New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மெக்காலே கல்வி


Guru

Status: Offline
Posts: 24778
Date:
மெக்காலே கல்வி
Permalink  
 


ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான கல்வியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள் வெளியாகவிருக்கின்றன. இன்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கி நவீன இந்தியாவில் முன்வைக்கப்பட்ட கல்விக் கொள்கைகள், அவற்றின் நோக்கங்கள், தாக்கங்களின் வரலாற்றுப் பின்னணியில் புதிய கல்விக் கொள்கையின் சுருக்கமான அறிமுகம்.

புதிய கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கை எனும் பெயரில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் 43 பக்கக் கொள்கைப் பிரகடனம், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது. பலரும் சுட்டிக்காட்டும் சம்ஸ்கிருதத் திணிப்பு என்பதையும் தாண்டி, பல்வேறு அபாயங்களை மோடி அரசின் கல்விக் கொள்கை கொண்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை அலசும் முன்னர், இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட முக்கியமான கல்விக் குழுக்களைப் பார்த்துவிடலாம்.

மெக்காலேவுக்கு முன்னும் பின்னும்

1813-ல் முதன்முறையாக இந்திய மக்களுக்குக் கல்வி அளிக்கும் பொறுப்பைத் தனது பணியாக ஏற்பதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. கல்வி சாசனம் எனும் ஆவணத்தையும் வெளியிட்டது. அதற்காக அன்று உடனடியாக ரூ. 1 லட்சம் ஒதுக்கப்பட்டதும், அது கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டதும் வரலாறு. ஆங்கிலக் கல்வியே தனது கல்வி என இந்த ஆவணம் பகிரங்கமாக அறிவித்தது. கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்க்க, இந்திய மக்களுக்குச் சாதி, மதம் உள்ளிட்ட தகுதி தேவையில்லை. பிரிட்டிஷ் கல்வி நிறுவனக் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும் என அதன் இரண்டாம் ஷரத்து குறிப்பிடுகிறது.

1834-ல் மெக்காலே இந்தியா வந்தார். அவருடன் ஆலோசனை நடத்திய கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு, இந்தியக் கல்விக்கு - பொதுக் கற்பித்தல் முறை எனப் பெயரிட்டு, அவரையே அதன் தலைவராக்கினார். எண்ணத்திலும் அறிவாற்றலிலும் கலாச்சாரத்திலும் ஆங்கிலேயராகவும் ஆனால், ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் இருக்கும் ஒருவரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என அறிவித்த மெக்காலே, 267 பக்கம் கொண்ட கல்விக் கருத்துருவை அரசுக்குச் சமர்ப்பித்தார்.

ஆங்கிலக் கல்வியை முழுதும் வேலையாள் தகுதி பெறும் கல்வியாக மாற்றினார். பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் அச்சிடுவதைக்கூடத் தடை செய்தார். “வியாபார, நிர்வாக மொழியாய் ஆங்கிலம்; அதற்காக பிரிட்டிஷ் அரசுக்குத் தேவைப்படும் லட்சக்கணக்கான - கணக்காளர், எழுத்தர் வேலைக்கான கல்வி ஆகியவை போதுமானவை. பெரிய மேதாவிகள், தத்துவ அறிஞர்கள் எல்லாம் நமக்கு எதற்கு?” என அவர் பகிரங்கமாக அறிவித்தார். 1835-ல் வில்லியம் பெண்டிங் பிரபு, மெக்காலே குறிப்புகளை ஏற்று முழுமையாக அமல்படுத்த உத்தரவிட்டார். பிற்காலத்தில், ‘வேலை… கும்பேனி அரசு வேலை, தனியார் ஆலை வேலை எனும் ஈர்ப்பே கல்வியின் அடிநாதமாக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி தரும் சான்றிதழ், வேலை பெறும் ஒரு அடையாளச் சீட்டாகப் பயனாகிறது’ என்று காந்தி விமர்சித்தது குறிப்பிடத் தக்கது.

1853-ல் இங்கிலாந்தின் கல்விக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் தலைவராக இருந்த சார்லஸ் வுட் தலைமையில் ஒரு கல்விக் குழு இந்தியா வந்தது. 1854-ல் கர்சன் பிரபுவின் காலத்தில் இதன் அறிக்கை முன்வைக்கப்பட்டது. நமது கல்வி முறையில் இருக்கும் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு என்பதெல்லாம் இக்குழுவின் கைங்கர்யம்தான். பள்ளிக்கான சீருடை, ஒரு பாடமாகப் பிராந்திய மொழி போன்றவற்றை 1882-ல் வில்லியம் ஹண்டர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய கல்வி கமிஷன் கொண்டுவந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சர்வோதயக் கல்வி

1915 இல் இந்தியா திரும்பியவர் அன்றைய இந்தியக் கல்வித் திட்டத்தை ஆய்வுக்கு உட்படுத்தியதினார். அதன் விளைவாக, புதிய கல்வித் திட்டத்தை உருவாக்கினார். அதன்படி 1917 இல் அகமதாபாத்தில் தன்னுடைய அடிப்படைக் கல்வி மற்றும் புதிய கல்வி எனும் கொள்கைகளின்படி புதிய பள்ளிகளைத் தொடங்கினார். இதே போன்று 1921 இல் குசராத்தில் குஜராத் வித்யா பீடம் என்ற பல்கலைக்கழகத்தை நிறுவினார்.[6] இதற்கு வெகுகாலத்திற்குப் பிறகு, விடுதலைப்போராட்ட வெப்பம் மிகுந்த காலத்தில் சேவாகிராமத்தில் வாழ்ந்தபோது, ‘ஹரிஜன்’ இதழில் நாட்டின் கல்வி குறித்து விரிவான ஒரு கட்டுரையை காந்தி எழுதினார். அதில் கல்விமுறையின் 10 பலவீனங்களைப் பட்டியலிட்டிருந்தார். அவை,[7]

  1. நமது மரபுக்கும் பண்பாட்டுக்கும் முரண்பட்டதாக இந்த மெக்காலே குமாஸ்தா கல்வி உள்ளது.
  2. இந்தக் கல்வி, குழந்தையை நேரடியான சமுதாயச் சூழ்நிலையிலிருந்தும் உடல் உழைப்பிலிருந்தும் பிரித்துவிடுகிறது.
  3. கற்றவர்களைத் தனி இனமாக, பிரிவாக இன்றைய கல்வி உருவாக்கிவிட்டது.
  4. அரசு மற்றும் தனியார்க்குப் பணியாளர்களாக மாணவர்களை மாற்றுவதற்கான பயிற்சி மட்டுமே இன்றைய கல்வி.
  5. மாணவர்களின் மனத்தில் சமுதாய உணர்வு இன்றி சுயநல தனிமனித உணர்வு புகுந்துவிட்டது.
  6. ஒரு நூற்றாண்டாகத் தொடரும் இந்த அந்நியர் கல்வியில் தொடக்கப் பள்ளி என்பது எந்த முன்னேற்றமுமின்றி வதங்கிவிட்டது.
  7. கல்வித் திட்டத்தின் பெரும்பகுதி வாழ்க்கைக்குப் பயன்படாததாக வீணானததாக உள்ளது.
  8. பொதுமக்கள் கல்வி முன்னேற்றம் பற்றி இன்றைய கல்வி எண்ணிப்பார்ப்பதே கிடையாது.
  9. இயந்திர முறையில் ஒரே மாதிரி கல்வியை அனைத்துக் குழந்தைகளுக்கும் - அவரவர் தேவை உணராமல் வழங்குகிறார்கள்.
  10. கல்விமுறையும் தேர்வுகளும் கல்வியை மாணவர்களின் உள்ளத்தில் பயத்தை உருவாக்கிப் பெரிய சுமையாகவே மாற்றிவிடுகிறது.

பின்னர் காந்தி 1937 அக்டோபர் 22 இல் வார்தாவில் தேசிய கல்வி மாநாட்டை கூட்டினார். அது இந்தியத் தேசியக் கல்வி மாநாடு என்று அழைக்கப்படுகிறது. கல்வியாளர் டாக்டர் ஜாகிர் ஹுசைன் தலைமையில் இந்தியக் கல்வி குறித்து முடிவுசெய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. வார்தா கல்வித் திட்டம் அல்லது ஆதாரக் கல்விக் கொள்கை அந்த கல்விக் குழுவால் பரிசீலித்து முன்மொழியப்பட்டது. பிறகு வர்தாவிலும் செகாவோனிலும் சர்வோதய மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. காந்தியின் மரணத்திற்குப் பிறகு அடிப்படை கல்வி மற்றும் முன்-அடிப்படை கல்விப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.

மத்திய அரசு அமைத்த தேசிய திட்ட ஆணையம் பல அடிப்படைகளில் காந்தியின் அடிப்படை கல்வி பார்வைக்கு எதிர்ப்பைப் தெரிவித்தது. நேருவின் அரசின் பார்வையானது நாட்டை தொழில்மயமாக்குவதையும், மையப்படுத்தப்பட்ட திட்டமிட்ட பொருளாதாத்தையும்கொண்டதாக இருந்ததால், இதில் காந்தியின் 'ஆதாரக் கல்வி' அல்லது சுய-ஆதரவு பள்ளிகளுக்கு இடமின்றி போனது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர அறிவுஜீவிகளாளலும், அரசியல் தலைவர்களாளும் ஆதரவளிக்கப்பட்டது."



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

வேண்டாம் மெக்காலே... வரட்டும் புதிய விடிகாலை

இந்தியாவில் பிரிட்டிஷாரின் கல்விக் கொள்கையை அமல் செய்த மெக்காலே, பிரிட்டிஷ் பார்லிமென்டில் 1835 பிப்.2ம் தேதி ஓர் அறிக்கை சமர்ப்பித்தார். அதில் அவர், நான் குறுக்கும் நெடுக்குமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன். இதுவரை ஒரு பிச்சைக்காரனையோ, திருடனையோ நான் பார்க்கவில்லை. அவ்வளவு வளம் நிறைந்தது அந்நாடு. கலாசாரம் மற்றும் ஆன்மிக நெறி எனும் முதுகெலும்பை நாம் உடைக்காதவரை நல்ல ஒழுக்கம், நல்ல பண்பு இருக்கும் அந்நாட்டின் மக்களை நாம் எப்போதும் வெற்றி பெறுவது கடினம்.

ஆகவே, பழைய கல்வி அமைப்பு, கலாச்சாரம் ஆகியவற்றை மாற்றி, தங்களை விட வெளிநாடு மற்றும் ஆங்கிலம் ஆகியனதான் உயர்வானது என்பதை மனதில் புகுத்துவதன் மூலம் தங்களைப் பற்றிய உயர்ந்த மதிப்பீட்டையும் பாரம்பரிய கலாசாரத்தையும் இழக்கும் படியான கல்வித் திட்டத்தை நான் பரிந்துரைக்கிறேன். அதன் மூலம் நாம் எது போன்று அவர்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுபோல் ஆதிக்கத்துக்குட்பட்டவர்களாக அவர்கள் மாறுவார்கள் என்றார்.

இவ்வாறு புகுத்தப்பட்ட மெக்காலேயின் கல்வித் திட்டம் 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டில் கலாசாரம், மதிப்பீடுகள் மற்றும் ஆன்மிக நெறிகளுக்குப் பெயர் எடுத்த இந்தியாவின் கல்வி முதுகெலும்பை முறிப்பதாக இருந்தது. நவீன கல்வி, நவீன தொழில்நுட்பம், நவீன மருத்துவம் ஆகியவை நவீனம் என்ற பெயரில் இங்கு புகுத்தப்பட்டன. தற்போது அது உலகமயமாக்கல் என்று புதுப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் இயற்கையான பலத்தை மீட்கவும், அதே சமயம் உயர்கல்வியில் நவீனத் தேவைகளை பூர்த்தி செய்யவும், 21ம் நூற்றாண்டில் அமல் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் உதவுகின்றன. குறிப்பாக 11வது திட்ட காலத்தில் மத்திய அரசு கல்விக்காக ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கியது. எனினும் இன்னும் சில விஷயங்களில் நாம் எதிர்பார்த்த தகுதியைப் பெறவில்லை.

2009 ஜூலையில் 483 பல்கலைக்கழகங்கள், 20 ஆயிரத்து 918 கல்லூரிகள் இருந்தன. 200910ல் 96 புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசியக் கல்வி நிறுவனங்களும், 3 ஆயிரம் கல்லூரிகளும் உள்ளன. இந்நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிவாய்ந்த திறன் அடிப்படையிலான ஆசிரியர்கள் கிடைப்பதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

2007-08ம் ஆண்டில், பல்கலைக்கழக மானியக் குழுவினரால் ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் 46 பல்கலைக்கழகங்களில் 44 சதவீத பேராசிரியர் 51 சதவீத இணைப்பேராசிரியர் மற்றும் 53 சதவீத விரிவுரையாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது தெரியவந்தது. அதே போல், 985 கல்லூரிகளில் 18 சதவீத இணைப்பேராசிரியர்கள் மற்றும் 41 சதவீத விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பது கண்டறியப்பட்டது.

தற்போது உள்ள நிலையில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய பணியிடங்கள் மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள் ஆகியவற்றை சேர்த்து 4.41 லட்சம் உயர்கல்வி ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள். தற்போது, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 5.1 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

சர்வசிக்ஷ அபியான் திட்டத்தின் படி, 12 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் தேவையும் உள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்ய, மத்திய அரசு ஆறாவது சம்பளக்குழுவின் பரிந்துரையை ஏற்று ஆசிரியர் பணியிடங்களுக்கு வர்த்தக மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க முடிவு செய்தது.

இந்தியாவில் நாக் தரமதிப்பீடு தான் கல்வி நிறுவனங்களின் தகுதியை அறிந்து கொள்வதற்கான ஒரே வழி. இதுவரை நாக், 159 பல்கலைக்கழகங்கள் மற்றும் 4171 கல்லூரிகளையும் மட்டுமே தரமதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 60 பல்கலைக் கழகங்கள் ( 37.7 சதவீதம்) மற்றும் 1796 கல்லூரிகள் (43சதவீதம்) மட்டுமே ஏ கிரேடு அந்தஸ்தை பெற்றுள்ளன. ஏ கிரேடு பெற்றபல்கலைக்கழகங்களில் 40 சதவீதம் மத்திய பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.

29.4 சதவீதம் மாநில பல்கலைக்கழகங்கள். மற்றவை நிகர்நிலை பல்கலைக்கழகங்கள். பல்கலைக்கழகத்தின் தரம், பல்கலைக்கழக ஆசிரியரின் தரத்தின் அடிப்படையிலேயே அமைகிறது. உயர் கல்வியில் திறமையான, தகுதி வாய்ந்த ஆசிரியர்களாலேயே பாடத்திட்டம் மற்றும் துணைப்பாடத் திட்டங்களில் சிறந்து விளங்க முடியும்.

இது போன்ற சிறப்பான உயர் கல்வியால் மட்டுமே சிறப்பான வாழ்க்கை மற்றும் வாழ்க்கைக்கான திறன் ஆகியவற்றை இளைஞர்களிடையே உருவாக்கும். இது தான் உலகமயமாக்கப்பட்டுள்ள இச்சூழ்நிலையில் கலாசார பாரம்பரியம் மற்றும் மதிப்பீடுகளை பூர்த்தி செய்யும். கல்லூரி ஆகட்டும்; பல்கலைக்கழகமாகட்டும். உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை விட ஆசிரியர்களே முக்கியமானவர்கள்.

பேராசிரியர் எஸ்.பி. தியாகராஜன்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

மெக்காலே கல்வித்திட்டம்: பாரத கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சிதைத்த திட்டம் ஓர் அலசல் பதிவு பெரியதாக இருக்கிறது என்று ஒதுக்கி விடாதிர்கள் இருநிமிடம் செலவு செய்து படியுங்கள்...... 
இன்றைய மத்திய அரசின் கல்வித்திட்டத்தை எதிர்பவர்கள் அன்னியரின் அடிமைகளே அன்றி வேறு எவருமில்லை அன்னிய மோகத்தில் மூளைசலவை செய்யப்படவர்கள் இதற்கு பதில்தரவும் 

நிலத்தை இழந்தால் மீட்டுவிடலாம், மொழியை இழந்து விட்டால்... மீட்கவே முடியாது என்பதை இந்திய வரலாறு திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.இந்தியாவை குப்தர்கள் ஆண்டார்கள். கில்ஜி வம்சம் ஆண்டது. மொகலாயர்கள் ஆண்டார்கள். இப்படிப் பேரரசுகளின் குடையின் கீழ் இந்தியா ஆட்சி செய்யப்பட்டபோது, அவர்கள் எவரும் தங்களது மொழியை இந்திய மக்கள் அனைவரும் கட்டாயமாகப் பேச வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை. நம் மீது திணிக்கவும் இல்லை.உருதும் அரபும் ஆட்சி மொழியாக இருந்த காலத்தில், சமஸ்கிருதம் அங்கீகரிக்கப்பட்டே இருந்தது. பாலியும் பிராகிருதமும் வந்தபோது, தமிழ்மொழி அழித்து ஒழிக்கப்படவில்லை. ஆனால், வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்ட 300 வருடங்களில் நம்முடைய தாய்மொழியை மெள்ள மறந்து, அவர்களின் ஆங்கிலத்தை நமது மொழியாக்கிக்கொண்டது நடந்தேறியது.வரலாற்றின் பெரும் பிழைகளில் இதுவும் ஒன்று. ஆங்கிலம் நமக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லவில்லை. தாய்மொழியைத் துறந்து எதற்காக ஆங்கிலத்தை நமது மொழியாக்கிக் கொண்டோம்? தமிழ்நாட்டில் தமிழில் பேசுவது ஏன் அவமானத்துக்குரிய ஒன்றாக மாறியது? சரித்திரத்தின் இந்தக் கேள்விக்கு நமது விடை மௌனம் மட்டுமே!இந்த வரலாற்று மாற்றத்துக்கு முதற்காரணமாக இருந்தவர் மெக்காலே. அவர் உருவாக்கிய மேற்கத்தியக் கல்வி முறை, அந்தக் கல்வி முறையில் படித்து அரசுப் பணியாளர்களாக ஆனவர்கள், அவர்களின் வம்சாவழிகள், அந்தக் கல்வியை அப்படியே இன்றும் நடைமுறைப்படுத்தும் அரசுகள், கல்வியை வணிகமயமாக்கிய அமைப்புகள், ஆங்கிலப் படிப்பு மட்டுமே உயர்வானது என்று நம்பும் கல்வி நிலையங்கள், அந்தக் கருத்தியலைத் துதிபாடும் சாமான்யர்கள்... இப்படிச் சகலருக்கும் இந்தக் கல்வி மோசடியில் பங்கு இருக்கிறது.

தாய்மொழியில் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது அவமானமாகிப்போன சமகாலச் சூழலில், இந்த அநியாயம் எப்படி உருவானது என்பதைக்கூட நாம் அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம் என்பதே வெட்கப்படவேண்டிய உண்மை.1834-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் நாள் இந்திய சுப்ரீம் கவுன்சில் உறுப்பினராக, இங்கிலாந்தில் இருந்து கடற்பயணம் செய்து மெட்ராஸுக்கு வந்து சேர்ந்தார் மெக்காலே. அப்போது,வில்லியம் பெனடிக் கவர்னராக இருந்தார். கடற்கரையில் 15 குண்டுகள் முழங்க, மெக்காலேவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கவர்னர் வில்லியம் பெனடிக் கோடை கால ஒய்வுக்காக ஊட்டியில் தங்கி இருந்தார். ஆகவே, அவரைச் சந்திக்க மெக்காலே தானும் ஊட்டிக்குப் புறப்பட்டார்.மெக்காலேவை ஒரு பல்லக்கில் வைத்து நான்கு பேர் தூக்கிக்கொண்டு பெங்களூர், மைசூர் வழியாக 11 நாட்கள் நடந்து ஊட்டிக்கு சென்றடைந்தார்கள். 400 மைல்கள் பல்லக்கில் தூக்கிச் செல்லப்பட்டார் மெக்காலே.

அன்று, மெக்காலேவைப் பல்லக்கில் தூக்கிய நாம், இன்றும் இறக்கிவிடவே இல்லை. இந்தியர்கள் ஒவ்வொருவர் முதுகிலும் மெக்காலே இன்னும் உட்கார்ந்து இருக்கிறார். நாமும் வேதாளத்தை சுமக்கும் விக்ரமாதித்யனைப் போல, மெக்காலேவின் கல்வி முறையைத் தூக்கிக் கொண்டு அலைகிறோம்.மதராஸில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், இந்திய விஜயம் எப்படி இருந்தது என்று மெக்காலேயிடம் கேட்டபோது, ''இந்திய மரங்களில் வீசும் காற்றுகூட எனக்கு உகந்ததாக இல்லை. ஒரே வெக்கை. எங்கு பார்த்தாலும் கறுத்த மனிதர்கள், குடிசை வீடுகள், வாறி இறைக்கும் வெயில், இந்தியா எனக்கு மூச்சுத்திணறலைத்தான் ஏற்படுத்துகிறது'' என்றார்.யார் இந்த மெக்காலே? அவர் ஏன் இந்தியாவுக்கு வந்தார்? இந்த இரண்டு கேள்விகளின் பின்புலத்தில்தான் காலனிய ஆட்சியின் கடந்த காலம் சுருண்டிருக்கிறது.
தாமஸ் பேபிங்டன் மெக்காலே, 1800-ல் இங்கிலாந்தில் பிறந்தவர். அவரது அப்பாவும் அரசுப் பிரதிநிதியாக மேற்கிந்தியத் தீவுகளில் பணியாற்றியவர். சில காலம் வணிகமும் செய்து இருக்கிறார். மெக்காலே, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். அவருக்கு இரண்டு சகோதரிகள். 

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஹவுஸ் ஆப் காமன் உறுப்பினராக இரண்டு முறை பணியாற்றியவர். காலனிய விசுவாசிகளில் முதன்மையானவர். ஆகவே, இந்தியாவில் காலனிய ஆட்சி வலுப்பெறுவதற்கு திட்டம் தீட்டுவதற்காக பிரிட்டிஷ் அரசு, மெக்காலேவை நியமனம் செய்தது.இந்தியா சிதறுண்டு கிடக்கிறது. ஒருமித்த சட்ட நடைமுறை இல்லை. உட்பூசல்கள் நிரம்பி இருக்கிறது. மக்களோ கிடைப்பதை வைத்து நிம்மதியாக வாழ்வதில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள். ஆகவே, அதிகாரத்தை வலிமையாக்கினால் இந்தியாவை எளிதாக ஆட்சி செய்துவிடலாம் என்ற கருத்தை மெக்காலே முன்மொழிந்தார்.குறிப்பாக, நிர்வாக முறைகளை சீர்செய்வதற்கு நமக்குத் திறமையான அடிமைகள் வேண்டும். அவர்கள் நாம் சொல்வதை அப்படியே செயல்படுத்தும் விசுவாசிகளாக இருக்க வேண்டும். அதற்கு அவர்களை நாமே உருவாக்க வேண்டும். நாம் கைக்கொள்ள வேண்டியது கல்வி முறையில் மாற்றம். ஆங்கிலக் கல்வியை அறிமுகம் செய்துவைத்து அந்தக் கல்வி கற்றவர்களை நாமே வேலைக்கும் எடுத்துக்கொண்டால், அவர்கள் நமது விசுவாசியாக இருப்பார்கள்.வெள்ளைக்காரர்களிடம் வேலை பார்ப்பது என்பது கௌரவத்துக்குரிய ஒன்றாக நினைக்கக்கூடியவர்கள் இந்தியர்கள். அந்த பலவீனத்தை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே மெக்காலேயின் திட்டம்.

இன்னொரு பக்கம், மெக்காலேயின் அப்பா மேற்கொண்ட வணிக முயற்சிகள் தோல்வியடைந்து, குடும்பம் கடனில் முழ்கியது. ஆகவே, இந்தியாவுக்குப் போய்ப் பணியாற்றுவதன் மூலம், தனது சொந்தக் கடனை அடைத்துவிட்டு குடும்ப வசதியை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று முடிவு செய்தார் மெக்காலே. இந்தியர்களை இருட்டுக்குள் தள்ளிவிட்டு, அதன்வழிகிடைத்த ஆதாயத்தால் தனது சொந்தக் கடனைத் தீர்த்துக்கொண்டார் மெக்காலே. 12,000 பவுண்ட் ஊதியத்துக்காகத்தான் இந்தியக் கல்வி விலைபோனது.''இந்தியக் கலைகளும், அறிவியலும், இலக்கியமும் அர்த்தமற்றவை. அவற்றை மொத்தமாக ஒரு பக்கமும், ஆங்கில இலக்கியத்தில் பிரதானமான 100 புத்தகங்களை ஒரு பக்கமும் வைத்தால், இந்திய இலக்கியங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும். இந்தியாவில் உள்ள எந்த மொழியும் கல்வி கற்றுத்தருவதற்கு தகுதியானவை இல்லை. ஆங்கிலம் ஒன்றுக்குத்தான் கல்வி கற்றுத்தரும் முழுமையான தகுதி இருக்கிறது. இலக்கியப் பாரம்பரியம் இருக்கிறது. ஆகவே, இந்தியா முழுமைக்கும் ஆங்கிலக் கல்வியை உடனடியாக அளிக்க வேண்டியது அவசியம்'' என்று ஒரு குறிப்பு அனுப்பினார் மெக்காலே.

''நான் கிறிஸ்தவனாகப் பிறந்தபோதும் நடுநிலையான ஒருவராக செயல்படுகிறேன்'' என்று அறிவித்துக்கொண்ட மெக்காலே, தனது நடுநிலைமையின் சாட்சியாகச் செய்த காரியம் என்ன தெரியுமா? அதுவரை இயங்கி வந்த அரபு மற்றும் சமஸ்கிருதப் பள்ளிகளை மூடிவிடும்படி உத்தரவிட்டதுதான். கல்கத்தாவில் இயங்கி வந்த மதரஸாவுக்கும், சமஸ்கிருதக் கல்வி நிலையத்துக்கும் அளிக்கப்பட்ட மானியம் உடனே நிறுத்தப்பட்டது. அதுதான் அவரது பாஷையில் நடுநிலைமை!இந்திய மக்களின் மூடத்தனத்துக்கு, அவர்களின் மதமே முக்கியக் காரணம். ஆகவே, அதில் இருந்து விடுபடுவதற்கு கிறிஸ்தவ மதப் பிரசாரம் இன்றியமையாதது என்று வெளிப்படையாகச் சொன்னவர்தான் மெக்காலே. அவரது கருத்தை பிரிட்டிஷ் அரசும் ஆதரித்தது!''இந்திய மக்களில் மிகுந்த அறிவுத் திறமைகொண்டவர்கள் நிறைய இருக்கிறார்கள். வானவியல், அடிப்படை அறிவியல், கணிதம் போன்றவற்றில் இந்தியர்களுக்கு தனித்திறன் இருக்கிறது. அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால், அவர்களை நமது கல்விமுறைக்குள் கொண்டுவர வேண்டும். 

ஆங்கிலக் கல்வி இல்லாத இந்தியர்களின் அறிவு பலவீனமானதே. அதைத் திருத்தி அவர்களை ஆங்கிலம் கற்ற இந்தியர்களாக உருவாக்குவதே தனது வேலை'' என்று மெக்காலே தனது கல்வித் திட்டத்தை முன்மொழிந்தார்.1834ம் ஆண்டு ஜூலை 10-ம் நாள், அவர் பேசிய சொற்பொழிவு முக்கியமானது. ''அரசு அதிகாரத்தில் இந்தியர்களுக்குப் பங்கு வேண்டும் என்றால், அவர்கள் ஆங்கிலத்தை முதன்மை மொழியாகப் படித்தே ஆக வேண்டும். இந்தியா தன்னைத்தானே ஆண்டுகொள்ளும் திறமை அற்றது. அதை நிர்வாகம் செய்ய பிரிட்டிஷ் அரசு மட்டுமே தகுதியானது. நிர்வாகவியல், ராணுவம், அரசுத் துறை போன்றவற்றில் பணியாற்ற விரும்பும் இந்தியர்களை நாம் தயார்படுத்த வேண்டும்'' என்றார். இந்த ஆணவக் குரலுக்கான எதிர்ப்பு இந்தியப் பத்திரிக்கைகளில் உடனே வெளிப்பட்டது. மறு நிமிடமே, இந்தியப் பத்திரிகைகளை மெக்காலே வசைபாடினார்.உலக வரலாற்றிலேயே இந்தியாவில்தான் அதன் குற்றவியல் நடைமுறைச் சட்டம் எனப்படும் IPC-யையும், இந்தியக் கல்வி முறையையும் ஒரே நபர் உருவாக்கி இருக்கிறார். ஆம் நண்பர்களே... மெக்காலேதான் இந்தியாவில் தண்டனை முறையையும், கல்வி முறையும் உருவாக்கியவர். ஒருவேளை இரண்டும் ஒன்றுதான் என்று அன்றே முடிவு செய்து விட்டாரோ என்னவோ?எனவே, இந்தியக் கல்விக்கூடங்களை தண்டனைக் கூடமாக்கிய பெருமை மெக்காலேயைத்தான் சாரும். 1835 பிப்ரவரி 2-ம் தேதி அவர் தனது கல்விக் கொள்கையை சமர்ப்பித்தார். 'இனி, இந்தியர்களின் தாய்மொழியாக ஆங்கிலம் உருமாறிவிடும்’ என்று மெக்காலே அன்று பேசிய பேச்சு இன்று நடைமுறை யாகி விட்டது. இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தருவதற்காக இங்கிலாந்தில் இருந்து ஆசிரியர்கள் இறக்குமதி செய்யப்பட்டார்கள். இந்திய ஆங்கிலம் என்ற தனி வகையே அப்படித்தான் உருவானது.

ஆங்கிலத்தை உச்சரிப்பதில் இந்தியர்களுக்கு உள்ள பிரச்னையை வெள்ளைக்காரர்கள் கேலி செய்து சந்தோஷப்பட்டார்கள். ஆங்கிலப்புலமை கொண்ட உயர்தட்டு இந்தியர்கள், தாங்களும் இங்கிலாந்துவாசிகளுக்கு சமம் என்று லண்டனுக்கு படிக்கப் போனார்கள். ஐ.சி.எஸ். பட்டம் பெற்றார்கள். அதிகாரிகளாகப் பதவியேற்று, சொந்த மக்களையே துன்புறுத்தத் தொடங்கினார்கள். அவர்களின் ஒரே சொத்து ஆங்கிலம்தான். இந்தியச் சமூகம், தனது சொந்த மொழியைப் புறக்கணித்த வரலாறு அப்படித்தான் தொடங்கியது.மெக்காலே சொன்னது போல பண்டைய இந்தியாவில் கல்வி மோசமாக இருந்ததா? அறிவியலும் இலக்கியமும் முறையாகக் கற்பிக்கப்படவில்லையா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
Thanks ; Bhairavi ji


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 சுதந்திரத்திற்கு முன்னர் இந்தியக் கல்வியை பொறுத்தவரை குலக்கல்வியே மேலோங்கி இருந்தது. குறிப்பாக மனிதன் அவனுடைய நிறம் மற்றும் செய்யும் தொழிலை வைத்தே அவனுடைய கல்வி கற்கும் உரிமை நிர்ணயிக்கப்பட்டது. அதாவது வானவியல், கணிதவியல், சட்டம் முதலிய பிரிவுகளை உயர் பிரிவினரும் வரவு செலவு கணக்குகளை வாணிபத்தில் ஈடுபடும் பிரிவினரும், எண்ணறிவு, எழுத்தறிவு போன்றவை பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் எடுத்துக் கொள்ள தாழ்த்தப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு கல்வி முற்றிலுமாக மறுக்கப்பட்டது.

 

அதற்கு சாட்சியாக 1835 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 இல் இந்திய கல்வி முறை குறித்து மெக்காலே அவர்கள் பிரிட்டிஷ் பாரளுமன்றத்தில் அளித்த அறிக்கையில் : -

“இந்திய மாணவர்களுக்கு எந்த மொழியில் பாடங்கள் போதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் நம்மிடம் இருக்கையில், எந்த ஒரு பாடத்திலும் நமது ஆங்கில மொழியுடன் ஒப்பிடும் அருகதையுள்ள புத்தகங்கள் இல்லாத நிலையில் எதுவுமே இல்லாத மொழிகளில் நாம் பாடம் நடத்துவதா?” என அப்பட்டமாக தனது மொழி மேட்டிமைத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

காலனி ஆதிக்கத்தின் போது இந்தியாவின் தொழில் துறை பற்றி ஆய்வு செய்த “டேவிட் இளிங் ஸ்மித்” மற்றும் ‘வில்லியம்ஸன்’ என்னும் ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளார்கள் 1750 இல் இந்தியா பண்ட உற்பத்தியில் 25% பங்கு வகித்தது. ஆனால் காலனிய ஆட்சி நடந்த 1900 ஆம் ஆண்டு வெறும் 2 % ஆக குறைந்தது என்று நிறுவினார். அதேபோல் 1809 முதல் – 1813 வரை 30% ஆக இருந்த வேலை வாய்ப்பு 1900 இல் 8.5% ஆக குறைந்து போனது என்று தனது ஆய்வில் நிரூபித்திருக்கிறார்.
இத்தகைய அவலங்களுக்கு மத்தியில் 1911 இல் கோபால கிருஷ்ண கோகலே அவர்கள் பம்பாய் மாகாண சட்டசபையில் தொடக்க கல்விக்கான மசோதா ஒன்றை கொண்டுவந்தார். இந்த மசோதா பதினான்கு வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு கட்டாயக் கல்விக்கான மசோதா ஆகும் . இந்த மசோதாவை நிலப்புரபுக்களும், பண்ணையார்களும் மூர்க்கத்தனமாக எதிர்த்து நிறைவேறாமல் தடுத்தனர்.

இதற்கான காரணம் வினவியபோது பிள்ளைகள் எல்லோரும் பள்ளிக்கு சென்று விட்டால் மாடு மேய்ப்பதற்கும், வயல் வேலை செய்வதற்கும் ஆட்களுக்கு எங்கே போவது என்ற பதிலே கிடைத்தது. இந்த அவலங்கள் இன்று வரை தொடரவே செய்கிறது. அன்று வர்க்க பேதத்தாலும், சாதிய அடுக்குகளாலும் கல்வியிலிருந்து புறக்கணிக்கப்பட்டது சமூகம், 
இன்று பொருளாதாரத்தாலும், மதிப்பெண் கல்வி முறையாலும் இந்திய விளிம்பு நிலை மற்றும் சிறுபான்மை சமூகங்கள் கல்வி கற்பதிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வருகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

“சோவியத் யூனியன் – நேரு – இந்திய கம்யூனிஸ்டுகள் என்ற ஒரு காதல் முக்கோணத்தின் மூலம் இந்திய கம்யூனிஸ்டுகளையும் காங்கிரஸுக்குள் இருந்த எதிர்ப்பையும் தன்னால் நிர்வகிக்க முடியும் என்று நேரு நம்பினார். கொள்கை மோகம் மட்டுமல்ல, சுய-அகங்கார நோக்கங்களும் நேருவை ஸ்டாலினின் சோவியத் யூனியனுடன் மையல் கொள்ள வைத்திருந்தன.”

– பக், 215

“லெனினும் ஸ்டாலினும் மா சே துங்கும் போல் பாட்டும் காஸ்ட்ரோவும் விதிவிலக்குகள் அல்லர். அவர்களே மார்க்சிய அரசுகளின் நாயகர்கள். மார்க்ஸிய விதிகளைப் பயன்படுத்தி சர்வாதிகாரிகள் ஆனவர்கள் அல்லர் அவர்கள். மார்க்ஸிய விதிகளால் சர்வாதிகாரிகள் ஆனவர்கள். மானுட விடுதலையின் பெயரால் மானுட உயிர்களைத் துச்சமாக மதிக்கவும் அழித்தொழிக்கவும் அவர்களுக்கு மார்க்சியம் சித்தாந்தப் பயிற்சி அளித்தது. வேறு ஏதேதோ காரணங்களால் மானுட விடுதலைக்கான ஆயுதமாக அவர்கள் மார்க்ஸியத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அது, அதிகாரத்தை மனித இதயமின்றிப் பயன்படுத்தும் சித்தாந்த வலிமையை அவர்களுக்கு அளித்தது.”

– கம்யூனிஸம், பக். 144

‘போராட்டத்தில் வெறுப்பு ஒரு முக்கியமான அம்சம். எதிரியை எல்லா விதத்திலும் வளைந்து கொடுக்காத விதமாக வெறுக்க வேண்டும். அந்த வெறுப்பு ஒரு மனிதனை அவனது இயற்கையின் விளிம்புக்கே கொண்டு செல்ல வேண்டும். திறமையான, வன்முறை நிறைந்த, பச்சை ரத்தத்தில் தயக்கமின்றித் தேர்ந்தெடுத்துக் கொன்று குவிக்கும் இயந்திரமாக அவனை அந்த வெறுப்பு மாற்ற வேண்டும். இதையே நாம் நம் போர் வீரர்களிடம் எதிர்பார்க்கிறோம்..”

– பக். 268

 

“மாவோவின் ராஜ்ஜியம் முடிவடைந்த போது, மிகக் குறைவாக மதிப்பிட்டப் படும் கணக்குகளின் படி – அதாவது கட்சியின் சொந்தக் கணக்குகளின் படி, 2,50,000* முதல் 5,00,000 சீனர்கள் மாவோவுக்குப் பலி கொடுக்கப் பட்டிருந்தனர். சீன கம்யூனிஸ்ட் கட்சி 1966-69ல் நான்கு லட்சம் மக்கள் இறந்ததாக ஒப்புக் கொள்கிறது. டெங் ஜியோபிங் சொல்லும் கணக்கின் படி கட்சி நடத்திய கும்பல் வன்முறைகளில் 10 லட்சம் சீனர்கள் இறந்தனர். 1966ன் இலையுதிர் காலத்திலும் வசந்த காலத்திலும் மட்டும் கட்சி உறுப்பினர்களில் மார்க்சியக் கொள்கைக்கு எதிரானவர்கள் எனக் கண்டுபிடிக்கப் பட்டுக் களை எடுக்கப் பட்டவர்கள் 4 லட்சம் என்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த மார்ஷல் சென் யீ.”

– பக், 156 (* – புத்தகத்தில் 2,50,0000 என்று ஒரு 0 கூடுதலாக அச்சாகியிருக்கிறது)

 

ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ தமிழில் கம்யூனிசத்தின் கோர முகத்தை வெளிப்படுத்திய அமரத்துவம் வாய்ந்த இலக்கியப் படைப்பு. ஆனாலும், அது ஒரு புனைவு என்பதால் புனைவிற்கே உரிய அதன் நெருக்கம், அதே சமயம் அதன் எல்லைகள் இரண்டையும் அதைப் படிக்கும் வாசகர்கள் கருத்தில் கொள்ளக் கூடும். தமிழில் புறவயமாக கம்யூனிசத்தை ஆதார பூர்வமாக விமர்சிக்கும் ஒரு நல்ல சமகால அபுனைவு நூல் இல்லாதிருந்தது. அந்த வகையில் அரவிந்தன் நீலகண்டனின் இந்தப் புத்தகம் தமிழுக்கு ஒரு கொடை.

இந்த நூல் மார்க்ஸியத்தின் மீது கடுமையான விமர்சனத்தை வைக்கிறது.
பொன்னுலக கனவு, சமத்துவம் இத்யாதி இந்த சிந்தனைகள் மார்க்ஸுக்கு
முன்னரும் பலகாலமாக மேற்கில் இருந்தன. ஆனால் மார்க்ஸ் அந்த சோஷலிச
பார்வைகளிலிருந்து எப்படி மாறுபட்டார்? அவர் முன்வைத்த
வரலாற்றுப்பார்வையில் ஆதாரமாக இருந்த தவறுகள் என்ன என்பதை வைத்தே இந்நூல்
அந்த ஆதார பிழைகளின் நீட்சியாக கம்யூனிசம் நடத்திய மானுடத்துக்கு எதிரான
பெருங்குற்றங்களை காண்கிறது. இந்நூலின் மைய அச்சு கவனிக்காமலே போகக்
கூடும். ஏனெனில் அதிக சுவாரசியம் இல்லாத ஒரு பாராவுக்குள் அல்லது சில
பக்கங்களுக்குள் அது உள்ளது. அந்த மைய அச்சைப் பிடித்தால் அதன் ஊடாக
மார்க்ஸியம் புரிந்த படுகொலைகளையும் இன ஒழிப்புகளையும் புரிந்து கொள்ள
முடியும். நாசிகள் செய்த படுகொலைகளில் -ஹிட்லர் திட்டமிட்டு செய்த அந்த
அசாத்திய திறமையுடனான வதை முகாம்களில் கூட ஹிட்லரின் பைத்தியக்காரத்தனம்,
அவனது விளக்கமுடியாத உன்மத்தம் இருந்தது. ஆனால் லெனினோ ஸ்டாலினோ மாவோவோ
செய்த அதே திறமையுடனான படுகொலைகளில் அந்த உன்மத்தத்தை காணுவது கடினம்.
அதன் பின்னால் இருந்த தெளிவான சித்தாந்த சமன்பாடுகள் மார்க்ஸிலிருந்தே
பெறமுடிந்தவை. உலக வரலாற்றில் முதன் முதலாக ஒரு இனஒழிப்பை எவ்வித
உணர்ச்சி எழுப்பலும் இல்லாமல் அதற்கான ‘நியாயமான’ காரணங்களுடன் வரலாறு
சார்ந்து பேசிய பெருமை மார்க்ஸியத்தின் ஆதி பிதாமகர்களுக்கு உண்டு. அதை
இந்த நூல் சொல்கிறது.

இந்த நூல் பிரச்சார நூலா அல்லது மார்க்சியத்தை விமர்சனம் செய்யும் நூலா
அல்லது மார்க்சிய எதிர்ப்பு நூலா என்பது வாசகர்களின் மனநிலையைப்
பொறுத்தது. என்னைப் பொறுத்தவரையில் நாம் மார்க்சியத்தை நிராகரிப்பவன்.
ஆனால் என்னால் இயன்றவரை நடுநிலைமை சார்ந்த நிராகரிப்புடனேயே
மார்க்ஸியத்தை இந்நூலில் அணுகியுள்ளேன். உதாரணமாக அடிமை முறை குறித்த
மார்க்ஸின் பார்வையை இப்படி இந்நூல் முன்வைக்கிறது:
—–
“அமெரிக்காவில் அடிமைமுறை ஒழிக்கப்படவேண்டும் என்பதில் மார்க்ஸ் தீவிரமாக
இருந்தார். ஆனால் அடிமைமுறை என்பது வரலாற்றில் ஓர் அத்தியாவசியமான நிலை
என்பதில் அவருக்கு மாற்றுக்கருத்து இருக்கவில்லை. 1847 இல் மார்க்ஸ்
எழுதினார்: “நேரடியான அடிமைமுறை என்பது ஆலை உற்பத்திக்கு இயந்திரங்கள்
போலவே முக்கியமானது. அடிமைமுறை இல்லாமல் உங்களுக்கு பருத்தி கிடையாது.
பருத்தி இல்லாமல் நவீன தொழிற்சாலைகள் இல்லை. அடிமை முறையே காலனிகளுக்கு
அதன் மதிப்பை அளிக்கிறது. காலனிகளே உலக வர்த்தகத்தை உருவாக்கியுள்ளன.
உலகவர்த்தகமே பெரும் தொழிற்சாலைகளை உருவாக்கியுள்ளன. எனவே அடிமைமுறை
என்பது மிகவும் முக்கியத்துவம் கொன்ட ஒரு பொருளாதார வகைப்பாடு ஆகும். உலக
நாடுகளிலேயே முற்போக்கான நாடான வடஅமெரிக்கா அடிமைமுறை இல்லையென்றால்
பிற்போக்குத்தனத்தில் மூழ்கிவிடும். அமெரிக்கா இல்லையென்றால் நவீன
வர்த்தகமும் பண்பாடும் இல்லாமல் போய்விடும். அடிமை முறை இல்லையென்றால்
அமெரிக்காவே இல்லாமல் போய்விடும்.” கார்ல்மார்க்ஸ் அடிமைமுறையை
ஆதரிக்கவில்லை என்பதை இங்கு மீண்டும் குறிப்பிட்டாகவேண்டும். ஆனால்
கருப்பின அடிமைமுறையை ஒரு பொருளாதார வகைப்பாடாக மட்டுமே காணும் மார்க்ஸிய
முறையில் ஒரு மனிதத்தன்மையின்மை இருக்கிறது. பிற மனிதர்களை மதிப்பிழக்கச்
செய்யும் முறை இருக்கிறது. மார்க்ஸிய மொழியாடலில் இது ஐரோப்பியப் பண்பாடு
சாராத பிறசமுதாயங்களை முழுக்க மனிதத்தன்மை இல்லாமல் ஆக்கும் விதத்தில்
பயன்படுத்தப்படுகிறது. பின்னாட்களில் மார்க்ஸியத்தை ஏற்காத சுதேசியப்
பண்பாடுகளை இதேபோல மனிதத்தன்மையற்ற விதத்தில் முத்திரை குத்த இது
முன்னோடியாக உள்ளது.”
——-

ஆம் மார்க்ஸிய எதிர்ப்பாளர்களுக்கு இந்நூல் நிச்சயமாக மார்க்ஸிய
எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு பயன்படும். ஆனால் அதைவிட முக்கியமாக இந்நூல்
மார்க்ஸியத்தின் ஆதார மனிதத்தன்மையற்ற சில முக்கிய புள்ளிகளையும்
அப்புள்ளிகளில் தொடங்கி மானுட பேரழிவாக அலைவீசிய ஒரு பேரிடர் நிகழ்வையும்
இணைத்து பேசுகிறது. இந்துத்துவமோ அல்லது ஏன் இந்திய அரசின் மிக மோசமான
தவறுகளோ கூட மார்க்ஸியம் நிகழ்த்திய மானுட சோகத்துடன் ஒப்பிட்டால்
எவ்விதத்திலும் அது அத்தனை பெரியதாக அமைந்ததே கிடையாது. இந்நூலை பிரச்சார
நூலாக ஒதுக்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது. ஏனெனில் அதுதான் மிகவும்
வசதியான எளிமையான நிராகரிப்பு.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Jayarama on October 16, 2012 at 8:03 pm

மு,ஜெயராம்
பொதுவாக நான் எழுத்தாளர்களை மதிப்பவன் காரணம் அவர்கள் எப்பொழுதுமே உலகம் சார்ந்த விசயங்களை தெரிந்து வைத்திருப்பவர்கள்,
ஆனால் இந்த விமர்சனத்தை எழுதியவரை அப்படி சொல்வதற்கு மனம் சற்று தயங்குகிறது, காரணம் ஒரு புத்தகத்தை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் இந்த பூமியில் 5ல் ஒரு பங்கு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தத்துவத்தை கொச்சைப்படுத்த துணிந்திருக்கிறார்,
அதுவும் கூட பரவாயில்லை இன்றைக்கு இந்திய நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் போடும்போது ஒவ்வொரு ஐந்து ஆண்டுத்திட்டம் முன்வைக்கப்படுகிறது, அந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது, (இல்லை) அதில் நீங்கள் சொல்லக்கூடிய நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ள ஆட்சியாளர்கள் அதில் எத்தனை கோடி ஆட்டையைப் போடுகிறார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் இந்த ஐந்து ஆண்டுத் திட்டங்களை உலகில் எந்த நாடு எந்த நாட்டின் தலைவர் அறிமுகம் செய்தார் எந்த கொள்கை அதனை அறிமுகம் செய்ய வைத்தது அதனால் எந்த நாடு மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக இருந்த அமெரிக்காகை மிரள வைத்தது என்பதையும் தாங்கள் இங்கே பதிவு செய்து வைததிருந்தால் நன்றாக இருந்திருக்கும் பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள் உங்களை பிடித்து ஆட்டிக்கொண்டீருக்கும் பேய் (இந்து தர்மம். இனவாதம். சாதியம். மதவாதம் எல்லாம் .) உங்களை அப்படி செய்யவிடவில்லை, உங்களுக்கு பிடிக்க வில்லை என்பதற்காக ஏன் இப்படி கொள்கையை கொச்சைப்படுத்து கீறிர்கள்,
அதுபோகட்டும் இன்றைக்கும் உலகில் எந்த நாட்டில் அதிகமான மருத்துவர்க்ள் உருவாக்கப்படுகிறார்கள், உலகம் இயற்கை சீற்றாத்தால் பாதிக்கப்படும் போது எந்த நாட்டின் மருத்துவக்குழு முதல் ஓடிச்சென்று அவர்களை பாதுகாக்கிறது, என்பதையும் தெரிந்து கொண்டு தாங்கள் இதனை எழுதியிரூந்தால் நன்றாக இருக்கும், சரி அதுவும் கூட பரவாயில்லை நம் தமிழ்நாட்டில் இருக்கும் பெல். மின்சார உற்பத்தி மையங்களை இந்தியாவில் வந்து அமைத்துக்கொடுத்தவர்கள் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்த் அமைத்துக்கொடுத்தவர்கள் அங்கிருந்த எடுக்கப்பட்ட நிலக்கரியை சோதனை செய்து இதன் முலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என ஒரு நாடு சொன்ன போது (உலகில் உள்ள நீங்கள் சொல்லக்கூடிய கொள்கையை கடைபிடிக்கும் நாடுகள் எல்லாம் இந்த நிலக்கரியால் எந்த பயனும் இல்லை என சொன்னது) எந்த நாட்டைச் சார்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொண்டு பேசுங்கள் இப்படி மனித இனத்திற்காக என்னென்றைக்கும் அயராது சிந்திக்க்கூடிய ஒரு கொள்கை என்றென்றைக்கும் பசுமையான கொள்கை உங்களைப்போன்ற லுச்சா பசங்களால் ஒன்றும் செய்ய இயலாது அதனை மக்களிடம் கொண்டு சென்று வார்த்து வளர்த்தெடுக்க எங்களைப்போன்ற பல கோடிக்கணக்கான இளைஞர்கள் நாங்கள் களத்தில் நிற்கின்றோம், எனவே தாங்கள் தங்களுடை அதிமேதாவித்தனத்தைக்கொண்டு இந்த கொள்கையை ஒன்றும் செய்ய முடியாது என்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஸ்ரீ ஜடாயு அவர்களின் பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம் – புத்தக விமர்சனம் எப்போதும் போல இப்போதும் அருமை.
கம்யூனிசம் மிக அபாயகரமானது. அது ஒரு போலி அறிவியல். அறிவியல் போல அது தெரிவது வெறும் கானல் நீர் போலத்தான். அதன் வழிமுறையில் நியாயப்படுத்தப்படும் வன்முறையும், மையப்படுத்துப்பட்ட அரசியல் பொருளாதார அமைப்பும் அதை கம்யூனிஸ்டுகளே அடிக்கடி நிராகரிக்கும் பாசிசத்தைவிட நாஜியிசத்தைவிட கொடுங்கோன்மையான கொலைகாரத்தனமான அரசியல் சித்தாந்தமாக நடைமுறையில் திகழச்செய்கின்றன. கம்யூனிசத்தில் கருணைக்கோ, மனிதனேயத்திற்கோ எள்ளளவும் இடமில்லை என்பதை கம்யூனிஸ்டுகளே அறிவார்கள்.
இந்த கம்யூனிசத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு நல்ல நூலை எழுதியிருக்கும் ஸ்ரீ அ.நீ அவர்கள் முயற்சி பாராட்டுக்குறியது. இந்தனூலை விரைவில் வாங்கிப்படிக்க விளைகின்றேன். ஆங்கிலத்திலும் இந்த நூலை வெளியிடவேண்டும் முடிந்தால் ஹிந்தி மொழிபெயர்ப்பையும் வெளியிட்டு பாரத தேசம் முழுதும் இந்த உண்மைகள் அனைவரையும் சென்னறடைய வகைசெய்ய வேண்டுகிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்

 

 

 

விலை: 180

Dial for books: 94459 01234 | 9445 97 97 97

அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்’ (ஒரே பொருளுக்கு நான்கு வார்த்தைகள்!) புத்தகம் கிழக்கு வெளியீடாக வெளிவந்துள்ளது. நேற்று முதல் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்குக் கிடைக்கிறது. நான் எதிர்பார்த்தது போலவே நிறைய பேர் விருப்பத்துடன் வாங்குகிறார்கள். வாங்க யோசிப்பவர்களை, பின்னட்டையில் என்ன எழுதியிருக்கிறது என்பதைப் படிக்கச் சொன்னால், படித்துவிட்டு உடனே வாங்கிவிடுகிறார்கள்.

புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து:

 

கம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம் படுகொலை பேரழிவு. கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பலகோடி. கம்யூனிஸ்ட்டுகள் உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறது இந்நூல்.

லெனின், ஸ்டாலின், மாஓ என்று தொடர்ச்சியாக கம்யூனிஸத் தலைவர்கள் எல்லோருமே எப்படி ரத்தம் தோந்த வரலாற்றை எழுதினார்கள்? எப்படி சக தோழர்களையே வேட்டையாடினார்கள்? புக்காரினுடம் டிராட்ஸ்கியும் என்ன ஆனார்கள்? சே குவேரா உண்மையிலேயே இளைஞர்களின் ரோல் மாடல்தானா? ஸ்டாலின், லெனினை எப்படி எதிர்கொண்டார்? ரஷ்யா உண்மையிலேயே கனவு பூமிதானா? வதைமுகாம்கள், கூட்டுப்படுகொலைகள் என்பதெல்லாம் ஹிட்லர் காலத்துக்கு முன்பே ரஷ்யாவில் உண்டா? வரலாற்றின் மிக முக்கியமான இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.

கம்யூனிஸம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? நேருவின் கம்யூனிஸப் பாசம் இந்தியாவுக்குத் தந்த பரிசு என்ன? தாஷ்கண்ட்டில் லால் பகதூர் சாஸ்திரிக்கு என்ன ஆனது? கம்யூனிஸ்ட்டுகள் கட்சிகள் இந்தியாவில் ஆடிய ஆட்டங்கள் என்ன? இவற்றையும் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

வெறும் வாய்ப்பந்தல் போடாமல், சிவப்பு பயங்கரத்தைப் பற்றிய ஒவ்வொரு குறிப்பையும் அதற்கான ஆதாரத்துடன் எழுதியுள்ளார் அரவிந்தன் நீலகண்டன். தமிழ்ப்புத்தக வரலாற்றில் மிக முக்கியமான நூலாக இது அமையும்.

 

பொதுவாகவே கம்யூனிஸம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள், கம்யூனிஸம் என்றால் முற்போக்கு என்று நினைத்துக்கொண்டு அதனால் அங்கு சென்று சேர்ந்தவர்கள் அல்லது தன்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வது பெருமை தருவது என்று நினைத்துக்கொள்பவர்கள் – இவர்கள் யாருக்குமே கம்யூனிஸத்துக்கு ரத்தம் எவ்வளவு பிடிக்கும் என்பது அவ்வளவாகத் தெரியாது. ஏதோ மீடியா குழந்தைகளாக கம்யூனிஸ்ட்டுகள் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.

கம்யூனிஸத்தின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை, கூட்டுப்படுகொலைகளை, வதைமுகாம்களைப் பற்றியெல்லாம் பொதுப்புத்தி கம்யூனிஸ்ட்டுகள் கேள்விப்பட்டுக்கூட இருக்கமாட்டார்கள். கம்யூனிஸ்ட்டுகள் என்றாலே நேர்மையாளர்கள் என்ற எண்ணமும் இங்கே உள்ளது. ஆனால் உலகளாவில் எப்படி கம்யூனிஸ்ட்டுகள் சந்தர்ப்பவாதிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் இந்த மீடியா குழந்தைகள் அறிந்திருக்கப்போவதில்லை.

அரவிந்தன் நீலகண்டனின் பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் புத்தகம் இது அத்தனையைப் பற்றியும் தெளிவாக, விரிவாக, ஆதாரத்துடன் பேசுகிறது.

இந்தப் புத்தகத்தைப் படிக்கப் போகும் மென்மையான இதயம் படைத்த அத்தனை பேரும் அதிரப் போவது நிச்சயம். எங்கெல்லாம் கம்யூனிஸம் அங்கெல்லாம் வரிசையாக பஞ்சமும் படுகொலையும் பேரழிவும் வந்துகொண்டே இருக்கின்றன. படுகொலை என்றால் கூட்டுப்படுகொலைகள். விவசாயிகளை ரக ரகமாகக் கொன்று குவித்திருக்கிறார்கள் நம் உலகத் தோழர்கள்.

லெனின் ஸ்டாலினுக்கு இடையே நடக்கும் போட்டி, ஸ்டாலினைப் பார்த்து லெனினே அதிர்ந்து போவது, ஏன் லெனின் புதைக்கப்படவில்லை என்றெல்லாம் புத்தகம் பட்டையைக் கிளப்புகிறது. இந்தப் புத்தகத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்று எழுதினாலே அதுவே இன்னும் 4 பக்கத்துக்கு வரும். மேலும் நான் ஒருமுறை மட்டுமே வாசித்திருக்கிறேன். இன்னொரு முறை நிதானமாக வாசிக்கவேண்டும். அத்தனை முக்கியமான புத்தகம்.

கம்யூனிஸ்ட்டுகள் போல காந்தியை விதவிதமாக விமர்சித்தவர்கள் யாருமில்லை. தன் பேத்தியோடு படுத்து தனது பிரம்மச்சரியத்தைப் பரீட்சித்த காந்தி பற்றிப் பேசவேண்டுமானால் கம்யூனிஸ்ட்டுகள் துள்ளிக்குதித்து ஓடிவருவார்கள். ஆனால் மாஓவின் பெண் தொடர்பு, அதன் ஆராய்ச்சி பற்றியெல்லாம் பேசமாட்டார்கள். மாஓ புனிதரன்றோ. காந்தி கெடக்கான் கெழவன்.

இந்தப் புத்தகத்தைப் படித்ததும் உலக கம்யூனிஸ்ட்டுகள் மீது வெறும் இளக்காரம் மட்டுமே எனக்கு மிஞ்சுகிறது. எப்படி உலக கம்யூனிஸ்ட்டுகள் ஸ்டாலினையும் மாஓவையும் தலைவர்களாக முன்வைக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை எத்தனை கொலைகள்! எதுவுமே அக்கறையில்லை! எல்லாம் சிவப்பு மயம்.

இந்திய கம்யூனிஸ்ட்டு நேர்மையாளர்கள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் ஒரு நீண்ட அத்தியாயம் உண்டு. நேருவைப் பற்றி இந்தப் புத்தகம் தரும் சித்திரம் அட்டகாசமானது. அதேபோல தாஷ்கண்ட்டில் லால் பகதூர் சாஸ்திரி மரணம் அடையும் அத்தியாயம் ஒரு நாவலைப் போன்றது. சே குவேராவைப் பற்றிய அத்தியாயம் – நல்ல நகைச்சுவை! மாஓவின் அத்தியாயமோ கிளுகிளு. பௌத்த மடலாயங்களுக்கு, சீன கலாசாரத்துக்கு நேர்ந்ததைச் சொல்லும் அத்தியாயமோ அதிர்ச்சி. எல்லாவற்றிலும் வன்முறை. கம்யூனிஸ்ட்டுகள் எதிலுமே குறைவைப்பதில்லை.

உலகளவில் கம்யூனிஸம் ஏற்படுத்திய பஞ்சத்தால் மக்கள் வேறு வழியின்றி நரமாமிசம் உண்டது பற்றிய தகவல்களைத் தரும் அத்தியாயம் உங்களை உலுக்கக்கூடியது. ஜெயமோகனின் நாவல்களைப் படித்தும், சில உலகத் திரைப்படங்களைப் பார்த்து மட்டுமே நான் இதுவரை பதறியிருக்கிறேன். அதற்கு நிகரான பதற்றத்தைத் தந்தன, இந்தப் புத்தகத்தின் சில அத்தியாயங்கள்.

96களில்ஜெயமோகன் எழுதியதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அளவிற்கு, நான் இன்னொருமுறை இன்னொரு எழுத்தாளரைப் பார்த்து ஆச்சரியப்படுவேன் என நினைக்கவில்லை. அது நிகழ்ந்தது அரவிந்தனின் நீலகண்டனின் எழுத்துக்களைப் பார்த்துதான். இந்நூலின் மூலம் அரவிந்தன் நீலகண்டன் முக முக்கியமான எழுத்தாளராக நிலைபெறுவார்.

பல இளைஞர்கள் கம்யூனிஸம் என்றாலே என்னவென்று தெரியாமல் அதன் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள். ஒரு ப்ளஸ் டூ படிக்கும் பையன் இந்த நூலைப் படித்தால், அவன் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸம் பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டான். கம்யூனிஸத்தின் மீது எதிர்க்கருத்துக் கொண்டிருப்பவர்கள் செய்யவேண்டிய ஒன்று, இந்த நூலை இளைஞர்களுக்கு வாங்கிக் கொடுப்பது. இப்படி ஒரு நூல் இதுவரை தமிழில் இல்லாததுதான் பெரிய குறையாக இருந்தது. அந்தக் குறையும் தீர்ந்தது. இனிமேல் நடக்கவேண்டியது, இந்தப் புத்தகத்தை தமிழர்களுக்குப் பிரபலப்படுத்தவேண்டியது மட்டுமே. இதனை மிக முக்கியமான கடமையாக நினைத்துச் செய்யவேண்டும். (கிழக்கு வெளியிட்ட புத்தகம் என்பதற்காக இப்படிச் சொல்கிறேன் என நினைப்பவர்களுக்குத் தடையில்லை!)

கம்யூனிஸ்ட்டுகள் இந்தப் புத்தகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறது. நிச்சயம் திககாரர்கள் போல, அரவிந்தன் நீலகண்டனின் இன்னொரு புத்தகமான உடையும் இந்தியா புத்தகத்தை உடைக்கிறேன் என்று சொல்லி, தன் அறியாமையை வெளிப்படுத்திக்கொண்டு நிற்கமாட்டார்கள் என்பது உறுதி. வேறு எப்படி எதிர்கொள்வார்கள் என்று தெரியவில்லை. வினவு-ல் ஒரு கட்டுரை வரலாம். அவர்கள் மட்டுமே இதனை எதிர்கொள்வார்கள் என நினைக்கிறேன். மற்றபடி கம்யூனிஸ்ட்டுகள் ‘பின் தொடரும் நிழலின் குரலை’ கைவிட்டது போலவே இதையும் கைவிட்டுவிடுவார்கள். வேறென்ன செய்யமுடியும்? வாய்ப்பந்தல் போட்டு கட்சி மேடைகளில் பேசும் விடலைகளுக்கு எதிராக அறிவுப்பூர்வமாகப் பேச கம்யூனிஸ்ட்டுகளால் முடியும். ஆனால் மிக அறிவுப்பூர்வமாக எழுதப்பட்ட, ஆதாரத்தோடு எழுதப்பட்ட புத்தகத்தை எப்படி எதிர்கொள்ளமுடியும்? மௌனத்தால்தான்!

எனவே நண்பர்களே, ‘பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்’ புத்தகத்தை நிச்சயம் வாங்குங்கள். உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் பரிந்துரை செய்யுங்கள். உங்கள் நண்பர் தோழரென்றால் அவர் நிச்சயம் வாசிக்கவேண்டியது இந்தப் புத்தகம் மட்டுமே! உங்கள் நண்பர் அல்லது அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பரிந்துரை செய்யுங்கள். முடியுமென்றால் நீங்களே வாங்கி அன்பளிப்பாக அளியுங்கள். மற்றவை தன்னால் நடக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

உடையும் இந்தியா? – புத்தகத்திலிருந்து ஒரு பகுதி

குறிப்பு : கிழக்கு பதிப்பகத்தின் சமீபத்திய வெளியீடான ‘உடையும் இந்தியா?’ என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி இங்கே அளிக்கப்படுகிறது.

இந்தியாவைக் குறி வைக்கும் மூன்று பண்பாடுகள்

இந்த நூல், இந்தியாவின்மீதான மேற்கத்தியத் தலையீடுகளையும் அதற்கு திராவிட-தலித் பிரிவினைவாதங்கள் பயன்படுத்தப்படும் விதத்தையும் குறித்தது. ஆனால் இந்தத் திராவிட-தலித் அடையாள அரசியலை சர்வதேசச் சக்திகள் இந்தியாவில் தலையீட்டுக்காகப் பயன்படுத்துவது ஒரு பெரிய பிரச்னையின் ஒரு பரிமாணம் மட்டுமே.

இன்று மூன்று சக்திகள் வெளிப்படையாகவே உலக மேலாதிக்கத்துக்காக மோதுகின்றன. மேற்கு (குறிப்பாக அமெரிக்கா), சீனா மற்றும் இஸ்லாம். இவை ஒவ்வொன்றுக்கும் ஓர் உலகப்பார்வை உள்ளது. அதை அவை உலகின்மீதான தம் விரிவாதிக்கத்துக்கான கருவியாகப் பயன்படுத்துகின்றன. இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. மேற்கிடம் அறிவு, தொழில்நுட்பம், மூலதனம், ராணுவ பலம் ஆகியவை உள்ளன. சீனா இந்த விஷயங்களில் மேற்கோடு போட்டியிட்டு வெல்லும் பாதையில் முன்னேறுகிறது. இஸ்லாம் இந்த விஷயங்களில் இந்த இரு சக்திகளுடன் பின்தங்கியிருந்தாலும் மக்களை உத்வேகத்துடன் ஓரணியில் திரட்டிப் போராட வைப்பதில் பெரும் வெற்றி கண்டுள்ளது. அது உலகை ஒரு நாள் தாருல் இஸ்லாமாக ஆக்க இலக்கு கொண்டுள்ளது.

அமெரிக்காவும் மேற்கும் இஸ்லாமுடன் போரிலும், சீனாவுடன் போட்டியிலும் இறங்கியுள்ளன. ஒன்று வெளிப்படையான ராணுவ மோதல். மற்றதில் அது வெளிப்படையாக இல்லை. ஆனால் நிலைமைகள் மாறலாம். சீனா மேலும் மேலும் பலம் பொருந்தியதாக மாற, இஸ்லாமுடனும் மேற்குடனும் மோதவேண்டி வரலாம். அல்லது அணிகள் அமையலாம். சீன-இஸ்லாமியச் சித்தாந்த மோதல்களும் ஏற்படலாம்.

உலக வாழ்வாதாரங்கள்மீதான போட்டிகள் அதிகரிக்க அதிகரிக்க, உலகம் தன் வாழ்க்கையை மேற்கத்திய வளர்ச்சி மாதிரிக்கு ஏற்ப மேலும் மேலும் மாற்றிவர, இந்த பண்பாட்டு மோதல்கள் மேலும் மேலும் உக்கிரமடையும். தேசியமோ, மதமோ, பண்பாடோ, சித்தாந்தமோ எதுவானாலும், கூட்டு அடையாளங்கள் அதிக முக்கியத்துவம் அடையக்கூடும்.

இந்தியர்கள், கண்களை மூடிக்கொண்டால் இந்தப் பிரச்னைகள் மறைந்துவிடும் என்று நம்புகிறார்கள். உலகம் ஒரு கிராமமாக மாறிவருகிறது என்றும் அதில் அடையாளங்கள் பொருள் இழந்துவிட்டன என்றும் நினைக்கிறார்கள்.ஆனால் உண்மையில் இது மட்டுமல்ல, மற்றோர் இயக்கமும் உள்ளது. இந்த இரண்டையும் காணலாம்.

1. பன்னாட்டு பிராண்ட்களும் எளிதாகப் பயணிக்கும் மூலதனமும் தொழிலாளர்களும் சேர்ந்து பின்நவீனத்துவ நுகரிய உலகைப் படைத்துள்ளன. இதனால், உலகின் பல்வேறு பகுதிளும் ஒன்றை ஒன்று பரஸ்பரம் சார்ந்துள்ளன.

2. உலக அளவிலான குழு அடையாளங்கள், தனித்துவ அடையாளங்களுக்கு மேலாக எழுகின்றன. வள ஆதாரங்கள் கடுமையாகக் குறைந்துகொண்டிருக்கும் உலகில் அவை ஒன்றோடு ஒன்று கடுமையாகப் போட்டியிருகின்றன .

மதச்சார்பற்ற நவீன இந்தியர்கள் பலரும் உலகம் முதலாவது வழியில் செல்வதாகவே கருதுகிறார்கள். இரண்டாவது வழி, வெறும் பரபரப்பூட்டும் தீவிரவாதச் சிந்தனை என்றே எண்ணுகிறார்கள். ஆனால் இந்த நூல் காட்டுவதோ, முதலாம் வழி என்பது வெறும் மேல்பூச்சு மட்டுமே; அதன் கீழே அடித்தளத்தில் நிகழும் நிகழ்வுகள் இரண்டாவது வழியின் தன்மையையே கொண்டிருக்கின்றன என்பதே. அதனைப் புறக்கணிப்பது ஒரு தேசமாக, நாளை நமது நலனையே குழிபறிப்பதற்கு ஒப்பாகும்.

இந்த நூல் மேற்கத்தியத் தலையீடுகளையே மையமாகக் கொண்டு ஆராய்ந்துள்ளது என்றாலும் இந்த மூன்று பண்பாட்டுச் சக்திகளும் மேலாதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ளன என்பதை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டே ஆகவேண்டும்.

சீனா

சென்ற அத்தியாயத்தில் கூறியதுபோல சீனாவுக்கு, நேபாளத்தைத் தன் கட்டில் வைத்து ஹிமாலய நீர்வளங்களை, கங்கைக்கு இப்போது நீர் அளிக்கும் பெரும்பனிப் பாளங்களிலிருந்து வரும் நீரைத் தனக்குத் திருப்பிவிடும் நோக்கம் தீவிரமாக உள்ளது. இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தைக் கபளீகரம் செய்தால் பிரம்மபுத்திராவையும் சீனாவுக்குத் திருப்பிவிட முடியும். மற்றொரு முக்கிய
சிந்து நதி எற்கெனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மூலமாகப் பாய்கிறது. இவற்றின் விளைவுகள் இந்தியாவுக்கு மிகக் கொடுமையாக இருக்கும்.

an1.jpg

சீனா தனது உலகாதிக்கத் திட்டத்தில் இந்தியாவை ஓர் இடைஞ்சலாக, அபாயமாக, போட்டியாளராகப் பார்க்கிறது. ஏற்கெனவே சீனா, தன்னை ஒரு பொருளாதாரச் சக்தியாக, உலக சக்தியாக அமெரிக்கா உட்பட்ட மேற்கத்திய நாடுகளை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டது. சீனாவை நேரடியாக எதிர்க்க அமெரிக்கா தயங்குகிறது என்பது வெளிப்படை. இந்தத் தயக்கம் இன்னும் அதிகமாகவே செய்யும். மாறாக இந்தியா ஒருபெரும் தேசமாக, சீனாவின் பல வாய்ப்புகளை மேற்குக்குத் தானும் அளிக்கிறது. இதுவே சீனாவுக்கு ஒரு போட்டியாக இருக்கிறது. பண்டைய காலம்முதல் சீனாவுக்கு இந்திய மனம் குறித்த ஒரு பிரமிப்பு உண்டு. இன்று அந்த பிரமிப்பு, பொறாமை கலந்த போட்டியாக மாறி, வெறுப்பாக வடிவம் கொண்டுள்ளது.

இந்தியாவின் இருபுறங்களிலும் சீனாவுக்கு நெருக்கமான நட்புநாடுகள் உருவாக்கப்பட்டுவிட்டன. மியான்மார் இன்றைக்கு சீனாவின் துணைக்கோளாக இயங்குகிறது. இந்திய வெளியுறவுக் கொள்கையாளர்களோ தங்கள் முனைப்பின்மை காரணமாகவும் அமெரிக்கப் பார்வை மூலமாக மியான்மாரைப் பார்ப்பதாலும் அந்த நாட்டை இந்தியாவிலிருந்து தனிமைப்படுத்தியுள்ளனர். சீனாவோ மியான்மாரின் உள்கட்டுமானப் பணிகளுக்குப் பெரும் பங்களிப்பை அளித்துள்ளது. வங்காள விரிகுடாவிலும் தன் வலையை சீனா பரப்ப ஆரம்பித்துள்ளது. மியான்மார் வழியாக சீனா, வங்காள விரிகுடாவையும் சீன உள் பிரதேசத்தையும் இணைக்கிறது. இதன்மூலம் மலாக்கா வழியாக சீனா ஈடுபடவேண்டிய கடல் செலவில் இரண்டாயிரம் கிலோமீட்டர்கள் குறைக்கப்படும். இந்தியப் பெருங்கடலிலும் சீனாவுக்கு ஒரு வலிமையான பிடி கிடைக்கும்.

சீனா பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ஒரு ராணுவ தளத்தை அமைத்துள்ளது. சாலை, ரயில் பாதைகள், எண்ணெய்க் குழாய்கள் ஆகியவற்றை திபெத் மூலமாக சீனாவுக்குள் கொண்டுசெல்கிறது. இந்த சீன-பாகிஸ்தான் இணைவு, மிகவும் மோசமான பின்விளைவுகளைக் கொண்டதாகும். குறிப்பாக, இந்தியாவின்மீது பாகிஸ்தானுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியைக் கணக்கில் எடுக்கும்போது இதன் முக்கியத்துவம் புரியும். இதனால் சீனா இந்தியாமீது நேரடி ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. சீனாவின் அந்த விருப்பத்தை எப்போதும் நிறைவேற்ற பாகிஸ்தான் சித்தமாக உள்ளது. சீனா ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு ராணுவத் தளவாடங்களையும், நிதி உதவியையும், தொழில்நுட்பத்தையும் அளித்துவருகிறது. சீனாவின் இந்தியத் திட்டம் பாகிஸ்தானுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறது என்றே கருத இடம் இருக்கிறது. சீனா தன் பிராந்தியத்தில் சந்திக்கவேண்டியுள்ள இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்களுக்கு இது ஒரு சமரச உடன்படிக்கையாகக்கூட இருக்கலாம். வரலாற்றுக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஒரு எதிரிகள் ஒரு பொது எதிரிக்காக ஒருங்கிணைவது. சீனாவுக்குத் தன் எல்லைக்குள் இருக்கும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை மடை மாற்றம் செய்ய மிகச் சிறந்த இலக்கு இந்தியாதான்.

உலகளாவிய இஸ்லாம்

இஸ்லாமியக் கோட்பாடு, இஸ்லாமியர்கள் உலகெங்கும் பரவி அதனையே மனித குலத்துக்குக் கிடைத்த ஆகச்சிறந்த மதக் கோட்பாடாக மட்டுமின்றி, சமூகப் பொருளாதார அமைப்பாகவும் நிறுவவேண்டும் என்று தன் மதத்தைப் பின்பற்றுவோரிடம் கோருகிறது. இது, இந்த நூலின் பரப்புக்கு வெளியில் உள்ள ஒரு புலம். இஸ்லாமியர்களுக்குத் தங்கள் பரவுதலைக் குறித்த ஒரு பெருமித வரலாற்றுணர்வு உள்ளது. மசூதிகளில் நடத்தப்படும் குத்பா பிரசங்கங்கள் இஸ்லாமின் இறுதி வெற்றி குறித்த நம்பிக்கையை உருவாக்குகின்றன.

an2.jpg

உலகம் எங்கும் பரவியிருக்கும் இஸ்லாமிய சமூகங்களிடையே வேற்றுமைகள் தெளிவாக உள்ளன. ஆசிய முஸ்லிம்கள், ஆப்பிரிக்க, அரேபிய, ஈரானிய, மேற்கத்திய முஸ்லிம்கள் என அவர்கள் பன்மைத்தன்மைகளுடன் உள்ளனர். இதில் சுன்னி, ஷியா, அகமதியா எனும் வேறுபாடுகளும் இணைகின்றன. ஆனால் இஸ்லாம் இல்லாத சக்திகளுடனான உறவில் இந்த வேற்றுமைகள் அனைத்துக்கும் அப்பாலான ஓர் ஒற்றுமை இஸ்லாமிய அகிலத்தை இணைக்கிறது. போன நூற்றாண்டின் கலீபாத் பிரச்னைமுதல் இன்றைய பாலஸ்தீனியப் பிரச்னைவரை இது தொடர்கிறது. இப்பிரச்னைகளில் முஸ்லிம்கள் உலகெங்கிலும் ஏறக்குறைய ஒரேவித எதிர்வினையுடன் அணி சேர்க்கப்படுகிறார்கள். இந்த வெளிப்புற ஒற்றுமையேகூட உள்ளே மிதமிஞ்சியிருக்கும் வேற்றுமைகளை மூடி மறைக்க ஏற்படுவது என்றுகூடச் சொல்லலாம். தாம் ஒரேவிதமாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் ஒரேவிதமான எதிர்காலத்தைப் பகிர்ந்துகொள்ளப்போகிறவர்கள் என்பதுமே இஸ்லாமிய உணர்ச்சிகளை ஒருங்கிணைத்து மடை திறக்கிறது.

கடும் தூயவாத இஸ்லாமுக்கு எதிராக தாராளவாத இஸ்லாமியச் சக்திகள் உலகெங்கும் இயங்குகின்றன என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் இத்தகைய தாராளவாத இஸ்லாமியர்களின் பேட்டிகளைக் கூர்ந்து கவனித்தால் அவர்களுக்கே அவர்களது வெற்றியின்மீது நம்பிக்கை இல்லை என்பது புலனாகும். ஏதோ ஒரு புள்ளியில் அவர்களும் கடும் தூயவாத இஸ்லாமில் கலந்துவிடுகிறார்கள். அவர்களில் பலர், கிறிஸ்தவ உலகில் சில நூற்றாண்டு காலச் சீர்திருத்தங்களுக்குப் பிறகே மதவெறி அடங்கி மானுடநேய மதச்சார்பற்ற அரசுகள் உருவாகின என்பதைக் காட்டுகிறார்கள். மேலும் அவர்கள், தங்கள் சமுதாயத்தில் மிகச் சிறிய, வலிமையற்ற ஒரு சிறுபான்மையினராகவே தங்களை உணர்கிறார்கள். இன்றைய இஸ்லாமிய உலகில் தீவிரவாத இஸ்லாமியமே மையம் கொண்டு செயல்படுகிறது. இன்னும் சில தலைமுறைகளுக்கு அதன் வேகம் அடங்குவது என்பது சாத்தியக்குறைவான விஷயமே.

இந்தியப் பாதுகாப்பு குறித்துப் பேசும் எந்தச் சட்டகமும் இந்தச் சக்திகளைக் கருத்தில் கொள்ளாமல் செயல்பட முடியாது. ஏதோ தாராளவாதச் சக்திகள் வெல்லும் என்பதாக நல்லெண்ண அடிப்படையில் தேசப் பாதுகாப்பு குறித்துச் சிந்திக்க முடியாது. இஸ்லாமியத்துக்குள் நடக்கும் சக்திகளின் மோதலில் இறுதி விளைவு இன்னும் முடிவு செய்யப்பட முடியாததாகவே உள்ளது. எனவே தீவிரவாத இஸ்லாம் மையம் கொண்டு இயங்கும் இஸ்லாமியத்துடன் வாழ, அதனை எதிர்கொள்ளப் பழகுவதும் பயிற்சி கொள்வதும் அவசியமாகிறது. அதன் இருப்பையே புறக்கணிப்பது முட்டாள்தனமானது.

குறிப்பாக, இந்தியாவில் இஸ்லாம் குறித்துக் கூறவேண்டுமென்றால் முதலில் இந்திய முஸ்லிம்கள் உலகின் வேறெந்தப் பகுதி முஸ்லிம்களைக் காட்டிலும் தாராளமான விசால மனப்போக்கு உடையவர்கள் என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். பல நூற்றாண்டுகளாக ஹிந்துக்களுடன் இணைந்து வாழ்ந்து இருவருக்கும் இடையில் பண்பாட்டுப் பரிமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் தேசபக்தி உடையவர்கள். தேசியவாதிகளும்கூட. பலர் மதச்சார்பின்மையை ஏற்றவர்கள். நல்ல கல்வியறிவு பெற்றவர்கள். பல முக்கியத் தொழில் துறைகளிலும் உயர் வேலைவாய்ப்புகளிலும் இருப்பவர்கள்.

ஆனால் இந்தியா எங்கும் 29,000 மதரஸாக்கள் உள்ளன. இவற்றில் பலவற்றுக்கு சவூதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளிலிருந்து நிதியுதவி வருகிறது. காஷ்மீரின் பயங்கரவாதமும் இவற்றுள் சிலவற்றுக்குள் பாய்ந்திருக்கிறது. இந்தியா சந்திக்கும் வறுமை, வேலையின்மை, மதச்சார்பற்ற கல்வி இஸ்லாமிய சமுதாயத்துக்குப் பரவலாக போதிய அளவில் சென்றடையாமை, வெளிநாட்டு இஸ்லாமியத் தாக்கம் ஆகியவற்றின் விளைவாகப் பல்வேறு அன்னியச் சக்திகளுக்கு இரையாகும் நிலையில் இஸ்லாமியச் சமுதாயம் உள்ளது. இந்த அன்னியச் சக்திகளில் ஒன்று பாகிஸ்தான். ஹிந்து-முஸ்லிம் நல்லுறவுடன் திகழும் இந்தியா, பாகிஸ்தானின் இருப்புக்கே பிரச்னையான ஒன்றாக உள்ளது. ஏனெனில் காந்தி வலியுறுத்தி வந்த ‘மதங்கள் கடந்த ஒரு தேசக் கோட்பாட்டை’ அது நிறுவும். பாகிஸ்தான் உருவாவதற்கு அடிப்படையாக விளங்கும் இரு தேசக் கோட்பாட்டை அது நிராகரிப்பதாகும்.

சுருக்கமாக, இந்திய இஸ்லாமியர்களைத் தூண்டிவிடும் பாகிஸ்தானியத் தலையீடு இனி வரும் காலங்களிலும் தொடரும். இந்தியாவின் பாதுகாப்பு குறித்த எந்தச் சமன்பாட்டிலும் இடம் பெறவேண்டிய கணிப்பு இது. தன்னுடைய அணு ஆயுத வலிமை, தாலிபனிய இறக்குமதி ஆகியவற்றுடன் பாகிஸ்தானுக்குச் சீனாவுடனான வலிமையான கூட்டணியும் உள்ளது.

அமெரிக்கக் கழுகின் இரட்டைப் பார்வை

இவை எல்லாவற்றுக்கும் இடையில் பல இந்தியர்கள், அமெரிக்காவே இந்தியாவின் சிறந்த துணைவன் என்று நம்புகிறார்கள். இது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் அமெரிக்கா ஒற்றைப்பார்வை மட்டும் கொண்டதல்ல என்பதைப் பல இந்தியர்கள் மறந்துவிடுகிறார்கள். இந்தியாவிடம் அமெரிக்கா காட்டும் நிலைப்பாடுகள் உறுதியானவையல்ல; நிலையானவையும் அல்ல. அவை காலங்களுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருப்பவை. அமெரிக்க அரசியல் காற்று தான் வீசும் திசையை மாற்றியபடியே உள்ளது. இந்தியாவுக்குள் நடக்கும் அரசியல் மாற்றங்களைப் போலவே, ஒவ்வொரு பிரச்னை குறித்தும் பல போட்டியிடும் பார்வைகளுடன் அது மாறிக்கொண்டே இருக்கிறது.

இந்திய-அமெரிக்கத் தொடர்புகளை ஆராயப் புகும் முன் சீனாவுடனும் இஸ்லாமிய தேசங்களுடனும் அமெரிக்கா கொண்டிருக்கும் உறவுகளைக் குறித்து நாம் சற்று ஆராயவேண்டும். அமெரிக்கா தன்னைக் கிறிஸ்தவ மதிப்பீடுகளைப் பின்பற்றும் நாடாகவும் அதே நேரத்தில் மதச்சார்பற்ற, நவீன மதிப்பீடுகளைப் பின்பற்றும் நாடாகவும் கருதுகிறது. இது அதற்கு ஒரு பிளவுண்ட ஆளுமையை அளிக்கிறது. இந்த இரு பிளவாளுமைகளும் பிற பண்பாட்டுச் சக்திகளால் அச்சுறுத்தப்படுகின்றன.

சீனாவுடனான அமெரிக்க மோதல் நவீனத்துவங்களின் மோதல் எனலாம். இங்கு போட்டி என்பது மதத்தையோ அல்லது சித்தாந்தத்தையோ குறித்ததல்ல. மாறாக, பொருளாதார பலம், தொழில் உற்பத்தித் திறன், அரசியல் வலிமை, நுகர்வோரியம் ஆகிய பொருளாதார, வர்த்தக விஷயங்கள் சார்ந்தது. சீனா, தாங்கள் அமெரிக்காவை மிஞ்சும் அமெரிக்கர்களாக ஆகப்போவதாகக் காட்டுகிறது. அமெரிக்கா உற்பத்தித்துறையில் சந்திக்கும் பின்னடைவும், தம் வேலைகளையும் உற்பத்தியையும் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக சீனாவுக்கு, ஏற்றுமதி செய்வதும் அமெரிக்கத் தொழில்துறையின் இதயத்தை அரித்து வருகிறது. அமெரிக்கா ஒரு கடன்பட்ட தேசமாக நாளுக்கு நாள் மாறி வரும்போது சீனா அந்தக் கடனை வழங்கும் தேசமாக ஆகிவருகிறது.

அமெரிக்கா சீனாவின் நவீன தொழிற்சாலைகளுக்குத் தேவையான இயந்திரங்களை வழங்கியது. தொழில்நுட்ப அறிவை வழங்கியது. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைச் சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்டது. சீனாவுக்கு மட்டுமல்ல, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்கா தன் தொழில் மையங்களை இறக்குமதி செய்தது. இன்று இந்த நாடுகள் எல்லாம் அமெரிக்காவின் தொழில் உற்பத்திக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் போட்டியாளர்கள் ஆகிவிட்டனர். அமெரிக்கா சந்திக்கும் முதல் பெரும் அதிர்ச்சி இது.

அமெரிக்கா சந்திக்கும் இரண்டாவது பெரும் மோதல், அடிப்படைவாதங்களின் மோதல். சீன அபாயத்தைப்போல, இஸ்லாமிய அபாயம் நவீனத்துவம் குறித்ததல்ல. இஸ்லாமிய நாடுகள் நவீனமயமாவது குறித்துச் சிந்திக்கவில்லை. மாறாக, இஸ்லாமிய அடிப்படைவாதம் கிறிஸ்தவ அடிப்படைவாதத்துடன் போட்டி போடுகிறது. இரு பக்கத்தினரும் இறைத்தூதர்கள், இறைமகன்கள் குறித்த மாறுபட்ட இறையியல் பார்வைகளைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு பக்கமும் தமக்கே இறுதி மற்றும் உண்மையான இறைவார்த்தை அளிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. கூடவே, மறுபக்கத்தைப் பொய்யானது என மறுக்கிறது. இந்த உண்மைக்கான குத்தகை உலகம் தழுவியது. தனித்துவமுடையது.
இன்னொருவர் பங்கு கேட்க முடியாதது.கிறிஸ்தவத்துக்குப் பின்னால் அதன் வழியில் வந்த இஸ்லாம் இப்போது தன் ஆபிரகாமியத் தாய் மதங்களை எதிர்ப்பது சுவாரசியமான விஷயம்.

ஒரு பக்கம் சீனா, மறுபக்கம் இஸ்லாம் என்ற இரு அபாயங்களுக்கு இடையில் அமெரிக்கா ஒரு மனபிளவுத்தன்மையுடன் இந்தியாவை அணுகுகிறது. எனவேதான் இந்தியா குறித்த அமெரிக்க நிலைப்பாடு தெளிவாக இருப்பதில்லை, இந்தப் பக்கம் அல்லது அந்தப் பக்கம் என்று இருப்பதில்லை.

கீழே உள்ள வரைபடம் அமெரிக்கா இந்தியா விஷயத்தில் இரு எல்லைகளில் எடுக்கும் முடிவுகளையும், அமெரிக்கப் பார்வையில் அதன் சாதக பாதகங்களையும் லாப நஷ்டங்களையும் காட்டுகிறது.

இந்த வரைபடத்தின் இடது பக்கத்தில் ஒலிக்கும் குரல்கள், ‘இந்தியச் சந்தையில் முதலீடு செய்வோம்; இந்தியத் தொழிற்சாலைகளையும் இந்தியத் தொழிலாளர்களையும் பயன்படுத்துவோம்; இந்தியாவுடன் ராணுவ உறவுகளைப் பலப்படுத்துவோம்; இந்தியாவே அமெரிக்காவுக்கு உகந்த தெற்காசியப் பிராந்தியத் தோழன்; சீனப் போட்டிக்கும் இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கும் எதிரான நல்ல பங்குதாரர் இந்தியாவே; மூன்றாம் உலகநாடுகளில் ஒரு நிலைத்தன்மையை உருவாக்க இந்தியா வலுவான நாடாக இருப்பது உதவும்’ என்றெல்லாம் கூறுகின்றன. அமெரிக்க வர்த்தகத் தேவைகளும் அமெரிக்க நலன்களும், இந்தியா அமெரிக்காவுடன் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளுடனும் ஜப்பானுடனும் நல்ல வலுவான வர்த்தக உறவுகளை உருவாக்கவேண்டும் என்று விரும்புகிறது. அத்தகைய முதலீடுகள் நடந்தவாறும் உள்ளன. ஆனால் இந்தியா சிதறுண்டால் அல்லது பலவீனம் அடைந்தால் அவையெல்லாம் சிதறிவிடும்.

இன்றைய அமெரிக்க நிர்வாகக் கல்லூரிகளில் இந்தியா குறித்த ஒரு நேர் சொல்லாட்சி உருவாகத் தொடங்கியுள்ளது. இந்தியா ஒரு பண்பாடற்ற எல்லைப்பிரதேசம் என்ற கருத்து மாறிவருகிறது. பாம்பாட்டிகளில் தொடங்கி சாதிக்கொடுமைகள் வரையிலான மோசமான இந்தியா அல்ல இது; மாறாக, அதன் காலம் பிறந்துவிட்ட ஒரு தேசம் என்று அவர்கள் இந்தியாவைக் காண்கிறார்கள்.

ஆனால் அந்த இடது பக்க வரைபடத்தின்கீழ் ஓர் எச்சரிக்கையும் இருக்கிறது. இந்தியா தொடர்ந்து வலிமையடையும்போது அதுவும் சீனா போல அல்லது அதைவிட வலிமை வாய்ந்த ஒரு போட்டியாளாராக, அமெரிக்காவுக்கு எதிராக எழுந்துவிடக்கூடும். ஒரு சீனாவே போதுமான தலைவலி. அதற்கிடையில் ஒரு பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட மற்றொரு தலைவலியா? இந்தியா வலிமையாக இருப்பது அமெரிக்காவுக்கு ஏற்றதே. ஆனால் மிகவும் வலிமையாக இருந்துவிடக்கூடாது.

இப்படத்தின் வலது பக்கம் இந்தியாவைத் துண்டாடுவது அல்லது பிரிவினைச் சக்திகளைப் பலப்படுத்தி இந்தியாவை பலவீனமாக வைத்திருப்பது எனும் குரல். இந்தியாவுடன் இணைந்து கட்டமைப்போம் என்பதைவிட இந்தியாவைக் கட்டுடைப்போம் எனும் குரலுக்கு அமெரிக்காவில் நெடிய வரலாறு உண்டு. குறிப்பாக அதன் பனிப்போர்க் காலத்தின் வெளியுறவுத் துறை நிலைப்பாடுகள் அப்படித்தான் இருந்தன. 1950-களிலும் 1960-களிலும் நேரு சோவியத் யூனியன் பக்கமாகச் சாய்ந்திருந்தார். அப்போதிருந்தே, அமெரிக்க அரசும் அதன் அமைப்புகளும் இந்தியாவின் பிரிவினைச் சக்திகளுக்கு ஆதரவளிக்கத் தொடங்கிவிட்டன. எப்படி அமெரிக்கச் சக்திகள் ஆதரிக்கப்பட்டன திராவிட இயக்கத்தை நைச்சியமாக ஆதரித்தன என்பதை ஏற்கெனவே பார்த்தோம். இந்தியாவின் எந்த ஒரு இனம் சார்ந்த, மொழி சார்ந்த, மதம் சார்ந்த பிரிவினையையும் இந்தியாவை பலவீனப்படுத்த அமெரிக்கா பயன்படுத்தியிருக்கிறது. அது தலித்துகள்-பிராமணர்கள் என்பதாகவோ திராவிட-ஆரிய மோதல் என்பதாகவோ, சிறுபான்மையினர்-ஹிந்துக்கள் என்பதாகவோ, ஏன் பாலியல் பிரிவுகளாகவோகூட இருக்கலாம். இங்கு உருவாக்கப்படுவது பண்பாடற்ற இருண்ட ஓர் எல்லைப் பிரதேசமான இந்தியா என்பதும் அதனை அமெரிக்கத் தலையீட்டினால் மட்டுமே நிர்வகிக்கமுடியும் என்பதுமான கருத்தாக்கம்.

இப்படி இந்தியாவைக் கூறுபோடுவதில் அமெரிக்காவுக்குப் பல லாபங்கள் இருக்கின்றன. மற்றொரு வலிமையான போட்டியாளர் ஏற்படுவதைத் தடுக்க முடியும். அமெரிக்க கம்பெனிகள் தங்கள் வேலைகளை இந்தியத் தொழிலாளர்களுக்கு அனுப்ப முடியும். ஒரு வலிமையான அரசு இல்லாதபட்சத்தில் அப்படி அனுப்பப்படும் தொழில்கள் முழுக்க முழுக்க அமெரிக்க லாபத்தைத் தவிர வேறெதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத முறையில் இருக்க முடியும். வலிமையற்ற இந்திய அரசு
இருக்கும்போது மதமாற்றத்தைத் தீவிரமாகச் செய்ய முடியும். இது அமெரிக்க ஆதரவு மக்கள் குழுமங்களை இந்தியா எங்கும் விதைக்கும். இதனால் ஏற்படும் மோதல்கள், மேற்கத்திய ஆயுத வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டித் தரும்.

ஆனால், இந்தியாவை இப்படிக் கூறுபோடுவது முழு உள்நாட்டுப் போர்களாக வெடித்தால் அதன் இறுதி விளைவு அமெரிக்காவுக்கு மிகப்பெரிய கொடுங்கனவாக இருக்கும். ஈராக்கையும் ஆப்கனிஸ்தானையும் பாகிஸ்தானையும்விடப் பல மடங்கு பெருங்குழப்பங்கள் ஏற்படும்.

அமெரிக்கா இந்தியாவிடம் காட்டும் இந்த இரு-துருவ நிலைப்பாடு, இந்திய தேசம் முழுமையாக, ஒன்றாக இருப்பதற்கான ஆதரவு என்பதிலிருந்து இந்தியா பல்வேறு துண்டுகளாகச் சிதறவேண்டும் என்பதுவரையாக இரு உச்சங்களுக்கு இடையே ஊசலாடியபடி உள்ளது. இந்திய உள்விவகாரங்களில் தலையிட்டு இந்தியாவின் உள்-மோதல்களைத் தன் கட்டுப்பாட்டுக்கு உகந்த கருவிகளாகப் பயன்படுத்தி இந்தியாவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறது அமெரிக்கா. மானுட உரிமைகள் என்ற
பிரம்பு இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. சீனா அமெரிக்காவுடன் ஒத்துழைத்ததால் அது அடைந்த பிரம்மாண்டமான வளர்ச்சி இந்தியாவுக்குக் காட்டப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் இயங்கும் ஜனநாயகச் சூழலை சீனாவின் அதிகாரக் குவிமையச் சூழலுடன் ஒப்பிட முடியாது. அதன் ஜனநாயக உரிமை மீறல்கள் வெளிப்படையானவை. அதீதமானவை. ஆனால் ஜனநாயகப் பாதுகாவலனாகத் தன்னை காட்டிக்கொள்ளும் அமெரிக்காவின் ‘மிகவும் சலுகை தரவேண்டிய தேசங்களின்’ பட்டியலில் சீனாதான் இருக்கிறது. இந்தியா அல்ல.

இருந்தாலும் இந்தியாவைச் சிதறுண்டு போகவைப்பதால் ஏற்படும் விளைவுகள் அமெரிக்கக் கொள்கை வடிவமைப்பாளர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். அது நிச்சயமாக அமெரிக்க நன்மைக்கு ஏதுவான விஷயமல்ல. ஆனாலும் அதைத்தான் அவர்களில் பலர் தூண்டிவிட்டுச் செயல்படுத்துகிறார்கள். இந்திய நிலைப்பாட்டை வடிவமைப்பவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய விஷயம் இதுதான்: எந்த அரசியல் சதுரங்கத்திலும் அமெரிக்கர்கள் இருபக்க அணியிலும் ஆடுவார்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

இந்தியத் துண்டாட்டம் : உட்பகைகளின் அந்நிய வேர்கள்

வரலாறு பல ஊடுபோக்குகளைக் கொண்ட ஒரு விசித்திரமான தளம். சமூகம் மற்றும் அரசியலைக் குறித்து பேசும் புத்தகங்கள் பொதுவாக கடந்த காலத்தைப் பேசும். வரலாற்று நிகழ்வுகளையும் அதன் பின்னணி காரணங்களையும் குறித்த தகவல்கள் ஒரு சிக்கலான சித்திரத்தை வாசகர்கள் முன்வைக்கின்றன. அதிலிருந்து அரசியல் மற்றும் கோட்பாட்டு விவாதங்கள் மேலெழும். ஆனால் சமகால அரசியல் மற்றும் சமூக நிலவரங்களை கடந்த காலத்தின் பின்னணியில் மிக விரிவாக ஆராய்ந்து, அந்த ஆய்வின் முடிவுகளை முன்வைத்து ஒரு சமூகத்திற்கு நேரக்கூடிய அபாயங்களைப் பேசும் புத்தகங்கள் அரிதாக இருக்கின்றன. ‘உடையும் இந்தியா?’ அந்த வகையில் தமிழ்ச் சூழலில் வெளியாகியுள்ள முதல் புத்தகம். அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ராஜீவ் மல்ஹோத்ரா இந்த இருவரும் இணைந்து எழுதியுள்ள இப்புத்தகம், இந்தியாவின் கடந்தகாலம், அதன் காலனிய மற்றும் தற்போதைய உலகமயச் சூழல் இவற்றை குறித்து விரிவாக ஆராய்ந்து இந்தியாவின், அதன் மக்களின் எதிர்காலம் குறித்த அச்சங்களை உள்ளார்ந்த அக்கறையுடன் விரித்துப் பேசுகிறது.

-o00o-

காலனியம் என்பதை, மேலை நாடுகள் கடல் பயண விரிவு வழியே தொடங்கிய உலகளாவிய படையெடுப்புகளுக்குப் பிறகு உலகில் பெரும் பகுதிகளில் நடந்த நிகழ்வாக மட்டும் கருதத் தேவையில்லை. ஒரு தேசம் மற்றொரு தேசத்தை அடிமைப்படுத்தி, தன் வளர்ச்சிக்குத் தேவையான பொருட்களைத் தொடர்ந்து சுரண்டுவது தான் காலனியத்தின் நோக்கம் என்று கொண்டால், தொடர்ச்சியாக நிகழ்ந்த மேற்காசிய இஸ்லாமியக் குழுக்களின் படையெடுப்புகள் நிகழ்ந்த காலத்திலிருந்தே காலனியப் பிடியில் சிக்கிய தேசமாக இந்தியா ஆகியிருந்தது என்று சொல்லலாம்.
தொடர்ச்சியாக நிகழ்ந்த அன்னியரின் படையெடுப்புகள் இந்தியாவின் வளங்களை சுரண்டியபடியே, அதைக் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்த்தி, அன்னிய நாடுகளின், இனக்குழுக்களின் ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்தன. ஆயிரம் சிறு வெட்டுக்களில் இரத்தமிழக்கச் செய்து பெரும் யானையையும் வீழ்த்தலாம், அதுதான் இந்தியாவுக்கும் நேர்ந்தது. இரு வேறு பண்பாடுகளின் சந்திப்புகள் இப்படி அழிவைக் கொணர்ந்தன. அடுத்து வந்த மேலைப் படையெடுப்பாளர்கள் இன்னமுமே மோசமாகச் சுரண்டிப் போனார்கள். இந்தியாவை முற்றிலும் அழித்து, உலகின் பரிதாபத்துக்குரிய நாடுகளில் ஒன்றாக ஆக்கிச் சென்றார்கள். தம்மால் நடந்த இழிவு என்பதை அங்கீகரிக்க மறுத்ததோடு, இந்தியர் காலம் காலமாக வறுமையில் சிக்கி இருந்த மக்கள், தாமே நாகரீகப்படுத்தியவர்கள் என்ற கருத்தை வேறு மேற்கிலும், உலகிலும் தொடர்ந்து பரப்பியும் வருகின்றனர்.

பண்பாடுகள் ஒவ்வொன்றும் தனக்கான தனித்தன்மை கொண்டன. விழுமியங்கள், மொழிகள், மதங்கள் என்று தனக்கான ஒரு தனித்துவமான வெளியை கொண்டவை. குறைந்தபட்சம் இந்திய பண்பாடு என்பது இத்தகைய பன்மைகளை கொண்டது என்று சொல்லலாம். தன்னுடைய பரந்த வெளிக்குள் பல்வேறு பரிமாற்றங்களையும், உள்வாங்கல்களையும் அனுமதித்து, அதன் விளைவாக புதிய முகிழ்ப்பின் சாத்தியங்களை கொண்டிருந்தது, இத்தனை அழிப்புக்குப் பிறகும் இன்னமும் அப்படியே திறந்த கையோடே உலகப் பண்பாடுகளை, மக்களை ஏற்றுக் கொண்டிருக்கிறது. உலகின் பிற பண்பாடுகளிடம் இல்லாத ஒரு முக்கியமான தன்மை இது.

இத்தகைய பண்பாடு, ஒற்றை பரிமாண பண்பாட்டை சேர்ந்த, அதையே பிறர் மேல் சுமத்தும் தீவிர நோக்கமும் கொண்ட, அடுத்தடுத்த காலனியாளர்களால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளானது. காலனியாளர்கள், தங்கள் பண்பாட்டுப் பார்வையைக் கொண்டு, இந்தியப் பண்பாட்டை அறிவதற்கான கோட்பாடுகளை உருவாக்கினர். அந்த அறிதல் முயற்சி கூட ஒரு நல்லுறவை, பரிமாற்றத்தை அடைவதற்காகச் செய்யப்பட்டதா என்றால், இல்லை, அப்படி அறிந்து மேலும் நுட்பமாக, தீவிரமாக இந்தியர்களை எப்படி அடிமைப்படுத்தி, தம்முடைய இழிவான நகலாக ஆக்கலாம் என்பதே நோக்கமாக இருந்த்து.

இந்தியாவின் சமூக/கலாச்சாரப் போக்குகளை முற்றிலும் தவறாக புரிந்து கொள்ளவும், தங்கள் அராஜகங்களை நியாயப்படுத்தவும் இக்கோட்பாடுகள் காலனியாளர்களுக்கு உதவின. மேலும், இந்தியப் பண்பாடு ‘குழப்பமான’, ‘பிறழ்ந்த’, ‘திரிந்த’ ’இருண்ட’ ‘காடு போன்ற’ ‘நாகரீகமற்ற’ ஒன்றாகவே பார்க்கப்பட்டது. தகவல்கள் இல்லாததாலோ, இங்கு அவர்களுக்கு எந்தச் செல்வமும் சுரண்டக் கிட்டாததலோ இப்படி ஒரு கருத்தை அவர்கள் கொண்டும், பரப்பியும் இருக்கவில்லை. மாறாகத் தகவல்கள் எத்தனை எதிர்மாறாக இருந்த போதும், எத்தனை வளங்கள் இங்கு காணவும், திரட்டவும் கிட்டிய போதும், அவற்றைத் திரித்து அர்த்தத்தை மறைத்து மலினப்படுத்துவதையும், தம் சுரண்டலை மறைத்து வறுமை இங்கு பன்னெடுங்காலமாக வேரூன்றியிருந்தது என்று ஒரு நம்பிக்கையை இந்தியரின் புரிதலில் விதைக்கவுமே அன்றும், இன்றும் பிரச்சாரம் நடத்தியிருக்கின்றனர்.

இதில் விசித்திரம் என்னவென்றால், நம் போலவே மேலைச் சக்திகளால் சுரண்டப்பட்டு, உலகப் பெரும் சக்தியாக இருந்த நிலையில் இருந்து தரை மட்டத்துக்குக் கொணரப்பட்ட அரபு நாட்டினரும், இதர மேற்காசியரும் கூட இந்தியாவை, இந்தியரை, இந்திய நாகரீகத்தைக் குறித்து இதே போன்ற இழிவுணர்வையும், இழி கருத்தையும் கொண்டு இன்றும் இருப்பதுதான். தாமே காலனியாளர்களாக முன்பிருந்த நிலையில் கொண்ட ஆணவ நோக்கைக் கைவிட அவர்களுக்கு அவசியம் இருக்கவில்லை, ஏனெனில் அப்படி ஒரு காலனியப் பார்வையை இந்தியரே தம் நாகரீகம், சமூக அமைப்புகள் குறித்துக் கொள்ளுமாறு இரு காலனியங்களும் சாதித்திருக்கின்றன.

குறிப்பாக இந்திய சமூகத்தை, அதன் சாதி முறையை மேற்குலகம் அணுகிய விதத்தை இங்கு ஒரு நல்ல உதாரணமாக சுட்டமுடியும். தாம் ஆள்கிற பெரும் மக்கள் கூட்டத்திலிருந்து மிகச் செலவு குறைந்த முறையில் லாபம் பெறவும் (சொத்து நிர்வாகம் மற்றும் வரி விதிப்பு), அவர்களை மேன்மேலும் ஊடுருவி எளிதே அடக்கி ஆளுவதற்குண்டான வழிகளை தெரிந்து கொள்ளவும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தது. இதுவும் அவர்களுடைய புதுக் கண்டுபிடிப்பு அல்ல. பிரிட்டிஷ் ஆளும் கூட்டங்கள் துவக்கத்திலிருந்தே தமது லட்சிய நாடாக கிரேக்க/ ரோம சாம்ராஜ்யங்களை, பண்டை உலகின் இரு ரத்தக் காட்டேரி அரசமைப்புகளையே கொண்டிருந்தன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களில் இந்தியாவுக்கு அனுப்ப்ப்பட்ட நிர்வாகிகள் பலரும் ரோம சாம்ராஜ்ய வரலாற்றை ஆழ்ந்து படித்திருந்தனர்.

எப்படி ரோம் தாம் ஆண்ட மக்களைப் பல குழுக்களாகக் கண்டு பரஸ்பரம் தம்மிடையே தொடர்ந்து போரிடும் குழுக்களாகவும் மாற்றி இருந்ததோ, அதே நடைமுறையை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்றென்றும் நிலைக்கும், சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை உள்ள நிலப்பரப்பில் நீடித்தாளும் என்ற கனவும், குறிக்கோளும் கொண்ட நிர்வாகிகள் , தாம் ஆண்ட பல நிலப்பரப்புகளிலும், இந்தியாவிலும், கடைப்பிடித்தனர். குறிப்பாக 1857-ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திர போரைத் தொடர்ந்து இந்தியாவின் நேரடியான நிர்வாகத்தை ஏற்றிருந்த பிரிட்டிஷ் அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்வதில் உறுதியுடன் இருந்தது. இந்தக் கிளர்ச்சியின் பின்னணியில் இந்திய சாதி முறை முக்கிய பங்கு வகித்தது என்று எண்ணிய பிரிட்டிஷ் அரசு, சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பையும் வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து ஆரம்பமான கணக்கெடுப்புப் பணி தன்னளவிலேயே ஏராளமான குழப்பங்களுடன் துவங்கியது.[1]

இந்தக் கணக்கெடுப்பு செயல்திட்டத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் ரிஸ்லே(H.H.Risley). இவரது வழிகாட்டுதலின் படி பிரிட்டிஷ் அரசு அதிகாரிகள் மனு தர்மத்தின் வர்ணப் பிரிவுகளை அப்படியே உள்வாங்கிக் கொண்டு, அந்தப் பிரிவுகளை இந்திய சமூகத்தில் தேடி அலைந்தனர். ஆனால் நிதர்சனம் வேறு விதமாக இருந்தது. மனு தர்மத்தில் சொல்லப்பட்ட பிரிவுகளை அவர்களால் இந்திய சமூகத்தில் காணமுடியவில்லை. மாறாக அவர்களுக்கு ‘சாதி’ என்ற வார்த்தையுடனான பரிச்சயம் ஏற்பட்டது. இந்திய சமூகத்தில் ‘சாதி’ என்ற வார்த்தைக்கு ’குழு’ என்ற அர்த்தமே பொருந்தும். இந்தக் ‘குழு’ தொழில் சார்ந்து, மொழி சார்ந்து, மதம் சார்ந்து, பாலினம் சார்ந்து இப்படி பல தளங்களில் அர்த்தம் கொள்ளத்தக்கது. மேலும், எந்த ஒரு ‘சாதி’ என்ற வகையும் இந்தியா முழுமைக்குமாக பொருந்தாது. உதாரணமாக, ஒரு ஊரில் ஒரு ’குழு’வை(‘சாதி’யை) சேர்ந்த மக்கள் பொற்கொல்லராக இருந்தால், இந்தியா முழுவதும் பொற்கொல்லாராக உள்ள அனைவரும் அந்த சாதியை சேர்ந்தவராக கருத முடியாது. அது ஒவ்வொரு இடம் சார்ந்து மாறக்கூடியது. ஆனால், இந்தியர்களை ‘அறிய’ வேண்டிய அவசியத்தில் இருந்த காலனியாளர்கள், இந்த அமைப்பை தங்களுக்கு பரிச்சயமான வகையில் புரிந்து கொள்ள முயன்றனர். ஆகவே ‘சாதி’ என்ற முறையை விளக்க தங்களுக்கு வெகு பரிச்சயமான ‘Caste’ என்ற சொல்லை தேர்ந்தெடுத்தனர். ஆனால், அடிப்படையிலேயே ‘Caste’ என்ற வார்த்தையும், ‘சாதி’ என்ற வார்த்தையும் முற்றிலும் தொடர்பற்றவை.

போர்த்துகீசிய மொழியின் ’Casta’ என்ற வார்த்தையிலிருந்து ‘Caste’ என்ற வார்த்தை வருகிறது. இந்த வார்த்தையை இப்படி அர்த்தம் கொள்ளலாம் : அகமண முறை உடைய, பல்லடுக்கு கொண்ட, இனம்(race) சார்ந்த ஒரு பிரிவு. இந்திய அமைப்பில் ‘சாதி’ என்ற வார்த்தைக்கு இத்தகைய அர்த்தமே கிடையாது. இந்திய ’சாதி’ அகமண முறையை கொண்டதல்ல. அது இயல்பாகவே வேறு பல குழுக்களுடன் கலந்து தன்னை விரித்துக் கொண்டும், மாறுபட்டும் வளரக்கூடியது. உதாரணமாக, தமிழர்களின் பெருமிதமான சோழ வம்சத்தின் அரசனான குலோத்துங்க சோழன் ஆந்திராவின் தெலுங்கு மொழி பேசும் ஒரு குழுவுடன் மணவுறவு கொண்டதால், தெலுங்கு சோழ அரச வம்சம் ஒன்றை உருவானது குறித்த தகவலை நாம் வரலாற்றில் காணமுடியும்.[2] மேலும், சாதி முறையில் நிலவிய ஏற்றத்தாழ்வை இந்தியா முழுமைக்கும் பொருத்தமுடியாது. மேலும், அந்த ஏற்றத்தாழ்வு நிலையானதல்ல. ஒவ்வொரு சூழலுக்கும் தகுந்தபடி ஒவ்வொரு சாதியும் சமூக அடுக்கின் மேலே செல்வதும், கீழிறங்கவதும் உண்டு. இதை ரிஸ்லேவும் அறிந்திருந்தார். மக்கள் கணக்கெடுப்பு முடிந்தவுடன் ரிஸ்லே தன்னுடைய புத்தகத்தில் இப்படி எழுதுகிறார் :

“Caste can be classified on the basis of social precedence. No scheme of classification can be framed for the whole of India”[3]

ஆக, ’சாதி’ என்ற அமைப்பிற்குள் வெவ்வேறு குழுக்கள் இணைந்தும், வெளியேறியும் இருந்த நிலையை மாற்றி, சில குழுக்களை இன்ன ‘சாதி’ என்ற வகைப்படுத்தும் ஒரு பெரிய அட்டவணையை தயார்செய்தது பிரிட்டிஷ் அரசு. அவர்களை வலுக்கட்டாயமாக அந்தப் பிரிவுக்குள்ளேயே வைத்திருந்தது. இதனால் இந்திய சமூகத்தின் இயல்பான பல ஜாதிப் பரிமாற்றப் இயக்கம் முடங்கிப் போய் முற்றிலும் உறைந்து போனது.

மேலும், ஒவ்வொரு ‘சாதி’யும், ’மொழி’யின் அடிப்படையிலும் ஒருங்கிணைக்கப்பட்டு வெவ்வேறு இனமாக வகைப்படுத்தப்பட்டது. அதனால் மொழி அடிப்படையில் இனங்கள், இனங்களுக்கான மதங்கள் ஆகியவை செயற்கையாக உருவாக்கப்பட்டன. ஆரியர், ஆரியரல்லாதோர், இந்துக்கள், இந்துக்கள் அல்லாத மலைக் குடிகள் என்று ஒரு பண்பாட்டின் அடிப்படையை கூட சரியாகப் புரிந்து கொள்ளாமல் இந்திய சமூகம் துண்டாடப்பட்டது.

இந்த இனங்களை மேலும் சரியாக வகுக்க ரிஸ்லே(Risley) ஒரு படி மேலே சென்று மக்களின் மூக்கின் அளவை அளந்து(nasal index) அதனடிப்படையிலான இனப்பாகுபாடும் நடைபெற்றது. ஆக, காலனியச் சூழலில் நடைபெற்ற ஆய்வுகளை செலுத்தியது ஒரு வகை ‘இனவாத கோட்பாடு’ தான்.

மேலும், nation-state என்ற தனது கருதுகோளை முன்வைத்து பிரிட்டிஷ் அரசு ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தனி வரலாற்றையும், இனங்களுக்கிடையேயான மோதல்கள் குறித்த புனைவுகளையும் உருவாக்கத் தவறவில்லை. ஆக, தனக்கு முற்றிலும் அந்நியமான ஒரு பண்பாட்டை புரிந்து கொள்ள மேற்குலகம் தன் சூழலிருந்து கருவிகளை எடுத்துக் கொண்டு, இந்திய சூழலை புரிந்து கொள்வதற்கான கோட்பாடுகளை உருவாக்கியது. காலனிய சூழலில் இந்தியா குறித்து நடத்தப்பட்ட அனைத்து ஆய்வுகளுக்கும் இதே கோட்பாடுகள் தான் முன்வைக்கப்பட்டன. ஆக இந்தியப் பண்பாடு குறித்த காலனியப் பார்வை என்பது ஒரே அடிப்படையில் தான் உருவாகி வளர்ந்தது. மாறாக, இந்த அடிப்படையை மறுத்து எழுந்த குரல்கள் நசுக்கப்பட்டன. உலகம் முழுமைக்கும் இந்தியா குறித்த இத்தகைய காலனியத்தால் ’உருவாக்கப்பட்ட’ கருத்துக்களே ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்த வாதங்களை முன்வைப்பதன் நோக்கம் இந்தியாவின் ‘களங்கமில்லா’ கடந்தகாலத்தை குறித்த ஏக்கமோ, அதன் ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் எண்ணமோ அல்ல. மாறாக, ஒரு பண்பாட்டை அதற்கு அந்நியமான ஒரு கோட்பாடின் மூலம் எப்படி திரிக்க முடியும் என்பதைச் சுட்டவே இந்த வாதங்கள்.

வரலாற்றை நுட்பமாக அணுகும் எந்தவொரு வாசகனுக்கும் இந்த தகவல்களை வாசிக்கும் போது ஒரு சில கேள்விகள் மனதில் எழும் : ’ரிஸ்லே உபயோகித்த இந்த கோட்பாடுகள் உண்மையில் எங்கிருந்து வந்ததன? அதை உருவாக்கி அளித்தவர்களின் பின்னணி எத்தகையது? அவர்களின் நோக்கம் என்ன?’. இந்த கேள்விகளுக்கான விடையை வரலாற்றாய்வின் மையங்களில் நிகழும் விவாதங்களில் ஒருவரால் நிச்சயம் காணமுடியாது. பொதுவாக, வரலாற்றாய்வுகள் ஒரு சமூகத்தின் மீது மதம் மற்றும் அதன் இறையியலின் தாக்கத்தை பொருட்படுத்துவதில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக, மேற்கண்ட கேள்விகளுக்கான விடையை, மேற்குலகின் மதம் மற்றும் விவிலிய இறையியலிலிருந்து நாம் பெறமுடியும். இந்த விவிலிய நூல் சார்ந்த பார்வை எத்தனைக்கு மேற்கின் வரலாற்றாய்வுப் பார்வையை இன்னமும் செலுத்துகிறது என்று நாம் அறிந்தால் எந்தப் பார்வை உலகுக்கு இந்தியாவின் சமூகங்கள் குறித்த வக்கிரமானதொரு வருணனையை மேற்கின் வரலாற்றாய்வாளர் அளிக்கக் காரணமாக இருந்தது என்பது நமக்குப் புரியும். இதைச் சொல்லவும் ஒரு மாற்று வரலாற்றாய்வு தேவைப்படுகிறது. அத்தகைய ஒரு விரிவான, வரலாற்று பார்வையை ‘உடையும் இந்தியா?‘ புத்தகம் வாசகருக்கு அளிக்கிறது.

‘மோசேவிய இனவியல்’ எனும் கருத்தியல் குறித்து இந்தப் புத்தகம் விவரிக்கிறது. ஒரு விவிலிய தொன்மத்தின் அடிப்படையில் எழுந்த இந்த இனவியல் கோட்பாடு உலகத்தின் அனைத்து பண்பாடுகளும் மோசேவின் வாரிசுகளிடமிருந்தே தோன்றிய சாத்தியத்தை முன்வைக்கிறது. இந்த தொன்மத்தின் படி மோசேவால் சபிக்கப்பட்ட ஹாமின்(மோசேவின் மூன்று மகன்களில் ஒருவன்) வாரிசுகள் தான் இந்தியர்கள். ஹாம் போன்ற சபிக்கப்பட்ட ஒருவனிடமிருந்து தோன்றிய வாரிசுகள் பிற மனித சமூகங்களை விட தாழ்ந்தவர்களே. ஆனால் இந்தியப் பண்பாடுகளின் மேன்மையை எப்படி விளக்குவது? அதற்கு மொழி மற்றும் நிறம் குறித்த விவிலியத்தின் கோட்பாடு மீண்டும் முன்வைக்கப்படுகிறது. கறுப்பு நிறத்தவர்கள் காட்டுமிராண்டிகள் என விவிலியம் சித்திரிக்கிறது. இதனடிப்படியில் அவர்கள் பேசும் மொழியும் தாழ்ந்த மொழியே என்று முடிவிற்கு மேற்குலகம் செல்கிறது. இந்தக் கருத்து இன்றளவும் மேலைச் சமுதாயத்திலும், மதிப்பீடுகளிலும், அரசியலமைப்பிலும், அரசு நிர்வாகக் கொள்கைகளிலும் பல விதங்களில் மேலாட்சி செய்வதை நாம் எளிதே காணமுடியும்.


விவிலியத்தில் நோவா, தன் மகன் ஹாமுக்கு ஒரு சாபம் கொடுப்பார். ஹாமின் சந்ததிகள் என்றென்றைக்கும் நோவாவின் பிற மகன்களின் சந்ததியினருக்கு அடிமைகளாக இருக்கவேண்டும். இந்த ஐதீகம் அனைத்தும் ஐரோப்பியரால் நிரூபிக்கப்பட்ட ஒரு வரலாற்று உண்மையாகவும் அதுவே ஆப்பிரிக்க மக்களின் தோல் நிறத்தை விளக்கும் காரணமாகவும் காட்டப்பட்டது. இதனால், அடிமை அமைப்பு நியாயப்படுத்தப்பட்டது. இந்த ஹாம் ஐதீகப் புனைவு, ஆரியப் படையெடுப்புக் கோட்பாடுகளுடன் கலக்கப்பட்டு, இந்திய இனப் பன்மைக்கான முதன்மையான காரணமாகவும் விளக்கப்பட்டது.
 – அரவிந்தன் நீலகண்டன் & ராஜீவ் மல்ஹோத்ரா(பக்கம் 58)

இத்தகைய காட்டுமிராண்டிக் கூட்டம் ஒரு உன்னத பண்பாட்டை உருவாக்க முடியாது. இத்தகைய ஒரு உயர்ந்த பண்பாட்டை ஒரு ‘வெள்ளை’ இனத்தால் தான் உருவாக்க முடியும். அதனால் நிற அடிப்படையில் இந்திய மக்கள் கூட்டத்திலிருந்தே ஒரு பிரிவினரை தனியாக பிரித்து, அவர்களை ‘ஆரிய’ இனமாக முன்னிருத்தும் முயற்சி நடக்கிறது. கீழைத்தேய நாடுகள் குறித்த ஆராய்ச்சியின் முன்னோடிகளாக கருதப்படும் வில்லியம் ஜோன்ஸ், மாக்ஸ் முல்லர் போன்ற பலர் இதே கோட்பாட்டை மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். இக்கோட்பாட்டைத் தான் ரிஸ்லே கையில் எடுத்தார். இதன் தொடர்ச்சியாக வருவது தான் இன்று வரை நடந்துவரும் நம் ஆராய்ச்சியாளர்களின் கதையாடல் : ஆரிய படையெடுப்பு, ஆரியல்லாதோரின் தோல்வி, ஜாதி எனும் அமைப்பின் தோற்றம், அதனுள் சிக்கும் திராவிடர்கள், இப்படி இந்தக் கோட்பாடு விரிகிறது. இது தான் இந்தியவின் கடந்தகாலத்தை ஆராய மேற்குலகம் அளித்த சட்டகம். இந்தச் சட்டகத்தின் அடிப்படையில் தான் ‘சாதி’களை ‘இனம்’ என்று முன்வைக்கும் ‘அறிவியல் பூர்வ’மான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. ரிஸ்லேயின் இந்த காலாவதியான கோட்பாடுகள் தான் இன்றளவும் நம் பல்கலைக்கழக ஆய்வுப் பார்வையை தீர்மானிக்கின்றன. இன்றும் ரிஸ்லேயின் ஆவி மறையவில்லை.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியவியல் அறிவு என்பது, இந்தியப் பண்பாட்டைக் கீழ்மைப்படுத்தவும் பிரிட்டிஷ் மேன்மையை நிலைநாட்டவும் மிக நல்ல கருவி என்பது காலனிய அதிகார அமைப்புக்குத் தெளிவானது. காலனியப் பார்வையிலிருந்து உருவாக்கப்பட்ட இந்த அறிவை இந்தியாவில் பெரிய அளவில் மக்களிடையே பரப்ப கல்வி நிறுவனங்களின் பெரும் வலை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் பெரும்பாலும் சுதேசி இந்தியர்களே. இந்திய இலக்கியங்களைப் படித்து ஐரோப்பிய காலனியவாதிகளுக்குத் தரவுகளை அளிக்கும் உளவாளிகளாக இவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். இந்திய இலக்கியங்களும் சமஸ்கிருதப் பதங்களும் ஐரோப்பியச் சட்டகத்துக்குள்ளாக அமைக்கப்பட்டன. இந்த இந்திய ஒத்துழைப்பாளர்கள், இந்த காலனியப் பார்வையை சக இந்தியர்களிடம் பரப்பவும் பயன்படுத்தப்பட்டனர். சுதேசக் கல்வியையும் பண்பாட்டுப் பார்வையையும் வருங்காலத்தில் பெரிய அளவில் மாற்ற இடைப்பட்ட விசைகளாக இவர்கள் பயன்பட்டனர். – அரவிந்தன் நீலகண்டன் & ராஜீவ் மல்ஹோத்ரா(பக்கம் 71)

இங்கு ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும். ரிஸ்லேயின் இந்த ‘அறிவியல்பூர்வ’ ஆராய்ச்சிகளை தற்கால நவீன விஞ்ஞானம் முற்றிலும் ஒதுக்கித் தள்ளிவிட்டது. ஆனால், ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் கூட, மேற்குலக ஆராய்ச்சியாளர்கள் ரிஸ்லேயின் இதே கோட்பாட்டை ருவாண்டாவில் செயல்படுத்த, அதன் விளைவாக ஒரு சில நாட்களிலேயே 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அழித்தொழிக்கப்பட்ட பெரும் மானுட சோகம் அரங்கேறியது. இனம் குறித்த வரையறைகளை துல்லியமாக வகுக்க முடியாது என்று தற்கால நவீன அறிவியல் சொல்கிறது. நவீன அறிவியலின் கேந்திரங்களாக விளங்கும் மேற்குலக அரசும், சிந்தனைக் குழுக்களும் அமைதியாக அதை வேடிக்கை பார்த்தன. இது ஏன் நிகழ்ந்தது?

-o00o-

ஒரு பண்பாட்டின் கடந்தகாலம் குறித்த ஆய்வுகளின் மூலம் கிடைக்கும் வெவ்வேறு சித்திரங்களும், அதை முன்வைத்து நிகழும் விவாதங்களின் எதிரொலிகளும் அந்தந்த நாட்டின் நிகழ்காலத்திலும் ஒலிக்கும். மேலும் அந்நாட்டின் தன்மையையும், போக்கையும் நிச்சயம் பாதிக்கும். அந்நாடுகளில் சமூக/அரசியல் மாற்றங்களை நிகழ்த்தக் கூடிய பெருவலிமை இந்த ’எதிரொலி’களுக்கு நிச்சயம் உண்டு. ஆக, தற்போதைய உலகமயமாக்கப்பட்ட சூழலில், ஒரு நாட்டின் வரலாற்றை ஆராயத் தேவையான கோட்பாடுகளை வழங்குவதன் மூலமும், அந்த ஆய்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலமும், அந்த ஆய்வு முடிவுகளை தகுந்த பிரச்சார அமைப்புகள் மூலமாக உலகரங்கில் முன்வைப்பதின் மூலமுமே தனக்கான ஆதாயங்களை மேற்குலகால் இன்று பெற்றுவிட முடியும். இந்த வகையில், ஒரு நாட்டின் வரலாறும், கலாச்சாரமும், மதமும் அந்நாட்டின் நலனுக்கு எதிராக உபயோகப்படுத்தக்கூடிய ஆயுதமாக ஆகின்றன. ஆக ஒரு நாட்டைக் கட்டுப்படுத்த போர், பொருளாதாரம் ஆகிய பழைய காலனிய கருவிகளைத் தாண்டிய ஒரு கருவி தற்போது மேற்கத்திய நாடுகளின் கையில். அது, பண்பாட்டு ஆய்வுகள். அதற்கிருக்கும் ஊடுருவல், தன்னியல்பாக உலக நாடுகளில் கிட்டும் தலைமை, மேலும் அதன் அணுகுமுறைகளுக்கு உலகப் பல்கலைகளிலும் ஊடகங்களிலும் கிட்டும் கேள்வியோ, விமர்சனமோ அதிகம் அற்ற அங்கீகாரம்.

இரண்டாம் உலகப் போரின் முடிவைத் தொடர்ந்து உலகின் பெரும் பகுதிகளில் காலனியம் முடிவிற்கு வந்ததும், காலனியத்தின் எச்சங்களால் அப்பகுதிகளில் நிகழ்ந்த உள்நாட்டு கலவரங்களும், அரசியல் நிலவரங்களும், சமூக இயக்கமும் வரலாற்றின் பக்கங்களில் திரும்பத் திரும்ப பேசப்படும் விஷயங்கள். காலனிய நாடுகள் குறித்த ஆக்கிரமிப்பாளர்களின் குறிப்புகளை நிராகரித்தும், மீள்-வாசிப்பை நிகழ்த்தியும் புதிய சில போக்குகள் கல்வி/ஆராய்ச்சித் துறையில் எழுத்துவங்கின. உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பின்-காலனியப் பார்வையில் இத்தகைய ஆய்வுகள் நடைபெற்றன. பின்-காலனியப் போக்கென்பது காலனியாளர்களின் ஆய்வுக் கோட்பாடுகளை மறுத்து, அந்த மண் சார்ந்த கோட்பாடுகளை உருவாக்கி, அதிலிருந்து ஒரு நாட்டின் வரலாற்றை ஆராய்வது தான். ஆனால், பின்-காலனிய ஆய்வுக்கான புதிய கோட்பாடுகள் என்ற போர்வையில் மீண்டும் மீண்டும் காலனியாளர்கள் உருவாக்கிய கோட்பாடுகளே முன்வைக்கப்படுகின்றன. இதனால், பெரும்பாலான சமயங்களில், காலனியவாதிகளால் உருவாக்கப்பட்ட சட்டகங்களை மறுத்து செயல்பட வேண்டிய பின்-காலனிய ஆய்வுகள், காலனிய பார்வையின் நீட்சியாகவே அமைகின்றன. இது எப்படி நிகழ்கிறது? அதற்கான விடையையும் இப்புத்தகம் முன்வைக்கிறது. அந்த விடை மேற்குலகத்தினரின் உளவியலை நமக்கு நன்கு உணர்த்துகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 
 

பின்-காலனிய ஆய்வுகளைப் பொறுத்தவரை மேற்குலகின் பல்கலைக்கழகங்களே இன்றளவும் இந்த ஆய்வுகளின் மையமாக செயல்படுகின்றன. இந்த ஆய்வுகளின் தலைமைப் பொறுப்பிலும் மேற்குலகை சேர்ந்தவர்களே. இவர்கள் சித்தாந்த ரீதியாக தங்களை இடது சாரி எனவும், தாராளவாதிகள்(liberal) என்று அழைத்துக்கொண்டாலாம், இவர்களின் அடிப்படை கருத்தியலும் உளவியலும் தங்கள் சொந்த மதமான விவிலியத்திலிருந்து பெரிதும் விலகவில்லை என்று இந்தப் புத்தகம் சொல்கிறது.

இந்தப் புத்தகம் வைக்கும் இக்கருத்தை நாம் ஒரு வித காழ்ப்பு என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஏனெனில், உலகளவிலும், ’நவீன சிந்தனைகள்’என்று இதுவரை நம்முன் முன்வைக்கப்பட்ட அனைத்தையும் சில வரலாற்றாய்வாளர்கள் கேள்விக்குட்படுத்த துவங்கியிருக்கிறார்கள். மேற்குலக சமூகத்தின் அரசு மற்றும் சர்ச்(church) இரண்டுக்குமிடையே வித்தியாசம் இல்லாத நிலை, அறிவொளி(enlightenment) காலத்திற்கு பிறகு மாறியது. ஆனால், அரசியல் மட்டத்தில் இந்த மாறுதல் இருந்தாலும், சமூகத்தின் பொது சிந்தனையில் விவிலியத்தின் தாக்கத்தை அது எந்தவகையிலும் மாற்றவில்லை. விவிலியம் போதிக்கும் வகையான ’அன்பும், கருணையும்’ மானுட கலாச்சாரத்தின் உச்சமாக முன்வைக்கப்பட்டது. மேலும், அறிவொளி யுக சிந்தனைகள் பலவும் ஏதோ ஒரு வகையில் விவிலியத்தின் சிந்தனைகளில் வேர் கொண்டிருந்தன. அக்கால சிந்தனையாளர்கள் மாற்றுச் சிந்தனையை முன்வைத்த போதும், அவையாவும் விவிலியத்தின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டிருந்தன. ஒருவகையில், விவிலிய சிந்தனைகளே வேறு ஒரு புதிய மொந்தையில் அறிவொளி யுகச் சிந்தனையாக உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்கிறார் அறிஞர் பாலகங்காதரா[4]. இந்த அறிவொளி யுகச் சிந்தனைகளே இன்றளவும் கல்வித் துறைகளில் (வரலாறு, சமூகவியல்,…) பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. மொத்தத்தில், அறிவொளி யுகத்தால் மதமும் அதன் பீடமும் நிராகரிக்கப்பட்ட போதும், அது முன்வைத்த கலாச்சார விழுமியங்கள் மிக உயர்வானவையாக போற்றப்பட்டன.

இதனடிப்படையில், அறிவியில் ரீதியாக இனம் குறித்த வரையறையை விஞ்ஞானிகள் ஏற்காதபோதும், கல்வித் துறைகளில் ‘இனம்’ குறித்த கருத்தியல் செலுத்தும் அபிரிதமான ஆதிக்கத்தை இந்தப் பின்னணியில் நம்மால் புரிந்து கொள்ளமுடியும். மேலும், மேற்குலகின் இடது சாரிகள் மற்றும் தாராளவாதிகளும், இத்தகைய ஒரு அடிப்படைவாதக் கருத்தை ஏற்றுக் கொள்ளத் அவர்கள் ஏன் தயாராகவே இருக்கின்றனர் என்ற கேள்விக்கும் நமக்கு பதில் கிடைக்கிறது. ஏனெனில், அவர்கள் தங்கள் மதங்களை நிராகரித்தாலும், அம்மதம் வழங்கிய கலாச்சார விழுமியங்களை மிக உயர்வானதாகக் கருதுகிறார்கள். மானுடத்தின் உச்சமாக விவிலியத்தின் விழுமியங்கள் அவர்களால் தூக்கிப்பிடிக்கப்படுகின்றன. இவ்வளவு ஏன், நம் சமகால சிந்தனையாளரும், மத நிராகரிப்பாளருமான ரிச்சர்ட் டாக்கின்ஸ் கூட கலாச்சார ரீதியால் தன்னை கிறித்துவன் என்றே அடையாளப்படுத்துகிறார்[5].

ஆக, மேற்குலகில் நடைபெறும் ’விஞ்ஞான பூர்வமான’ பெரும்பாலான பின்-காலனிய ஆய்வுகள், இன்றும் எந்தவித பெரிய மாற்றமும் இல்லாத, காலனியச் சூழலில் உபயோகிக்கப்பட்ட அதே ‘இனவியல் கோட்பாட்டை’ முன்வைத்துத் தான் தனது ஆராய்ச்சிகளை தொடர்கின்றன.

அதே சமயம், இந்தக் கோட்பாடுகளை முற்றிலும் மறுக்கும் போக்கும் அங்கு நிலவுகின்றது. ஆனால் அவை ஆராய்ச்சிகளின் மையத்தில் இயங்குவதில்லை. விளிம்புகளில் ஈன ஸ்வரத்தில் ஒலிக்கும் குரல்களாக மட்டுமே இந்த எதிர்ப்புகள் அமைகின்றன. உதாரணமாக, மேலே பேசப்பட்ட இந்திய சாதி குறித்த மேற்கத்திய பார்வையில் உள்ள பிழைகளையும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் நடந்த குளறுபடிகளையும் சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் நிகோலஸ் டர்க்ஸ்(Nicoholas B. Dirks), பர்டன் ஷ்டைன் (Burton Stein), அஷீஸ் நந்தி(Ashish Nandy) போன்ற பல அறிஞர்கள் பேசுகின்றனர். ஆனால் இவர்களின் குரலை விட காலனிய இனவாதத்தை முன்வைக்கும் மார்த்தா நூஸ்பௌம், ரொமிலா தாப்பார், விட்ஸெல் போன்றோரின் குரலை தான் உலகரங்கில் அதிகமாக கேட்க முடியும். இவர்களின் மேற்கத்திய ஆய்வுகள் காலனியவாதிகளால் சொல்லப்பட்ட அதே விஷயத்தை தான் இன்றும் திரும்பத் திரும்ப பல்வேறு வார்த்தைகளில் சொல்கிறது : “இந்தியாவில் இருப்பது பல்வேறு இனங்கள்; ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தேசியம்; இந்திய அரசென்பதே மற்ற எல்லா இனங்கள் மீதும் ஒரு குறிப்பிட்ட இனம் நடத்தும் அடக்குமுறையே.” இந்த ஆய்வு முடிவுகளால் இந்தியாவிற்கு நேரும் ஆபத்து தான் என்ன? இந்தக் கேள்விக்கு விடையாக இந்தப் புத்தகம் அளிக்கும் சித்திரம் அச்சமூட்டுவது.

மேற்குலக பல்கலைக்கழகங்கள் இந்த இனவாத ’ஆய்வு முடிவு’களை தக்க முறையில் புத்தகங்களாக வெளியிடுவார்கள். இந்த புத்தகங்கள் உலகரங்கில் விவாதிக்கப்படும். இந்த விவாதங்களிலிருந்து கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் உள்ளூர் அறிவுஜீவிகள் இதை தங்கள் நாட்டு மக்களிடம் எடுத்துச் செல்வார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தவிர்க்கமுடியாத ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு இன ரீதியான ஒரு திரிபை அளிக்க இங்குள்ள அறிவுஜீவிகள் எப்போதும் தயாராக இருப்பார்கள். இவர்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் என்ற போர்வையில் திரியும், வல்லாதிக்க போக்குள்ள அரசியல்/மத/பொருளாதார அமைப்புகளில் இந்தியாவிற்கு எதிராக வாக்குமூலங்கள் அளிப்பார்கள். இத்தகைய வாக்குமூலங்களை வைத்து உலகரங்களில் இந்தியாவை தனிமைப்படுத்த முடியும். மேலும், இந்திய மக்களை நாகரீகமற்றவர்களாக முன்னிருத்த முடியும். அதே சமயம், இந்தியாவின் ஏற்றத்தாழ்வுகளை இன்னும் பெரிதாக்கி அதன் இறையான்மையை குலைக்க முடியும். இத்தகைய சூழலை ஏற்படுத்தமுடிந்தால், இந்தியாவின் அரசு மேலும் பலவீனப்படும்.

இந்திய அரசு பலவீனமடைந்தால் மேற்குலக நாடுகளுக்கு இரட்டை லாபம் :

1. இயற்கை வளம் நிரம்பிய இந்தியா போன்ற நாட்டின் அரசு பலவீனமடைந்தால், தன்னுடைய நலனுக்கேற்ற அனைத்தையும் மேற்குலகால் மிக எளிதாக சாதிக்க முடியும். இதற்கான அமைப்புகளை(IMF,UN போன்றவை) அது கைவசம் வைத்திருக்கிறது. மேலும், தன்னுடைய வளர்ச்சிக்குத் தேவையான இயற்கை வளங்களை சுரண்ட மேற்குலகிற்கு எந்தத் தடையும் இருக்காது.

2. பிரிவினைவாதம் வலுப்பெற்றால் இந்தியாவில் வன்முறைக் கும்பல்களும், உள்நாட்டு கலவரங்களும் பெருகும். இத்தகைய வன்முறைக் கும்பல்களுக்கு அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆயுதம் விற்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இன்றைய அமெரிக்க நிர்வாகக் கல்லூரிகளில் இந்தியா குறித்த ஒரு நேர் சொல்லாட்சி உருவாகத் தொடங்கியுள்ளது. இந்தியா ஒரு பண்பாடற்ற எல்லைப்பிரதேசம் என்ற கருத்து மாறிவருகிறது. பாம்பாட்டிகளில் தொடங்கி சாதிக்கொடுமைகள் வரையிலான மோசமான இந்தியா அல்ல இது; மாறாக, அதன் காலம் பிறந்துவிட்ட ஒரு தேசம் என்று அவர்கள் இந்தியாவைக் காண்கிறார்கள். இந்தியா தொடர்ந்து வலிமையடையும்போது அதுவும் சீனா போல அல்லது அதைவிட வலிமை வாய்ந்த ஒரு போட்டியாளாராக, அமெரிக்காவுக்கு எதிராக எழுந்துவிடக்கூடும். ஒரு சீனாவே போதுமான தலைவலி. அதற்கிடையில் ஒரு பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட மற்றொரு தலைவலியா? இந்தியா வலிமையாக இருப்பது அமெரிக்காவுக்கு ஏற்றதே. ஆனால் மிகவும் வலிமையாக இருந்துவிடக்கூடாது. – அரவிந்தன் நீலகண்டன் & ராஜீவ் மல்ஹோத்ரா(பக்கம் 541)

இத்தகைய ஒரு சித்திரத்தை முன்வைப்பதன் மூலம், இப்புத்தகம் வாசகருக்கு ஒரு ‘conspiracy theory’ ஒன்றை முன்வைக்கிறதோ என்ற எண்ணம் எழலாம். ஆனால் உலக முழுமைக்கும் விரியும் மேற்குலகின் ராட்சத வலைப்பின்னலையும், அதன் பல்லடுக்குச் செயல்பாடுகள் குறித்து விரிவான ஒரு பார்வையையும், அதன் ஒவ்வொரு கண்ணியையும் தகுந்த ஆதாரத்துடன் முன்வைக்கிறது இந்நூல். இந்த விரிவான தரவுகளும், ஆதாரங்களும் இப்படியொரு சாத்தியத்தை மறுக்கமுடியாதபடி நிறுவுகின்றன. மேலும், ருவாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளின் தற்போது நிலை குறித்து அறிந்திருக்கும் எவரும் இப்புத்தகம் முன்வைக்கும் சாத்தியத்தை மறுக்க முடியாது.

-o00o-

ஒரு நெடிய வரலாற்றுப் பின்புலத்தில், இந்தியாவின் நிகழ்காலம் குறித்தும், அதன் இருண்ட எதிர்காலத்தின் சாத்தியம் குறித்த விரிவான சித்திரத்தை எழுதிய இந்நூலின் ஆசிரியர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள். அரவிந்தன் நீலகண்டன் & ராஜீவ் மல்ஹோத்ரா ஆகியோர் எழுதி, கடந்த வருடம் வெளியான ‘Breaking India’ என்ற புத்தகத்தின் மொழியாக்கம் தான் ‘உடையும் இந்தியா?‘. புத்தகத்தில் இருக்கும் சின்னஞ்சிறு தகவல் பிழைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இப்புத்தகத்திற்கு ஆசிரியர்கள் அளித்துள்ள உழைப்பு பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக தற்கால தமிழ்நாட்டு அரசியல், சமூகம் குறித்தும், அதைச் சுற்றிப் பின்னப்படும் வலை குறித்தும் விரிவான சித்திரத்தை அளிக்கும் இப்புத்தகத்தின் இணை-ஆசிரியரான அரவிந்தன் நீலகண்டன், தன்னுடைய சரளமான மொழிபெயர்ப்பின் மூலம் வாசகர்களுடன் இன்னும் நெருக்கமாக உரையாடுகிறார்.

-o00o-

கடந்த ஐம்பது ஆண்டுகளாக மேற்குலக நாடுகளைச் சுற்றியே உலக நடவடிக்கைகள் நடைபெற்றன. தன்னை ஒற்றை-மையமாக நிலைநிறுத்தக் கொள்ள இந்நாடுகள் வெறும் பொருளாதாரத்தையும், ராணுவ பலத்தையும் மட்டுமே செயல்படுத்தவில்லை. தன் நலனை பாதுகாக்கவும், தனக்கு ஆபத்தான விஷயங்களை இனங்கண்டு அதை முறியடிக்கவும் உலகெங்கும் தன் நலனுக்கென செயல்படக்கூடிய வலுவான பல அமைப்புகளை அவை நிறுவியிருந்தன. இந்த அமைப்புகள் மேற்குலக மதம் சார்ந்தோ, பொருளாதாரம் சார்ந்தோ இயங்குபவையாக இருக்கலாம். மேற்குலகின் கைப்பாவைகளான IMF, உலக வங்கி போன்ற பொருளாதார அமைப்புகள் குறித்து பெருமளவு பேசப்படுகின்றது. ஆனால், மேற்குலகம் ஒரு நாட்டை என்றென்றைக்குமாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தன்னுடைய மதத்தை எப்படி பயன்படுத்தியது என்பதைக் குறித்த ஆய்வுகள் பெருமளவில் நடைபெறவில்லை. காலனியச் சூழலில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய நடவடிக்கைகளை மார்க்சிய வரலாற்றாய்வளரான கே.எம்.பணிக்கர் விரிவாக பதிவுசெய்துள்ளார்[6]. ஆனால் அதை தொடர்ந்து காலனியம் குறித்த ஆய்வுகளில் மதம், பண்பாடு போன்றவற்றின் பங்களிப்பு குறித்த எந்த ஆய்வும் செய்யப்படவில்லை என்றே சொல்லிவிடலாம். ஆனால், இந்த நூல் நம் காலத்திலேயே இத்தகைய நடவடிக்கைகள் எப்படி செயல்படுத்தப் படுகின்றன என்பதைக் குறித்து விரிவான சித்திரத்தை முன்வைக்கிறது. இச்சித்திரங்களை புரிந்துக் கொள்வதன் மூலம், எந்த ஒரு வளரும் நாடும், அதன் குடிமக்களும் தங்களை சுற்றி பின்னப்படும் ஒரு தந்திர வலையை புரிந்துக் கொள்ள இந்த நூல் உதவும். மேற்குலகின் இத்தகைய ஏதேச்சதிகாரத்தை சாத்தியப்படுத்தும் மத மற்றும் பண்பாட்டு அமைப்புகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளத் தேவையான வழிமுறைகளை கண்டடைய இந்த நூல் உதவும். அந்த வகையில் தமிழ்ச் சூழலில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

குறிப்புகள் :

1. ‘Census in Colonial India and the Birth of Caste’ – Padmanabha Samarendra
EPW இதழில் வெளியான இந்த ஆய்வுக் கட்டுரையை இங்கே வாசிக்கலாம் : http://solvanam.com/wp-content/uploads/2011/12/Census%20in%20Colonial%20India%20and%20the%20Birth%20of%20Caste.pdf

2. ‘வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்’(பக்கம் 7) – எஸ்.இராமச்சந்திரன்

3. Census of India, 1901, Vol 1: India, Part 1: The Report – H.H.Risley

4. உலகின் பல்வேறு மதங்களை குறித்து ஆராய்ந்த எஸ்.என்.பாலகங்காதரா இத்தகைய ஒரு கருத்தை முன்வைக்கிறார். அவரைக் குறித்து காலச்சுவடில் வெளியான ஒரு கட்டுரையில் இருந்து ஒரு சில வரிகள் : “கத்தோலிக்கச் சடங்குகளில் முடங்கிப்போயிருந்த கிறிஸ்தவத்தை விடுவித்து அது மேலும் பரவிப் பெருக ப்ரொடஸ்டன்ட் சீர்திருத்தக் கருத்துகள் வழிசெய்ததுபோலவே அறிவொளி இயக்கம் கிறிஸ்தவ இறைமையியலானது ‘செக்குலர்’ கருத்துகளாக, சமூகவியல், மானுடவியல், மனோவியல் தத்துவங்களாக, ‘வரலாறு’ என்ற புதிய துறையாக மற்ற பிற அறிவியல் விளக்கங்களாக உலகெங்கும் பரவிப்பெருக வழிசெய்துள்ளது என்கிறார் பாலகங்காதரா.”
http://www.kalachuvadu.com/issue-126/page51.asp

5. http://news.bbc.co.uk/2/hi/uk_news/politics/7136682.stm

6. Asia And Western Dominance A Survey Of The Vasco Da Gama Epoch Of Asian History – K.M.Panikkar. இப்புத்தகத்தை முன்வைத்து எழுதப்பட்ட ஒரு கட்டுரை : http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20805083&format=print&edition_id=20080508



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

*உங்களுக்கு தெரியுமா இந்த உண்மைகள்?* 👇👇🤔

1. *இயேசு என்பவர் ரோமானிய அரசுக்கு எதிராக போராடிய ஒரு பாலஸ்தீன போராளி என்பது உங்களுக்குத் தெரியுமா?* 🤔

2. *பிறக்கும்போது புனித குழந்தையாக பிறந்தவர் என்றால் இயேசு என்பவர் பிறந்த தேதி, பிறந்த மாதம், பிறந்த வருடம், என்று எந்த உறுதியான வரலாற்றுக் குறிப்பும் இல்லாதது தெரியுமா?*🤔

3. *இயேசு என்பவர் மேரி மகதலேனா (Mary Magdalene) என்பவரின் கணவர் என்பது தெரியுமா?*🤔

4. *இயேசு என்பவர், 4000 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்திய கடவுளான Horus என்பவருடைய முழுக்கதையையும் ஒன்று விடாமல் சுமந்து திரிபவர் என்பது தெரியுமா?*🤔

5. *பாலஸ்தீனத்தில் பிறந்த இயேசு என்பவருடைய ஐரோப்பிய உருவம் மற்றும் முகமானது, சீசர் போஜிய (Cesare Borgia) அதாவது போப் அலெக்சாண்டர் VI அவருடைய மகனின் மாடல் (1490)என்பது தெரியுமா?*🤔

6. *இயேசுவிற்கு அரசு துரோகம் செய்தார் என்று குற்றத்தின் அடிப்படையில் சிலுவையில் அறையப்பட்ட அந்த மூன்று ஆணிகளை எல்லோருக்கும் முன்னிலையில் புடுங்கி தன் ஆற்றலை காண்பிக்க முடியாமல் ஒன்பது மணி நேரம் வரை கதறி அழுது மயங்கியது தெரியுமா*?🤔

7. *கள்ளப் பாதிரிகள் தசமபாகம் வாங்கி தன் பிழைப்பு நடத்துவதற்காக ஒரு அப்பாவி பாலஸ்தீன இளைஞனை அரிதாரம் பூசி கடவுளாகிய கதை உங்களுக்கு தெரியுமா?*🤔

*இந்தத் தகவல்களை நீங்கள் அறிவது மட்டுமின்றி இவைகளை அறியாமல் மதம் மாறிச் சென்ற நமது முந்தைய ஹிந்து சொந்தங்களுக்கும் அறியச் செய்து அவர்களுக்கும் உதவுங்கள்*.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

"மதமாற்றம்" ------ மிகப் பழங்காலமுதல் இந்துக்களை மதம் மாற்ற நடைபெறும் முயற்சிக்காக
ராபர்ட் தெ நொபிலி(Robert de Nobili 17ஆம் நூற்றாண்டு)(இத்தாலிநாட்டினர்,
ரோமன் கத்தோலிக்கச் சபையினர்) முதல் அப்பேத் யுபுவா,வில்லியம் காரீ,
மார்ஷ்மன், வில்லியம் ஆடன்,யேட்ஸ்,மாக்ஸ்முல்லர், கர்னல்போடன்,வில்சன்,
ஜான்ம்யூர், :பான்ஷா மிடில்டன், பாமர்ஸ்டன் போன்றோர் மற்றும் பலர் இந்தியாவில்
தம் வாய்வண்ணம் காட்டினர்.
இவருள் பிரான்ஸிலிருந்து வந்து முப்பதாண்டுகளுக்கும் மேல் தீவிரமாக முயன்றும்,
தன்பணியில் வெற்றியடையாத ,அப்பேத்யுபுவா(Abbe Dubois),
"கிறித்துவச் சமயத்தின்பாலுள்ள அக்கறையால், தான்மேற்கொண்ட நடவடிக்கை
களில் முன்னேற்றமோ, இந்தப்புனிதப்பணியில் இறங்கிய காலம் முழுதும்,
வெற்றிகண்டேன் என்றோ நான் சொல்லிக்கொள்வதற்கில்லை.
கட்டுப்பாடுகள், தரமிழத்தல்(Privations) இவற்றுக்கிடையில் நான் வாழ்ந்தது,
அந்த நாட்டின்(இந்தியாவின்) பழக்கமரபுகளோடு என்னை ஒன்றிணைத்துக்கொண்டது;அந்நாட்டினரின் ஒருசார்புத் தன்மைகளோடு சேர்ந்து
கொண்டது. அவர்களைப்போலவே-அநேகமாக ஒரு இந்துவைப்போலநான் நடந்து
கொண்டது, எல்லோருக்கும் வேண்டிய பொருள்கொடுத்தது,
சிலருக்கு ஏதோவிதமான ஆதரவு தந்து காப்பாற்றியது, இவை யாவுமே என்னுடைய
"மதமாற்றவேலைகளில்" பலன் தராமற்போயின.
ஒரு சமயப்பரப்பாளனாக இந்தியாவில் நான் தங்கியிருந்த நீண்ட காலகட்டத்தில்

உள்ளூரைச்சேர்ந்தவொரு "சமயப்பரப்பாளரின்" உதவியோடு,
ஆண்-பெண் இருபாலரிலும் "நூறிலிருந்து முன்னூறுக்குட்பட்டவர்களை" மட்டுமே
மாற்றம் செய்ய முடிந்தது. இந்த எண்ணிக்கையில் மூன்றில் இருபங்கினர்
பறையர் அல்லது பிச்சைக்காரர்கள்; மற்றவர்களில் சூத்திரர்கள், நாடோடிகள்
"இனவிலக்கு" செய்யப்பட்டவர்கள்(இவர்கள் வகைதுறை ஆதாரமேதுமின்றிப் 
பல்வகைத் தொடர்புகளுக்காகக்-குறிப்பாகத் திருமணத் தொடர்புகள்" பொருட்டுக்
கிறித்துவத்துக்கு மாறியவர்கள், அல்லது)வேறு சில எண்ணங்களோடு வந்தவர்கள்
ஆகியோரே அடங்குவர்" என்றெழுதினார்.
ஆதாரம் பிரம்மதத் பாரதி நூலின் தமிழாக்கம் பி.எம். சுந்தரம்.(பேரறிஞர்மாக்ஸ்
முல்லர். ஒருமீள்பார்வை என்றநூல். பக்கம் 22,23)
(வெள்ளைக்காரியை மணக்கும் ஒரே குறிக்கோளுடன், கிறித்துவத்தைத் தழுவிய வசதிமிக்க சில இந்தியர்கள் 18,19ஆம் நூற்றாண்டில் இருந்தனர்) இப்படிப் பலரும் மதம்மாற்றியுள்ளனர்.

ஆனால் பெருமளவில் அதே இத்தாலி தேசத்தார் இன்று பெருமளவு வெற்றி கொண்டதற்குக் காரணம் உள்ளூர் அரசியல் வாதிகளே என அறிவீர்கள்.

இந்துக்களின் சபலங்களே வெற்றிக்குக்காரணம். பழங்காலப் பெரியோர்களின் தியாகங்களுக்கு ஈடில்லை. போற்றுவோம் அவர்களை.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Guru Tvs பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்றால் 
தலித்துகளும் ஆரியர்களே!
பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்றால் 

தலித்துகளும் திராவிடர்களே!
---------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------
ஆரியப் படையெடுப்பு என்பது அப்பட்டமான பொய் என்று 
டாக்டர் அம்பேத்கார் நிரூபித்துள்ளார். இதோ அவர் கூறுவதைப் 
படியுங்கள். 

டாக்டர் அம்பேத்கார் பின்வருமாறு கூறுகிறார்:

எனவே எனது முடிவுகள் பின்வருமாறு:-
1) ஆரிய இனம் என்று எந்த ஒரு இனமும் வேதங்களில்  குறிப்பிடப் படவில்லை.

2) இந்தியாவின் மீது ஆரிய இனத்தவர் படையெடுத்தனர்  என்பதற்கோ, இந்தியாவின் பூர்வ குடிகளாகக் கருதப்படும்  தாசர்களையும் தஸ்யூக்களையும் வென்றனர் என்பதற்கோ  வேதங்களில் எந்த ஆதாரமும் இல்லை.

3) ஆரியர்களுக்கும் தாசர்கள்-தஸ்யூக்களுக்கும் இடையிலான  வேறுபாடு இன ரீதியான வேறுபாடே என்பதற்கு எந்த  ஆதாரமும் இல்லை.

4) தாசர்கள் தஸ்யூக்களிடம் இருந்து ஆரியர்கள் உடலின் நிறத்தால் வேறுபட்டவர்கள் என்ற கருத்துக்கு வேதங்களில் எந்த ஆதாரமும் இல்லை. 

"மானுட உடலளவிடும் இயல்" (anthropometry) என்பது   
மனிதர்களின் இனத்தைத் தீர்மானிப்பதற்கான நம்பத்தகுந்த  அறிவியல் என்றால், பார்ப்பனர்களும் தீண்டத் தகாதவர்களும்  ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே என்று அதன் அளவீடுகள்  நிறுவுகின்றன.


இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், பார்ப்பனர்கள்  ஆரியர்கள் என்றால் தீண்டத் தகாதவர்களும் ஆரியர்களே.

பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்றால் தீண்டத் தகாதவர்களும்  திராவிடர்களே. 
(மொழிபெயர்ப்பு: இக்கட்டுரை ஆசிரியர்) ஆங்கில மூலம் கீழே காண்க.
My conclusions are:

1. The Vedas do not know any such race as the Aryan race.

2. There is no evidence in the Vedas of any invasion of India by the Aryan race and it having conquered the Dasas and Dasyus supposed to be the natives of India.

3. There is no evidence to show that the distinction between Aryans, Dasas and  Dasyus was a racial distinction.

4. The Vedas do not support the contention that the Aryans were different in colour from the Dasas and Dasyus…..If anthropometry is a science which can be depended upon to determine the race of a people….. (then its) measurements establish that the  Brahmins and the Untouchables belong to the same race. From this it follows that  if the Brahmins are Aryans the Untouchables are also Aryans. If the Brahmins are Dravidians, the Untouchables are also Dravidians…..’

(B. R. Ambedkar, ‘Writings and Speeches’ [Bombay: Education Department, Government of  
Maharashtra, 1986-1990], Vol. 7, p. 85 and 302-303, quoted in Koenraad Elst’s Indigneous Indians, Agastya to Ambedkar, op. cit., p.410-411).

தமிழில் படிக்க விரும்புவோர்  டாக்டர் அம்பேத்கார் பேச்சும் எழுத்தும்  தொகுதி-13, பக்கம் 130-ஐப் படிக்கவும்.

ஆக, ஆரிய திராவிட இனக்கொள்கையானது போலியானது, பொய்யானது, கற்பனையானது, இந்தியர்களைப்  பிரித்தாள ஆங்கிலேயர்கள் உருவாக்கிய மோசடியான  கோட்பாடு என்பதை டாக்டர் அம்பேத்கார் ஆணித்தரமாகக் கூறுகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

#கால்டுவெல் மிஷனரிகளின் தத்துப்பிள்ளையே தமிழகத்தில் தோன்றிய #திராவிட இயக்கமும், #தனித்தமிழ் இயக்கமும்.

மிஷனரிகளின் பிரித்தாளும் சூதின் வெளிப்பாடுகளே,

ஆரியம் -திராவிடம் 
பிராமணர் -பிராமணர் அல்லாதோர்,
தமிழ் -சமஸ்கிருதம்,
சிறுதெய்வம் -பெருந்தெய்வம்

என பலவிதங்களில் நம் பண்பாடு கலாச்சாரங்களை பிரித்து ஒரு சார் மக்களை மதம்மாற்றுவது. அத்தோடு இந்து தர்மத்திற்க்கு எதிராக திருப்புவது என்பதே மிஷனரி கொள்கை.

மிஷனரிகள் திராவிட இயக்கத்திற்க்கு போட்ட பிச்சையே மேற்கண்ட கோஷங்கள்.

தமிழ்தாய் வாழ்த்து பாடிய மனோன்மனியம் சுந்தரம் பிள்ளை முதல், பாவாணர் வரை பெயரளவில் இந்துக்கள் போல் தோன்றினாலும் மிஷனரிகள் திட்டத்தை மொழிவெறி ஊட்டி செயல்படுத்தியவர்கள்.

#வீரமாமுனிவர், சீகன்பல்கு ஐயர் என மிஷனரிகள் அக்காலத்திலேயே வேதியர் கோலம் பூண்டு மதமாற்றத்தை பரப்பியவர்கள். அதன் தொடர்ச்சியே இன்று நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டுருந்தாலும், பெயரளவு இந்துவாக இருந்தாலும், செயலும் சொல்லும் மிஷனரிகள் திட்டத்தை பரப்புவதாக உள்ளது.

அன்று ஜி.யு. போப் திருவாசகத்தை மொழிப்பெயர்த்ததாக விளம்பரபடுத்தியதும், இன்று ஜெகத் கஸ்பர் திருவாசகம் பற்றியும், சிவன் பற்றி பேசுவதெல்லாம் பகையாளியை உறவாடி கெடு என்பதன் பிரதிபலிப்பாகும்.

திருவாசகத்தை முழுவதும் உணர்ந்தவன் ஏன் நெற்றியில் திருநீறு இடவில்லை என காஸ்பரிடம் கேளுங்கள் உடனே அவன் சுயரூபம் வெளிவரும்.

பொதுவாகவே மிஷனரிகள் மக்களின் உணர்வுரீதியான விசயங்களான மொழி, இனம், என்ற விசயங்களை உசுப்பேற்றி அரவணைப்பதுபோல் தங்கள் திட்டத்தை செயல்படுத்திவிடுவார்கள்.

கடந்த நூறு ஆண்டுகால தமிழக அரசியல் மிஷனரிகள் திட்டத்திலேயே செயல்பட்டுவருகின்றது. அதன் மற்றொரு பெயர் திராவிட ஆட்சி.

இங்கு பெயரளவு இந்துக்களாக இருக்கும் திருமுருகன் காந்தி, பாரதிராசா முதல், இன்றைய சோபியாவரை, பொதுவுடமை என்ற மார்க்கிசீய பின்புலத்திலும் மிஷனரிகள் நிற்க்கின்றனர்.

தமிழகத்தை பொருத்தவரை அரசியலை ஆக்ரமித்த மிஷனரிகள் , ஆன்மீகத்தையும் மறைமுகமாக ஆக்ரமிக்க முயன்றனர்.

ஆன்மீகத்தில் வைணவம், ஸ்மார்த்தம், சமணம் என்ற இந்த சமயங்கள் எதுவுமே மிஷனரிகளுக்கு இடம் கொடுக்கவில்லை.

ஆனால் #சைவசமயம் மிஷனரிகளின், கூடாரமாகிய பல வருடங்களாகிவிட்டது. மிஷனரி தத்துப்பிள்ளையாகிய திராவிடம், மார்க்சீயம் சைவசமயத்தில் புகுந்து நச்சை பரப்பிவருகின்றது.

அதன் வெளிப்பாடே இன்றைய #சித்தாந்தபெருமன்றம.

மற்றும் சில ஆதின தலைமை பீடங்களே தங்கள் மடத்தின் முன் நூல் வழி நிற்காமல் காலத்திற்கே என்ற சமரசம் கூறி, மிஷனரி, திராவிட மார்க்சிய கருத்துகளை பேசுவது உபதேசிப்பது.

தில்லை நடராஜரை பீரங்கிவைத்து தகர்ப்பேன் என்றும், ஞானசம்பந்தரை எந்தபால் குடித்தார் என்றும், அம்பிகையை அவதூறாக உரைத்தவரின் மரணத்திற்க்கு,நெற்றி நிறைய விபூதி ருத்திராக்ஷம் அணிந்தவர்களும் இரங்கல் தெரிவித்ததில் இருந்து சைவசமயத்தில் திராவிடம் புகுந்து பல காலமாகிவிட்டதை உணரமுடிகின்றது.

இவர்களெல்லாம் பெயர்தாங்கி அடியார்கள் அவ்வளவே.

எப்படி பெயரளவில் இந்துக்களாக இருந்துக்கொண்டு, மிஷனரிகளாக உள்ளார்களோ அதுபோல் பெயரளவு சிவகோலத்தில் இருந்துக்கொண்டு திருட்டு திராவிட கொள்கையை சைவசமயத்தில் இறக்குமதி செய்துகொண்டிருப்போர் .

ரிட்டேட் வயதில் இன்று சைவசமய சட்டாம்பிள்ளையாக வலம் வரும் அனைவரும், இந்த திராவிட அரசியலில் மூழ்கி, சைவசமயத்தை திராவிடமயமாக்க முயல்பவர்கள்.

இப்படியான மிஷனரிகளின் இந்த தந்திரங்களை சைவசமயத்தில் முதலில் இறக்குமதிசெய்தவர்கள் மறைமலையும், கா.சு.பிள்ளையும் .

இதில் கா.சு .பிள்ளை அவர்கள் பழுத்தசிவபக்தர் என்பதால், பிராமணர் வெறுப்பே ,அறிந்தோ அறியாமலோ சைவசமயத்தில் பிரிவினையை ஏற்படுத்த அவர் காரணமாகிவிட்டார் .

மறைமலைகளை பொருத்தவரை சைவசமயத்தில் மொழிசார்ந்த மிஷனரிகளின் திட்டத்தை அறிந்தே செயல்படுத்தியதாகவே தோன்றுகின்றது.

எப்படியாகிலும் சைவசமயத்தில் இன்று மிஷனரி +திராவிட +மார்க்சிய கருத்து புல்லுருவிகள் ஊடுருவ அடித்தளம் இட்டவர்கள் இவர்கள் இருவரே .

இதில் உண்மையில் குழம்பி நிற்பவர்கள், காப்பற்றப்படவேண்டியவர்கள் பழ அடியார்களும், பாமர அடியார்களும் .

இன்றும் சைவசமயம் திருமுறைவாக்குகளோடு நடைபயில துணைநிற்பவர்கள், இந்த பழஅடியார்ளும், பாமர அடியார்களும் .

மற்றப்படி சைவசட்டம்பிள்ளைகளாலும், சித்தர், பித்தர், அன்பே சிவம் கூட்டங்களால் சைவசமய வியபாரமே நடைபெற்றுவருகின்றது.
சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேயசிவம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மிஷனரிகளின் பிரித்தாளும் சூதின் ஆரம்பம் கல்கத்தாவில் தொடங்கும் - உலகிலேயே கல்வி அதிகமாய் பரவலாய் அனைத்து பிரிவினரிடமும் பரவி இருந்தமையை சிதைக்க சீராம்பூர் மிஷனரி மற்றும் ஏசியாடிக் சொசைட்டி(1784லேயே துவங்கியது) .
ஏசியாடிக் சொசைட்டி மிஷனரிகள் கல்லூரி ஆங்கிலேய அரசின் அதிகாரிகளுக்கு இந்தியரை அடக்க பிரிவினை தூண்டும் வழிமுறை கற்றுத் தரும் பணி செய்தது.
ஏசியாடிக் சொசைட்டியின் சென்னை கிளை எல்லீஸ் மூலம் மொழி பிரிவினை நச்சை கண்டது, பிரபலப் படுத்தியது கால்டுவெல்.
தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரி(சி எஸ் ஐ), கத்தோலிக்க சென்னை லயோலா கல்லூரி & திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிகள் - தேவநேயப் பாவாணர்- கருணாநிதி துணை கொண்டு திருக்குறள் கிறிஸ்துவம் என ஆக்கும் பணியின் வேர் கா.சு .பிள்ளை



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பெரியார் இல்லாவிட்டால் நீ ஆடுமேய்ப்பாய், மீன் பிடிப்பாய், தக்காளி பறிப்பாய், படிப்பே பெரியார் கொடுத்தது, ஏ நன்றி கெட்டவனே அவர் இல்லை என்றால் ஏடு எடுத்திருப்பாயா? எழுதுகோல் பிடித்திருப்பாயா என ஏக அழிச்சாட்டியம்

இங்கே கல்வி என்ன பெரியார் காலத்திலா தொடங்கிற்று? வரலாறு தெரியாத மடையர்கள் என்னமோ சொல்கின்றார்கள்

இங்கு நவீன கல்வியினை தொடங்கி வைத்தது கிறிஸ்தவ மெஷினரிகள் 1700களிலே நாயக்க மன்னர்களிடம் அனுமதி பெற்று அவர்கள் கல்வி கொடுத்தார்கள்

முதலில் கொடுத்தது கத்தோலிக்கர்கள் குறிப்பாக இயேசு சபை துறவிகள், அதன் பின் பிரிவினை கிறிஸ்தவர்களும் தொடங்கினர்

சந்தேகமில்லை, அந்த கல்வியும் அதன் பின் மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு தாவுவதும் நடந்தது

இந்தியா இலங்கை என்ற இரு நாடுகளிலும் இது நடக்க சுதாரித்த இந்துக்கள் அன்றே அதாவது 1800களிலே கல்வி நிலையங்கள் தொடங்கினர்

இந்து பள்ளிகள், இந்து கல்லூரிகள் இப்படித்தான் தொடங்கின‌

ஆதீனங்களும் இன்னும் பல பெரும் இந்து தொழிலதிபரளும் அப்படி அள்ளி கொடுத்தனர்

நெல்லையில் பாரதி பணியாற்றிய இந்து கல்லூரி அன்றே இருந்தது, பெரியாரிடம் வரும் முன் அண்ணா படித்த பச்சையப்பா கல்லூரி அன்றே இருந்தது

இன்னும் ஏராளம்

வெள்ளையர் பள்ளி கல்வியில் நிற்க இந்துக்களோ பல்கலைகழகம் கல்லூரி என சென்றனர், பின்னர் மிஷினரிகளும் கல்லூரி தொடங்கினர்

சேவியர்ஸ், லயோலா என்ற கல்லூரிகள் இப்படி முளைத்தன‌

செட்டியார்களும், ஆதீனங்களும் கல்வி பணிக்கு அள்ளி கொடுத்தது கொஞ்சமல்ல..

அண்ணாமலை செட்டி, அழகப்ப செட்டி போன்றோரும், மதுரை, திருவாடுதுறை ஆதீனம் எல்லாம் அதில் முக்கியமானவை

இஸ்லாமியரில் பலரும் முன்வந்து கல்வி நிலையம் தொடங்கினர், வடக்கே அலிகார் முதல் இங்கும் ஏகபட்ட இஸ்லாமிய கல்வி நிலையங்கள் உருவாகின‌

இப்படி கிறிஸ்தவ மெஷினரிகளும், இந்து அமைப்பினரும் , இஸ்லாமியரில் பலரும்கல்வி கொடுத்தபொழுது பெரியார் பிறக்கவே இல்லை

பள்ளி கல்லூரி பெருகி கொண்டிருந்த காலத்தில் பெரியார் மஞ்சள் மண்டியில் கணக்கு எழுதிகொண்டு சம்பாதித்தார்

நீதிகட்சி பெரியாருக்கும் மூத்தது , அந்த நீதிகட்சியிலே தாழ்தத்தபட்டவன் பன்னீர்செல்வம் வழக்கறிஞராக இருந்து லண்டன் மாநாட்டில் பேசிய காட்சி எல்லாம் வரலாற்றில் இருக்கின்றது

பெரியாரா பன்னீர்செல்வம், பிட்டி தியாகராஜர், பனகல் அரசரை எல்லாம் படிக்க வைத்தார்?

அன்றே பள்ளிகள் இருந்தன‌

நெல்லையில் மட்டும் 150 ஆண்டுக்கு முந்தைய பள்ளிகள் ஏராளம, சிறிய கிராமான வடக்கன் குளத்திலே இருக்கின்றது

பச்சையப்பா கல்லூரி, யாழ்ப்பாண இந்து கல்லூரி இன்னும் இந்தியாவின் பல இந்து கல்லூரிகளுக்கு வயது பெரியாரை விட அதிகம்

இதெல்லாம் கடந்து சுதந்திர இந்தியாவில் கிராமம் எல்லாம் பள்ளி தொடங்கியவன் காமராஜர்

பெரியார் இல்லை என்றால் நான் படித்திருக்க முடியாது என சொல்லும் பதர்கள் எல்லாவற்றிற்கும் ஒன்றை சொல்ல விரும்புகின்றேன்

நான் படித்த நிறுவணம் எல்லாம் பெரியார் மஞ்சள் மண்டியில் கணக்கு எழுதி, காசியில் சுற்றிய காலத்திலே தொடங்கபட்டவை

பெரியாருக்கு முன்பே இங்கு கல்வி இருந்தது

சும்மா ராஜாஜி குலகல்வி அதை பெரியார் தடுத்தார் என்பதெல்லாம் வாக்கு அரசியல்., அரசியல் குப்பை பொய்கள்

பெரியாரிடம் வரும்பொழுதே அண்ணா இரு எம்.ஏ முடித்திருந்தார். பெரியார் படிக்க வைத்தாரா?

இன்னும் நீதிகட்சி பன்னீர்செல்வம் போல ஏகபட்ட தாழ்த்தபட்டவர்கள் பெரும் பிம்பமாக உருவானார்கள்

கருணாநிதி 7ம் வகுப்பில் பெயிலாகி பெரியாரிடம் ஓடியவர், அவர் படித்திருந்தால் நிச்சயம் படித்திருக்கலாம்

ஏன் கலாம் படிக்கவில்லையா? பெரியார்தான் படிக்க வைத்தாரா?

இங்கு திறமையும் தகுதியும் உள்ள தாழ்த்தபட்டவர்கள் மேலே வர கல்வியும் இன்னபிற வாய்ப்பும அன்றே இருந்தன‌

அருள் எனும் தாழ்த்தபட்டவர் அன்றே ஐ.ஜி ஆகவில்லையா?

கலைதுறையில் தாழ்த்தபட்ட என்.எஸ்.கே கலைஞர் எல்லாம் சம்பாதிக்கவில்லையா? சாதி தடுத்ததா?

சும்மா பெரியார் இல்லாவிட்டால் மரமேறுவோம் , மீன்பிடிப்போம், கோழிமேய்ப்பொம் என்பவன் எல்லாம் இன்றும் கோழிமேய்க்க மட்டும் தகுதி உள்ளவன்

நீங்கள் இருக்கும் மாநிலத்தில் ஏன் டாஸ்மாக் பெருகாது? ஏன் ஏமாற்றுகாரன் ஆளமாட்டான், ஏன் மாநில கடன் 4 லட்சம் ஆகாது?

உங்கள் அறிவுக்கு பழனிச்சாமி ஆட்சி கவிழ்ந்தால்தான் ஆச்சரியம், நீடிப்பதில் ஆச்சரியமே இல்லை

சும்மா இருந்தால் பெரியார் இல்லாவிட்டால் ரயில் வந்திருக்காது, விமானம் பறந்திருக்காது, மொபைல் வந்திருக்காது, இணையம் வந்திருக்காது என கிளம்பி விடுவார்கள் போல



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

நூல் வெளியீடும் திறனாய்வும்:" தொல்லியல்- தமிழர் வரலாற்றுத்தடங்கள் - சிந்துவெளி முதல் கீழடி வரை " கருத்துப்பட்டறை வெளியீட்டில் பேராசிரியர்கள் ந.இரத்தினக்குமார், பெ.க.பெரியசாமி தொகுப்பில் வெளிவந்துள்ளது. 2017 மே மாதம் மதுரையில் கருத்துப்பட்டறை ஒருங்கிணைத்த கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளோடு காத்திரமான கட்டுரைகளையும் உள்ளடக்கி வெளிவந்துள்ளது.

1.தொல்லியல் அறிமுகம் 
2. ஓவியம்- எழுத்து- நடுகல்
3.அகழாய்வுகள் 
4.தொல் நகரங்களும் பெருவழிப்பாதைகளும் 
5. வைகை நதி நாகரிகம்- மதுரை- கீழடி என்ற ஐந்து பெருந்தலைப்புக்குள் 18 ஆளுமைகளின் கட்டுரைகள் அடங்கிய விரிவான தொகுப்பு.

இடம்பெற்ற பதினெண் கட்டுரைகளின் கட்டுரையாளர்கள்: ( கட்டுரை வரிசைப்படி)
1.சொ.சாந்தலிங்கம், 2.ந.கோவிந்தராசன், 3.நொபுரு கரோஷிமா ( மொழியாக்கம் க.காமராசன்)
4.காந்திராஜன், 
5.நடன காசிநாதன், 
6. வேதாச்சலம், 7.பெ.க.பெரியசாமிராஜா, 8.ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.பணியாளர், 9.ஆ.சிவசுப்பிரமணியன், 10.க.ராஜன், 11.வீ.செல்வக்குமார், 12.ந.அதியமான், 13.ராஜ்கவுதமன், 
14. பாவெல்பாரதி, 
15. மகாராசன், 16.சு.கண்ணன், 17.சு.வெங்கடேசன், 18.ந.இரத்தினக்குமார்.

26.08.18. அன்று மதுரையில் நடைபெற்ற விழாவில் பாவெல்பாரதி நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். கருத்துபட்டறை பரமன் வரவேற்றார். மேனாள் முதல்வர் முரளி வெளியிட பசுமைநடை அ.முத்துக்கிருஷ்ணனும் குறிஞ்சிக்கூடல் கனகவேலும் பெற்றுக்கொண்டனர்.

மேனாள் புலத்தலைவர் இராமசுந்தரம் வாழ்த்துரையாற்றினார்.

நூலைத்திறனாய்வு செய்து கீழடி ஆய்வு அலுவலர் ஆசைத்தம்பி, பேராசிரியர் ஆனந்தக்குமார், மேனாள் புலத்தலைவர் இ.முத்தையா ஆகியோர் பேசினர்.

பேராசிரியர் பெரியசாமி ஏற்புரை நிகழ்த்தினார்.

நூல் கிடைக்குமிடம் கருத்துப் பட்டறை , 2, முதல்தளம், நாகாவளாகம், 4 வது நிறுத்தம், திருநகர், மதுரை 6.
9842265884, 8072108515.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 
10 mins · 
 

ஒரு தேசத்தில் சிகரெட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது.
அங்கு உள்ள சிகரெட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது.

அவன் பிரச்சார உக்தியை கையாண்டான்.
அதற்கு ஒரு விளம்பரம் செய்தான்.
சிகரெட் குடித்தால்....
1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்
2 உங்களுக்கு முதுமையே வராது
3 பெண் குழந்தை பிறக்காது

இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரெட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் ஒருவர் இந்த கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது. சிகரெட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜரானார்.
நீதிபதி அவரிடம், “ இப்படி ஒரு கருத்தை விளம்பரம் செய்து உள்ளாய்... இது அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே..!! “ என்று கேட்டார்.

அதற்கு அவன் சொன்னான்,
* முதலில் நான் என்ன சொன்னேன்...?
திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்.
ஆமாம் வரமாட்டான்.. காரணம் எப்பொழுது சிகரெட் குடிக்க ஆரம்பித்து விட்டார்களோ அப்பொழுதே இருமல்
வந்து விடும்.. இருமிக் கொண்டே இருப்பதால்
இவர்களுக்கு தூக்கம் வராது... முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரமாட்டான்.

* 2 வது என்ன சொன்னேன்

முதுமையே வராது... எப்படி வரும்...?
சிகரெட் குடித்தால் இளமையிலே செத்து விடுவான்
எப்படி முதுமை வரும்...?

* 3 வது என்னசொன்னேன்

பெண் குழந்தை பிறக்காது... எப்படி பிறக்கும்...? சிகரெட் டில் நிக்கோடின் எனும் நச்சு தன்மை இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும் பிள்ளை பேறே இருக்காது இதில் ஆண் என்ன பெண் என்ன பிள்ளையே பிறக்காது. “
என்று சொல்லி முடித்தான்.

அவன் சொன்னது சரிதான் நாம் தான் யோசித்து முடிவு எடுக்க தவறிவிட்டோம் என்று வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி.

இப்படி தந்திரமான பேச்சைதான் பலரும் கையாள்கிறார்கள். நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
========================================
இன்று எதிர்க் கட்சிகள் நடத்தும் பந்த்திற்கும் இதற்கும் நீங்கள் முடிச்சு போட்டுக் கொண்டால் கம்பெனி பொறுப்பல்ல !! :) :)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard