையான அளவுக்குக் கூட வருமானம் இல்லை. நீங்கள் அவர்களுக்காகக் கொடுக்கலாமே” என்றார்.

எங்களுடன் வந்த ஒருவருக்கு ஐயம். சிருங்கேரி மடம் சங்கர மடம் அல்லவா? சைவர்கள் ஏன் வைணவத்தை பேணவேண்டும்? நான் அதற்கு சற்று விளக்கமாகவே பதில் சொன்னேன். சங்கர மடங்கள் ஆதிசங்கரரின் மரபைச் சேர்ந்தவை. எட்டாம்நூற்றாண்டில் சங்கரர் பிறந்தபோது பௌத்தத்தின் ஆதிக்கம் இந்தியா முழுக்க இருந்தது. தத்துவதளத்தில் பௌத்தத்தின் பல கேள்விகளுக்கு வேதாந்த மரபில் பதில் இல்லாமலிருந்தது

மேலும் அன்று இந்துமதம் ஒருங்கிணைந்ததாக இருக்கவில்லை. சங்கரர் சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், சௌரம் ,கௌமாரம் என்னும் ஆறு இந்துமதப்பிரிவுகளையும் தத்துவார்த்தமாக ஒன்றாக்கினார். அதன் மையத்தில் வேதாந்தத்தை அமைத்தார். அதைக்கொண்டு நூற்றெட்டு விவாதசபைகளில் அவர் பௌத்தர்களை வென்றார். ஆகவே அவர் சர்வக்ஞர் என்று புகழ்பெற்றார்.

பின்னர் பதிமூன்றாம் நூற்றாண்டில் இந்தியாமேல் ஆப்கானிய சுல்தான்கள் படைஎடுத்து வந்தனர். ஆலயங்கள் அழிக்கப்பட்டன. இந்துமத அமைப்புகள் சிதறின. சங்கர மரபைச்சேர்ந்த சிருங்கேரி மடத்தின் தலைவரான வித்யாரண்யர் ஆறுமதங்களின் பூசாரிக்குலங்களையும் ஒருங்கிணைத்து ஒற்றை அமைப்பாக ஆக்கினார். ஆறுமதங்களையும் பின்பற்றிய அரசர்களை ஒன்றாக இணைத்து அவர்களை ஹரிஹரர் புக்கர் என்னும் இரு அரசர்களின் தலைமையில் அணிவகுக்கச்செய்தார். அவர்கள் விஜயநகரம் என்னும் அரசை உருவாக்கினர்.

நானூறாண்டுக்காலம் தென்னிந்தியாவில் இந்துமதத்தையும் ஆலயங்களையும் காப்பாற்றியது விஜயநகரம்தான். விஜயநகரத்தின் ஆன்மீகமான வழிகாட்டியாக இருந்தது சிருங்கேரி மடம். அக்காலத்தில் ஆலயங்களெல்லாம் சிருங்கேரி மடத்தின் பொறுப்புக்கு வந்தன. பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் பெரும் பஞ்சங்களிலும் சிருங்கேரிமடம் ஆலயங்களை பாதுகாத்தது .பெலவாடி பதிமூன்றாம் நூற்றாண்டில் மாலிக் காபூரால் உடைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் நாயக்கர்களால் கட்டப்பட்டது.

பிரசாந்த் எங்களை உள்ளே அழைத்துச்சென்று மூலவரைக் காட்டினார். இருகைகளிலும் சங்கும் சக்கரமும் ஏந்தி பெருமாள் நின்றிருந்தார். முன்னாலிருந்த கை அருள்புரிமுத்திரை கொண்டது என்று நான் நினைத்திருந்தேன். ”இல்லை நன்றாகப்பாருங்கள், சிங்கத்தின் நகங்கள்போல கைவிரல்கள் நீண்டு உள்ளன. இதற்கு வியாஹ்ர முத்திரை என்று பெயர். சிங்கமுத்திரை. ஆகவேதான் இவர் வீரநாராயணர்” என்றார் பிரசாந்த்

நான் வியப்புடன் நோக்கிக்கொண்டிருந்தேன். அப்படி ஒரு பெருமாளை பார்த்ததே இல்லை. பிரசாந்த் புன்னகையுடன் “ஆதிசங்கரர் பௌத்தர்களை வாதத்தில் தோற்கடித்தார் அல்லவா?” என்றார் “ஆம்” என்றேன். “இதோபாருங்கள், பெருமாளின் தலையைச் சுற்றியுள்ள பிரபா வலையத்தில் பத்து அவதாரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. மச்சம், கூர்மம், வராகம்,நரசிம்மம், வாமனன், ராமன், பலராமன்,கிருஷ்ணன், பத்தாவதாக கல்கி. ஒன்பதாவது அவதாரம் என்னவென்று பார்த்தீகளா?”

நான் வியந்து நின்றுவிட்டேன். அது புத்தர். “புத்தரா?” என்றேன். “ஆம், புத்தரேதான். அவரையும் பெருமாளின் அவதாரமாக நினைத்திருக்கிறார்கள்.” என்னால் ஒன்றுமே சொல்லமுடியவில்லை. “ஞானத்தில் எதிரிகள் இல்லை. எதிர்த்தரப்பு மட்டுமே உண்டு. ஞானம் முழுமையடையும்போது எல்லா தரப்புகளும் ஒன்றேயாகிவிடும்” என்றார் பிரசாந்த்

நான் கிளம்பும்போது கேட்டேன். “பிரசாந்த் நீங்கள் ஏன் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகக் கூடாது?” அவர் சிரித்து “ஆம், எல்லாரும் கேட்பதுண்டு. இந்தச்சின்ன ஊரைவிட்டுச்சென்று பத்துமடங்கு சம்பளத்தில் ஏன் பேராசிரியராக வேலைசெய்யக்கூடாது என்று. இதைவிட குறைவான வருமானத்தில் என் முன்னோர் இந்தக்கோயிலை ஒருவேளைகூட பூசை நின்றுபோகாமல் காப்பாற்றியிருக்கிறார்கள். இப்போது எனக்கு என்ன குறை?”



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ராஜசிம்மன் எடுப்பித்த மல்லை வராஹர் குகையில் 7 ம் நூற்றாண்டிலேயே புத்தர் வந்து விட்டார்.

பரமேச்சுர மஹாவராஹ விஷ்ணு கிருஹம்
இரா.நாகசாமி

 

மாமல்லபுரம், மஹாமல்லபுரம், கடல்மல்லை, ஜனநாதபுரம், மல்லாபுரி, மஹாபலிபுரம், மாவேலிவரம், மாவலிபுரம், என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இவ்வூரில் தமிழ் மக்களின் தலையாய கலைப்படைப்புகள் இருக்கின்றன. உலகின் பல பாகங்களிலிருந்தும் திரள் திரளாக மக்கள் இங்கு வந்து இக்கலைச் செல்வங்களைப் போற்றுகின்றனர். "திறனான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்" என்ற மாக்கவி பாரதியின், அமரவாக்கின் பெருமையை, இது நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இவ்வூர் அமைந்துள்ள சூழ்நிலை, பார்ப்பவர்கள் மனதைப் பரவசப் படுத்தும் எழில் வாய்ந்தது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்நகரம், தொன்றுதொட்டே சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தது.
பரமேச்சுர மஹாவராஹ விஷ்ணு கிருஹம்
மகிஷாசுரமர்த்தினி குகையிலிருந்து தென் மேற்கில் ஆதிவராஹக் குகைக் கோயில் உள்ளது. இக்கோயிலில் இப்போது வழிபாடு நடந்து வருகிறது. இக்குகையின் முன்புறத்தில் பிற்காலத்தே மண்டபங்கள் எழுப்பப்பட்டுள்ளன. வழிபாட்டு நேரம் தவிர மற்றைய நேரங்களில் வாயிற்கதவு பூட்டப்பட்டிருக்கும். வெளியிலிருந்து பார்த்தால் குகைக் கோயில் என்று கூடத் தெரியாது. வழிபாடு செய்வோர் மாமல்லபுரத்திலேயே இருக்கின்றனர். அவர்களைக் கேட்டால் மனமுவந்து கோயிலைத் திறந்து காட்டுவர். உள்ளே சென்றால், குகைக் கோயில் இரண்டு அங்கணமாகக் குடைவிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். குகை, மேற்குப்புறம் பார்த்தது. நடுவிலுள்ள கருவறையில் ஆதிவராஹமூர்த்தி உள்ளது. எனவே இதை ஆதிவராஹர் கோயில் என்றழைக்கின்றனர். கல்வெட்டுகளில் "பரமேச்சுர மகாவராஹ விஷ்ணு கிருஹம்" என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளது.
இச்சிறப்பு வாய்ந்த கோயிலில் வடப்புறச் சுவரில், முன் அங்கணத்தில் சிவபிரான் கங்கைவார் சடை கரந்தாராகக் கங்காதர மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். ஆகாயத்திலிருந்து கங்கை மேலே கைகூப்பி இறங்குகிறாள். அண்ணல் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். மேல் கையில் சடையைப் பிடித்துக் கங்கையைத் தாங்குகிறார். மேலிடது கரத்தில் அக்ஷமாலை உள்ளது. கீழ் வலது கரம் அபயமளிக்கிறது. இடது கரம் தொடைமீதமர்ந்து காணப்படுகிறது. வலது புறம் பாம்பு காணப்படுகிறது. இவ்வரலாற்றையே பரிபாடல்,
எரிமலர்த் தாமரை இறை வீழ்த்த பெருவாரி
விரிசடைப் பொறை ஊழ்த்து, விழுநிகர் மலர் ஏய்ப்ப,
தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி
மணி மிடற்று, அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ.

 

என்று கூறுகிறது.
கருவறையின் முன்புறம் அடுத்துக் காணப்படுவது நாகராஜர் உருவம். தலையில் ஐந்துதலை நாகத்தோடும் இருகரங்களோடும் இது காணப்படுகிறது. அடுத்துத் திருமால் ஆழியும், சங்கமும் ஏந்தி, அபயக் கரமும், குரக்கம் சேர்த்திய கையுமாக, வழிபடுவோர் இருபுறமும் சூழக் காணப்படுகிறார்.
கருவறையின் உள்ளே ஆதிவராஹமூர்த்தி வலப்புறம் நிலமகளைத் தாங்கி நிற்கிறார்.
ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில்கொண்டான்
வானத்தில் அவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள
கானத்தின் கடல்மல்லை தலைசயனத் துறைகின்ற
ஞானத்தின் ஒளியுருவை நினைவாரென் நாயகரே.

 

என்று திருமங்கை மன்னன் பாடியிருப்பது இப்பெருமானையே இன்றும், வைணவர்கள், இப்பெருமானின் முன்பு, இப்பதியத்தை ஓதல் சிறந்தது எனக்கொள்வர். இப்பெருமானுக்கு இதனால் "ஞானப்பிரான்" என்ற பெயரும் ஏற்பட்டுள்ளது.
கருவறையை அடுத்து அரியரனின் சிற்பம் உள்ளது. அரியரனாகக் காட்சியளிக்கும் உருவம் நான்கு கரம் பூண்டு, அபயகரமும் தொடை மீதமர்த்திய கையுமாக விளங்குகிறார்.
அரியரன் சிற்பத்தின் மேல் பல்லவக் கிரந்த எழுத்தில்
மத்சய கூர்ம வராஹஸ்ச நாரசிம்மஸ்ச வாமணஹ
ராமோ ராமஸ்ச ராமாஸ்ச புத்தக் கல்கீ தசாஸ்மிருதா:

 

என்ற வடமொழிச் செய்யுள் ஒன்று உள்ளது. இதில் திருமாலின் பத்து அவதாரங்களும் குறிக்கப்பட்டுள்ளன.
என்று பெரியாழ்வார் திருமொழி ஈண்டு நினைவிற் கொளல் தகும்.
தேவுடை மீனமாய் ஆமையாய்
ஏனமாய் அரியாய்க் குறளாய்,
மூவுருவில் இராமனாய்க் கண்ணனாய்க்
கற்கியாய் முடிப்பான் கோயில்

 

திருமாலின் பத்து அவதாரங்களில் புத்தரும் ஒருவராக இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்பாகும். கி.பி. 8-ஆம் நூற்றாண்டில், தேவாரத் திருப்பதிகங்களின் தோற்றத்தின் பின்னர் பொளத்தமதம் குன்றத் தொடங்கியது என்று சில வரலாற்று ஆசிரியர் குறிப்பர். ஆனால் இங்கு புத்தரும் திருமாலின் அவதாரமாகவே கருதப்படுவதிலிருந்து அக்காலத்து மக்களின் பெரும் பண்பு புலனாகிறது. அதற்கு எதிரில் தரையில் பல்லவக் கிரந்த எழுத்தில் சிவபிரானின் புகழ்பாடும் செய்யுள் உள்ளது.
அடுத்துள்ள கீழைச் சுவற்றில் கொற்றவையின் உருவைக் காண்கிறோம். எண்கரம் பூண்டு எழில் மேனியாய் விளங்கும் இமயக் குமரியின் வலது கரங்களில், ஆழி, கத்தி, மணி,கபாலம் என்ற படைகள் காணப்படுகின்றன. இடது கரங்களில் சங்கம், கேடயம்,வில், கிளி ஆகியவை காணப்படுகின்றன.தேவி கானத்தெருமை கருந்தலை மேல் நிற்கிறாள். திருமாலுக்கு இளையவளாகிய கொற்றவையை இளங்கோவடிகள்;
மதியின் வெண்தோடு சூடுஞ்சென்னி
நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
பவள வாய்ச்சி தவளவாய் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
வளையுடைக் கையிற் சூல மேந்தி
கரியின் உரிவை போர்த்தணங்காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்பும் கழலும் புலம்புஞ்சீரடி
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
இரண்டு வேறுருவில் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல்............"

 

எனப் போற்றுகிறார். காலடியில் இருபுறமும் வீரர் இருவர் வெற்றித் தெய்வமாம் கொற்றவையை வழிபட்டு நிற்கின்றனர். அவர்களுக்கு அப்பால் காவற்பெண்கள் காணப்படுகின்றனர். தேவியின் வலப்புறமுள்ள பெண் கையில் கத்தியும், இடக்கையில் கேடயமும் கொண்டு விளங்குகிறாள். இடப்புறம் உள்ளவள் நீண்ட வில்லைக் கையில் தாங்கி நிற்கிறாள். மேலே இருபுறமும் கணங்கள் உள்ளன. அப்பால் செங்கண் அரியும், கரியதிரிக் கோட்டு கலையும் காணப்படுகின்றன. இவை இரண்டும் கொற்றவையின் சின்னங்களாகச் சங்ககாலத்தில் இருந்தே தமிழகத்தில் சிறப்புற்றிருந்தன.
கொற்றவையின் அழகையும், ஏற்றத்தையும் கண்டு, அடுத்துத் தென்புறச் சுவரில் மஹேந்திரனின் உருவைக் காணலாம். அவரின் இரு பெண்டுகளும் இடப்புறம் நிற்கின்றனர். தன் தேவியை இடது கையில் பிடித்துக் கொண்டு வலது கையினால் ஆலயத்தைச் சுட்டிக்காட்டும் மஹேந்திர பல்லவனின் தோற்றமும், அவனுடைய ஆடை அணிகலன்களின் அழகும் ஒப்பற்ற பேரரசன் என்ற நிலையை எடுத்துக் காட்டும் வகையில் உள்ளன. இதன் மேல் "மஹேந்திரப் போத்ராதிராஜன்" என்று பல்லவக் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்து நான்முகனின் சிற்பம் உள்ளது.
இக்கோயிலின் சிறப்பான அம்சங்களை சுருங்கச்சொன்னால்: மாமல்லபுரத்தில் பல்லவர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட பல குகைக் கோயில்களில், இக்கோயில் ஒன்றில்தான் இன்னும் வழிபாடு நடைபெறுகிறது. திருமாலுக்கு ஏற்பட்டது இக்கோயில், இங்கு கங்காதரமூர்த்தி, அரியரன், கொற்றவை, நான்முகன், முதலிய சிற்பங்கள் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சிவபிரானின் புகழைப் போற்றும் கல்வெட்டுள்ளது. திருமாலின் பத்து அவதாரங்களையும் குறிக்கும் கல்வெட்டு இங்குள்ளது. அதில் புத்தர்பிரானும் பத்து அவதாரங்களில் ஒருவராகக் குறிக்கப்பட்டுள்ளார். கி.பி.8-ஆம் நூற்றாண்டிலேயே புத்தர், திருமாலின் அவதாரமாகக் கருதப்படுவது சிறப்பாகும்.
ஆழ்வார்களும், நாயன்மார்களும் அருளிய அர்புதமான பாடல்களின் மூலம் உண்மை அரிந்து உய்வோம். "ஓம் நமோ ஹரி-ஹராய நமஹ".
அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
உரைநூல் மறை உறையும் கோயில் வரைநீர்
கருமம் அழிப்பளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று.
பொய்கை ஆழ்வார் அருளியது

 

பொன்திகழு மேனி புரிசடை அம்புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவரங்கத்தால் திரிவரேனும் ஒருவன்
ஒருவன் அங்கத்து உளன்.
பொய்கை ஆழ்வார்

 

தீக் கூரும் திருமேனி, ஒரு பால், மற்றை,
ஒரு பாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர்
ஆக்கூரில்-தான் தோன்றி புகுவார் போல,
அருவினையேன் செல்வதுமே, அப்பால் எங்கும்
நோக்கார், ஒரு இடத்தும்; நூலும் தோலும்
துதைந்து இலங்கும் திருமேனி வெண்நீறு ஆடி
வாக்கால் மரை விரித்து, மாயம் பேசி
வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே
அப்பர் சுவாமிகள் அருளியது 6-58

 

சிவன் ஆகி, திசைமுகனாய், திருமால் ஆகி
செழுஞ் சுடர் ஆய், தீ ஆகி, நீரும் ஆகி,
புவன் ஆகி, புவனங்கள் அனைத்தும் ஆகி
பொன் ஆகி, மணி ஆகி, முத்தும் ஆகி,
பவன் ஆகி, பவனங்கள் அனைத்தும் ஆகி,
பசு ஏறி, திரிவான் ஓர் பவனாய், நின்ற
தவன் ஆய, தலையாலங்காடன்தன்னை,
சாராதே சால நாள் போக்கினேனே!
அப்பர் சுவாமிகள் அருளியது 6-79

 

"ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்றெழில் நாரணன், நான்முகன், அரன் என்னும் இவரை
ஒன்றனும் மனத்து வைத்து உள்ளலும் இருபசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே!"
நம்மாழ்வார் அருளியது

 

தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன்னாணும் தோன்றும் மால்
திரண்டு-அருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து
பேயாழ்வார்

 

பார் உருவில் நீர் எரி கால் விசும்பும் ஆகி பல்வேறு சமயமுமாய் பரந்து நின்ற
ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற இமையவர்தம் திருவுரு வேறு எண்ணும்போது
ஓர் உருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ ஒன்று மாகடல் உருவம் ஒத்து-நின்ற
மூவுருவம் கண்டபோது ஒன்றாம் சோதி முகில் உருவம் எம்-அடிகள் உருவம் தானே
திருமாங்கை ஆழ்வார் அருளியது
http://tamilartsacademy.com/journals/volume12/articles/article5.xml


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: தசாவதார மாறுபாடுகள் புத்தர்
Permalink  
 


"Among yajñas (vedic sacrifices) the Agnihotra is the greatest; 
the Sāvitrī is the most important of the metric (vedic) hymns; 
the Rājā (king) is most revered among men; 
the sāgara (ocean) is more esteemed than any nadī (river).
Among the nakṣatras (lunar mansions), 
Candra (the moon) occupies the principal place,
of the burning objects, Āditya (the Sun) is the most important; 
similarly, for those who long for puṇya (spiritual merit), 
the veneration of the saṅgha is indeed important”

[from Majjhima Nikāya 92 - Sela suttam]

Thank you Ram Sury for posting the original Pali text (below) and the above translation.

It is so evident from this verse that Buddha and his early disciples and followers didn't have hatred towards Vedic practices like Agnihotra or Gayatri Mantra. This verse posits that Sangha is also as sacred as these. Their opposition was only to some specific things like Pashu Bali (animal sacrifice) and a few other philosophical tenets, like Brahman. But in the current popular historical narrative, a distortion has been created as if Buddha and his followers had nothing but hatred for the Veda and Vedic Dharma. We must remember that Buddha was not Nehru or Dr. Ambedkar, with their modernist and colonial opinions. He was a prince from the esteemed Sakhya clan, belonged to the Gautama Gotra, and prided himself as the descendant of Sri Rama.

There are so many references in the Buddhist texts like the above verse, for those who care to read. Koenraad Elst has written a wonderful article that brings out the truth on this:

When did Buddha break away from Hinduism - 
http://koenraadelst.blogspot.in/…/when-did-buddha-break-awa…

I have translated this article in Tamil - http://www.valamonline.in/2017/08/blog-post.html

Pāli:

Aggihuttamukhā yaññā, 
sāvittī chandaso mukhaṃ; 
Rājā mukhaṃ manussānaṃ, 
nadīnaṃ sāgaro mukhaṃ.

Nakkhattānaṃ mukhaṃ cando, 
ādicco tapataṃ mukhaṃ; 
Puññaṃ ākaṅkhamānānaṃ, 
saṅgho ve yajataṃ mukhaṃ



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 



-- Edited by Admin on Wednesday 19th of September 2018 08:32:23 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard