New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நரகாசுரனின் சரித்திரத்தை புராணங்களிலிருந்து மீட்டெடுத்தலும், தீபாவளி பண்டிகை கொண்டாட்டமும


Guru

Status: Offline
Posts: 24778
Date:
நரகாசுரனின் சரித்திரத்தை புராணங்களிலிருந்து மீட்டெடுத்தலும், தீபாவளி பண்டிகை கொண்டாட்டமும
Permalink  
 


நரகாசுரனின் சரித்திரத்தை புராணங்களிலிருந்து மீட்டெடுத்தலும், தீபாவளி பண்டிகை கொண்டாட்டமும்!

the-kamarupa-kingdom-of-assam-7th-8th-century

காமரூபத்தின் ஆட்சிப்பகுதியைக் காட்டும் வரைப்படம் – வடக்கில் திபெத், கிழக்கில் காம்போஜம், தெற்கில் பர்மா, மேற்கில் கௌட-கன்னோஜ் ராஜ்ஜியங்கள்

நரகாசுரன் பாரதத்தின் வடகிழக்கு பகுதியின் அரசன்: நரகாசுரன் அசுரன், அரக்கன் அல்லது ராக்ஷஸன் இல்லை, ஆனால், பாரதத்தின் வடகிழக்குப் பகுதியான காமரூபத்தை ஆண்டுவந்த அரசன் ஆவான். சமீத்தைய அகழ்வாய்வுகள் வடகிழக்கு மாநிலங்களின் காலத்தை 3000 BCEக்கு முன் எடுத்துச் செல்கின்றன. சில ஆராய்ச்சியாளர்கள், இவன் மங்கோலிய இனத்தவன் என்றும் எடுத்துக் காட்டுகின்றனர். அதாவது, அவன், வடகிழக்கு பகுதிகள், மேலே மங்கோலியா முதலியவற்றை ஆண்டிருக்கக் கூடும். ஆனால், இனவாத சித்தாந்தங்கள் தோற்றுவித்த நிலையில், அத்தகைய திரிபு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கலாம். பிராக்ஜோதிசபுரம் என்ற நகரத்தை உருவாக்கி, காமரூபத்தின் தலைநகராக்கி ஆட்சி செய்து வந்தான். இவனது சரித்திர விவரங்களை புராணங்களிலிருந்து மீட்டெடுக்க வேண்டியதுள்ளது. ஜைன-பௌத்தர்கள் காலங்களில், இதிகாச-புராணங்களில் அதிக அளவு இடைசெருகல்கள் செய்யப்பட்டன. அதுமட்டுமல்லாது, சில விசயங்கள் மாற்றி எழுதப்பட்டன, ஏன் புதியதாக புராணங்களையே உருவாக்கி சேர்த்தனர். இதனால், 18-புராணங்கள், 18-உப-புராணங்கள், என்று எண்ணிக்கையிலும் வளர்ந்தன. இவற்றிலிருந்து சரித்திரத்தை மீட்டெடுக்க வேண்டியுள்ளது.

kamakhya-temple

நரகாசுரனால் கட்டப் பட்ட காமாக்கியா கோவில்

சக்தி வழிபாட்டில் நாட்டம் கொண்ட நரகாசுரன்: 3100 BCE வாக்கில் ஆட்சி செய்து வந்த நரகாசுரன் சக்தி வழிபாட்டில் மிக்க நாட்டம் கொண்டவனாக இருந்தான். பூமாதேவிக்குப் பிறந்தவன் என்று உருவகமாக சொல்லப்படுவதால், தாயை தெய்வமாக மதித்ததால், காமாக்கியா கோவிலையும் கட்டினான். அந்நேரத்தில், சக்தியை அடையாளப்படுத்துவதில் ரிஷி-முனிவர்கள் மற்றவர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தது. ஆதிசக்தி என்று தேவியை பொதுவாக வழிபட்டு வந்து வந்தனர். அதே நேரத்தில், இமயமலையைச் சுற்றியுள்ள அரசை ஆண்டுவந்த அரசன் ஹிமவந்தனின் மகளான பார்வதி, ஹேமாவதியை, சிவன் மணந்து கொண்டார். சிவன் ஒரு சீனதேசத்து அரசன் என்று சொல்லப்பட்டது. சிவகணங்கள் எல்லொருமே குள்ளர்களாக இருப்பதை கவனிக்கலாம். இந்த விவரங்கள் எல்லாம் சைன-மங்கோலிய-நேபாள தொடர்புகளைக் காட்டுகிறது. இவர்கள் எல்லோருமே மந்திர-தந்திர-யந்திர முறைகளை கடைபிடித்தவர்கள்.

siva-carrying-the-body-of-sati

தக்ஷனால் அவமதிக்கப் பட்டதால், பார்வதி / ஹைமாவதி, தீயில் விழுந்து இறக்க, சிவன் சதியின் உடலை தூக்கிக் கொண்டு அலைகிறார். விஷ்ணு அவ்வுடலை பல துண்டங்களாக அறுக்க அவை பாரத மண்மீது விழுந்து, அவ்விடங்கள் சக்தி பீடங்களாக மாறுகின்றன

சக்தி வழிபாட்டில் வேறுபாடு ஏற்பட்டது: தக்ஷன் யக்ஞத்தில் சிவனுக்கு மரியாதை செய்யப்படாதலால், பார்வதி, தீயில் வீழ்ந்து சதியானாள். இதனால், பார்வதி, சதி, சக்தியாக கருதப்பட்டு, சக்தி வழிபாடு பிரபலம் ஆகியது. இந்த பிரிவைச் சார்ந்தவர்கள் காமாக்கிய கோவிலுக்கு வந்த வழிபடும் போது, வேறுபாடு ஏற்பட்டது. தங்களது தேவி வேறு, சக்தி வேறு என்ற சண்டை / போட்டி ஏற்பட்டது.  இதனால், பார்வதிக்கு மரியாதை அளிக்கப்படவில்லை. அதுப்போலவே, ஒருமுறை வசிஷ்டர் அங்கு தேவியை வழிபட வந்தபோதும், நரகாசுரன் அவரைத் தடுத்து, அவமரியாதை செய்தான். இதனால், அவன் உயிரோடு இருக்கும் வரை அக்கோவிலுக்கு வரமாட்டேன் என்றும், அவன் தேவியால் மரணம் அடைவான் என்றும் சபித்தார். அதுமட்டுமல்லாது, காமாக்கியதேவியையே சபித்ததால், தேவி நீலாசல் மலையை விட்டு சென்று விட்டதாகவும் காளிகா புராணம் போன்றவை சொல்கின்றன. ஜைன-பௌத்தர்கள் மந்திர-தந்திர-யந்திர முறைகளை கையாண்டபோது, பெண்கள் அதிகமாக பாதிக்கப் பட்டனர். சந்நியானிகள் மற்றும் பிக்குனிகளை உப்யோகப் படுத்தியபோது, துஷ்பிரயோகங்கள் ஏற்பட்டன. இதனால், ஒருநிலையில், பெண்களை இவற்றில் சேர்க்கக் கூடாது என்ற விலக்கும் அறிமுகப் படுத்தப்பட்டது. இதெல்லாம் அக்காலத்தில் சக்திவழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களில் ஏற்பட்ட இறையியல் குழப்பங்கள் என்று தெரிகின்றன.

narakasura-krsna-and-satyabhama-battle-the-armies-of-the-demon-naraka

னைடைக்கால ஓவியம் – சத்தியபாமா நரகாசுனுடன் போரிடுவது

நரகாசுரன் பெண்களை உபயோகப்படுத்தியது: நரகாசுரன் பூமாதேவி மற்றும் பிரஜாபதி என்ற வராகம்/ பன்றிக்கும் பிறந்தவன் போன்ற கதை பிற்பாடுதான் உருவாகியிருக்க வேண்டும். சதபத பிராமணத்தில் [c.1500 BCE] பிரஜாபதி என்ற வராகம் குறிப்பிடப்படுகிறது. பிறகு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹரிவம்சத்தில் பூமாதேவி மற்றும் பிரஜாபதி என்ற வராகத்திற்கும் பிறந்த முதல் குழந்தை நரகாசுரன் என்று குறிப்பிடப்படுகிறது. பிறகு விஷ்ணு புராணம், அதற்கும் பிறகு, பாகவத புராணத்திலும், இக்கதை பெரிதாக்கப்பட்டு, விவரணங்கள் சேர்க்கப்படுகின்றன. 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த காளிகாபுராணத்தில் இக்கதை இன்னும் பெரிதாக்கப்பட்டது. அதன்படி, நரகாசுரன் பல நாடுகளை வென்று, தென்கிழக்கு நாடுகளையும் சேர்த்து ஆண்டதாக சொல்லப்பட்டது. வானத்தின் தேவதை அதிதியின் காதணிகளைக் கவர்ந்ததோடு, அவரது நாட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டு 16,000 பெண்களையும் கவர்ந்து சென்றான் என்று பாகவதம் கூறுகின்றது. ஆங்கிலத்தில் அதிகமாக என்பதைக் குறிக்க மைரியாட் [myriad / miriad] என்ற வார்த்தை உபயோகிப்பார்கள். அதை சிலர் 1000, 2000 என்றும் குறிப்பிடுவர். அதே போலத்தான் இந்த 16,000 குறிப்பிடப்படுகிறது. மந்திர-தந்திர-யந்திர முறைகளை ஜைன-பௌத்தர்கள் துஷ்பிரயோகம் செய்தது போல, நரகாசுரனும் செய்திருக்கலாம்.

krsna-kills-the-demon-narakasura-with-sudarshan-chakra

நரகாசுரனை கிருஷ்ணர் சுதர்ஷன சக்கரத்தால் கொல்வது – இடைக்கால ஓவியம்

நரகாசுரனின் கொடுமைகள் பற்றி புகார் கொடுத்தது: ஆக அத்தனை கொடுமைகள் நடந்த நிலையில், நரகாசுரனைப் பற்றி யாராவது புகார் கொடுக்கத்தான் செய்வார்கள். இதனால், தேவர்கள் எல்லோரும், விஷ்ணுவிடம் முறையிட, அவர், தான் கிருஷ்ணனாக அவதாரம் எடுத்து, நரகாசுரனைக் கொல்வதாக வாக்களித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. பிரம்மாவை வேண்டி கடும் தவம் இருந்து, நரகாசுரன் தான் உலகத்தில் யாராலும் கொல்லமுடியாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான். அதாவது, பெற்ற தாயைத் தவிர, வேறெவராலும் கொல்லப்படலாகாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான். இதனால், பூதேவியே, சத்தியபாமாவாக பிறந்து, கிருஷ்ணரை திருமணம் செய்து கொண்டார் என்றுள்ளது. சத்தியபாமாவின் வளர்ப்புத் தந்தை ஒரு கரடி-அதாவது ஜாம்பவான். அதாவது விலங்குகளின் சின்னங்கள் உபயோகப்படுத்தியிருப்பதும் கவனிக்கத் தக்கது. ஆக, கதைகள் இவ்வாறு இருக்கின்றன.

narakasura2bvadh

நரகாசுர வதம் – இக்கால ஓவியம்

கிருஷ்ணர் சத்தியபாமாவின் உதவியோடு நரகாசுரனைக்கொன்றதுபெண்களை மீட்டது: கிருஷ்ணர் இருந்தவேளையில், நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், தேவர்களும், கடவுள்களும் கிருஷ்ணரைச் சந்தித்து முறையிட்டனர், என்று புராணங்கள் கூறுகின்றன. நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர். நரகாசுரனை ஒழிக்க கிருஷ்ணர் வாகளித்தார். நரகாசுரன் பெற்ற வரம் பற்றி அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி பூதேவியின் மறுஉருவமான சத்யபாமாவை அழைத்துச் சென்றார். நரகாசுரனுக்கும், கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற போரின் போது, நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணர் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனை குறிவைத்து ஏவுகிறார். நகராசுகரன் வீழ்கிறான். அதாவது அவன் பெற்ற வரத்தின் படி, தாய் மூலமாகவே அவனுக்கு இறப்பு ஏற்படுகிறது. கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார். நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். அந்த நாளே தீபாவளியாக இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்படுகிறது. அதாவது, நரகாச்யுரனின் தாயார், தனது மகனின் இறந்த நாளை துக்க நாளாக இல்லாமல், சந்தோஷமாகக் கொண்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.

avatar-varaha

விஷ்ணு வராக அவதாரம் எடுத்தது

ஒற்றைக்கொம்பு விலங்கு / வராகம்:  ஒற்றைக்கொம்பு விலங்கு [unicorn] உலகத்தின் எல்லா பழையநாகரிகங்களின் கதைகளிலும் காணப்படுகிறது. அதில் வராகமும் உள்ளது. இப்பகுதிகளில் ஒற்றைக்கொம்புடம் இருக்கும் விலங்கு காண்டாமிருகம் ஆகும். ஒருவேளை, சின்னங்களில் குறிக்கும் போது, விலங்குகள் மாறியிருக்கலாம். மற்ற நாகரிகங்களில் குதிரை, ஆடு, எருது, மீன் என்று பலவாறாகக் குறிக்கின்றப்படுகின்றன. கொண்டாடும் தினத்தின் மகத்துவம் மாறினாலும், தினம் மாறாமல் இருப்பதும் நோக்கத்தக்கது. அதனால், இந்தியாவில் வராக அவதாரம் உவமையாக உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. வராகம் என்பது, பாரதத்தில் நல்லதற்குத்தான் உபயோகப் படுத்தப்பட்டு வந்துள்ளது. வராகம் என்றால் தங்க நாணயம் என்ற பொருளும் உண்டு. இதனால், அந்த வெற்றி பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது. சீக்கியர்கள் 1577ல் தங்கக் கோவில் கட்ட ஆரம்பித்த தினத்தை தீபாவளியாக கொண்டாடுகின்றார்கள். சமணர்கள் / ஜைனர், மகாவீரர் முக்தியடைந்த தினத்தை தீபாவளியாக கொண்டாடுகின்றார்கள். தீபாவளியாக கொண்டாடுகின்றார்கள்.    ராமர் அயோத்தியாவுக்குத் திரும்பி வந்தபோது, மக்கள் கொண்டாடினார்கள் என்றும் சேர்க்கப்பட்டது. ஆக இப்படி தீபாவளி சந்தோஷமாகக் கொண்டாடப் பட்டு வரும் போது, சரித்திரம் அறியாமல், இக்காலத்தில் திரிபுவாதங்களை வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

© வேதபிரகாஷ்

28-10-2016



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: நரகாசுரனின் சரித்திரத்தை புராணங்களிலிருந்து மீட்டெடுத்தலும், தீபாவளி பண்டிகை கொண்டாட்டமு
Permalink  
 


நரகாசுரன் காமரூபத்தை, பிராக்ஜோதிசபுரத்தை ஆண்ட ஒரு சரித்திரகால மன்னன் – போரில் கிருஷ்ணரால் கொல்லப்பட்டான்!

 

நரகாசுரன் காமரூபத்தைபிராக்ஜோதிசபுரத்தை ஆண்ட ஒருசரித்திரகால மன்னன்  போரில் கிருஷ்ணரால்கொல்லப்பட்டான்!

copper-plate-seal-of-kamarupa-kings

காமரூப அரச வம்சாவளியினரின் தாமிர பட்டயம் – நரகாசுரனின் பெயர் உள்ளது.

கல்வெட்டுதாமிரப்பட்டயங்களில் நரகாசுரன்நரக வம்சாவளிபெயர்கள் காணப்பட்டது: சரித்திராசியர்கள் கல்வெட்டுகள் மற்றும் தாமிர பட்டயங்களின் ஆதாரமாக, கீழ்கண்ட வம்சங்கள் காமரூபத்தை ஆண்டுவந்ததாகத் தெரிவிக்கின்றன:

எண்வம்சாவளி பெயர்ஆண்ட காலம்ஆங்கிலத்தில்
1நரகC.2200 BC to 1389 BCNaraka dynasty
2வர்மன்350 CE to 654 CEVarman dynasty
3மிலேச்சC 655 to 985 CEMilechchha dynasty
4பால985 – 1130 CEPala dynasty
5வராஹி பால1200-1400 CEVarahi Pala dynasty
6தேவ1130-1500 CEDeva dynasty

இது தவிர நரகாசுரன் இருந்தது, நரகாசுராகாவ், நரகாசுர கிராமம், நரகாசுர பஹாட், நரகாசுர மலை போன்றவை இன்றும் இருப்பது காட்டுகிறது[1]. அசாமின் மிகப்பழைய அரச வம்சாவளியின் மன்னன் மஹிரங்க தானவ ஆகும். இவர்கள் மைரங்க என்ற இடத்தில் தங்களது தலைநகரை அமைத்து ஆண்டனர். இப்பொழுது இது கௌஹாத்திற்கு அருகில் உள்ள மைரங்க பர்வதம் என்ற மலையுடன் அடையாளம் காணப்படுகிறது. மஹிரங்க தானவ என்பவனுக்குப் பிறகு, ஹடக்சூர், சம்பராசூர், ரத்னசூர் என்பவர் ஆண்டனர். “தானவ” மற்றும் “அசுர” என்ற பட்டங்கள் ஆரியர்-அல்லாத மூலங்களைக் காட்டுவதாக அப்பொழுதைய ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். கிராடா என்ற பகுதியை கடகாசூர் என்பவன் ஆட்சி செய்து வந்தான். அவனை வென்றுதான், நரகாசூர் ஆட்சிக்கு வருகிறான். இவனது பெயர் பல புராணம் மற்றும் தந்திர நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. இவை அவன் பௌம, வராஹ, பிருத்வி வம்சத்தில் பிறந்தவனாகக் குறிக்கின்றன. பிஷ்ணு தன்னுடைய வராஹ அவதாரம் காலத்தில் பூமி மூலம் பிறக்க செய்தார். இவன் விதேஹ நாட்டு [வடக்கு பீஹார் பகுதி] மன்னன் ஜனகரால் வளர்க்கப் பட்டான்.

nidhanpur_inscription_of_bhaskar_varman

பாஸ்கர வர்மனின் கல்வெட்டு – நரகாசுரனின் பெயர் உள்ளது

 

பூமிபுத்திரர்கள், நரகாசூர் வழிவந்தவர்கள் பிராக்ஜோதிசபுரகாமரூப பகுதியை  ஆண்டது: பிராக்ஜோதிசபுர-காமரூப பகுதியை ஆண்டவர்கள் எல்லோருமே தம்மை பூமிபுத்திரர்கள், பூமிவம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுக் கொண்டனர். பிராக்ஜோதிசபூர் தான் இப்பொழுது திஸ்பூர் அன்றகியுள்ளது[2]. பிராக்-ஜோதிசபுர என்றால், கிழக்கில் உள்ள ஒளி மிகுந்த நகரம் என்று ;பொருள்[3]. இவர்கள் எல்லோருமே நரகாசூர் வழிவந்தவர்கள் தாம். நரகாசூர் முதலில் காமாக்கியா தேவியின் பரம பகதனாக இருந்தான். தேவிக்குப் பிரியமானவர் விஷ்ணு ஆவார். கிராடர்களை கடற்கரைப் பகுதிக்கு விரட்டி விட்டு, ஒரு வலுவான கோட்டையைக் கட்டிக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். அக்கோட்டைக்குள் சாதாரணமாக யாரும் [தேவர்கள் கூட] உள்ளே நுழைய முடியாது. அவ்வாறு சுபீட்சமாக ஆட்சி செய்து வந்தான். அந்நிலையில், சோனித்பூரை ஆண்டுவந்த பாணாசுரன் என்பவனுடன் தொடர்பு ஏற்பட்டது. அதனால், அவை பாதை தவறி கெட்டவன் ஆனான். காமாக்கிய தேவியின் மீதே காமம் கொண்டான். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புருத்தினான். இதனால், காமாக்கிய தேவி தந்திரத்தால் அவனை கொல்ல தீர்மானித்தாள். அதன்படி, ஒரே இரவில் தனக்கு மலை மீது கோவில், மலைக்குச் செல்ல பாதை, குளம் முதலியவற்றை கட்டினால், அவனது விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாக அறிவித்தாள். அவன் தனது வேலையை ஆரம்பித்து அவ்வாறே செய்தான். அதற்குள் தேவி சேவல் கூட்டத்தி கூவச் செய்து, விடிந்து விட்டது போன்ற உணர்வை உண்டாக்கினாள். இதனால், ஏமாந்த நரகாசுரன் விடிவதற்கு முன்னமே தன் வேலையை நிறுத்தி விட்டான். உண்மையில் விடிந்த பிறகு தான், தான் ஏமாந்து விட்டதை அடைந்தான். இதனால், தேவியின் மீது கோபம் கொண்டான். அக்கோவிலுக்கு யாரும் செல்வதை தடுத்து வந்தான். அதனால் தான் ஒரு நாள் வசிஸ்டர் வந்தபோது, அவரையும் தடுத்து அவமானம் படுத்தினான்.

image-of-the-demon-banasur-in-chitralekha-park

சித்ரலேகா நந்தவனத்தில் உள்ள பாணாசுரனின் சிற்பம்

பாணாசுரன், உஷா, அநிருத்தன் முதலிய கதைகளும், சரித்திரமும்: இந்த பாணாசுரனுக்கு உஷா என்ற அழகிய மகள் இருந்தாள். அவளைத் திருமணம் செய்து கொள்ள அநிருத்தன் ஆசைப்பட்டதால், கிருஷ்ணர் அவளை கவர்ந்து வந்து அநிருத்தனுக்கு திருமணம் செய்து வைத்தார். இதனால், பாணாசுரனுக்கு கிருஷ்ணரின் மீது தீராத பகைக் கொண்டான். அக்னிபர்வதம், மஹாபைரவ கோவில், பைரவி கோவில் தேஜ்பூரில் உள்ள மற்ளிடிந்த நிலையில் உள்ள கோவில்கள், சிற்பங்கள், இடிபாடுகள் முதலியவை பாணாசுரனுடன் சம்பந்தப்பட்டிருப்பதால், அவன் சரித்திர ரீதியில் வாழ்ந்த மன்னன் தான் என்று பி.சி.சௌத்ரி போன்ற சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[4]. புராணங்களின் படி, பாணாசுரனுக்கு 1000 கைகள் இருந்தது மற்றும் சிவனின் தீவிர பக்தனாக இருந்தான் என்றுள்ளது. உஷாவைப் பார்க்க வந்த அநிருத்தனை சிறைப் பிடித்து வைத்ததால், கிருஷ்ணர், பலராமர் மற்றும் பிரத்யும்னன் பாணாஸுரனின் மீது படையெடுத்து வந்தனர்.

krishna-fighting-with-siva-banasur

கிருஷ்ணருக்கும், சிவனுக்கும் நடந்த போர் – பிள்ளையார், முருகன் எல்லாம் பலராமன், பிரத்யும்னன் முதலியோருடன் சண்டை போடுவது தமாஷாக இருக்கிறது.

3100 BCE சிவனுக்கும்கிருஷ்ணருக்கும் ஏற்பட்ட போர்[5]: போரில், பாணாசுரனுக்கு உதவியாக சிவனே, கிருஷ்ணரை எதிர்த்துப் போரிட்டார் என்று புராணங்களும் தந்திர நூல்களும் கூறுகின்றன. சிவன் “மஹேஸ்வை ஜுவரம்” என்ற நோயை உண்டாக்கி, கிருஷ்ணர் படையைத் தாக்கினார். கிருஷ்ணர் பதிலுக்கு ஒரு ஜிவரத்தை உண்டாக்கித் தடுத்தார். பாணாசுரனை கொல்ல யத்தனித்தபோது, சிவன் தடுத்தார். இவையெல்லாம் மந்திர-தந்திர-யந்திர பிரயோகங்களை எடுத்துக் காட்டுகின்றன. அதனால், கிருஷ்ணர், நான்கு கைகள் தவிர மற்றவற்றை வெட்டிவிட்டார். இதுவும் ஒரு தந்திர ரீதியிலான விளக்கம் என்றாகிறது. ஏனெனில், கிருஷ்ணருக்கே இரண்டு கைகள் இருந்த காலத்தில் பாணாசுரனுக்கு 1,000 கைகள் இருந்திருக்காது, அதில் 996 வெட்டப்பட்டு, நான்கே கைகள் பாக்கி வைத்தார் என்பதும் உருவகமாக சொல்லப்பட்டது என்றாகிறது. பாணாசுரனும், கிருஷ்ணரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டான். தன்னுடைய மகளை அநிருத்தனுடன், தனது ராஜ்ய ரதத்திலேயே அனுப்பி வைத்தான். ஆனால், அதே கிருஷ்ணரைத் தான், தனது நண்பன் நரகாசுரன் போரில் எதிர்கொள்கிறான். போரில் நரகாசுரன் கொல்லப்பட்டது முன்பே விளக்கப்பட்டது. சிவன் கிருஷ்ணருடன் போரிட்டது, சிவன் 3100 BCEல் அப்பகுதியில் வாழ்ந்த / ஆட்சி செய்த அரசர் என்றாகிறது. இது முன்னர் குறிப்பிட்டது போல, அக்கால சைனாவை ஆண்ட அரசராக இருக்கலாம். தனது மனைவியின் மீது நரகாசுரன் ஆசைப்பட்டது, முதலியவை சாதாரணமாக அரசர்களுக்கு இருக்கும் குணத்தைத் தான் காட்டுகிறது. இதனால் தான் விஷ்ணு உதவினார் என்றுள்ளது.சிவன் போரிட்டாலும், பாணாசுரனுக்கு பரிந்து அவ்வாறு செய்கிறாரே தவிர விரோதியாகக் கருதவில்லை.

seal-of-bhaskar-varman-found-at-nalanda-dated-643-ce

643 CE தேதி கொண்ட பாஸ்கர வர்மனின் முத்திரை – நாளந்தாவில் கண்டெடுக்கப் பட்டது.

தாமிரவெங்கல பட்டயங்களில் நரகாசுரன் பெயர் காணப்படுவது[6]: நரகாசுரனின் பெயர், நரகாசுர வம்சாவளியின் பெயர், அவனுக்குப் பிறகு ஆண்ட அரசர்கள் முதலியோர்களின் விவரங்கள் கீழ்கண்ட தாமிர பட்டயங்களில் காணப்படுகிறது.

எண்எழுத்துகள் பொறித்த பட்டயம் /  வம்சாவளிகண்டெடுக்கப் பட்ட இடம்ஆங்கிலத்தில் பெயர் / விவரங்கள்
1வனமலவரமாதேவபர்பத தாமரப் பட்டயம்[The Parbatiya Copper Plate Inscription of Vanamalavaramadeva]
2வனமலவரமாதேவதிகாலிகாவ் தாமரப் பட்டயம்[The Dighaligaon Copper Plate Inscription of Vanamalavaramadeva]
3சலஸ்தம்ப வம்சாவளிநரகாசூர் பஹாட் வெண்கல பட்டயம் மற்றும் தாமிர மணி[The Narakasur Pahar Bronze Plaque and Copper Bell Inscription]
4ஹர்ஜர, சலஸ்தம்ப வம்சாவளிநரகாசூர் பஹாட் பித்தளைப் பட்டயம்[The Narakasur Pahar Bronze Plaque Inscription]
5வனமலநரகாசூர் பஹாட் தாமரப் பட்டயம்[The Narakasur Pahar Bronze Plaque Inscription]

பொதுவாக தாமிரப்பட்டயங்கள், கல்வெட்டுகள் மற்றும் ஓலைச்சுவடிகளில் எந்த அரசனின் பெயர், வம்சாவளி, முதலிய விவரங்கள் BCE [Before Common / Current Era]க்கு முன்னால் போனாலே, அவற்றை கற்பனையில் உருவான கதை, கட்டுக் கதை, இட்டுக்கதை, புனைந்த கதை, மாயை [myth, fable, legend, fairy tale] என்றெல்லாம் ஏளனமாகக் குறிப்பிட்டு ஒதுக்கிவிடுவது, மேனாட்டு கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள், சரித்திராசிரியர்கள் முதலியோர்களின் வழக்கமாக இருந்தது. ஆரம்பத்திலிருந்தே, கிருஷ்ணர், விக்கிரமாதித்தியன், சந்திரகுப்த மௌரியன், அசோகன் போன்றவர்களின் சரித்திரத் தன்மையினை மறுத்து வந்தனர். பிறகு, ராஜதரங்கிணி, முத்ரா ராக்ஷஸம் போன்ற நூல்களை வைத்துக் கொண்டு சந்திரகுப்த மௌரியன், அசோகன் முதலியவர்களை ஒப்புக் கொண்டனர். ஆகவே, இங்கு நரகாசுரன், பாணாசுரன், பகதத்தன் முதலியோர் கிருஷ்ணர் காலத்தைச் சேர்ந்தவர்கள் என்று வருவதால், அவர்கள் முழுவதுமாக ஒதுக்கி, விலக்கி வைத்து விட்டார்கள் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

29-10-2016

ruins_of_pragjyotishpura_guwahati_kamarupa_-_panel_on_plinth

பிராக்ஜோதிசபுரத்தின் இடிபாடுகள் – அடிமட்டத்தில் கண்டெடுக்கப் பட்ட சிற்பங்கள் கொண்ட கற்பகுதி.

[1] Assam Gazetteer, Government of Assam, Guwahati, Vol.I, 1999, p.107.

[2] K.L. Barua, the modern site of Dispur, situated about 3 km. to the east of Narakasurgaon, is believed to be the abbreviation of Pragjyotishpur.

K.L. Barua, Early History of Kamrupa., 1996, p.19.

[3] D.C. Sircar : ”Pragjyotisha-Kamarupa”, The Comprehensive Historyof Assam,(ed.), H.K.

Barpujari, p.60.

[4] According to P.C. Choudhury, the historicity of Bana is established by the remains of Agniparvat, Mahabhairab temple, Bhairavi temple and other remains in Tezpur associated with his name

[5] Srimad Bhagavatam—42;  http://www.advaita-vedanta.org/articles/humbling_of_banasura.pdf

[6] Assam Gazetteer, Government of Assam, Guwahati, Vol.I, 1999.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard