New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோவில் - சாதி மொழி சண்டைகள், நிலை என்ன? முன்பு எப்படி தீர்வு கண்டார்கள்?


Guru

Status: Offline
Posts: 24718
Date:
கோவில் - சாதி மொழி சண்டைகள், நிலை என்ன? முன்பு எப்படி தீர்வு கண்டார்கள்?
Permalink  
 


கோவில் - சாதி மொழி சண்டைகள், நிலை என்ன? முன்பு எப்படி தீர்வு கண்டார்கள்?

எப்போது எடுத்தாலும் கோவிலே அதை செய்யலாமே இதை செய்யவில்லை என ஏகத்துக்கும் அறிவுரைகளை இந்து அல்லாதோர் அள்ளி வீசுவதால் அதை விளக்கவும் முன்பு நாம் இதை எப்படி சமாளித்தோ என பகிரவும் இந்த பதிவு.

கோவில் நடைமுறைகளிலே இந்த இந்து அல்லாதோர் புரிந்துகொள்ளாதது ஒன்று இருக்கீறது. அது மற்ற மதங்கள் போலவே இந்து மதம், இந்து கோவில்கள் என சொல்வது. ஆனால் அப்படி அல்ல.

இந்துக்கோவில்களிலே சாமி உயிரோடு இருக்கிறார். இறை சக்தி அங்கே வாசம் செய்கிறார். அவரை நாம் கும்பிடவோ, வழிபடவோ போகவில்லை. பார்க்க போகிறோம், தரிசிக்க போகிறோம். நம்முடைய உறவினரை பார்க்கபோவது போல.

அவரை பார்த்து நம்மை அவர் பார்த்து நம்முடைய முறை கேட்டு, குறை கேட்டு நிவர்த்தி செய்வார் என போகிறோம். அவரு நல்லாத்தான் இருக்கார் சும்மா போயி பார்த்துட்டு வரலாம் எனவும் போலாம். போயி அவர்கிட்டையே வேத விசாரம் பண்ணிட்டும் வரலாம்.

மற்றைய மதங்கள் போல கோவில்கள் வெறும் கட்டிடங்களோ, சிலைகளை வைத்திருக்கும் இடங்களோ அல்ல. இறைவனே வசிக்கும் இடம், அங்கே அவருக்கு அவர் விரும்படிய படி தினப்படியான கடமைகள், சடங்குகள் நடைபெறுகிறது.

இந்த வித்தியாசம் மிகவும் முக்கியம். ஏன்னா நாம இஷ்டத்துக்கு ஏன் கோவிலை மாத்த முடியாது என்பதற்கு இந்த அடிப்படை முக்கியம்.

அந்த இறை சக்தி என்பது என்ன? எப்படி அங்கே வாசம் செய்கிறார் என்பது தனியே விளக்கவேண்டியது. இதற்கு அறிவியல் ரீதியான காரணம் உண்டா? அது என்ன என்பதை எல்லாம் இங்கே விளக்க விரும்பவில்லை. அதை தனியா வேண்டுமானால் எழுதுகிறேன்.

கோவில்களிலே அந்த இறை சக்தி பலவாறாக வரலாம்.

இறைவனே தானாக வந்து தங்கியதால்
இறை அவதாரங்கள் நிறுவியதால் அல்லது பூசித்ததால்
தேவ, அசுர, கந்தவர்கள் எனும் தேவாதிகள் நிறுவியதால் அல்லது வழிபட்டதால்
முனிகளும் ரிஷிகளும் நிறுவியது
மனிதர்களால் சடங்குகளாலும் வழிபாட்டாலும் இறைசக்தி நிலை நிறுத்தப்பட்டிப்பது

அப்படி இறை சக்தி இருப்பதை குறிப்பது சாந்நித்தியம் . சாந்நித்தியம் இருக்குமிடம் சந்நிதி.

தேவாதிகள், முனிவராதிகள் அவர்களின் பிராணசக்தியாலே சந்நிதிகளை நிறுவி மனிதர்களாகிய நாம் பயனடைய வேத ஆகமங்களை அருளியிருக்கிறார்கள்.

சைவ, வைணவ தாந்திர ஆகமங்கள் அவற்றிற்றுக்குள்ளே சடங்கு முறைகளிலும் எப்படி இறை சக்தியை வரவழைத்து அந்த இடத்திலே இருக்கும் பொருளின் மீது நிலை நிறுத்துகிறார்கள் என்பதிலே வேறுபட்டாலும் அடிப்படை ஒன்று தான். பிரபஞ்சத்திலே அங்கிங்கெணாதபடி இருக்கும் இறைசக்தியை ஓரிடத்திலே வாசம் செய்விக்கிறார்கள்.

இடத்திலே ஆவாஹம் (ஆவாகனம்) எனும் செங்கிருத சொல்லுக்கு பதிலாக நிலைப்படுத்துதல் என்பதை பயன்படுத்தியிருக்கிறேன். ஆவாஹம் என்பது ஆயுர்வேத்திலேயும் உண்டு. மருந்துகளின் தன்மையை மாற்றி பயன்படுத்துவது.

இப்படி வாசம் செய்விக்கப்பட்டாலும் அங்கிருக்கும் இறைசக்தி நாளுக்குநாள் குறைந்துகொண்டு போகும் வாய்ப்பு உண்டு. உணவு எப்படி செரிமானம் ஆகி உடலுக்கு சக்தி தருகிறதோ அது போல சாமியின் சக்தியும் குறையும் வாய்ப்புண்டு என்பதால் குறிப்பிட்ட காலங்களுகு ஒரு முறை திரும்பவும் அந்த சக்தியை ஆவாஹம் செய்விப்பார்கள். அப்படி செய்வதற்கு ஜீர்ணோர்த்தாரணம் என பெயர். ஜீர்ணோர்த்தாரண கும்பாபிசேஷகம் என படித்திருக்கலாம். புதிதாக கட்டினால் நூதன, கோவிலை சீர்படுத்தினால் புனருத்தாரண என இந்த கும்பாபிசேகத்திலேயும் பல வகைகள் உண்டு.

ஆகம முறைப்படி அக்கினி வளர்த்து இறை சக்தியை அழைப்பார்கள் என்பதால் வேள்விகளிலும் யாகங்களிலும் ஹோமங்களிலும் இறைவனை அழைப்பதே நடக்கிறது. இறைவனும் அருவமாய் தோன்றி அருள்பாலிக்கிறார் என நம்பிக்கை.

இவற்றை நம்மூரிலே என்னவென்று சொல்லி வைத்திருக்கிறார்கள்?

கல்லுக்கு பூப்போட்டு வழிபடுகிறார்கள்
பாப்பான் கிலோ கணக்கிலே நெய்யை தீயிலே ஊற்றிவிட்டு போகிறான் என.

வேள்வி வளர்க்கும் அந்தணர்களுக்கு தனியே விதிகள் உண்டு. யார் வேண்டுமானாலும் சும்மா சில சொற்களை சொல்லி நெய்யை எடுத்து தீயிலே ஊற்றீனால் இறைசக்தி வந்து இறங்கிவிடாது.

அந்த முறையை, அருளை குருமுகமாகவோ அல்லது இறைவனிடத்திலோ பெற்றிருக்கவேண்டும். சொல்லித்தர குருவே இல்லை என்றால் இறைவனிடமே கேட்டு பெறலாம். யக்ஞவல்கியர் சூரியனிமிருந்தே வேதங்களை கற்றிருக்கிறார். சாதியிலே பிராமணராக இருந்தாலும் வேள்வி வளர்த்துவிட முடியாது. முறைப்படி தீக்கை எடுத்து முறைப்படி நித்ய கடமைகளை செய்து வந்தாலே அது முடியும். எந்த சாதியாக இருந்தாலும் குருவருளும் திருவருளும் தான் முக்கியமே ஒழிய வேறு எதுவுமே அல்ல.

மேலே நிலைப்படுத்துதல் என மொழிபெயர்ப்பை சொல்லியிருந்தேன் அல்லவா அதை இப்போ அந்நிய மதத்தினர் பயன்படுத்துகின்றனர். அவர்களின் செயல்களை இப்போது திருநிலைப்படுத்துதல் என அழைக்கிறார்கள். நாமோ சும்மா அவர்கள் வெறுமனே சிலைகளை மட்டும் திருடிக்கொண்டிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

இதெல்லாம் ஆகம முறைப்படி வந்த கோவில்களுக்குத்தானே எங்கூரு கருப்பசாமி, முனியாண்டிக்கு இல்லையே என கேட்டால் அவர்களும் அங்கே சற்சொரூபமாக வாசிக்கிறார்கள் என்றே அங்கே வழிபடுவோர் நம்புகிறோம். கொங்கிலே பண்டம் பாடி என சொல்லப்படும் கால்நடைகள், பயிர்களை காக்க கருப்பசாமி நேரிலேயே வருகிறார் என்பதே இன்னும் நம்பிக்கை, வழிபாடு, உண்மை, நிதர்சனம், தரிசனம் எல்லாமும். கருப்பசாமி கூப்பிட்ட குரலுக்கும் இன்றைக்கும் ஓடி வந்து காப்பாற்றுவார் என்பதை பலரும் அனுபவித்து உள்ளார்கள்.

பிள்ளையார் பிடித்து வைக்கும்போது வா என்றால் வந்து விடுவதால் தான் அவருக்கு செல்லப்பிள்ளையார் என்றே பெயர். ஆகம விதிப்படி தான் இறைவன் வந்து இறங்குவார் என்பது இல்லை. கூப்பிட்ட குரலுக்கு தூணிலும் துரும்பிலும் இருந்து வருவார். தூணையும் துரும்பையும் இறைவனாக ஞானியர் பார்க்கிறார்கள்.

எனவே இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கையே இறைவனை, இறை சக்தியை வழிபட்டு அதன் மூலம் வாழ்வது, கஷ்டங்களை தீர்த்துக்கொள்வது.

கோவில் சாதி பிரச்சினை மொழிப்பிரச்சினை என ஆரம்பித்துவிட்டு இவ்வளவு பெரீய்ய விளக்கம் எதுக்கு கேக்குறீங்களா? கோவில் என்பது வெறும் கட்டிடம் அல்ல அங்கே இருப்பது கல்லும் அல்ல என்பதை விளக்கவே நடைமுறையை விளக்கினேன்.

கோவிலுக்குள்ளே இறைவனே நித்யவாசம் செய்கிறார், உயிருள்ளவராய் மக்களை காத்து அருள்கிறார் என்பதால் சும்மா அந்த நடைமுறைகளை மாற்றிவிட முடியாது. அங்கே கட்டிடம் மட்டும் இல்லை. ஒன்றல்ல பல உயிர்கள் எப்போதும் வசிக்கிறார்கள். எனவே சும்மா மாற்ற முடியாது.

த்ராவிட் த்ராபைகளின் தீராவிஷ பரப்புரையானது முதலிலே செய்வது இந்த தெய்வ சக்தியை மறுப்பது தான். அவர்களின் பிரச்சாரத்தாலே நாமும் நாங்கள் கல்லை வணங்கவில்லை என மறுக்க ஆரம்பித்துவிட்டோம். ஆமாம் கல்லைத்தான் கும்பிடுகிறோம் அங்கே இருப்பது இறை சக்தி என்பதால்.

நாம், தாய், தந்தையர், நண்பர்கள், மக்கள் என எல்லோரும் வெறும் சதைப்பிண்டங்கள் தானே? அவர்கள் மீது அன்பு செலுத்தும்போது அங்கிருக்கும் உயிருக்கு அன்பு செலுத்துகிறோமா இல்லை சதைப்பிண்டத்திற்கா?

எனவே இந்த வித்தியாசம், இந்த உண்மையானது நம்மால் புரிந்துகொண்டு விளக்கப்படவேண்டும். இதிலே மாற்றம் கொண்டுவருவதும் முன்னோர் காட்டிய வழியிலும் சாஸ்திர சம்பிரதாயத முறையிலும்தான் இருக்கவேண்டும்.

மாற்றவேண்டுமானால் இரண்டு வழிகள் இருக்கிறன. ஒன்று சம்பந்தப்பட்ட கோவிலே வசிக்கும் ஆண்டவனின் கருத்தை கேட்டு அவருக்கு பிடித்திருந்தால் மாற்றலாம்.

இரண்டாவது வழி ஊர் மக்கள் கூடி எல்லோரும் ஒப்புக்கொண்டு அதற்கென விதிமுறைகளை வகுத்து அதன் படி நடப்பதாக இருந்தால் மாற்றலாம்.

என்ன மொழியிலே அர்ச்சனை செய்யவேண்டும், எந்த மொழியிலே பாடவேண்டும் என்பதெல்லாம் இறை விருப்பத்தை பொறுத்தே. அதை மாற்றவேண்டுமானால் ஒன்று இறைவிருப்பத்தை திருவுளச்சீட்டு, இறைவனே அறிவித்தல் போன்றவற்றால் கேட்டு மாற்றலாம். சில கோவில்களீலே தேவபிரசன்னம் எனும் அஷ்ட மங்கல பிரசன்னம் எனும் முறை மூலமும் இறைவிருப்பத்தை அறியும் வாய்ப்புண்டு.

கேரளாவிலே ஐயப்பன் கோவிலிலே எப்போது தேவபிரசன்னம் நடந்த போதும் சாமி நடைமுறைகளை மாற்ற ஒப்புக்கொள்ளவில்லை. சேமலையாண்டவர் கோவிலிலே இறைவனே பூசைபொருட்களை வைக்க உத்தரவிடுகிறார். எனவே அவரிடமே கேட்கலாம்.

கோவில் நடைமுறையை மாற்றவிரும்பவில்லை ஆனால் இந்த தேர் இழுப்பது, வீதிக்குள்ளே இறைவன் உலா வருவது, மண்டகப்படிக்கு சாமி எழுந்தருள்வது, யார் பூசை செய்வது போன்ற விஷயங்களிலே மாற்றம் வேண்டும் என்றால் அதை ஊர் மக்கள் கூடி பேசி முடிவு செய்ய வேண்டும்.

ஏன்? வேலை, காசு, பணம், நேரம்.

மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் திட்டமிட்டு அதற்கென நேரம் ஒதுக்கி அதற்கான செலவுகளை செய்து நேர்த்தியாக செய்து முடிக்கவேன்டிய விஷயங்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக திட்டமிட்டபடி பல ஆயிரம் குடும்பங்கள் காலங்காலமாக தங்கள் உடல், பொருள் , ஆவி எல்லாவற்றையும் போட்டு நடத்திவரும் விஷயத்தை சீட்டுக்கட்டு ஆடுவது போல தினமும் கலைத்து ஆடிக்கொண்டிருக்கமுடியாது.

ஆனால் அதற்கும் சாஸ்திர சம்பிரதாய வழிகள் இருக்கின்றன.

ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக தொண்டூழியம் செய்து வரும் குடும்பத்தினர், வம்சா வழியினர் போல நாங்களும் கோவிலுக்கு இன்ன ஊழியம் செய்கிறோம் அதற்கு இன்ன உரிமையை கேட்கிறோம் என பேசி அதற்கு கோவிலுக்கு பாத்யதை பட்ட எல்லோரும் ஒப்புக்கொண்டால் அதை தாராளமாக மாற்றலாம்.

கவனிங்க உரிமை கடமையோடு சேர்ந்து வருகிறது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கஷ்டத்திலும் நட்டத்திலும் கோவிலை காப்பாற்றி வந்தவர்களுக்கு இருக்கும் உரிமையை சும்மா தூக்கி எல்லோருக்கும் கொடுத்துவிட முடியாது. அதிலும் தங்களில் ஒருவராக உள்ளிருக்கும் இறைவனை கருதி உரிமை கொண்டாடும் கோவில்களிலே அதெல்லாம் நடக்கவே நடக்காது. கொடூர கொள்ளையர்களையே எதிர்த்து போராடி கோவிலை காப்பாற்றியவர்களுக்கு இந்த விஷயத்தை எவ்வளவு தலைமுறை ஆனாலும் போராடி வெல்ல முடியாதா என்ன?

இவிங்க இன்னைக்கு கேக்குறாங்க என கொடுத்துவிட்டு நாளைக்கு பூசைக்கு ஆள் வரவில்லை என்றால் என்னாவது? யார் அதை எடுத்து செய்வது?

இதெல்லாம் உள்ளூர் பிரச்சினைகள் என்பதால் தான் வெளியூர் ஆட்களுக்கு என்றைக்கும் பிரச்சினை இல்லை. இருந்ததில்லை. இது எல்லா இடத்திலும் தான். எடுத்துக்காட்டு மார்வாரிகள் என சொல்லப்படும் ஆட்கள். வடக்கே இருந்து வந்தாலே மார்வாரி/மார்வாடி ஆகிடுறாங்க இல்லையா? அவிங்கிட்டே இருக்கும் சாதிப்பிரிவு, உட்பிரிவு பற்றி என்னைக்காவது பிரச்சினை வந்திருக்கா?

மேலே சொன்னது போல கேட்டும் தரவில்லை என்றால் வழிகள் இரண்டு. ஒன்று இறைவனிடமே முறையிடுவது. இன்னோன்று இறைவனை தன்னோடு இன்னோர் இடத்திற்கு வந்து வசிக்குமாறு அழைப்பது.

சுருக்கமா தனியா இன்னோர் கோவில் கட்டிக்கவேண்டியது. இப்போ அண்ணன் தம்பிக்குள்ளே பிரச்சினைன்னா தனியா சொத்தை பிரிச்சு போறது மாதிரி சாமியை கூட்டிட்டு போயிடலாம். சாமி எங்கும் இருப்பவர் அப்படீன்றதாலே இரண்டு இடத்திலேயும் இருப்பார்.

வேலூர் தங்க கோவில் கட்டியபோதும் சரி, மேல்மருவத்தூர் கோவில் கட்டி பூசை செய்த போதும் சரி யாரேனும் போய் ஏதேனும் திட்டினார்களா?

அங்கே போகிறவர்களுக்கு நரகம் தான் என மற்ற மதங்கள் போல சொன்னார்களா? இல்லையே.

உங்களுக்கு பிடித்தபடி பிடித்த இடத்திலே பிடித்த இறைவனை கொண்டாட யாருக்கும் எந்த தடையும் இல்லை. அது உங்களுக்கும் இறைவனுக்கும் இருக்கும் பஞ்சாயத்து. எல்லோருக்கும் நாட்டாமையான இறைவன் தான் யாருடைய வழிபாடு சிறந்தது என முடிவு செய்யவேண்டும். மனிதர்கள் அல்ல.

அடுத்தவனையும் உங்களைப்போல் இருக்கும்படி வழிபடும்படி, நீங்கள் சொல்வது போல வழிபடும்படி செய்ய முயலும்போது தான் அதை வலுக்கட்டாயமாக செய்ய முயலும்போது தான் சண்டை அடிதடி எல்லாம் வருகின்றன.

ஒரு கோவிலிலே இருக்கும் வழி முறை பிடிக்காட்டி பக்கத்து கோவிலுக்கு போலாம். அங்கே கூட்டமா இருக்கா வீட்டிலேயே வழிபடலாம், இல்லே கோவிலே வேணுமா புதுசாவே கட்டிக்கலாம். மற்றவர்களை தொந்தரவு செய்யாதவரை எந்த இந்துவும் வந்து நான் சொல்லும் படி தான் எல்லோரும் சாமி கும்பிடனும் என சொல்லப்போறது இல்லே.

இறைவனே நேரிலே வந்து அருளும் போது என்ன பிரச்சினை? சந்தேகமின்னா நேரா கேட்டு பிரச்சினைய முடிச்சுக்கவேண்டியது தானே?

இவ்வளவு வழிகள் இருக்கும்போது ஏன் இந்து மதத்திலே பிரச்சினைகள் இருப்பதாக காட்டுகிறார்கள்? அவர்களுக்கு என்ன நோக்கம்? இந்து மதத்தை சீர்திருத்துவதா இல்லை அழிப்பதா?

இப்படி பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும் இந்து மதத்திற்கு ஏன் எல்லா கோவில்களிலும் ஒரே மாதிரியான வழிமுறை அதை எல்லோரும் ஏற்கவேண்டும் எதிர்பார்க்கிறார்கள்?

கோவில்களிலே ஒரே மாதிரி நடைமுறை இருக்கவேண்டும் அதை அரச நீதிமன்ற பலம் மூலம் நிறைவேற்றுவோம் என்றால்

உணவு விஷயத்திலேயும் எல்லோரும் சைவமாகவே இருக்கவேண்டும் அதை மக்கள் பலம் மூலம் நிறைவேற்றலாமே என மக்கள் கேட்பதிலே என்ன தப்பு?



__________________


Guru

Status: Offline
Posts: 24718
Date:
RE: கோவில் - சாதி மொழி சண்டைகள், நிலை என்ன? முன்பு எப்படி தீர்வு கண்டார்கள்?
Permalink  
 


Selvam Nayagam  "இப்படி பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும் இந்து மதத்திற்கு ஏன் எல்லா கோவில்களிலும் ஒரே மாதிரியான வழிமுறை அதை எல்லோரும் ஏற்கவேண்டும் எதிர்பார்க்கிறார்கள்?"
இந்த வாதத்தை பலமுறை என் நண்பர்களுக்கு சொல்லி புரிய வைக்க முயற்சித்திருக்கிறேன். சில சமயங்களில் பலன் கிடைத்திருக்கிறது. 0 - 1 / தேவன் - சாத்தான் என எளிய பைனரியில் எதிர்பார்ப்பவர்களால் இதை புரிந்து கொள்ள முடிவதில்லை... 

 

Sankar Narayanan Look. 2 things. 1. கல்லை கடவுளா கும்பிடுவோம்.

ஆனால் கடவுள் கல்லில் மட்டும் இல்லை என்றும் அறிவோம்.

சிலை பின்னமானால் விஸர்ஜனம் செய்து வேறு வைப்போம்.

இது தெரியாமல் ஒருத்தன் கோவிலல்லாம் இடிச்சிட்டா ஹிந்து மதம் அழியும்னு இடித்து இடித்து ஏமாந்தான்.

இன்னொருத்தன் அத புரிந்து கொண்டு எல்லாத்தையும் copy அடிச்சு கிட்டு இருக்கான்.

2. மொழி. தமிழ் நாட்டில் தமிழ்னா அப்ப குருவாயூர்ல மலையாளம், உடுப்பில கன்னடம்.காசியில் ஹிந்தியா?

எல்லா ஹிந்து கோவில்களும் எல்லா ஹிந்துக்களுக்கும் பொது. ஆகவே பொது மொழி



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard