New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயல்புடைய மூவர்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
இயல்புடைய மூவர்
Permalink  
 


இயல்புடைய மூவர்

 
 இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை                            (குறள்  41; இல்வாழ்க்கை )
இல்லறத்தில் வாழ்வான் தன் அறவாழ்க்கையில் கல்வி பயிலும் மாணவர், துறவிகள் மற்றும் மனைத் தவநிலையில் உள்ள மூவக்கும்   நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான்

நம் மரபில் இல்வாழ்க்கை என்பது சமூகத்தில் அறம் வளர உதவவே, அதைத் தெளிவாய் வள்ளுவர் இக்குறளிலேயே நல்லாற்றின் நின்ற துணை என்கிறார்,

 இல் வாழ்க்கை என்பது குடும்பம் நடத்துபவன்,   நல்லாற்றின், நல்ல அறம், சமுதாயத்தில் இல் வாழ்வானினுடையது கூறுகிறார் தவிர - தன் குடும்பத்தை பராமரிப்பது அவன் கடமையும் எனவே இதில் நேரடியாய் குடும்ப உறுப்பினர்களைக்  பிரித்துக்  குறிக்கவில்லை என்பது தெளிவு, இதை விளக்க அடுத்த குறளைப் படித்தால் போதும் - (துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்  இல்வாழ்வான் என்பான் துணை), அடுத்த குறள் - ஐம்புலத்தார் ஓம்பல் எனக் கூறுகையில் குடும்பத்தை ஒக்கல் என நான்காவதாய் அனைத்து குடும்ப உறுப்பினரையும் போட்டு விட்டார்.

வள்ளுவர் இல்வாழ்வை இல்லறம் என்ற சொல்லை குறளில் சொல்லவே   இல்லை., நல்லாறு என்பது சமுதாயக் கடமை தான். திருவள்ளுவர் இந்திய தத்துவ ஞான மரபு வழியினர், எனவே அறிவு சார்பு வழியினர்,  அவர் இங்கு இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

சமண சமயத்தை சேர்ந்த மணக்குடவர் உரை திருவள்ளுவர் குறள் எழுதி 100 ஆண்டுக்குள் எழுதப் பட்டது - சமணர் உரை.
Iyalpudaiya%2Bmuuvar%2B1aa%2B%25281%2529

 நாம் மேலே பார்த்ததில் சமணர் உரை பார்த்தோம், பரிமேலழகருக்கு முந்தைய மற்ற உரை பரிபெருமாள் மற்றும் பருதியார் உரை அதையும் பார்ப்போம்
Iyalpudaiya%2Bmuuvar%2B1p%2B%25281%2529.

Iyalpudaiya%2Bmuuvar%2B1aag%2B%25281%252
 
குறள் காலத்தில் வாழ்வை மாணவப் பருவம்(பிரம்மச்சார்யம்), குடும்ப வாழ்க்கை (க்ருஹஸ்தன்), துறவிகள் (சந்நியாசிகள்) மற்றும் மனத்தளவில் குடும்ப வாழ்க்கையை துறந்து ஒதுங்கி வானப்ரஸ்த நிலை வாழ்க்கை(வானப்ரஸ்தம்) எனப் பிரித்ததில்; குடும்ப வாழ்பவன் மற்ற மூவரையும் காத்தல் என உரையாசிரியர்கள் என அனைத்து பழைய உரைகள்  சமணர் உரை உட்பட கூறினர்.
 
திருவள்ளுவர் மிகத் தெளிவாய் ஒருவர் இவ்வுலகில் வாழ்வது எளியோர்க்கு உதவி புகழ் பெறவே என்பார். 
 
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது 
ஊதியம் இல்லை உயிர்க்கு.          குறள் 231:  புகழ்
எளியோர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.
 
இல்வாழ்வில் உள்ளோர் முதல் கடமை  செய்யும் தகுதியை கணவர் கோவலான் கொலையால் இழந்தேன் என கண்ணகி புலம்புவாள். 
அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
                                         6. கொலைக்களக் காதை -சிலப்பதிகாரம்

19ம் நூற்றாண்டு முதல் கல்வி கிறிஸ்துவர்களால் வடிவமைக்கப்பட,  நச்சு ஏற்றப்பட -தமிழர் மரபு என்பது பாரத நாட்டின் பொதுமை என்பதைவிட்டு,  திருக்குறளிற்கு தன்னிச்சையாய் உளறலாய் உரை செய்தனர்.

மூவேந்தரான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்
                                 - திரு வி க, வ சுப மாணிக்கம், இரா சாரங்கபாணி, குழந்தை
இளையர், முதியோர், பெண்கள் - ச தண்டபாணி தேசிகர்
உறவினர், நண்பர், ஏழைகள் நாமக்கல் இராமலிங்கம்.
பார்ப்பான், அரசன், வணிகன் தேவநேயப் பாவாணர்
சைவர், வைணவர், வைதிகர் 
அல்லது அரசன், ஆசான், ஆன்றோர் - மு கோவிந்தசாமி
 அறவோர், நீத்தார்,  அந்தணர் - கா அப்பாத்துரை
மாணவர், தொண்டர், அறிவர் - சி இலக்குவனார்
தாய், தந்தை, தாரம்           வ உ சிதம்பரம், இரா இளங்குமரன்

பெற்றோர், துணைவி, மக்கள் 
                          - கு ச ஆனந்தன், நெடுஞ்செழியன், கலைஞர், சுஜாதா.
கல்வி நிலை, மனைத் தவநிலை, துறவுநிலை நிற்பார் -கா சு பிள்ளை

குடும்பத்தாரைப் பிரித்து தாய், தந்தை, மனைவி, மகன் என்றெல்லாம் பிரிப்பதோ, தொடர்பற்று ஜாதிகளை திணிக்கும் கிறிஸ்துவ வெறி தேவநேயர் உரைகளோ வள்ளுவர் உள்ளம் இல்லை.

தமிழர் மெய்யியல் மரபு, வேதங்கள், இறை வணக்கம் என்பதை மாற்ற எத்தனை பாடுபடல்- எல்லாருமே  கிறிஸ்துவர்களால் வடிவமைக்கப்பட,  நச்சு ஏற்றப்பட -தமிழர் மரபு என்பது பாரத நாட்டின் பொதுமை என்பதைவிட்டு,  திருக்குறளிற்கு தன்னிச்சையாய் உளறலாய் உரை செய்தனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 குறள் 41: 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 

நல்லாற்றின் நின்ற துணை.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

மு.வரதராசனார் உரை:

இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

சாலமன் பாப்பையா உரை:

மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.

பரிமேலழகர் உரை:

[அஃதாவது, இல்லாளோடு கூடி வாழ்தலினது சிறப்பு.இந்நிலை அறம் செய்தற்கு உரிய இருவகை நிலையுள் முதலது ஆதலின், இஃது அறன் வலியுறுத்தலின் பின் வைக்கப்பட்டது)

 

 குறள் 242: 

நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் 

தேரினும் அஃதே துணை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 

பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்.

மு.வரதராசனார் உரை:

நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.

பரிமேலழகர் உரை:

நல் ஆற்றான் நாடிஅருள் ஆள்க - அளவைகளானும் பொருந்து மாற்றானும் நன்றான நெறியிலே நின்று, நமக்குத் துணையாம் அறம் யாது? என்று ஆராய்ந்து, அருளுடையராக, பல் ஆற்றான் தேரினும் துணை அஃதே - ஒன்றையொன்று ஒவ்வாத சமய நெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே, பிறிது இல்லை. (அளவைகளாவன: பொறிகளான் காணும் காட்சியும், குறிகளான் உய்த்துணரும் அனுமானமும், கருத்தா மொழி ஆகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப்பற்றி உணரும் உவமையும், இங்ஙனம் அன்றாயின் இது கூடாது என்று உணரும் அருத்தாபத்தியும், உண்மைக்கு மாறாயஇன்மையும் என இவற்றைக் கூட்டி, ஆறு என்பாரும் உளர். இவையும் ஒரு ஆற்றான் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்று என்றலே கருத்து. பொருந்தும் ஆறாவது, 'இது கூடும் , இது கூடாது' எனத் தன் கண்ணே தோன்றுவது. இதனை வடநூலார் 'உத்தி' என்ப. 'ஆற்றான்' என்பது வேற்றுமை மயக்கம். ஒன்றை ஒன்று ஒவ்வாமையாவது மத வேறுபாட்டான் அளவைகளும் பொருள்களும் தம்முள் மாறுகோடல்; அன்னவாயினும், அருள் துணை என்றற்கண் ஒக்கும் என்பதாம். உயிரை விட்டு நீங்காது இருமையினும் உதவலின், 'துணை' என்றார். இவை இரண்டு பாட்டானும் அருளினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

நல்ல வழியாலே நாடி அருளையுண்டாக்குக: பல வழியினும் ஓடி யாராயினும் தமக்கு அவ்வருளே துணையாம். நல்லாற்றானாடியருளாள்க என்றது அருளுடைமை யுண்டாகப் பலவறங்களையுஞ் செய்கவென்றவாறு. இஃது அருளுடைமை வேண்டுமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

பல நெறிகளிலும் நின்று ஆராய்ந்து, அருளினைத் துணையாகக் கொள்ளுவார்களாக; துணையான அறம் அருளேயாகும். பல வகைப்பட்ட நெறிகளில் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே அன்றிப் பிறிது இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 குறள் 45: 

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

பண்பும் பயனும் அது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.

மு.வரதராசனார் உரை:

இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:

மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.

பரிமேலழகர் உரை:

இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும் - அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும். (நிரல்நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின், அன்புடைமை பண்பு ஆயிற்று; அறனுடைமை பயன் ஆயிற்று. இவை மூன்று பாட்டானும் இல்நிலையில் நின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

இல்வாழ்க்கையாகிய நிலை யாவர்மட்டும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின், அதற்குக் குண மாவதும் பயனாவதும் அவ்விரண்டினையு முடைமை தானே. பயன் வேறு வேண்டாம் :தனக்கும் பிறர்க்கும் உண்டான முகமலர்ச்சி தானே யமையுமென்பது. இது பழியோடு வாராத வுணவை நுகர வேற்பார் மாட்டு அன்புசெய்யவேண்டுமென்பதும் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்பதும் கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

இல்லற வாழ்க்கையானது அன்பினையும் அறத்தினையும் உடையதாக இருக்குமேயானால் அதுவே இல்லறத்தின் பண்பும் பயனுமாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  குறள் 222: 

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் 

இல்லெனினும் ஈதலே நன்று.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 

பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

மு.வரதராசனார் உரை:

பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை:

நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.

பரிமேலழகர் உரை:

கொளல் நல் ஆறு எனினும் தீது - ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது, மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று - ஈந்தார்க்கு அவ்வுலகு எய்துதல் இல்லை என்பார் உளராயினும் , ஈதலே நன்று. ('எனினும்' என்பது இரு வழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களின் ஈதல் சிறந்தது என்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன் கூறினார்.).

மணக்குடவர் உரை:

ஒருவன்மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறியெனினும் கோடல் தீது: ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவ முண்டெனினும் கொடுத்தல் நன்று. கொள்வோ ரமைதி யறிந்து கொடுக்கவேண்டுமெனினும் இது வரையாது கொடுத்தலாதலால் யாதொருவாற்றானுங் கொடை நன்றென்பது கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

இராப்பது (யாசிப்பது) நன்னெறியாகும் என்று சொல்லுபவர்கள் இருந்தாலும் அது தீதான செயலாகும். ஈகையினைச் செய்வதால் மேலுலகம் அடைய முடியாதென்று சொன்னாலும் ஈதலே நன்று.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 5srr.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

1330 குறளில் திருவள்ளுவர் பயன்படுத்தாத சொல் தமிழ்.
தெளிவாய் வள்ளுவர்
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு. குறள் 735:
இந்தியாவின் மக்களை மதம் மாற்ற பொய்யாய் பிரிவினை செய்த நச்சுக்களே ஆரியம் - திராவிடம் என்பது. பாதிரி கால்டுவெல்படி தமிழர்கள் இம்மண்ணின் அன்னிய வந்தேறிகள், கைபர் - போலன் வழி வந்கவர்கள்.
மொழி - இனம் என்ற பொய்களால் திருவள்ளுவர் கூறியதை சிதைப்போர், திருவள்ளுவர் குறளிற்கு முதல் உரையான சமணர் மணக்குடவர் உரை, வள்ளுவத்தினின்று 100 ஆண்டுக்கள் வந்த உரை பற்றி உரக்க வேண்டும்

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 செல்வம் : ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பது நிதர்சனமான உண்மை. மனித சமூகம் உலகத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு செல்வம் இன்றியமையாதது. இதனைத் ‘திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு’ ‘வினையே ஆடவர்க்கு உயிர்’ (தொல்காப்பியம்) என்ற முன்னோரின் கூற்று மெய்ப்பிக்கின்றது. செல்வம் உடைய மனிதனுக்கு சமூகத்தில் மதிப்பும் செல்வாக்கும் கிட்டும். இவ்விரண்டினையும் அறத்தினால் மட்டுமே அடைய முடியும் என்பதை

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.1    என்னும் குறள் தெளிவுப்படுத்துகின்றது.

‘அறம் செய விரும்பு’ என்னும் ஒளவையாரின் ஆத்திச்சூடி இதனை வழிமொழிகின்றது. மேலும்,

அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்

பெரிதாய பகைவென்றுப் பேணாரைத் தெறுதலும்2 என்று கலித்தொகைக் குறிப்பிடுகின்றது. பிறருக்குக் கொடுத்து மகிழவே பொருளைச் சேர்க்க வேண்டும் என்பதை

செல்வத்துப் பயனே ஈதல் 

துய்ப்பேம் எனினே தப்புற பலவே3

என்று புறநானூறு தமிழரின் புறவாழ்வியல் புலப்படுத்தும் சிந்தனை. மேலும் தமிழரின் புறவாழ்வியல் புலப்பாட்டுச் சிந்தனைகளை உடம்பால் மட்டும் வாழாது உயிராலும் வாழ வேண்டுமெனில் அறம் செய்வதை கடமையாக கருதுதல் வேண்டும்.

‘எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்’ என்பது போல தண்டூன்றி கிழப்பருவம் எய்தக்கூடிய முதுமை விரைவில் வந்து ஒட்டிக்கொள்ளும் நிலையற்ற வாழ்க்கையில் அறச்செயல்களை நாள்தோறும் செய்வதன் வாயிலாக நன்மைகளைப் பெருக்கி பாவங்களை சுருக்கிக் கொள்ளமுடியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 திருவள்ளுவர் 1330 குறளில் இல்லறம் என்ற சொல்லை சொல்லவே இல்லை, தன் குடும்பத்தோடு வாழ்வது அன்பிற்கானது, இங்கு அவர் சொன்னது - இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. வள்ளுவர் காட்டும் நல்லாறு ஈதலும் - விருந்தோம்பலும். எனவே - மனைவி, மக்கள், பெற்றோர் என்பது வள்ளுவத்தின் தன்மைக்கு எதிரானது
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. குறள் 231: புகழ்

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. குறள் 222:ஈகை

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. குறள் 212: ஒப்புரவறிதல்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. குறள் 81:விருந்தோம்பல்

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு. குறள் 86: :விருந்தோம்பல்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் 
தேரினும் அஃதே துணை.                              குறள் 242: 

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது                          குறள் 45: 

குறள் காலத்தில் வாழ்வை மாணவப் பருவம்(பிரம்மச்சார்யம்), குடும்ப வாழ்க்கை (க்ருஹஸ்தன்), துறவிகள் (சந்நியாசிகள்) மற்றும் மனத்தளவில் குடும்ப வாழ்க்கையை துறந்து ஒதுங்கி வானப்ரஸ்த நிலை வாழ்க்கை(வானப்ரஸ்தம்) எனப் பிரித்ததில்; குடும்ப வாழ்பவன் மற்ற மூவரையும் காத்தல் என உரையாசிரியர்கள் என அனைத்து பழைய உரைகள்  சமணர் உரை உட்பட கூறினர். நலாற்றில் துணை எனும்போது இந்த உரை மட்டுமே பொருந்தும்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குறளிற்கு பொருள் கூறும்போது அதிகாரத்தின் தலைப்போடு ஒத்து கூற வேண்டும். இது நீத்தார் பெருமை- எனத் துறவிகள் போற்றும் அதிகாரம் 

வேதங்களினால் விளக்கப்பட்ட ஸனாதந தர்மம் எனும் வ்ருக்ஷத்திற்கு ஆணிவேராக திகழ்பவை வர்ணதர்மங்கள், ஆஸ்ரமதர்மங்கள் என்னும் இரண்டு தர்மங்கள் ஆகும்.

வர்ணதர்மங்கள் ப்ரஹ்ம, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர பேதத்தினால் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்ரம தர்மங்கள் ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸன்யாஸ எனும் பேதத்தினால் நான்காகப் பகுக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் சிறந்தது (க்ருஹஸ்த தர்மம்) எனும் இல்லற வாழ்வு. இல்வாழ்க்கையைப் பற்றி திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளில்

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை.

என்று கூறுகின்றார். அதாவது இல்லறத்தில் வாழ்பவன் அறத்தின் இயல்புகளை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலைபெற்ற துணையாக இருக்கின்றான் என்பதாகும்.

 

உபநயனம் ஆனபிறகு ப்ரஹ்மசாரியானவன் குருவினிடத்தில் முறையாகக் கல்விகற்க வேண்டும். மனுஸ்மிருதி இவ்வாறு கூறுகின்றது -(வேதானதீத்ய வேதௌ வா வேதம் வா அபி யதாக்ரமம்

அவிலுப்தப்ரஹ்மசர்யேள க்ருஹஸ்தாஸ்ரமமாவஸேத்)

முறை பிறழாமல் ஒழுக்கத்துடன் குருகுலவாஸம் புரிந்த சீடனானவன் தனது வேதத்தினை முதலில் தெளிவுறக் கற்று பின்னர் மற்றைய மூன்று வேதங்களையோ, அல்லது இரண்டு வேதங்களையோ, அல்லது ஒரு வேதத்தையோ தெளிவுறக் கற்றுத் தேர்ந்த பின் இல்லற வாழ்வினை மேற்கொள்ள வேண்டும். பின்னர் தன்னுடைய தந்தை அல்லது ஆசார்யனுடைய அனுமதியுடன் தன்னுடைய வர்ணத்தைச் சேர்ந்த அழகுடைய பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும்.

(அஸபிண்டா ச யா மாதுரஸகோத்ரா ச யா பிது:
ஸா ப்ரசஸ்தா த்விஜாதீனாம் தாரகர்மணி மைதுனே)

அப்பெண்ணானவள் அதாவது மணப்பெண்ணானவள் தன் தாயின் ஏழு தலைமுறைகளுக்குட் படாதவளாயும், தன்னுடைய கோத்ரத்தில் பிறவாதவளாயும், வைதிக கார்யங்கள் மற்றும் மக்கட்பேறு ஆகியவற்றிற்கு உகந்தவளாயும் இருக்கின்றாளா? என்பதை அறிந்து அக்கன்னிகையை மணம் புரிந்து கொள்ள வேண்டும். மணந்து கொள்ள வேண்டிய கன்னிகையானவள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றால்

(அவ்யங்காங்கீம் ஸௌம்யநாம்னீம் ஹம்ஸவாரணகாமிநீம் 
தனுலோமகேசதசனாம் ம்ருத்வங்கீமுத்வஹேத்ஸ்திரியாம்)

அழகு மிகுந்தவளும், நற்பெயருடையவளும், அன்னம், பெண்யானையின் நடையினை உடையவளும், மென்மையான உடலினை உடையவளும், மென்மையான பற்கள், மென்கூந்தல், மென்மையான குரலினை உடையவளுமான கன்னிகையை மணந்து கொள்ள வேண்டும்.

திருமணமானது வேதநெறிப்படி செய்யப்பட வேண்டியதாகும். ப்ராஹ்மணர்களுக்கு “ப்ராஹ்மம்” எனப்படும் திருமணமே உயர்ந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.

 

சாஸ்த்ரோக்தமாக திருமணம் ஆன பின்னர் இல்வாழ்க்கையில் ஈடுபடுபவன் விரிக்கப்பட்ட இல்லற தர்மங்களை செவ்வனே கடைப்பிடித்து வரவேண்டும். ஸந்த்யாவந்தனம், ஔபாஸனம், அக்நிஹோத்ரம் முதலியவற்றை க்ருஹஸ்தன் விடாது செய்து வரவேண்டும்.

(பஞ்சஸுநா க்ருஹஸ்தஸ்ய சுல்லீ பேஷண்யுபஸ்கர:
கண்டநீ சோதகும்பச்ச்ச பத்யதே யாஸ்து வாஹயன்)

எந்திரம், முறம், அம்மி, துடைப்பம், உரல், உலக்கை, நீரக்குடம், ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் ஐந்து கொலைக்குற்றங்கள் இல்லறத்தானை வந்தடைகின்றன.

அவை நீங்குவதற்கு மஹர்ஷிகளால் கீழ்வரும் உபாயங்கள் சொல்லப்பட்டுள்ளன.

(அத்யாபனம் ப்ரஹ்மயக்ஞ: பித்ருயக்ஞஸ்து தர்பணம் 
ஹோமோ தைவோ பலிர்பௌதோ ந்ருயஞோ அதிதிபூஜனம்)

அவையாவன:

1. ப்ரஹ்ம யக்ஞம் 
தினந்தோறும் தான் கற்றறிந்த வேதத்தினை ஓதுதல் வேண்டும்.

2.பிதுர்யக்ஞம் 
அன்னம் படைத்தோ அல்லது புனல் வார்த்தோ தென்புலத்தார்க்கு அதாவது பித்ருக்களுக்கு வழிபாடு செய்தல் வேண்டும்.

3. தேவயக்ஞம் 
அக்னியில் அவி சொரிந்து (ஹவிஸினை இட்டு) தேவர்களை வழிபடுதல்

4. பூதயக்ஞம் - அன்னத்தினால் பலியிடுதல்

5. ந்ருயக்ஞம்- விருந்தோம்பல் முதலியன ஆகும்.
(யதா வாயும் ஸமாஸ்ரித்ய வர்தந்தே ஸர்வஜந்தவ:
ததா க்ருஹஸ்தமாஸ்ரித்ய வர்தந்தே ஸர்வ ஆஸ்ரமா:)
எல்லா உயிர்களும் பிராண வாயுவினால் வாழ்ந்திருப்பதைப் போன்று ப்ரஹ்மசாரி, வானப்ரஸ்தன், ஸந்யாசி மூவரும் இல்வாழ்வானைச் சார்ந்து வாழ்கின்றனர். எனவே இல்லற தர்மம் மிகவும் சிறந்ததாக விளங்குகின்றது.
மேற்கண்ட ஐந்து யக்ஞங்களைப்பற்றி மனுஸ்மிருதியில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. விரிவஞ்சி சுருக்கமாக இங்கு எழுதப்பட்டது. மேலும் ப்ராஹ்மணனாக இருக்கும் ஒருவன் தன்னுடைய நித்ய கர்மானுஷ்டானங்களை விடாமல் செய்து கொண்டும், எல்லா உயிர்களிடத்திலும் கருணை உள்ளத்தோடு, புத்திரர்களை கல்விமான்களாகவும், பண்புடையவர்களாக ஆக்குவதிலும், பிறன்மனை விழையாமலும், பெரியவர்களைப் போற்றியும், வேதாந்த விசாரங்களைச் செய்து கொண்டு சாஸ்த்ரங்கள் மற்றும் நீதிநூல்களை தினந்தோறும் பயின்றும், இறைவனை இடைவிடாது த்யானித்துக் கொண்டும், பசித்தவர்களுக்கு உணவளித்தும் உறவினர்களைப் போற்றியும், வறியவர்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்தும், பித்ரு கார்யங்களான, தர்ப்பணம், ச்ராத்தம் முதலியவற்றைச் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டும், சிற்றின்பங்களில் பற்றின்றியும் இருக்க வேண்டும். கணவனும் மனைவியும் இணைந்து இல்லறத்தைச் செவ்வனே நடத்தி வரவேண்டும். அவ்வாறு இம்மண்ணுலகில் செவ்வனே இல்லறத்தை நடத்திய ஒருவன்

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்”

எனும் குறளுக்கேற்ப வானுலகத்தில் தேவனாக மதிக்கப்படுவான்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard