New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாரதிதாசன்:இல்லாத ஊர் திராவிட நாடு


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பாரதிதாசன்:இல்லாத ஊர் திராவிட நாடு
Permalink  
 


 உணர்ச்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்:


"அண்ணல்! பெரியாரும், அண்ணாத்துரையும் இல்லாத ஊருக்கு (திராவிட நாடு) வழிகாட்டி விட்டார்கள்!. தமிழினத்தை திசை திருப்பி விட்டார்கள். ஆனால் இறுதியில் உன்றனின் தனித்தமிழ்நாடு என்ற குறிக்கோளே வெற்றி பெறும்! அன்று தமிழகம்
 உன்னை நினைக்கும்" என்று தங்கோவிடம் கூறியுள்ளார்.

"நமக்கு திகவும் வேண்டாம் திமுகவும் வேண்டாம்" என்றார். 

குடும்ப விளக்கு நூலின் 2ஆம் பதிப்பு 1960லும் 3ஆம் பதிப்பு 1963லும் வந்தது. இவ்விரு பதிப்பிலும் மேற்படி பாடலில் வரும் திராவிடன் என்பது தமிழன் என்றும் திராவிட மக்கள் என்பது தமிழ்மக்கள் என்றும் மாற்றப்பட்டது. 

"....தமிழன் என்று நீ செப்படா தம்பி"
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்
வாழிய தமிழ் மக்கள்!
வாழிய நற்றமிழ் வையகம் இனிதே!"

தமிழிலக்கியங்களெல்லாம் வெறும் குப்பைகள் என்று பெரியார் கூறினார். அப்போது,
பாவேந்தர் பாரதிதாசன்,
"நூலைப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி! -முறைப்படி நூலைப் படி! -சங்கத்தமிழ் நூலைப்படி!
காலையில் படி, கடும்பகலில் படி, 
மாலை இரவு, பொருள்படும்படி!" என்று பெரியாருக்கு உறைக்கும்படி கூறினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Srirama Dasan நாவலர் சோமசுந்தர பாரதியார்:

"தமிழன் தன்னைத் தமிழெனன்று கூறிக் கொள்ள வெட்கப்பட்டுத் திராவிடன், திராவிடன் என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது? சுயமரியாதை, சுயமரியாதை என்று ஆரியமொழி பேசினார்கள். நான் சொல்லிச் சொல்லி இப்போதுதான் த
ன்மானம் என்று தமிழாகப் பேசுகிறார்கள்" என்று இடித்துரைத்தார்.

1953 தங்கோவின் தமிழக எல்லை தற்காப்பு மாநாடில்,
"நாம் தமிழர்! நமது இனம் தமிழினம்! நமது நாடு தமிழ்நாடு! தமிழ்நாடு தான் நமது குறிக்கோள்! மொழிவழியாகப் பிரிந்து விட்ட போது திராவிடம் என்பதில் பொருள் இல்லை, திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே அன்று" என்றார். 

அண்ணல் தங்கோ:

'திராவிடம்' என்ற சொல்லைக் கேட்டாலே காதில் நாராசம் பாய்ச்சியது போல இருக்கிறது " என்று 1950 முத்தமிழ் மாநாட்டில் ஈ.வெ.ரா பேசினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

வடகெல்லை மீட்பு போராளி மா.போ.சிவஞானம்:

பெரியார்: தாய்ப்பாலை -தமிழை- எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது?


ம.பொ.சி: தமிழ்மொழியோடு ஆங்கிலத்தையும் பயில வேண்டும், அதுவே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதல்ல பெரியார் கட்சி. "தமிழைப் படிக்க வேண்டாம்; ஆங்கிலம் படித்தாலே போதும். அதுவே வீட்டு மொழியாக- நாட்டு மொழியாக இருக்கலாம்" என்பது தான். இது "பரங்கி மொழிப் பைத்தியம்" அல்லாமல் வேறு எதுவோ? ஆனால் பெரியார் இன்றளவும் வீட்டில் கன்னடமும் நாட்டில் தமிழும் பேசித்தான் நடமாடுகிறார். ஆங்கிலத்தில் பேசுவதில்லையே!

இப்படி தமிழர் தலைவர்களை புரக்கணித்து, எதிர்த்து தமிழியத்தை விழுங்கி திராவிட கருத்தியலை திணித்தார். 

தமிழர் இன அடையாள ஒழிப்பு
தமிழ் ஆட்சி மொழியாவதற்கு எதிர்ப்பு
தமிழ் எல்லை மீட்புக்கு மறுப்பு 
என தமிழினத்திற்கு சொல்லொனா துரோகம் செய்தவர் தான் ஈ.வே.ராமசாமி. 

இன்றைய தமிழரின் இழிநிலைக்கும், மரபு வளங்கள் இழந்த நிலைக்கும், தமிழ் அழிந்து வரும் நிலைக்கும், தமிழர் உரிமை இழப்பிற்கும், அயலார் ஆட்சிக்கும் காரணமானவர் தான் ஈ.வே.ராமசாமி.

அயலார்கள் தமிழர் மேல் எளிதாக அதிகாரத்தை செலுத்தவும், தமிழர்கள் மேல் விமர்சனங்கள் வைக்கவும், தமிழர் நாட்டில் அழிவு திட்டங்களை திணிக்கவும், மண்ணின் மைந்தர்கள் தாய் மண்ணை ஆள்வதை இனவாதம் என்று கருத்தாக்கம் செய்யவும், வழிவகுத்தவர் தான் இந்த ஈ.வே.ராமசாமி.

இவரின் முகத்திரையை பயன்படுத்தி தமிழர் விரோத அரசியல் நடத்தவே இவர் உதவுகிறார் என்பதை தாண்டி தமிழர்களுக்கு ஈள்ளளவும் பயனில்லை என்பதை தமிழர் இனம் உணர தொடங்கிய காலம் இது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard