New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வைதீக பின்னணியில் சமண கற்பிதங்கள்


Guru

Status: Offline
Posts: 24791
Date:
வைதீக பின்னணியில் சமண கற்பிதங்கள்
Permalink  
 


வைதீக பின்னணியில் சமண கற்பிதங்கள்

 
பா.அருண்பிரியா
முனைவர் பட்ட ஆய்வாளர் 
மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்,
மதுரை. http://djdineshbabu.blogspot.com/2015/05/blog-post_51.html
 
வைதீக பின்னணியில் சமண கற்பிதங்கள்
(சிறுபஞ்சமூலம்)
முகவுரை
                ஆரம்பகால மனித இனத்தின் செயலூக்கமான அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் பொதுவான நிலையில் பகிறப்பட்டன. தேவைக்கு உட்பட்ட அளவிலேயே பொருளீட்டப்பட்டது. இம்முறைமையும்நாகரீகத்தின் முந்தைய நிலைமையும்இனக்குழு சமுதாயமாகும். பின்னர்மெல்ல நிகழ்ந்த கால சுழற்சிமாற்றம் முக்கியமாக வைதீகர் என்ற ஒரு சாராருக்கு மட்டுமே பயன்படும் வகையிலான சில ஒழுக்க நியதிகளையும்வாழ்வியல் விதிமுறைகளையும் அமலாக்கியது. இக்கட்டாய சடங்குகளை எதிர்த்து புரட்சி செய்யும் முகமாக நுழைந்த சமணபௌத்தர்கள் மறைமுகமாக தங்கள் மத கோட்பாடுகளை புகுத்த தொடங்கினர். இச்சிக்கலான சூழலில் இயற்றப்பட்ட சமண அறநூல்களில் ஒன்று சிறுபஞ்சமுலம். முழுமையான சமண வாதியான காரியாசன்’ இந்நூலில் வைதீக அரண்களில் பின்னணியிலும்வலிமையிலும் தன் சமண அறங்களை நியாயப்படுத்திருப்பதை ஆழ்ந்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
வைதீக சமணப் பின்னணி
                மனிதர்கள் கூடி வாழ்ந்த இனக்குழுச் சமுதாயத்தில் உடைமை சேர்க்கும் உந்துதல்களும்பொருள்சார் எண்ணங்களும் காணப்படவில்லை. பின்னர் இந்த சமுதாய அமைப்பில் நுழைந்து கலந்த வைதீகர்களால் பழமையான இவ்வினம் கீழ்மையான எச்சங்களாக கருதப்படலாயின. பின்னர் பிராமணியத்தின் வருணாசிரமம்’ சார்ந்த சடங்குகளும்ஆசாரங்களும் பகுத்தறிவும் புரட்சியொன்று ஏற்படுவதற்குத் தடைக்கற்களாக அமைந்துவிட்டன. அச்சடங்காசரங்களே திருமங்களாக இற்றுச் சமூகத்தில் புரையோடிப் போயிருந்தன. இது வைதீகத்தின் நிலை’ பின்னர் இக்கட்டமைப்பில் நுழைந்த சமணபௌத்த அறமார்க்கங்கள் கி.மு.6ம் நூற்றாண்டில் இனக்குழுவின் சத்திரிய வர்க்கத்தைச் சேர்ந்த மகாவீரர்கௌதமபுத்தர் ஆகிய துறவிகளால் தோற்றுவிக்கப்பட்டவையேயாகும். மேலும்இச்சமயங்கள் அரச செல்வமும்நகர நாகரீகமும் பெரும் வர்த்தக மூலதனமும்பெருகிய காலத்தில் உருவாகிஅப்பெருக்கத்திற்கான கருத்தியல் காரணிகளாகவும் விளங்கியவையாகும். அறம் சார்ந்த இரண்டு சமயங்களுக்கு இடையே சிறுசிறு வேறுபாடுகள் இருந்தாலும் வைதீகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால்அதனை எதிர்த்துக் கிளம்பிய இவ்விரு எதிர்ப்புச் சமயங்களும் பேரளவிற்கு ஒப்புமை கொண்டவையே இனக்குழுவோடு பெரிதும் தொடர்பில்லாத இச்சமயங்களே, “இந்திய சமூகங்களின் வாழ்நிலைகளில் பெரும் பாதிப்பையும் அவற்றின் உருவாக்கங்களையும் ஏற்படுத்திய வைதீக தருமத்தையும்வைதீகமல்லாத சமண – பௌத்த அறங்களையும் சேர்த்து வடமரபு’ என்றழைக்கப்படும்”1 என்ற ராஜ் கௌதமனின் விளக்கம் ஈன்டு ஏற்கத்தக்கது. இச்சமய பின்னணியில் கட்டுரைப் பொருள் கீழ்வருமாறு,
அந்தணப் பின்னணியில் சமண அறங்கள்
                சமணப் பௌத்த மதங்கள் தமிழருள் கலந்தொழுகும் போதுசமணர் முதலில் வைதீக அறங்களை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு பிறகு அதற்குள் சமண அறங்களை உட்புகுத்தி உரைத்திருப்பதை அவர்தம் நூலின் வாயிலாக அறிய முடிகிறது. முதலில் சமணர் உள்வாங்கிய அறம் என்றால் அஃது அந்தண அறமே. இவ்வறம் பற்றி,
புலத்தல் சிறந்த புரிநூல் முதல்வர்க்கு”3
                என்ற நம்பியின் கூற்றை அறிவது இக்கட்டுரை புரிளுக்குத் துணை புரியும். சிறுபஞ்சமூலம் அந்தணர்களின் அறங்களில் வைணவம்சைவம் என்ற இரு முறையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்த முற்படுகிறது.
வைணவ அந்தண முறைவழி சமண அறம்
                பழந்தமிழ் இலக்கியத்தில் மாயோன் என்பதாக சுட்டப்பெறும்திருமாலின்’ வைணவத் தர்மத்திற்கு உட்பட்டு ஒழுகியவர்கள்வைணவ அந்தனர்கள் எனப்படுகின்றனர். இவர்கள் பற்றிய குறிப்புகள் சிறுபஞ்சமூலத்தில் மிகுதியும்விரவிக்கிடக்கின்றன. இந்நூல் முதலில்,
பார்த்து உண்பான் பார்ப்பான்”                                                               (சிறு.6)
                என்பதாக அந்தணர் பற்றிய பொதுவான குறிப்பை கொடுத்துவிட்டு பின்னர்பிராமணிய அறங்கள் உட்பொதிந்த வருணாசிரமத்தின் ஒரு நிலையான கிரஹஸ்தம்’ என்ற நிலையை,
நட்டாரை ஆக்கிபகை தணித்துவை எயிற்றுப்
பட்டு ஆர்அணி அல்குவார்ப் படிந்து ஒட்டி
துடங்கினார். இல்லகத்து அன்பின் துறவாது
உடம்பினான் ஆன பயன்”                                                                          (சிறு.16)
                என்பதாக விளக்கி நிற்கிறது. அஃதாவது நண்பரோடு சேர்ந்தொழுகிபகைதாழ்த்திமணப்பேறுகுழந்தைப்பேறுசெல்வப்பேறு ஆகியன பெற்று வரைதலே உடம்பின் பயன் என்ற கிரஹஸ்த்தத்தின் முழுமுதற் தத்துவத்தை உரைத்து விட்டு பின்,
வடிவுஇளமைவாய்த்த வனப்பு வணங்கான்
குடி குலம் என்ற ஐந்தும் குறித்த முடியத்
துளங்கா நிலை காணார்தொக்கு ஈர் பசுவால்
இறங் கால் துறவாத வார்.                        (சிறு.22)
                வடிவம்இளமைஅழகுபிறப்பு இவை போன்ற முன்பு மொழிந்த அனைத்து கிரஹஸ்த்த நிலையையும் நிலையாமை என்று புறந்தள்ளி விட்டு இளமையில் துறவு என்ற சமண அறம் இங்கு உட்புகுத்தப்படுகிறது. ஆகமுற்றும் உணர்ந்த காரியாசன் வைணவ அற வழி உள் வாங்கி சமணத்தை உட்புகுத்தும் உத்தியை மேற்கொள்கின்றனர் ஈண்டு புலனாகிறது.
சைவ அறவழி சமண அறம்
                சிவனின் சைவ தர்மத்திற்கு உட்பட்டு ஒழுகும் பெரியோர்சைவ அந்தனர் எனப்படுவர். இச்சிவன் குறித்த கருத்தை பழந்தமிழ் இலக்கியத்தில் ஒளவையார்,
நீலமணி மிடற்று ஒருவன்”3
                என்பதாக கையாளுகிறார். இவை தவிர மிகுதியும் குறிப்புகள் சங்க நூல்களில் இல்லை. சிறுபஞ்சமூலத்தில் இச்சைவ அறம் மிக நேர்த்தியாக உள்வாங்கப்பட்டு அதில் சமணம் புகுத்தப்பட்டு உள்ளது. இதை,
போர்த்தும் உரிந்திட்டும் பூசியும் நீட்டியும்
 ஓர்த்து ஒரு பால் மறைத்து உண்பான் மேய் ஓர்த்த
அறம் அறமேல் சொல் பொறுக்க அன்றேல் கலிக்கண்
துறவறம் பொய்இல்லறம் மெய் ஆம்”                                      (சிறு.65)
                என்ற பாடல் வழி அறிய முடிகிறது. அஃதாவதுநீர்ப்பூசியும்சடைவைத்தும்நீராடியும் நிகழ்த்தப்படுகிற சிவ தர்மத்தை விட மேலானது. பிறர் கூறும் இன்னா சொல் பொறுத்தல்இங்கு முதலில் சைவச் சடங்குகள் முறையே பகரப்பட்டு பின் சமண அறமான பொறை’ அத்துறவறத்தை விட மேல். என்று சுட்டப்படுவது காரியாசானின் அறத்திணித்தலுக்கு ஒரு சான்று மேலும்ஈண்டு குறித்து நோக்கத்தக்க ஒன்று,
நீர் பரந்த நிமிர் புன்சடை மேலோர் நிலாவெண்மதி சூடி”4
                என்று ஞானசம்பந்தர் கூறும் சிவதோற்றத்தின் பிரதிபிம்பத்தை சிவனடியாரின் பிம்பமாக சித்திரித்து காட்டியது போற்றுதலுக்குரியது.
அரசர் அறங்களும் சமண அறங்களும்
                பிராமண தர்மத்துள் சத்திரியர் என்று வழங்கப்படும் இனக்குழுவின் தலைவனின் நாகரீக வடிவமே அரசன். இவ்வரச அறம் குறித்து,
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்”5
                என்பதாக வரையறுக்கிறார் வள்ளுவர்இவ்வள்ளுவரின் வழுவாத அரச முறையைத் தான் சிறுபஞ்சமூலமும் குறிப்பிடுகிறது.
தன்நிலையும் தாழாத் தொழில் நிலையும்துப்பு எதிர்ந்தால்
இன் நிலையும் ஈடு இல் நிலையும்துன்னி
அளந்து அறிந்து செய்வான் அரைசு”                                                               (சிறு.56)
                அஃதாவது தன்நிலைமனநிலைசெயல்நிலைஉலகமுறை இவற்றை ஆழந்து ஆய்ந்து செயல்படுபவனே அரசன்இதில் தன்நிலை என்பது அரசனது உடல் வலிமைமனவலிமை. செயல்நிலை என்பது அவனது படைவலிமை. பகைநிலை என்பது மாற்றார் வலிமை. உலகமுறை என்பது மக்கள் அவர்களது வாழ்வியல்அறம்பொருள் ஆகியவை நிலைத்திருக்கும் படி அவன் செலுத்தும் செங்கோன்மை. இவ்வரச அரங்களின் வழி சமணர்களுக்கு எஞ்ஞான்றும் அருளுதல் வேண்டும் என்ற மறைமுக கருத்து புலனாகிறது. அஃதாவதுமாற்றான் வழி என்ற நிலைக்கு எந்த சமணத் துறவியரும் உட்படாது இருக்கவும். சமண வர்த்தகர்கள் எவரும் இப்பிரிவின் கண் அடங்காது இருக்கவும் மேற்கொள்ளப்பட்டதொரு அரச சூழ்ச்சி என்பதாகவே இவர் கூறும் இச்சமண அறத்தைக் கருதலாம்.
அரசாட்சி அறம்
                அரசனால் ஆளப்படுகின்ற முறைமைப் பற்றிய அறங்களே அரசாட்சி அறம் ஆகும். இதைப் பற்றி விரிவான விளக்கத்தை வள்ளுவர்,
படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு”6
                என்பதாகச் சுருங்கக் கூறுகிறார். காரியாசானும் இவ்வரசாட்சி அறம் பற்றிய மிக நுட்பமான ஒரு பாடலை இங்ஙனம் இயம்புகிறார்.
பண்டாரம். பல் கணக்குகண்காணிபாத்து இல்லார்
உண்டு ஆர் அடிசிலேதோழரின் கண்டாரா
யாக்கையைத் தக்க அறிவு இல்லார்க் காப்பு அடுப்பின்
காக்கையைக் காப்பு அடுத்த சோறு”                                                              (சிறு.38)
                கருவூலம் கணக்குத் தொழில்மேற்பார்வைபெண் காவல்உணவு காவல் முதலிய தொழிலுக்கு அறிவற்றோரோ நியமித்தல் பெரும் துன்பத்தை விளைவிக்கும் என்பதாக அறம் கூறிவிட்டு பின் அமைச்சர் பற்றி கூற விழைகையில்,
 
“................................. அமைச்சன் யாதும்
பிளந்து அறியும் பேர் ஆற்றலான்”                                                   (சிறு.56)
                அஃதாவது நன்மைதீமை இன்னது என்று பகுத்துக் கூறும் ஆற்றலுடையவன் அமைச்சன் என்பதாக குறிப்புரைக்கிறார். இவ்வறங்களிலிருந்து அறிய வேண்டிய மெய்க்கருத்துக்கள் இவைதான். அக்காலத்தில் வைதீகர்களுக்குச் சமமாக கல்வி கற்றிருந்தவர் சமணர். ஆகையால்அரசாட்சி அறங்களுக்கு சமணரே உரியவர் என்பதை மறைமுகமாக எடுத்துரைப்பதே இங்கு காரியாசானின் இலக்கு ஆகும்.
வணிகமும் சமணமும்
                மௌரிய அரசர்கள்கிழக்கு நாடுகளிடம் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த சமண வர்த்தகர்களே வணிகர்கள் என்ற பெயராள் பின்னாள் பல நாடுகளிலும் குடியேறினர். சங்கம் மருவிய காலத்தில் எழுந்த சிறுபஞ்சமூலத்தில் உள்ள குறிப்பின் வழி தமிழ்ப் பகுதிகளிலும்சமண வர்த்தகம் புரிந்தது அறிய முடிகிறது.
வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிகன்” (சிறு.32)
                இவ்வடிவழி பொருள் சேர்த்தவன் வள்ளல் அதனை வழங்குபவன் வாணிகன் என்பதாக இப்பாட்டிற்குப் பொருள் கொள்ளாமல் வழங்குதல் என்ற வார்த்தையை ஆராய்ந்து நோக்கின் இதற்கான உட்பொருளை பட்டினப்பாலை வழங்குகிறது.
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் மொப்ப நாடிக்
கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்”7
                இவ்வடிகளின் வழி மிகுதியும் கொள்ளாமல் குறைத்து வழங்காமல் முறைப்பட வழங்குதல் என்ற இவ்வணிக இலக்கணத்தையே காரியாசன் வழங்குவான் ஒற்றை வார்த்தை அறமாக வெளிப்படுத்துகிறார். மேலும்அந்தணர் தொடங்கி பல பிரிவுக்கும் அறம் உரைத்த இச்சமணர் இம்மதத்தோடு பெரிதும் தொடர்புடைய வணிகருக்கு எத்தகைய அறமும் உரையாது இருப்பதுவணிகருக்கான அற விளக்காஇல்லை இஃது சமண ஆசிரியரின் தப்பித்தல் உத்தியாஎன்பது அரிய இயலாத ஒன்று.
வேளாளன்
                வருணாசிரமத்தில் மிகவும் அடிநிலையில் வைத்து உரைக்கப்படுபவர் சூத்திரர் என்னும் வேளாண் மாந்தரே. இவர்களைப் பற்றி,
வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி”8
                என்பதாக வேளாண் வாழ்க்கைப் பற்றி நடையியல் சித்திரம் தீட்டியுள்ளார். சிறுபஞ்சமூலத்தில் இவ்வேளாளர் பற்றிய குறிப்புகள் மிகவும் அரிதினும் அரியதாய் பொருளுணர்ந்து குறிக்கப்பட்டுள்ளன.
நன் புலத்து வை அடக்கிநாளும் நாள் ஏர் போற்றி
புன் புலத்தைச் செய்துஎருப் போற்றிய பின் நன் புலக்கண்
பண் கலப்பை பாற்படுப்பான் உழவன் என்பவே
நுண் கலப்பை நூல் ஏதுவார்” (சிறு.58)
                அஃதாவதுவிளைநிலத்தைப் பண்படுத்துதல்வைகோள் திரட்டல்எருவிடுதல்உழுதல்விதைத்தல் இவையன்ன தொழிலை வேளாண் மாந்தருக்கு உரியவை என்பதாக முதலில் வேளாண் அறத்தை உள்வாங்கி விட்டுபின் சமண அறத்தை இவ்வாறு நியாயப்படுத்துகிறார்.
குளம் தொட்டு காவு பதித்துவழி சித்து
உளம் தொட்டு உழு வயல் ஆக்கிவளம் தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்று இவை பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கம் இனிது”                                                                              (சிறு.64)
                அஃதாவது குளம் வெட்டுதல்மரம் நடுதல்சாலை பணி செய்தல்உழுநிலத்தை செம்மை செய்தல்கிணறு தோண்டுதல் இவற்றை செய்வோருக்கு சொர்க்கப் பிராப்தம்’ உண்டு. படிக்குங்கால் நல் அறம்போல் காட்சியளிக்கும் இப்பாடலை ஆயுங்கால் இப்பணிகளெல்லாம் வேளாண் மாந்தருக்கு உரியவை. அஃதேபோல் வணிகரல்லாத சிலர் சமணத்துறவியருக்கு நீர்க்கடன் செய்தல்தூய்மையான வழியில் தம் காரியங்களை மேற்கொள்ளுதல் இவை போன்றவை அறங்களாக்கி அதை வேளாளர் மேல் திணித்துஅவ்வறம் செய்தோர் சுவர்க்கம் புகுவார் என்பதாக நியாயப்படுத்தப்பட்ட சமண அறப்புகுத்தல்கள்வைதீகருக்கு இணையான ஒரு கோட்பாட்டு முறையே ஆம்.
 
நிறைவுரை
                சிறுபஞ்சமூலத்தில் உள்ள பாடல்களை முழுமையுமாக ஆழ்ந்து ஆராய்கின்ற வழி வைதீகர்களின் நான்கு வர்ணங்கள் பற்றிய செய்திகளும்நான்கு ஆசிரமத்தில் பிரமச்சரியம்கிரஹஸ்தம் ஆகிய இரு நிலையினைப் பற்றி செய்திகள்இந்நூலில் பரவலாகக் காணக்கிடைக்கின்றன. வைதீக அறங்களை சமண நூல்வழி ஆராயுங்கால் சமணர்கள் தம் சமயத்தை நிலைநாட்ட முதலில் வைதீக அறங்களை உள்வாங்கிக் கொண்டதும்பிறகு அவ்வறங்களுக்கு சமண பயன்களை உட்புகுத்தியதும் அதன்பின்வைதீகத்தை விட சமணமே சிறந்தது என்று கருத்துரைத்து நியாயப்படுத்தியதும் தெளிவாக அறிய முடிகிறது. ஆக சமணர்கள் தம் அறத்தை பறைசாற்ற வைதீக பின்னணியை முதலில் ஏற்றுக் கொண்டதும் பிறகு எடுத்துக் கொண்டதும் மெய்யே என்பது இக்கட்டுரையின் வழி ஆய்ந்து கண்ட முடிவு ஆகும்.
அடிக்குறிப்புகள்
1.            ராஜ்கௌதமன்தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும்ப.19
2.            நாற்கவிராசநம்பிஅகப்பொருள் விளக்கம்நூ.எ.84
3.            புறநானூறுபா.எ.91
4.            திருஞானசம்பந்தர் தேவாரம்பா.எ.3
5.            திருக்குறள்குறள் எண்.388, பரிமேழகர் (உ.ஆ)
6.            மேலது.குறள் எண்.381
7.            ஞா.மாணிக்கவாசகர்பத்துப்பாட்டுபட்டினப்பாலை அடிகள் (207 – 211)
8.            இளம்பூரணர் (உ.ஆ)தொல்காப்பியம்(பொருள்)மரபியல் - நூ.எ.81


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard