இந்தியாவில் இருக்கிற அளவிற்குப் பழைமையான கோட்டைகளும், கொத்தளங்களும், பேராலயங்களும், வரலாற்றுச் சின்னங்களும் உலகில் வேறெங்கும் இல்லவே இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். சீனா, இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகளிலும் பழைமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் இருக்கின்றன என்றலும் இந்தியாவின் அளவை ஒப்பிடுகையில் மிக, மிகக் குறைவானவை என்று உறுதியாகச் சொல்லலாம்.
பிற ஐரோப்பிய நகரங்களில் இருக்கும் பழைமையான கோட்டைகள், சர்ச்சுகள் போன்றவை ரெனெசான்ஸ் என்கிற ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குப் பின் உருவானவை. அதாகப்பட்டது அந்த நினைவுச் சின்னங்களில் பெரும்பாலானவை ஐநூறு ஆண்டுகளுக்கும் குறைவான வயதுடையவை. அமெரிக்க நினைவுச் சின்னங்களில் எல்லாம் 300 ஆண்டுகளுக்கு மேற்படாத வயதுடையவை. இந்தியாவை எந்தவிதத்திலும் ஒப்பிடத் தகுதியில்லாதவை.
ஓரளவிற்கு சீனாவும், இந்தியாவும் ஒப்பிடத்தகுந்தவை என்றாலும் சீனாவின் பெரும்பாலான பழைமைச் சின்னங்கள் "கலாச்சாரப் புரட்சி" என்கிற பெயரில் மாவோ என்னும் மடையனால் அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டன. இருந்தாலும் அமெரிக்க, சீனா, இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஒப்பிடுகையில் இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மிக, மிகக் குறைவானவர்கள். காரணம், இந்தியர்களுக்கு, குறிப்பாக இந்தியாவை ஆண்ட, ஆளுகிறவர்களுக்கு இந்த வரலாற்று நினைவுச் சின்னங்களைக் குறித்த அக்கறையோ, அதனைப் பாதுக்காக்க வேண்டிய முனைப்போ அல்லது உலகிற்கு அதனை எடுத்துச் சொல்லுகிற ஆர்வமோ இல்லாதவர்கள்.
இந்தியாவை ஆண்ட, ஆளுகின்ற பெரும்பாலான அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாத, மூட, அடிப்படை அறிவு இல்லாத, சுயநலம் பிடித்த குண்டர்கள். எப்படியாவது ஊர்ப்பணத்தைக் கொள்ளையடித்து, சுருட்டித் தானும், தன் மனைவி மக்களும் சுக ஜீவனம் செய்தால் போதும் என்கிற எண்ணம் ஒன்றுமட்டுமே உடையவர்கள்.
எனவே, பெரும்பாலான இந்திய வரலாற்றுச் சின்னங்கள் பராமரிப்பு அற்ற இடிபாடுகளாகவும், குப்பை மேடுகளாகவும், சாக்கடையில் மறைந்து கிடக்கிற வைரங்களாகவும் மாறி ஒளியிழந்து, மதிப்பிழந்து போய்விட்டன. அதனைக் குறித்து எடுத்துச் சொல்வாருமில்லை. இந்தியாவில் பார்க்க வேண்டிய இடமென்றால் அது "தாஜ்மஹால் மட்டும்"தான் என்கிற அளவில் மட்டுமே என இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால், தாஜ்மஹாலை விடவும் பழைமையான, அற்புதமான பேராலயங்களும், சிற்ப வேலைப்பாடுகளும் தென்னிந்தியாவில் இருக்கின்றன என்று யாரும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லவில்லை. தாஜ்மஹாலுக்கு முன்னால் ஒரு போஸ் கொடுத்து செல்ஃபி எடுத்துக் கொண்டு அடுத்த ஃப்ளைட்டைப் பிடித்து வந்த வேகத்தில் திரும்பிப் போய்விடுகிறார்கள். பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் கால் வைக்கவே கூசும் அழுக்கும், துர்நாற்றமும் பிடித்த இந்தியாவை தூற்றாமல் செல்ல மறப்பதில்லை.
இந்திய மாநிலங்களில் இராஜஸ்தான் மட்டுமே ஒரு விதிவிலக்காக, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக நடந்து கொள்கிறது. அதன் மூலம் ஏராளமான வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறது இராஜஸ்தான். கேரளாவையும், கோவாவையும் அதில் ஓரளவிற்குச் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் பல அற்புதங்களைத் தன்னகத்தே வைத்திருக்கும் தமிழ்நாடு அதனைக் குறித்து எந்த ஆர்வமும் காட்டுவதில்லை. இருக்கும் ஆலயங்களையே அழிப்பதிலும், சிலைகளைத் திருடி விற்பதிலும் மட்டுமே ஆர்வம் காட்டும் மூடர் கூட்டம் தமிழகத்தைத் தொடர்ந்து ஆண்டு கொண்டிருக்கிறது. வெத்துவேட்டு வாய்ஜாலக்காரர்களான அவர்களுக்கு வரலாறும் தெரியாது, ஆன்மிகமும் தெரியாது. சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து, தனது கலாச்சாரச் சிறப்பைக் காட்டி, அதனைக் கொண்டு பொருளீட்டுகிற வித்தையும் தெரியாது.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை விடுங்கள். உள்நாட்டுச் சுற்றுலாப்பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், பாதுகாப்பையும், தங்குமிடங்களையும், போக்குவரத்து வசதிகளையும் செய்து கொடுத்தாலேயே தமிழ்நாட்டின் வருமானத்தில் பல்லாயிரம் கோடியைப் பெருக்கலாம். ஆனால் மூடர்களுக்கு எத்தனை சொல்லி என்ன பயன்?
திரும்பத் திரும்ப அதே முட்டுச் சந்தில் சிந்து பாடுவதனைத் தவிர திராவிடப் புண்ணாக்கன் புதிதாக எதனைச் செய்துவிடப் போகிறான்? அந்தோ!
வறுமை மிகுந்த பிஹார் மாநிலத்திற்கு "புத்த கயா" என்னும் அற்புத அட்சயபாத்திரம் ஒன்று தன்னிடம் இருக்கிறது என்கிற அறிவு கூட இருப்பதில்லை. பவுத்தர்களின் "மெக்கா" பிஹாரின் "புத்த கயா". ஒவ்வொரு வருடமும் பல இலட்சக்கணக்கான பவுத்தர்கள் வந்து போகும் புத்த கயாவைச் சுத்தப்படுத்தி, இண்டர் நேஷனல் லெவலுக்கு வசதிகள் செய்து கொடுத்தால் பண மழை கொட்டும் என்பதில் சந்தேகமேயில்லை.
அங்கு வருபவர்களில் ஜப்பான், கொரியா, சீனா போன்ற பணக்கார நாடுகளைச் சேர்ந்த பவுத்தர்களே அதிகம். பிஹாரிகள் தங்களின் புனித இடத்தை வைத்திருக்கும் "அழகைக்" கண்டு மனம் வெறுத்துத் திரும்புகிற எந்த பவுத்தனும் மீண்டும் அங்கு திரும்ப வருவதற்குத் தயங்குவான் என்பதில் சந்தேகமேயில்லை. குறைந்தபட்சம் சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக் கொள்வதனைக் கூட பிஹாரின் அதிகார வர்க்கம் முனைவதில்லை என்பதை நினைக்கையில் பெருமூச்சு மட்டும்தான் வருகிறது.