New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அந்தணர்-திருவள்ளுவர் பூனூலை மறைக்கவே மேல்தூண்டு - கருணாநிதி


Guru

Status: Offline
Posts: 24603
Date:
அந்தணர்-திருவள்ளுவர் பூனூலை மறைக்கவே மேல்தூண்டு - கருணாநிதி
Permalink  
 


 அந்தணர்-திருவள்ளுவர் பூனூலை மறைக்கவே மேல்தூண்டு - கருணாநிதி

 
 
Valluvar%2Bold.jpg


 
14ம் நூற்றாண்டு சிலை மயிலாப்பூரில் கிடைத்த பூனூலோடு தான்.
 
 
 1960ல் திருவள்ளுவர் ஸ்டாஅம்ப் வெளியிட மத்திய அரசு படம் கேட்ட போது அன்றுவரை பெரும்பாலும் பூனூலோடு தான் வள்ளுவர் இருந்தார்,  திருவள்ளுவர் பூனூலோடனான அந்தணர் என்பதை சிலர் வற்புரித்தனர் ஆனால் திராவிட-கம்யூனிச- கிறிஸ்துவர் எனப் பலர் விரும்பாதிட    பூனூலை மறைக்கவே மேல் தூண்டு- 2011ம் ஆண்டு திருவள்ளுவர் தின கருணாநிதி தன் பேச்சில் குறிப்பிட்டதன் வ லைப் பக்க படக் காட்சி,
5a%2Ba.jpg
திருவள்ளுவர் வேதத்தை நேரடியாக 3 குறட்பாக்களில் கூறுகிறார்.
 
ஒரு அரசன் நல்லாட்சியை கூறும் அதிகாரம் -செங்கோன்மை
 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது  மன்னவன் கோல்.                              (543-செங்கோன்மை) 
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.   
 
மோசமான ஆட்சியினால் வரும் கேடு  கொடுங்கோன்மை 
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
 காவலன் காவான் எனின்.                               (560 கொடுங்கோன்மை) 
 நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.
 
திருக்குறளிற்கு பின்பான சிலப்பதிகாரம் சொல்வது 
  “கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை; 
வடமொழி வாசகம் செய்த நல்லேடு 
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)
 
 வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை 
 
 தமிழர் மெய் இயல் மரபில் வடமொழியில் பல முக்கிய நூல்கள் தான் பயன்படுத்தப் பட்டன எனத் தெளிவாய் நிருபிக்கிறது.
 
 
 பூனூல் அணிந்து திருவள்ளுவர் வேடமிட்டு வந்த சிறுவனை முதல்வர் கருணாநிதியும் மற்றவரும் மேடையில் இழிவாய் கேலி செய்யும் புகைப்படம் (சமுகவலை தளத்தில் பதிவுகள்)
34473267_1132940760177256_43976257331580
 
உலகில் பாரதம் மிகப் பெரும் செல்வ செழிப்பான நாடாய், கலை, இலக்கியம், தொழில் வளம் அனைத்திலும் என 2000 வருடங்கள் இருந்தன, கிறிஸ்துவ விஷநரிகள் இத்டியா நுழைந்து மோசமான ஆட்சியில் 600 லட்சம் கோடிகள் கொள்ளை அடித்தும், 10 கோடி மக்களை செயற்கை பஞ்சம் மூலமும் கொன்றான். இவற்றை மறைக்க ஆரியர் திராவிடர் எனும் போயான கட்டுக் கதையை பரப்பி பிரிவினை தூண்டி சென்றான்.
 
இந்திய தத்துவ ஞான மரபின் பெருமையை மறைக்கும் கிறிஸ்துவ காலனி ஆதிக்க அடிமைகளாய் இன்றும் திராவிட இயக்கங்கள் உள்ளன  என்பதன் ஒரு ஆதாரமே மேலுள்ள படம், மிஅகவும் அநாகரிமான மேடை நாகரீகமற்ற செயல்


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: அந்தணர்-திருவள்ளுவர் பூனூலை மறைக்கவே மேல்தூண்டு - கருணாநிதி
Permalink  
 


"கடங்காரி,.. இப்பத்தாண்டி குளிச்சுட்டு வரேன்! ஸ்வாமிக்கு பூஜை பண்றதுக்குள்ள, மேல வந்து விழறியே! இன்னொரு தடவை குளிக்கணும்! ஏற்கெனவே சைனஸ் பிராணனை வாங்கறது! ஒன்னோட புண்ணியத்துல அது இன்னமும் ஜாஸ்தி ஆகப் போறது!"

சலித்தவாறே புலம்பியபடி, மீண்டும் குளியலறைக்கு சென்றார், மஹாலக்ஷ்மி மாமி! சுருக்கமாய் அய்யர் மாமி!

"மன்னிச்சுடுங்கம்மா,.. மன்னிச்சுடுங்கம்மா,.. தெரியாம பின்னால நகந்து பெருக்கிகினு வண்ட்டேன்!" என்றபடி நிஜமான குற்ற உணர்வுடன் ஓரமாய் போய், மாமி குளியலறைக்கு போகும்வரை பார்த்தபடி நின்றாள், செண்பகம்! மாமி வீட்டில் பதினைந்து வருடமாய் உதவிக்கு, கிட்டத்தட்ட வீட்டோடு!

தற்செயலாய் அங்கு வந்த அவள் ஒரே மகன் முத்துவின் மனதில் கொப்பளிக்கும் கோபம்!

வீட்டுக்கு வந்ததும்,.. "இன்னா அந்த பாப்பாத்தி உன்ன அப்புடி திட்டுது,.. நீயும் கேட்டுக்கினு நிக்கிற?"

என்ற கடைசி வார்த்தை முடியும் முன், எது தாக்கியது என்பது 
தெரியாமல், போய் சுவற்றில் மோதி, சுருண்டு விழுந்தான்! தொடர்ந்த துடைப்பக்கட்டை அடிகள் நிற்க இரண்டு நிமிடம் ஆனது! அம்மாவுக்கு இவ்வளவு கெட்ட வார்த்தைகள் தெரியும் என்பதே அப்போதுதான் தெரிந்தது!

"வுட்ருமா, வுட்ருமா, வுட்ருமா, தெரியாம சொல்லிட்டம்மா,.. மன்னிச்சிரும்மா !" என்பதை ஐம்பது தடவையாவது புலம்பியிருப்பான்!

அடியின் வலியை விட அம்மாவின் கோபம் புரியாமல் வலித்தது!
———————
இரவு சுடுநீர் ஒத்தடம் கொடுத்தபடியே தலையை கோதி, பொங்கி அழுத அம்மாவை அவனுக்கு ரொம்பவும் பிடித்தது!

"ஏம்மா என்ன அப்படி அடிச்ச? உனக்கு சப்போர்ட் பண்ணிதானம்மா நான் அவளை... சாரிம்மா,.. அவுங்கள திட்டினேன்!?"

"எனக்கு அவுங்கதாண்டா தெய்வம். ...!"
----------
அரும்பு மீசை வளர ஆரம்பித்த அரைகுறை ஆண்மகனிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற சந்தேக நீண்ட மௌனத்துக்கு பின்,..

"பட்டணத்துக்கு கூட்டி வந்து, உன்னை வயித்தில சொமக்க வுட்டு, உங்கப்பன், சொல்லாம கொள்ளாம காணாம பூட்டான்!”

வடபழனி பஸ் ஸ்டாண்டுல தெச தெரியாம மெரண்டு போயி நின்னுகினு இருந்தப்போ, இவுங்க, அவுங்க வூட்டுக்காரோட வந்துகினு இருந்தாங்க! என்னவோ தெரியல... பாத்த ஒடனே ஓடி போயி, என்ன காப்பாத்த சொல்லி , கெஞ்சி அழுதேன்!

அப்புடியே கட்டி புடிச்சிக்கிட்டாங்க!

"பாவி மகளே,.. வயத்துல வேற சொமந்துண்டு இப்படி மலங்க மலங்க முழிச்சிண்டு நிக்கிறியே ! ஊரு உலகம் ரொம்ப கெட்டு கெடக்கு! .. ண்ணா, ஒரு ஆட்டோ பிடியுங்கோ! ஆத்துக்கு போயி பேசிக்கலாம்! பாவம் பசிக்கிறதோ என்னவோ!" 
----------
அவுங்க வூட்டுக்காரரும் ரொம்ப பாசமா இருந்தாரு! அவுங்க பொண்ணு வெளிநாட்ல இருக்காம்! என் வயசாம்! என்னை அவுங்க பொண்ணு மாதிரியே நடத்துவாங்க! ரெண்டு பேருமே!
----------
"எனக்கு சம்பளம்லாம் எதுவும் தரமாட்டாங்க!"

சட்டென சந்தேகமாய் பார்த்த மகனை,.. "மூதேவி! ஒடனே புத்தி பொறுக்க போயிடும்! அவுங்க எம் பேர்ல ஒரு பேங்க் அக்கவுண்டு தொறந்து அதுல மாசா மாசம் போட்ருவாங்க!"

இன்னமும் அவநம்பிக்கையுடன் பார்த்தவனை,.. "நாயே,.. எனக்கு ஏடிஎம் கார்டு எடுத்திருக்காங்க! நான்தான் நம்பரு போட்டுருக்கேன்! ஆனா, அவுங்கள கேக்காம ஒரு பைசா எடுக்க மாட்டேன் ன்னு சத்தியம் பண்ணியிருக்கேன்,.. ஒம்மேல!”

"எங்க காலம் முடிஞ்சப்புறமும் நீ யாரையும் நம்பாம, ஏன், ஒம்புள்ளையை கூட நம்பாம, காசுக்கு கஷ்டப்படாம, கவுரவமா வாழணும்! ஒம்புள்ளைய ஒழுங்கா படிக்க வைய்யி. பீஸ் கட்றது பத்தி நாங்க பாத்துக்கறோம்! அவன் எவ்வளோ படிக்கணும்ன்னு ஆசை படறானோ, அவ்வளவுக்கும் ஆற செலவு எங்க பொறுப்பு! ஆனா, நீதான் எப்படியாவது அவனை படிக்க வைக்கணும்.!”
----------
கொஞ்சம் கண்ணில் தெளிவு வந்தாலும்,..

"அப்போ,.. எதுக்கு உன்ன அப்புடி திட்டுனாங்க!?"

"போடா போக்கத்தவனே! அவுங்க வூட்டுக்கு வர்ற எல்லா உறவுக்கார புள்ளைங்களையும் அப்படித்தான் பேசுவாங்க! அதெல்லாம் மனசுல இருந்து வர்றதில்லை! ரெண்டு நிமிஷத்துல மறந்து போயிடும். நானும் நீயும் ஒழுங்கா சோறு திங்கறோமா ன்னு கவலை வந்து கேப்பாங்க!"
----------
"உனுக்குன்னு தனி டம்ளர் வச்சிருப்பாங்களாமே! மாரி சொன்னான்!" என்றவனை அறைய கையை ஓங்கியவள்,..

"பொறம்போக்கு,.. அப்படியே அப்பன் புத்தி! உங்கப்பன் என்னை தள்ளிக்கினு வந்தப்புறம், அவுங்க வூட்லதான் எனக்கு தனி யா எல்லாமே வச்சாங்க! உங்கப்பன் வூட்டுக்காரங்க பக்கத்து தெருவுல இருக்கிற எங்க ஜாதிக்காரங்களை கிட்டவே சேக்க மாட்டாங்க!"

"இங்க இந்த அய்யிரு அம்மா அவுங்க வூட்டுக்கு வர்ற யாரா இருந்தாலும் அவுங்க குடிக்கிற டம்ளர்லதான் காப்பி குடுப்பாங்க! காலையில அவுங்க கையால போடற காப்பிய ரெண்டு டம்ளர்ல ஊத்தி, ஒண்ணை அவுங்க எடுத்துக்கிட்டு,.. "காப்பி ஆறிடும், மொதல்ல குடிச்சிட்டு அப்புறம் போயி, வாசலுக்கு கோலம் போடு ம்பாங்க!"
----------
"ஆனா தட்ல சோறு,.. போட்டு, நீ அந்த ஹால்ல ஓரமாதான தின்கிற? ஏன், கூட வச்சு திங்க மாட்டாங்களாமா?"

"பன்னாடை பன்னாடை... ஒவ்வொரு பண்டிகைக்கும், அவுங்க வூட்டுக்காரருக்கு தெரியாம, பூஜை முடியிற முன்னவே,.. "பசிக்கு பாவம் இல்ல! குழந்தைக்கு மிஞ்சித்தான் தெய்வம்! அதுக்கு பசிக்கும் ன்னு , ஒரு சில்வர் டப்பாவுல எதுனா அள்ளி போட்டு குடுப்பாங்க, நீ திங்க! "

"உன்னைய மாதிரி ஒரு உருப்படாத ஜென்மத்துக்கு அப்புடி ஒரு பாட்டியம்மா!"
----------------
"இல்லம்மா,..!" என்றவன் நீண்ட யோசனைக்கு பின்,.. தூங்கிவிட்டான்!
----------------
மறுநாள் இரவு,..

"அவுங்க கிட்ட மன்னிப்பு கேக்கணும்மா !" என்றவனை நம்பிக்கை இல்லாமல் பார்த்தாள்!
----------------
"அதெல்லாம் ஒண்ணும் வாணாம் ! அவுங்க சொன்னாப்புல ஒழுங்கா படி! அது போதும்!"
----------------
"படிப்பேன் ம்மா! நிச்சயம்!" என்று சிரிக்காமல் சொன்னவனை யோசித்தவாறே பார்த்தாள்!
----------------
"டேய் முத்துஊ,.." என்ற நண்பர்களின் ஓலம் அழைக்க,..

"போ,.. இந்த வயசுலயே குடிக்கிற பொறம்போக்குங்க உனுக்கு ப்ரெண்ட்ஸ்! குடிக்க கூப்புடுறான் பாரு!"

என்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தான்!

"தெரியும்டா எனக்கு! உங்கப்பனை பார்த்திருக்கேனே! இது கூட தெரியாதா?"
--------------
தலை குனிந்தவன், "இல்லம்மா, இனிமே, ஒனக்கு புள்ளையா இருக்கனோ இல்லியோ,. அந்த அய்யிரு பாட்டிக்கு மனசு நோவ எதுவும் செய்ய மாட்டேம்மா! சத்தியமா!"

"நீ இப்போ அந்தம்மா வூட்டுக்கு போறியா?"

"ஆம்மா .. கொஞ்சம் பாத்திரம் இருக்கு. வெளக்கி போட்டுட்டு வருவேன்!"

"நானும் வர்றேன் ..!"
--------------
"ஏண்டி இவ்ளோ லேட்டு, நான் தூங்கப் போறேன்! ஒனக்கு சாதம் வச்சிருக்கேன். நீ சாப்டுட்டு தேச்சு கவுத்துட்டு, போ! புள்ளையாண்டானும் வந்திருக்கானா? சரி, இருக்கிறத ரெண்டு பேருமா சாப்பிடுங்கோ!"

"அசந்துட்டேன்னா,.. கெளம்பரப்ப, கூப்பிடு! கதவை சாத்திக்கிறேன்!"
--------------
"சரிங்கம்மா!" என்றவள்,..

ஐயர் மாமி சென்ற திசையை நோக்கி இரு கை கூப்பி வணங்கிய மகனை,..

இறுக அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள்!
--------------
டிஸ்கி: கண்ணால் பார்த்த ஒரு வாழ்க்கையை வைத்து,.. ஒரு கதை!



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 வாங்கடா தம்பிகளா நீங்க நல்ல ஆராய்ச்சி யாளர்கள் !புத்திசாலிகளும் கூட நீங்களாவது பதில் சொல்லுங்களேன் ஒருத்தனை இல்ல ஒருத்தியைப் பாத்து நீ பார்ப்பான் இல்லை பாப்பாத்தின்னு சொல்றதுக்கு முன்னாடி !!

1 ஆரியர்கள் இங்கே வரும் போது கைபர்கணவாய் வழியாக வந்தார்கள் என்று கூறுகிறீர்கள்! அவர்கள் நுழைந்தது எந்த நாட்டின் எல்லைக்குள்?!

2 அப்போது அங்கே ஆட்சி புரிந்த மன்னர் யார்? அங்கு உள்ள ஊர்கள் பெயர்கள் என்னென்ன?!

3 . அந்த பகுதியில் எத்தனை ஜாதிகள் இருந்தன?

4. அந்த நாட்டின் மக்கள் என்னென்ன மொழிகள் பேசினர்?!

5. மோட்டார் வாகனம் கண்டுபிடித்த வருஷமென்ன?

6 அந்த கால்வாயிலிருந்து தமிழகம் வர எத்தனை வருஷமாகும்?

வாகன சாலைவசதி? வழியில் பசியாற ஹோட்டல் கிடையாது தானே?

4. அவர்கள் இங்கே வந்து தமிழில் புலமை பெற்றதெப்படி ?

5. பாரதம் முழுவதும் 
டச்சுக்காரர்கள் 
போர்ச்சுகல்
பிரிட்டிஷ்
முகமதீயர்
நவாப்கள்
சுல்தான்
பாரசீகம்
எகிப்து 
துருக்கி 
படைகள் மற்றும் ஆட்சியாளர்கள் 
வந்தும் 
பாரதம் முழுவதும் 
அத்தனை வழிபாடு / பெயர்கள் சம்ஸ்கிருத மாக இருக்கிறதே அது எப்படி?

இன்று வரை ஒட்டுமொத்த பாரதத்தில் நீங்கள் கூறும் ஆரியர் 3 சதவீதம் மட்டுமே.

6. சரி. ஆரியர்கள் ப்ராமணர் மட்டுமே வா ? 
ஆர்யகுல க்ஷத்ரிய
ஆர்யகுல வைஸ்ய 
எப்படி?
உனது தகப்பன் தாய் வரை 1000வருஷம் அதாவது 10 தலைமுறை மேலாக ஸம்ஸ்க்ருதம் மற்றும் ஹிந்து கடவுள் பெயரெப்படி?

7. அந்நிய நாட்டிலிருந்து இத்தனை நாட்டுமொழி கலாச்சார வித்தியாசமான மனிதர்கள்வந்தும் கூட 
ஆரியர்கள் அளவுக்கு புத்தி சாதுர்யம் 
பொறுமை இந்த நொடிவரை எப்படி?

8. இந்திய மொழியில் எதுவுமே அல்லாத சம்ஸ்கிருதம் மட்டுமே அறிந்த ஆரியர்கள் ஆங்கில மொழி முதலாக நாடுமுழுவதும் உள்ள மொழிகளில் புலம் தேர்ந்ததெப்படி?
கல்வி கற்கவிடாமல் செய்தனரென 
இந்த நாட்டின் மொழியே அறிவே கலையே அறியாதவர்களை பார்த்து நீங்கள் சொல்வதெப்படி? 
அவர்களோடு ஆரிய மொழியில் 
இங்குள்ள மொழியில் பாடமெடுத்தது யார்?
தற்போது அந்த கைபர்கால்வாய் பகுதிகள் எந்த நாட்டு எல்லை? யார் ஆட்சி? 
எத்தனை மொழிகள்? என்னென்ன கோவில்கள் அங்கே உண்டு?

இத்தனைக்கும் 
விவரமாக ஆதாரமாக பதில் கூறி விட்டு ஆரியன் பார்ப்பான் எனத்திட்டுங்களேன்!
சரி ஆரியன், பார்ப்பான் என்பதற்காவது தமிழில் மற்றும் ஸம்ஸ்க்ருதத்தில் அர்த்தமாவது தெரியுமா?

"ஆறாம் திருமுறை" 
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்

023 "திருமறைக்காடு"

பாடல் எண் : 5 
மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே| 
பொழிப்புரை:
மறைக்காட்டுள் உறையும் மணாளன் மிகவும் முழங்குகின்ற ஒலியை உடைய நீரின் வடிவினனாய், தழல் போன்ற சிவந்த மேனியை உடைய முதல்வனாய், ஏரி நீர் நிறைந்ததனை ஒத்த செல்வனாய்ச் சிறந்த அடியவர்க்கு இன்பம் விளைவிப்பவனாய் "ஆரியனாய்த்" தமிழனாய் அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும் தலைவனாய் வெள்ளம் போல மதத்தை பெருக்குகின்ற மதயானை போல விளங்குகின்றாய்.

Wrote- krishnamorthi pushothaman..

Image may contain: one or more people
 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
அந்தணர்-திருவள்ளுவர் பூனூலை மறைக்கவே மேல்தூண்டு - கருணாநிதி
Permalink  
 


தமிழில் எழுந்த பல்வேறு  நூல்களில் திருக்குறள் மிகவும் உன்னதமானது உலகம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இந்திய தத்துவ ஞான மரபின் உள்ள அறிவு அறிவு அறக்கருத்துக்களை எளிய தமிழில் வழங்கியதே திருக்குறள்.

திருக்குறள் முழுவதும் குறள் வெண்பா என்னும் யாப்பில் அமைந்துள்ளது இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும் என்பது அறிஞர்கள் ஏற்க்கும் கருத்து.

திருக்குறள் இருக்கும் முதலில் எழுதப்பட்ட மிகவும் பழமையான உரை மணக்குடவர் உரை (10நூற்றாண்சமணரான மணக்குடவர் திருக்குறளை வேத தர்ம சாஸ்திர ஞானமரபில் வந்ததாகத்தான் பொருள் செய்துள்ளார்.

திருக்குறளை ஹிந்து மெய்யியல் மரபிற்கு முரணானது என ஒரு பொய்யான தோற்றத்தை எண்பது ஆண்டுகளாய் செய்யப்பட்டு வருகிறது

 

முதலில் திருக்குறளை சமணம் என சொன்னனர், பிறகு பொதுமறை என பரப்பப்பட்டது.

https://enchantingconcepts.wordpress.com/2017/09/02/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE/#comment-33

 



-- Edited by Admin on Saturday 23rd of March 2019 12:30:29 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: அந்தணர்-திருவள்ளுவர் பூனூலை மறைக்கவே மேல்தூண்டு - கருணாநிதி
Permalink  
 


திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூல் என்பதாக ஒரு ஆய்வு பல கோடி செலவில் நடந்தது, இன்றும் தொடர்கிறது. கிறிஸ்தவ மத வெறி  கொண்ட தேவநேயப் பாவாணர் தமிழ் பற்று வேடத்தில் நச்சு பொய்களை பல நூல்களை எழுதிய இவர் துணைகொண்டு தெய்வநாயகம் என்பவர் பெயரில் வெளிவந்தது. இது சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை என தொடங்கப்பட்டு அங்கே முனைவர் பட்டமும்பட்டமும் பெற்றது பெற்றது, இன்றைய நிலையில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பதினைந்திற்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்களும் வாங்கப்பட்டுள்ளன.

திருக்குறள் இருக்கு ஆயிரம் ஆண்டுகளாக உள்ள மர தமிழ் மெய் இயல் மரபில் உரை எழுதாமல் பொதுமறை என்பதாக வீரர்களை முறித்து அனர்த்தம் செய்யும் வகையில் எழுதப்பட்ட உரைகளை துணை கொண்டு என மோசடி ஆய்வுகள் நடைபெறுகிறது

தமிழ் அறிஞர் முனைவர் சாமி தியாகராஜன் குரல் உரைகளைப் பற்றியே ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர், அவர் எழுதிய நூல் திருக்குறள் உரை விபரீதம், அதில் மேல் திருக்குறளுக்கு யாரும் இனிமேல் உரை எழுத வேண்டாம் என்றே கூறியிருப்பார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

விலக்கின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம்படுத்த
பல்லினார்களும், படுகடல் பரதவர் முதலா
எல்லைநீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி,
நல்ல தொல்குலம் பெறுதலும், நரபதி! அரிதே.
- சமணம்

சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே.
- சைவம்

Ramachandran
ஊழ்வினை-மறுபிறப்பு- பாவ புண்ணியங்களுக்கு
ஏற்ப உயர்சாதியில் பிறப்பதும் தாழ்ந்தசாதியில் பிறப்பதும்- இவற்றைத் தர்க்கபூர்வமாக நியாயப்படுத்தியது சமணம். சமணத்தின் வரலாற்றுப் பங்களிப்பை அதன் குறை நிறைகளோடு புரிந்து கொள்ளுதல் தேவை.

முற்பிறப்பில் ஆயர் குலத்தில் பிறந்த ஒருவன்,தான் செய்த புண்ணியச் செயல்களால் மறுபிறப்பில் ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்த இறைவனின் பூசாரி குலத்தில் பிறக்கிறான் -இது சமணராகிய இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் கூறுகிற நிகழ்வு.

ஆவுரித்துத்தின்றுழலும் புலையரும் சிவனடியாராக ஆனால் நாம் அவரைக் கடவுளாக வணங்குவோம் என்பது சைவ குரவர் அப்பர் கூற்று.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Dev Raj Dhivakar Venkataraman திருவள்ளுவர் சமணர் என ஒருநாளும் நான் சொன்னதில்லை. அவ்வாறு எழுதியிருப்பின் ஆதாரம் காட்டுக. அவர் வேதநெறி சார்ந்தவர் என்றே எழுதி வந்துள்ளேன்.

சீவக சிந்தாமணிக்கு வருவோம்.

அதன் வாழ்த்துப்பா என்ன?

மூவா முதலா வுலகமொரு மூன்றுமேத்தத்
தாவாத வின்பந் தலையாயது தன்னினெய்தி
ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வனென்ப
தேவாதி தேவ னவன்சேவடி சேர்துமன்றே!

சமணக் கோட்பாட்டை ஒட்டியதாக ஒரு கடவுள் வாழ்த்துடன் ஒருவர் நூல் படைக்கிறார்.
சமணக் கோட்பாட்டை நூல் நாயகன் வாயிலாகவும் உறுதியான நிலைத்த அறமாகச் சொல்லச் செய்கிறார்.
காவிய நாயகன் இறுதியில் துறவேற்பதாகவும் கதை நிறைவு பெறுகிறது. சீவக சிந்தாமணி, கத்ய சிந்தாமணி எனும் சமண நூலின் வழிநூல் என்பதை அனைவரும் அறிவர். அந்நூலாசிரியர் சமணரே என முடிவு கட்டுவதில் தவறென்ன? இன்னும் வேறென்ன ஆதாரம் வேண்டும்?

ஒரு நூலாசிரியர் ஒரு சமயப் பிரிவில் சேர்ந்தவராக இருப்பின் அவருக்கு என்ன குறை வந்துவிடும்?



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

திருக்குறள் ஒரு ஸ்மிருதி நூல் என்பதை தாங்கள் வகுப்புகளால் போதனைகளால்  தகுந்த ஆதாரங்களோடு கூறிவருவதும் ஆகும்.

திருவள்ளுவர் உள்ள குறளில் உள்ள பதங்களுக்கு அவர் காலத்தில உள்ள பொருள் படி உரை  கூறுவதே் முறை ஆகும். ஆனால் கால்டுவெல் கோத்திரமாக தங்களை ஆக்கிக் கொண்டு மெக்காலே வழி போதனைகளை சுவிசேஷ நியாயமாகக் கொண்டு, வடமொழி வெறுப்பு, அந்தணர் வெறுப்பு என்பது பரவியுள்ள இடத்தில், குறளிற்கு தமிழ் பாரம்பரியப் படி உரை எழுதாமல் 

திருவள்ளுவர் தனக்கு முந்தைய நூல்களை 20க்கும் மேற்பட்ட குறட்பாக்களில் காட்டியுள்ளார்.

ஆனால் இவை பெரும்பாலும் வேத தர்ம சாஸ்திரங்கள் அரசியல் நூல்கள் மற்றும் ஆயுர்வேத நூல்கள்.

வள்ளுவர் தான் ஸ்மிருதிகளை கூறுகிறேன் என நேரடியாகக் கூறும் குறட்பாக்கள் 543, 134



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

வள்ளுவர் பல்வேறு திருக்குறளில் முந்து நூல்களை சுட்டிக் காட்டுகிறார்.

அவை முறையே

வேத தர்ம சாஸ்திரங்களைக் குறிப்பவை 543,560, 21, 28, 134, 183, 322,37 & 46 

அரசியல் நூல்களை  636, 693, 743, 581, 727

பொதுவாக   நூல்களை 533, 401, 726, 783, 373

மருத்துவம் சம்பந்தமானவை 941..



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மேலுள்ளவற்றில்  வேத தர்ம சாஸ்திரங்களை அவர் குறிப்பது மூன்று குறள்களில் வெளிப்படையாக வந்துள்ளது அவை

134  மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

பரிமேலழகர் உரை:

ஓத்து மறப்பினும் கொளலாகும் - கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.- அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். (மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.).

மணக்குடவர் உரை:

பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

கற்ற வேதத்தினை மறந்துவிட்டான் என்றாலும் திரும்பவும் ஓதிக் கொள்ளலாகும். பார்ப்பான் மக்கட் பிறப்புக்குரிய ஒழுக்கத்திலிருந்து குறைந்து விடுவானேயானால் கெட்டுவிடுவான்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 குறள் 543: 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 

நின்றது மன்னவன் கோல்.

பரிமேலழகர் உரை:

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும், அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது, மன்னவன் கோல் - அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல். 
(அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும், தலைமை பற்றி அந்தணர் நூல் என்றார். 'மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்' (மணி. 22 208 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு 'அறன்' என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு 'ஆதி' என்றும், அப் பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் 'நின்றது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை:

அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும்


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

  குறள் 560: 

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 

காவலன் காவான் எனின்.

பரிமேலழகர் உரை:

காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின், ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர். 
(ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard