New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்
Permalink  
 


கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்

ண்மையில் கர்நாடக இசைக்கலைஞர் ஓ.எஸ்.அருண் அவர்களின் கிறிஸ்தவ இசைக்கச்சேரி குறித்த அறிவிப்பு வெளியானதும்,  சமூக வலைத்தளங்களில்  அது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  அருண் கலந்து கொள்ளக்கூடாது என்று பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப் பட்டன.  பிறகு,  ஓ.எஸ்.அருண் ‘தனிப்பட்ட காரணங்களால்’ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாததால் அது ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தார்.  இதைத் தொடர்ந்து  நித்யாஸ்ரீ உட்பட இன்னும் சில கலைஞர்கள் கிறிஸ்தவப் பாடல்கள் பாடி இசை ஆல்பங்கள் வெளியிட்ட பழைய செய்திகளும் வெளிக்கொணரப் பட்டன. இப்போது  இந்தப் பிரசினை ஒரு முக்கியமான விவாதப் பொருளாக ஆகியுள்ளது.

மிழும் கவியும் எல்லோர்க்கும் பொது தான். யாரும் அவர் விருப்பப்படி அவரவர் தெய்வங்களைப் பற்றியோ பிடித்த விஷயங்கள் பற்றியோ கவி வடிக்கலாம். ஆனால் எது கலாச்சார ஏற்பு, எது திருட்டு, எது திரிப்பு என்ற தெளிவு வேண்டும்

திருவள்ளுவரை  தாமஸின் சீடர், அவர் கற்றுக்கொடுத்ததை தான் வள்ளுவர் திருக்குறளாக வடித்தார் என்று புரட்டு பேசுபவர்கள் இடையே போய் ஒரு தமிழ் அறிஞர்

‘சிலுவையில் ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.’

போன்று குறள் குதறி பொழிப்புரை செய்தால், தமிழ் மீது அன்புடையவர் ஆயின் கோபம், வருத்தம் வரவேண்டும்.

பைபிளை விவிலியம் என்றால் அது திருட்டு அல்ல, வேதம் என்றால் அது திருட்டுத்தான்.

அது போல் எத்தனை எத்தனை அடையாள திருட்டுக்கள்!

ஏன் ‘ஆச்சி’ என்ற அடையாளம் பெரிதும் செட்டியார் சமூகத்தை சார்ந்தது.  திரையில் மனோரமா அவர்களை சார்ந்தது. ஆனால் அப்பெயரை வைத்து உணவு விற்பனை செய்வது கிறித்துவர்கள். ஏன் பொதுப்படையாக அம்மா, அன்னை, தாய் என்று வைக்கவேண்டியது தானே? செட்டிநாட்டின் தனிப்பட்ட சமையல் கலையின் அடையாளத்தை திருடத்தானே இச்செயல்?

சரி. சட்டரீதியாக திருவள்ளுவருக்கோ ஆச்சிகளுக்கோ கர்நாடக இசைக்கோ காப்புரிமை வாங்க முடியாது. பண்பாட்டு அடையாளங்களை அதன் வாரிசுகள் தான் காக்க வேண்டும். அவர்கள் ஆதரவைப் பெற்ற கலைஞர்களே போய் அதை அடமானம் வைத்தால் எவ்வாறு பொறுப்பது?

இந்தித் திணிப்பு பற்றி எச்சரிக்கை உண்டு.  இந்நிலையில், ஓரு தமிழ் அறிஞர் ஒரு இந்திச் சபையில் போய் இந்தியே தலையாய மொழி, பிற மொழியெல்லாம் பொய்மொழிகள் என்று கொள்கை உடையவர்கள் இடையே நின்று தமிழிலேயே இந்தியை புகழ்ந்தாலும் வலிக்காதா என்ன? அது போல் தான், இந்து சமயம் அழியவேண்டும், அனைவரையும் மதம் மாற்ற வேண்டும் என்ற அடிப்படை கொள்கை கொண்டவர் சபையிலே, இந்துமதத்தின் பெரும் அடையாளச் சின்னமாகிய கர்நாடக இசையை இந்த அறிவு மழுங்கிய கலைஞர்கள் பாடுவது கேவலமான செயல். அதைக் கண்டிக்க வேண்டியதாகிறது.

ராகங்கள், தாளங்கள், பண்கள் அனைவருக்கும் பொது, மறுப்பில்லை. ஆனால் தனிப்பட்ட படைப்புகள் அவ்வகையில் சேராது.  வில்லிபுத்தூர் விட்டுசித்தன் கோதை கொடுத்த உவமையை கொண்டால் – அறிவிற்சிறந்த அந்தணர் கொண்டு தெய்வங்களுக்கு என்று இட்ட படையலை,  கண்ட கண்ட நரியும் நாயும் திங்க விடுவது போல ஆகும் இந்தச்செயல்.

உணவு எல்லோர்க்கு பொது தான், நாய்க்கு நரிக்கும் கூட சமைத்து ஊட்டலாம், ஆனால் படையலில் வைத்த உணவை அல்ல. அப்படிப்பட்ட செயலை பூசாரியே செய்தால் சினம் வரத்தானே செய்யும்?

நம் நாட்டில் சாராயம் பற்றி விளம்பரம் செய்ய தடை உண்டு, ஏனென்றால் அது போதையை உண்டுபண்ணி உடல்நலத்தைக் கெடுக்கும். இந்தத் தடையில் இருந்து தப்பிக்க  சாராயம் காய்ச்சும் கம்பெனிகள் செய்யும் தந்திரம் அதே பெயரில் சோடா விளம்பரம் செய்வது தான்.

பிற தெய்வங்களை மறுப்பதை அடிப்படை கொள்கையாக கொண்ட மதங்களான கிறித்துவமும் இஸ்லாமும் செய்யும் நரித்தனமும் அதுபோல் தான். அவர்கள் விற்கும் சோடா – மத நல்லிணக்கம்.

அவர்கள் நம் பண்பாட்டின் சமயத்தின் கருக்களை மறுத்து இசை, கவிதை, வாழ்வியல் என்ற பல உறுப்புகளை மட்டும் திட்டமிட்டு களவாட முயன்று கொண்டே இருக்கிறார்கள்.  ஆனால் நம் கலைஞர்களும், பூசாரிகளும் அதற்கு துணை போவது கொடுமை. அதைத் தட்டிக் கேட்டால், மத நல்லிணக்க சோடா விற்கத்தான் பாடினேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல.

உண்மையில் மத நல்லிணக்கம் வேண்டுமாயின் கிறித்துவ கச்சேரியில் வழக்கம் போல் நெற்றியில் திருநீறு அணிந்து பிள்ளையாருக்கு முதல் பாடல் பாடி தாராளமாக ஏசுவை, அல்லாவை புகழட்டுமே.  ஏன் அங்கு பாடும்போது சிலுவையும் மற்றபடி விபூதி குங்குமமும் அணியும் வேஷம்? பாடகரா இல்லை நடிகரா அல்லது மதசார்பற்ற அரசியல்வாதியா?

இந்த விஷயத்தை சினிமாவோடு ஓப்பிடுதல் தவறு. சினிமா இன்று நம்பிக்கை சம்பந்தப்பட்ட பண்பாட்டின் அடையாளம் அல்ல. அதில் கூட அப்பட்டமாக கதை திருடல் திரித்தல் கேலிக்கும் வழக்குக்கும் உள்ளாக்கும்.

தமிழ்நாடு பல கலைகளை இழந்து வருகிறது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பல மரபுக் கலைகள், அதுவும் இந்து சமய சம்பந்தப்பட்ட கலைகளை ஆதரிக்க நாதியில்லை.  ஆதரித்த கோவில்களை திராவிடக் கட்சி அரசாங்கங்கள் ஆக்கிரமித்து சிலை கடத்தல், நிலப் பறிப்பு என்று அக்கிரமம் செய்கின்றன. ஓதுவார்கள், நாயனம், தவில், பறை, பல வித ஆட்டம் என்று பல கலைகள் இப்படித் தேய்ந்து அழிந்து வருகின்றன.

இந்நிலையில் வெளிநாட்டு காசில் இது போல அறிந்தோ அறியாமலோ இந்த வலையில் மாட்டிக்கொள்ளும் கலைஞர்களை விலைக்கு வாங்கி, அவர்களை முன்புறம் நிறுத்தி வைத்து, பின்புறமாக மரபின் அடையாளங்களைத் திருடி கிறித்துவ மயமாக்கும் ஒரு பெரும் இயந்திரம் இயங்குகிறது.

இந்துக்கள் யாவரும் முக்கியமாக தமிழரும் விழித்துக்கொண்டால் நலம். இல்லை, பால் என நினைத்து கள்ளுக்கு போதையாவதும், சாராயம் காய்ச்சி கம்பெனிக்கு சோடா விற்பதும் ஒன்று தான்.

அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு நம் இயற்கை வளங்களை எவ்வாறு எச்சரிக்கையோடு கொடுக்கவேண்டுமோ, அதுபோல், அந்நியப்படுத்தும் மதங்களுக்கும் நம் மரபின் வளங்களை கொடுப்பதில் எச்சரிக்கையும் வரைமுறையும் வேண்டும். அக்காலத்தில் அரசர்கள் இதை உணராது பரங்கிய கும்பினிக்கு பல உரிமைகளும் அளவு மீறி வரிவசூலிக்கக் கூட அனுமதியும் அளித்ததால் தான் சுதந்திரத்தையே இழந்து நின்றோம். அதே ரீதியில், பண்பாடு, சமயம், கலை, கலாசாரம் விஷயத்தில் அந்தப் பிழையை மீண்டும் செய்தல் கூடாது.

கிறித்துவரும் இஸ்லாமியரும் தமிழர் தானே என்று நினைத்து ஏமாறக்கூடாது  ஏனென்றால் அவர்கள் கொள்கை முறையில் பரங்கியனுக்கு ஊழியம் செய்த அன்றைய இந்தியர்போல் தான். தனிமனித நேசம், பழக்கம், நட்பு வேறு. கொள்கைகளும் தர்மமும் பண்பாட்டைக் காப்பதற்கான போராட்டமும் வேறு.

சோடா விற்கலாம் தான். ஆனால் சாராய குழுமத்திற்காக செய்தால், சாராய விற்பனை என்றே கொள்ளப்படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்
Permalink  
 


சங்கீத அவதார புருஷர்களும் நம் "செக்யூலர்' வித்வான்களும்!

By A.M.ராஜகோபாலன் ஆசிரியர்  (ஓய்வு) "குமுதம் ஜோதிடம்'| Published: 26th August 2018 10:00 AM
SK1.jpg
 
பாரத பூமி புண்ணிய பூமி. காலம் காலமாக, ஏராளமான மகான்கள் இப்புனித பூமியில் அவதரித்து, மக்களின் நல்வாழ்க்கைக்காக, "பக்தி' மார்க்கத்தை உபதேசித்தருளினர்.
கிருதயுகத்திலும், திரேதாயுகத்தின் முதற் பாதியிலும், அக்னியின் மத்தியில் ஒற்றைக் காலில் நின்று, கடும் தவம் புரிந்தும் காண இயலாத பகவானைக் கலியுகத்தில் பக்தி நிறைந்த பாடல்களால் (திவ்ய நாம சங்கீர்த்தனம்) எளிதில் அடைந்து விட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியருளினர் அந்த அவதார புருஷர்கள்!
இத்தகைய மகாபுருஷர்களில், சங்கீத மும்மணிகள் என இன்றும் பூஜிக்கப்படும் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள், ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர், ஸ்ரீஸ்யாமா சாஸ்திரிகள் மற்றும் ஸ்ரீபுரந்தரதாஸர் (கன்னடம்) ஸ்ரீ கனகதாஸர் (கன்னடம்), திருவிசைநல்லூர் ஸ்ரீதரஅய்யாவாள் ஆகியோரைச் சொல்லலாம்.
வட இந்தியாவில், ஸ்ரீ  பக்த மீரா, பிறவிக்குருடரான ஸ்ரீசூர்தாஸர், மகாராஷ்டிரத்தில் ஸ்ரீபக்தநாமதேவர், ஸ்ரீதுகாராம்மகராஜ் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
இந்த மகான்கள் எவரும், மேடை அமைத்து, பக்கவாத்தியங்களுடன் சங்கீத கச்சேரி செய்யவில்லை, பணத்திற்காகவும் பாடவில்லை!
பகவானின் திவ்ய ùஸளந்தர்யத்தையும் (அழுகு-லாவண்யம்) அவனது லீலைகளையும் பாடி, ஆடி, ஆனந்தத்தில் திளைத்து, பரமானந்தம் என்ற நிலையைத் தொட்டு, இறுதியில் பரவசம் (ECSTACY) என்ற உணர்ச்சியின் உச்சகட்டத்தை அடையும்போது, இறைவனுடன் மானஸீகமாக (மனதால்) ஒன்றிணைந்து, பகவானின் அம்சமாகவே மாறிவிடுகின்றனர், இந்த தாஸ  ஸ்ரேஷ்டர்கள்!
அந்நிலையில் தான், அவர்களது திருவாக்கிலிருந்து அரிய சாகித்யங்கள் வெளிப்படுகின்றன. இத்தகைய  பாடல்கள் அளவற்ற தெய்வீக சக்தி வாய்ந்தவை.
ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதரின் நவகிரக கீர்த்தனைகள் அனைத்தும் பரிகாரசக்தி வாய்ந்தவை.
ஸ்ரீராமபிரானின் படத்தில் கூட ஸ்ரீ ராமனைத் தத்ரூபமாகக் கண்டவர் ஸ்ரீ தியாக ராஜஸ்வாமிகள்  (உதாரணம்: மோஜன ராககீர்த்தனை ""நனுபாலிம்ப்ப நடத்தி வச்சிந்தியோ...'')
பரம ஸ்ரீராமபக்தரான ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் கீர்த்தனைகளில் பெரும்பாலானவை அவர் தினமும், "உஞ்ச வ்ருத்தி'க்கு வீதிகளில் செல்லும் போது பாடியவை. மற்றவை, "ஸ்ரீராம பஞ்சாயதன்' எனப்பபடும் ஸ்ரீஸீதாராம பிரபுவை ஆராதிக்கும் போது பாடியவையாகும்.
எத்தகைய பிரதிபலனையும் எதிர்பாராது, "பக்தி' ஒன்றை மட்டுமே உள்ளத்தில் வைத்து பாடப் பெற்றவை கர்நாடக சங்கீத சாகித்யங்கள்.
இன்றைய கர்நாடக சங்கீத வித்வான்கள்!
இவ்விதம், இப்பாரத புண்ணிய பூமியின் அவதார புருஷர்கள் இயற்றிய பாடல்களைக் கற்றுக் கொண்ட இன்றைய வித்வான்களில் பெரும்பான்மையோர் பணத்திற்காகவே கச்சேரி செய்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.
ஏராளமான, "சங்கீத சபாக்கள்', பல பெயர்களில் உருவாகி, மார்கழி மாதத்தில், சங்கீத திருவிழாவே நடைபெறுகிறது சென்னையில். பல வெளியூர்களிலும், மார்கழி மாதத்தில் சங்கீத கச்சேரிகள் நடைபெறுகின்றன. இவை அனைத்தும் COMMERCIALSATION அதாவது வியாபார நோக்கத்துடன் தான் நடைபெறுகின்றன. "பக்தி'க்கு இடம் குறைந்து, ENTERTAINMENT என்பது போல் ஆகிவிட்டன இத்தகைய சங்கீத கச்சேரிகள்!!
போதாக்குறைக்கு, சபா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தில், போட்டி போட்டுக் கொண்டு சிற்றுண்டி விடுதிகளும் செயல்படுகின்றன. இவ்விதம் சில குறைகள் இருப்பினும் இன்றைய சூழ்நிலையில் கர்நாடக சங்கீதம் இப்படியாவது காப்பாற்றப்படுகின்றதே என்ற திருப்தி மக்களுக்கு!
செக்யூலர் கர்நாடக சங்கீத மேதைகள்!
இந்நிலையில்தான், பிரபல சங்கீத வித்வான்களில் சிலர் திடீரென்று, ஸ்ரீதியாகராஸ்வாமிகள் போன்ற அவதார புருஷர்களின் சாகித்யங்கள் அனைத்து மதத்தினருக்கும் உரியவை என்றும், அதற்காக, உண்மையான கீர்த்தனங்களை அதற்கு ஏற்ப மாற்றியும், பாட ஆரம்பித்துள்ளனர். அதனை நியாயப்படுத்தியும் பேசி வருகின்றனர்.
மேலும், அத்தெய்வீகப் பாடல்கள் ஹிந்துக்களின் சொத்து அல்ல, அனைத்து மதத்தினருக்கும் சொந்தமாகும். அதற்கு ஏற்றபடி, அந்த பாடல்களை மாற்றப்படுவதில் தவறு அல்ல என்றும் கூறி வருகின்றனர்.
பிறமத பெரியோர்கள் எவராவது அவர்கள் வழிபடும் தெய்வத்தின் பெயரால் பாடல்கள் இயற்றி இருப்பின், அவற்றை, அப்படியே நம் கர்நாடக வித்வான்கள் அவர்களது சபையிலோ அல்லது கச்சேரிகளிலோ அல்லது விழாக்களிலோ, பாடுவதில் எவ்வித ஆட்சேபணையும் கிடையாது.
ஆனால், ஸ்ரீராமபிரான், ஸ்ரீகண்ணன், ஸ்ரீ சிவபெருமான், அம்பிகை, ஸ்ரீமகாலஷ்மி மீது பரம பக்தியுடன் மகான்கள் பாடியுள்ளவற்றை மாற்றுவதற்கோ அல்லது திரித்துப்பாடுவதற்கோ, தற்கால வித்வான்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது.
மகான்களின் சாகித்யங்களைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் இவ்வித்வான்களுக்கு நன்றியில்லாவிட்டாலும், மனசாட்சியாவது இருக்கலாம் அல்லவா?
சென்ற ஆண்டில் தமிழகத்தின் பிரமுகர் ஒருவர் வீட்டு திருமணத்தின் போது, வரவேற்பு தினத்தில், தமிழகத்தின் பிரபல கர்நாடக பாடகி ஒருவர் பெற்ற சன்மானம் ரூபாய் 10 லட்சம்! (அப்போது, நானும் அங்கிருந்தேன்) இதில் வேதனைக்குரிய அம்சம் என்ன வென்றால், அந்த கச்சேரியில் தான், சற்று நேரத்திற்கு முன், "ஸ்ரீ தியாக ராஜரின் நிதிசால சுகமா...  அல்லது ஸ்ரீ ராமபிரானின் சன் நிதிசால சுகமா...?'  என்ற கல்யாணி ராக கீர்த்தனையைப் பாடியிருந்தார் அந்த பாடகி.
கடுமையான வறுமையில் வாடிய நிலையிலும், தஞ்சை சரபோஜி மன்னர் அனுப்பியிருந்த பொற்காசுகளையும் இதர விலையுர்ந்த வெகுமதிகளையும், ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் புறக்கணித்துப் பாடிய கீர்த்தனை இது.
ஏற்கெனவே, ஹிந்து கோயில்களில்  ஆகம, சாஸ்திர விதிகளின்படி, மந்திர பிரதிஷ்டை செய்யப் பெற்ற துவஜஸ் தம்பங்களை அவர்களது வழி பாட்டுத் தலங்களில் நிர்மாணித்து வருகின்றனர், கிருஸ்துவ மதபோதகர்கள்.
திவ்யபிரபந்தம், தேவாரம், திருவாசகம், வள்ளலாரின் பாடல்கள் ஆகியவற்றை முதன் முதலில் திரித்து, எழுதியது  ஃபாதர் விவிலியன் மற்றும் மன்னார்குடியில் கிறிஸ்துவ பள்ளி ஒன்றை ஆரம்பித்த ஃபாதர் பின்லேயும் ஆவார்கள்.
திருமங்கை மன்னன் பாசுரத்தில் உள்ள, ""நாராயணா எனும் நாமம்... என்றிருப்பதை, ஏசு எனும் நாமம்...'' என்றும் நாவுக்கரசரின் பாடலில், ""ஈசன் எந்தை இணையடி நிழலே...'' என இருப்பதை மாற்றி... ""ஏசு எந்தை இணையடி நிழலே...'' என எழுதியதும் அந்த  ஃபாதர்பின்லேதான்,  அக்காலத்தில் அந்த நூல் பல எதிர்ப்பை சந்தித்தது.
அமெரிக்க ஜனாதிபதி கூறியது!
உலகம் போற்றும் பேரறிஞரும், சிந்தனையாளருக்கு, உலகின் மாபெரும் வல்லரசான அமெரிக்க நாட்டின் மூன்றாவது ஜனாதிபதியாகத் திகழ்ந்தவருமான தாமஸ் ஜெஃபர்ஸன்(PRESIDENT THOMAS JEFFERSON) அம்மதத்தினரைப் பற்றி கூறியுள்ளதை, அவரது வார்த்தைகளிலேயே கீழே கொடுத்திருக்கிறேன்.
MILLIONS OF INNOCENT MEN, WOMEN AND CHILDREN, SINCE THE INTRODUCTION OF CHRISTIANITY HAVE BEEN BURNT, TORTURED, FINED, IMPRISONED. YET, WE HAVE NOT ADVANCED ONE INCH TOWARDS UNIFORMITY. WHAT HAS BEEN THE EFFECT OF COERSION? TO MAKE ONE HALF OF THE WORLD FOOLS AND THE OTHER HALF HYPOCRITES? TO SUPPORT  ROGUERY AND ERROR ALL OVER THE EARTH...?
(ஆதாரம்: THOMAS JEFFERSON'S NOTE ON VIRGINIA)
ஹிந்து சமுதாயத்தின் ஒவ்வொரு தெய்வீக அம்சத்தையும், பிரசாரம் மூலம் தங்கள் உடமையாகச் செய்து கொள்ளும் முயற்சியில், தற்போது, நமது கர்நாடக சங்கீதத்தின் மீதும் கை வைக்கத் துணிந்தவர்களுக்கு மக்களின் மரியாதையையும், அன்பையும் பெற்றுள்ள நம் கர்நாடக சங்கீத வித்வான்கள் துணைபோவது நம் துரதிர்ஷ்டம் மட்டுமல்ல, பாரத புண்ணிய பூமியின் மகான்களுக்கு இப்பாடகர்கள் இழைக்கும் துரோகமும் ஆகும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அ.அன்புராஜ் on August 13, 2018 at 9:21 am

காலத்தின் குரல் என்ற கத்தோலிக்க கிறிஸ்தவ பத்திரிகை வெகுநாட்களுக்கு முன்பு திருநெல்வேலியில் இருந்து வெளிவந்தது.தனிநபா் நடத்திய பத்திாிகை. இதில் ”கிறிஸ்தவ மதம் இந்தியாவில் முழுமையாக ஊன்றி இந்த மண்ணை வெற்றி கொள்ள வேண்டும் என்றால் அது தன் மீது இருக்கும் ஐரோப்பிய வர்ணத்தை நீக்கிக்கொள்ள வேண்டும். ஆயா்கள் பாதிரிமார்கள் சபை ஊழியா்கள் சைவ உணவமட்டும் சாப்பிட வேண்டும்.வெள்ளை சீருடைக்கு பதிலாக காவி வண்ண சீருடையை பாதிரிகள் அணிய வேண்டும். திருப்பலிகளி பத்மாசனத்தில் கொஞ்சம் அமா்ந்து தோத்திரங்கள் ஜெபிக்க வேண்டும். இந்து பண்பாட்டின் அனைத்துஅம்சங்களையும் கத்தோலிக்க கிறிஸ்தவம் கைகொள்ள வேண்டும். கோவில் கோபுரங்கள் இந்து கோவில்களின் கோபுரங்கள் போல் மாற்றி அமைக்க வேண்டும்.கத்தோலிக்க கிறிஸ்தவம் முற்றிலும் இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் தன்னை மாற்றி அமைக்க வேண்டும் ” என்று தொடா்ந்து வலியுருத்தி எழுதி வந்தது.இன்று அதுதான் நடப்பது. கிறிஸ்தவர்கள் கிராமங்களில் சர்ச திருவிழாக்களில் கோலாட்டம் காளை விளையாட்டு, சிலம்பம் எல்லாவற்றிற்கும் மேலாக மூளைப்பாரி” எடுத்து ஊர்வலமாக வந்து சர்ச்க்கு காணிக்கை செய்கின்றார்கள்.அத்தனையும் பொறியில் வைத்த உணவு. இந்து எலிகளை பிடிக்க கிறிஸ்தவர்கள் வைத்துள்ள பொறியில் வைக்கப்பட்டுள்ள உணவு. எலிகள் பசியாற மேற்படி உணவு வைக்கப்படவில்லை. இந்தியாவை கிறிஸ்தவம் வெற்றி பெற வேண்டும் இந்து சமயம் முழுமையாக அழிக்கப்பட வேண்டும் என்ற சதியின் ஒரு பகுதியாகும்.

R.Nanjappa (@Nanjundasarma) on August 13, 2018 at 1:10 pm

படித்தவர்கள் என்று நாம் கருதும் இந்தியர்கள் [ஹிந்துக்கள்] பொதுவாக வேலைக்காக அரசினரின் பாடத்திட்டப்படி ‘ஏதோ’ படித்தவர்களே தவிர, எந்த விஷயத்திலும் அடிப்படை அறிவு இல்லாதவர்கள். Their studies are desultory and disjointed. பள்ளி, கல்லூரி விட்டதும், தொடர்ந்து படிப்பதையும் விட்டுவிடுகிறார்கள். [பட்டத்துக்கொரு கும்பிடு, படிப்புக்கும் ஒரு கும்பிடு] இந்தியர்களில் 35% கிறிஸ்துவ பள்ளி-கல்லூரிகளில் படிக்கின்றனர். அதனால் அவர்களின் மூளை படிப்படியாகச் சலவை செய்யப்படுகிறது.
சென்ற நூற்றாண்டில் ‘எல்லா மதமும் சமமே’ என்ற ஒரு கருத்து-கோஷம் எழுந்தது. இதற்கு முக்கிய காரணகர்த்தா காந்திஜி. சில காவி மடங்களும், நவீன யுக குருமார்களும் இதே கருத்தைப் பரப்பிவிட்டனர். செக்யூலர் துதிபாடும் அரசியல் வாதிகளும் இதில் சேர்ந்தவர்களே. நமது சம்பிரதாய ஹிந்து மத அமைப்புகள் [எந்தப் பிரிவினரும்]இதைக் கண்டுகொள்வதில்லை.
கடவுள் ஒன்றாக இருக்கலாம்; ஆனால் மதங்கள் ஒரேவிதமானவை அல்ல- சமமல்ல. இவை கூறும் கடவுள் தத்துவமும், அதை அடையும் வழிகளும், மனித வாழ்க்கையின் லட்சியமும் ஒன்றல்ல. உலகில் வழங்கி வரும் 8 மதங்களை எடுத்துக்காட்டி அவை எப்படிச் சமமாகாது என்பதை அண்மையில் “God Is Not One” என்ற புத்தகத்தில் Stephen Prothero [Harper Collins,2010] விளக்கியிருக்கிறார்

கிறிஸ்தவமும் இஸ்லாமும் பிற எல்லா மதங்களினின்றும் வேறுபடுபவை. தம் மதம் மட்டுமே உண்மையானவை என்பவை. இன்னும் ஒரு படி மேலே சென்று, தம் மதம் மட்டுமே உலகம் முழுதும் பரவவேண்டும், பிற மதங்கள் அழியவேண்டும் என்று செயல்படுபவை.
பழைய கிரேக்க, ரோமானிய தேசங்களில் அனாதிகாலமாக பல மத/வழிபாட்டு சம்பிரதாயங்கள் நிலவிவந்தன. மக்கள் ஒற்றுமையாகவே இருந்தார்கள்.
The various modes of worship which prevailed in the Roman world were all considered by the people as equally true; by the philosopher as equally false; and by the magistrate as equally useful. And thus toleration produced not only mutual indulgence, but even religious concord.என்று எட்வர்ட் கிப்பன் தன் புகழ் பெற்ற நூலில் எழுதியிருக்கிறார். ஆனால் 4ம் நூற்றான்டில் கான்ஸ்டன்டைன் ஆட்சியில் கிறிஸ்துவர்கள் கை ஓங்கியதும் அவர்கள் மற்ற மதங்களை வரிந்து ஒழித்துக்கட்டினார்கள். இதுவே அவர்கள் அடிப்படைக் கொள்கை.
இவர்களுக்கு 6 நூற்றாண்டுகளுக்குப் பின்வந்த முகம்மதியரோ, தம்மதமே உண்மையான ஒரே மதம், முகம்மது நபிதான் கடவுளின் கடைசி தூதர், உலகம் முழுதும் அவர்கள் ஆதிக்கத்திற்குள் வரவேண்டும் என்று தொடக்கத்திலிருந்தே முயற்சி செய்து வருபவர்கள். அவர்கள் சென்ற இடமெல்லாம் வென்றே வந்திருக்கிறார்கள். பழைய ரோம சாம்ராஜ்யத்தையும் அழித்தார்கள். கிறிஸ்துவர்களின் புனித இடங்களைப் பிடித்தார்கள். இரண்டு நூற்றாண்டுகள் சண்டையிட்டும் கிறிஸ்தவர்கள் தங்கள் இடங்களைப் பெற முடியவில்லை. இந்தப் போராட்டம் இன்றுவரை தொடர்கிறது.
சென்ற 1500 வருட உலக வரலாறு, கிறிஸ்துவ-முகம்மதிய மதங்களின் உலக ஆதிக்க முயற்சியின் கதைதான்.
பொதுவாக இந்தியர்களுக்கு இதெல்லாம் எதுவும் தெரியாது. எல்லாம் ஒன்றே என்று அப்பாவித்தனமாக நினைக்கிறார்கள்.
ஈஶ்வர அல்லா தேரே நாம் என்று காந்தி பாடினார். இதை எத்தனை முகம்மதியர்கள் பாடுகிறார்கள்? எத்தனை கிறிஸ்துவர்கள் பாடுகிறார்கள்? பாடுவது ஹிந்து முட்டாள்கள் தான். ஹிந்து மதமும் உண்மையானது என்று அதிகாரபூர்வமாக எந்த கிறிஸ்துவ மத போதகரோ முகம்மதிய முல்லாவோ சொல்லியிருக்கிறாரா? எல்லாம் சமம் என்று உளறுவது ஹிந்து முட்டாள்கள் தான்.
பிற நாடுகளில் அவர்களின் மொழி, சமூக சம்பிரதாயங்களையே பின்பற்றி கிறிஸ்துவத்தைப் பரப்பவேண்டுமென்று வாடிகன் 1960ல் முடிவுசெய்தது. அதன்படியே செயல்பட்டும் வருகிறார்கள். 1999ல் இந்தியாவுக்கு வந்த போப் ஜான் பால் II, ‘ முதல் ஆயிரம் ஆண்டுகளில் நாம் ஐரோப்பவைப் பிடித்தோம்; அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் அமெரிக்காவைப் பிடித்தோம்; இனி வரும் ஆயிரம் ஆண்டுகளில் ஆசியாவைப் பிடிக்கவேண்டும்; ஹிந்து-சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் ஆகியவர்களை மதமாற்றம் செய்யவேண்டும்’ என பகிரங்கமாக அறிவித்தார். மேலும் தீபாவளியன்று அவர்கள் சர்ச்சில் ( புது டெல்லி) ஹிந்து மத வழக்கபடி எண்ணெய் தீபம் , ஆரத்தி என சிலவற்றைச் செய்தார்கள். இதன்பிறகு கிறிஸ்தவ மதமாற்றம் தீவிரமாகிவிட்டது. சர்ச்சுகளைக்கூட கோவில் மாதிரி கட்டத்துவங்கி விட்டார்கள். காவி உடை போடத்தொடங்கிவிட்டார்கள்.

முஸ்லிம்களின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டது. ‘மதம் மாறு;அல்லது மாண்டு போ’ என்பதுதான் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அவர்கள் கூறும் ஒரே அறிவுரை. ஒருவன் முஸ்லிமாக மாறினால் என்ன ஆகிறது? அண்மையில் காலம் சென்ற இலக்கிய கர்த்தா வி.எஸ். நைபால் எழுதுகிறார்:
“Islam is its origins an Arab religion. Everyone not an Arab who is a Muslim is a convert. Islam is simply not a matter of conscience or private belief. It makes imperial demands. A convert’s world view alters. His holy places are in Arab lands; his sacred language is Arabic. His idea of history alters. He rejects his own; he becomes, whether he likes it or not, a part of the Arab story. The convert has to turn away from everything that is his. The disturbance for societies is immense, and even after a thousand years can remain unresolved; the turning away has to be done again and again. People develop fantasies about who and what they are; and in the Islam of converted countries there is an element of neurosis and nihilism. These countries can be easily set on the boil.’ [ V.S. Naipaul:Beyond Belief. (Prologue).Abacus, 1999/Picador 2010]

ஹிந்துக்கள் எல்லா மதங்களுக்கும் மரியாதை தரும் குணமுள்ளவர்கள். ஆனால் பிற மதத்தினர்- குறிப்பாக இந்தியாவில் தோன்றாத கிறிஸ்துவமும் இஸ்லாமும் இதற்கு நேர்மாறான கொள்கையுடையவை. ஹிந்துக்கள் இதை உணர்ந்து நடந்துகொள்ளவேண்டும் ஏமாளிகளாகக்கூடாது.

பாட்டுப்பாடி வயிறு வளர்ப்பவர்கள் காசுக்காக எதுவேண்டுமானாலும் செய்வார்கள். சங்கீதத்தை விற்றுப் பிழைப்பார்கள். ஆனால் சொந்தமாக எழுதிப், பாடிப் பிழைக்கட்டும். நமது மஹான்கள் பாடிய கீர்த்தனைகளின் வார்த்தைகளை மாற்றிப் பாடும் மானம் கெட்ட, மதியீனமான பிழைப்பு எதற்கு?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

vedamgopal on August 13, 2018 at 1:58 pm

கிருஸ்துவர்கள் சிலுவையில் அரைந்த பிணத்தை விளம்பரப்படுத்தி மதத்தை விஸ்தரித்து (Dead body vendors ) செல்வம் நிறைந்த நாடுகளின் கலாசாரத்தை சிதைத்து அந்த மக்களிடம் வேற்றுமையை ஏற்படுத்தி கொள்ளை அடித்து ஏழ்மை நாடாக மாற்றுவதுதான் அதன் ஒரே குறிக்கோள் என்பது சரித்திர உண்மை. ஹிந்துகளுக்கும் முக்கியமாக பிராமிணர்களுக்கும் இது ஒரு பெரிய அவமானம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படி காசுக்காக அலைவதை விட கோவில் வாசலில் நின்று பிச்சை எடுப்பது உயர்வானது. காசுக்கு மார்அடைத்துவிட்டு மத நல்லிணக்கணம் அது இது என்று சப்பை கட்டுவது மடத்தனம். ஏன் இதுவரை மற்ற கர்நாடக இசை கலைஞர்கள் எதிர்பு தெரிவிக்கவில்லை ? இவர்கள் இதற்காக மன்னிப்பு கேட்கும் வரை இவர்களை மற்ற கர்நாடக இசை கலைஞர்களும்-சபாக்களில் கச்சேரி ஏற்பாடு செய்பவர்களும் ஒதுக்கி வைக்க வேண்டும்

அ.அன்புராஜ் on August 14, 2018 at 7:10 pm

இந்து பாடகர்களின் எதிா்வினை -இந்து விரோதம்.
(ஜாலி ஆபிரகாம் என்ற கிறிஸ்தவா் சில சினிமா பாடல்களைப் பாடினாா்.பின் அவர் தாம் கிறிஸ்தவ பாடல்கள் மட்டும்தான் பாடுவேன் என்று சினிமா துறையில் இருந்து விலகி விட்டாா் )

A discordant note has hit the world of Carnatic music. Several Carnatic musicians have been subject to threats and vile comments on social media for singing Christian Carnatic hymns or for participating in musical events organised by churches.

The uproar over the scheduled participation of Carnatic singer OS Arun at an event organised by Christians in Chennai on August 25, as reported in The Wire, is a case in point. The event, titled Yesuvin Sangama Sangeetham, was being organised by T Samuel Joseph, also known as Shyaam, a well-known music composer and violinist in Tamil Nadu. On August 6, Arun was targeted on social media and accused of colluding against Hindus with “stooges of the Vatican”. Arun later announced that he would not be performing at the event due to “personal commitments”.It is believed that Arun withdrew from the event after being pressured by a man called Ramanathan, who claimed to be the head of an organisation named Rashtriya Sanathan Seva Sangh.

According to reports, an audio clip being circulated on WhatsApp is being projected as a conversation between Ramanathan and Arun. In the clip, which Scroll.in has been unable to verify independently, Ramanathan asks why Arun sings for Christians when he is a Hindu. Arun said that he has cancelled the event but Ramanathan was not satisfied with the answer. He said, “You should have never agreed to do this.”

Arun’s response was: “The Hindu Sanatana Dharma says we must respect all faiths. We only wanted to do a musical concert. Since many people opposed it we have cancelled the event now. Why don’t we leave this at that?”

In the conversation, the names of Carnatic artists such as Nithyashree Mahadevan, Bombay Jayashree and TM Krishna arise, and Ramanathan claimed that he has been calling them and “shouting” at them for singing Christian hymns or for singing in churches. He also claimed that the Rashtriya Sanathan Seva Sangh was a Hindu organisation “fighting for Hindus”. He directed a threat at Krishna. “We will make sure he’s beaten up wherever he goes next,” he said.TM Krishna defiant
Responding to Ramanathan’s threat, on August 9, Krishna posted on Twitter

that he will now release a Carnatic song on Jesus or Allah every month.
கொடுமை.பாருங்கள். இந்த கிருஷ்ணா ஆப்கானிஸ்தானில் பாக்கிஸ்தானில் பங்களாதேஷ்யில் இந்துக்கள் இனப்படுகொலை செய்து அழிக்கப்பட்ட செய்தியை அறிவாா்களா ? காஷ்மீரிலும் இன்று இசுலாமிய வல்லாதிக்கம் அழிச்சாடடியம் செய்து வருகின்றதே.அதற்கு இவர்கள் என்ன செய்யப் போகின்றார. விளம்பர பிரியா்கள்.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard